ஒற்றை பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒற்றை பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜூன், 2020

ஆண் - பெண்' பெரியார்!



ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் வல்லுநர் கார்டிலியா ஃபைன் என்பவர் ‘‘பாலினம்பற்றிய பொய் நம் பிக்கை'' எனும் நூலை எழுதியுள்ளார்! ஆண் - பெண் ஆகியோரிடையே உள்ள வேற்றுமைகளுக்குக் காரணம் அவர்களை வளர்க்கும் முறை தான் என்றும், பிறப்பின் இயல்பு அல்லவென்றும் அந் நூலில் விளக்கப்பட்டுள்ளது.
ஆண் - பெண்ணுக்கு இடையில் பெரும் அளவிலான நரம்புச் செயல்பாட்டு வேறு பாடுகள் மட்டுமே இருக்கலாம் என்றும் அந்நூல் கூறுகிறது.
இதே கருத்தை சிகாகோ மருத்துவப் பள்ளியில் உள்ள விசி எலியட் என்பவரும் தெரிவிக்கிறார். ‘அறிவு வேற்று மையைக் குழந்தைகள் முன் னோர்கள் அல்லது பெற்றோர் களிடம் இருந்து பெறுவ தில்லை. அறிவை அவர்கள் வளர்ப்பிலேயே பெறுகிறார் கள், கற்கிறார்கள்.
ஒரு சிறுவன் அல்லது ஒரு சிறுமி எவ்வாறு வளரவேண் டும் என எதிர்பார்த்து நாம் வளர்க்கிறோமோ அதற்குத்தக அவர்கள் உருவாகிறார்கள். ஆம், சிறுவர் - சிறுமியர், ஆண்கள் - பெண்கள் வேறு பட்டவர்கள். ஆனால், இந்த வேற்றுமைகளில் மிகப்பெரும் பாலானவை மிகக் குறைந்த அளவானவை.
‘ஆண்கள் செவ்வாய்க் (மார்ஸ்) கோளில் இருந்து வந்தவர்கள்; பெண்கள் வெள்ளி (வீனஸ்) கோளில் இருந்து வந்தவர்கள் எனும் அளவிற்கு அந்த வேற்றுமை கள் இல்லை' என்கிறார் விசி எலியட்.
இவ்வளவும் வெளிவந்தது ‘விடுதலை' ஏட்டில் அல்ல - ஓர் ஆங்கில நாளேட்டில்.
இதில் அடுத்துவரும் கடைசிப் பத்திதான் முக்கியம்.
அது இதோ:
Here we must recollect what Periyar said that the Male and Female Children should not be brought up in different ways considering the small differences found between them, but they should be brought up in same manner providing same food, dress, education, sports games and work to both of them.
‘The Times of India', 17.8.2010
உடல் உறுப்புகளில் உள்ள ஒன்றிரண்டு வேற்றுமை களைக் கொண்டு ஆண் - பெண் குழந்தைகளை வெவ் வேறு வகையில் வளர்க்கக் கூடாது என்றும், ஒரே வகை யான உணவு, உடை, கல்வி, விளையாட்டு, வேலை முத லியவற்றை அவர்கள் பெற வேண்டும் என்று பெரியார் ஈ.வெ.ரா. வற்புறுத்தியதை நினைவு கூர்க என்கிறது அந்த ஆங்கில ஏடு.
‘‘பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்று அழைக்காமல், ஆண் என்றே அழைக்கவேண்டும் - உடை களை ஆண்களைப் போலவே கட்டுவித்தல் வேண்டும். ஆணா - பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாத மாதி ரியில் தயாரிக்கவேண்டும்.''
- தந்தை பெரியார்
‘குடிஅரசு', 15.9.1946)

-விடுதலை நாளேடு, 29.5.20
- மயிலாடன்

வியாழன், 31 ஜனவரி, 2019

வடக்கே பெரியாரின் புரட்சிப் பெண்!

முகத்தை மூட மறுத்த மணமகளின் உறுதியாலும், மணமகன் குடும்பத்தாரின் பழைமைவாத பிடிவாதத்தாலும் திருமணம் நின்று போனது.

மத்தியப்பிரதேசமாநிலத் தில் மத்திய அரசுப் பணியி லுள்ளவர் வர்ஷா சோனவா. இவருக்கும்கட்டடப்பொறி யாளராகியவல்லப் பஞ்சோலி என்பவருக்கும்ரட்லம்பகுதி யில் திருமணம்  நடத்த திட்ட மிடப்பட்டு, இருசாராரின் குடும் பத்தினரும் திரண்டிருந்தார்கள்.

முகத்தை மூடுகின்ற பல்லா எனும் சேலையை அணியாமல் சாதாரண உடையில் இருந்துள்ளார் மணமகள். அதனால் மணமகன் வீட்டார் பெரும் பிரச்சினையை எழுப் பினார்கள். மணமகள் குடும் பத்தினரிடம் கடும் வாக்கு வாதத்தில் மணமகன் வீட்டார் ஈடுபட்டனர். அதனையடுத்து, இருகுடும்பத்தினரிடையே மோதல் சூழல் ஏற்பட்டது.

இப்பிரச்சினையில், மண மகள் குடும்பத்தார்மீது மண மகன்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினரின் சமரச முயற்சியும் தோல்வி அடைந்தது. இரண்டு குடும் பத்தாருக்குமிடையே மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகன் வீட்டார் மணமகளுக்கு விதித்த ஆடைக் கட்டுப்பாட்டினை மணமகள் விரும்பவில்லை. பழைமையான வழக்கம் என்கிற பெயரில் மணமகள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்கிற மடமையை மணமகள் கடுமையாக எதிர்த்தார். திரு மணமே நின்றாலும் தன்னு டைய உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று உறுதியாக இருந்தார். பலே! பலே!!

மணமகன் குடும்பத்தாரின் பழைமைவாதத்தால் திருமணம் நின்று போனது.

ஆம், தந்தை பெரியார் வடமாநிலங்களிலும் வேர்ப் பிடித்து விட்டார் - பெரி யாரின் புரட்சிப் புயல் வீசத் தொடங்கிவிட்டது என்பதற் கான எடுத்துக்காட்டு இது.

வயது அடைந்த ஆண் - பெண் இருவர் இணைவது இயல்பானது. மனிதர்களிடத்தில் மட்டுமல்ல, மற்ற உயிர் களிடத்திலும் இயற்கை உணர்வு இது. இதில் மூன்றாவது மனிதனுக்கு வேலை இல்லை என்பார் தந்தை பெரியார்.

இது நியாயம் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும், ஊறித் திளைத் துப்போன ஊத்தைப் புத்திக்கு இதெல்லாம் ஒவ்வாமையாகத் தான் தோன்றும்.

வருணக் கலப்பை எதிர்க் கும் சனாதனவாதியான காந்தி யார் மகனுக்கும், ராஜாஜி மக ளுக்கும் கல்யாணம் நடந்த போது வாலைச் சுருட்டிக் கொண் டதே - வைதீகமும், சனாதனமும்!

பெரியவர்கள் செய்தால் பெருமாள்' செய்த மாதிரி என்று வைதீகர்கள் விழிப்பாக''த்தான் சொல்லி வைத்துள்ளார்கள் போலும்!

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு, 29.1.19

வியாழன், 6 டிசம்பர், 2018

நாணயத்தின் இரு பக்கங்கள்!



டாக்டர்அம்பேத்கர்அமெரிக் காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து இந்தியாவிற்கு - தனது சொந்த மாநிலமான பம் பாய்க்குத் திரும்பிய பின், தன் பிள்ளை, தன் வீடு, தன் சுற்றம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு சுயநலவாழ்வுவாழாமல்,ஒடுக்கப் பட்ட சமுதாய மக்களின் சமத்துவத் திற்கும், சம உரிமைக்கும், சம வாய்ப் புக்கும் திட்டமிட்டே செயலாற்ற அமைப்புகளை உருவாக்கினார்.

குரலற்ற (ஊமையர்களின்)வர்களின் குரல் (மூக் நாயக்) என்று மராத்தி மொழியில் அவர் நடத்திய ஏட்டில், 1924இல் தெற்குத் திருவிதாங்கூர்ராஜ்யத்தில் இருந்த வைக்கம் என்ற ஊரில், உள்ள மகாதேவர்கோயிலின்நான்குவீதி களிலும், ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப் பட்ட மக்களாகிய ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்ற கீழ் ஜாதியார் என்று ஆக்கப்பட்டவர்கள் தெருக்களில் நடக்கக் கூட உரி மையற்று இருந்த நிலையில், அதனை எதிர்த்து அங்கிருந்த அன்றைய காங்கிரசு தலைவர்கள் சத்தியாகிரகத்தை - மறியலைத் துவக்கினர்; அவர்களை அவ்வரசு கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்; அவ்வறப்போரினை ஒடுக்கி விட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் தான், தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் என்ற நிலையில், சிறையில் வாடியவர்களின் கடிதம் கண்டு, உடனே அங்கே சென்று வைக்கம் சத்தியாகிரகத்தை முன்னெடுத்துச் சென்று தொடர் போராட்டமாக்கினார். இருமுறை சிறையும் சென்றார் பெரியார். அவர் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய சமூகப் புரட்சி வர லாற்றில்இப்போராட்டம்தான்முதல் பெரும்போராட்டம்.மனித உரிமை களைப்பெறுவதற்குநடத்தப்பெற்ற போராட்டம். காந்தியார் தந்தை பெரியாரின் இப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனாலும் தந்தை பெரியார் முன்வைத்த காலை பின் வைக்கவில்லை. தந்தை பெரியார்தம் இப்போராட் டத்தினை அறிந்த டாக்டர் அம் பேத்கர் அவர்கள், அவர் அப்போது நடத்திய மூக் நாயக் ஏட்டில் பின்வருமாறு எழுதினார் என்ற செய்தியை அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர் தனஞ்செய்கீர் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

...மிகவும் குறிப்பிடத்தக்க போராட்ட நிகழ்வொன்று 1924-ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கத்தில் பார்ப்பனர் அல்லாதார் தலைவரான ராமசாமி நாயக்கர் நடத்திய போராட்டம்தான் அது. வைக்கத்தில் உள்ள கோவி லைச் சுற்றியுள்ள சாலைகளில் தீண்டத்தகாதோர் நுழையக் கூடாது எனும் வழக்கத்தினை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமாகும்; போராட்டம்ஏற்படுத்தியதார்மீக தாக்கமும், சரியானது செய்திடப்பட வேண்டும் என்ற நினைப்பும் வைதீகப் போக்குடைய இந்து மதத்தவரிடம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது. குடிமைப் பொறுப் பும், புத்திசாலித்தனமும் இணைந்து உணரப்பட்டதால் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் தீண்டத் தகாதோர் நடந்துசெல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அம்பேத்கர் இத்தகைய நிகழ் வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். மகத் குளம் - இறங்கும் போராட்டத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு தமது பத்திரிகையில் வைக்கம் போராட்டத் தைப்பற்றி மிகவும் உருக்கமாக மன தைத் தொடும் வகையில் தலை யங்கம் தீட்டியிருந்தார். இவை குறிப் பிடத்தக்க நிகழ்வுகளாக அமைந்தன என்று எழுதப்பட்டுள்ளது.

பாபாசாகிப் அம்பேத்கர், தந்தை பெரியார் இருவரது பார்வையும் சமூக விடுதலையை நோக்கியே இருந்தது ஆகையால் தான் இருவரையும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறுகிறோம்.

இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் (1956).

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 6.12.18