நக்கீரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நக்கீரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 செப்டம்பர், 2019

நக்கீரன் பார்வையில்....சேலம் திராவிடர் கழக பவள விழா மாநாடு (27.8.2019)





முக்கால் நூற்றாண்டுக்கு முன், 1944- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி, சேலத்தில் பெரியாரின் தலை மையில் பிரம் மாண்ட மாநாடு நடந்தது. நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் நடத்திய அந்த மாநாட்டில், திராவிடர் கழகம் உதய மானது. அதற்கான தீர்மா னத்தை பேரறிஞர் அண்ணாவை வைத்து முன் மொழியச் செய்தார் பெரியார். அதற்காகவே, அந்தத் தீர்மானம் 'அண்ணா துரை தீர்மானம்' என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது.

75 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதே ஆகஸ்ட் 27இல் அதே சேலத்தில் திராவிடர் கழக பவள விழா மாநாடு நடை பெற்றது. சேலம் அம்மாப் பேட்டையில் உள்ள கொங்கு வேளாளர் திருமண நிலையத்தில் அமைக்கப் பட்டிருந்த, அன்னை மணியம்மையார் அரங்கத்தில் மாநாடு தொடங்கியது.

97 வயதிலும் தளராமல் இயக்கப் பணியாற்றும் பொத்தனூர் சண்முகம், மாநாட்டைத் திறந்துவைத்தார். திராவிடர் கழகத்தின் மாணவரணிச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், திராவிடர் கழக கொடியை ஏற்றிவைத்தார். தலைமுறைகள் தாண்டியும் கொள்கை ஈர்ப்போடு தி.க. செயல்படுவதற்கான அடையாளமாக இந்த நிகழ்வு இருந்தது. மாநாட்டில் கறுப்பு உடையணிந்து, குடும் பம் குடும்பமாக, கைக்குழந்தை களுடன் ஏராளமானோர் கலந்து கொண் டிருந்தனர்.

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக சமூக நீதி, மனித உரிமை, பகுத்தறிவு சிந்த னைகள், இடஒதுக்கீடு, தனியார்த் துறையில் வேலைவாய்ப்பு, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. குறிப்பாக, அதில் இடம் பெற்றிருந்த, 'சினிமாவை மூலதனமாக்கி, அதன் கவர்ச்சியுடன் அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்ற நினைப்பவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்' என்கிற 22ஆவது தீர்மானம் கவனம் ஈர்த்தது. தி.க. தலைவர் கி.வீரமணி தொகுத்திருந்த திராவிடர் கழக வரலாறு இரண்டு பாகங்களை பேராசிரியர் சுப.வீ. வெளியிட்டு கருத்துரை வழங்கினார்.

காலை நிகழ்ச்சிகளில் தமிழக காங் கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வாழ்த்துரை வழங்கினர். தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் திராவிடர் கழக கொடியைப் பிடித்துக் கொண்டு மேடையேறினார். 1944இல் நடைபெற்ற முதல் மாநாட்டில், 11 வயது சிறுவனாக குதிரைமீது அமர்ந்து பிரச்சாரம் செய்த வீரமணி, இன்று மாநாட்டின் பவளவிழா மேடையில் தலைவராக அமர்ந்திருப் பதை பலரும் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தனர்.

மாலை, சேலம் ஆட்சியர் அலுவ லகம் அருகில் தொடங்கிய கருஞ்சட் டைப் பேரணி, கோட் டை மைதானத்தில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை நோக்கி நடந்தது. கட்டுப் பாடான வரிசையில், கருத்துச் சுதந்திரத் துக்கான கண்ணியமான முழக்கங்களோடு ஊர்வலமாக சென்றார்கள் கருஞ்சட்டைத் தோழர்கள். திராவிடர் கழக கொடியை உருவாக்கிய போது, கறுப்பின் நடுவில் சிவப்பு வட்டம் வரைய தன் ரத்தத் துளிகளை கலைஞர் சிந்தினார். "இரண்டு கழகங்களுக்கும் ஒரே கொள்கைதான். இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார் தி.மு.க.வை தொடங்கிய அண் ணா. அவற்றின் பிரதிபிம்பமாக தி.க. உறுப் பினர்களோடு, தி.மு.க. தொண்டர்களும் பெருமளவு கலந்துகொண்டதால், மிகப் பெரிய கோட்டை மைதானத்தின் பந்த லையும் தாண்டி, கூட்டம் நிரம்பி வழிந்தது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உடல் நலக்குறைவால் வரமுடி யாத சூழலில், கட்சி சார்பில் துரைசாமி கலந்து கொண்டு பேசினார். சிறுபான்மையினர் நலனில் பெரியார் காட்டிய அக்கறையை விளக்கிப் பேசினார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன். திராவிடம் என்ற பெயர் எதற்காக வைக்கப்பட்டது, அது இன் றைக்கும் எந்தளவுக்கு எல்லோருக்குமான அடையாளமாக இருக்கிறது என்பதன் ஆழத்தை விளக்கினார் வி.சி.க. தலைவர் முனைவர் திருமாவளவன்.

தி.க. தலைவர் வீரமணி இன்றைக் கிருக்கும் அச்சுறுத்தல்களை எடுத்துச் சொல்லி, நாங்கள் தொடங்குகிறோம் நீங்கள் முடிக்க வேண்டும்' என்று ஸ்டாலினை நோக்கி குறிப்பிட்டார். சேலம் தாரமங்கலத்தில் கலைஞர் சிலை யை திறந்து வைத்துவிட்டு வந்திருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன்னுடைய நிறைவுரையில், காஷ்மீரில் தொடங்கி, தமிழ்நாடு வரை பா.ஜ.க. அரசு எப்படி யெல்லாம் வஞ்சிக்கிறது என்பது குறித்து பேசிவிட்டு, தி.க. தலைவரை நோக்கி, 'நீங்கள் தொடங்கியதை நாங்கள் முடிப் பது மட்டுமல்ல உங்களுடன் இணைந்து, பிணைந்து, நீங்கள் விடுக்கும் கட்டளை களை ஏற்று நடக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்றது உணர்வுப் பூர்வ நிகழ்வாக இருந்தது. இரவு 10 மணி கடந்தும் கூட்டம் குறையவில்லை .

மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வந்திருந்த தி.க. தொண்டர்கள், தூங்கியிருந்த குழந்தைகளை தோளில் போட்டுக்கொண்டு, பெட்டிகளை தலையில் சுமந்தபடி கிளம்பினர்.

காலை நிகழ்ச்சியில் இந்திய கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத் தரசன் பேசியபோது, "எங்கள் கட்சிக்கு வந்தால், பஞ்சாயத்துத் தலைவர் பதவி யாவது கிடைக்க வாய்ப்புண்டு. தி.க.வில் அதுவும் கிடையாது. உள்ளாட்சித் தேர்த லில் கூட நிற்க முடியாது. எந்தப் பதவியையும் அடையமுடியாது. ஒரு பைசா வருமானமும் கிடையாது. அப்படியிருந்தும் குடும்பம் குடும்ப மாக தோழர்கள் வந்திருக்கிறார்கள் என்றால், அங்கு தான் பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார். பெரியார் இன்னும் தேவைப் படுவதை ஆசிரியர் வீரமணி, தன் பணிகள் மூலம் நிரூபிக்கிறார்'' என்றார். பவள விழா மாநாடு அதை உறுதி செய்தது.

- கீரன், ச.ப.மதிவாணன்

நன்றி: "நக்கீரன்" 2019 ஆக. 31- செப்.3


- விடுதலை நாளேடு, 1 .9 .19

வியாழன், 5 ஜூலை, 2018

75 ஆண்டுகளாக அணையாத தீ! கோவி. #லெனின்

#நக்கீரன்இதழில்

Periyar
75 ஆண்டுகளாக அணையாத தீ!
கோவி. #லெனின் 



பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் மிகுந்த மாணவர் அந்தத் தண்ணீரை ஒரு குவளையில் எடுத்து குடித்துவிட்டார். அவ்வளவுதான்.. பிரளயமே ஏற்பட்டுவிட்டது. கடும் வார்த்தைகளால் அந்த மாணவரை வறுத்து எடுத்துவிட்டனர் வருணாசிரமத்தின் காவலர்கள்.

“உங்களை மாதிரி ஆளுங்க குடிக்கத்தான் தனியா ஒரு பாணை இருக்குதே.. எங்களவா பானையில உள்ள ஜலத்தை ஏண்டா மொண்டு குடிச்சே..” என சம்பந்தத்தை கண்டித்ததுடன், அபராதமும் விதிக்கப்பட்டது. இது நடந்தது, அரசாங்கம் நடத்தும் கல்லூரியில்! ஆண்டு, 1943.

காவிரியாற்றை ஒட்டி அமைந்துள்ள கும்பகோணம் அரசு கல்லூரி விடுதியில்தான் இந்த நிலை. உயர்சாதியினரான பிராமண சமுதாய மாணவர்களுக்குத் தனி தண்ணீர் பானை. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு பானை. இந்த சம்பந்தத்தை அறியாமல் சம்பந்தம் என்ற கதர்ச் சட்டை அணிந்த மாணவர், தன்னைப் போன்ற சமூகத்தினர் தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டிய பானைக்குப் பதில், உயர்வகுப்பாருக்கான பானையிலிருந்து தண்ணீர் குடித்ததால், விடுதிக் காப்பாளர் கணேச அய்யரால் ‘விசாரணை’க்குட்படுத்தப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.

அதே கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் படித்துவந்த மாணவர் எஸ்.தவமணிராசனுக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. தனது நண்பர் டி.மகாலிங்கத்துடன் சென்று சம்பந்தத்தை சந்தித்தவர், “அபராதம் கட்ட வேண்டாம் நண்பா.. என்ன நடந்தாலும் எதிர்கொண்டு உரிமையைக் காப்போம்” என்றார் உறுதியாக. மாணவர்களை அணி திரட்டினர். அவர்களின் போராட்டக் குணத்தால், அபராதத்தை ரத்து செய்தார் கல்லூரி முதல்வர் கே.சி.சாக்கோ.

ஆரியத்துக்கு எதிராக திராவிட மாணவர்கள் சுயமரியாதை உணர்வுடன் பெற்ற இந்த முதல் வெற்றியின் தொடர்ச்சியாக, கும்பகோணத்தில் நாடகம் நடத்திய எம்.ஆர்.ராதாவையும், சிதம்பரத்தில் திராவிட நாடு இதழ் வளர்ச்சிக்காக இயக்கப் பிரச்சார நாடகம் நடத்திய அறிஞர் அண்ணாவையும் மாணவர்கள் சந்தித்தனர். கும்பகோணம் அரசு கல்லூரிக்கு அழைத்தனர். அந்த அழைப்பினை ஏற்று 1.12.1943 அன்று திராவிட மாணவர் கழகத்தை கும்பகோணத்தில் தொடங்கி வைத்தார் அண்ணா.

75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திராவிட மாணவர் கழகத்தின் தலைவராக தவமணிராசனும் துணைத் தலைவராக கருணானந்தமும், செயலாளராக பழனிவேலும், பொருளாளராக சொக்கப்பாவும் பொறுப்பேற்றனர். தடுக்கி விழுந்தால் திருக்கோவில்களில்தான் விழவேண்டும் என்கிற அளவுக்கு ஆன்மிகம் தழைத்த நகரான கும்பகோணத்தில் ஆரியத்தின் தாக்கம் இன்று வரை உண்டு. அந்த மண்ணில்தான், முக்கால் நூற்றாண்டுக்கு முன், அண்ணாவை அழைத்து திராவிட மாணவர் கழகத்தை உருவாக்கியவர்கள், அடுத்ததாக பெரியாரையும் அழைத்தனர்.

ஆளுயர மாலை அணிவித்து பெரியாருக்கு வரவேற்பு அளித்து விருந்து தந்தது கல்லூரி நிர்வாகம் இலக்கிய மன்றத்தில் 2 மணி நேரம் உரையாற்றிய பெரியார்,  தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தனது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார். (இன்று கணினி பயன்பாட்டில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் மிக முக்கிய பங்காற்றி, இளைய தலைமுறையினருக்குத் துணை நிற்கிறது)

குடந்தை கல்லூரியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா நினைவாக பேச்சுப் போட்டிக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தை, போட்டியில் பங்கேற்காத மேல் சாதி மாணவருக்கு கிடைக்கச் செய்ய நிர்வாகத்தினர் செய்த சதித் திட்டத்தை முறியடித்தது திராவிட மாணவர் கழகம். கீர்த்தனைகள் பாடுவது மட்டுமே இசைக் கச்சேரி என்றிருந்த நிலையில், கல்லூரித் தமிழ் மன்றத்தின் சார்பில் இசை விழாவை ஏற்பாடு செய்னர் திராவிட மாணவர்கள். இதற்கு மேலசாதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்த போதும், போராட்டக் களம் கண்டு, பூட்டப்பட்ட கல்லூரி விழா மண்டபத்தைத் திறக்கச் செய்து, அதில் தமிழ் இசைக் கருவிகள் ஒலிக்க இசை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர். கல்லூரியில் சமஸ்கிருதம் ஒலித்த மேடைகளை தமிழால் நிறைத்தனர் மாணவர்கள்.

திராவிட மாணவர் கழகத்தின் மாநில மாநாடு குடந்தை வாணி விலாச சபாவில் 1944ல் நடந்தது. அறிஞர் அண்ணா, புதுக்கோட்டை சமஸ்தான திவான் தாருல் இஸ்லாம், நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன், இரா.செழியன், மா.நன்னன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்புக்கு பெரியாரின் ஆதரவு தொடர்ந்து கிடைத்தது.


குடி அரசு' இதழில் எழுதிய அறிக்கையில், "அன்புள்ள மாணவர்களே.. பிற்காலம் உங்களுடையது. உங்கள் வயிற்றுப் பிழைப்புக்கோ, வாழ்வுக்கோ வகை செய்துகொள்வதற்கு மாத்திரமல்ல. நாட்டைப் பாருங்கள். நாட்டில் உங்கள் இன நிலைமையைப் பாருங்கள். கோழைகளையும்- தன்னல வீரர்களையும் நல்லுரு வாக்குங்கள். பெண் மக்களை ஆண்மையுள்ளவர்களாக ஆக்குங்கள். கீழ்மக்களை-தீண்டப்படாதவர்கள் என்ப வர்களை மேன் மக்களாக ஆக்குங்கள். இவை உங்களால் முடியும். கண்டிப்பாக முடியும். அதுவும் இப்போதே முடியும்" எனத் தெரிவித்திருக்கிறார் பெரியார்.

குடந்தை கல்லூரி மாணவர்கள் திராவிட மாணவர் சங்கத்தை உருவாக்கிய இதே காலகட்டத்தில்தான், திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தினை கலைஞர் மு.கருணாநிதி தன் மாணவப்பருவத்தில் தொடங்கி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வாழ்த்துக் கவிதையைப் பெற்றார். அந்த  மன்றத்தின் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், கி.வீரமணி உள்ளிட் டோர் பங்கேற்றனர். மாணவப் பருவத்தில் விதைக்கப் பட்ட விதைதான் ஓர் அரசியல் பேரியக்கத்திற்கு அடித்தளமானது.

மாணவர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும், வெற்று ஆடம்பரத் துக்காகவும் கத்தி-அரிவாள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பேருந்திலும் ரயிலிலும் வன்முறை விளையாட்டில் ஆர்வம் காட்டும் இன்றைய நிலையில், திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா(75ஆம் ஆண்டு) கும்பகோணத்தில் ஜூலை 8ந் தேதி நடைபெறுகிறது. திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இந்த விழா, அன்றைய மாணவர்களைப்போல இன்றைய மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகளை நினைவூட்டுவதாக அமையும்.

மாட்டுக்கறி தின்றதற்காக மனித உயிர்களைப் பறிக்கும் மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுவதுடன், கச்சநத்தம்-சந்தையூர் என சாதிக் கொடுமைகளுக்கான சாட்சியங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல் லாபத்தை மட்டுமே கருதுவோரால் ஒருபோதும் மனித குலத்தின் முழுமையான விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியாது.

சமூக அக்கறை கொண்ட இளைய சமுதாயம்தான் அதற்கானப் பயணத்தை உறுதியாகத் தொடர முடியும். முக்கால் நூற்றாண்டுக்கு முன் மூட்டிய தீ, இப்போதும் இருள் அகற்றும் தீப்பந்தமாக சுடர் விடுகிறது. அதனை ஏந்தப் போகின்ற கைகள் எவை?

-  விடுதலை நாளேடு, 5.7.18