தந்தை பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தந்தை பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 டிசம்பர், 2020

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம்


இதே நாளில் தான் (19.12.1973) தந்தை பெரியார் சென்னை தியாகராயர் நகரில் தன் இறுதி முழக்கத்தை செய்தார்ஆனால் அதுதான் இறுதி முழக்கம் என்று யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது.

ஆனாலும் அய்யாவின் அந்தஉரை எப்படியோ மரண சாசனமாக அமைந்து விட்டது.

சுயமரியாதை இயக்கத்தின்திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளை சாறு பிழிந்து எடுத்தது போல அமைந்தது அந்த அரிய உரை!

1) கடவுளைப் பற்றி கடுமையாக விமர்சிக்கிறேன் என்று நினைக்கலாம்ஆனால் நாலாயிர திவ்யிய பிரபந்தம்தேவாரம் முதலிவை கடவுள் நம்பிக்கையில்லாதவர்களையும்சைவம்வைணவம் அல்லாதவர்களையும் எப்படியெல்லாம் இழிவுப் படுத்துகின்றன - கேவலமாகப் பேசுகின்றன என்பதை எடுத்து விளக்கினார்.

2) மத நூல்களும்அரசமைப்புச் சட்டமும் ஜாதியைப் பாதுகாக்கின்றனநூற்றுக்கு 3 விழுக்காடு உள்ள உயர் ஜாதி பார்ப்பனர் தவிர மற்றவரை சூத்திரர்கள் என்று சொன்னால் அதன் பொருள் என்ன?

பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சொல்லுவதை இந்தக் காலகட்டத்திலும் எப்படி ஏற்க முடியும் என்ற கேள்விதான் தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் பேருரையின் இடியாகவும்மின்னலாகவும் தகித்தன.

3) இந்திய அரசமைப்புச் சட்டம் மதப்பாதுகாப்பு என்ற பெயரால் ஜாதியைப் பாதுகாப்பது என்றால் அதன் பொருள் மத சாத்திரங்கள் கூறும் அந்த சூத்திர ஜாதி இழிவைக் காப்பாற்றுகிறது என்று தானே பொருள் என்பதுதான் தந்தை பெரியாரின் முக்கியமான வினாவாக இருந்தது.

4) தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் உரிமைப் போராட்டம் ஆகும்.

தந்தை பெரியார் கோயில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட் டத்தை அறிவித்த நிலையில் அவரின் முக்கிய சீடரான மாண்பு மிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில் அய்யாவிற்கு போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் அதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார்ஆனால் பார்ப்பனர் அதனை எதிர்த்து நேரிடையாகவே உச்ச நீதிமன்றம் சென்று சூத்திரர்கள் கடவுள் சிலையைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

அது தொடர்பான தீர்ப்பில் “ஆபரேசன் சக்சஸ்நோயாளி செத்தான்” என்ற நிலையில் தான் இருந்தது.

கோயிலைக் கட்டிய அரசர்கள் தமிழர்கள்கோயிலைக் கட்ட உழைப்பைக் கொடுத்தவரும் தமிழர்கள்அந்தத் தமிழனை நாலாம் ஜாதி வருணத்தவனாக்கிஅதாவது சூத்திரனாக்கி (வேசி மக்களாக்கிஅவன் கட்டிய கோயில் கருவறைக்குள் அவன் நுழையக்கூடாதுஅவன் நுழைந்தால் கடவுள் தீட்டாகிவிடும் என்று சொன்ன நிலையில்தான் தந்தை பெரியார் கொதித்து எழுந்து தமது இறுதிப் பேருரையில் வெளியிட்ட ஒவ்வொரு சொல்லுமே எரிமலைக் குழம்பாக வெடித்துச் சிதறின.

5) எல்லாக் கட்சிக்காரனும் சேர்ந்து தி.மு.ஆட்சியை ஒழிக்கப் பார்க்கிறான்இந்த தி.மு.ஆட்சி ஒழிந்தால் என்ன நடக்கும்?

இன்றைக்குத் திருட்டுத்தனமாகப் பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாக பேசுவான்அப்படிப் பேசுகிறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்பான் - விளம்பரமும் கொடுப்பான் என்று தனது இறுதி மரண சாசனத்தில் தந்தை பெரியார் முழங்கினாரே - அது இப்பொழுது நடைமுறையில் பட்டவர்த்தனமாக உள்ளதாஇல்லையா?

தி.மு.ஏன் ஆட்சிக்கு வரக்கூடாதாம்அது திராவிடர் இன உணர்வுடன் நடந்து கொண்டும்சமூக நீதியில் அக்கறை செலுத்தும்ஜாதி ஒழிப்பிற்கு வழி செய்யும்மதத்துக்கு எதிராக பாலியல் நீதி பேசும் - மகளிர் வளர்ச்சித் திட்டங்களை மிக விரைவாக அறிவிக்கும்.

பண்பாட்டுத் துறையில் பார்ப்பனீயத்துக்கு எதிராக படை வரிசை காட்டும்தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மீண்டும் சட்டம் கொண்டு வரும்சமஸ்கிருதம்இந்தியை எதிர்த்தும்அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை விரிவு படுத்தல்.

மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலிலும்சிறீரங்கம் ரங்கநாதன் கோயிலிலும் கூட பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர்களாக வரும் நிலை ஏற்படும்.

அதுவும் மதவாத ஆட்சி மத்தியில் தொடை தட்டிதோள் தட்டி பொங்கி எழும் நிலையில்தமிழ் நாட்டில் தி.மு.ஆட்சி நிலை பெற்றால் அவை எல்லாம் தவிடுப் பொடியாகாதா?

தமது இறுதி மரண சாசன உரையில்தந்தை பெரியார் சொன்ன தி.மு.ஆட்சி ஒழிக்கப்பட்டால்இன்றைக்கு மறைவாக பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாக பேசுவான் என்றாரே.

அதுதானே இன்று நடக்கிறதுராம ராஜ்ஜியம் என்றும் இந்து ராஜ்ஜியம் என்றும் வெளிப்படையாகப் பேசவில்லையா?

எத்தகைய தொலைநோக்கு.

இன்றைக்கு 47 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் எச்சரித்தது இப்போழுது வந்து விட்டதே.

அந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது நடக்க இருக்கும் தேர்தலில் தி.மு.வெல்ல வேண்டியதும் “திராவிடம்“ தீர்க்கமாக ஒளி வீசித்திகழ வேண்டியதும் அவசியமாகும்.

அதுதான் தந்தை பெரியாரின் மரண சாசனப் பேருரை நமக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடமும்விட்டுச் சென்றுள்ள “திராவிடம்“ என்னும் தத்துவச் சீலரும் ஆகும்.

வாழ்க பெரியார்,

வெல்க திராவிடம்!

 

வெள்ளி, 12 ஜூன், 2020

ஆண் - பெண்' பெரியார்!



ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் வல்லுநர் கார்டிலியா ஃபைன் என்பவர் ‘‘பாலினம்பற்றிய பொய் நம் பிக்கை'' எனும் நூலை எழுதியுள்ளார்! ஆண் - பெண் ஆகியோரிடையே உள்ள வேற்றுமைகளுக்குக் காரணம் அவர்களை வளர்க்கும் முறை தான் என்றும், பிறப்பின் இயல்பு அல்லவென்றும் அந் நூலில் விளக்கப்பட்டுள்ளது.
ஆண் - பெண்ணுக்கு இடையில் பெரும் அளவிலான நரம்புச் செயல்பாட்டு வேறு பாடுகள் மட்டுமே இருக்கலாம் என்றும் அந்நூல் கூறுகிறது.
இதே கருத்தை சிகாகோ மருத்துவப் பள்ளியில் உள்ள விசி எலியட் என்பவரும் தெரிவிக்கிறார். ‘அறிவு வேற்று மையைக் குழந்தைகள் முன் னோர்கள் அல்லது பெற்றோர் களிடம் இருந்து பெறுவ தில்லை. அறிவை அவர்கள் வளர்ப்பிலேயே பெறுகிறார் கள், கற்கிறார்கள்.
ஒரு சிறுவன் அல்லது ஒரு சிறுமி எவ்வாறு வளரவேண் டும் என எதிர்பார்த்து நாம் வளர்க்கிறோமோ அதற்குத்தக அவர்கள் உருவாகிறார்கள். ஆம், சிறுவர் - சிறுமியர், ஆண்கள் - பெண்கள் வேறு பட்டவர்கள். ஆனால், இந்த வேற்றுமைகளில் மிகப்பெரும் பாலானவை மிகக் குறைந்த அளவானவை.
‘ஆண்கள் செவ்வாய்க் (மார்ஸ்) கோளில் இருந்து வந்தவர்கள்; பெண்கள் வெள்ளி (வீனஸ்) கோளில் இருந்து வந்தவர்கள் எனும் அளவிற்கு அந்த வேற்றுமை கள் இல்லை' என்கிறார் விசி எலியட்.
இவ்வளவும் வெளிவந்தது ‘விடுதலை' ஏட்டில் அல்ல - ஓர் ஆங்கில நாளேட்டில்.
இதில் அடுத்துவரும் கடைசிப் பத்திதான் முக்கியம்.
அது இதோ:
Here we must recollect what Periyar said that the Male and Female Children should not be brought up in different ways considering the small differences found between them, but they should be brought up in same manner providing same food, dress, education, sports games and work to both of them.
‘The Times of India', 17.8.2010
உடல் உறுப்புகளில் உள்ள ஒன்றிரண்டு வேற்றுமை களைக் கொண்டு ஆண் - பெண் குழந்தைகளை வெவ் வேறு வகையில் வளர்க்கக் கூடாது என்றும், ஒரே வகை யான உணவு, உடை, கல்வி, விளையாட்டு, வேலை முத லியவற்றை அவர்கள் பெற வேண்டும் என்று பெரியார் ஈ.வெ.ரா. வற்புறுத்தியதை நினைவு கூர்க என்கிறது அந்த ஆங்கில ஏடு.
‘‘பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்று அழைக்காமல், ஆண் என்றே அழைக்கவேண்டும் - உடை களை ஆண்களைப் போலவே கட்டுவித்தல் வேண்டும். ஆணா - பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாத மாதி ரியில் தயாரிக்கவேண்டும்.''
- தந்தை பெரியார்
‘குடிஅரசு', 15.9.1946)

-விடுதலை நாளேடு, 29.5.20
- மயிலாடன்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

‘‘வைக்கம் போராட்டம்'' நூலாசிரியர் பழ.அதியமானை பாராட்டி தமிழர் தலைவர் உரை

வைக்கம் போராட்டத்திற்காக தந்தை பெரியார் ஏழு முறை கேரளா சென்றார்

சமூகப் புரட்சி - அமைதிப் புரட்சி - அறிவுப் புரட்சி - ரத்தம் சிந்தாப் புரட்சியால்

வைக்கம் போராட்டம் வெற்றியடைந்தது

முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்துப் பாராட்டு.

தஞ்சை,பிப்.28 வைக்கம் போராட்டத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் ஏழுமுறை கேரளா சென்றார். சமூகப் புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி, ரத்தம் சிந்தா புரட்சியால் வைக்கம்  போராட்டம் வெற்றியடைந்தது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அருப்புக்கோட்டை து.கைலாசம் நினைவு டி.கே.சுப்ரமணியம் அறக்கட்டளை, நீதியரசர் டாக்டர் பி.எஸ்.சோமசுந்தரம் அறக்கட்டளை, பேராசிரியர் சி.வெள் ளையன் பொறியாளர் சுந்தரி அறக்கட்டளை ஆகிய அறக் கட்டளைகளின்  சார்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் ‘‘வைக்கம் பேராட்டம்'' நூலின் ஆசிரியர் பழ.அதியமான் அவர்களுக்குப் பாராட்டுக் கூட்டமும் நடைபெற்றது. விழாவிற்குத் துணைவேந்தர் செ.வேலுசாமி தலைமை வகித்தார்.

‘‘வைக்கம் போராட்டம்'' நூல் சிறந்த நூலகத் தேர்வு செய்யப்பட்டு எழுத்தாளர் பழ.அதியமான் அவர்களுக்கு ரூபாய் 25,000/- பரிசு வழங்கி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது தெரிவித்ததாவது:

96 ஆண்டுகளுக்கு முன்பு....

நூல் ஆய்வாளர் பழ.அதியமானுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டி சிறப்பு செய்தார்

வைக்கம் பேராட்டம் 96 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற பேராட்டம். இந்தியாவில் மனித உரிமைக் களத்தில் முதல் போராட்டம். உலகில் எங்கும் கேள்விப்படாத சமூகக் கொடுமையான தெருவில் நடக்கக்கூட கீழ் ஜாதிக்காரர்களுக்கு உரிமை இல்லாத நிலையில் வைக்கம் பேராட்டம் நடைபெற்றது.  அது சமூகப்புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி,  ரத்தம் சிந்தாப் புரட்சி என்ற பெரு மைக்கு உரிய போராட்டம். போராட்டத்தில் கலந்துகொள்ள பெரியார் ஏழுமுறை வைக்கத்திற்குப் பயணம் மேற்கொண் டுள்ளார்.

கேரளாவில் 141 நாள்கள் தங்கி இருந்தார் என்றால் அதில் 74 நாள்கள் சிறையில் இருந்தார். இரண்டுமுறை கைது செய்யப்பட்ட ஒரே தலைவர் பெரியார்தான். மகத்தில் அண்ணல் அம்பேத்கர் போராட்டம் நடத்திட, வைக்கம் போராட்டம் விதையாகப் பயன்பட்டிருக்கிறது. பெரியாரின் அனுபவம் கொடுமையானது. பேசத் தடை, பிரவேசத் தடை, தங்குவதற்குத்தடை, சிறைவாசம், சிறப்பு வகுப்பு மறுப்பு, காலில் சங்கிலி, மற்றவர்களைவிட இருமடங்கு வேலை என துன்பங்களைக் சுமந்தவர் பெரியார்.

ஆய்வாளர் வேங்கடாசலபதி

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி தம் ஆய்வுரையில். உண்மை  அறிஞர்களைப் பாராட்டாமல் மறந்து போகின்ற சமூகம் பின் தங்கிப் போகும் என்றார். காந்தியடிகள் திரும்பிய பின் முதல்முறையாக சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக நடத்திய பேராட்டம் வைக்கம் போராட்டம் என்று குறிப்பிட்டார்.

எதிரிகளுக்கு எதிராக பேராட்டம் நடத்தப்படுகின்றதா? அல்லது நம்மை நோக்கியே பேராட்டம் நடத்தப்படுகின்றதா? என்பது பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. நாரயண குரு இந்து மதத்தைக் கேள்வி கேட்கவில்லை. சமூக மாற்றம் என்பது இருக்கக்கூடிய அதிகார கட்டமைப்புகளை நியா யப்படுத்தக்கூடிய சித்தாந்த கருத்தியல் கட்டமைப்புகளை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதன் விளைவு இன்று வரை முற்போக்குவாதிகள் நெருக்கடிக்குத் தள்ளப்படு கிறார்கள் என்பதற்கு சபரிமலை பிரச்சினை சான்றாகும். ஆதிக்க சக்திகளின் எதிர்வினை பெரிய சவாலாக இருக்கிறது. பெரியார்தான் துணை நிற்கிறார் என்றார்.

வைக்கம் போராட்டம் என்றால்

சமுகநீதியின் அடையாளம்

நூலாசிரியர், எழுத்தாளர் பழ.அதியமான் தம் ஏற்புரை யில், படிக்கின்ற வாசகன் இருந்தால் எழுத்தாளர் எழுது வதற்கு, உழைப்பதற்கு சலிப்பதில்லை என்றார். மாணவர்கள் படிக்கின்ற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வைக்கம் சத்தியாகிரகம் அல்ல; வைக்கம் போராட்டம்தான். வைக்கம் போராட்டம் என்றால் சமுகநீதியின் அடையாளம் சிதம்பரம், பழனி என்று பெயர் வைப்பதுபோல பெரியாரின் தொண்டர்கள் தம் குழந்தைகளுக்கு ‘‘வைக்கம்'' என்று பெயர் சூட்டியி ருக்கிறார்கள். வைக்கம் போராட்டம் கோயில் நுழைவு போராட்டம் அல்ல; கோயிலைச்  சுற்றியுள்ள வீதிகளில் நடக்கின்ற உரிமை கோரும் போராட்டம். இப்போராட்டம் 610 நாள்கள் நடைபெற்றது. போராட்டத் தலைவர்கள் இல் லாத நிலையில் பெரியார் அழைக்கப்பட்டார். இவற்றை  எழுத ஆவணக் காப்பகமும், பத்திரிகைகளும் துணை புரிந் தன. மற்றத் தலைவர்களுக்குக் கடுங்காவல் தண்டனை கிடை யாது. அரசியல் கைதியாக நடத்தப்பட்டார்கள். ஆனால் பெரியாருக்குக் கடுங்காவல் தண்டனை. அரசியல் கைதியும் கிடையாது. பெரியார் அடைந்த துன்பத்தை அவர் சொல்லவில்லை மற்றவர்கள் கூறிய பதிவுதான் பெருமைக்குரியது.

மாணவி பூந்தளிர் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 28 2 20