கீழ்வெண்மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீழ்வெண்மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 மார்ச், 2021

கீழ் வெண்மணி -தந்தை பெரியார் மீதும்-திராவிட இயக்கங்கள் மீது கூறப்படும் அவதூறுகளுக்கு-சில விளக்கங்கள்

* கீழ் வெண்மணி -தந்தை பெரியார் மீதும்-திராவிட இயக்கங்கள் மீது கூறப்படும் அவதூறுகளுக்கு-சில விளக்கங்கள்

1968-டிசம்பர் 25ஆம் நாள்-தாக்குதலுக்கு பயந்து
வீட்டை பூட்டி
 வீட்டுக்குள் ,உள்ளிருந்த ஆதி திராவிட விவசாயத் தொழிலாளத் தோழர்கள் -வீட்டு உயிர்கள் பெண்கள் 25-பேர்கள்,பிஞ்சுகள்-14-பேர்,ஆண்கள் 3பேர்
மொத்தம் 42-உயிர்கள் 

ஆதிக்க வெறியர்களின்,நிலப் பிரபுக்களின் ,கோரத் தாண்டவத்திற்கு உயிரோடு கொளுத்தப் பட்டு பலியானர்கள்.

அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த
அண்ணா உடல் நலிவுற்றிருந்த நேரம். (அதன் பிறகு அண்ணா 35-நாட்களில் நம்மை விட்டு பிரிந்தார்)

வெண்மணிக்கு -கலைஞர் ,அமைச்சர் மாதவன்,சத்தியவாணிமுத்து,சாதிக்பாட்சா மற்றும்
ஓ.பி.இராமன் முதலியோரை அனுப்பி வைத்தார்.
கலைஞரும் அமைச்சர்களும் வரும் வரை அண்ணா
உணவருந்தவில்லை உறங்கவில்லை.

144-தடைஉத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது.
தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்துவோம் என்றனர் கம்யூனிஸ்ட் மார்க்கிஸ்ட் அணியினர்.
முதல்வர் அண்ணாவே தலையிட்டு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.

எர்ணாகுளம் மாநாட்டிற்கு சென்றிருந்த மார்க்கிஸ்ட் தலைவர் இராமமூர்த்தியை ,அண்ணா
சென்னைக்கு வர அழைத்தார்.

அண்ணாவிடம் பி.இராமமூர்த்தி அங்குள்ள விசாரணை காவல் துறை அதிகாரிகளை மாற்றிவிட்டு புதிய அதிகாரிகளை நியமித்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்
அண்ணா ஏற்றுக் கொண்டார்.

கணபதியாபிள்ளை தலைமையில் விசாரணை கமிஷனையும் அமைத்தார்.

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண  நாயுடு (மிராசுதாரர்)மற்றும் 30-பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கியது.சட்டமன்றத்தில் மூன்று நாள் விவாதம் நடந்தது.கலைஞர் சட்டமன்றத்திலே
கோபாலகிருஷ்ண நாயுடுவை ‘கொடும்பாவி ‘என்று
விழித்து பேசினார்.

தலைவர் பெரியார்  சம்பவம் நடந்தபோது உடல் நலிவின்றி சென்னை மருத்துவமனையில் இருந்தார்.மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அறிக்கை வெளியிட்டார்.

மத வெறியர்களால் காந்தி கொலை செய்யப்பட்டதும்,காமராசர் மீது டெல்லியில் நடந்த கொலைமுயற்சி எப்படி கொடுரமானதோ 
அதை விட கொடுரமானது கீழ் வெண்மணி நிகழ்வு என்றார்;தந்தை பெரியார்.

மேலும் இந்த ஆட்சியால்,இந்த சட்டங்களால் இந்த நீதிபதிகளால் இந்த நீதிமன்றத்தால் 
இக் கொடுமைகளை தடுக்க முடியாது;என்றார் பெரியார்.

தலைவர் பெரியாரின் இந்த உரை வீச்சின் வீரியம்தான் நிகழ்வில் சம்பந்தப்பட்ட
இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்ட பின்னரும் -சம்பவம் நடந்த 12-ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் அழித்தொழிப்பில் முடிவுற்றது.

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு
சிறையில் இருத்து வெளிவந்து நாகை பயணியர்
விடுதியில்,தந்தை பெரியாரை சந்திக்க மூன்று மணி நேரம் காத்திருந்தார்.

அவர் ஏன் என்னைப் பார்க்க வேண்டும்?எனக்கு சம்மதமில்லை.அவரை நான் பார்க்க விரும்பவில்லை.வெளியே போகச்சொல்லு என்று நாகை எஸ் எஸ் பாட்சாவிடம் சொல்லியனுப்பினார்.

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு கொலையுண்டார் என்பதிலிருந்து கீழ் வெண்மணி வெங்கொடுமைக்கு எப்படி பதில் கூறப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம் என்றார் கலைஞர்.

கோபாலகிருஷ்ண நாயுடுவின் கொலை சரியான ஒன்றே என்று துணிச்சலாக எழுதியவர் கலைஞர்.

இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடுவின் கொலை வழக்கில் நேரடியாக பங்கேற்ற புரட்சிகர இடதுசாரி அமைப்பினைச் சார்ந்த ஏழு பேர் தலைமறைவாகினர்.

பிறகு இதில் தொடர்பில்லாத சந்தேகத்தின் பேரில்  என்று கைது செய்யப்பட்ட 11 பேரில் 9பேர் திராவிடர் கழகத் தோழர்கள்.வழக்கு
எண்254/80.

இவர்களில் திராவிடமணி அப்ரூவராக
மாறினார். ஒருவர் வழக்கு நடந்துகொண்டிருக்கும்
பொழுதே மரணமடைந்தார்.

10-5-82-அன்று நாகை நீதிமன்றத்தில் திராவிடமணியைத்
தவிர்த்து மற்ற அனைவருக்கும் தண்டனை வழங்கப் படுகிறது.

மேல் முறையீட்டில் உயர் நீதி மன்றம் மார்ச் மாதம் 1985-ஆம் ஆண்டு அனைவரையும் விடுதலை
செய்தது..
- பன்னீர்செல்வம் முகநூல் பதிவு, 22.3.21

ஞாயிறு, 14 ஜூன், 2020

கீழ்வெண்மணி படுகொலையைப் பெரியார் ஆதரித்தாரா?

பதில்கள் - 1

வெண்மணி படுகொலையின் போது பெரியார் அமைதி காத்தார் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

கீழ்வெண்மணி படுகொலையின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக இருந்தாரா?

இதற்கான பதிலைத் தெரிந்துக் கொள்வதற்கு முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். "கலவரச் சூழல் குறைய முத்துராமலிங்கம் கைது செய்யப்பட வேண்டும்", என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தவர் பெரியார்.

கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற் சங்கம்' என்கிற அமைப்புத் திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. 

சாணிப்பால் கொடுப்பது, சவுக்கால் அடிப்பது போன்ற வன்கொடுமைகளைத் திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட் தோழர்களும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்குக் கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கான கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பில் சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

மேலும் "தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்" என்று அப்போது இருந்தது. அன்றைக்குப் பண்ணையில் வேலை செய்பவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இன்று வேலைக்குப் போனால், அடுத்த நாள் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்படி வேலை மறுக்கப்பட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டம் உறுதி செய்தது. அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணை ஆட்களுக்கு இருந்து வந்தது. அது பெரியாரின் கோரிக்கையால், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது.

டிசம்பர் 25, 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்து, 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது, பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.  

டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டில் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக இது அறியப்படுகிறது. அதனால் உடனடியாக பெரியார் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. 

ஆனால் பிறகு ‘கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்படி?’ என்ற தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினார் பெரியார். 12.01.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்தில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார். பொதுவாகக் கூலி உயர்வுப் போராட்டங்களைப் பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள் பங்குதாரர்கள் ஆவதே முக்கியம் என்பதே அவரின் நிலைப்பாடு.

- தோழர் தியாகு
பதில்கள் - 2

எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித் தகராறு என்பது முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்.(குடிஅரசு 01.10.1933)

"நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” (பகுத்தறிவு - 02.12.1934)

"முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்" (1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானம்)

இந்த அடிப்படையிலேதான் போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்தார். இருந்தாலும் திராவிடர் கழகத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கீழ்வெண்மணி மக்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்குப் போராடி வந்தனர்.

கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்குக் கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

கீழ்வெண்மணியை சார்ந்த முனியன் என்பவர் கீவளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற எண் : 327/68 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகக் கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106 பேரைக் காவல்துறைக் கைது செய்தது. 

கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970 இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தார்.

- தோழர் தியாகு
பதில்கள் - 3

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4 வருடங்கள், 3 மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன், கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

கவனிக்க: பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். அவருக்குக் கோபால கிருஷ்ண நாயுடு கீழ் நீதி மன்றத்தில் தண்டனை பெற்றதும், மேல் முறையீடு செய்ததும், ஜாமீனில் வெளி வந்ததும் மட்டுமே தெரியும். மேல் முறையீட்டு விடுதலை அவரின் மறைவுக்குப் பின் நடந்தது. எனவே கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு அவர் ஆதரவளித்தாக சொல்வது எங்குமே பொருந்தாது. 

இன்னொரு முக்கிய விசயம், ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் நாயுடு, பெரியாரை சந்திக்கக் கீவளூர் வந்த போது பெரியார் “என்கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்ல சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரைக் கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போகச் சொல்லு," எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். இதைக் கணபதியா கமிசனில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா பதிவு செய்துள்ளார்.

கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைத் தொடர்பாக காவல் துறை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான ‘காவலாக்குடி மதி' இன்னும் உயிரோடு இருக்கிறார். குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆக கலவரத்திற்கு முன்பும், பின்பும் திராவிடர் கழகமும், பெரியாரும் ஒரு போதும் ஆதிக்கச் சாதியினர்க்கு ஆதரவாக இல்லை!

- தோழர் தியாகு
- தொகுப்பு : வி.சி.வில்வம்

செவ்வாய், 25 டிசம்பர், 2018

கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா?

நன்றி :- _ "கீற்று "
கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்து தியாகு தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:

கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?

இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார்.

கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்' சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி காலத்தில் பெரியார் செய்தார். அது `தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்` . அன்று பண்ணையாளுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. ஒரு நாள் காலையில் வேலைக்கு போனால் மறுநாள் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். வேலைக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்படி வேலை திடீரென மறுக்கப்பட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டம் உறுதி செய்தது. அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணையாளுக்கு வந்தது. அது பெரியாரின் கோரிக்கையால், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது.

டிசம்பர் 25, 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்தது 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்துவந்தாரென்பது டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் ஆசிரியர்

கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியப்படுகிறது. எனவே உடனடியாக பெரியார் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஆனால் பிறகு ‘கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்படி?’ என்றத் தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினார். 12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்தில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார். பொதுவாக கூலி உயர்வுப் போராட்டங்களை பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள் பங்குதாரர்கள் ஆவதுதான் முக்கியம் என்பதே பெரியாரின் நிலைப்பாடு.

“எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள்.  அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு 01.10.1933).

"நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” - “(பகுத்தறிவு - 2.12.1934)

"முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்" -1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானம்.

இந்த அடிப்படையிலேதான் போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கம்யுனிஸ்ட் கட்சியை விமர்சித்தார். இருந்தாலும் திராவிடர் கழகத்தினரும், கம்யுனிஸ்ட் கட்சியினரும் கீழ்வெண்மணி மக்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்குப் போராடி வந்தனர்.

கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்கு கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

கீழ்வெண்மணியை சார்ந்த முனியன் என்பவர் கீவளூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற எண்:327/68ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

கவனிக்க: பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். அவருக்கு கோபால கிருஷ்ண நாயுடு கீழ் நீதி மன்றத்தில் தண்டனை பெற்றதும், மேல் முறையீடு செய்ததும், ஜாமீனில் வெளி வந்ததும் மட்டுமே தெரியும். மேல் முறையீட்டு விடுதலை அவரின் மறைவுக்குப் பின். எனவே கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு அவர் ஆதரவளித்தாகச் சொல்வது எங்குமே பொருந்தாது. இன்னொரு முக்கிய விசயம். ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் கீவளூர் வந்திருந்த பெரியாரை சந்திக்க முயன்ற போது பெரியார் “ என் கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்லச் சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரை கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போ. போ. போகச் சொல்லு” எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். இதை கணபதியா கமிசனில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா பதிவு செய்துள்ளார்.

கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைத் தொடர்பாக காவல் துறை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான ‘காவலாக்குடி மதி' இன்னும் உயிரோடு இருக்கிறார். குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆக, கலவரத்திற்கு முன்பும், பின்பும் திராவிடர் கழகமும், பெரியாரும் ஒரு போதும் ஆதிக்கச் சாதியினர்க்கு ஆதரவாக இல்லை !