போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூன், 2025

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)

 Published May 27, 2025

விடுதலை நாளேடு

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

72 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)
எல்லா கடவுள்களும் ஒழிந்தே தீரும்! – தந்தை பெரியார்

நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27ஆம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்காக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப்போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகிய கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27ஆம் தேதியன்று உடைத்தோம்.

இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை 500- க்கு மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கிலே, ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பும் ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்த்து உடைக்கப்பட்டது! தமிழ் நாட்டின் எல்லாப் பாகங்களிலும், மூலை முடுக்கு களிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப்பட்டன.

ஆனால், இந்தப்படி நாம் உடைத்த தால் விநாயகரே ஒழிந்து விட்டதா? இல்லை. இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று.

சும்மா கிடந்த பிள்ளையாருக் கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள்.

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2 லட்சத்தோடு இப்போது ஒரு 3,000 சேர்ந் திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2 லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000 பிள்ளையாரும் ஒழிந்துதானே போகும்? அல்லது இப் போது புதிதாக இந்த 3000 பிள்ளை யார்கள்போல் உற்பத்தி யானதால் இந்த 2 லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!

சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளை யாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது?

ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.

இந்தச் சாமிகள் என்று கொண்டாடப் படுபவைகள் ஆபாசமானவை, அசிங்க மானவை! அக்கிரமமானவை, நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டு விட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கின்றன. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத் திருப்பது இந்தக் கடவுள்கள்தான்!

எனவே, நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண் டும் என்றால், இக்கடவுள்கள் என்ப வைகள் ஒழிய வேண்டும் – என்று இப்படிப் பல காரணங்களை, தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி நாம் இந்தக்கடவுள் என்பவைகளை உடைக் கிறோம்!

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஒப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான். அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெற்றுக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வது என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும்தான் அவர்களால் செய்ய முடிந்தது. சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண் டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன் தானே புதிய சாமிகளையும் உண்டாக்கு வான்! இது வரையிலே சாமி கும்பிடாத வன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டி ருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள் தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உண்டாக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன?

இன்னும், நாம் பிள்ளையாரை உடைக்கிறோம் என்றவுடன், திராவிடர் கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர்ப் பிரச்சாரமாக நமது புண்ணிய புராணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புராணப்பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவைகளில் உள்ள ஆபாசங்களை, அநியா யங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக்காட் டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லு கிறோம்.

விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப் பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித் தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அது போலவே, இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயணத்தை பக்கம் பக்கமாக கொளுத்த வேண்டும் என்றால் இராமாயணத்தை பக்கம், பக்கமாக, காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் – கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப் போனால் புராணங் களை அவர்கள் பிரச்சாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவை களின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள் வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால், இப்படிப் பட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!

நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.

முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக, ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் – உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!

– “விடுதலை” நாளேடு 11-07-1953

செவ்வாய், 12 நவம்பர், 2024

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பெண்கள்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பெண்கள் மொத்தம் 73.

அவர்களோடு சிறைக்குச் சென்ற குழந்தைகள் 32.

போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தவர் தந்தை பெரியார்.

இந்த வீர வரலாறு தொடங்குவதற்கு வித்திட்ட நாள் நவம்பர் 13.

#தமிழ்நாட்டுப்_பெண்கள்_மாநாடு
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையேகிய டாக்டர் தருமாம்பாள் அவர்களும், அவரது இரண்டு மருமகள்களும்...!

ஞாயிறு, 12 மே, 2024

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஆதிக்க சக்திகளின் ஆட்டம்!


கி.தளபதிராஜ்

6

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உலகத் தலைவர் தந்தை பெரியார், மானுடத்தின் மாண்பு காக்க தன் வாழ்நாள் முழவதும் போராடியவர். தமிழர்களின் சூத்திரப் பட்டம் ஒழிய, இன இழிவு நீங்க தன் வாழ்வையே போராட்டக் களமாக மாற்றிக் கொண்டவர். பெரியார் நடத்திய போராட்டங்களிலேயே முதன்மையானது சட்ட எரிப்புப் போராட்டம். ஜாதியைப் பாதுகாப்பதாகச் சொல்லி இந்திய அரசியல் சட்டத்தை எரித்து சவக்குழிக்கு அனுப்பச் சொன்னார். பல்லாயிரக்கணக்கான கழக தோழர்கள் பல ஆண்டு சிறைப்பட்டு சித்திரவதைப்பட்டதும் - பல தோழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்ததும் இந்தப் போராட்டத்தில் தான். சட்ட எரிப்புப் போராட்டத்தின் மூலம் பெரியார் தன் இயக்கத்திற்கு முடிவுரை எழுதுகிறார் என்றார்கள். 

இந்திய அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தபோது தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது  அந்தச் சட்ட நடைமுறையிலேயே இல்லாதது ஆட்சியாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. பார்ப்பன சக்திகள் படமெடுத்து ஆடின. இந்திய ஒன்றிய அரசும் பார்ப்பன லாபியும் கொடுத்த அழுத்தத்தில் புதிதாக ஒரு சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசு முனைந்தது.

தேசிய அவமதிப்பு தடைச்சட்ட மசோதா விவாதம்

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருந்த தோழர்களை சந்திப்பதற்காக பெரியார் சென்னையிலிருந்து ரயில் மூலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பெரியார் தன் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அதே நாளில் நவம்பர் 11 ஆம் தேதி தேசிய அவமதிப்புத் தடைச்சட்ட மசோதா சட்ட மன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. 

விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணா, "ஜாதியை ஒழிப்பது இந்த அரசாங்கத்தின் கடமை என்று பத்து நாள்களுக்கு முன்பு நேரு அவர்களே சொன்னார்களே! அந்த அடிப்படையில் பெரியாரைச் சந்தித்துப் பேசினால் அவரை விட தனிப்பட்டவர்களிடத்தில் மரியாதை காட்டுகிறவர், அவரை விட தாட்சண்யத்திற்கு கட்டுப்படக் கூடியவர், அவரைவிட எதிரியின் மனப்பான்மையை அறிந்து தன் மனப்போக்கை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒருவரை நீங்கள் தமிழ்நாட்டிலேயே பார்க்க முடியாது. சட்டங்களைச் செய்வதினால் பலன் இல்லை.

தேசியக்கொடி அவமதிக்கப்பட்டால் அது தன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் அவர்கள்  கருதுவது போல், பெரியாரை அடக்குவதற்காக நீங்கள் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மனம் புண்படுபவர்கள் இன்று தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரவை தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்! " என்றார்.  (அண்ணா தந்தை பெரியார் அவர்களிடமிருந்து பிரிந்திருந்த காலகட்டம் அது )

தேசிய அவமதிப்பு தடைச்சட்ட மசோதா நிறைவேறியது

தேசிய அவமதிப்புத் தடைச்சட்ட  மசோதா நீண்ட விவாதத்திற்குப் பின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் படி, காந்தி பட எரிப்பு, சிலை சேதப்படுத்தல், தேசியக் கொடி எரித்தல், அரசியல் சட்டப்  புத்தகத்தை எரித்தல், வேறு வகையில் அவமானம் இழைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை தேசிய அவமதிப்பாகக் கருதி மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்டும். இச்சட்டப்படிக் கருதப்படும் குற்றங்களைச் செய்ய முயற்சித்தாலும் குற்றம் செய்ததாகவே கருதப்படும். 

சட்டமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப் பட்ட சட்டத்தை தந்தை பெரியார் அவர்களோ, கழகத் தோழர்களோ ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 'யானைக்கு முள்வேலி கட்ட முயற்சி!'  'தடியனைக் காப்பாற்றும் பொடியன்!' 'பயமுறுத்தல் சட்டம்!' 'உலகிலேயே எங்கும் கண்டறிய முடியாத நூதனச் சட்டம்!' என்றெல்லாம் தலைப்பிட்டு கிண்டலடித்து எழுதியது விடுதலை! போராட்டத்திற்கான ஆயத்த பணிகளில் தலைவரும் தொண்டர்களும் முன்பை விட தீவிரமாக இறங்கினர். 

பெரியார் கைது

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறப்போகும் சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு தோழர்கள் தயாராகி கொண்டிருந்தார்கள். அதற்கு முதல்நாள் 25ஆம் தேதி திருச்சி - சிறீரங்கத்தில் ஒரு பொதுக்கூட்டம். தந்தை பெரியார் சிறப்புரை. அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நவம்பர் 25 மாலை திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையிலிருந்து சிறீரங்கம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தயாராகிக் கொண்டிருந்தார் பெரியார். மாலை 6.40 மணிக்கு பெரியார் மாளிகை வந்த காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.சோலை அவர்கள் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக தங்களை கைது செய்கிறோம் என்று சொல்லி பெரியாரை வேனில் அழைத்துச்சென்றார்.  சிறீரங்கம் கூட்டத்தில் திருச்சி நகர தலைவர் தி.வீரப்பா தலைமையேற்க கடலூர் வீரமணி (தற்போதைய கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்), வடவேற்குடி திருஞானசம்பந்தம், ஏ.எம்.ஜோசப் ஆகியோர் பேசினர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றத் தொடங்கிய போதுதான் பெரியார் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தது. சில மணி நேரங்களில் பெரியார் கைது செய்யப்பட்ட செய்தி தீயாய் பரவ தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பெரியார் மீண்டும் கைது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஒரு சில நாட்களில் வெளிவர,  காந்தியார் பட எரிப்பு, நேரு பட எரிப்பு, இந்திய தேசிய யூனியன் பட எரிப்பு என அடுத்தடுத்து போராட்டங்களை அறிவிக்கப் போவதாக எச்சரித்தார் பெரியார். அதனைத்தொடர்ந்து டிசம்பர் 14 ஆம்தேதி பெரியார் மீண்டும் கைது செய்யப்பட்டார். மூன்று குற்றப்பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு பிரிவிற்கும் 6 மாதங்கள் வீதம் ஒன்றரை ஆண்டு காலம் தண்டனை விதிக்கப்பட்டது

பெரியார் கைது செய்யப்பட்ட நிலையில் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகப் பொறுப்பாளர்களுடன் சிறைபட்ட கழகத் தோழர்களை தொடர்ந்து சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். கடலூர் வீரமணி (தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி) அவர்கள் அம்மா அவர்களுடன் தொடர்ந்து பயணித்தார். நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களும் சிறைச்சாலைகளுக்குச் சென்று தோழர்களை சந்தித்தார். 

மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைக்கொட்டடியில் சித்ரவதை அனுபவித்த தோழர்களின் கதை இரத்தக் கண்ணீர் வரவழைக்கக்  கூடியவை. நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே மாண்ட தோழர்கள்! குடும்பத்தையே நிர்க்கதியாய் நட்டாற்றில் விட்டு விட்டு சூத்திரப் பட்டம் ஒழிய சிறை சென்ற சிங்கங்கள்! பெற்றோரை, பெற்ற மகனை, உற்றார் உறவினரைப் பறி கொடுத்து அவர்கள் முகத்தைக் கூட பார்க்க முயற்சிக்காமல் வைராக்கியத்துடன் சிறைத் தண்டனையை அனுபவித்த தீரர்கள்! சிறை வாழ்க்கை முடிந்து விடுதலையான சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு மறைந்து போன மறவர்கள்! என நெஞ்சை உலுக்கும் செய்திகள் சொல்லி மாளாது. திராவிடர் கழகத்தைத் தவிர பெரியார் தொண்டர்களைத் தவிர இப்படியொரு மேன்மையான இயக்கத்தை அகில உலகத்திலும் வேறு எங்கும் காண முடியாது.

சட்ட எரிப்புப் போரில் 

உயிர் நீத்த தோழர்கள்

பட்டுக்கோட்டை இராமசாமி, மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு வெள்ளைச்சாமி, லால்குடி நன்னிமங்கலம் கணேசன், திருச்சி வரகநேரி சின்னச்சாமி, 14 வயதே நிரம்பிய திருச்சி வாளாடி பெரியசாமி ஆகிய அய்ந்து தோழர்களும் சிறைக் கொடுமை தாங்காது சிறையிலேயே மாண்டனர்.

சிறையில் நோய்வாய்ப்பட்டு கடும் உடல்நலப் பாதிப்புடன் விடுதலை செய்யப் பட்ட மன்னார்குடி காரைகோட்டை இராமய்யன், கோயில் தேவராயன்பேட்டை மு.நடேசன், திருவையாறு மஜீது, இடையாற்று மங்கலம் நாகமுத்து, மயிலாடுதுறை அடுத்த பொறையாறு என்.தங்கவேலன், இடையாற்று மங்கலம் தெய்வானை அம்மாள், மயிலாடுதுறை அடுத்த மாதிரிமங்கலம் ரத்தினம், திண்டிவனம் பூங்கோதை, சென்னை புதுமனைக்குப்பம் எம்.கந்தசாமி, திருச்சி சி.ஆர்.எஸ்.மணி, டி.ஆர்.எஸ்.வாசன், அரியலூர் கண்டராதித்தம் சிங்காரவேலு, மயிலாடுதுறை அருகே மணல்மேடு அப்பாதுரை, கீழ்வாளாடி பிச்சை ஆகியோர் சிறையிலிருந்து வெளிவந்த ஒருசில நாட்களிலேயே தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

மறைவுற்ற தோழர்களின் உடலைக் கொடுக்க மறுத்த சிறை நிர்வாகம் 

சட்ட எரிப்புப் போராட்டத்தில் முதல் பலியான பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் உடலை ஒப்படைக்க மறுத்தனர் சிறை அதிகாரிகள்! தந்தை பெரியார் அவர்களோ சிறையில்! வெகுண்டெழுந்தார் அன்னை மணியம்மையார்! சிறை நிர்வாகத்தை எதிர்த்து கடும் கண்டனக்குரல் எழுப்பினார். நிர்வாகம் மசியவில்லை. இனி அவர்களிடம் பேசிப் பயனில்லை என்பதை அறிந்து கி.வீரமணி, எம்.ஆர்.ராதா ஆகியோருடன் சென்னை சென்று முதலமைச்சர் காமராஜர் அவர்களை சந்தித்தார். பெரும்போராட்டத்திற்குப் பின் அழுகிய நிலையில் இருவரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது. 

திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை யிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அன்னை மணியம்மையார் அவர்கள் ஊர்வலத்தில் நடந்தே சென்றார்கள். கழகத் தோழர்கள் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்து பெருமளவில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இயக்க மூத்த முன்னோடிகள் அந்த நிகழ்வை மிகவும் உணர்ச்சி வயப்பட்டு விவரிக்கையில் கேட்போர் உள்ளம் உறைந்து போகும்.

பெரியாரின் ஜாதி ஒழிப்புக் களம் சட்ட எரிப்புப் போராட்டத்தோடு நின்று விட வில்லை. ஜாதி ஒழிப்புக்கென பிரத்தியேக மாநாடுகளை, போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார்.  கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். சாகும் தருவாயிலும் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தனது இறுதிப் பேருரையில் கூட 'உங்களை சூத்திர மக்களாக விட்டு விட்டுச் சாகப் போகிறேனே!' என்று உணர்ச்சி மேலிட உரைத்தார். பெரியார் மறைந்தார்! பெரியார் பணி தொடர்கிறது! பெரியார் பணி முடிப்போம்!

8

மயிலாடுதுறை வட்டத்தில் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்ற தோழர்களுடன் தந்தை பெரியார்


பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’


Published September 23, 2023, விடுதலை ஞாயிறு மலர்

“மலையாளத்தாரை வெறி பிடித்தவர்கள் என்று கொள்ளாமல் வேறு எவ்வாறு அவர்களை மதிக்கக் கூடும்?’’ என்று துறவியான விவேகானந்தரையே பேச வைத்திருக்கிறது என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் எப்படிப்பட்ட அவல நிலை இருந்திருக்க வேண்டும்?

கேரள மாநிலம். கோட்டயத்திலிருந்து 32 கி.மீ. தூரத்தில் இருக்கிற வைக்கத்தில் வேம்பநாடு ஏரிக்கரையில் இருக்கிறது பழைமையான மகாதேவர் கோவில். 

உள்ளே இருப்பது சிவபெருமான் தான். மலையாளத்தில் ‘வைக்கத்தப்பன்’ என்று அழைக்கிறார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கு நடக்கும் திருவிழா விசேஷம்.

அப்போது திருவிதாங்கூர் ராஜாவின் சமஸ்தான ஆட்சி. மகா ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வைக்கம் கோவிலைச் சுற்றிலும் பந்தல் போட்டிருந்தார்கள். அதையொட்டி இருந்த நீதிமன்றத்திற்கு முன்னாலும் பந்தல் அலங்காரம்.

அந்த நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வந்த மாதவனை அவருடைய சமூகத்தைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்குள் நுழையத் தடை விதிக்கிறார்கள் உயர்ஜாதிக்காரர்கள்.

அந்த இழிவு தான் பொறி. எதிர்த்துக் கலகக் குரல்கள் எழுந்தன.

அன்றைக்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் உட்படப் பலர் கூடிப் பேசினார்கள். சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்தார்கள். நடத்தினார்கள். நடத்தியவர்கள் கைதானார்கள்.

இதெல்லாம் நடந்தது 1924 ஏப்ரல் மாதத் துவக்கத்தில். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி பெரியாருக்குக் கைதானவர்கள் கடிதம் எழுதுகிறார்கள்.

சுற்றுப்பயணத்தில் இருந்த பெரியார் ஈரோட்டுக்குத் திரும்பிச் சிலரை அழைத்துக் கொண்டு நேரே வைக்கத்திற்குக் கிளம்பிவிட்டார்.

பெரியாருக்கு ஏற்கெனவே அறிமுகமானவராக திருவிதாங்கூர் ராஜா இருந்தாலும், அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட வரவேற்பை மறுத்தார் பெரியார்.

பொதுக்கூட்டங்களில் தெருவில் சில சமூகத்தினர் நடக்கக் கூடத் தடை விதித்திருப்பதை எதிர்த்துக் கடுமையாகப் பேசினார்.

போராட்டம் வலுவடைந்தது. போராடுவதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெரியார் உட்படப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டு அருவிகுத்தி என்கிற ஊரில் சிறை வைக்கப்பட்டார்கள்.

இருந்தாலும் வெளியே போராட்டம் தொடர்ந்தது. பெரியாரின் மனைவி நாகம்மாளும், தங்கை கண்ணம்மாளும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். போராட்டம் தீவிரமானது.

ஒரு மாதத்தில் பெரியார் விடுதலை ஆகி வெளியே வந்ததும் போராட்டம் இன்னும் வலுக்கிறது. “பெரியார் அங்கே தலைமை தாங்கும்போது நான் கூட்டத்திலிருந்த சாதாரணத் தொண்டன்’’ என்று பின்னாளில் பதிவு செய்திருக்கிறார் காமராஜர்.

ஈழவ சமுதாயத்தின் பெரும்தலைவரான நாராயணகுரு, ’’ஒருவன் தீண்டுவதனால் இன்னொருத்தனின் பரிசுத்தம் கெடுமானால், அந்தப் பரிசுத்தம் அழியட்டும்’’ என்று சொல்லக்கூடிய அளவுக்குப் போனார்.

அதற்குள் மறுபடியும் பெரியாரைக் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைக்கிறார்கள். அவருடைய காலில் விலங்கு, தலையில் குல்லா, கழுத்தில் கைதி எண் எழுதப்பட்ட மரச்சட்டம்.

“இப்படி வைத்திருப்பது நியாய விரோதம். திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது’’ என்றார் ராஜாஜி. (சுதேசமித்திரன்- 28.8.1924)

போராட்டம் வலுத்த நிலையில் ராஜாஜி கடிதம் எழுதியபிறகு காந்தியார் வைக்கத்திற்கு வந்தார்.

ராணியைச் சந்தித்தார். நாராயணகுருவைச் சந்தித்தார். தடை விதித்திருந்த உயர்ஜாதியினரை அழைத்துப் பேசினார்.

கடைசியில் ராணியின் உத்தரவுக்குப் பிறகு 1925ஆம் ஆண்டில் சில சமூகத்தினருக்குத் தெருவில் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அதன் பிறகு கோவிலுக்குள் நுழைவதற்கான தடையும் நீக்கப்பட்டது.

சுதந்திர உணர்வுடன் அதுவரை உரிமை மறுக்கப்பட்ட தெருக்களில் ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்தோடு பேரணியாகச் சென்றபோது அதற்குத் தலைமை தாங்கியவர் பெரியார்.

இன்று வரை வைக்கம் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் நீடித்துக் கொண்டிருந்தாலும், கேரள அரசின் முயற்சியோடு வைக்கத்தில் 1994 ஜனவரியில் நினைவகம் எழுப்பி அவருடைய பங்களிப்பின் அடையாளமாக அவருடைய சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

அன்றைக்குச் சக மனிதனை படுகேவலமாகத் தாழ்த்திய அவலம் தொடர்ந்தபோது அதை எதிர்த்து “பொது வாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது’’ என்று கலகக் குரலை உயர்த்திப் போராடி, சிறைப்பட்டவரை காலத்தின் இன்னொரு கரையில் நின்று வசதியாக விமர்சிப்பது மிக எளிது.

இன்றைய இலக்கிய முலாம் பூசிய எந்தச் சொற்களை விடவும், அன்றைய செயல் தான் வலிமையானது.

அப்படிச் சமூகத்தின் தேவையை உணர்ந்து நின்றதால் தான் பெரியார் போராட்டம் நடத்திய அதே வைக்கம் மண்ணில் அவருக்கு நினைவகமும், சிலையும் எழுந்திருக்கிறது.

அவை எல்லாமே பிறர் வலியைத் தன்வலியாக உணர்ந்தவருக்கு அளிக்கப்பட்ட காலங்கடந்த அங்கீகாரத்திற்கான எளிய அடையாளங்கள்.

நன்றி: ‘குமுதம்’, 25.10.2017

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

வைக்கம் போராட்டம் - பரிணாமம்!

   

வைக்கம் போராட்டம் 

தொடங்கிய நாள் 30.03.1924

9

போராட்டத்தில் கலந்து கொண்ட 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பெரியாருக்கு அழைப்பு வருகிறது.

போராட்டம் தொடங்கி 14ஆம் நாள். அதாவது 13. 4 .1924 அன்று. வைக்கம் வந்து சேர்ந்தார் பெரியார்.

வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் இரண்டு முறை கைது செய் யப்பட்டார்.

முதல் கைது: 22.5.1924 முதல் 21.06.1924 வரை அருவிக்குத்தி சிறைச்சாலை. 

சிறையில் இருந்த நாட்கள் 31

இரண்டாவது கைது: 18.07.1924 முதல் 31.08.1924 வரை திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயில் சிறைச்சாலை. 

சிறையில் இருந்த நாட்கள் 44

1924 மற்றும் 1925 ஆம் ஆண்டு களில் போராட்டத்திற்காக பெரியார் வைக்கம் சென்றது 7 முறை

பிரச்சாரம் செய்த நாட்கள் 67.

சிறையில் இருந்த நாட்கள் 74

வைக்கத்தில் எல்லாத் தெருக் களிலும், எல்லோரும் நடக்கலாம் என, திருவாங்கூர் அரசி ஆணை பிறப்பித்த நாள்: 21.11.1925

1925 நவம்பர் 21 மற்றும் 22 தேதி களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, வைக்கம் போராட்ட வெற்றிக்காகப் பெரியாருக்குப் பாராட் டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. (தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய மாநாடும் இதுதான்)

வைக்கத்தில் வெற்றி விழாக் கூட்டம் நடைபெற்ற நாள்: 29.11.1925

தலைமை: மன்னத்து பத்மநாபன்.

தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டவர் தந்தை பெரியார் மட்டுமே.

வைக்கம் பொன்விழா நடை பெற்ற நாள்: 26.4.1975

அன்னை மணியம்மையாரும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணியும் கலந்து கொண்டார்கள்.

தந்தை பெரியாரின் அரும் பணியைப் பாராட்டி ‘வைக்கம் வீரர்’ என்று பட்டம் கொடுத்தவர் திரு.வி.க.

* தமிழ்நாட்டில் மிக முக்கிய மான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய ‘வைக்கம் போராட்டம்‘ என்ற தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

* தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகியவற்றின் கூட்டு வெளியீடாக இது வெளியிடப்படவுள்ளது. இந்த நூலின் கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பை இன்று (29.11.2023) முதலமைச்சர் வெளியிட்டார்.

தந்தை பெரியார் பிறந்த 

நாளில் வைக்கம் விருது

10

* எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவு கூரும் வகையில், பிற மாநிலங் களில் ஒடுக்கப்பட்டவர்கள் நல னுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங் களுக்கு ஆண்டுதோறும் வைக் கம் விருது சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

* கேரள மாநிலம் வைக்கத் தில் அமைந்துள்ள பெரியார் நினை விடத்தை நவீனமுறையில் மறுசீர மைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட் கள் கூடுதலாக இடம் பெறுவ தற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் படும்.

* தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக் குட்டி கிராமத்தில் பெரியார் நினை விடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

* வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டின் முக்கிய பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களில் வைக்கம் போராட்டம் தொடர் பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி - வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும்.

ஓராண்டு முழுவதும்...

* வைக்கம் போராட்ட நூற் றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க் கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய் யப்படும். இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். 10 வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல் வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற் றாண்டு மலர் ஒன்று தமிழரசு பத்தி ரிகை மூலம் கொண்டு வரப்படும்.


செவ்வாய், 14 நவம்பர், 2023

அகில இந்தியாவையும் உலுக்கிய 'அரசியல் சட்ட' எரிப்புப் போராட்டம்!


கி.தளபதிராஜ்

11

"மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் முதன்மையான கொள்கை. அதாவது எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல. அது போலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திர மாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்!" என்ற பெரியார், தன் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புக்காக போராடினார்.

"மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவ மாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி முழுகச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது?" என்றார்.

காங்கிரசில் இருந்தபோதே 1924ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராடி வெற்றிகண்டார் பெரியார். அந்தப் போராட்டமே இந்தியாவில் நடைபெற்ற முதல் சமூக நீதிப்போராட்டமாக  வரலாற்றாய்வாளர்கள் குறிக்கின்றனர். அதே காலகட்டத்தில் சேரன்மாதேவியில்  வ.வே.சு.அய்யர் நடத்திய குருகுலத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பேதப் படுத்தப்பட்டதை அறிந்து அதற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கினார் பெரியார். ஜாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு வகுப்புவாரி உரிமை கோரி காங்கிரசை விட்டே வெளியேறினார்.

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டமானாலும், இராமர் பட எரிப்பானாலும், புராண, இதிகாச, மனுதர்ம பிரதிகள் கொளுத்தப்பட்டதானாலும் அனைத்தும் ஜாதி ஒழிப்பிற்காகவே அவரால் நடத்தப்பட்டது. ஜாதி ஒழிய வேண்டுமானால் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் ஒழிய வேண்டும்: ஒழிக்கப்பட வேண்டும் என்றார். ஜாதியின் மூல வேரை தேடித் தேடி அழிக்க முயன்ற பெரியார், அது எந்த வடிவில் வந்தாலும் அதை அழித்தொழிப்பதையே தனது தலையாய பணியாய் மேற்கொண்டார்.

1857இல் பார்ப்பனர்களால் தூண்டப்பட்ட சிப்பாய் கலவரம் முடிவுற்ற நிலையில், காங்கிரஸ் கொடுத்த அழுத்தத்தில் 'மத சம்பிரதாய விஷயங்களில் பிரிட்டீஷ் அரசு இனி தலையிடாது!' என விக்டோரியா மகாராணி வாக்குறுதி அளித்தார். இதையே குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்ட பார்ப்பனர்களும், காங்கிரசில் இருந்த பிற்போக்கு சக்தியினரும், பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வந்தனர். 'மத விஷயங்களில் தலையிடுவதில்லை!' என்ற கொள்கை, காந்தி - இர்வின் ஒப்பந்தத்திற்குப் பிறகு 1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் தலை தூக்கியது.

காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை நடத்தி வந்த பெரியார் தனது குடிஅரசு பத்திரிகையில் பிரிட்டீஷ் அரசின் பார்ப்பன ஆதரவுப் போக்கையும், அதற்குக் காரணமாக விளங்கிய காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார்.

1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. "வெள்ளைக்காரனிடமிருந்து ஆட்சி பார்ப்பனர்களின் கைக்கு மாறியிருக்கிறது. வெள்ளையன் வெளியேறிய இந்தியாவில் ஜனநாயகத்தை (Democracy) எதிர்பார்க்க முடியாது. இனி பார்ப்பனநாயகம் (Brahminocracy) தான் கோலோச்சும்!"  என்ற பெரியார் 1947 சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்தார். 

பெரியார் எச்சரித்தபடியே அனைத்தும் நடந்தது. 1942 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கிரிப்ஸ் தூதுக்குழுவைத் தொடர்ந்து 1946இல் இந்தியாவிற்கு வந்த விக்டோரியா மகாராணியின் அமைச்சரவை தூதுக் குழுவும் இந்தியாவிற்கெனத் தனியானதொரு அரசியல் நிர்ணயசபையை உருவாக்கப் பரிந்துரை செய்தது. அதன்படி அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இராஜேந்திரப்பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் வரைவுக்குழு உறுப்பினர்களாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், கோபால்சாமி அய்யங்கார், அல்லாடிகிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, போன்றோர் இடம் பெற்றனர். 1950 ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்திய அரசியல் சட்டம் உருவாகிக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே, ஜாதிக்கொரு நீதி என்ற இந்து லா வை எடுத்துவிட உறுதி வேண்டும் என்று எழுதினார் பெரியார்.

1931இல் தந்தை பெரியார் அவர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான கராச்சி பிரஜா உரிமைத் திட்டம் நகல் எடுக்கப்பட்டதுபோல் மீண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26 பிரிவுகள் அமைந்தன. அதோடு 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகளும் ஜாதி ஆதிக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்தது கண்டு வெகுண்டார் பெரியார். 

1956ஆம் ஆண்டு மயிலாடுதுறை மணல்மேட்டில் பிப்ரவரி 17ஆம் நாள் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், "சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும். சட்டத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகள் எல்லாம் ஒழிந்தால்தான் கொஞ்சம் அயர்வேன். பார்ப்பனத்தி நமக்குப் பெண்டாட்டி மட்டுமல்ல. வைப்பாட்டியாக இருந்தாலும் அவருக்குச் சொத்து கொடுக்க வேண்டும். ஆனால் பாப்பானுக்கு நம் ஜாதிப் பெண் பெண்டாட்டியாக இருந்தால் கூட கணவனிடம் சொத்து கேட்க உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியுமா? முதலில் இந்த சட்டத்தை கொளுத்தி விட்டுப் பிறகு நேரு, 'ஜாதி ஒழிய வேண்டும்!' என்று சொன்னால் அதை ஒருவாறு உண்மை என்று நம்பலாம்." என்றார் பெரியார். (குடிஅரசு : 05.03.1956)

13

சட்ட எரிப்பு போராட்டத்திற்கு முன் பெரியார் நடத்தியது 'பிராமணாள்' பெயர் பலகை அழிப்புப் போராட்டம். சென்னையில் நடைபெற்றுவந்த பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம் குறித்து பேசிய பெரியார், "இதுவரை ஜாதியை ஒழிக்க வேண்டுமென்ற முயற்சியில் 700 பேர் வரை சிறைக்குப் போய்விட்டார்கள். இதைப்பற்றி சர்க்காரோ, சம்பந்தப்பட்டவர்களோ ஏதும் கவனித்ததாகத் தெரியவில்லை. இனியும் ஆயிரம் பேர்வரை அனுப்பினாலும் இந்த நிலைதான் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. ஆகவே வேறு வழி என்ன என்பதைச் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

அடுத்த மாதம் 3 ஆம் தேதி தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு கூடப்போகிறது. அங்கு மிகவும் தீவிரமான தீர்மானங்கள் செய்யப்படலாம். மாநாட்டிற்கு முன்பே நம்மைப் பிடித்து அடைத்தாலும் அடைக்கலாம். அல்லது நமது தீர்மானங்கள் ஏற்பட்டவுடன் அந்தச் சாக்கை வைத்துப் பிடித்தாலும் பிடித்து அடைக்கலாம். எப்படி இருந்தாலும் இன்றைய தேக்க நிலையை 'நாம் ஒரு வெட்டுக் கொடுத்துத்தான் நமது பகடைக்காயை' நகர்த்த வேண்டியவர்களாக இருக்கிறோம்!' என தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். (விடுதலை 28.10.1957)

பெரியார் தன் வாழ்நாளில் நடத்திய போராட்டங்களிலேயே மிகக் கடுமையானதும் பல்லாயிரக் கணக்கான தோழர்கள் தங்கள் குடும்பத்தைத் துறந்து மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை சிறைக்கொட்டடியில் சிறைபட்டு சித்திரவதைப்பட்டதும், சிறையிலேயே சிலர் தங்கள் இன்னுயிரை இழந்ததும், விடுதலையான சில நாட்களிலேயே பல தோழர்கள் நோய்வாய்ப்பட்டு மாண்டதுமான மிகப் பெரிய இழப்புக்கு ஆளான ஒப்புவமை இல்லாத ஒரு போராட்டம் தான் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம். 

சாகத் துணிவு கொள்ளுங்கள்!

அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தபோது பெரியாருக்கு வயதோ 79!  சென்னை வண்ணை நகரில் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மிக நீண்ட விளக்க உரையாற்றிய பெரியார் தோழர்கள் உயிர் கொடுக்கவும் தயாராக வேண்டும் என்று கர்ஜித்தார்.

தஞ்சை ஸ்பெஷல் மாநாடு

நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற ஸ்பெஷல் மாநாட்டில், "ஒரு மனிதன், நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன்? என்று கேட்கக் கூடாது; கேட்க உரிமை இல்லை என்றால் இது என்ன சுயராஜ்யம்? நீங்கள் சிந்திக்க வேண்டும். எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக் கூட உதைத்ததில்லை. குத்தியது இல்லை. ஒருவனுக்குக் கூட ஒரு சிறு காயம் கூட ஏற்படுத்தியதில்லை. கலவரம் இல்லாமல், நாசம் இல்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன். வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன் தானே? வேறு வழி இல்லை என்றால் என்ன செய்வது? நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ் ஜாதி? இதற்குப் பரிகாரம் வேண்டுமென்றால், குத்துகிறேன் என்றான் - வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல் வெட்டாமல் இருப்பதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது."  என்றார் பெரியார்.

ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை திருத்த அரசுக்கு 15 நாள் வாய்தா கொடுத்து தஞ்சை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு கழகத் தோழர்களையும், பொதுமக்களையும் தயார்படுத்தும் பணி முழு வீச்சில் தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட ஆர்வமுள்ள தோழர்களின் பட்டியல் விடுதலையில் தினந்தோறும் வெளிவந்தது. போராட்டத்திற்கான அவசியத்தை விளக்கி விடுதலையில் தலையங்கங்களும் கட்டுரைகளும் வந்தவண்ணம் இருந்தது. 

"தோழர்களே! நான், மூன்று ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டுகளுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன் காங்கிரஸ் கிளர்ச்சியின் போது கையாண்ட எந்த விதமான கொடிய தீவிரமான அடக்குமுறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலும் கூட அவைகளுக்கு பயப்பட்டு என் லட்சியத்தையோ திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை! கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை; பயந்து விடவும் மாட்டீர்கள். சட்டத்தை பார்த்துப் பயந்துவிட்டதாக பேர் வாங்காதீர்கள்! ஆகவே இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டு தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்!" என்ற பெரியாரின் அறிவிப்பு கொட்டை எழுத்தில் விடுதலையில் வெளிவந்தது. (விடுதலை : 8.11.1957)

பெரியார் அவர்கள் தன் மீது போடப்பட்ட வழக்கில் சிறைப்படுத்தப் படுவோம் என அறிந்து அதற்கு முன் போராட்ட வீரரர்களை சந்திக்க ரயிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எரிக்கப்பட வேண்டிய அரசியல் சட்டங்கள் சிறு தொகுப்பாக பல்லாயிரக் கணக்கில் அச்சடித்து பெரியார் பயணத்தின் போது வழங்கப்பட்டது. அதற்கும் காலணா வீதம் விலை நிர்ணயித்திருந்தார். தோழர்கள் போட்டி போட்டுகொண்டு வாங்கிச் சென்றனர். 40,000 ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தது. 

சாம்பலை அமைச்சருக்கு அனுப்புங்கள்

"சட்டத்தைக் கொளுத்துங்கள்! சாம்பலை அமைச்சருக்கு அனுப்புங்கள்! சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம் அரசாங்கத்தினர், 'ஜாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும்!' என நமக்கு சவால் விட்டிருக்கின்றனர். இந்தச் சவாலை எதிர்த்து சட்டத்தைக் கொளுத்தா விட்டால் நீங்கள் மனிதர்கள் தானா? சட்டத்தைக் கொளுத்தி சாம்பலை சட்டம் செய்த அமைச்சருக்கு  அனுப்பி வையுங்கள்! சட்டம் கொளுத்திய மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன் மூலமாவது கொஞ்சம் தெரிந்து கொள்ளட்டும்!" என்றும் பெரியார் அறிவித்தார்.

சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பெரியார்

தமிழ்நாடு முழுவதும் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் இடங்கள் விடுதலையில் வெளியிடப்பட்டது. சென்னையில் எழும்பூர் பெரியார் திடலில் 26.11.1957 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களும் மற்ற கழகத் தோழர்களும் கலந்து கொண்டு பேசுவார்கள். கூட்ட முடிவில் அரசியல் சட்டம் கொளுத்தப்படும் என்ற செய்தி 24 ஆம் தேதி விடுதலையில் வந்தது. 25 ஆம் தேதி மாலை திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் கைது செய்யப்பட்டார். 

இந்திய அரசியல் சட்டம் தீக்கிரை!

திட்டமிட்டபடி இந்திய அரசியல் சட்டம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொளுத்தப்பட்டது. வயது வித்தியாசமின்றி ஆண்களும், பெண்களும், நிறைமாத கர்ப்பிணிகளும், கைக் குழந்தைகளோடு தாய்மார்களும் குடும்பம் குடும்பமாக பல்லாயிரக் கணக்கில் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் இடமின்றி கைது செய்ய இயலாமல் பல இடங்களில் கைதை தவிர்த்தது காவல்துறை. கைது செய்ய மறுக்கப்பட்டவர்கள் அருகருகே வேறு வேறு இடங்களுக்குச் சென்று சட்ட நகலைக் கொளுத்தி மீண்டும் கைதாக முயற்சித்தனர். திருச்சியில் மட்டுமே 3000க்கும் மேற்பட்டோர் சட்டத்தை எரித்தனர்! தமிழ்நாடு காவல் துறை கைது எண்ணிக்கையை எவ்வளவோ குறைக்க முயற்சித்து கடைசியில் 2718 என கணக்கு காண்பித்தது.

சிறையில் நான்காயிரம் தன்மான வீரர்கள் 

இன்று மாலை வந்த கணக்குப்படி திருச்சி மத்திய சிறையில் மட்டும் சட்ட எரிப்பில் கைதான வீரர்கள் 1940 பேர் இருக்கிறார்கள். இது தவிர திருச்சி மாவட்டம் பூராவிலும் உள்ள சப்ஜெயல்களிலும் சட்ட எரிப்பில் கைதானத் தோழர்கள் உள்ளனர். கடலூர், கோவை, வேலூர், சென்னை முதலிய ஊர் மத்திய சிறைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு மாவட்ட சப் ஜெயில்களிலும் கருஞ்சட்டை வீரர்கள் உள்ளனர். சரியான கணக்கு வந்தால் சுமார் நாலாயிரம் பேர் இருக்கக்கூடும் (விடுதலை : 4.12.1957)

சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற வீரர்களின் பட்டியல்  விடுதலையில் பக்கம் பக்கமாக தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் வெளியிடப்பட்டது. அடுத்தடுத்து வந்த கட்டுரைகள் போராட்ட வெற்றியை சிறப்பாக பதிவு செய்தது.

செவ்வாய், 7 நவம்பர், 2023

ஒத்திக்கோ! ஒத்திக்கோ!! (சேரன்மாதேவி குருகுலப்போராட்டம்)

  

கி.தளபதிராஜ்

2

இந்திய வரலாற்றில் முதல் சமூக நீதிப் போராட்டம் வைக்கம் போராட்டம். தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த போது கேரள மாநில தலைவர்களின் அழைப்பின் பேரில் அங்கு சென்று போராடி வெற்றிக் கனியை ஈட்டியதும், வைக்கம் வீரர் என புகழப்பட்டதும் வரலாறு. அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடை பெற்றதுதான் குருகுலப் போராட்டம்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்க வகுப்புரிமைப் போராட்டமே முழுமுதற் காரணம் என்றாலும், குருகுலப் போராட்டம் சமகால காரணிகளுள் ஒன்றாகவே இருந்திருக்கிறது.

திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச அய்யர் வட்டித் தொழிலில் பிரபலமானவர். இந்து மதத்திலிருந்து மாற்று மதத்திற்கு சென்றவர்களையெல்லாம் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர பிரயத்தனம் பண்ணியவர். இவரது மகன் வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய அய்யர் தான் வ.வே.சு அய்யர் என பின்னாளில் அறியப்பட்டவர். வழக்குரைஞர் தொழிலுக்குப் படித்து இரங்கூனில் வெள்ளைக்காரனுக்கு உதவியாளராகப் பணியாற்றி பின் பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டி இலண்டன் வரை சென்று பட்டம் பெறாமல் திரும்பியவர். சனாதன தருமத்தை மதிக்க வில்லை என்று சொல்லி ஆஷ்துரையைக் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனுக்கு சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக முதன் முதலில் ஒரு பார்ப்பனரல்லாத தலைவர்  என்ற வகையில் தந்தை பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததும் இவரே.

சேரன்மாதேவி குருகுலத் தொடக்கம்

ஆங்கில அரசால் நடத்தப்பட்ட கல்வி நிறுவனங்களில்  பாடத்திட்டங்கள் இந்திய தேசியத்திற்கு எதிராக இருப்பதாகக் கருதிய காங்கிரஸ் கட்சி நாடெங்கும் தேசியக் கல்வி நிறுவனங்களை உருவாக்கியது. திலகர் நிதி குவிந்து கிடந்த அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்கள் பலரும் அதைப் பயன்படுத்திக் கொண்ட வேளையில் வ.வே.சு அய்யரும் குருகுலம் ஒன்றைத் தொடங்க மாகாண  காங்கிரஸ் கமிட்டியில் நிதி கோரினார். குருகுலத்தை ஏற்படுத்த அய்யர் முதலில் இடம் தேடிய ஊர்கள் மாம்பலம், மன்னார்குடி, தஞ்சாவூர் போன்ற பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் இடங்களே. 1922 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் வாடகை கட்டடத்தில் ஓர் ஆசிரமத்தை தொடங்கியவர் பின் சேரன்மாதேவியில் சொந்த இடத்திற்கு மாற்றினார். சேரன்மாதேவியில் ஆசிரமத்திற்குத் தேவையான 30 ஏக்கர் நிலத்தை வாங்க நிதி அளித்தவர் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார். பெரியாரின் உற்ற நண்பர். பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய போது பெரியாரோடு இணைந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

தொடக்கமே பித்தலாட்டம்

ஆசிரம நிர்வாகத்திற்காக காங்கிரஸ் கமிட்டி தேசியக் கல்வி நிதியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியது. மேற்படி நிதியைப் பெறுவதற்காக அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராக இருந்த தந்தை பெரியார் அவர்களை அணுகினார் அய்யர். தந்தை பெரியார்அவர்களோ குருகுல விதிமுறைகளையும் அந்தப்படி நடத்தப்படுமென்ற ஒப்புதலையும் அளித்து விட்டு பணத்தை பெற்றுச் செல்லுமாறு கூறினார். அதற்குச் 'சரி' என தலையாட்டிவிட்டுச் சென்ற  வ.வே.சு அய்யர் பின் பெரியார் அவர்களுக்கே தெரியாமல் அவர் இல்லாத நேரத்தில் மற்றொரு கூட்டுக் காரியதரிசியாக இருந்த கே.எஸ்.சுப்பிரமணிய அய்யரிடம் முன்பணமாக 5000 ரூபாய்க்கான காசோலையை வாங்கிச் சென்று விட்டார். அதோடு, "குருகுலத்திற்கு நன்கொடையாக பணமாகவோ, நிலமாகவோ, ஆண்டுதோறுமோ, மாதா மாதமோ, தங்கள் வருவாயில் பகுதியை செலுத்தலாம். இயலாதவர்கள் ஒரு கைப்பிடி அரிசியேனும் கொடுக்கலாம்" என்று அறிக்கை விடுத்து பொதுமக்களிடத்திலும் நன்கொடை வசூலித்தார் அய்யர். வெளிநாடுகளிலிருந்தும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் நன்கொடை குவிந்தது. நன்கொடைகளைப் பெற அறக்கட்டளையாக எந்தப் பெயரையுமே குறிப்பிடாமல் தன் பெயரையே பயன்படுத்தினார் அய்யர்! வட்டிக்காரர் பெற்ற பிள்ளையாயிற்றே. வசூல் வேட்டை சூடு பறந்தது. 

குருகுலத்தில் ஜாதி பேதம்

குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (தமிழ்நாட்டின் முதலமைச்சராக பின்னாளில் பதவி வகித்தவர்) மகன் சுந்தரமும் ஒருவன். பள்ளி விடுமுறையில் வீட்டிற்கு வந்தவன் குருகுலத்தில் நடைபெறும் ஜாதிப் பாகுபாடுகளை தன் தந்தையாரிடம் போட்டுடைத்தான். "பார்ப்பன மாணவர்களுக்கு ஓர் இடத்திலும், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு வேறு ஓர் இடத்திலும் அமரச் செய்து சாப்பாடு பறிமாறுகிறார்கள். விஷேச நாட்களில் அவர் களுக்கு வடை பாயாசத்தோடு சாப்பாடு. எங்களுக்கு எப்போதும் ஒரே சாப்பாடுதான். தண்ணீர் பானை கூட தனித்தனியாக வைத்திருக்கிறார்கள்!" என அங்கே மாணவர் களுக்கிடையில் காட்டப்பட்ட ஜாதிப் பாகு பாட்டை எடுத்துரைத்தான். காலையில் பழைய சோறு அளிக்கப்பட்டதை விரும்பாத ஒரு சில மாணவர்கள் ஆசிரமத்தை விட்டே வெளி யேறியதையும் சுட்டிக்காட்டினான். இந்தச் செய்தி பெரியாரின் காதுகளுக்குப் போயிற்று.

3

காங்கிரஸில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்வு

தந்தை பெரியாரின் நண்பர் மாயவரம் எஸ்.ராமநாதன் வீட்டில் பெரியார், திரு.வி.க, என்.தண்டபாணிப்பிள்ளை ஆகியோர் கூடி காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு முன்னிலையில் குருகுலப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என முடிவெடுத்தனர். இந்த சூழலில் முன்னர் தீர்மானிக்கப்பட்ட 10,000 ரூபாயில் 5,000 ரூபாய் வாங்கியதுபோக மீதமுள்ள 5,000 ரூபாயை பெறவேண்டி அதற்கான உத்தரவு போட வேண்டி ஒரு பார்ப்பனரைக் கொண்டு காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் கொண்டுவந்தார் அய்யர்.

தந்தை பெரியார் அவர்களோ, "நிபந்தனை யின்றி முன் பணம் கொடுக்கப்பட்டதே தவறு. இப்போது மறுபடியும் கொடுக்க முடியாது!" என்று கறாராக சொல்லிவிட்டார். 

குருகுலத்திற்கு எதிராக தந்தை பெரியார் அவர்கள் முதலில் கருத்து தெரிவித்த போது "சிறீமான் அய்யர் அவர்கள் அவ்வளவு மோசமாயிருப்பார் என்று நான் நினைக்கவில்லை! நீங்கள் சொல்லுகிற மாதிரி  வித்தியாசங்கள் அங்கு நடக்குமேயானால் அதை அய்ந்து நிமிடத்தில் நிறுத்திவிட என்னால் முடியும்" என்ற வரதராஜுலு நாயுடு, தற்போது "அய்யர்வாள் குருகுலத்தில் சாப்பாட்டில் ஜாதி பேதம் பாராட்டப்படுவதாக எனக்குப் பல கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால் நான் அவற்றை தமிழ்நாடு பத்திரிக்கையில் பிரசுரிக்க வில்லை" என்றார். அதையடுத்து ஒருவர் பின் ஒருவராக பலரும் வ.வே.சு அய்யர் மீது குற்றப் பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கினர். 

ஆரம்பப் பள்ளிப் பாடப் புத்தகத்தில், "இவர் அய்யர். மிகவும் நல்லவர்!" என்று படிக்கிறோமல்லவா? அப்படித்தான் நம் சமூகத் தலைவர்களும் அய்யரை கணித்திருந்தனர். அய்யர் மீதான குற்றச்சாட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக குவிந்தததும் கோபத்தில் கொந்தளித்தார் அய்யர். மீசையும், தாடியும் படபடக்க  உணர்ச்சி வயப்பட்டு "இவற்றை யெல்லாம் ஒரு வித்தியாசமெனச் சொல்வது துவேஷங்களைக் கற்பிக்கும். இதனால்தான் இந்தத் தொல்லையால் தான் நான் சாதம் கூடச் சாப்பிடாமல் நிலக் கடலைப் பருப்பும், தேங்காயும், வெல்லமும் சாப்பிட்டு வந்தேன். குருகுலம் வைத்துள்ள இடம் மிகவும் வைதீகமான இடமாதலால் இப்படிச் செய்ய வேண்டியதாயிற்று" என்று பொறுமினார். அய்யரின் முகத்திரை கிழிந்து உண்மைச் சுயரூபம் வெளிப்பட்டது.  காங்கிரஸில் பார்ப்பனர் பார்ப்பனரல்லதார் உணர்வு தலை காட்டியத் தருணம் அதுதான்.

குருகுலத்திற்கு எதிராக வரதராஜுலு நாயுடு

ஆரம்ப காலத்தில் அய்யரை வானளாவப் புகழ்ந்து குருகுல நிதி திரட்டலுக்கு ஆதரவாக 'தமிழ்நாடு' மற்றும் 'நவசக்தி' பத்திரிக்கைகள் எழுதிவந்த போக்கை எச்சரித்த பெரியார் ஒரு சில இடங்களில் பேசும்போது 'தமிழ்நாடு' பத்திரிக்கையை நடத்தி வந்த வரதராஜுலு நாயுடுவையும் கண்டித்துப் பேசினார். பின் உண்மை நிலை அறிந்து, "குருகுலத்திற்கு பணம் உதவுவது தேசியப் பாவம்" என தமிழ் நாடு பத்திரிக்கையில் எழுதிய வரதராஜுலு நாயுடு தொடர்ந்து குருகுலத்திற்கு எதிராகப் போராடினார். 

வரதராஜுலு நாயுடுவை தனக்குப்பின் தலைவராக்க முழு முயற்சி எடுத்தவர் தந்தை பெரியார். காங்கிரஸ் கமிட்டியில் வரதராஜுலு நாயுடுவை தலைவராக முன்மொழிந்த போது அதற்கு முட்டுக்கட்டை போட்டவர் இராஜகோபாலாச்சாரியார். 

பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க வரதராஜுலு நாயுடு வ.வே.சு அய்யரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார். வ.வே.சு அய்யரோ, "ஒரு தனி மனிதனுக்குச் சாதாரணமாக ஜாதியின் அமைப்பை மாற்ற அதிகாரம் கிடையாது. மேற்படி விஷயம் மாமூலுக்கு விரோதமானதால் அநேகர் ஆட்சேபிப்பார்கள். மாமூல் புத்தியினால் கூறப்பட்டாலும் குதர்க்கமின்றி கூறப்படும் ஆட்சேபனைகளுக்கு பொறுமையோடு, அன்போடு, யுக்தியோடும், சனாதன தர்மத் தோடும் பொருந்தும் படி பதில் சொல்வதே மாறுதலுக்காக பாடுபடுபவரின் கடனாகும்." என்றார்.

மாணவர்களை ஒரே இடத்தில் அமரச் செய்து உணவருந்த வேண்டும் என்று சொன்னால்  'சனாதன தர்மத்தோடு பொருந்தும் படி' பேச வேண்டும் என்றார் அய்யர். அதே நேரத்தில் வேங்கடேச அய்யர் வட்டிக்கடை நடத்தவும், அவரது மகன் வ.வே.சு அய்யர் பாரிஸ்டர் பட்டம் பெற கடல் தாண்டி இலண்டன் செல்லவும் அவர்கள் தருமத்தில் இடம் இருக்கிறதா என்பதை அவர்களிடத்திலேதான் கேட்க வேண்டும். இது தான் 'அவாளின்' தர்மம்! சனாதன தர்மம்! 

1925 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவில் குருகுலத்தில் ஜாதிப் பாகுபாடு காட்டப்பட்ட விவகாரம் விவாதத்திற்கு வந்தது. ஜாதிப் பிரிவினை பற்றி ஆராய கணபதி சாஸ்திரி, வி.தியாகராஜ செட்டியார், கே.எம்.தங்கபெருமாள் பிள்ளை ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குருகுலத்திற்கு அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி அங்கே ஜாதிப்பாகுபாடு நிலவுவதைக் கண்டறிந்து அறிக்கை அளித்தனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு தேசிய நிறுவனமான குருகுலத்தில் சமபந்தி உணவுதான் வழங்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

வ.வே.சு அய்யரோ குருகுலம் காங்கிரஸ் கட்சியின் நிறுவனம் அல்ல என்றும், அதற்கு தான் கட்டுப்படத் தேவையில்லை என்றும் கூறினார். 

1924 ஏப்ரல் மாதம் வைக்கம்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வைக்கம் சென்றார் பெரியார். 1925 மார்ச் வரை ஓராண்டு காலத்தில் தொடர்ந்து ஆறுமுறை வைக்கத்திற்கு பயணமானார். 67 நாட்கள் சிறையிலும் 74 நாட்கள் போராட்டக் களத்திலுமாக களப் பணியாற்றி தமிழ்நாடு திரும்பினார். அதனைத் தொடர்ந்து தந்தை பெரியாரும் வரதராஜுலு நாயுடுவும் குருகுலத்திற்கு எதிராக பல்வேறு ஊர்களிலும் பொதுக் கூட்டங்களில் பேசினர். மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வரதராஜுலு நாயுடு தம்முடைய தேகத்தில் ஒரு துளி இரத்தம் இருக்கும் வரை குருகுலப் போராட்டத்தைத் தான் நடத்தப் போவதாக கூறினார். சேலம் கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார், "பிரிட்டீஷ் அரசு இருக்கும் போதே பிராமணர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். இல்லையெனில் பிராமணநாயகத்தின் (Brahminocracy) பெரும் துன்பத்தால் அல்லல் படுவோம்" என்று எச்சரித்தார்.  பத்திரிக்கைகள் குருகுலத்திற்கு எதிராக எழுதத் தொடங்கின. 

"காங்கிரசுக்கு வருணாசிரம தருமத்தில் நம்பிக்கை இல்லாது போனாலும், அது தொடர் பாக ஒரு நிறுவனத்தின் உள் செயல்பாட்டில் தலையிடக் காங்கிரசுக்கு உரிமை உண்டா?" எனக் கேட்டு வ.வே.சு அய்யருக்கு ஆதரவுக் கரம் நீட்டினார் இராஜகோபாலாச்சாரியார்.

சேரன்மாதேவி குருகுலத்திற்கு எதிரான போராட்டம் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த போதிலும் 1925 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்றதே அதன் உச்ச கட்டப் பகுதி என 'சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்' என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் பழ.அதியமான். வைக்கம் போராட்ட வெற்றிக்குப் பின் குருகுலத்திற்கு எதிராக நேரடியாக பெரியார் களம் இறங்கிய காலகட்டம் இது தான்!

4

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்தக் கூட்டம் கோயம்புத்தூரில் நடைபெறுவதாக இருந்தது. பின் அது மாற்றப்பட்டு திருச்சியில் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான வரதராஜுலு நாயுடு தலைமை வகித்தார். அவர் தனது உரையில் ,"இந்த விஷயத்தில் பிராமணர் பிராமணரல்லாதார் பிரச்சினையை கிளப்புவானேன்? என்று சிலர் கேட்கலாம். இந்த விவாதத்தால் தேசிய வேலை பாதிக்கப்படாதா? என்றும் கேட்கப்படலாம். ஒருவருடைய சுயமரியாதையை விட தேசிய வேலை அவ்வளவு உயர்ந்தது அல்ல!" என்று பதில் கூறுவேன் என்றார். கூட்டத்தை சேரன்மாதேவி குருகுல விவகாரமே முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அழைப்பு விடுத்தும் வ.வே.சு அய்யர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அய்யரின் நண்பரான எம்.கே.ஆச்சார்யா, "இரண்டு பிராமணப் பிள்ளைகளுக்குத் தனியாகச் சாப்பாடு போடுவதால் பிரளயம் ஒன்றும் ஏற்பட்டு விடாது. இந்தப் போராட்டத்தைக் கைவிட்டு இனியேனும் காங்கிரஸ் வேலையை ஆரம்பிக்க வேண்டும். சமபந்தி போஜனம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்டாயப்படுத்தலாம் என்று சொல்வதாயின் எனக்கு இங்கு வேலையில்லை. ராஜினாமா கொடுத்துவிட்டு வெளியே போய்விடுகிறேன். சமபந்தி போஜனம் செய்ய வேண்டும் என்ற பேச்சு என் காதில் விழக் கூட நான் சம்மதிக்க முடியாது!"  என கூச்சலிட்டார். அரசமைப்புச் சட்டத்தில் சனாதனிகளுகென்று தனிப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்திய சனாதனிதான் இந்த ஆச்சாரியா! பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பதை தடை செய்யும் சாரதா சட்டத்தை எதிர்த்தவர். 

சேரன்மாதேவியில் குருகுலம் அமைக்க 30 ஏக்கர் நிலம் வாங்க முழுத்தொகையும் அளித்த வை.சு.சண்முகம் செட்டியார், "வ.வே.சு அய்யர் நிலையான மனம் இல்லாததால் சொன்ன சொல் தவறிவிட்டார்" என்றார்.

குருகுலத்திற்கு எதிராக மாயவரம் எஸ்.இராமநாதன் "இந்திய சமூக வாழ்க் கையில் பிறப்பினால் எவருக்கும் ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தக் கூடாதென்றும், இக் கொள்கையைத் தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட ஸ்தாபனங்கள் அனுஷ்டிக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது. இக் கொள்கையை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர எஸ்.சீனிவாச அய்யங்கார், சி.இராஜகோபாலாச்சாரியார், ஷண்முகம் செட்டியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆகியோர் கொண்ட கமிட்டியை நியமிக்கிறது"  என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தை தந்தை பெரியார் அவர்களும் இராமநாதனும் சேர்ந்து எழுதியதாக குடிஅரசில் குறிப்பிட்டுள்ளார் பெரியார்.

இராஜாஜி பதவி விலகல்

மேற்படி தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய பெரியார், இப் பிரச்சினைக்கு நம்முள் நான் உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதே காரணம் என்றார். பெரியார் ஆதரித்த இந்த தீர்மானம் இறுதியாக நிறைவேறியது. இதை எதிர்த்து இராஜாஜி, எம்.கே. ஆச்சார்யா, டி.எஸ்.எஸ் ராஜன், க.சந்தானம், ஆகிய பார்ப்பனர்களும் முத்து ரங்க முதலியாரும் தங்கள் கமிட்டி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

"காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிறீமான் வரதராஜுலு அனுசரிக்கும் கொள்கை, அவர் நடந்து கொள்ளும் வழி வகுப்பு துவேஷத்தையும், பலாத்காரத்தையும் அதிகரிக்கச் செய்வனவாக  உள்ளன. அவை மனதைப் புண்படுத்துவதுடன் கோபத்தையும் மூட்டுகின்றன. அல்ப விஷயங்களுக்காக சண்டை போடும்படி நாம் அவ்வளவு அடிமை களாகிவிட்டது மிகவும் வருந்தத் தக்கது!" என்றார் இராஜாஜி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தீர்மானத்தை ஏற்றுகொள்ள வேண்டாம் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காந்திக்கு கடிதம் எழுதினார் எம்.கே.ஆச்சாரியா. 

"மேற்படி தீர்மானத்தை ஆதரித்து விட்டால் அனுபவத்தில் மிகவும் அபாயமான பயன் ஏற்படும். இன்று சமபந்தி போஜனம். நாளை அது கலப்பு விவாகமாகலாம். அல்லது இன்னும் மோசமாக நிலச்சுவான்தார், குடி, முதலாளி, தொழிலாளி முதலிய எல்லா நிலையையும் அது பாதிக்கலாம். ஏனெனில் இவையெல்லாம் சமூக வாழ்க்கையில் சேர்ந்தவையே. தேசிய மயமாக்குவது என்ற வேஷத்தைக் கொண்டு இந்த வழியிலெல்லாம் பிறப்பின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்கக் காங்கிரஸ் முன்வர முடியுமா? இந்த விஷயங்களையெல்லாம் காங்கிரஸ் சம்பந்தமற்ற ஸ்தாபனங்களால் முடிவு செய்யப்படும்படி விட்டுவிட வேண்டாமா? மேற்படி தீர்மானத்தை சட்ட விரோதமானது என்று நீக்கி விடவேண்டும். தலைவர் சிறீமான் வரதராஜுலுவும், செயலாளர் சிறீமான் இ.வி.ராமசாமியும் குருகுல விவாதமென்ற பெயரால் வகுப்புத் துவேஷ பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவேண்டும். இல்லாவிடில் அவர்களை ராஜினாமா செய்யும்படி கேட்க வேண்டும்" என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சனாதனத்தில் ஊறித் திளைத்திருந்த அந்த பார்ப்பனத் தலை வர்களின் கோர முகத்தை புரிந்து கொள்ள இந்தக் கடிதம் ஒன்றே போதுமானது. 

வ.வே.சு அய்யர் விலகல்

நெருக்கடிகள் தொடரவே குருகுலத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார் அய்யர். வவேசு அய்யர் பதவி விலகியதைத் தொடர்ந்து வை.சு சண்முகம் செட்டியார் எழுதிய கடிதத்தில், "சிறீமான் அய்யர் அவர்களின் தியாகங்களையும் முன்னர் அவர்கள் நடந்து கொண்ட ஒழுக்கமுள்ள நடையையும் பார்த்து, அவரிடம் நம்பிக்கை கொண்டே தேசிய சபையிலும் நானும் எனது சமூகத்தாரும் மற்ற அன்பர்களும் அவரது பொறுப்பில் பொருள் கொடுத்து உதவினோமே அன்றி வேறில்லை. சிறீமான் அய்யர் அவர்கள் குருகுலத்தை திறம்பட தான் நடத்த முடியாதென இப்பொழுதுக் கருதினால் பொருள் கொடுத்தோரை அழைத்து அவர்கள் இணங்கினால் ஒரு பஞ்சாயத்து சபையை ஏற்படுத்தி குருகுலத்தை நடத்தி வரும்படி அவர்களிடம் ஒப்புவித்து விட முயல வேண்டும். அல்லது இதுவரை நடந்த செலவு கணக்கையும் மீத இருப்பையும் தெரிவித்து விகிதப்படி பணங்களை திரும்பக் கொடுத்துவிட வேண்டும். இவ்வாறு எதுவும் செய்யாமல் தாம் விலகிக் கொண்டதாக சிறீமான் அய்யர் எழுதி விடுவதும், காரியஸ்தர் என்போர் நாங்கள் 'அப்படி நடத்த முடியாது' 'இப்படி நடத்த முடியாது' என்று அறிக்கைகள் வெளியிடுவதும் நகைப்பிற்கு இடமாகும். நம்பிக் கொடுத்தோர் பொருளை நேரான வழியில் ஒழுங்கு செய்து விடாமல் சிறீமான் அய்யர் குருகுல நிர்வாகத்தை காரியஸ்தரிடம் ஒப்புவித்தல் முறை அன்று. காரியஸ்தரை நம்பியா பலரும் குருகுலத்திற்கு பொருள் உதவி செய்தனர்? சிறீமான் அய்யர் அவர்கள் தற்கால சபலத்தை விடுத்து நேரிய வழியில் நடந்து கொள்வார்கள் என்று இன்னமும் எதிர் பார்க்கிறோம்." என்று எழுதியிருந்தார்.

வ.வே.சு அய்யர் மரணம்

1925ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் தேதி குருகுல  கோடை விடுமுறையில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் சிலரும்  சேர்ந்து பாபநாசம் அருவிக்குச் சுற்றுலா சென்றனர். அதனைத் தொடர்ந்து தனது மகளின் விருப்பத்திற்கிணங்க ஜுன் மூன்றாம் தேதி மகளை அழைத்துக் கொண்டு அய்யரும் பாபநாசம் புறப்பட்டார். பாபநாசம் அருவிக்கு மேல் பகுதியில் உள்ள கல்யாண தீர்த்தம் நதியை கடக்க முயற்சிக்கையில் அய்யரின் மகள் கால் தவறி விழ அவளைக் காப்பாற்ற முயன்ற அய்யரும் நீரில் மூழ்கினார். சில தினங்களுக்குப் பின்னர் 8 ஆம் தேதிஅய்யரின் உடல் அருவிக்கு அருகே  கண்டெடுக்கப்பட்டது. அய்யரின் அகால மரணத்திற்குப் பின் குருகுல நிர்வாகத்தில் தற்காலிகமாக  சில மாற்றங்கள் நிகழ்ந்தன.

5
குருகுலப் போராட்டம் பற்றி குடிஅரசில் பெரியார்

குருகுலப் போராட்டம் உச்ச நிலையில் இருந்த காலகட்டத்தில் 1925ஆம் ஆண்டு மே மாதம் தந்தை பெரியார் அவர்களால் 'குடிஅரசு' இதழ் தொடங்கப்பட்டது.ஜுலை 12 ஆம் தேதி வெளியான குடிஅரசு பத்திரிக்கையில் பெரியார் எழுதிய குருகுலப் போராட்டம் பற்றிய ஒரு கட்டுரை சனாதனிகளை கடுமையாகச் சாடியது.

"வைக்கம் போராட்டமும், குருகுலப் போராட்டமும் தமிழ் மக்களுக்குத் தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டா? என்பதைப் பற்றியும் இந்து மதத்தில் தங்களுக்கு எதாவது இடமுண்டா? என்பதைப் பற்றியும் தீர்ப்பளிக்கப் போகிறது.

வைக்கம் சத்தியாகிரகமோ நான்கு வீதிகளில் மூன்று வீதிகள் உங்களுக்குத் திறந்து விட்டாகிவிட்டதே. ஒரு வீதியில் தானா உங்களுக்குப் பெருத்த கஷ்டம் ஏற்பட்டுவிட்டது? இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களே! இது என்ன பைத்தியமா என்று கேட்கிறது. குருகுல போராட்டமோ 18 பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் 17 பிள்ளைகள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டு ஒரு பிள்ளை மாத்திரம் தான் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? இதற்காகவா இவ்வளவு பெரிய கிளர்ச்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும்? என்று சொல்லிக் கொள்வ தல்லாமல் உட் சண்டைகளையும் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.

வைக்கம் சத்தியாகிரகமும், குருகுல போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதை பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை கொண்டது அல்ல. வீதிகளில் நடக்கக்கூடாது என்று சொல்லும் பொழுதும் கண்ணால் பார்க்கக்கூடாது என்று சொல்லுகிற போதும் சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான வருஷங்களாக தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்து தமிழ்நாட்டை தன்னுடைய தாக்கிக் கொண்டிருக்கும் இந்துவாகிய தமிழனை அவனுடைய நாட்டில் மற்றொருவர் நீ வீதியில் நடக்காதே! என் முன் வராதே! என்று சொன்னால் மனித உடல் தரித்திருக்கும் ஒரு ஜீவன் அதை எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வைக்கம் சத்தியாகிரகத்தினுடைய, குருகுல போராட்டத்தினுடைய தத்துவமாகும்!" என்று எழுதினார்.

('குடிஅரசு' -  5.7.1925)

வ.வே.சு அய்யர் மகன் எழுதிய டைரிக் குறிப்பு

"நூறாண்டுகளைக் கடந்த கதையை நினைவு படுத்துவதேன்? பார்ப்பனர்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள்!" என்று மனம்போன போக்கில் உளறிக் கொட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக ஒரு செய்தி. சேரன்மாதேவி குருகுலப் போராட்ட வரலாற்றைத் தொகுக்கும் வேளையில் ஈடு பட்ட பழ.அதியமான் அவர்கள் அய்யரின் பேரன் சுப்பிரமணியனை திருச்சியில் சந்தித்திருக்கிறார். குருகுல போராட்ட நிகழ்வின்போது அங்கு தங்கி படித்த அய்யரின் மகன் வி.சு.கிருஷ்ணமூர்த்தி 1990களில் மறைந்து விட்ட நிலையில் அவரது 1970களின் நாட்குறிப்புகள் சில காணக் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் சேரன் மாதேவி குருகுலப் போராட்டக்காரர்கள் மீது வெளிப்பட்ட கோபம் கொண்ட குறிப்பும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட தலைவர் மறைந்த நாளன்று எழுதி வைத்த நாட்குறிப்பு பதிவு அது. "அப்பதிவின் வாக்கியங்கள் பெரும் அதிர்ச்சியைத் தந்தன!" என்று பழ.அதியமான் குறிப்பிட்டுள்ளார். தோழர் அதியமான் பெயர் குறிப்பிடாவிட்டாலும், 1973 இல் மறைவுற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியதே அந்தப் பதிவு என்பது படிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. இன்னும் எத்தனை தலைமுறைகள் மாறினாலும் பார்ப்பனக் கொடுக்குகளின் விஷம் மட்டும் மாறப் போவதில்லை என்பதை அந்த டைரிக்  குறிப்புகள் நமக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது!


ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-17

  அறநிலையத்துறைக்குத் தனி வாரியம் கூடாது தற்போதைய நிலையே தொடரட்டும்!

01.10.1991 நாளிட்ட விடுதலையில் பொதுச் செயலாளர் அறிக்கை

கோயில் உபரி நிதிகளை மக்கள் நலப் பணிகளுக்குச் செலவு செய்வதே கால மாற்றத்தையொட்டிய அறப் பணிகளாகும் என்பதே அதன் முக்கிய மாற்றம் ஆகும்.

எடுத்துக்காட்டாகபழைய காலத்தில் பிராமண போஜனம்  (Feeding Brahmins) என்பது ஒரு முக்கிய தர்மமாக ஆக்கப்பட்டது.அதில்கூட ஏழைப் பார்ப்பனர்களுக்கு என்றுதான் எல்லா தர்ம கட்டளைகளும் குறிப்பிட்டன.

கர்ப்பக்கிரகத்திற்குள் பிற ஜாதியார் நுழைந்து பூஜை செய்துவிட்டால் அதற்குப் பரிகார நடவடிக்கைகளில் ஒன்று பிராமண போஜனம் என்று வைகானச ஆகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இப்போது அறப்பணிகள் என்று சொல்லும்போது அக்கருத்து எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக ஆகிவிட்டதுஅதேபோல்தான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை தோற்றுவிக்கப்பட்டு கோயில்களின் உபரி நிதிகள் மக்கள் நல அறப் பணிகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது.

அறங்காவலரின் பணி என்ன?

அத்துடன் கோயில் அறங்காவலர்களின் பணி என்பது அர்ச்சகர்களின் பூஜைபுனஸ்காரம் போன்ற பணி அல்லதணிக்கை அதிகாரிகளின் பணி போன்றதாகும்.

பக்தியை வளர்க்கும் பக்தவத்சலம்!

அதற்குப் பிறகு, 1947க்குப் பின் வந்த காங்கிரஸ் ஆட்சிகள் மெல்ல இந்த நிலையிலிருந்து மாறி கோயில்களுக்கு "ஜீரணோத்தாரண பூரண கும்பாபிஷேகம்செய்து வைத்து சாயமடித்துத் திருப்பணிகள் செய்வதற்கே அந்த நிதிகளைப் பெரிதும் பயன்படுத்த முனைந்தனகுறிப்பாக பக்தவத்சலம் போன்றவர்கள் அறநிலைய அமைச்சர்களாக ஆனநிலையில் பக்தியை வளர்க்கும் பக்தவத்சலம் என்று பார்ப்பன ஏடுகள் தலையங்கம் தீட்டி பாராட்டிடும் அளவுக்குப் பார்ப்பன சடகோபத்துக்கு ஆளான திசை திருப்பம் ஏற்பட்டது!

1967இல் தி.மு.ஆட்சிஅறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஏற்பட்டபோது அறநிலைய பாதுகாப்புத் துறையின் அமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை நியமித்தார்அவர் சிதம்பரம் நடராசன் கோயிலுக்கு அறநிலையப் பாதுகாப்பமைச்சர் என்ற முறையில் சென்றபோதுவழங்கப்பட்ட விபூதியைக் கூட நெற்றியில் பூசிக்கொள்ளாமல்பக்கத்தில் இருந்தவரிடம் தந்து விட்டார்.இதை அவர் வீசி எறிந்தார் என்று கூறிக்கூடத் தவறாகப் பிரச்சாரம் செய்தார்கள்அன்று மாலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேசிய நாவலர்அறநிலையப் பாதுகாப்பமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் தில்லை நடராசர் கோயிலுக்குச் சென்றேனே தவிரதனிப்பட்ட நெடுஞ்செழியனாக அல்லஅறநிலையப் பாதுகாப்பமைச்சர் வேலையும்கூட 8 மரக்கால் சமைத்துப் போடவேண்டும் என்று சொல்லப்பட்டால் அதில் 6 மரக்கால் போட்டுவிட்டு மீதி உள்ள 2 மரக் கால் வேறுவழியில் எங்காவது போகிறதா என்று பார்த்து கண்காணித்து ஆட்சி புரிவதுதான் என்று பேசினார்.

இது விடுதலையில் வெளிவந்தவுடன் இதைப் படித்துவிட்டு தந்தை பெரியார் அவர்கள் பலே நெடுஞ்செழியன் பலே பலே என்று ஓர் அறிக்கை எழுதினார்நீண்டதொரு தலையங்கமும் எழுதினார்ஈரோட்டில் கோயில் தேவஸ்தான பிரசிடெண்டாகதான் இருந்தபோது எப்படி எல்லாம் கோயில் வருமானத்தை அதில் உள்ள ஓட்டைகளைத் தடுத்துசேமித்து பற்றாக்குறையை உபரியாக்கினேன் என்று எழுதி விளக்கியிருந்தார்கள்.

.தி.மு.ஆட்சியில் கொஞ்சக் காலத்திற்கு அறநிலையப் பாதுகாப்புத் துறை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்அவர்களது பொறுப்பில் இருந்ததுஅதற்குப் பிறகு ஆர்.எம்.வீரப்பன் அவர்களது பொறுப்பில் சென்றது.

சங்கரமடத் தொடர்பின் விளைவு

அது முதற்கொண்டு காஞ்சி சங்கரமடத்தின் கருத்திற்கேற்ப செயல்படும் தன்மை ஏற்பட்டதன் தொடர் விளைவு - இன்று கோயில் பராமரிப்பு நிதியைஇன்றுள்ள முதலமைச்சர் அவர்கள் துவக்கியுள்ளதன் தொடர்ச்சிஇப்போது வேத ஆகமக் கல்லூரியை ஒரு கோடி ரூபாய் செலவழித்து ஏற்படுத்திசமஸ்கிருதத்தில் உள்ளதைத் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றெல்லாம் கூறப்படும் நிலைக்குச் சென்றுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் வேதாகமப் பள்ளிகள்

சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறநிலையப் பாதுகாப்பு மானியத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் (1991-1992) வேத ஆகம பாடசாலைகள் - 4 ஏற்கெனவே நடந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்நாட்டுக் கோயில்களில் அர்ச்சகர் நியமன முறைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்த ஜஸ்டிஸ் மகராஜன் குழுவின் அறிக்கையில் - தமிழ்நாட்டில் சில பெருங்கோயில்கள் சார்பில் வேத ஆகம பாடசாலைகள் நடைபெறுகின்றன என்றுகோயில் நிதி உதவியினால்அறங்காவலர்களின் மேற்பார்வையில் அவை நடைபெறுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நடைபெற்ற வேத ஆகம பாடசாலைகள் 6 என்றும்ஒவ்வொரு வேத ஆகம பாடசாலையிலும் பயிற்சிக் காலம் 5 ஆண்டுஆனால்அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இருவரே உள்ளனர்ஒருவர் வேதத்திற்குஇன்னொருவர் ஆகமத்திற்கு  சில பாடசாலைகளில் தேவாரமும் கற்பிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளர்ச்சிக்கு வழி வகுக்கும்!

இதனையொட்டி வேதாகமக் கல்லூரிக்கு ரூ.1 கோடி என்று ஒதுக்கி அதன்மூலம் சமஸ்கிருத மயமாக்கி பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்த ஒரு ஜாதி அர்ச்சகர்களையே பயிற்றுவித்தல் என்ற நிலைக்கு வித்திடுவதாக இருப்பின்அது நாட்டில் நிச்சயம் பெரும் புயலைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லைநமது வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும்கிளர்ச்சிக்கும் வழி வகுக்கும்!

அதுபற்றிய தமிழ்நாடு அரசின் நிலை மிகவும் தெளிவாக்கப்படுதல் அவசர அவசியமாகும்!

ஜஸ்டிஸ் மகராஜன் குழு அறிக்கையின் பரிந்துரை

ஜாதி வேறுபாடு இன்றி அனைத்து ஜாதியிலிருந்து அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதும் மிகவும் இன்றியமையாதது மட்டுமல்லஜஸ்டிஸ் மகராஜன் குழு பரிந்துரையில்தமிழ்நாட்டுக் கோயில்களின் பெரும் எண்ணிக்கையையும் கருதிசில ஆகமப் பயிற்சிக் கல்லூரிகளையேனும் அறநிலையத் துறை பொறுப்பேற்று நடத்திவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதனைச் செயல்படுத்த ஏற்கெனவே இருந்த .தி.மு.அரசு சட்டப் பேரவையில்இதே அறநிலையப் பாதுகாப்புத் துறையில் மானியக் கோரிக்கையின்போது பழனியில் ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேதங்களைப் பரப்புவதற்கு என்று ரூ.1 கோடி ஒதுக்குவோம் என்பதை மாற்றிஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகஆகமங்கள் சொல்லிக் கொடுக்க மகராஜன் குழு பரிந்துரைத்தபடிகுறைந்தபட்சம் 6 இடங்களில் அமைப்பது சரியாக இருக்கும்ஆகமக் கல்விப்படி பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமித்தால்அது உச்சநீதிமன்றத்தின் பழைய தீர்ப்புப்படி செல்லுபடியாகும்சிலர் எதிர்த்து மீண்டும் அங்கே படையெடுத்தால்கூட!

எனவேதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தற்போது அறிவித்துள்ள சில அறிவிப்புகளை மாற்றிஒரு பெரும் சமுதாய மாற்றத்திற்கு இந்து அறநிலையத் துறையும் பயன்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

பார்ப்பன ஆதிக்கத்திற்கு வித்திடவே இந்த வேத ஆகமக் கல்லூரி என்ற நியாயமான அய்யப்பாட்டினை அறவே நீக்கிடவும் இந்த மாற்று ஏற்பாடு உதவும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்இந்து அறநிலையத் துறையை அரசின் கீழ் இல்லாமல் தனியே ஒரு அமைப்பாக ஆக்குவது என்ற முடிவானதுஅதன் துவக்க அடிப்படையையே மாற்றி அமைக்கும் மிகப்பெரிய கேடான செயலாகிவிடும்அதற்காக மாநில அரசேகூட பிறகு வருந்தக்கூடிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கவும் விரும்புகிறோம்.

கி.வீரமணி,

பொதுச் செயலாளர்,  திராவிடர் கழகம்,

விடுதலை 01.10.1991

அர்ச்சகர் பிரச்சினையும் - வேதாகமக் கல்லூரியும் என்னும் பொருள் பற்றிய சிறப்புப் பொதுக்கூட்டம் 02.11.1991 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தென்மாநில சமூக நீதிக்குழு அமைப்பின் தலைவரும் தமிழ்நாடு மூதறிஞர்கள் குழு தலைவருமான நீதிபதி பி.வேணுகோபால் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.

அடுத்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது பற்றியும்வேதாகமக் கல்லூரி பற்றியும் சிறப்புரையாற்றினார்.

09.04.1992 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் மீது உரையாற்றிய தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

இந்தக் கல்லூரியில் வேதங்கள்ஆகம சாஸ்திரங்கள்உபநிடதங்கள்பன்னிரு திருமறைகள்மற்றும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் ஆகிய வற்றைக் கற்பிப்பதற்கான பாடத் திட்டங்களையும்பிரிவுகளையும் உருவாக்குவது பற்றி 02.03.1992 அன்று நடைபெற்ற கோயில் நிர்வாக வாரியக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதுகுறித்து கருத்துகளையும்ஆலோசனை களையும் வழங்குமாறு வாரிய உறுப்பினர்களும்சமயச் சான்றோர்களும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க சில பெரியவர்களும் முன் வந்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்இந்தக் கல்லூரியை அமைதி சூழ்ந்த இடத்தில்ஆன்மீக உணர்வுக்குத் தகுந்த இயற்கைச் சூழலில் அமைத்திட வேண்டும் என்றும் அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இடம் ஆழ்ந்த தியானத்திற்கும்வழிபாட்டிற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த அடிப்படையில் இதற்குத் தேவைப்படும் 40 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் தற்போது பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை இந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்படும்இடஒதுக்கீட்டு முறை அதாவது ஆதிதிராவிடர்களுக்கு 18 விழுக்காடு இடங்களும்பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு இடங்களும்பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு இடங்களும்மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இடங்களும் ஒதுக்கப்படும் என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

1991-1996 காலகட்டத்தில் ...தி.மு.ஆட்சியில் இருந்தபோது, 1996-இல் திருச்சி மாவட்டம் கம்பரசன்பேட்டையில்அர்ச்சகர் பயிற்றி தொடங்கப்பட்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

(தினமணி - 24.01.1996)