பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தரான ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தந்தை பெரியாரின் சமூகநீதி மற்றும் பெண்ணுரிமைப் போராட்டக் கல்வி தொடர்பான தொடர் பணிக்கான ’வாழ்நாள் சாதனையாளர் விருது-2023’ தலைநகர் டில்லி பிரகதி திடலில் உள்ள ’சி ஜி ஸ்மார்ட் ஹாபிடேட் பவுண்டேசன்’ அமைப்பு மற்றும் 'டி ஆர்க் பில்டு அமைப்பு' இன்று (25.06.2023) வழங்கியது. இந்த விருதை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக பதிவாளர் சிறீவித்யா - ஆசிரியர் கி.வீரமணி சார்பில் பெற்றுக் கொண்டார்.
பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 26 ஜூன், 2023
சனி, 7 செப்டம்பர், 2019
டில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை!
டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை ஏற்பாடு செய்த சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்‘’ எனும் தலைப்பில் ஆழமானதொரு உரையினை ஆற்றினார்.
அன்று (23.11.1946) ‘சேலம் நகராட்சி கலைக் கல்லூரியில் தத்துவ விளக்கம்‘ எனும் தலைப்பில் தந்தை பெரியார் ஆழமானதொரு உரையாற்றினார். இன்று (4.2.2019) டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் “தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்‘’ எனும் தலைப்பில் பெரியார்தம் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆழமானதொரு விளக்க உரையினை வழங்கினார்.
டில்லி பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறை அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தத்துவத் துறையின் பேராசிரியர் பி.கேசவகுமார் தலைமை வகித்தார். முனைவர் ஆயிசா கவுதம் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
டில்லி பல்கலைக் கழக மாணவர்கள், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், சட்டம் பயிலும் மாணவர்கள் மற்றும் பல துறை சார்ந்த பேராசிரியப் பெருமக்கள் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் தமிழர் தலைவர் உரையினை செவிமடுத்தனர்.
மேலும், கூட்டத்தில் கருநாடக மாநில மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்மகுமார் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் தமிழர் தலைவரது உரையினைக் கேட்க வருகை தந்திருந்தனர். ஏறக்குறைய 70 நிமிடங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்பற்றி விளக்க உரையாற்றினார். அதற்கடுத்து 20 நிமிடங்கள் வருகை தந்தோரின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் விடையளித்தார்.
- உண்மை இதழ், 2.16-28.19
லேபிள்கள்:
கி.வீரமணி,
தில்லி,
பல்கலைக்கழகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
