செவ்வாய், 21 டிசம்பர், 2021

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டம்

“பகுத்தறிவுப் போராளிக்கு!” நம் வணக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் உலக திராவிடர் மகளிர் மாநாடு  - காணொலி மூலம் நமது அருமைத் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டத்தை அளித்து மகிழ்ந்தது.  (12.12.2021) இரவு 8.30க்குத் தொடங்கி 12.05 மணி வரை)

பட்டம் பெற்ற தலைவர் மகிழ்ந்ததைவிட உலகெங்கும் வாழும் தமிழர்கள் - திராவிடர்கள் சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், மனித உரிமை விரும்பிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த பட்டமாக, விருதாகக் கருதி மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்தார்கள்.

என்ன காரணம்? தந்தை பெரியார் என்ற மேருமலை தன் மூச்சுக்கு நிரந்தர விடுப்பு அளித்த நிலையில், திராவிடர் கழகம் என்ற அமைப்பு இருக்குமா - துலங்குமா? என்ற நினைப்பில் இருந்தவர்கள்  - இருக்கக் கூடாது - தொலைந்து போகட்டும் என்று தம் இஷ்ட மித்திர தெய்வங்களை எல்லாம் நேர்த்திக் கடன் இருந்து கும்பிட்டுக் கிடந்தவர்கள் ஒரு பக்கம்.

‘அய்யோ, அய்யாவின் இயக்கம் மரணித்தால் நம் கெதி என்னாவது! நம் மக்களுக்குக் கழிப்பின்றி நமக்காகக் குரல் கொடுக்கும் இயக்கம் எது? இனத்தைப் பாதுகாத்திட இறப்பையும், இன்முகத்துடன் ஏந்தி வரவேற்கும் வலிமை மிக்க அளவில் வேறு இயக்கம் ஏது! ஏது?

அரசியல் அபிலாசை என்னும் மயக்கத்தின் வட்டத்திற்குள் சிக்கி வாய்பிழந்து நிற்காமல் “நின்ற சொல்லர்” என்பதற்கேற்ப இரும்பென உறுதியாகக் களத்தில் நிற்கும் கழகம் எது?

சமூகநீதிக்கு ஊறு என்றால் சாய்ந்து படுக்காமல், சடுதியில் சமர்க்களம் புகும் கழகம் எ(ஏ)து? என்ற எண்ணத்தில் அஞ்சியோர் உண்டு.

தந்தை பெரியார் மறைந்த நிலையிலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “கழகம் கலையாது - இணையாது தனித்தன்மையுடன் இயங்கும் செயல்படும்” என்று செவிளில் அறைந்தது போல துப்பாக்கியிலிருந்து ரவை புறப்பட்டது போல பதில் கூறிய தலைவர் அன்றோ நம் தலைவர் வீரமணி.

திருச்சியிலே பொதுக்குழு கூடி (6.1.1974) எடுத்த தீர்மானத்தின் சூளுரை என்ன?

“தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்!” என்று எடுத்த சூளுரை-

இன்று வரை, ஏன் நாளையும், எதிர் காலத்திலும் உயிர்த்துடிப்போடு நின்றதே - நிற்கிறதே - நிற்குமே!

அய்யாவின் ஓராண்டு நினைவையொட்டி (25.12.1974) ‘இராவணலீலா’ என்னும் இனமான விழாவை நடத்தி இந்தியாவையே திரும்பிப்பார்க்கச் செய்தாரே - தலைவர் அன்னை மணியம்யை£ர்.

அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்ட காலக்கட்டம்,  நெருக்கடி நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு - கழகத்தின் பொதுச்செயலாளரான ஆசிரியரை மிசா கைதியாக ஓராண்டு சிறைக்கூடத்திலே பூட்டி, கழகத்தை கலகலக்கச் செய்யலாம் என்று காகப்பட்டர் பரம்பரையினர் செய்த சூழ்ச்சியும் சுக்கல் நூறாக ஆக்கப்பட வில்லையா?

தணிக்கை என்ற பெயரால் ‘விடுதலை’யின் விலா எலும்பைக் குத்தி - குடலைக் கிழித்து மாலையாகச் சூட்டிக்கொள்ளலாம் என்று மார்தட்டினார்களே - அவர்களின் வியூகத்தையும் வீழ்த்தி ‘விடுதலை’ தன் பெயருக்கேற்ப வீரநடை போடவில்லையா?

நெருக்கடி - தணிக்கையின் பெயரால் ‘விடுதலையை’ வீழ்த்தலாம் என்ற வீண்கனவைக் கண்டார்களே  - அந்தத் தலைவர் ஆசிரியர்  வீரமணி தலைமை சால் வலிமையால் அளப்பரிய ஆற்றலால் எட்டுப்பக்கத்தில் வண்ண வண்ணமாக எண்ணங்களை சுமந்து உலகத் தமிழர்கள் மத்தியில் வீர உலா நடத்தவில்லையா ‘விடுதலை’?

சென்னையில் ஒரு பதிப்பு என்றால் தந்தை பெரியாரின் தலைமையகமான திருச்சியில் இன்னொரு பதிப்பையும் விரிவாக்கம் செய்யவில்லையா? மளமளவென வெளியீடுகளை பல மொழிகளிலும் குவித்துக் கொண்டு இருக்கவில்லையா? முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களே இந்த சாதனையை வெகுவாகப் பாராட்ட வில்லையா?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நமது தலைவர் வீரமணி அவர்கள் விடுதலைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் ‘விடுதலை’ வார ஏடாக மாறி இருக்குமே! நினைத்தாலே நம் நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது. அதனைத் தடுத்தாட்கொண்டு தந்தை பெரியார் கட்டளையை ஏற்று 59 ஆண்டு காலம் ஆசிரியர் என்ற உலக கின்னஸ் சாதனையை நிகழ்த்திய ஒன்று போதுமே - தலை குனிந்து அவருக்கு நன்றியோடு வணக்கம் செலுத்துகிறோம்!

வருமான வரித்துறையின் மூலம் பெரியார் அறக்கட்டளையை நசுக்கி விடலாம் என்று நரியார்கள் திட்டமிட்ட நிலையில், நீதிமன்றத்தின் (Income tax apppelate tribunal) படிக்கட்டுகளில் ஏறி, நியாயத்தின் - நேர்மையின்  - உண்மையின் ஒளியை விளக்கி, முழுக்க முழுக்க ஆதிக்கக் கம்பி வேலியாக இருந்த அந்த அரணை உடைத்து - “எதிர்காலத்தில் இயக்கத்தை இவர் காப்பார்” என்று அய்யா வைத்த நம்பிக்கையை நாணயமாகக் காப்பாற்றிக் கம்பீரமாக வெற்றிப் புன்னகையுடன் வெளிவந்தாரே நமது தலைவர் ஆசிரியர்.

இந்த ஒன்றுக்காக எவ்வளவுப் பாராட்டுகளைக் குவித்தாலும் தகுமே! - தகுமே! நன்றி! நன்றி!!

எண்ணிக்கையில் அகல் விளக்காக இருந்த கல்வி நிறுவனங்கள் இன்று ... சூரியனாக வானளவு வளர்ந்து சுடர் விடவில்லையா?

சமூகநீதியின் சரித்திரம் தான் என்ன? தந்தை பெரியாரின் உழைப்பால் 49 விழுக்காடு தமிழ்நாட்டில் நிலவிய இடஒதுக்கீடு இன்று 69 விழுக்காடாக வலிமையான கூட்டப் பாதுகாப்போடு விண்மீனாக ஜொலிக்கிறதே!  தந்தை பெரியார் என்னும் தத்துவ ஆசான் தோள் உரத்தின் மீது நின்று சாதித்துக் காட்டிய சாதனைக்கு சொந்தக்காரர் இவர் இல்லையா?

1940இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - ஒன்றிய அரசின் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பது  - அரை நூற்றாண்டுக்குப் பிறகு அது செயல் மலராகப் பூத்துக் குலுங்குகிறதே! இதற்காக திராவிடர் கழக தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில்  இந்தியத்துணைக் கண்டம் முழுவதும் 42 மாநாடுகள் என்பது சாதாரணமா?, 16 போராட்டங்களை - பிரதமர் வீட்டு முன் மறியல், நாடாளுமன்றத்தின் முன் மறியல் என்று முன்னுதாரணம் இல்லாத வகையில் நடத்திக் காட்டியது யார்?

‘வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சியைப் பெறுகிறேன்’ என்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அகம் மலர்ந்து புகழ்மாலை சூட்டியதை நேரில் கண்டு களித்த கருஞ்சட்டையினர் இன்னும் உண்டே! (1.10.1994)

எதைச் சொல்ல, எதை விட?

உலகத் திராவிட மகளிர் மாநாடு நமது தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டம் அளித்தது - ஏதோ பாராட்ட வேண்டும் என்ற பாவனையால் அல்ல.

எத்தனை எத்தனைப் பெண்கள் விடுதலை மாநாடுகள்! விதவைப் பெண்களுக்கு பூச்சூட்டல் கண்டு உலகப் பூப்பாகமே அதிர்ந்ததே!

அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி நீக்கம் நாட்டையே குலுக்கியது (14.4.2015). வழக்கில் வெற்றியும் கண்டோமே!

‘இளைஞர்களே, நீங்கள் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் விதவைகள் என்று சொல்லப்படும் பெண்களையே மணமுடிப்பீர்’ என்ற குரல் கொடுத்ததும், தீர்மானம் நிறைவேற்றியதும் திராவிடர் கழகம் அல்லாமல் வேறு எந்த அமைப்பு? தலைமையக பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிலையம் மூலம் அன்றாடம் புரட்சிகரமாகத் திருமணங்கள் நடந்த வண்ணம் உள்ளதே!

விதவைப் பெண்கள் தரிசு நிலம் என்று கூறிய காஞ்சி சங்கராச்சாரியாரை எதிர்த்து காஞ்சி மடம் முன் கழக மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கண்டனக் குரலை எழுப்ப வில்லையா?

ஆண்களுக்கான உரிமை பெண்களுக்கும் வேண்டும். செல்வி, திருமதி என்ற சொற்களைத் தூக்கி எறிக! தன் பெயருக்குப் பின்னால் கணவன் பெயரை எதற்கு இணைக்க வேண்டும்?

துணைவரை இழந்த பெண்கள் திருமணத்திற்கு தலைமையேற்க வேண்டும் என்ற புரட்சித் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டன, திராவிடர் கழக மாநாடு அல்லாமல் வேறு எங்கே, எங்கே?

ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம், காதல் திருமணம் பெருக வேண்டும்; தக்க வயதடைந்த ஆணும் பெண்ணும் இணைவதில் அடுத்தவர்கள் குறுக்கிட உரிமை ஏது? என்றெல்லாம் புரட்சிக் குரல் கொடுத்தவர்தான் எவர்?

பெண்களே தீக்குண்டத்தில் இறங்கி, கடவுள் மறுப்பை முழங்கி பூமியை அதிரச் செய்யவில்லையா?

கையில் தீச்சட்டி ஏந்தி ‘தீச்சட்டி இங்கே மாரியாத்தாள் எங்கே?’ என்று கருப்புடை தரித்த கழக மகளிர் உரக்கக் கொடுத்த முழக்கம், உறங்கியவர்களையும் திடுதிப்பென எழுந்து ஓடி வந்து பார்க்கச் செய்யவில்லையா?

சட்டப்பேரவை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கிடு என்பதற்காக தலைவர் வீரமணி தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள், கருத்தரங்கங்கள், பேரணிகள், போராட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

சேலத்தில் 23, 24.1.1971 நாட்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஒரு முக்கிய தீர்மானம்.

“ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக்கூடாது” என்ற தீர்மானத்தைத் திரித்து “ஒருவன் மனைவியை மற்றவன் அபகரித்துக் கொள்ளலாம்“ என்று வெளியிட்ட ‘இந்து’ ஏட்டை எதிர்த்து, ஆசிரியர் வீரமணி அவர்கள் வழக்குரைஞராக உயர்நீதிமன்றத்தில் வாதாடவில்லையா? இந்து ஏடு மன்னிப்புக் கேட்டதுண்டே!

1938இல் சென்னையில் மகளிர் மாநாடு நடத்தி “பெரியார்’ என்ற பட்டம் கொடுத்துப் பெருமை பெற்றார்கள்.

இன்று அவரது சீடருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டம் தந்து பெருமைப் பெற்றுவிட்டனர்.

தமிழர் தலைவர் தலைமையேற்று இயக்கத்தை எழுச்சியுடன் நடத்துகிறார் என்பதற்கான அத்தாட்சிதான் உலக திராவிடர் மகளிர் மாநாட்டின் புகழ் பூத்த செயல்!

இதற்கு முன்பும் பல விருதுகள் இவரைத் தேடி வந்ததுண்டு.

“இனமானப் பேரொளி” இது நாகையில் பெண்கள் மாநாட்டில் அளிக்கப்பட்டது (1993).

“பாரத் ஜோதி” என்ற விருதைக் கொடுத்து பாராட்டியது. புதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் (2000 ஆண்டு). “பேரறிவாளர்” விருதினை வழங்கியது மியான்மர் சுயமரியாதை இயக்கம்.

“ஆக்ஸ்போர்டு தமிழ் விருது” வழங்கிக் குதூகலித்தது- ஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்கம்.  “பெரியார் ஒளி” வழங்கியது கழகத்தின் மூன்றாவது துப்பாக்கியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2010 ஆம் ஆண்டு)

கோவை கே.ஜி.அறக்கட்டளை “ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர்” என்ற விருது வழங்கிப் பாராட்டியது.

“வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கியது சென்னை லயோலா கல்லூரி.

“கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (2003ஆம் ஆண்டு).

“கருத்துக்கனல்” என்ற விருது வழங்கி பெருமைப் பெற்றது மலேசிய திராவிடர் கழகம்.

2009 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் விருதினை” வழங்கிக் கவுரவித்தது ‘முரசொலி’ அறக்கட்டளை (2009 ஆம் ஆண்டு)

காஞ்சியில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில் “தந்தை பெரியார் விருது” வழங்கி உச்சி மோந்தது (2009).

“தந்தை பெரியார் சமூகநீதி விருது” வழங்கி கவுரவித்தது தமிழ்நாடு அரசு (1996ஆம் ஆண்டு).

“மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கியது அமெரிக்க மனித நேய அமைப்பு (Humanist Association)  வாசிங்டன் (22.9.2019).

தஞ்சையில் எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்பட்டது (1.2.1998). அதில் உருவானதுதான் திராவிடர் கழக அறக்கட்டளை (DK Trust).

புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி - அது பெரியார் அறக்கட்டளைக்குச் சென்றது.

இவற்றை எல்லாம் அணி அணியாகப் பெற்ற - அறிஞர் அண்ணாவால் 11 வயதில் “திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தர்” என்று வருணிக்கப்பட்ட - ஆசிரியர் என்றாலே வீரமணி என்று உலகமறிந்த பெருமகனார் ஒவ்வொரு முறையும் என்ன சொன்னார்?

இந்த விருதுகள் எல்லாம் என் ஆசானுக்கு, அறிவுலகத் தந்தை அய்யாவுக்கு அளிக்கப்பட்டது என்று சொன்னது மேம்போக்கான சொற்கள் அல்ல, அவரின் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவர்கள் இதனை அறிவார்கள்.

இவற்றையெல்லாம் இயக்கமே உயிர் மூச்சு என்று எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றிப் பாடுபடும் இயக்கத் தொண்டர்களுக்கு அர்ப்பணம் என்று அடக்கமாகவே சொல்லி வந்திருக்கிறார். வாசிங்டனில் “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டபோது கூட, இயக்கப் பொறுப்பாளர்களை மேடைக்கு அழைத்து, அந்த விருதினைப் பெற்ற பெரும் பண்பை எங்கே தேடி அலைய முடியும்?

அடக்கமும், நேர்மையும், உழைப்பும் நெருக்கடியான ஒரு  காலகட்டத்தில் நிமிர்ந்த செயல்பாடும்தான் உண்மை மனிதன் என்பதற்கு அடையாளம்.

இந்த அணிகலன்கள் நம் தலைவருக்குப் பஞ்சமே இல்லை.

இன்னொன்றையும் தவறாது சொல்லுவார் - என்மீது “நீங்கள் சாற்றும் புகழுக்கான தகுதியை வளர்த்துக் கொள்வேன்” என்றும் கூறுவார்.

1944ஆம் ஆண்டிலேயே ‘ஜஸ்டிசைட்’ ஏடு இவரை அடையாளம் காட்டியது (“Self Respect Bombers).

எந்த ஒரு உரிமையையும் அதற்கான விலையைக் கொடுத்து பெற வேண்டும் என்ற இலக்கணத்துக்கு இலக்கியமும் இவரே, இதுவரை 55 முறை சிறையும்  - கைதும் நடந்துள்ளன.

உடலில் கத்தி படாத இடமில்லை (அறுவைச் சிகிச்சையில்)  - உயிர்க்குக் குறி வைக்கப்பட்டன பல முறை!

நெருப்பாற்றில் அல்ல - கந்தகக் கடலில் நீச்சல்போட்ட நிஜமான மனிதத்துவம் நிரம்பிய நிறைகுடம் இது!

“இந்த நிலையில் சுயநலமில்லது வீரமணியைப் போல் எத்தகைய பொருள் ஊதியத்தையும் கருதாமல், பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்பது உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும்” (‘விடுதலை’, 6.6.1964) என்றாரே தந்தை பெரியார்! இதைவிட நமது தலைவர் ஆசிரியருக்கு எத்தனை விருதுகளும், கிரீடங்களும் தாவி வந்தாலும் ஈடாகாதே!

தந்தை பெரியாரே அவரது சீடர் வீரமணியின் தோளைப் பற்றி ‘விடுதலை’ ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்தாரே அடடே, இந்தப் பேறு யாருக்குக் கிட்டும்?

“யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!” என்ற தன்னம்பிக்கைத் தணலை கழகத்தோழர்களிடம் வழங்கிய தலைவர் மானமிகு வீரமணி.

“உலகத்தைப் பெரியார் மயம் ஆக்குவோம்“ என்ற சூளூரை உன்னதமானது! மத மாச்சரியத்தால் மனித ரத்தம் உடைப்பெடுத்து ஓடும் ஒரு காலகட்டத்தில், மதமற்ற ஓர் உலகு தேவைப்படுகிறது - அது பெரியார் என்ற தத்துவ மாமருந்தின் மூலம் தான் கிடைக்கும் என்பார்.

“உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இறுதி மூச்சுவரை உழைப்பேன்!” என்று தமது நன்றி அறிவிப்பில் ஓங்கி ஒலித்துள்ளார்.

அந்தப்பயணத்தில் நம்மை நாம் இணைத்துக் கொள்ளும் போது தான் நாமும் பெருமைப்பட முடியும்!

பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நன்றி - பன்னாடுகளிலிருந்து பல மொழி பேசும் மகளிரால் நம் தலைவருக்கு அளிக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவில் அவர்கள் மழையெனப் பொழிந்த கருத்துக்களை வருணிக்க

வார்த்தைகளுக்குத் தெம்பு இல்லை - இல்லவே இல்லை!

நமது தலைவர் மூலம் “பெரியார் உலகம்” படைக்கப்பட வேண்டும் என்ற ஆதார கருதி அவர்களது உரையில் மிளிர்ந்தது. நன்றி! நன்றி!

சனி, 11 டிசம்பர், 2021

பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் நீக்கப்பட்டுவிட்டது.

சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி

 27.11.1927- குடிஅரசிலிருந்து...

எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இதுபோல் மலையாளத்திலும், தமிழ்நாட்டிலும் நடக்கக் கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவைகள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய்த் தீர்ப்பை எதிர் பார்க்கின்றார்களே ஒழிய, ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது.

இனியாவது, சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம். 


வெள்ளி, 26 நவம்பர், 2021

ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்பு நாள்

*நவம்பர் 26 (1957):*
*ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்பு நாள்:*

1957-ஆம் ஆண்டு, நவம்பர் 3-ஆம் தேதி, தஞ்சையில் திராவிடர் கழகத்தின் ஸ்பெஷல் (தனி) மாநாட்டை தந்தை பெரியார் அவர்கள் நடத்தினார்கள். லட்சக்கணக்கில் அந்த மாநாட்டில் மக்கள் கலந்து கொண்டார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதம், ஜாதிகளைக் காப்பாற்றும் பகுதிகளைச் சுட்டிக் காட்டி, (13(2); 25(1); 26, 29(1)(2) 368) இப்பகுதிகளை அரசு நீக்க 15 நாட்கள் கெடு விதித்து கீழ்கண்டவாறு பெரியார் தீர்மானம் நிறைவேற்றுகிறார்:

“இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, சாதி, மதம், ஆகியவை காரணமாக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் அளிக்கப்படாததாயிருப்பதால், இவைகளை முன்னிட்டு இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் கேடானது என்று கருதுவதால் இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்று முதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1949 நவம்பர் 26 ஆம் தேதி அன்று அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து இந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது” என்ற தீர்மானத்தை லட்சக்கணக்கான மக்களின் ஆதரவோடு நிறைவேற்றி, அரசிற்கு பகிரங்கமாக அறிவித்தார்.

பெரியாரின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாத நிலையில், அரசியல் சட்டம் உருவான நவம்பர் 26-ஆம் அதே தேதியன்று 1957-ல் தமிழகம் முழுவதும், பெரியார் தொண்டர்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினார்கள். அதற்கு முதல் நாளே, 25.1.1957 அன்று திருச்சியில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டார்.

அரசியல் சட்டத்தை எரிப்பவர்களுக்கு எந்த தண்டனையும் அதுவரை இல்லாத நிலையில், அரசியல் சட்டத்தை எரிப்போம் என பெரியார் அறிவித்தவுடன், எரித்தால் மூன்று ஆண்டுகள் சிறை என்று தமிழ்நாட்டில் பெரியார் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு அன்றைய காங்கிரசு அரசு அவசரமாக சட்டம் கொண்டு வந்தது. (The Tamil Nadu Act No.XIV of 1957 - The Prevention of Insults to National Honour Act, 1957 – 18.11.1957).

ஆனால், சட்டத்தைக் கண்டு பெரியார் தொண்டர்கள் எவரும் பயப்படவில்லை. தமிழ் நாடெங்கும் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தி அதன் சாம்பலை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மூவாயிரம் பேர்; ஆறு மாதம் முதல் மூன்றாண்டு வரை கடும் தண்டனையை சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்ட அந்த போராளிகள், நீதிமன்றத்தில் எதிர் வழக்காடவில்லை.

தந்தை பெரியார் கூறியபடியே, (விடுதலை 23-11-1957),

"நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்."

என பெருமிதத்துடன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். சிறை புகுந்தனர்.

மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொல்லியும், சவர்க்கார் போல மன்னிப்பு கடிதமெல்லாம் தந்து விடுதலையாகவில்லை. சிறுவர், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் தண்டனை காலத்தை முழுவதுமாக அனுபவித்தனர்.

*சிறைக்குள்ளேயே அய்ந்து தோழர்கள் மரணமடைந்தனர்; விடுதலையான ஒரு மாதத்துக்குள்ளேயே பல தோழர்கள் மரணத்தை தழுவினர்; ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பெரியார் இயக்கம் கொடுத்த களப்பலி 18 பேர்!*

ஜாதி ஒழிப்புக்காக இந்திய வரலாற்றில் பெரியாரும் அவர்தம் இயக்கமும் நடத்திய போராட்டத்திற்கு இணையாக எவரும் நடத்திடவும் இல்லை; இத்தகைய எண்ணிக்கையில் சிறை தண்டனை பெற்றதும் இல்லை; நீதிமன்றத்தில் துணிவுடன் அறிக்கை கொடுத்ததும் இல்லை.

இத்தகைய நெஞ்சுரத்தோடு இந்திய வரலாற்றில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம், பெரியார் இயக்கத்தைத் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு சாதி நெருப்பை சாதிவெறியை தூண்டுகிறவர்களை, அடியாள் வேலைக்கு வா என தைரியமாக அழைக்க துணிகிறவர்களை இனங்கண்டு எதிர்க்கவேண்டும்; புறக்கணிக்கவேண்டும்.

1957 நவம்பர் 26-ல் ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்ட அந்த போராளிகளின் தியாகத்தைப் போற்றி, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க இன்றைய நாளில் உறுதி ஏற்போம்.

#ஜாதிஒழிப்புசட்டஎரிப்புநாள் #நவம்பர்26

kudanthaikaruna: https://www.blogger.com/blogger.g…

G.Karunanidhy

வெள்ளி, 8 அக்டோபர், 2021

பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற “சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்”இணையவழி கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

 அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி தத்துவம் - உயர்ஜாதியினருக்கும் உரிய பங்கு அளிப்பதில் எவ்விதத் தடையுமில்லை!

பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற “சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்இணையவழி கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னைசெப்.29 -  அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி தத்துவம்உயர்ஜாதியினருக்கும் உரிய பங்கு அளிப்பதில் எவ்விதத் தடையுமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

‘‘சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்''

கடந்த 21.8.2021  அன்று மாலை  சென்னை பச்சையப் பன் கல்லூரியில் - தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற் றாண்டு விழா (1920-2021) - சிறப்பு நிகழ்ச்சியில் (1.8.2021 முதல் 21.8.2021 வரை) ‘‘சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்'' (17.12.1920 முதல் இன்றுவரை தமிழ்நாடு முதலமைச்சர்களின் வாழ்வும் - பணியும்என்ற தலைப்பில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மிகுந்த பெருமையோடும்மகிழ்ச்சியோடும் தொடர்ந்து இத்தனை நாள்கள் ஒரு நூற்றாண்டு வர லாற்றைஅதில் இடம்பெற்ற ஆட்சிகளின்  ஆளுமை களைமுதலமைச்சர்களைஅவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய சாதனைகளையெல்லாம் மக்களுக்கு நினைவூட்டிமிகச் சிறந்த ஒரு தத்துவமாக - சமூகநீதி என்பது எப்படி இந்த மண் - உலகத்திற்கே ஏன் குறிப்பாக இந்தியாவினுடைய பல்வேறு மாநிலங் களுக்குக்கூட ஒரு அருட்கொடையாக அளித்த ஒன்று என்பதை நிலைநாட்டக் கூடிய வகையில்பச்சையப்பன் கல்லூரியினுடைய வரலாற்றுத் துறையின் மேல்பட்ட ஆய்வு மாணவர்கள் சிறந்த கருத்தியலோடு ஏற்பாடு செய்துள்ள இந்த அருமையான நிகழ்ச்சிக்குவரலாற்றுத் துறை வரலாற்றையும் படைத்திருக்கிறது - வெறும் வரலாற்றுத் துறையாக இல்லை - வரலாறு படைத்த வரலாற்றுத் துறை என்ற பெருமையை என்றைக்கும் அது தக்க வைத்துக்கொண்டிருக்கிறது என்ற சிறப்புக் குரிய நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சி - நிறைவு நிகழ்ச்சி என்று சொல்லக்கூடிய இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய அன்பிற்கும்பாராட்டுதலுக்கும் உரிய இந்தக் கல்லூரியினுடைய முதல்வர் - முனைவர் சிறீஜெயந்தி அம்மையார் அவர்களே,

இவ்வளவு பெரிய நிகழ்ச்சியாஎன்று

வியக்கும் வண்ணம்

அதுபோலவேவரவேற்புரை - அறிமுக உரை என்கிற பெயராலேபேராசிரியர் ஷோபனா அவர்கள்இவ்வளவு பெரிய நிகழ்ச்சியா என்று வியக்கும் வண்ணம் ஒரு தொகுப்புரையைக் கொடுத்தார்கள்.

அதேபோலடாக்டர் சரவணன் அவர்கள்நம்மு டைய அருமைப் பேராசிரியப் பெருமக்கள் எல்லோரும் ஒத்துழைத்துமிக அருமையான ஒரு நிகழ்வை - வர லாற்று நிகழ்வை - யாருக்கும் தோன்றாதது - பச்சை யப்பன் கல்லூரி மாணவர்களுக்கும்ஆய்வாளர்களுக் கும்பேராசிரியர்களுக்கும் தோன்றும்ஏனென்றால்இது பேரறிஞர் அண்ணாவைத் தந்த கல்லூரிஇனமானப் பேராசிரியர் இங்கே பயிற்றுவித்து மாணவர்களைத் தயாரித்த கூடம்அதுமட்டுமல்லடாக்டர் மு.போன்ற வர்கள் மிகப்பெரிய சிந்தனையாளர்களாககல்வி யாளர்களாகதுணைவேந்தர்களாக உயரக்கூடிய அள விற்கு உயர்ந்தார்கள் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமூகநீதி ஒவ்வொரு முதலமைச்சரின்

முத்தாய்ப்பு முறை

அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பச்சையப்பன் கல்லூரியில் மிகப்பெரிய அளவிற்கு வரலாற்று நிகழ் வுகள் நடந்திருக்கின்றன என்று சொல்லுகின்ற நேரத்தில்சிறியபெரிய வாய்ப்புகளையெல்லாம் நினைவூட்டக் கூடிய இந்த அருமையான நிகழ்ச்சியில்சமூகநீதி ஒவ்வொரு முதலமைச்சரின் முத்தாய்ப்பு முறை - என்று சொல்லவேண்டும் என்று சொன்னால்ஒரு நூறாண்டு காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர்கள் எல்லாம்.

கடலைக் காட்டுகிறேன் என்று உங்களை கப்பலில் ஏற்றிஒரு பகுதியைக் காட்டினால் - பரந்த விரிவான வானம் என்று சொன்னால்அதை நீங்கள் புரிந்துகொள்ள முடியாதுவேண்டுமானால்சில மேகங்களை அருகிலே பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

அதுபோலத்தான் நண்பர்களேஎனக்குக் கொடுக்கப் பட்டு இருக்கும் மணித்துளிகளில்சில சில செய்திகளை உங்களுக்கு வேக வேகமாக ஆங்கிலத்தில் ஏரியல் வியூ என்று சொல்வார்களே அதுபோலவிமானத்தில் பய ணம் செய்கிறவர்கள் - கீழே காட்டிஇதுதான் அந்த இடம் என்று சொல்வதைப்போலவரலாற்றுக் குறிப்பு களைச் சொல்கிறோம்.

நூறாண்டு கால சென்னை ராஜ்ஜியத்தினுடைய வரலாறாக முகிழ்த்தது சாதாரணமானதல்லஇதிலே மய்யப்புள்ளியாககருத்தாக நாம் எடுத்துக்கொள்வதுசமூகநீதி என்பதாகும்.

வருங்காலத் தலைமுறைக்கு வரலாற்றினுடைய சுவடுகளை அடையாளம் காட்டக்கூடியதாக...

அதை செதுக்கிய சிற்பிகள்அதை செயலாக் கியவர்கள் இவர்களுடைய வரலாற்றையெல்லாம் நினைத்து நாம் புகழஞ்சலி செலுத்தவேண்டும்வருங் காலத் தலைமுறைக்கு வரலாற்றினுடைய சுவடுகளை அடையாளம் காட்டக்கூடியதாகவும் அமைவது என்பது இந்த நிகழ்ச்சியினுடைய மிக முக்கியமான நீரோட்டம்.

அந்த வகையில்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள முதல்வர்பேராசிரியப் பெருமக்கள்ஆய்வுத் துறை மாணவர்கள்குறிப்பாக மேற்பட்டப் படிப்புத் துறையினர்வரலாற்றுத் துறையினர் உள்பட அனைவருக்கும்இங்கே திரண்டிருக்கக்கூடிய அறிவார்ந்த அரங்கமாக இருக்கக்கூடிய - இன்றைய அறிவியல் காரணமாகஓர் அறைக்குள் நாம் அமர்ந்திருந்தாலும்அகில உலகமும் அதைக் கேட்கக்கூடிய வாய்ப்பு இன்றைக்கு அறிவியல் அதனை வளர்த்திருக்கிறது - பெருமையாகத் தந்திருக் கிறது - அப்படிக் கேட்டுக்கொண்டிருக்கின்ற அறிவார்ந்த பெருமக்களேநண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி

பேரறிஞர் அண்ணா

நூறாண்டு கால வரலாறு என்பதுஅது சாதா ரணமானதல்லதந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லும் பொழுதுYou are putting centuries in a capsule என்ற ஒரு ஆங்கிலச் சொற்றொடரைப் பயன் படுத்தினார்கள்பல நூற்றாண் டுகளை ஒரு சிறிய குளிகையிலே அடக்குவதைப்போலஅவருடைய பணிகள் இருந்தது என்று.

அதையே இன்னும் கொஞ்சம் விரிவாக ஆக்கிக் கொண்டுஅதையே இதற்கும் நான் பயன்படுத்த விரும் புகிறேன்அண்ணா அவர்கள் சொன்ன உவமைதான்.

இந்த நூறாண்டு காலத்திலே சமூகநீதி என்பது - அவ்வளவு பெரிய சாதனையை - தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல - தென்மாநிலங்களுக்கு மட்டுமல்ல - பழைய சென்னை ராஜதானியிலிருந்து உருவாக் கியிருக்கலாம் - மெட்ராஸ் பிரசிடென்சி என்று அந்தக் காலத்திலிருந்து பிறகு மெட்ராஸ் ஸ்டேட் டாகிபிறகு பேரறிஞர் அண்ணா அவர்களுடைய அரிய திறத்தினாலேமிகப்பெரிய அளவிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் பெற்ற தாய்த் திருநாட் டுக்கு அந்த வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

திராவிட இயக்க முதலமைச்சர்களில் முத்திரை பதித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்

அதுபோலஎம்மொழி செம்மொழி என்று கம்பீரமாக நம்முடைய பேராசிரியை அவர்கள் ஆரம்பித்தார்களேஅப்படிப்பட்ட சிறப்பு முறை இருக்கிறதே - அதை செய்த பெருமை - திராவிட இயக்க முதலமைச்சர்களில் முத்திரை பதித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களு டைய சாதனை.

இப்படி வரலாற்றில் ஏராளமான சாதனைகள்.

நாம் எங்கே இருந்து தொடங்கவேண்டும்நீதிக்கட்சி யிலிருந்து தொடங்கவேண்டும். 1921 லிருந்து 2021 ஆம் ஆண்டிற்கு வருகிறோம்ஒரு நூற்றாண்டு.

நீண்ட வரலாற்றினுடைய பரந்து விரிந்த அந்த வரலாற்றில் - நூறாண்டு ஒரு சாதாரணமாக இருக்கலாம் - ஆனால்நமக்கு நூறாண்டு வரலாற்றில் எப்படியெல் லாம் மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன?

அவற்றிற்கு முதலமைச்சர்களின் பங்களிப்பு எப்படி?

அதற்குத் தத்துவங்கள் எப்படி பயன்பட்டு இருக் கின்றன?

வெறும் முதலமைச்சர்களாக இருந்தால்அவர்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்க முடியாதுகாரணம்வரலாறு முதலமைச்சர்களை வைத்து எழுதப்படுவதல்ல.

புரட்சியாளர்களைமாறுதலை உருவாக்கக்கூடியவர் களை வைத்துதான் மிகப்பெரிய அளவிற்கு வரலாறு எழுதப்படுகிறது.

தொடர்ந்து அறிஞர் பெருமக்களை அழைத்துஎல்லோரையும்பற்றிமிக முக்கிய முதலமைச்சர்களைப் பற்றியெல்லாம் குறுகிய காலத்தில் இருந்தவர்கள் உள்பட எல்லோரையும் நீங்கள் மிகத் தெளிவான அளவிற்கு அடையாளம் கண்டுஒவ்வொரு நாளும் தனித்தனியே பேசியிருக்கிறீர்கள்.

என்னுடைய பணி எளிதான பணியல்ல!

ஆனால்எல்லாவற்றையுமே திரட்டி நீங்கள் சொல் லுங்கள் என்று சொல்லும்பொழுதுஎன்னுடைய பணி எளிதான பணியல்லஇருந்தாலும்எந்த அளவிற்கு வாய்ப்பு இருக்கிறதோ - அந்த அளவிற்கு அதைச் செய்யக்கூடிய  -அந்த சூழ்நிலையை மிகத் தெளிவாக உருவாக்கிக் காட்டுவதுதான் என்னுடைய வேலையாக இருக்கும்.

பிரீமியர்’ என்றுதான் அழைப்பார்கள்

அந்தக் காலத்தில்...

முதலாவதாக ஒரு செய்தி - குறிப்பாக ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய செய்திகளில் நீதிக்கட்சி ஆட்சி என்று அழைக்கப்பட்ட அந்த நீதிக்கட்சி ஆட்சி யில்பிரீமியர் என்று அந்தக் காலத்தில் பெயர்தமிழிலே மொழிபெயர்க்க வேண்டுமானால்பிரதமர் என்று பொருள்இப்பொழுது பிரதமர் என்றால்அதற்கு வேறு பொருள் அரசியல் ரீதியாக.

நீதிக்கட்சி ஆட்சி வெற்றி பெறுகிறது - ஆனால்அவர் அந்தப் பதவியை ஏற்க மறுக்கிறார் வெள்ளுடை வேந்தர் - கட்சியின் தலைவர் சர்.பிட்டி.தியாகராயர்திராவிட இயக்கத்தின் தனி முத்திரை. ‘பதவிக்காக அல்ல - கொள்கைக்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது’ என்பதற்கு அடையாளமாக.

கடலூர் வழக்குரைஞர் சுப்பராயலு ரெட்டியார் என்று அழைக்கப்படுகின்ற அவரை அழைத்தார்கள்அவ ருக்கு உடல்நலக் குறைவின் காரணமாக சிறிது காலம் தான் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.

சமூகநீதிக்கு ஏற்பட்ட ஆபத்து -

அதை களைவதற்கு அவர் முதலில் வந்தார்

அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பனகல் அரசர் அவர்கள் வரலாற்று ரீதியில் மிகப்பெரிய சாதனைகளையெல்லாம் செய்தார்கள்அவற்றையெல் லாம் இங்கே மற்றவர்கள் சொல்லியிருப்பார்கள்நான் குறிப்பாக ஒன்றை சொல்லுகிறேன்அவருடைய காலத் தில் அதிகாரங்கள் கிடையாதுஉங்களுக்குத் தெரியும் - குறிப்பிட்ட அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட முறை - இரட்டை ஆட்சி என்று சொல்லக்கூடிய அந்தக் கால கட்டத்தில்பல சாதனைகளை செய்த நேரத்தில்முதலில் அவர்கள் ஒரு சமதர்மத்தைஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு ஜாதியின் காரணமாகசமூகநீதிக்கு ஏற்பட்ட ஆபத்து - அதை அவர் களைவதற்கு முதலில் வந்தார்இதுதான் அந்தக் கொள்கையினுடைய தத்துவம்.

திராவிட இயக்கத்தினுடைய முன்னோடி நீதிக்கட்சி - 1967 இல் அண்ணா அவர்கள் வெற்றி பெற்றவுடன்அவரைப் பார்த்து கேட்டார்கள் செய்தியாளர்கள்;

பத்தாண்டுகளில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்களே,  அரசியல் கட்சியாக மாறிய நிலையில்” என்று கேட் டார்கள்!

மற்றவர்களாக இருந்தால்பெருமையோடுஆம் என்று சொல்லிதங்களுடைய சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருப்பார்கள்ஆனால்பேரறிஞர் அண்ணா அடக்கத்திற்குரியவர் - ஆழமானவர்.

நீதிக்கட்சி - புதைக்கப்படவில்லை,

விதைக்கப்பட்டு இருக்கிறது

அவர் மிகுந்த அடக்கத்தோடு சொன்னார், “இல்லை என்னுடைய பாட்டன் நீதிக்கட்சி - நூறாண்டு காலத்திற்கு முன்னால்அது புதைக்கப் படவில்லைவிதைக்கப்பட்டு இருக்கிறதுஅதன் காரணமாக எழுந்ததுதான் இந்த ஆட்சி” - என்றார்.

இப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் மாண்பமை ஸ்டாலின் அவர்கள் அந்தப் பெருமையைப் இன்றைக்குப் பெற்றிருக்கிறார் என்று சொன்னால்,

அவர் சொன்னார், ‘‘நான் திராவிட இயக்கத்தின் நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சி'' என்று சரியாகச் சொன்னார்.

எனவேநூறாண்டு காலத்தில்இப்படி ஓர் அரசியல் வரலாற்றில்தொடர் சங்கிலியைப் போன்ற ஒரு அமைப்பு வந்தது என்பதே ஒரு தனித்த வரலாறு.

இதுவே வேறு எவருக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு!

 ‘‘திரவிடியன் மாடல்’’

ஆய்வாளர்கள் அதை ‘‘திரவிடியன் மாடல்'' என்று ஆய்வுச் செய்யக்கூடிய அளவிற்குபன்னாட்டளவில் நோபல் பரிசு பெற்ற  அறிஞர்கள் உள்படபாராட்டக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளைப் பெற்றிருக்கக்கூடிய ஒரு திருப்பம் இது.

ஏன் அந்தப் பெருமை என்றால்சமூகநீதியை வைத்துத்தான் அந்தப் பெருமை.

எனவேதான்என்னுடைய இந்த உரையிலேஏரா ளமான சாதனைகளை அவர்கள் செய்திருந்தாலும்கூடமய்யப்புள்ளியாக சமூகநீதியை எடுத்துக்கொண்டுகொஞ்சம் அங்கொன்றும்இங்கொன்றுமாகத் தொட்டுக் காட்டிஎன்னுடைய நேரத்தை நிறைவு செய்ய நான் விழைகிறேன்.

அந்த வகையிலே அருமை நண்பர்களேசில விஷயங்களைத் தொட்டுத் தொட்டுக் காட்டிவிட்டுத்தான் போக முடியுமே தவிரவிரிவாக சொல்வதற்கு நேர மில்லைஏனென்றால்இது அறிவார்ந்த அரங்கம் - உங் களுக்கு விரிவுரை தேவையில்லைநீங்கள் தெளி வானவர்கள் - உங்களுக்குத் தொட்டுக் காட்டினாலேஅதை விரிவாக்கிக் கொள்ளக்கூடிய ஆற்றலும்ஆளுமையும்திறமையும் படைத்தவர்கள் நீங்கள்அந்த வகையிலே இதைத் தெளிவாகச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் இந்தச் சமுதாயம் - ‘நீதிக்கட்சி’ என்ற அதற்குப் பெயர் எப்படி வந்தது?

அநீதி நடந்திருந்தால்தான்,

நீதி வேண்டும் என்று கேட்பார்கள்

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் - ‘ஜஸ்டிஸ்’ என்ற தலைப்பில் அவர்கள் நடத்திய ஆங்கில நாளேடுஅது மக்கள் மத்தியில் மிகத் தெளிவாக பதிந்த காரணத்தினால், ‘நீதிக்கட்சியாயிற்றுநீதி வேண்டும்நீதி வேண்டும் என்று நீதி கேட்டார்கள்எப்பொழுது நீதி கேட்பார்கள்அநீதி நடந்திருந் தால்தானேநீதி வேண்டும் என்று கேட்பார்கள்?

என்ன அநீதி?

சமூக அநீதி?

எப்படி அந்த சமூக அநீதி?

ஜாதி உள்ள ஒரு சமுதாயம் - பிறப்பினால் மனிதர் களுடைய அறிவைவாய்ப்பை அளக்கக்கூடிய ஒரே நாடுநம்முடைய நாடுஉலகத்தில் வேறு எந்த நாட்டிலும்பிறப்பினால் பேதம் என்று சொல்லும்பொழுதுதொடாதேபடிக்காதேஎட்டி நில் என்று சொல்ல மாட்டார்கள்.

நிற பேதம்கூட மற்ற நாடுகளில் உண்டுகல்வி அவர்களுக்கு மறுக்கப்படவில்லைவேண்டுமானால்தனியே படித்துக் கொள் என்று சொன்னார்கள்.

ஆனால்இங்கே மனுதர்மம் - குலதர்மத்துக் கொடியை ஏற்றக்கூடிய மனுதர்மம்.

ஜாதி காரணமாக - ஜாதி பிரிக்கப்பட்டது கொடுமை மட்டுமல்ல - அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழ காகச் சொன்னதைப்போல, ‘‘கிரேடெட் இன் இக்குவா லிட்டி'' என்று சொல்லக்கூடிய அளவிற்குபடிக்கட்டு ஜாதி முறைஎன்னைவிட உயர்ந்தவர்எனக்குக் கீழே ஒருவர் - அவருக்குக் கீழே இன்னொருவர்அவருக்கும் கீழே இன்னொருவர்.

பிராமணசத்திரியவைசியசூத்திரஅதற்கும் கீழே பஞ்சமர்கள் அய்ந்தவாது ஜாதி - அதற்கும் கீழே எல்லா ஜாதிகளையும் சேர்ந்த பெண்கள் என்று வரிசைப் படுத்தினார்கள்.

அதுதான் படிக்கட்டு ஜாதி முறை -

யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல!

அதில் கீழ்ஜாதிக்காரனுக்கு இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதற்கு மனுதர்மத்தில் இருப்பதற்காகச் சொல்கிறேன்யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல.

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு அறிவைக் கொடுக்கலாகாதுகல்வியைக் கொடுக்கலாகாது.

எனவேஅந்த மனுதர்மத்தை எதிர்த்துப் போர்க் கொடி தூக்குவதற்குப் பிறந்த இயக்கம்.

காலங்காலமாக நூற்றுக்கு மூன்று பேராக இருக்கின் றவர்கள், 97 பேருக்கு இடம் தராமல் இருக்கக்கூடிய வாய்ப்புபசியேப்பக்காரர்களை பந்திக்கு வெளியில் நிற்கச் சொல்லிபுளியேப்பக்காரர்கள் மட்டுமே எப்பொ ழுதுமே புசித்து அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் என்ற சூழல்இவற்றையெல்லாம் மாற்றுவதற்குப் பிறந்த இயக்கம்தான், 110 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய திராவிட இயக்கம் - நீதிக்கட்சி என்பதாகும்.

சமூகநீதி கேட்டார்கள்அதிலே மிகப்பெரிய வெற்றியை நிலை நாட்டினார்கள்எந்த அளவிற்கு நிலைநாட்டினார்கள் என்றால்அவர்கள் கேட்டது இங்கே சமூகநீதி - ஆனால்அந்தக் குரலினுடைய ஒலிஇந்தியா முழுமைக்கும் ஒலித்ததுதமிழ்நாட்டு சட்டசபை யில் சட்டங்களாக - சமூகநீதிக்கான அடித்தளத்தை வகுக்கக் கூடியதாக - அந்த அடிநீரோட்டத்தைத் தரக் கூடியதாக இருந்தாலும் நண்பர்களேஇந்தியா முழு மைக்கும் அல்ல - இனி வரக்கூடிய எந்த அரசுக்கும் இருக்கக்கூடிய வாய்ப்பை - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்த ஆட்சிகள் அதற்கு முன்னோட்டமாக இருந்திருக்கின்றன.

Preamble என்று சொல்லக்கூடிய WE, THE PEOPLE OF INDIA    என்று ஆரம்பிக்கக்கூடிய - அரசமைப்புச் சட்ட பிரியாம்பளில்என்ன சொல்லுகிறார்கள்? (பீடிகை யில்).

தயவு செய்து நினைத்துப் பாருங்கள்நீங்கள் அறி வார்ந்த வரலாற்று மாணவர்கள்நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப் போகிறவர்கள்.

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:

JUSTICE, social, economic and political; 

LIBERTY of thought, expression, belief, faith and worship;

EQUALITY of status and of opportunity;

and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation.

நீதிக்கட்சி - திராவிட ஆட்சி!

எல்லா குடிமக்களுக்கும்நமக்கு நாமே வழங்கிக் கொள்ளக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்திலேஇது எப்பொழுது; 1950 அந்த ஆண் டிற்கு முன்பு - ஆனால்அதற்குப் பல ஆண்டு களுக்கு முன்புஇதற்கு வித்திட் டதுதான் இந்த நூறாண்டு கால ஆட்சியில் இருக்கக்கூடிய நீதிக் கட்சி - திராவிட ஆட்சியின் சாதனை சமூகநீதிவியப்பாக இல்லையா?

‘‘திரவிடியன் மாடல்'' என்று இன்றைக்கு ஆய் வாளர்களாலே எடுத்துக்கொள்ளப்படக்கூடிய தலைப்பு இருக்கிறதே - அந்த அடிப்படை இருக்கிறதே அதற்குரிய வாய்ப்புகள்.

Justice - Social Justice

Economic justice

Political Justice

இதை வரிசைப்படுத்தி இருக்கிறது அரச மைப்புச் சட்ட பீடிகை -

எனவேதான்இந்த நூறாண்டு கால வரலாற்றை - சட்டமன்ற வரலாறு என்பதை சொல்லும்பொழுதுஅது ஏதோ ஒரு சாதாரணமானதாக இல்லைஇது உருவாக்கிய தாக்கங்கள் - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறக்கூடிய அளவிற்கு அந்தத் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

எனவேசமூகநீதியை மய்யப்படுத்துகின்ற நேரத்தில்இதை சுட்டிக்காட்டவேண்டும்.

பனகல் அரசர் அடுத்து வருகிறார்மூன்று முறை அவர்கள் ஆட்சி செய்கிறார்கள்அதற்கடுத்துபோதிய பெரும்பான்மை வரவில்லை என்று சொன்னவுடன்பெரும்பான்மை வரவில்லையானாலும்ஆட்சியில் எப்படியாவது இருக்கவேண்டும் என்று அவர் நினைக்க வில்லை.

கல்விக் கமிட்டி

மாறாகதன்னுடைய ஆதரவைக் கொடுத்துடாக்டர் சுப்பராயன் அவர்களை - அன்றைய பிரீமியராக ஆக்கினார்.

அந்த வாய்ப்பிலேஅவருடைய காலத்திலே இருக்கக்கூடிய சூழ்நிலை வரை வருகிறது.

முதலில்கல்விக் கமிட்டி - ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள்ஆதிதிராவிட மக்கள் - யாரை ‘பஞ்சமர்கள்’ என்று போட்டிருந்தார்களோஅவர்களுக்காக கல்விக் கமிட்டியை நியமித்தார்கள்.

1924 ஆம் ஆண்டு அவர் போட்ட உத்தரவு - தெருக்களில் நடக்கும் ஆதிதிராவிடர்களை யாரும் தடுக்கக் கூடாது - என்பதாகும்.

தாத்தா’ இரட்டைமலை சீனிவாசன் காலத்தில்பனகல் அரசர் அரசாணை போட்டிருந்தார்மனித உரிமைகளை யாரும் மறுக்கக்கூடாது.

இதற்காக திருவிதாங்கூரில் (கேரளாவில்தந்தை பெரியார் அவர்கள் போராடிவைக்கம் போராட்டத்தை ஓராண்டு காலம் நடத்துகிறார்கள். 1924 - நடக்க உரிமைக் கேட்டு!

அதற்கு முன்பேபல மாதங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் - சென்னை மாகாநாணத்தில் இது நடக்கிறது என்றால்எப்படி சமூகநீதி வளர்ச்சி?

எல்லோருக்கும் எல்லாம்

அனைவருக்கும் அனைத்தும்

இதுதான் சமூகநீதியினுடைய தத்துவம்யாருக்கும் வாய்ப்புகளை மறுப்பதல்ல.

உயர்ஜாதியினருக்குக்கூட உங்களுக்குக் கிடையாது என்று சொல்லவில்லைஉங்களுடைய பங்கை மட்டும் நீங்கள் அனுபவியுங்கள்நம்முடைய நாட்டிலே ஒரு தத்துவம் ‘‘தாயும்பிள்ளையும் ஒன்றானாலும்வாயும்வயிறும் வேறு''

அதுபோலத்தான்எல்லோருக்கும் எல்லாமும் தரக் கூடிய நிலைகாலேஜ் கமிட்டியை அமைத்துஅதற்குப் பிறகு வாய்ப்புகளை உருவாக்கி பலவற்றை செய்தார்.

சமஸ்கிருதத்தை உயர்ஜாதிக்காரர்கள் மட்டும்தான் படிக்க முடியும்

ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லுகிறோம் -

மருத்துவர்களாக வருவதற்குசமஸ்கிருதம் படித் திருந்தால்தான் டாக்டராக வர முடியும் என்று முன்பு சொன்னார்கள்.

சமஸ்கிருதத்தை உயர்ஜாதிக்காரர்கள் மட்டும்தான் படிக்க முடியும்மற்றவர்கள் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டார்கள்எப்படி வேதத்தைப் பெண்கள் படிக்கக்கூடாதுகீழ்ஜாதிக்காரர்கள் படிக்கக்கூடாது என்று சொன்னார்களோஅதுபோல சமஸ்கிருதத்தைப் படிக்கக்கூடாது என்று சொன்னார்கள்காரணம்அது ‘தேவபாஷை’ என்று அவர்கள் சொன்னார்கள்.

அதைத் தங்களுடைய ஏகபோகமாக வைத்துக் கொண்டார்கள்சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் டாக்டராக வர முடியும் என்றால்உங்களுக்குப் பொருள் தெரியும்யார் மருத்துவர்களாக வர முடியும்?

அதை மாற்றிக் காட்டிய பெருமை - பனகல் அரசரை சாரும்.ஒரு சிறு உதாரணம் - பல செய்திகள்.

ஒரு சர்வ கொள்ளை ராஜ்ஜியம்

அதுபோலவேஇன்றைக்கு அறநிலையப் பாதுகாப் புத் துறை வருமுன் - அது ஒரு சர்வ கொள்ளை ராஜ் ஜியமாக இருந்த நேரத்தில்அதையெல்லாம் தடுத்து நிறுத்திஒரு தணிக்கை முறையில் கொண்டு வந்துகோயில் சொத்து - வருமானம் என்பதை ஒருங்கிணைத்து அதனுடைய விளைவுகளாக மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கினார்இன்று வரையில் அதனுடைய சிறப்புகள் இருக்கின்றன.

இன்றைக்கு மீண்டும் யார் அதற்கு முன்பு இருந் தார்களோமீண்டும் அதனைப் பெறவேண்டும் என்று துடிப்பாக துடித்துக்கொண்டு அவர்கள் ஒரு போராட் டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேசமூகநீதிக்கான மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய பெருமை உண்டு நீதிக்கட்சிக்கு.

அதுமட்டுமல்லபெண்களைக் கொச்சைப்படுத்தி, ‘தேவதாசிகள்’ என்று சொல்லிகோயிலில் பொட்டுக் கட்டி வரக்கூடிய நிலையை - ஒரு சூழலை ஏற்படுத் தினார்கள் என்றால்இந்தக் கொடுமையை வேறு எங்கு போய்ச் சொல்வது?

தேவதாசி முறை’ ஒழிக்கப்பட்டுபெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன

மற்ற நாடுகளில்கூட வேறு முறைகள் இருக்கலாம்ஆனால்பெண்கள் கடவுளுக்குப் பொட்டுக்கட்டி வாழ வேண்டும் - அதன்மூலமாக அவர்கள் தேவதாசிகளாக இருக்கவேண்டும் என்று சொல்லிஅதன்மூலமாக ஒரு சமுதாயத்தையே பாழ்படுத்தி வைத்திருந்த நேரத்தில்இந்தக் காலகட்டத்தில்தான்தேவதாசி முறை ஒழிக் கப்பட்டுபெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

அறநிலையப் பாதுகாப்புத் துறைதேவதாசி முறை ஒழிப்புபெண்களுக்கு வாய்ப்பு போன்றவற்றையெல்லாம்  ஆறாண்டு காலம் நேரிடையான நீதிக்கட்சி ஆட்சியில்அதற்குப் பிறகு ஆதரவு கொடுத்து டாக்டர் சுப்பராயன் ஆட்சிக்காலத்தில்.

இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் வகுப்புவாரி உரிமை என்று சொல்லக்கூடிய அளவிற்குஅந்த வகுப்புரிமையின் வரலாறு மிக முக்கியமாக வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்தது.

இவருடைய காலத்தில், 1921 இல் முதல் ஆணை; 1923 இல் இரண்டாவது ஆணை - அவையெல்லாம் செயல்படவில்லைஅதிகார எல்லை மிகக் குறுகலானது அப்பொழுது.

உங்களுடைய பிள்ளைகளுக்கு

முத்தையா’ என்று பெயரிடுங்கள்!

அந்த வகையில் வரும்பொழுது டாக்டர் சுப் பராயன் ஆட்சிக்கு நீதிக்கட்சி வெளியில் இருந்த ஆதரித்ததுஅதிலிருந்து வரும்பொழுதுதான்முத்தையாக்கள் - உங்களுடைய பிள்ளைகளுக்கு ‘முத்தையா’ என்று பெயரிடுங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார்.

அப்படிப்பட்ட அவருடைய வகுப்புரிமை ஆணை யால்தான் - மிகப்பெரிய அளவிற்குக் கல்விக் கண்ணை பலருக்கும் திறக்கக்கூடிய வாய்ப்பு நேரிடையாக ஏற்பட்டது.

1928 இல் நிறைவேற்றப்பட்டதுபலமுறை அதற்கு ஆபத்தை உருவாக்கலாம் என்றிருந்தாலும்அதிலே வெற்றி பெற முடியாத அளவிற்கு இருந்து - இதே இந்திய அரசமைப்புச் சட்டம் 1949 இல் நமக்கு நாமே வழங்கிக் கொண்டு வந்த நேரத்தில், 1950 ஆம் ஆண்டு அவர்கள் வழக்குப் போட்டார்கள்.

நான் மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டிருக்கிறேன்இதிலே ஜாதி அடிப்படை வேறுபாடு இருக்கக்கூடாதுஅடிப்படை உரிமை என்று சொல்கிறீர்கள்எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று செண்பகம் துரைராஜன் என்கிற உயர்ஜாதி பார்ப்பன அம்மையார் அவர்கள்மனு போடாமலேமனு போட்டதாக ஒரு தவறான தக வலை பிரமாணமாகக் கொடுத்துஅது நீதிமன்றங்களால் கவனிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுதீர்ப்புகள் வந்தன.

இந்த வகுப்புரிமை ஆணை செல்லாது என்று வரக் கூடிய அளவிற்கு வந்ததுஅதற்குப் பிறகுதான் தந்தை பெரியார் அவர்கள் போராடிமுதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தது என்பதையெல்லாம் பலர் உங்களுக்குச் சொல்லியிருப்பார்கள்இந்த அறிவார்ந்த மக்களுக்கு இது புதிய செய்தி அல்ல.

அது இந்தியா முழுமைக்கும் அன்றைக்குப் பயன்பட்டதுஅதனுடைய விளைவு என்ன?

ஏனென்றால்மிகத் தெளிவாக பொருளாதார நீதி - அதற்கு முன்னாலே இருப்பது சமூகநீதி - அதற்குப் பின்னாலே இருப்பது  அரசியல் நீதி.

பச்சையப்பன் கல்லூரி நண்பர்களுக்கு,

பேராசிரியப் பெருமக்களுக்கு...

அந்த வாய்ப்புகளைப் பெருக்கக் கூடிய அள விற்கு வந்தார்கள்இதில் இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.  பச்சையப்பன் கல்லூரி நண்பர்களுக்குபேராசிரியப் பெருமக் களுக்குத் தெரியுமா - அல்லவா என்பது எனக்குத் தெரியாது.

நீதிக்கட்சி ஆதரவு கொடுத்த காலத்தில்ஒரு மாநாடு சென்னையில் நடைபெறுகிறதுதந்தை பெரியார் உள்பட பலர் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

அந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற் றப்பட்டுஅது அரசாங்கத்திற்குச் சென்று அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எதைப்பற்றித் தெரியுமா?

உங்கள் கல்லூரியைப்பற்றி!

பச்சையப்பன் கல்லூரி 1928 ஆம் ஆண்டிற்கு முன்பு, (S.C.), (ஷி.சி.) என்று சொல்லக்கூடிய ஆதி திராவிட சமுதாய மக்களுக்குமற்றவர்களுக்கும் படிக்க இடம் கிடையாது என்றார்கள்!

அதற்கு என்ன வியாக்கியானம் சொன்னார்கள் என்றால்பச்சையப்பன் முதலியார் அவர்கள் ஹிந்து - ஆகவேஹிந்து அல்லாதவர்களுக்கு அங்கே இட மில்லைஇவர்கள் அவர்ணஸ்தர்கள் - ஜாதிக்குக் கீழே இருக்கிறார்கள் என்று சொல்லிஅவர்களை ஒதுக்கி வைத்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொண்ட சமூக சீர்திருத்த மாநாடு சென்னையில் நடை பெற்றபொழுதுஅந்த இளைஞர்கள் மாநாட்டில் தீர்மானமாகப் போடப்பட்டதுஅதனை புத்தமாக நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.

மனித உரிமைக்கு விரோதமானது;

அது சமூகநீதிக்கு விரோதமானது!

அந்தத் தீர்மானத்தை அரசாங்கத்திற்குச் சொல் கிறார்கள் - பச்சையப்பன் கல்லூரியில்ஆதிதிராவிட சமுதாயத்தினருக்கும்சிறுபான்மைச் சமுதாயமாக இருக்கின்ற இஸ்லாமியர்கள் போன்றவர்களுக்கும் இட மில்லை என்று மறுப்பது இருக்கிறதேஅது மனித உரி மைக்கு விரோதமானதுஅது சமூகநீதிக்கு விரோத மானதுஆகவேஅவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறியிருந்தார்கள்.

அதற்குப் பிறகுதான் அரசாங்கம் அதனை மாற்றிய தற்குப் பிற்பாடுதான்இன்றைக்கு இந்தக் கல்லூரியில்கூட மற்றவர்களுக்குக் கதவு திறந்தது.

வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்திகள்மறுக்கப்படக் கூடியவை அல்ல

எனவேஇந்த இயக்கங்கள் மற்றவர்களுக்குநாட்டு மக்களுக்குச் செய்ததெல்லாம் பிறகுமுதலில்பச்சை யப்பன் கல்லூரியினுடைய கதவுகளேகூடகுறிப்பிட்ட வர்களுக்கு மட்டும்தான் திறந்திருந்ததுஇன்னாருக்குத் தான் இடம்இவர்களுக்கு இடமில்லை என்று சொன்ன நிலை மாறிஅனைவருக்கும் அனைத்தும் என்ற தத்துவம் - சமூகநீதிக் கொடி ஏற்றப்பட்டது முழுமையாக இந்தக் கல்லூரியில் என்றால்அந்தத் தீர்மானத்திற்குப் பிறகுதான் நண்பர்களேஅரசு அதை மாற்றிஅரசாணை வெளியிட்டு நடத்தியது.

இவையெல்லாம் வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்திகள்மறுக்கப்படக் கூடியவை அல்ல.

ஆகவேஅப்படிப்பட்ட ஒரு அற்புதமான சூழ்நிலையில்,  ஒரு சின்ன உதாரணத்திற்காக இதை எடுத்துச் சொன்னேன்.

செண்பகம் துரைராஜன் வழக்கு’ சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுகம்யூனல் ஜி.செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதற்கு முன்னால் நடந்த செய்திகளை - சமூகநீதியில் எப்படி போராட்டம் வந்தது என்று சொன்னால்பிரகாசம் 1945 இல் வருகிறார்.

தமிழ்நாட்டினுடைய இரட்சகர் காமராஜர்

அதற்கு முன்புஇராஜகோபாலாச்சாரியார்  முதல மைச்சராக இருந்த காலத்தில்பள்ளிக்கூடங்களை மூடுகிறார்குலதர்மக் கல்வி திட்டத்தை 1954 இல்தான் அவர் கொண்டு வந்தார் என்பது உங்களில் பலருக்குத் தெரியும்பெரியார் அதனை எதிர்த்தார்அதன் பிறகு தான்அந்தக் குலதர்மக் கல்வித் திட்டம் மிகப்பெரிய அளவிற்கு ஒழிந்துஅதுவேஇராஜகோபாலாச்சாரியார் பதவி விலகலுக்குக் காரணமாகிஅந்த இடத்தில்தான் கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

வரலாற்றில்தமிழ்நாட்டினுடைய இரட்சகராக இருந்து ஒரு பெரிய வரலாற்றை உருவாக்கினார் என்று சொல்வதெல்லாம் உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய செய்திகள் அல்ல - தெரிந்த செய்திகள்.

சென்னை ராஜ்ஜியதானி சட்டமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது

அதற்கு முன்புவகுப்புரிமையைக் குறி வைத்தார்கள்தொடர்ந்து ஜி.பிரகாசம் - அவர் ஆந்திராவைச் சேர்ந்த உயர்ஜாதிக்காரர் முதல் அமைச்சரான நிலையில்  அதே அணியில் இருக்கக்கூடியவர் தென்னேட்டு விசுவநாதன்கம்யூனல் ஜி..வை ரத்து செய்யவேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார் சட்டமன்றத்தில்அந்தத் தீர்மானம் சென்னை ராஜ்ஜியதானி சட்ட மன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

ஆனால்அதை நடைமுறைப்படுத்துவதற்காக என்னென்ன செய்ய முடியுமோஅவர் அதையெல்லாம் செய்தார்.

அப்பொழுதெல்லாம் கட்சியினுடைய தலைவராகஓராண்டுஈராண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுப்பார்கள்பெரும்பான்மை கட்சியில் - காங்கிரஸ் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக வந்தார்.

வேக வேகமாகச் சொல்வதால்பல்வேறு செய்திகளை வரிசைப்படுத்தி சொல்ல முடியவில்லைகாலவரிசை தேவையில்லைசமூகநீதி கண்ணோட்டத்தோடு செய்தி கள்தான் மிகவும் முக்கியம்.

1938 இல் 2500 பள்ளிக்கூடங்களை மூடினார் இராஜ கோபாலாச்சாரியார்அதை மிகப்பெரிய அளவிற்கு பெரியார் எதிர்த்தார்.

ஹிந்தியைத் திணிக்கவேண்டும் என்று சொல்லும் பொழுதுசென்னை லயோலா கல்லூரியில் பேசும் பொழுது இராஜகோபாலச்சாரியார் சொன்னார், ‘‘சமஸ் கிருதத்தை நேரிடையாகப் புகுத்தினால் எதிர்ப்பு வரும் என்பதற்காகத்தான்ஹிந்தியை நான் புகுத்துகிறேன்'' என்று சொன்னார்அப்பொழுது கட்டாய ஹிந்தி வந்தநேரம்.

அதுதான் அண்ணா அவர்களுடைய பிரகடனத்தில்திராவிட இயக்க ஆட்சியில் 1969 இல் முப்பெரும் சாதனைகளில் ஒன்றாகஇருமொழிக் கொள்கை வரு வதற்குக் காரணமாக அடித்தளமாக இருந்தது - இன்று வரையில் அந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தவேண்டிய அவசியமும்,  அவசரமும்கூட இருக்கின்றன.

இன்றைய செய்தி - நாளைய வரலாறு;

நேற்றைய நிகழ்வுகள் - இன்றைய வரலாறு

அப்படிப்பட்ட சூழ்நிலையில்அரசியலே அல்ல - வரலாற்றுக் குறிப்புகள்அரசியல் நிகழ்வு களைச் சொல்லுகிறபொழுது சுட்டிக்காட்டவேண் டும்இன்றைய செய்தி - நாளைய வரலாறுநேற் றைய நிகழ்வுகள் - இன்றைய வரலாறுநாம் படிக்கக்கூடிய வரலாறு.

வரலாற்றைவரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்அதிலே நமக்கு வக்கிரங்கள் தேவை யில்லைஅதிலே நமக்கு ஆசாபாசங்கள் தேவையில்லைஒரு அப்ஜக்ட்டிவ்சம் (objectivism) என்று சொல்லக் கூடிய அளவிற்குமிகப்பெரிய வரலாற்றுக் கண் ணோட்டத்தோடு பார்க்கின்ற நேரத்தில் நண்பர்களே,. குலக்கல்வித் திட்டம் என்று சொல்லக்கூடியதை - முதல மைச்சராக இருந்த இராஜாஜி அவர்கள்அன்றைக்கு வெள்ளைக்காரக இருந்த ஒரே ஒரு கல்வி அதிகாரியிடம் கேட்கிறார்இதுபோன்ற ஒரு குலக்கல்வித் திட்டம் இருக்கிறது என்று.

அதனை அனுமதிக்க முடியாது என்று அவர் மறுத்துவிட்டார்.

இவர் அதற்குமேலே போக முடியவில்லைஇரண் டாண்டு காலத்திலே இவருடைய ஆட்சியே கீழே இறங்கக்கூடிய சூழல் 1938 இல்ஹிந்தி எதிர்ப்பின் காரணமாக.

பிறகு அதை மனதில் வைத்துக்கொண்டுதான், 1952, 1954 இல் வருகின்றபொழுது அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

ஆகவேபள்ளிக்கூடங்களை மூடிமனுதர்ம சிந்த னையை உருவாக்குகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்த பிறகுதான்மூடிய பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள்.

எப்படி மருத்துவக் கல்லூரியில்சமஸ்கிருதம் தெரிந்தால்தான் படிக்க முடியும் என்று சமூகநீதிக்கு விரோதமான செய்திகள் நடந்தனவோ - அதே போலத்தான் நண்பர்களே இன்னொரு செய்தி.

அன்றைக்கு ஒன்றிரண்டு பொறியியல் கல்லூரி கள்தான் இருந்தனஅதிலும் தந்திரங்களைச் செய்

தார்கள்.

(தொடரும்)

ஒரு ஆட்சியை ஆதரிப்பதற்குத் தந்தை பெரியாரின் அளவுகோல் சமூகநீதியே!

சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்” என்ற தலைப்பில் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னைசெப்.30 -  சமூகநீதிதான் ஆட்சியை ஆதரிப்ப தற்கான அளவுகோல் தந்தை பெரியாருக்குஎன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

‘‘சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்''

கடந்த 21.8.2021  அன்று மாலை  சென்னை பச்சையப் பன் கல்லூரியில் - தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற் றாண்டு விழா (1920-2021) - சிறப்பு நிகழ்ச்சியில் (1.8.2021 முதல் 21.8.2021 வரை) ‘‘சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்'' (17.12.1920 முதல் இன்றுவரை தமிழ்நாடு முதலமைச்சர்களின் வாழ்வும் - பணியும்என்ற தலைப்பில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஒழுக்கச் சீலர் ஓமந்தூரார்

இன்றைக்கு சென்னையில் சட்டமன்றத்திற்காகக் கட்டப்பட்டுபிறகு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக மாற்றப்பட்டு இருக்கிறதே - அந்த இடம்தான் ஓமந்தூரார் வளாகம் - அந்த ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்தார்அவர் இரண்டாண்டுகளுக்கு மேல் முதல மைச்சராக இருக்க முடியவில்லைகாரணம்ஒவ்வொரு ஆண்டும் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்அந்த வகையில் ஓமந்தூரார் அவர்கள் ‘ஒழுக்கச் சீலர்’ என்று பெயர் பெற்றவர்.

அவர் எந்த அளவிற்குச் சாதனை செய்தார் என்றால்இந்த சமூகநீதிக் கொடியைப்  பரப்புவதில் அவர்கள் மிகக் குறியாக இருந்தார். 20 சதவிகிதம் பொறியாளர் களுக்கு - மிக முக்கியமாக பொறியியல் படிப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் என்று - அதற்கு முன்பு இருந்த பிரகாசம் அவர்களுடைய அமைச்சரவையில் போட்டதை - சமூகநீதிக்கு எதிராக இருந்ததை - ஓமந் தூரார் முதலமைச்சராக வந்தவுடன்உத்தரவுப் போட்டு மாற்றிஅதனை நீக்கினார்.

காரணம்பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழில் தொடர்ந்து எழுதிபோராட்டங்களை நடத்திக் கொண் டிருக்கிறார்தகுதி என்ற பெயராலே மற்றவர்களுக்கு வாய்ப்புக் கதவுகள் மூடப்படுகின்றனவாய்ப்புகளை எல்லோருக்கும் கொடுங்கள்.

தோல்வியுற்றவர்களை எல்லாம் எடுத்துக்கொள்ளுங் கள் என்று சொல்லவில்லைஇவர்கள் வேண்டுமென்றே வைத்திருக்கின்ற பன்னாடை முறை - வடிக்கட்டல் முறை இருக்கக்கூடாதுஎல்லோருக்கும் வாய்ப்புக் கொடுங்கள்வகுப்புவாரி உரிமை அப்பொழுது ரத்து செய்யப்படுவதற்கு முன்பு - 1946-1947 - ஆகஸ்ட் 15 இல் சுதந்திரம் - அதற்கு முன்னால் இருக்கக்கூடிய ஆட்சி - அந்தக் காலகட்டத்தில் 20 சதவிகிதம் என்ற அந்த வாய்ப்புகளை மாற்றினார்.

இன்னுங்கேட்டால்மிகப்பெரிய அளவிற்குநீதித் துறையில்மற்ற இடங்களில் யார் யார் இருக்கவேண்டும் என்று சொன்னவுடன்உடனடியாக அவர்மீது ஆத்திரப் பட்டார்கள்ஓமந்தூரார் காங்கிரஸ்காரர் - திருவண்ணா மலைக்கு மாதந்தவறாமல்  ரமண ரிஷி ஆசிரமத்திற்குச் சென்றுவரக்கூடிய பக்தர்வெள்ளிக்கிழமை தவறாமல் விரதம் இருக்கக்கூடியவர்அதேநேரத்தில்ரொம்ப நேர்மையாளர்.

கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை

அப்படிப்பட்ட ஓமந்தூராரைப் பத்திரிகைகளில், ‘‘ஓமந்தூர் இராமசாமியல்ல - இவர் தாடியில்லாத ராம சாமி - கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை இருக்கிறது'' என்று அவரை வருணித்தார்கள்.

காரணம் என்ன?

சமூகநீதியை கொஞ்சம் தொட்டுக்காட்டினார்முழுமையாக அவரைச் செய்ய விடவில்லைஅவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தெளி வாக செய்தார்.

இந்த நேரத்தில் இன்னொன்றை உங்களுக்குச் சொல்லவேண்டும்ஒரு பிரபலமான ஆங்கில நாளேடு - இன்னமும் நடந்துகொண்டிருக்கின்ற தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆங்கில நாளேடு -

பதில் சொல்ல முடியாமல் திணறிய ஆங்கில பத்திரிகை ஆசிரியர்

அந்த நாளேடு (இந்து), ஓமந்தூராரைப் பார்த்துநீங்கள் ஒரு வகுப்புவாதி என்று எழுதினார்கள்.

உடனே ஓமந்தூரார் அவர்கள்பெரிய பட்டதாரி அல்லஒழுக்கச் சீலர் - நேர்மையானவர் - திறமையான வர்.

உடனே அவர் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரை அழைத்தார் -

என்னை வகுப்புவாதி என்று சொல்கிறீர்களேநான் வகுப்புரிமைக்காகத்தானே போராடுகிறேன்சட்டப்படி உள்ளதாயிற்றே!

சரிஉங்கள் அலுவலகத்தில் எவ்வளவு பேர் பணி யாற்றுகிறார்கள்எல்லா ஜாதியினருக்கும் கொடுத் திருக்கிறீர்களாஎன்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடிய வில்லை.

காரணம் என்ன?

அந்த அலுவலகத்தில் அவர் என்ன ஜாதியோஉயர்ஜாதிக்காரர்கள் மட்டும்தான் பெரும்பாலும் இருந்தார்கள்இன்றைக்கு வேண்டுமானாலும் கொஞ்சம் மாறியிருக்கலாம்.

அந்த பத்திரிகை ஆசிரியர் வாயடைத்துப் போனார்.

எனவேஎன்னை குற்றம் சொல்லாதீர்கள் என்று ஓமந்தூரார் சொன்னார்இந்தத் துணிச்சலுள்ள ஒரு முதலமைச்சராக இருந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்குகாலங்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து திறமை வாய்ந்தமூத்த வழக்குரைஞருக்குப் பரிந்துரை செய் கிறார்.

பிரதமர் நேரு அவர்கள் ஓமந்தூரார் கொடுத்த பரிந்துரையில் கைவைக்கவில்லை!

அப்பொழுதெல்லாம் முதலமைச்சர் இங்கே பரிந்துரை செய்துடில்லியினுடைய உள்துறை ஏற்றுபிரதமருக்கு அப்பரிந்துரை அனுப்பி வைக்கப்படும்.

அப்படி அவர்கள் பரிந்துரை செய்த நேரத்தில்பிரதமர் நேரு அவர்கள் அழைத்துகவர்னர் ஜெனரலாக இருக்கக்கூடிய இராஜாஜி அவர்கள் வேறொருவரைப் பரிந்துரைத்திருக்கிறார். (அவர் அய்யங்கார் ஜாதிஆகவேஅதற்காக உங்கள் பரிந்துரையை மாற்றிக் கொடுங்கள் என்று சொன்னார்.

ஓமந்தூரார் அவர்கள் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். “நான் நியாயத்தின் அடிப்படையில் அவரைப் பரிந்துரைத்திருக்கிறேன்அப்பரிந் துரையை மாற்ற வேண்டுமென்றால்மாற்றிக் கொள்ளுங்கள்நான் என்னுடைய ராஜினாமாவைக் கொடுக்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் தெரி வித்திருந்தார்பிறகு பிரதமர் நேரு அவர்கள் அப்பரிந்துரையில் கை வைக்க விரும்பவில்லைஏற்றுக் கொண்டார்.

அப்படி வந்தவர்தான் தலைசிறந்த தீர்ப்புகளைக் கொடுத்த ஒரு நீதிபதி (ஜஸ்டிஸ் திரு என்.சோமசுந்தரம்).

எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்றால்சமூகநீதி.

காந்தியாரிடம் பிராமண சங்கத்தினர் கொடுத்த புகார் மனு!

ஏன்?

பிராமண சங்கம் சார்பாககாந்தியாரிடம் ஒரு மனு கொடுத்தார்கள்ஓமந்தூரார் ஒரு வகுப்புவாதி - எல்லா வற்றையும் இவர் இப்படித்தான் செய்கிறார் என்று.

உடனடியாக காந்தியார் அவர்கள் ஓமந்தூராரைப் பார்த்துஇப்படி செய்யலாமாஒரு ஜாதியினரை நீங்கள் பழிவாங்குகிறீர்கள் என்று உங்கள்மீது குற்றம் சொல் கிறார்களேஉங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்துகிறீர்கள் என்று சொல்கிறார்களே என்று கேட்டார்.

உடனே புள்ளி விவரத்தோடு சொன்னார்அவர்கள் எத்தனை சதவிகிதம் பேர்ஏற்கெனவே எவ்வளவு இடங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறதுஎப்படி அவர் களுக்குக் குறைவில்லாமல் இருக்கிறது என்பதையெல் லாம் புள்ளி விவரங்களோடு ஆதாரத்தோடு காந்தியா ருடைய செயலாளருக்கு நீண்ட கடிதம் எழுதினார்.

அடுத்தமுறை காந்தியார் வரும்பொழுதுபிராமண சங்கத்தினர் அவரைப் பார்த்தபொழுது,

‘‘வேதம் ஓதுவதுதானே வேதியர்க்கு அழகு’’

காந்தியார் சொன்னார், ‘‘வேதம் ஓதுவதுதானே வேதியர்க்கு அழகு'' உங்களுக்கென்ன அந்த இடத்தில் வேலை'' என்று கேட்டார்.

காரணம் என்ன?

புள்ளிவிவரத்தோடு ஆதாரங்களை அவருக்கு அனுப்பிய காரணத்தினால்தான்

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால்முதலமைச்சராக மட்டும் இல்லைஅதிகாரம் அதிகமாக இல்லாத கால கட்டத்தில்கூட சாதனைகளை செய்தவர்களாக இருந் தார்கள்அந்த அதிகாரம் போய்விடுமோ என்று அவர் கள் பயந்துகொண்டு ஒரு காலத்திலும் அவர்கள் செயல்படவில்லைமுதுகெலும்பு உள்ளவர்களாக - தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்சமூகநீதிக்கு ஆபத்து என்றால்அந்த சமூகநீதியை நாங்கள் செயல்படுத்திக் காட்டுவோம் என்று சொல்லக் கூடிய அந்த வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது.

அடுத்து காமராஜருடைய ஆட்சி - குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து மிகப்பெரிய அளவிற்கு வந்தார்.

150 இடங்கள் இன்டர்வியூ என்று சொல்லக்கூடிய நேரிடையான இடங்கள் இருந்த நேரத்தில்அப்பொழுது தான் அவர் பதவிக்கு வந்திருக்கிறார்குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து உத்தரவு போடுகிறார்.

அந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்கு - இப்பொழுது நீட் தேர்வு மிரட்டிக் கொண்டிருக்கிறதே - மாணவர் களையெல்லாம் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதே - அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்அன்றைக்கு இருந்த அடிப்படையில் எதைச் செய்தார் என்றால்ஏற்கெனவே 150 மதிப்பெண்கள் இருந்தது ஓமந்தூரார் காலத்திலிருந்து வரிசையாக.

150 மதிப்பெண்களை 50 மதிப்பெண்களாகக் குறைத்தார் இராஜாஜி

அப்படி வருகிறபொழுது அந்த 150 மதிப்பெண்களை இராஜாஜி அவர்கள் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் அதை 50 ஆகக் குறைத்தார்இண்டர்வியூ மதிப்பெண் அதுதேர்வில் வாங்குகின்ற மதிப்பெண் ணையும்நேரிடையான இண்டர்வியூவில் பெறுகின்ற மதிப்பெண்ணையும் சேர்த்துதான் மருத்துவக் கல்லூரி யில் சேர்க்கின்ற முறைதேர்வுக் குழு அதைத்தான் கடைப்பிடிக்கும்.

காமராஜர் பதவிக்கு வந்து அப்பொழுதுதான் ஒரு சில நாள்கள் ஆகின்றனமுதல் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்இவர் படிக்காத காமராஜர்இவரை கேள்வி கேட்டு மடக்கிவிடலாம்இவருக்கு என்ன ஆளுமை தெரியும் என்று நினைத்த செய்தியாளர்களில் சிலர் மேல்மட்டத்தனம் என்று நினைத்துக்கொண்டு காம ராஜரிடம் கேள்வி கேட்டார்கள்.

முந்தைய முதலமைச்சர் 150 மதிப்பெண்களாக இருந் ததை 50 மதிப்பெண்களாகக் குறைத்தாரே - நீங்கள் ஏன் மீண்டும் 150 மதிப்பெண்களாக மாற்றியிருக்கிறீர்கள்?

சமூகநீதி என்பது ஒவ்வொரு முதலமைச்சர்களாலும் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்ப தற்கு அடையாளம் அதுதான்.

50 மதிப்பெண்களை 150 மதிப்பெண்களாக உயர்த்தினார் காமராஜர்!

காமராஜர் அவர்கள் யாரையும் சங்கடப்படுத்தாமல்அப்படியாஅவர் எதற்காக 150 மதிப்பெண்களிலிருந்து 50 மதிப்பெண்களாகக் குறைத்தாரோஅதே காரணத் திற்காகத்தான் 50 மதிப்பெண்களை 150 மதிப்பெண்களாக உயர்த்தியிருக்கிறேன் என்று சொன்னார்.

இதற்கு மேலே நான் சொல்லவேண்டிய அவசிய மில்லை என்றார்.

இந்தப் பதிலால் அவர்கள் வாயடைத்துப் போய் விட்டார்கள்.

அப்படி வருகிறபொழுது நண்பர்களேஇந்த சமூகநீதியினுடைய தத்துவத்திலேமுதல் முறையாக பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பயன்படுத்திஅவர்களுக்கு இட ஒதுக்கீடு வந்ததேகாமராஜருடைய காலம்தான்.

தனித்தனியாக இருந்தது வகுப்புரிமை ஆணையில்அந்த வகுப்புரிமை ஆணைக்காக தந்தை பெரியார் அவர்கள் போராடி, 1951 இல் இந்திய அரசமைப்புச் சட்டம் முதல் முறையாகத் திருத்தப்பட்டதுசென்னை ராஜ்ஜியம் - ஆந்திரா  பிரியவில்லை - மொழிவழி மாநிலங்கள் வரவில்லைஅப்பொழுது வழக்கு நடந்த பொழுதுஅரசமைப்புச் சட்டத்தைத் திருத்துங்கள் என்று பெரியார் போராடியபொழுதுமிகப்பெரிய அள விற்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை பிரதமர் நேருஒரு ஜனநாயகவாதி என்கிற முறையில் அதனை ஏற்றுக்கொண்டுஅண்ணல் அம்பேத்கர் சட்ட அமைச் சர்முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 1951 இல் வருகிறதுஅந்த சட்டத் திருத்தத்தில்தான் 15(4) என்கிற பிரிவில்பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு வருகிறது.

மாணவர்கள் படித்து வந்தால்தானேவேலை வாய்ப்புக்கு வர முடியும்

சோசியலி அண்ட் எஜூகேஷனலி ஃபேக்வர்ட் கிளாசஸ் (Socially and educationally backward classesஎன்கிற வார்த்தையைப் போட்டுஅந்த இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு வருகிறது.

ஏனென்றால்அதற்குமுன் வேலை வாய்ப்பில் மட்டும் இருந்ததுமாணவர்களுக்குக் கிடையாதுமாண வர்கள் படித்து வந்தால்தானேவேலை வாய்ப்புக்கு வர முடியும்ஆகவேஇங்கேயே தடுத்துவிட்டால்அங்கே வர முடியாது.

பெரியாரும்திராவிடர் இயக்கமும் அதற்காகப் போராட்டம் நடத்தியதன் விளைவாகத்தான்முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தது.

எனவேசென்னை ராஜ்ஜியத்தில் இருந்த வகுப் புரிமை ஆணையின் பலன்இந்தியா முழுக்க இன் றைக்கும் அது தொடர்கிறது.

மண்டல் கமிசனைப்பற்றியெல்லாம் இங்கே அறி முகப்படுத்திய அம்மையார் அவர்கள் சொன்னார்கள்.

அதனுடைய விளைவுகள் என்ன இன்றைக்கு?

மிகப்பெரிய அளவிற்கு தாக்கம் ஏற்பட்டிருக்கிறது எப்படி என்று உங்களுக்குத் தெரியும்.

அதனுடைய விளைவாகத்தான்இன்றைக்கு மிகப் பெரிய ஒரு வாய்ப்பாகபிற்படுத்தப்பட்டவர்களுக்கென்று இத்தனை சதவிகிதம் என்று வரக்கூடிய வாய்ப்புகள் உருவாகின.

எனவேஇந்தியா முழுக்க அது பயன்பட்டது.

முதலமைச்சராக அவர்கள் இருந்த நேரத்தில்தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சிறப்பு என்ன வென்று சொன்னால்எந்த முதலமைச்சரும்தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் மாறுகின்றனஅரசியல் களங்கள்உருவங்கள் மாறுகின்றனஒரு தேர்தலில் ஒரு அமைச்சரவை போகிறதுஇன்னொரு அமைச்சரவை வரக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறது.

ஒரு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது சமூகநீதி!

அப்படி பெறக்கூடிய சூழ்நிலையில்மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக வரக்கூடிய இந்த எண்ணங்கள் இருக் கிறது அல்லவா  இந்த எண்ணங்களின் அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற நேரத்தில்வருகின்ற சிறப்பு என்ன வென்று சொன்னால் நண்பர்களேபெரிய மாறுதல் ஏற்படுகிறது.

என்ன அந்த மாறுதல்?

மற்றவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் - சமூகநீதியில் வளர்ச்சி ஏற்படுகிறது.

இவர் போய்விட்டாரே - அந்த ஆட்சிப் போய் விட்டதே - இந்த ஆட்சி வந்ததும் அதை மாற்றவேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லைஅது ஒரு தொடர்ச் சியாக வந்து கொண்டிருக்கிறது.

மக்கள் தொகை எண்ணிக்கையின்படிதான்!

அந்த அடிப்படையில் வருகிறபொழுதுபிற்படுத்தப் பட்டவர்களுக்கு 20 சதவிகிதம் என்று ஓமந்தூரார் சொன்னார்காமராஜர் காலத்தில்பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 25 சதவிகிதம்தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய ஆதிதிராவிடர் சமுதாய சகோதரர் களுக்கு 16 சதவிகிதம்காரணம்மக்கள் தொகை எண் ணிக்கை என்னவோ அதன்படி.

பழங்குடியினர் என்று தனியாகப் பிரியவில்லைஅவர்களையும் சேர்த்துத்தான்.

25 - 16 என்று இருந்தது.

காமராஜர் ஆட்சி முடிந்துஅண்ணா ஆட்சி வருகிறது.

பெரியார் சொல்கிறார்இவ்வளவு அதிகமான மக்கள் இருக்கிறார்கள்அந்த மக்களுக்குப் போதிய வகுப்புரி மையை சமூகநீதி வழங்கவில்லையே - நீங்கள் ஆட்சிக்கு வந்து என்ன பயன்என்றார்.

சமூகநீதிதான் ஆட்சியை ஆதரிப்பதற்கான அளவுகோல் தந்தை பெரியாருக்கு!

பெரியாரைப் பொறுத்தவரையில்எந்த ஒரு ஆட்சியை ஆதரிப்பதாக இருந்தாலும்எதிர்ப்ப தாக இருந்தாலும் சமூகநீதிதான் அவருக்கு ஒரே அளவுகோல்!

அந்த சமூகநீதிதான்அவருடைய பொது வாழ்க்கை ஆரம்பித்ததும் - காங்கிரசில் சேர்ந்ததும் அதற்காகத்தான்வெளியேறியதும் அதற்காகத் தான் - எந்த ஆட்சிகளையும் ஆதரிப்பதும் அதற் காகத்தான்எதிர்ப்பதும் அதற்குத்தான்.

செதுக்கியவர்கள் - சிற்பிகள் - செயல்பாட்டாளர் கள்.

பெரியார் அப்படி சொன்னவுடன்அண்ணா அவர்கள் முயற்சி எடுத்தார்முப்பெரும் சாத னையை செய்தவர் அண்ணா.

ஒன்றுதாய்த்திருநாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்தது

இரண்டுசுயமரியாதைத் திருமணச் சட்டம்

மூன்றுஇருமொழிக் கொள்கை - தமிழும்ஆங்கிலமும் போதும்கட்டாய ஹிந்திக்கு இட மில்லை என்றார்.

தந்தை பெரியார் சொன்னார்ஏன், 50 சதவிகி தத்திற்குமேல் போகக்கூடாது என்று உச்சநீதி மன்றம் சொல்லியிருக்கிறதுசமூகநீதியில்.

சட்டநாதன் ஆணையம்!

அதற்காகப் போடப்பட்டதுதான் சட்டநாதன் ஆணையம்அந்த ஆணையத்தினர் பெரியாரை சந்திக்கிறார்கள்.

இப்பொழுது 25 +16 = 41 சதவிகிதம்தானே இருக்கிறதுஅதை 49 சதவிகிதமாக ஆக்கலாமே என்று அந்தக் கமிஷனிடம் பெரியார் சொன்னார்.

அப்படி செய்தால் என்னாகும்என்று அந்த ஆணையத்தினர் யோசித்தார்கள்தயங்கினார்கள்டில்லி ஒப்புக்கொள்ளுமாஉச்சநீதிமன்றம் 50 சதவிகி தத்திற்கு மேல் போகக்கூடாது தமிழ்நாட்டில் என்றார்கள்.

பெரியார்தான் பதில் சொன்னார், 49 என்பது 50-க்கும் கீழேதான் என்று சொல்லுங்கள் அது போதும் விடையாக என்றார்!

உடனே முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் அதனை செயல்படுத்தினார்கள்.

அந்த சூழ்நிலையில்நண்பர்களே நன்றாக நீங்கள் இதைக் கவனிக்கவேண்டும் சமூகநீதிக்கு மிக முக்கிய மான கட்டத்திற்கு வருகிறோம்.





முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் 25 என்பதை 31 ஆக ஆக்கினார்அதேநேரத்தில் எஸ்.சி.,  கோட்டா 16 என்பதை 18 ஆக ஆக்கிஎஸ்.டிஅதில் சேர்ந்ததுதான்.பி.சிஎன்று சொல்லக்கூடிய பிற்படுத்தப்பட்டவர் களையும் சேர்த்து 49 என்று ஆக்கினார்.

அது தொடர்ந்து வந்ததுபிறகு எம்.ஜி.ஆர்ஆட்சி (அதிமுகவருகிறதுஅவர் பெரியார் நூற்றாண்டை கொண்டாடுகிறார்.

இங்கே அறிமுகப்படுத்திய பேராசிரியர் அவர்கள் சொன்னதைப்போலஎம்.ஜி.ஆர்அவர்கள் ரூ.9 ஆயிரம் வருமான வரம்பு ஆணையை கொண்டு வரும் பொழுதுபொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து சமூகநீதியிலே சேர்க்கக் கூடாதுகுழப்பம்தான் மிஞ்சும் என நான் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டினோம்,

Justice - Social Justice

Economic justice

Political Justice

தனித்தனி மூன்றும்.

Social Justice என்பதை Economic justice என்று நாம் எடுக்கக்கூடாது.

தொடர்ந்து போராடியதின் விளைவால் ரூ.9 ஆயிரம் வருமான வரம்பு திரும்பப் பெறப்பட்டது!

அந்த வகையில்ரூ.9 ஆயிரம் வருமான வரம்பைக் கொண்டு வந்தது தவறு என்று நாங்கள் சுட்டிக் காட்டினோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும்எங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து ஓராண்டு போராடியதின் விளைவால்எம்.ஜி.ஆர்அவர்கள் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் வந்தது.

 அதற்கு தேர்தலில் ஏற்பட்ட தோல்விகள்போராட்டங்களின் காரணமாக ஏற்றுக் கொண்டார்கள்அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்அதில்கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் சார்பில் நான் விளக்கிச் சொன்னவுடன்அதனை ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்அவர்கள்.

உடனே அதற்குப் பரிகாரமாகபிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 50 சதவிகிதம் என்று உயர்த்தினார்பிறகு 1989 - 1990இல் முதல்வராக இருந்த கலைஞர் அந்த 50-அய் 30+20 என்று பிரித்ததார்இன்றைக்கு அந்த 30 இல்அந்த 20 இல் உள்ஒதுக்கீடுகள் வந்து கொண்டிருக் கின்றன.

எப்படி வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.

முதலில் 1946 இல் ‘பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்று வருகிறது - அதற்கடுத்து விரிவாகிறது - அதற்கு ஆபத்து ஏற்படுகிறது - அது பாதுகாக்கப்படுகிறது - அப்படி பாது காக்கப்பட்டவுடன்இந்தக் கட்டம் வந்து மிகப்பெரிய அளவிற்கு 50+18 = 68 சதவிகிதம் என்று ஆகிவிட்டது.

உயர்நீதிமன்றம் சொல்லுகிறது, ‘எஸ்.டி.’ என்ற பிரிவினருக்குத் தனியே கொடுங்கள் என்று.

தி.மு.ஆட்சி கலைஞர் தலைமையில் மீண்டும் வந்தவுடன்அவர்களுக்கு ஒரு சதவிகிதம் கொடுத்தார்.

ஆகவேஅந்த சூழ்நிலையில்மிக முக்கியமான அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கினார்கள்.

50 சதவிகிதத்திற்குமேல் போகக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கில் ஒரு தீர்ப்பு சொன் னார்கள்.

69 சதவிகிதம் என்பது அநீதியல்ல என்று சொன்னோம்!

பிறகு 1991 வாக்கில் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வருகிறார்நாங்கள் அவரைப் பயன்படுத்தினோம்சமூகநீதிக்கு ஆபத்து - 69 சதவிகி தத்தைப் போராடிப் பெற்றிருக்கிறோம். 85 விழுக்காடு இருக்கின்ற மக்களுக்கு 69 சதவிகிதம் என்பது அநீதியல்ல என்று விளக்கிச் சொன்னோம்.

சில கருத்து மாறுபாடுகள் அவருக்கு இருந்தாலும்திராவிட இயக்கத்தினுடைய தொடர்ச்சி என்றுதன்னை பரிணாம வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டவர் அவர்.

சமூகநீதிதான்வகுப்புரிமைதான் என்பதைப் புரிந்துகொண்டுதிராவிடர் கழகம் என்ன சொன்னதோஅதை அவர் ஏற்றுக்கொண்டார்.

31-சி என்று ஒரு சட்டப்பிரிவைப் பயன்படுத்தி எழுதிக் கொடுத்துஅரசமைப்புச் சட்ட ரீதியாகவே அதற்குப் பாதுகாப்புக் கொடுக்கலாம்இன்னுங்கேட்டால்வகுப்புவாரி உரிமை அரசாணையாக (G.O.இருக்கிறதுஆணைகளுக்கு பின்னோக்கி செயல்படுத்த முடியாது - மாறாகஒரு சட்டத்தை (ACTசட்டமன்றத்தில் நிறைவேற்றினால்,  அதைப் பின்னோக்கிஅதிலிருந்து செயலாகும் என்று செய்யலாம்எனவேஅதனை சட்டமாக்குங்கள் என்று சொன்னவுடன்அதை ஏற்றுக் கொண்டார்.

இன்னுங்கேட்டால்தன்னுடைய ஜாதிப் பெருமையை சொன்ன ஒருவர் ஆரம்ப காலகட்டத்தில்ஆனால்அவரையே மிகப்பெரிய அளவிற்கு சிந்திக்க வைத்தது - இந்த இயக்கம் - இந்தத் தத்துவங்கள் மாற்றியதுவேலை வாங்கியது!

69 சதவிகித இட ஒதுக்கீடு

ஆவது அட்டவணைப் பாதுகாப்பு

உடனே அதனை ஏற்றுக்கொண்டுதனிச் சட் டத்தை இயற்றினார்கள். 31-சி என்ற பிரிவின்கீழே 31-பியைப் பயன்படுத்திஇதுவரை இல்லாத அளவிற்கு, 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பில் IX (9)th Schedule  இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தவுடன்மிகப் பெரிய வாய்ப்பு.

ஆகவே, 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.- 25 ஆண்டுகளுக்கு மேலாக!

இது ஒன்றும் அக்கிரமம் அல்லமக்கள் தொகை கணக்கில்வகுப்புவாரி உரிமை அடிப் படையில் இது குறைவுதான்இதை எதிர்த்து போராடினார்கள்வழக்குத் தொடுத்தார்கள்ஆனால்அது இன்றைக்கும் நிலைத்திருக்கிறது.

ஆகவேஇது சாதாரணமானதல்லஇந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பு.

69 சதவிகிதம் தமிழ்நாட்டில் இருக்கிறதே என்று மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் கேட்டார்கள்.

ஆவது அட்டவணை பாதுகாப்பிற்காக எவ்வளவு போராடி இருக்கிறோம்தொடர்ச்சியாக அதனுடைய விளைவுகள் இன்றைக்கு வரை வந்திருக்கிறது.

ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொன்னவர்கள்இன்றைக்கு அதை ஏற்றுக்கொள்கிறார்கள்

இப்பொழுது மருத்துவ மத்திய தொகுப்புகள்மத்திய கல்வி இவற்றில் எல்லாம் 27 சதவிகிதம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு நாங்கள் கொடுப்போம் - நாங்கள் 50-க்குக் கீழே இருப்பதில் 27 சதவிகிதம் கொடுப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வருகிறபொழுதுஅதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொன்ன வர்கள்இன்றைக்கு (ஒன்றிய அரசுஅதை ஏற்றுக்கொள் கிறார்கள்!

மாநிலங்களுக்கு அந்த உரிமை இல்லை என்று 102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததை மாற்றிஇன்றைக்கு முதலமைச்சர் அவர்கள்மற்ற அமைப்பாளர்கள்தமிழ்நாட்டு மண் சமூகநீதி மண் என்று போராடியதின் காரணத்தினாலேமிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பு ஏற்பட்டுஇன்றைக்கு முழுமையாக நடந்து - இன்றைக்கு 127 ஆவது அரசமைப்புச் சட்டம் - நேற்று முன்தினம்தான் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.

இன்றைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுடைய காலத்தில் வந்திருக்கிறது

அதன்மூலம்மாநிலங்களுக்கு உரிமை உண்டுயார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிற உரிமையும்பட்டியல் தயாரிக்கக் கூடிய உரிமையையும் - 102 இல் பறிக்கப்பட்ட உரிமை - 127 இல் அவசரமாகக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றிமிக வேகமாக நடைபெற்று இருக்கிறது என்று சொன்னால் 105ஆவது அரசமைப்புச் சட்டத்தின் மூலம் மாநில உரிமைகள் மீண்டும் நிலை நாட்டப்பட் டுள்ளது என்பது - வீதிமன்றப் போராட்டம்நீதிமன்றப் போராட்டம் செய்த இந்த மண்ணிலேஇன்றைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுடைய காலத்தில் வந்திருக்கிறது.

பெண்களுக்கு வாக்குரிமை

எனவேதான் நண்பர்களேபொருளாதார ஆபத்து வந்த நேரத்தில் அதனை எதிர்த்துப் போராடிய முதலமைச்சர்கள்,

ஆபத்து வருகிறபொழுது 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் -  அதன் காரணமாக எவ்வளவுதான் எங்களிடம் மாறுபட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்அதைச் செய்தவர்களைப் பாராட்டவேண்டும்.

அதேபோலபெண்களுக்குச் சொத்துரிமை என்று வருகின்ற நேரத்தில்செங்கற்பட்டில் 1929 இல் நடை பெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் தீர்மானம் போட்டார்.

அது மட்டுமல்லஇந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை அளித்து சாதனை படைத் ததும் நீதிக்கட்சியின் ஆட்சியே என்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம்

1929இல் அப்பொழுது 5 வயது சிறுவனாக கலைஞர் அவர்கள் இருந்தார்அவர் 1969 இல் ஆட்சிக்கு வரு கிறார். 40 ஆண்டுகள் கழித்து - பெண்களுக்குச் சொத் துரிமை சட்டம் கொண்டு வருகிறார் - இந்தியாவிலேயே முதன்முறையாகக் கொண்டு வருகிறார்.

சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்களே நாடாளுமன்றத்தில் அப்போதுசெய்ய முடியாத ஒன்று - செய்ய முடியாத அளவிற்குத் திணற வைத்துசங்கடப்படுத்தியதால்அவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியதால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போனார்.

அதேநேரத்தில், 2006 ஆம் ஆண்டு பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை (U.P.A.)  அய்க்கிய முற்போக்குக் கூட்டணி நிறைவேற்ற வைத்தது ஒன்றிய ஆட்சியில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழகம்.

அதற்கு முன்பு 1969 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள்தன்னுடைய ஆட்சிக் காலத்தில்அதனை மிகத் தெளிவாக பெண்களுக்குச் சொத்துரிமை என்று செய்தார்.

எனவேதான்சமூகநீதி என்பது இருக்கிறதேசமூகநீதிபாலியல் நீதியை உள்ளடக்கிய திராவிடர் இயக்கமாகதொடர்ந்து வலியுறுத்தி வந்ததுவருகிறதுதமிழ்நாட்டு முதலமைச்சர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களானாலும்சமூகநீதி மண் இது - பெரியார் மண் - சமூகநீதி அடித்தளம் என்று காட்டியிருக்கிறார்கள்.

வரலாற்று சமூகநீதிக் கொடி இன்றைக்குத் தலைதாழாமல் பறந்து கொண்டிருக்கிறது

எனவேதான்வரலாறு என்று சொல்லுகின்ற நேரத்தில்வரலாற்றில் சமூகநீதிக் கொடி இன்றைக்குத் தலைதாழாமல் பறந்து கொண்டிருப்பது மட்டுமல்லஇதைப் பார்த்து மற்றவர்கள் பாடம் கற்கிறார்கள்எங் களுக்கும் அந்த உணர்வு தேவை - நாங்களும் அதனைப் பின்பற்றவேண்டும்இதை எப்படி செய்தீர்கள்என்று.

தமிழ்நாட்டைப் பாருங்கள்தமிழ்நாட்டைப் பாருங் கள் - தமிழ்நாட்டு ‘திரவிடியன் மாடல்’ என்று சொல்லக் கூடிய இந்த எடுத்துக்காட்டைப் பின்பற்றுவோம்“ என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்று பல மாநிலத்தவரும் வந்திருக்கிறார்கள்.

இதுதான் அன்று முதல் இன்றுவரையில் - அவசர அவசரமாக சொல்லியிருக்கிறேன்பல விஷயங்களை விளக்க முடியவில்லைசாதனைகளை மேலும் விரிவாக விளக்கி நீதி வழங்க முடியிவல்லை என்னால் - அந்த அளவிற்கு வாய்ப்புகள் குறைவுகுறிப்பிட்ட நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்உரையை நிறைவு செய்கிறேன்எனவேதான்நீங்கள் இந்த அளவிற்குப் பொறு மையாக இருந்து கேட்டதற்கு நன்றி.

வேறு வேறு வாய்ப்புகள் கிடைக்குமேயானால்விரிவாக மற்றொரு வாய்ப்பிலும் பேசுவோம் என்று சொல்லிவாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறிஇந்த வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாறு.

வெறும் படமாக இல்லை - பாடமாகக் காட்டக் கூடியது

இந்த வரலாறு - யாரும்எப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்களும் ஏற்படலாம் - அந்த ஆட்சி மாற்றங் கள் காட்சி மாற்றங்களாக இருக்கலாம்ஆனால்சமூகநீதி என்பது இருக்கிறதேஅது என்றைக்கும் அந்தக் கொடி இறக்கப்பட முடியாத கொடி - தலைதாழாமல்  பறந்துகொண்டிருக்கின்ற கொடி - இன்னுங்கேட்டால்மற்றவர்களுக்கு இது வெறும் படமாக இல்லை - பாடமாகக் காட்டக் கூடியது என்ற அளவில்மிகப்பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்அதற்கு முதலமைச்சர்கள் தத்துவ ரீதியாக இங்கே பயன்பட்டு இருக்கிறார்கள்.

எனவேஆட்சி என்பது அவர்களுக்காக அல்ல -

ஆட்சி என்பது வெறும் காட்சிக்காக அல்ல -

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினுடைய மீட்சிக்காக - என்பதை இந்தச் சமூகநீதிக் கொடி ஏற்றப்படுவதன்மூலமாகக் காட்டியிருக்கிறார்கள் - திராவிடர் இயக்கத்தினரான தி,,, திமுகவினர் மற்றும் ஆட்சி வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால்.

அதைத்தான் இந்த நேரத்தில் சொல்லியிருக்கிறோம்அதனை நினைவூட்டுவது - அந்த வரலாற்றுச் சுவடுகளை ஓரளவிற்கு உங்களுக்குக் காட்டுவதற்கு இந்தக் குறுகிய நேரத்தில் வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி!

வாழ்க பெரியார்!

வளர்க சமூகநீதி!

நன்றிவணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.