செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

ஒப்பற்ற சுயசிந்தனையாளர் பெரியார்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா?

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

வைக்கத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தந்தை பெரியாரின் சிலைத் திறப்பு விழா

திங்கள், 8 பிப்ரவரி, 2021

அரிமா நோக்கு - நீதிக்கட்சியின் விளைவுகள்

அரிமா நோக்கு

சு.அறிவுக்கரசு

1920இல் நீதிக்கட்சி ஆட்சி. அன்றைய சட்டப்படி ஆங்கிலேயரும் “இந்தியரும்“ கலந்து நடத்திய ஆட்சி. இரட்டை ஆட்சி. ஆங்கிலேய அமைச்சர்களாக சர்.லயனல் டேவிட்சன், சி.ஜி.தாட்ஹன்டர், முகமது ஹபி புல்லா சாகிப், சீனிவாச அய்யங்கார் ஆகியோர். இந்திய அமைச்சர்களாக திவான்பகதூர் அ.சுப்புராயலு ரெட்டி யார், பனகல் ராமராயர் நிங்கார், கே.வி.ரெட்டி நாயுடு ஆகியோர். முக்கியத் துறைகள் ஆங்கிலேயரிடம் பிற துறைகள் இந்தியர்களிடம்.

அன்றைய சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் படிக்க வாய்ப்பில்லை. செம்மொழிகள் என்று சொல்லி, அரபி, பாரசீகம், சமஸ்கிருதம் மட்டுமே படிக்கலாம். இந்தச் செம்மொழி பட்டியலில் தமிழ் இடம்பெறவில்லை. ஆசிரியர்களாகவும், அதிகாரிகளாகவும் பார்ப்பனர் களே நிறைந்து இருந்ததால் எங்கேயும் சமஸ்கிருதமே. அதைப் படித்தவன் தான் படிப்பாளியாக கருதப்பட்ட நிலை. அதனால் அதிகாரிகளாகவும் அவாளே. இதை மாற்றிடத் தமிழர்களான வழக்குரைஞர் கே.சண்முகம் (தஞ்சாவூர்) என்பார் தீர்மானம் முன்மொழிந்தார். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் வழிமொழிந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதால் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பார்ப்பனர் அல்லாத ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அல்லது அய்ரோப்பியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் தீர்மானம். சட்டமன்ற மேலவையில் 28.12.1918இல் நீதிக்கட்சியின் உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானம். இன எதிரியான பார்ப்பனரை விட ஆங்கி லேயரே மேல் என்பதே நிலைப்பாடு. இந்தியர் என்கிற போர்வையில் பார்ப்பனரின் நரித்தனத்திற்கு எதிர்ப்பான நிலைப்பாடு.

இன்று போலவே, 1919ஆம் ஆண்டிலும் பொல்லாத ஊராக இருந்துள்ளது பொள்ளாச்சி. அந்த ஊர்ப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவி ஒருவர் சேர்க்கப்பட்டதால், ஜாதி இந்துக்கள் எனப்படும் பிற் படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவியர் 46 பேர்கள் பள்ளியை விட்டு விலகி விட்டனர் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிக்கை தந்துள்ளார். மற்ற மாவட்டங்களில் ஜாதி வெறி அவ்வளவு மோசம் இல்லை எனலாம். வட ஆர்க்காடு மாவட்ட மாணவர்கள் 289 இல் 17 பேர் ஆதிதிராவிடர்கள். தென் ஆற்காட்டில் 332 பேரில் 14 பேர். செங்கல்பட்டில் 305 பேரில் மூன்றே பேர் தாழ்த்தப்பட்டோர். கோவையில் 333 பேரில் 43 பேர் தாழ்த்தப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் 159 மாண வர்களில் 6 பேர் மட்டுமே ஆதிதிராவிடர். தலைநகர் சென்னையில் 272 மாணவர்களில் 50 பேர் தாழ்த்தப் பட்டோர். சேலத்தில் 311 பேர்களில் 12 பேர் தாழ்த்தப் பட்டவர்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் 477 மாணவர் களில் 19 பேர் மட்டுமே ஆதிதிராவிடர்.

நெல்லை மாவட்டத்தில் 216 மாணவர்களுள் 22 பேர் தாழ்த்தப்பட்டோர். திருச்சி மாவட்டத்தில் 368 மாண வர்களில் 30 பேர் மட்டுமே ஆதிதிராவிடர் (மதுரை மாவட்ட புள்ளிவிவரம் இல்லை) மக்கள்தொகையில் 15 விழுக்காட்டுக்கு மேல் இருந்தோரில் பள்ளிப்படிப்பில் சேர்ந்தோர் 7.5% மட்டுமே. ஆந்திரப் பகுதி மாணவர்கள் அதிகமானதால் இந்த விகிதாச்சார உயர்வு  ஒப்பீட்ட ளவில் தமிழ்நாட்டுப் பகுதி, பின்தங்கியே இருந்துள்ளது.

ஜாதியைக் காரணம் காட்டி, பள்ளிகளில் அனுமதிக்க மறுக்கக் கூடாது என்று ஆங்கிலேய அரசு 1863 ஆம் ஆண்டிலேயே கடும் உத்தரவு பிறப்பித்திருந்தும் இந்நிலை. இல்லாவிட்டால் எந்நிலை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

பெரும்பாலும் பார்ப்பனச் சேரிகளில் பள்ளிகள் இருந்தன. சத்திரங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் இருந்தன. இம்மாதிரி இடங்களில் புழங்குவதற்கும் புகு வதற்கும் ஆதிதிராவிடர் தடுக்கப்பட்ட நிலை. தீண் டாமை எனும் இந்து மதத்திற்கே உரிய கொடுமை நிலவியதால் கல்வி மறுக்கப்பட்ட நிலை. மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8157 என்றிருந்தபோது, ஆதிதிராவிட மாணவர்கள் 609 மட்டுமே என்பது தீண்டாமைக் கொடுமையை விளக்கிக் காட்டுகிறது.

கட்டாயக்கல்வி, இலவசக் கல்வி இவை இரண்டும் நீதிக்கட்சியின் இலட்சியங்கள் என்பதை பார்ப்பனரல்லா தார் கொள்கைப் பிரகடனம் 1916இல் வெளியிட்டபோதே அறிவித்தது நீதிக்கட்சி. கோவையில் நடந்த பார்ப்பன ரல்லாதார் மாநாட்டில் எல்லா நகராட்சிப் பகுதிகளிலும் கட்டாயமாகத் தொடக்கக்கல்வி கற்பிக்கப்பட வேண்டு மென தீர்மானம் போடப்பட்டது. (ஆண்டு 1917), தாழ்த் தப்பட்டோர் என வர்ணாசிரம (அ) தர்மம் வகைப்படுத்தி யுள்ள ஜாதியினருக்கு, சமூக, பொருளியல், அரசியல் துறைகளில் எல்லா வகை வாய்ப்புகளையும் வழங்கி, சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டி 1921 இல் சென்னை யில் நடத்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது பார்ப்பனரல்லாதார் இயக்கம்.

இதையெல்லாம் அறியாத மாதிரி பார்ப்பன கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்தி தான் எழுதிய ஒரு நூலில் நீதிக்கட்சியைக் குற்றம்சாட்டி எழுதினார். இந்நூலுக்கு ஆசிரியர் வீரமணி அவர்கள் ஆணித்தரமான தரவுக ளுடன் மறுப்பு தெரிவித்திருந்தார். தாழ்த்தப்பட்டோரின் “பறையன்” பட்டம் போகாமல் சூத்திரப் பட்டத்தை ஒழிக்க முடியாது என்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் கூறினார் தந்தை பெரியார். பறையன் என்பதை பறை அடிப்பதால் தொழில் பெயராக வைத்து கேவலப்படுத்தியது பார்ப்பனியம். ஆனால் தாசி மகன் எனப் பொருள்படும் சூத்திரன் என்ற பெயர்தான் மகா கேவலமானது என்று எடுத்து கூறினார் பெரியார்.

 சொன்னதைச் செய்தது நீதிக்கட்சி. மொத்தம் இருந்த 20 நகராட்சிகளுள் 18 நகராட்சிகளில் கட்டாய இலவசக் கல்வி வழங்கப்பட்டது. மீனவர் இன மாணவர்கள் 3000 பேருக்கும் மாணவியர் 1500 பேருக்கும் பள்ளிக்கல்வி அளிக்கப்பட்டது. நீதிக்கட்சித் தலைவரான தியாகராயர் சென்னை மாநகராட்சியின் தலைவராக (மேயர் அப்படித்தான் அழைக்கப்பட்டார் அப்போது) இருந்த போது 1920இல் பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்கி ஏழை மாணாக்கர்களை ஊக்கப்படுத்திக் கல்வி கற்க செய்தார். பெண்களுக்கும் கட்டாயக்கல்வி அளித் தது நீதிக்கட்சி ஆட்சி.

பார்ப்பன வர்ண முறைப்படி, பிறவியிலேயே தொழி லாளர்களாக ஆக்கப்பட்ட சூத்திர, பஞ்சம ஜாதியினரை முன்னேற்றுவதற்காகத் தொழிலாளர் துறை (லேபர் டிபார்ட்மென்ட்) எனத் தனித் துறையே உருவாக்கப் பட்டது. லேபர் பள்ளிகள் தொடங்கப்பட்டு தாழ்த்தப்பட்ட ஜாதி மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

1927 இறுதியில் 10 ஆயிரத்து 335 லேபர் பள்ளிகள் இருந்தன. ஆட்சிக்கு வந்து, ஏழு ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட சாதனை. இரட்டை ஆட்சி முறையில் கல்வி தேர்ந்தெடுக்கப் பட்டோர் கைகளில். அதனால் நீதிக்கட்சி சாதித்தது.

தாழ்த்தப்பட்டோர் நிலமற்ற ஏழைகள். வேளாண் தொழிலாளர்கள். உரிமையாளர் இன்றி தரிசாக இருந்த நிலப்பரப்பில் பஞ்சமர்க்கு மட்டுமே பட்டா போட்டுத் தரப்பட வேண்டும் என்று ஆங்கிலேயர் ஆட்சியில் 1919இல் ஒதுக்கப்பட்ட பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் என்று புள்ளிவிபரம் உள்ளது. இதில் 1377 ஏக்கர் மட்டுமே ஒப்படைப்பு செய்து தரப்பட்டது. 1919 வரை நீதிக்கட்சி ஆட்சி முடிந்தபோது 1935 வரையில் பெரும்பாலான பரப்பளவு தாழ்த்தப்பட்டோருக்கு தர்காஸ்து செய்து தரப்பட்டது.

தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, சேலம், கோவை, திருச்சி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டது. அந்த நிலங்களைப் பெற்ற ஆதிதிராவிடர்களிடம் நிலங்கள் உள்ளனவா? கேள்விக்குறிதான். நிலம் அவர்களிடம் இல்லை என்பதே உண்மை. எப்படிக் கைமாறின? விடை தெரியாத கேள்வி. இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணி எது? ஜாதி எந்த மதத்திலும் இல்லாத ஜாதி. இந்து மதம் விட்டுப் போனாலும் தொடரும் ஜாதி. அது ஒழிக்கப்பட வேண்டும்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் போராட்ட வெற்றியின் ஆதார சுருதி

வியாழன், 4 பிப்ரவரி, 2021

இராவண காவியமும் கம்ப இராமாயணமும் - ஓர் ஒப்பீடு