திங்கள், 27 செப்டம்பர், 2021

முதல் பெண்கள் மாநாடு - பெரியார் பட்டம்

119.) திராவிடம் அறிவோம்

13.11.1938 ல் தமிழக வரலாற்றில் முதன் முதலாக நடை பெற்ற பெண்கள் மாநாடு பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை பெத்துநாயக்கன் பேட்டையிலிருந்து மாபெரும் மகளிர் ஊர்வலம் அதில் கலந்து கொண்ட அத்தனை பேர்களின் கைகளிலும் தமில்கொடி.

பெண்களுக்கு ஏற்பட்ட எழுச்சி கண்ட பூரிப்போடு, பெரியாரும் அந்த ஊர்வலத்தில் ஒருவராக போகிறார். ஊர்வலம் ஒற்றை வாடை நாடக அரங்கை அடைகிறது.

ஞானாம்பாள் சிவராஜ் தமிழ் கொடியை ஏற்றுகிறார். நாராயணி அம்மையார் மாநாட்டை திறந்து வைத்து உரையாற்றுகிறார். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை சொற்பொலிவாற்றுகிறார். அன்னை நாகம்மையார் படத்தை - பார்வதி அம்மையார் திறந்து வைக்கிறார்.

தீர்மானம். இந்தியாவில் இதுவரை தோன்றிய  சீர்திருத்தத் தலைவர்களால் செய்ய இயலாமற்போன வேலைகளை  - நம் மாபெரும் தலைவர் ஈ.வே,ரா. அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில், அவருக்கு மேலாகவும்,  ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவர் இல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், செயலிலும் வழங்கும்போது - பெரியார் என்ற சிறப்புப் பெயரிலிலேயே வழங்கவேண்டும் என்றது அந்தத் தீர்மானம்.

தன்மானம் உள்ள தமிழர்கள் அத்தனை பேருக்கும் பெரியார்.

மறுநாள் 14.11.1938 மொழிப்போர் மறத்திகளின் மறியல் போராட்டம் தொடர்ந்தது. டாக்டர் தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், பட்டம்மாள் (பாவலர் பாலசுந்தரம் துணைவியார்) மலர் முகத்தம்மாள் (புலவர் மயிலை முத்துகுமாரசாமியின் தங்கை) சீதம்மாள்( டாக்டர் தருமாம்பாளின் மருமகள்) மூன்று வயது மகள் மங்கையர் கரசி, ஒருவயது குழந்தை நச்சினார்க்கினியன் இருவருடன்) உண்ணாமலை (முன்னாள் திராவிடன் ஆசிரியர் புலவர் அருணகிரி நாதர் துணைவியார்) ஒரு வயது குழந்தை தமிழரசியுடன் புவனேஸ்வரி (என்,வி,நடராசன் துணைவியார்) சோமசுந்தரம் என்ற இரண்டு வயது குழந்தையுடன் (பின் நாளில் என்,வி,என், சோமு என்றபெயருடன் நடுவன் அமைச்சராக இருந்து இறந்தவர்). சிவசங்கரி, லோகநாயகி இரண்டு வாயது மகளுடன், சரோஜினி தேவசுந்தரம் இரண்டு வாயது மகள் மார்த்தாண்டனுடன், கலைமகள் சிற்சபை(டாக்டார் தருமாம்பாளின் மருமகள்) இராசாம்மாள் , பட்டம்மாள் பாலசுந்தரம், குழந்தை ஆழங்காட்டாலுடன், ஞானாம்பாள் மறை திருநாவுக்கரசு (மறைமலை அடிகளாரின் மருமகள்) குழந்தை சிறை அஞ்சானுடன் ராசம்மாள், சரோசினி மறை மாணிக்கவாசகம், குழந்தை மறைக்காடானுடன் குருவம்மாள், நாச்சியம்மாள் உள்பட மொழிப்போரில் சிறை சென்ற மறத்திகளின் எண்ணிக்கை 73, அவர்களுடன் சிறை சென்ற குழந்தைகளின் எண்ணிக்கை 32.

மொழியை காக்க போராடி சிறைசென்றது திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் அன்று முதல் இன்று வரை தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் குரல் கொடுப்பது திராவிட தமிழர்கள் தான், தமிழ் தேசியம் பேசுபவர்களோ, நாங்கள் உ,வே.சா, பரம்பரை என்று சொல்லி தம்பட்டம் அடிக்கும் பார்ப்பனர்களோ அல்ல.

இன்று பெண்கள் வெளியில் வர அச்சப்படும் இந்தகாலத்தில், 1938 லே பெண்கள் குடுபத்துடன் தன் குழந்தைகளுடன் சிறை செல்கிறார்கள் என்றால் பெண்களுக்கு ஏற்பட்டஇந்த துணிச்சல் பெரியார் ஏற்படுத்திய விழிப்புனர்வாள் ஏற்பட்டது, 100 அடியில் சிலை வைப்பதும், பெரியார் உலகம் அமைப்பதும் இளைஞர்களுக்கு சமூக நீதியை கடத்தும். பெரியார் என்றால் மனிதனை நினை, சாதியை மற என்பதுதான் சமூக நீதி.

அப்பாவுபுவனேஸ்வரி
26.9.2021. 

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-17

  அறநிலையத்துறைக்குத் தனி வாரியம் கூடாது தற்போதைய நிலையே தொடரட்டும்!

01.10.1991 நாளிட்ட விடுதலையில் பொதுச் செயலாளர் அறிக்கை

கோயில் உபரி நிதிகளை மக்கள் நலப் பணிகளுக்குச் செலவு செய்வதே கால மாற்றத்தையொட்டிய அறப் பணிகளாகும் என்பதே அதன் முக்கிய மாற்றம் ஆகும்.

எடுத்துக்காட்டாகபழைய காலத்தில் பிராமண போஜனம்  (Feeding Brahmins) என்பது ஒரு முக்கிய தர்மமாக ஆக்கப்பட்டது.அதில்கூட ஏழைப் பார்ப்பனர்களுக்கு என்றுதான் எல்லா தர்ம கட்டளைகளும் குறிப்பிட்டன.

கர்ப்பக்கிரகத்திற்குள் பிற ஜாதியார் நுழைந்து பூஜை செய்துவிட்டால் அதற்குப் பரிகார நடவடிக்கைகளில் ஒன்று பிராமண போஜனம் என்று வைகானச ஆகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இப்போது அறப்பணிகள் என்று சொல்லும்போது அக்கருத்து எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக ஆகிவிட்டதுஅதேபோல்தான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை தோற்றுவிக்கப்பட்டு கோயில்களின் உபரி நிதிகள் மக்கள் நல அறப் பணிகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது.

அறங்காவலரின் பணி என்ன?

அத்துடன் கோயில் அறங்காவலர்களின் பணி என்பது அர்ச்சகர்களின் பூஜைபுனஸ்காரம் போன்ற பணி அல்லதணிக்கை அதிகாரிகளின் பணி போன்றதாகும்.

பக்தியை வளர்க்கும் பக்தவத்சலம்!

அதற்குப் பிறகு, 1947க்குப் பின் வந்த காங்கிரஸ் ஆட்சிகள் மெல்ல இந்த நிலையிலிருந்து மாறி கோயில்களுக்கு "ஜீரணோத்தாரண பூரண கும்பாபிஷேகம்செய்து வைத்து சாயமடித்துத் திருப்பணிகள் செய்வதற்கே அந்த நிதிகளைப் பெரிதும் பயன்படுத்த முனைந்தனகுறிப்பாக பக்தவத்சலம் போன்றவர்கள் அறநிலைய அமைச்சர்களாக ஆனநிலையில் பக்தியை வளர்க்கும் பக்தவத்சலம் என்று பார்ப்பன ஏடுகள் தலையங்கம் தீட்டி பாராட்டிடும் அளவுக்குப் பார்ப்பன சடகோபத்துக்கு ஆளான திசை திருப்பம் ஏற்பட்டது!

1967இல் தி.மு.ஆட்சிஅறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஏற்பட்டபோது அறநிலைய பாதுகாப்புத் துறையின் அமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை நியமித்தார்அவர் சிதம்பரம் நடராசன் கோயிலுக்கு அறநிலையப் பாதுகாப்பமைச்சர் என்ற முறையில் சென்றபோதுவழங்கப்பட்ட விபூதியைக் கூட நெற்றியில் பூசிக்கொள்ளாமல்பக்கத்தில் இருந்தவரிடம் தந்து விட்டார்.இதை அவர் வீசி எறிந்தார் என்று கூறிக்கூடத் தவறாகப் பிரச்சாரம் செய்தார்கள்அன்று மாலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேசிய நாவலர்அறநிலையப் பாதுகாப்பமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் தில்லை நடராசர் கோயிலுக்குச் சென்றேனே தவிரதனிப்பட்ட நெடுஞ்செழியனாக அல்லஅறநிலையப் பாதுகாப்பமைச்சர் வேலையும்கூட 8 மரக்கால் சமைத்துப் போடவேண்டும் என்று சொல்லப்பட்டால் அதில் 6 மரக்கால் போட்டுவிட்டு மீதி உள்ள 2 மரக் கால் வேறுவழியில் எங்காவது போகிறதா என்று பார்த்து கண்காணித்து ஆட்சி புரிவதுதான் என்று பேசினார்.

இது விடுதலையில் வெளிவந்தவுடன் இதைப் படித்துவிட்டு தந்தை பெரியார் அவர்கள் பலே நெடுஞ்செழியன் பலே பலே என்று ஓர் அறிக்கை எழுதினார்நீண்டதொரு தலையங்கமும் எழுதினார்ஈரோட்டில் கோயில் தேவஸ்தான பிரசிடெண்டாகதான் இருந்தபோது எப்படி எல்லாம் கோயில் வருமானத்தை அதில் உள்ள ஓட்டைகளைத் தடுத்துசேமித்து பற்றாக்குறையை உபரியாக்கினேன் என்று எழுதி விளக்கியிருந்தார்கள்.

.தி.மு.ஆட்சியில் கொஞ்சக் காலத்திற்கு அறநிலையப் பாதுகாப்புத் துறை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்அவர்களது பொறுப்பில் இருந்ததுஅதற்குப் பிறகு ஆர்.எம்.வீரப்பன் அவர்களது பொறுப்பில் சென்றது.

சங்கரமடத் தொடர்பின் விளைவு

அது முதற்கொண்டு காஞ்சி சங்கரமடத்தின் கருத்திற்கேற்ப செயல்படும் தன்மை ஏற்பட்டதன் தொடர் விளைவு - இன்று கோயில் பராமரிப்பு நிதியைஇன்றுள்ள முதலமைச்சர் அவர்கள் துவக்கியுள்ளதன் தொடர்ச்சிஇப்போது வேத ஆகமக் கல்லூரியை ஒரு கோடி ரூபாய் செலவழித்து ஏற்படுத்திசமஸ்கிருதத்தில் உள்ளதைத் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றெல்லாம் கூறப்படும் நிலைக்குச் சென்றுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் வேதாகமப் பள்ளிகள்

சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறநிலையப் பாதுகாப்பு மானியத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் (1991-1992) வேத ஆகம பாடசாலைகள் - 4 ஏற்கெனவே நடந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்நாட்டுக் கோயில்களில் அர்ச்சகர் நியமன முறைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்த ஜஸ்டிஸ் மகராஜன் குழுவின் அறிக்கையில் - தமிழ்நாட்டில் சில பெருங்கோயில்கள் சார்பில் வேத ஆகம பாடசாலைகள் நடைபெறுகின்றன என்றுகோயில் நிதி உதவியினால்அறங்காவலர்களின் மேற்பார்வையில் அவை நடைபெறுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நடைபெற்ற வேத ஆகம பாடசாலைகள் 6 என்றும்ஒவ்வொரு வேத ஆகம பாடசாலையிலும் பயிற்சிக் காலம் 5 ஆண்டுஆனால்அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இருவரே உள்ளனர்ஒருவர் வேதத்திற்குஇன்னொருவர் ஆகமத்திற்கு  சில பாடசாலைகளில் தேவாரமும் கற்பிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளர்ச்சிக்கு வழி வகுக்கும்!

இதனையொட்டி வேதாகமக் கல்லூரிக்கு ரூ.1 கோடி என்று ஒதுக்கி அதன்மூலம் சமஸ்கிருத மயமாக்கி பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்த ஒரு ஜாதி அர்ச்சகர்களையே பயிற்றுவித்தல் என்ற நிலைக்கு வித்திடுவதாக இருப்பின்அது நாட்டில் நிச்சயம் பெரும் புயலைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லைநமது வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும்கிளர்ச்சிக்கும் வழி வகுக்கும்!

அதுபற்றிய தமிழ்நாடு அரசின் நிலை மிகவும் தெளிவாக்கப்படுதல் அவசர அவசியமாகும்!

ஜஸ்டிஸ் மகராஜன் குழு அறிக்கையின் பரிந்துரை

ஜாதி வேறுபாடு இன்றி அனைத்து ஜாதியிலிருந்து அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதும் மிகவும் இன்றியமையாதது மட்டுமல்லஜஸ்டிஸ் மகராஜன் குழு பரிந்துரையில்தமிழ்நாட்டுக் கோயில்களின் பெரும் எண்ணிக்கையையும் கருதிசில ஆகமப் பயிற்சிக் கல்லூரிகளையேனும் அறநிலையத் துறை பொறுப்பேற்று நடத்திவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதனைச் செயல்படுத்த ஏற்கெனவே இருந்த .தி.மு.அரசு சட்டப் பேரவையில்இதே அறநிலையப் பாதுகாப்புத் துறையில் மானியக் கோரிக்கையின்போது பழனியில் ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேதங்களைப் பரப்புவதற்கு என்று ரூ.1 கோடி ஒதுக்குவோம் என்பதை மாற்றிஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகஆகமங்கள் சொல்லிக் கொடுக்க மகராஜன் குழு பரிந்துரைத்தபடிகுறைந்தபட்சம் 6 இடங்களில் அமைப்பது சரியாக இருக்கும்ஆகமக் கல்விப்படி பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமித்தால்அது உச்சநீதிமன்றத்தின் பழைய தீர்ப்புப்படி செல்லுபடியாகும்சிலர் எதிர்த்து மீண்டும் அங்கே படையெடுத்தால்கூட!

எனவேதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தற்போது அறிவித்துள்ள சில அறிவிப்புகளை மாற்றிஒரு பெரும் சமுதாய மாற்றத்திற்கு இந்து அறநிலையத் துறையும் பயன்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

பார்ப்பன ஆதிக்கத்திற்கு வித்திடவே இந்த வேத ஆகமக் கல்லூரி என்ற நியாயமான அய்யப்பாட்டினை அறவே நீக்கிடவும் இந்த மாற்று ஏற்பாடு உதவும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும்இந்து அறநிலையத் துறையை அரசின் கீழ் இல்லாமல் தனியே ஒரு அமைப்பாக ஆக்குவது என்ற முடிவானதுஅதன் துவக்க அடிப்படையையே மாற்றி அமைக்கும் மிகப்பெரிய கேடான செயலாகிவிடும்அதற்காக மாநில அரசேகூட பிறகு வருந்தக்கூடிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கவும் விரும்புகிறோம்.

கி.வீரமணி,

பொதுச் செயலாளர்,  திராவிடர் கழகம்,

விடுதலை 01.10.1991

அர்ச்சகர் பிரச்சினையும் - வேதாகமக் கல்லூரியும் என்னும் பொருள் பற்றிய சிறப்புப் பொதுக்கூட்டம் 02.11.1991 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தென்மாநில சமூக நீதிக்குழு அமைப்பின் தலைவரும் தமிழ்நாடு மூதறிஞர்கள் குழு தலைவருமான நீதிபதி பி.வேணுகோபால் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.

அடுத்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது பற்றியும்வேதாகமக் கல்லூரி பற்றியும் சிறப்புரையாற்றினார்.

09.04.1992 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் மீது உரையாற்றிய தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

இந்தக் கல்லூரியில் வேதங்கள்ஆகம சாஸ்திரங்கள்உபநிடதங்கள்பன்னிரு திருமறைகள்மற்றும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் ஆகிய வற்றைக் கற்பிப்பதற்கான பாடத் திட்டங்களையும்பிரிவுகளையும் உருவாக்குவது பற்றி 02.03.1992 அன்று நடைபெற்ற கோயில் நிர்வாக வாரியக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதுகுறித்து கருத்துகளையும்ஆலோசனை களையும் வழங்குமாறு வாரிய உறுப்பினர்களும்சமயச் சான்றோர்களும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க சில பெரியவர்களும் முன் வந்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்இந்தக் கல்லூரியை அமைதி சூழ்ந்த இடத்தில்ஆன்மீக உணர்வுக்குத் தகுந்த இயற்கைச் சூழலில் அமைத்திட வேண்டும் என்றும் அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இடம் ஆழ்ந்த தியானத்திற்கும்வழிபாட்டிற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த அடிப்படையில் இதற்குத் தேவைப்படும் 40 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் தற்போது பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை இந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்படும்இடஒதுக்கீட்டு முறை அதாவது ஆதிதிராவிடர்களுக்கு 18 விழுக்காடு இடங்களும்பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு இடங்களும்பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு இடங்களும்மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இடங்களும் ஒதுக்கப்படும் என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

1991-1996 காலகட்டத்தில் ...தி.மு.ஆட்சியில் இருந்தபோது, 1996-இல் திருச்சி மாவட்டம் கம்பரசன்பேட்டையில்அர்ச்சகர் பயிற்றி தொடங்கப்பட்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

(தினமணி - 24.01.1996)

சனி, 11 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-16

 

வேதாகமக் கல்லூரியில் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

நேற்றைய தொடர்ச்சி...

பகுத்தறிவாளர் கழகத் தீர்மானம்

14.12.1991 அன்று காரைக்குடியில் நடைபெற்ற மாநில பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

தமிழ்நாடு அரசு ஏற்படுத்த இருக்கும் வேதாகமக் கல்லூரியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக வாய்ப்பு அளிக்கும் வகையில் இடஒதுக்கீட்டுப்படி சேர்க்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவித்துள்ளபடிஅந்த நோக்கம் நிறைவேற்றப்பட மட்டுமே அக்கல்லூரி பயன்படுத்தப்பட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

வேதாகமக் கல்லூரியில் இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சார்பில் துவக்கப்பட இருக்கும் வேதாகமக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களும் சேர்க்கப்பட்டுஅர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு கோயில்களில் அவர்கள் அர்ச்சகர்களாக ஆக்கிட வழிவகுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

...தி.மு..-வின் 20ஆவது ஆண்டு துவக்க விழா சென்னை ஹேமமாலினி திருமண மண்டபத்தில் நடைபெற்றதுஅவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரும்...தி.மு.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாடு அரசு சார்பில் வேதாகமக் கல்லூரி திறக்கப்பட இருக்கிறதுஇதைப்பற்றிய பல பிரச்சினைகளும் எழுப்பப்பட்டுள்ளனஅதைப்பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன்அரசால் திறக்கப்பட இருக்கும் வேதாகமக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களும்இடஒதுக்கீடு கொள்கைப்படி 18 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு கோயில்களில் அர்ச்சகராக ஆக்கப்படுவார்கள்இதன்மூலம் பெரியார்அண்ணாவின் கனவுகள் நனவாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

(விடுதலை - 17.10.1991)

முதலமைச்சரின் முடிவுக்குப்

பொதுச் செயலாளர் பாராட்டு!

தமிழ்நாடு அரசின் சார்பாக புதிதாகத் துவக்க இருக்கும் வேத ஆகமக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு அடிப்படையில் 18 சதவிகிதம் ஆதி திராவிடர்களையும் சேர்த்து அவர்கள் அர்ச்சகர்களாகதக்க பயிற்சி அளிக்கப்படும்இது தந்தை பெரியார்அறிஞர் அண்ணா ஆகியவர்களது விருப்பங்களைப் பூர்த்தி செய்வதாக அமையும் என்றும்அவ்வாறு துவக்கப்படப் போகும் கல்லூரிக்கு ஆகும் ஒரு கோடி ரூபாய் செலவுஅரசு நிதியிலிருந்து செலவழிக்கப்படாமல்ஆலயங்களின் உபரி (வருவாய்நிதியிலிருந்து எடுத்துச் செய்யப்படும் செலவாக இருக்கும் என்றும், 17.10.1991, 18.10.1991 ஆகிய நாட்களில் - சென்னைநாகை ஆகிய ஊர்களில் இரண்டு நிகழ்ச்சிகளில் உரையாற்றுகையில்   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்!

ஜாதி ஒழிப்பிற்காகவும்சமூக நீதிக்காகவும் தம் வாழ்வினையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள லட்சோப லட்ச பெரியார் தொண்டர்கள் சார்பாகமுதலமைச்சரின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனத்தினை நாம் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்உளப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.

17.09.1991 அன்று சென்னையில் அரசு சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் நாம் எடுத்து வைத்த மூன்று கோரிக்கைகளில் ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வாய்ப்பளிக்கும் இந்த அறிவிப்பும்ஏற்பாடும் முக்கிய கோரிக்கையாகும்.

அத்துடன் சென்னை விடுதலை 30.09.1991, 01.10.1991 ஆகிய தேதிகளில் நாம் வேத ஆகமக் கல்லூரி பற்றி எழுதிய அறிக்கையிலும், 14.10.1991 அன்று நெய்வேலியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்திலும் இதனை வற்புறுத்தித் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியார் அன்றே வலியுறுத்தினார்

நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்பகோயில் கருவறைக்குள் (கர்ப்பக்கிரகம்நுழைய ஜாதி பாகுபாடின்றிஅனைவருக்கும் உரிமை என்பதுஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வாய்ப்பு அளிப்பதன் மூலமே ஏற்பட முடியும் என்று கூறித்தான்அன்று ஆட்சியிலிருந்த - மதிப்பிற்குரிய கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.அரசினை வற்புறுத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக 1970ஆம் ஆண்டு இத்திருத்தம் சட்டமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.ஆட்சியில் நிறைவேறியதுஇதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றனர்.

ஆபரேஷன் வெற்றிஆனால் நோயாளி செத்தார் என்பது போல அரசியல் சட்டத்தின் 25, 26ஆவது விதிகளுக்கு முரண் அல்லசட்டம் செல்லும் என்று கூறிநடைமுறைப்படுத்துவதற்கு குறுக்குச் சால் ஓட்டினார்கள்அய்யா மறைவுக்குப்பின் அன்னை மணியம்மையார் தலைமையில் கழகம் தொடர்ந்து போராடி வந்ததுதந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவினை மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்த ...தி.மு.அரசு அமைத்த குழுவின் தீர்மானத்திற்கும்நமது வற்புறுத்தலுக்கும் ஏற்பஜஸ்டிஸ் திரு.மகராஜன் அவர்கள் தலைமையில்திருமுருக கிருபானந்த வாரியார்பல குருக்கள்இந்து மத அபிமானிகள்ஆஸ்திக சிரோன்மணிகள் ஆகிய 12 பேர்களையும்இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை ஆணையரையும் உள்ளடக்கி ஒரு வல்லுநர் குழு போடப்பட்டுஅது அதன் அறிக்கையை 1982ஆம் ஆண்டு தந்ததுஅதன்படி அர்ச்சகர்களை ஜாதி வேறுபாடின்றி தேர்ந்து எடுத்து பயிற்சி அளிக்க ஆகமக் கல்லூரி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

அரசு விழாவில் நமது கோரிக்கையும் - முதலமைச்சரின் பதிலும்

இதனை நாம் முதலமைச்சர் நடத்திய அரசு விழாவில் சுட்டிக்காட்டியதோடுதந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் 95ஆம் வயதில்கூட - இதற்காகத்தான் மிகப் பெரிய அளவில் போராடுவதற்கும் தயாரானார் என்று குறிப்பிட்டோம்.

முதலமைச்சர் அவரது சிறப்புரையில் இதற்கு பதிலளித்துமண்டல் கமிஷன் 50 சதவிகித சட்டமன்றத் தீர்மானம் உடன் கொண்டுவரப்படும் என்று கூறிவிட்டுநாம் வைத்த மற்ற இரண்டு கோரிக்கைகளைப் பற்றியும்குறிப்பிடும்பொழுது-

பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள்சிந்தனைகள்பாடநூல்களில் இடம் பெறுவது பற்றியும்சகோதரர் வீரமணி விடுத்த மற்ற கோரிக்கைகள் பற்றியும் அரசு பரிசீலித்து விரைவில் நல்ல முடிவுகள் அறிவிக்கப்படும்அதிகாரபூர்வ  ஏடான தமிழரசு - (மலர்-22-இதழ்-7) இதழ் 01.10.1991 - பக்கம் - 12)

இதற்குமுன் ...தி.மு.அரசின் இதற்கான முயற்சிகள் அறிவிக்கப்பட்டனஆனால்செயல்படுத்துவதற்குள் அரசியல் சூழ்நிலைகள் மாறினஅரசுகளும் மாறின.

அதற்குப் பிறகு இப்போது இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனை அறிவித்திருப்பதன் மூலம்அய்யாவின் இறுதி நாள் விருப்பத்தினை செயலாக்க முன் வந்துள்ளார்.அதற்காக நாம் நமது ஆழ்ந்த நன்றியை முதலமைச்சருக்கும்அவரது அரசுக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆதங்கம்

அய்யா அவர்கள் மறைந்தவுடன் அவர்களுக்கு அரசு மரியாதை அளித்து அவர்களது உடலை அடக்கம் செய்தபோதுகலைஞர் அவர்கள்அய்யா அவர்களை அரசு மரியாதையோடு புதைக்கிறோம் என்றாலும்கூட அவர் நெஞ்சில் இருக்கும் முள்ளை எடுத்துப் புதைக்க இயலவில்லையே என்று ஆதங்கப்பட்டார்!

இன்று முதலமைச்சர் அவர்கள்அதைச் செம் மையாகச் செய்து நிறைவேற்றுவதன்மூலம்அய்யாவின் உடலில் நெஞ்சில் ஒரு முள்ளாக இருப்பதை அகற்றினார் என்ற நிரந்தர வரலாற்று வரிகளில் இடம் பெற்றவராகிவிடுவார் - இது வரலாற்றுச் சாதனை என்பது உறுதிஅதனை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பெரியாரைத் துணைக் கோடல் என்பது ஆட்சிக்கு எப்போதும் நல்ல இலக்கணம் ஆகும்!

(விடுதலை - 19.10.1991)