திங்கள், 27 செப்டம்பர், 2021

முதல் பெண்கள் மாநாடு - பெரியார் பட்டம்

119.) திராவிடம் அறிவோம்

13.11.1938 ல் தமிழக வரலாற்றில் முதன் முதலாக நடை பெற்ற பெண்கள் மாநாடு பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை பெத்துநாயக்கன் பேட்டையிலிருந்து மாபெரும் மகளிர் ஊர்வலம் அதில் கலந்து கொண்ட அத்தனை பேர்களின் கைகளிலும் தமில்கொடி.

பெண்களுக்கு ஏற்பட்ட எழுச்சி கண்ட பூரிப்போடு, பெரியாரும் அந்த ஊர்வலத்தில் ஒருவராக போகிறார். ஊர்வலம் ஒற்றை வாடை நாடக அரங்கை அடைகிறது.

ஞானாம்பாள் சிவராஜ் தமிழ் கொடியை ஏற்றுகிறார். நாராயணி அம்மையார் மாநாட்டை திறந்து வைத்து உரையாற்றுகிறார். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை சொற்பொலிவாற்றுகிறார். அன்னை நாகம்மையார் படத்தை - பார்வதி அம்மையார் திறந்து வைக்கிறார்.

தீர்மானம். இந்தியாவில் இதுவரை தோன்றிய  சீர்திருத்தத் தலைவர்களால் செய்ய இயலாமற்போன வேலைகளை  - நம் மாபெரும் தலைவர் ஈ.வே,ரா. அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில், அவருக்கு மேலாகவும்,  ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவர் இல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், செயலிலும் வழங்கும்போது - பெரியார் என்ற சிறப்புப் பெயரிலிலேயே வழங்கவேண்டும் என்றது அந்தத் தீர்மானம்.

தன்மானம் உள்ள தமிழர்கள் அத்தனை பேருக்கும் பெரியார்.

மறுநாள் 14.11.1938 மொழிப்போர் மறத்திகளின் மறியல் போராட்டம் தொடர்ந்தது. டாக்டர் தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், பட்டம்மாள் (பாவலர் பாலசுந்தரம் துணைவியார்) மலர் முகத்தம்மாள் (புலவர் மயிலை முத்துகுமாரசாமியின் தங்கை) சீதம்மாள்( டாக்டர் தருமாம்பாளின் மருமகள்) மூன்று வயது மகள் மங்கையர் கரசி, ஒருவயது குழந்தை நச்சினார்க்கினியன் இருவருடன்) உண்ணாமலை (முன்னாள் திராவிடன் ஆசிரியர் புலவர் அருணகிரி நாதர் துணைவியார்) ஒரு வயது குழந்தை தமிழரசியுடன் புவனேஸ்வரி (என்,வி,நடராசன் துணைவியார்) சோமசுந்தரம் என்ற இரண்டு வயது குழந்தையுடன் (பின் நாளில் என்,வி,என், சோமு என்றபெயருடன் நடுவன் அமைச்சராக இருந்து இறந்தவர்). சிவசங்கரி, லோகநாயகி இரண்டு வாயது மகளுடன், சரோஜினி தேவசுந்தரம் இரண்டு வாயது மகள் மார்த்தாண்டனுடன், கலைமகள் சிற்சபை(டாக்டார் தருமாம்பாளின் மருமகள்) இராசாம்மாள் , பட்டம்மாள் பாலசுந்தரம், குழந்தை ஆழங்காட்டாலுடன், ஞானாம்பாள் மறை திருநாவுக்கரசு (மறைமலை அடிகளாரின் மருமகள்) குழந்தை சிறை அஞ்சானுடன் ராசம்மாள், சரோசினி மறை மாணிக்கவாசகம், குழந்தை மறைக்காடானுடன் குருவம்மாள், நாச்சியம்மாள் உள்பட மொழிப்போரில் சிறை சென்ற மறத்திகளின் எண்ணிக்கை 73, அவர்களுடன் சிறை சென்ற குழந்தைகளின் எண்ணிக்கை 32.

மொழியை காக்க போராடி சிறைசென்றது திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் அன்று முதல் இன்று வரை தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் குரல் கொடுப்பது திராவிட தமிழர்கள் தான், தமிழ் தேசியம் பேசுபவர்களோ, நாங்கள் உ,வே.சா, பரம்பரை என்று சொல்லி தம்பட்டம் அடிக்கும் பார்ப்பனர்களோ அல்ல.

இன்று பெண்கள் வெளியில் வர அச்சப்படும் இந்தகாலத்தில், 1938 லே பெண்கள் குடுபத்துடன் தன் குழந்தைகளுடன் சிறை செல்கிறார்கள் என்றால் பெண்களுக்கு ஏற்பட்டஇந்த துணிச்சல் பெரியார் ஏற்படுத்திய விழிப்புனர்வாள் ஏற்பட்டது, 100 அடியில் சிலை வைப்பதும், பெரியார் உலகம் அமைப்பதும் இளைஞர்களுக்கு சமூக நீதியை கடத்தும். பெரியார் என்றால் மனிதனை நினை, சாதியை மற என்பதுதான் சமூக நீதி.

அப்பாவுபுவனேஸ்வரி
26.9.2021. 

1 கருத்து:

  1. Why Casino Site Is So Popular And Where to Play
    And why casino site is so popular and where to play. One of the reasons that 바카라 online casinos are 메리트카지노총판 popular is 카지노사이트 that the casino has a wide

    பதிலளிநீக்கு