புதன், 22 ஆகஸ்ட், 2018

குடை பிடிக்காதே... (1931ல்)

பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் போஸ்ட், தென் சருக்கை கிராமத்தி லிருக்கும் திரு. கெ. பக்கிரிசாமி ஆசாரி என்பவர் கீழே விவரித்தபடி ஒரு கடிதம் எழுதி இருக்கின்றார்: ''நான் சில நாள் ஜலப்பிரதேசம் சென்று வருவது வழக்கம். அதனால் நல்ல உடையும், குடையும், பூட்சும் சதாபோட்டுக் கொள்வது வழக்கமாயிருந்து வருகிறேன். மேற்படி ஊரில் உள்ள ‘பிராமண' வம்சத்தினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து 'டிரஸ்'' செய்து கொள்ளக்கூடாது, குடைபிடிக்கக் கூடாது. பூட்ஸ் போடக்கூடாது, மீறி போட்டுக் கொண்டு தெருவழி வந்தால் பறையனிடம் சொல்லி அடிக்கச் சொல்வேன் என்று சொன்னதன்பேரில் உடனேகும்பகோணம் சப்டிவிஷனல் மேஜிஸ்டிரேட் அவர் களுக்கு மனு செய்திருக்கிறேன்."

- ‘குடிஅரசு' 30.8.1931

- விடுதலை ஞாயிறு மலர், 18.8.!8

திராவிடர் கழக தலைமை செயற்குழுவின் தீர்மானங்கள்

தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாளை வீடுதோறும் - வீதிதோறும் திராவிட இனத்தின் தனிப்பெரும் விழாவாகக் கொண்டாடுவோம்!

* மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களின் அளப்பரிய தொண்டுக்கு இரங்கல் - வீர வணக்கம்!

* செப்.23 முதல் தமிழர் தலைவர் பங்கேற்கும் தமிழகம் தழுவிய விழிப்புணர்வுப் பயணம்

மானமிகு கலைஞர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்தினர் (சென்னை, 20.8.2018)

சென்னை, ஆக.20 மறைந்த மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவினை வீடுதோறும், வீதிதோறும் திராவிட இனத்தின் தனிப்பெரும் விழாவாகக் கொண்டாடுவது என்று திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

20.8.2018 திங்கள் காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம், திராவிடர் கழகத் தலைவர்  மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1

மானமிகு கலைஞர் அவர்களின்

மறைவிற்கு இரங்கல்

13 வயதில் மாணவர் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, தந்தை பெரியார் கொள்கையை மாணவர் பருவத்திலேயே பரப்புவதற்குக் கையெழுத்து ஏடு நடத்தி, பிரச்சார நாடகம் எழுதி நடித்து, ஈரோடு குடிஅரசு' அலுவலகத்தில் புடம் போடப்பட்டு, திரை உலகில் புகுந்து தனி எழுத்தாற்றலைப் பதித்து, திராவிடர் கழகத்தின் எழுத்தாளராக, பேச்சாளராக சுடர்விட்டு, அறிஞர் அண்ணா தலைமையில் திமுகவில் இணைந்து தனது கடும் உழைப்பால், ஆற்றலால் மேலும் மேலும் உயர்ந்து, தேர்தலில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமின்றி 13 முறை சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அய்ந்து முறை முதல் அமைச்சராக  ஒளி வீசி, ஆட்சியை சமுதாயக் கொள்கைகளுக்குச் சட்ட வடிவம் கொடுக்கும் கருவியாகப் பயன்படுத்தி, பெண்கள் மறுமலர்ச்சிக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கு அரும் பெரும் திட்டங்களைச் செயல்படுத்தி, சமூகநீதி காத்து, மதச்சார்பின்மை கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அரை நூற்றாண்டுக் காலம் திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, நெருக்கடி காலத்தை எதிர்த்து எதிர் நீச்சல் போட்டு ஏற்றம் - தாழ்வு என்ற இருநிலைகளிலும் சீராகவே நிமிர்ந்து நின்று, கட்சியைக் கட்டிக் காத்து பல்திறன் கொள்கலனாக விளங்கியவர் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் என்பதை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு பெருமிதத்துடன் போற்றுகிறது. அத்தகு பெருமகனாராகிய மானமிகு கலைஞர் அவர்களின் மறைவு (7.8.2018) என்பது திமுகவுக்கு மட்டுமல்ல; திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல; தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்ல; உலக முழுவதும் உள்ள தமிழின மக்களுக்கே ஈடு சொல்ல முடியாத பேரிழப்பாகும். எளிதில் மறக்க முடியாத - ஈடு செய்ய இயலாத இந்தப் பேரிழப்பால் ஆறாத் துயரத்தில் மூழ்கி இருக்கும் கலைஞர்தம் குடும்பத்தினருக்கும், திமுகவுக்கும்,  கலைஞரைத் தன் உயிரினும் மேலாக நேசிக்கும் திமுக தோழர்களுக்கும், குறிப்பாக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன், செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி., உள்ளிட்ட அனைவருக்கும் கலைஞர் மறைவால் பெரும் துயரத்தாக்குதலுக்கு ஆளாகியுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து மானமிகு சுயமரியாதைக்காரரின் அளப்பரிய பெருந்தொண்டுக்கு  திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

செப்.17-க்குள் 5,000 விடுதலை' சந்தாக்கள்!

தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17 ஆம் தேதிக்குள் 5,000 விடுதலை' சந்தாக்களை கழகத் தலைவரிடம் அளிப்பது என்றும்,  கழகத் தலைவர் சுற்றுப்பயணத்தின்போது, 5,000 விடுதலை' சந்தாக்களை அளிப்பது என்றும் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை' சந்தா சேர்க்கை

குழு அமைப்பு

கீழ்க்கண்ட கழகப் பொறுப்பாளர்கள் விடுதலை' சந்தா சேர்க்கைப் பணியில் ஈடுபடுவார்கள்.

தஞ்சை இரா.ஜெயக்குமார்

உரத்தநாடு இரா.குணசேகரன்

தருமபுரி ஊமை.ஜெயராமன்

மதுரை வெ.செல்வம்

பொன்னேரி பன்னீர்செல்வம்

சென்னை இன்பக்கனி

திருவாரூர் செந்தமிழ்ச்செல்வி

நாகர்கோவில் வெற்றிவேந்தன்

தீர்மானம் எண்: 2

மேனாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி அவர்களின் மறைவிற்கு இரங்கல்

இந்தியாவின் மேனாள் பிரதமரும், கொள்கைக்கு மாறுபட்டவர்களிடத்திலும் பண்பு மாறா அன்பும், அரவணைப்பும் கொண்டவருமான இந்தியாவின் மூத்த அரசியல்வாதி அடல் பிகாரி வாஜ்பேயி அவர்களின் மறைவிற்கு வருந்துவதுடன், இக்கூட்டம் அவர்தம் குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 3

மனிதநேயம் என்பது ஜாதி, மதம், மாநிலம், நாடு எல்லாவற்றையும் கடந்தது!

வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு, லேசாக மீண்டு வரும் கேரள மக்களுக்கு திராவிடர் கழகம் துணிவும், கடும் உழைப்பும் கொண்ட மக்களாகிய நீங்கள் அனைவரும் இந்தத் தேசிய பேரிடர் துன்பத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் மீளவேண்டும்; மறுவாழ்வுக்கான பணிகள் முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ள கேரள அரசையும், முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களையும் பாராட் டுவதுடன், கேரள மாநிலத்திற்கு உதவிடும் அத்துணை அரசுகள், அமைப்புகள், தனிப்பட்டவர்கள் அனைவருக்கும் நமது நன்றியைத் தெரிவித்து, மனிதநேயம் என்பது ஜாதி, மதம், மாநிலம், நாடு எல்லாவற்றையும் கடந்தது என்பதைக் காட்டி வருவது வெளிப்படையாகத் தெரிகிறது என்பது வரவேற்கத்தக்கது!

தீர்மானம் எண்: 3 (அ)

கேரள மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்பினை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும்!

மத்திய அரசு இதை தேசியப் பேரிடராக'' அறிவித்துப் போதிய நிதி உதவிகளை தாராளமாக மேலும் வழங்க வேண்டும் என்று இக்கமிட்டி வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 3 (ஆ)

பெரியார் அறக்கட்டளை - நிறுவனங்கள் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி!

நமது அறக்கட்டளைகள், நிறுவனங்கள் சார்பாக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதோடு, நமது பெரியார் - மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம் மற்றும் கல்வி நிறுவன மாணவர்கள், மருந்துகள் முதல் பலவற்றை மக்களிடையே திரட்டி மனிதநேயப் பணிகளைத் தொடரவேண்டுமெனவும் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது. நமது மாணவர்கள், ஆசிரியர்களின் தொண்டறம் இதில் தொய்வின்றித் தொடரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் எண்: 4

விழிப்புணர்வுப் பிரச்சாரத் திட்டம்

வரும் ஆகஸ்டு 22 முதல் கழகத் தலைவர் தலைமையில் மேற்கொள்ளப்படவிருந்த நான்கு கட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தவிர்க்க முடியாத காரணத்தால் செப்டம்பர் 23 முதல் தொடங்கி சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 5

திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் மிகவும் இன்றியமையாதன!

கும்பகோணத்திலும், தொடர்ந்து பொன்னேரி, பட்டுக்கோட்டை, மத்தூர், கணியூர் போன்ற இடங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாடுகளில் இருபால் இளைஞர்கள், மாணவர்கள் காட்டிய எழுச்சி  - இந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் மிகவும் இன்றியமையாதன என்ற உணர்வின் வெளிப்பாடு என்பதை அறிய முடிகிறது.

கழக மாணவர் அணி, இளைஞரணி, மகளிரணி அமைப்புகளை விரிவுபடுத்தி, இயக்கத்தின் பாதையில் புதிய  மைல்கல் என்று சொல்லும் அளவிற்கு இயக்கச் செயல்பாடுகளையும், கட்டமைப்புகளையும் வேகப் படுத்துவதில் அதிக ஊக்கமும் வேகமும் காட்டுமாறு அனைத்துக் கழகப் பொறுப்பாளர்களையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்ட, திராவிடர் கழகத் தலைவர், செயலாளர்கள், நகர ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் இவற்றின் ஒருங்கிணைப்பு (Net Work) விஞ்ஞான முறையில் கட்டமைக்க எல்லா வகையான செயல்பாடுகளையும், முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 6

வீடெங்கும் - வீதியெங்கும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடுவோம்!

தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழாவை நகரம் முதல் கிராமம் வரை கொள்கைப் பிரச்சார பெரு வெள்ளமாக எடுத்துச் செல்லுவது என்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் திராவிட இனத்தின் தனிப் பெரும் திருநாளாக மகிழ்ச்சியுடன், குதூகலத்துடன் வீடுதோறும், வீதி தோறும் கொண்டாடப்பட வேண்டும் என்றும் உற்றார், உறவினர்,  நண்பர்கள் சந்திப்பு - பரிசுகள் அளிப்பு, குழந்தைகளுக்குப் புத்தாடை, இனிப்புகள், பல்வேறு போட்டிகள் என்று இன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்று நாடே சிலிர்த்து மகிழும் அளவுக்கு ஏற்பாடுகளை கழகத் தோழர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

- விடுதலை நாளேடு, 20.8.18

சனி, 11 ஆகஸ்ட், 2018

சுயமரியாதை உதயம்

பெண்கள் சுதந்திரம்

21.06.1931 - குடிஅரசிலிருந்து...

சொத்து உரிமை

மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள்.

கல்யாண ரத்து: பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணோ 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்டமில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமையின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ளவர் களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப்படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப் படாதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம்.  இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

மைசூரில் கல்யாண வயது

மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது. செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமுகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது  என்று சொல்லிக் கொண்டிருப் பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம்.

திராவிடச் சமுதாயத்திற்குச் சிறப்பாகத் தமிழ் மக்களுக்கு இன்று சமயம் இல்லை; வேத சாத்திரங்கள் இல்லை. அவை மாத்திரம் அல்லாமல் கடவுளும் இல்லை. கண்டிப்பாக இல்லை. அப்படி இருந்தும் திராவிடன் சமயத்துறையில் மேற்கண்டவைகள் பேரால் கீழ்மகன், - சூத்திரன், சூத்திரச்சியாக இருந்துகொண்டு பெருந் தொல்லைகளையும் ஏழ்மையையும் அனுபவித்துக் கொண்டு காட்டுமிராண்டியாய் இருந்து வருகிறான். பூசைக்கும் பூச்சுக்கும் அளவில்லை; கோவில் குளத்திற்கும் கணக்கு இல்லை; அவை களுக்காகச் செலவாகும் பணம், நேரம், ஊக்கம் ஆகியவைகளுக்கும் எல்லை இல்லை.

- தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு, 11.8.18