வியாழன், 8 டிசம்பர், 2022

மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் உருவம் பொறித்த அஞ்சல் தலை


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையினை, மலேசியா திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் மகன் கே.ஆர்.ஆர்.அன்பழகன் அவர்கள், கழகத் துணைத் தலைவர் கவிஞர் 

கலி.பூங்குன்றன் அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 6.12.2022).


ஞாயிறு, 6 நவம்பர், 2022

தோளில் துண்டுபோடும் புரட்சி

சிவக்கொழுந்து தோளில் உள்ள துண்டை எடுக்காதே !'' - அஞ்சாநெஞ்சன் அழகிரி.(சுயமரியாதைக்கான போரில் திராவிடர் இயக்கம் வரலாற்றில் செய்த சாதனைகளுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.)

1923-ஆம் ஆண்டில் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்பற்றி முடிவெடுக்க தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு முதலியோர் கானாடு காத்தானில் சுயமரியாதை இயக்க வீரர் வை.சு. சண்முகம் இல்லத்தில் கூடியிருந்தனர்.அன்று அந்தவூரில் ஒரு செட்டியார் வீட்டுத் திருமணம் - திருமண ஊர்வலத்தில் அந்தக் காலத்தில் பேர் பெற்ற நாதசுர வித்வானான சிவக்கொழுந்துவின் நாதசுர இசை இடம் பெற்றிருந்தது. 
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் கே.வி. அழகிரிசாமியும் அப்பொழுது அங்கே வந்திருந்தார். அழகிரியோ பெரும் இசைப் பிரியர். திருமண ஊர்வலத்தில் நிகழ்ந்த நாதசுர இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.நாதசுரவித்வான் இடுப்பில் ஜரிகைக்கரை பட்டு வேட்டி கட்டிக் கொண்டு, வியர்வையைத் துடைப்பதற்காக தோளில் துண்டு ஒன்றைப் போட்டு இருந்தார். (நாதசுரம் வாசிப்பது என்பது எளிதானதல்ல - மூச்சை அடக்க வேண்டும் - அதனால்தான் பார்ப்பனர்கள் இந்தக் கலையின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை)அந்த நேரத்தில் நாட்டுக் கோட்டை செட்டியார் வகுப்பைச் சேர்ந்த வாலிபன் ஒருவன் நாதசுர வித்வான் சிவக்கொழுந்து அவர்களின் எதிரே வந்து, `தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும். மரியாதை இல்லாமல் துண்டைத் தோளில் போட்டுக் கொள்ளக் கூடாது! என்று ஆணவமாக அரற்றினார்.நாதசுர மேதை சிவக்கொழுந்து அவர்களோ மிகவும் அடக்கமாக `அய்யா இது ஒன்றும் அங்கவஸ்திரம் அல்ல - நாதசுரம் வாசிக்கும் பொழுது அதிகமாக வியர்க்கும், அதைத் துடைத்துக் கொள்ளத்தான் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறியபிறகும் அந்த ஆசாமி விடுவதாகயில்லை.
.
அந்தக் கூட்டத்தில் இருந்த சுயமரியாதை வீரர் அழகிரி அவர்கள், `சிவக்கொழுந்து துண்டை எடுக்காதே! நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள்! என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார்.இந்தத் தகவலை வை.சு. வீட்டில் இருந்த தந்தை பெரியாரிடம் ஓடிப் போய்த் தெரிவித்தார் பட்டுக்கோட்டை அழகிரி.
.
தந்தை பெரியார் அவர்களும் அழகிரிக்குப் பச்சைக் கொடி காட்டினார். `விடாதே, துண்டை எடுக்காமல் வாசிக்கச் சொல்; கல்யாண வீட்டார் அனுமதிக்கா விட்டால், அவரை இங்கே அழைத்து வாருங்கள்; வாசிக்கச் சொல்லி அவருக்கு உள்ள பணத்தை நாம் கொடுத்து விடலாம்! என்றார். அஞ்சா நெஞ்சன் அழகிரிக்குக் கேட்க வா வேண்டும் - சிட்டாகப் பறந்து அந்த இடத்திற்குச் சென்று மீண்டும் ஓங்கித் தன்மானக் குரல் கொடுத்தார்.திருமண வீட்டார், பெரியார் இருந்த இடத்திற்கே வந்து கெஞ்சினார்கள். ஜாதி. திமிரில் நீங்கள் நடந்துத் கொள்வதற்கெல் லாம் நாங்கள் பணிந்து போக வேண்டுமா? நாங்கள் சிவக் கொழுந்தை அழைத்துக் கொள்கிறோம். 
நாதசுரம் இல்லாமல் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று கறாராகக் கூறி விட்டார் தந்தை பெரியார்.மேள தாளம் இல்லாமல் கல்யாண ஊர்வலம் செல்லுவது கவுரவக் குறைவு என்று கருதிய திருமண வீட்டார், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிவக்கொழுந்து துண்டைத் தோளில் அணிந்து கொண்டுதான் நாதசுரம் வாசிப்பார். விருப்பம் உள்ளவர்கள் இருங்கள்! பிடிக்காதவர்கள் சென்று விடுங்கள் என்று கூறி விட்டனர்.
வித்துவான் சிவக்கொழுந்து துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார்.

(கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய "திராவிட இயக்கத்தின் திருவிழா" கட்டுரையிலிருந்து ...விடுதலை 24-2-2008)

புதன், 21 செப்டம்பர், 2022

சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்

வரலாறு : சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்

2022 செப்டம்பர் 16 -30 வரலாற்றுச் சுவடு, உண்மை இதழ் 

5.12.1926ஆம் நாளன்று, பெரியார் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் சுருக்கமாகவும், தெளி-வாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

1. மனிதன் தன்மான உணர்ச்சியோடு வாழ வேண்டும். ஒரு நாட்டின் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. எவரும் எவருக்கும் தாழக் கூடாது. எவரும் எவரையும் தாழ்த்தவும் கூடாது. மனிதனை மனிதனாக மதிக்கின்ற சமத்துவ மனப்பான்மை ஏற்பட வேண்டும்.


2. மனிதனுக்கு மனிதன், பிறப்பதிலும், சாவதிலும் இயற்கையில் வேறுபாடு எதுவும் கிடையாது. பிறப்பில் வேறுபாடுகள் கற்பித்து, உயர்வு_தாழ்வு என்ற நிலைகளை ஏற்படுத்தியது, ஆதிக்க உணர்வு கொண்ட மோசடிக்காரர்களும், பித்தலாட்டக் காரர்களும் இடைக்காலங்களில் செய்த வேலையே ஆகும்.

3. மனிதனும் மனிதனும் ஒருவரோடு ஒருவர் அன்போடும், பண்போடும், உறவோடும், உரிமையோடும், நட்போடும், ஆதரவோடும், அரவணைப்போடும் பழகுவதற்கு ஏற்ற மனிதத் தன்மை உடையவர்களேயல்லாமல், தீண்டாமை, பாராமை, சேர்க்காமை, மதிக்காமை போன்றவற்றால், ஒருவரையொருவர் புறக்கணிப்-பதற்கும், தள்ளி வைப்பதற்கும் இடமேயில்லை.

4. மனிதர்களுக்குள்ளாகவே, அவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் கொள்கைக் கோட்-பாடு, சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சமயங்களும், ஜாதிகளும் வேரோடு களைந்தெறியப்பட வேண்டும்.

5. மனிதனை முட்டாளாக ஆக்குவதற்கும், முரடனாக ஆக்குவதற்கும், வெறியனாக ஆக்கு-வதற்கும், பைத்தியக்காரனாக ஆக்குவதற்கும், ஆதிக்கக்-காரனாக ஆக்குவதற்கும், ஆணவக்-காரனாக ஆக்குவதற்கும் பயன்படுத்தப்படும் கடவுள், மதம், ஜாதி, சாத்திரம், புராணம், இதிகாசம், வேதம், மோட்சம், நரகம், பேய், பூதம், பிசாசு, பில்லி சூன்யம், ஜோதிடம், குறி, மந்திரம், பூசை, யாகம் சடங்கு, பண்டிகை போன்ற கற்பனைக் கூறுபாடுகள் அனைத்தும், அடியோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.

6. மனிதனின் சிந்தனை அறிவுத்திறன், செயலாற்றல் திறன், சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை, சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் பாங்கு, தகுதி, திறமை போன்றவற்றையெல்லாம் கெடுத்து, அவனை முழு முட்டாளாக்கக் காரணமாக இருக்கும் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்க வழக்கம், பஜனை பாடுதல், செபம் செய்தல், வழிபாடு நடத்துதல், சடங்குகளைக் கடைப்பிடித்தல் போன்றவை, மனித சமுதாயத்தை விட்டு அறவே அகற்றப்பட வேண்டும்.

7. உலகில், நல்லது -_ தீயது, உயர்ந்தது -_ தாழ்ந்தது, சிறந்தது -_ சிறுமையது, பலன் அளிப்பது -_ பலன் அளிக்காதது, உதவுவது -_ உதவாதது, ஆக்குவது -_ அழிப்பது, மதிக்க வேண்டியது -_ மதிக்க வேண்டாதது எவை எவை என்று பகுத்தறிந்து பார்த்து, பயன்படும் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் துணிவு மட்டும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஏற்பட வேண்டும்.

8. தன்மான உணர்ச்சி, உரிமையுணர்வு, விடுதலை வேட்கை, சிந்திக்கும் ஆற்றல், செய்து முடிக்கும் தன்மை ஆகியவற்றைக் கட்டிக் காக்கும் தகைமை ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும்.

9. எதிர்காலம் அறிவியலுக்கு உரிய-தேயல்லாமல், மதத்திற்கு உரியது அல்ல; மனிதனுக்கு உரியதே அல்லாமல் கடவுளுக்கு உரியது அல்ல என்ற நிலை ஏற்பட வேண்டும்.

10. பகுத்தறிவு நெறியில் நின்று, பண்பாட்டுத் தன்மையோடு, தன்மானவுணர்வு கொண்டு சமுதாயத்தைச் சீர்படுத்தவும், செம்மைப் படுத்தவும் ஒவ்வொருவரும் தொண்டு செய்ய முன்வர வேண்டும்.

11. பகுத்தறிவுணர்வோடு எதையும் சிந்தித்து, பகுத்தறிவுணர்வோடு எதையும் சொல்லி, பகுத்தறிவுணர்வோடு எதையும் செயலாற்ற மக்களனைவரும் தங்களைத் தாங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

12. நல்லறிவு, நல்லாற்றல், உயர் உண்மை, நல்ல உழைப்பு, நல்ல நோக்கம், நாணயம், நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம், இயற்கைப் போக்கு ஆகியவற்றிற்கு மதிப்பு அளித்துப் பாடுபடவே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கொள்கை விளக்கம் செய்தார்.

ஞாயிறு, 31 ஜூலை, 2022

கோஸ்வாமிக்கு பெரியாரின் பதில் ‘ரிவோல்ட்' தொடக்க விழாவில் பெரியார்

செவ்வாய், 12 ஜூலை, 2022

மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியப் பேராளர் மாநாடு

திங்கள், 23 மே, 2022

கி.வீரமணிக்கு வழங்கப்பட்ட விருது - பட்டம்

“பகுத்தறிவுப் போராளிக்கு!” நம் வணக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

(கட்டுரையின் ஒரு பகுதி)

 பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் உலக திராவிடர் மகளிர் மாநாடு  காணொலி மூலம் நமது அருமைத் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டத்தை அளித்து மகிழ்ந்தது.  (12.12.2021)

இதற்கு முன்பும் பல விருதுகள் இவரைத் தேடி வந்ததுண்டு.

இனமானப் பேரொளி” இது நாகையில் பெண்கள் மாநாட்டில் அளிக்கப்பட்டது (1993).

பாரத் ஜோதி” என்ற விருதைக் கொடுத்து பாராட்டியதுபுதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் (2000 ஆண்டு). “பேரறிவாளர்” விருதினை வழங்கியது மியான்மர் சுயமரியாதை இயக்கம்.

ஆக்ஸ்போர்டு தமிழ் விருது” வழங்கிக் குதூகலித்ததுஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்கம்.  பெரியார் ஒளி” வழங்கியது கழகத்தின் மூன்றாவது துப்பாக்கியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2010 ஆம் ஆண்டு)

கோவை கே.ஜி.அறக்கட்டளை “ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர்” என்ற விருது வழங்கிப் பாராட்டியது.

வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கியது சென்னை லயோலா கல்லூரி.

கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (2003ஆம் ஆண்டு).

கருத்துக்கனல்” என்ற விருது வழங்கி பெருமைப் பெற்றது மலேசிய திராவிடர் கழகம்.

2009 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் விருதினை” வழங்கிக் கவுரவித்தது ‘முரசொலி’ அறக்கட்டளை (2009 ஆம் ஆண்டு)

காஞ்சியில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில் “தந்தை பெரியார் விருது” வழங்கி உச்சி மோந்தது (2009).

தந்தை பெரியார் சமூகநீதி விருது” வழங்கி கவுரவித்தது தமிழ்நாடு அரசு (1996ஆம் ஆண்டு).

மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கியது அமெரிக்க மனித நேய அமைப்பு (Humanist Association)  வாசிங்டன் (22.9.2019).

தஞ்சையில் எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்பட்டது (1.2.1998). அதில் உருவானதுதான் திராவிடர் கழக அறக்கட்டளை (DK Trust).

புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி - அது பெரியார் அறக்கட்டளைக்குச் சென்றது.

இவற்றை எல்லாம் அணி அணியாகப் பெற்ற - அறிஞர் அண்ணாவால் 11 வயதில் “திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தர்” என்று வருணிக்கப்பட்ட - ஆசிரியர் என்றாலே வீரமணி என்று உலகமறிந்த பெருமகனார் ஒவ்வொரு முறையும் என்ன சொன்னார்?

இந்த விருதுகள் எல்லாம் என் ஆசானுக்குஅறிவுலகத் தந்தை அய்யாவுக்கு அளிக்கப்பட்டது என்று சொன்னது மேம்போக்கான சொற்கள் அல்லஅவரின் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவர்கள் இதனை அறிவார்கள்.

வெள்ளி, 20 மே, 2022

“மணியம்மா இல்லை என்றால் அய்யாவைப் பறிகொடுத்திருப்போம்!” அறிஞர் அண்ணா நெகிழ்ச்சி


அன்னை .வெ.ரா.மணியம்மையாரைப் போலவாழ்வில் அனைத்தையும் எதிர்கொண்டுஎதிர்த்தவர் மனங்களையும் வென்றவா இருக்க முடியாதுதிராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.உருவானதற்கு பெரியார் - மணியம்மையார் திருமணம் காரமணமல்ல என்பதற்கு பல சான்றுகள் உண்டுஇனமான பேராசிரியர் .அன்பழகன் அவர்களே பெரியார் திடலில் ஒரு நிகழ்வில் அரசியல் பாதைக்குச் செல்லும் எண்ணமே தி.மு.தோன்றக் காரணம் என்று கூறியதுண்டுஇதோஅய்யாவிடமும் அண்ணாகலைஞரிடமும் மாறாத பற்றுக் கொண்டவரும்அவர்களுடன் நெருங்கிப் பழகியவருருமான கவிஞர்  கருணாநந்தம் அவர்கள் தம் “அண்ணா சில நினைவுகள்” நூலில் “வியப்பு - வியப்பிலும் வியப்பு” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்அன்னை மணியம்மையார் பற்றிய அறிஞர் அண்ணாவின் நெகிழ்வான நன்றியுணர்வு எத்தகையது என்பதை விளக்குகின்றனஇக்காட்சிகள்... நேரில் கண்டவரின் மிகையில்லாத காட்சியாக!

அண்ணா அமெரிக்காவில் அறுவை சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னரும் அரசுப் பணிகளைக் கவனித்து வந்தார்ஒரு நாள் 'விடுதலைஆசிரியர் என் நண்பர் வீரமணியும்நாகரசம்பட்டி நண்பர் என்எஸ்சம்பந்தமும் அண்ணாவைக் காண வீட்டுக்கு வந்தனர். ''உக்காருப்பா!'' என்றார் அண்ணா . வீரமணி உட்கார்ந்தார்....

..."என்ன வீரமணிஅய்யா எப்படியிருக்கார்இந்த டூர் (tour) போடும்போது கொஞ்சம் பாத்துப் போடுங்கப்பாமொதல் நாள் திருநெல்வேலிமறுநாள் தருமபுரிண்ணு எவ்வளவு ! அதிலேயும்எங்கே போனாலும் அங்கங்கே நம்ம தோழர்கள் இருக்காங்கஅவுங்க வீடுகளிலேயே சூடாபத்தியமா சாப்பிடணும்இப்ப தருமபுரி மாவட்டத்திலே எங்கே கூட்டம்னாலும்நம்ம சம்பந்தம் வீட்லெதான் சாப்பாடுன்னு வச்சிக்கணும்நான் அய்யாவோட சேர்ந்தப்போஇப்ப எனக்கு என்ன வயசோ (60) அந்த வயக அய்யாவுக்குஅப்பவே வயிற்றுக் கோளாறுபேதியாகும்பொருட்படுத்தமாட்டாருஅப்ப நல்ல சாப்பாட்டுக்கு வழியில்லேஅப்பவே அய்யா இறந்து போயிருப்பாருஆனா மணியம்மை வந்த பிறகுதான் அவருக்கு இதிலே ஒரு திருப்பம்அவுங்கஅய்யாவை நல்லா கவனிச்சிட்டாங்கஅவுங்க இல்லேண்ணா நாம அய்யாவை எப்பவோ பறிகொடுத்துட்டுப் பரிதவிச்சிருப்போம்இவ்வளவு தாள் உயிரோட பாத்திருக்கவே முடியாதுஅய்யா எவ்வளவு நாள் இன்னும் வாழ்றாரோ அவ்வளவுக்கும் நமக்கு நல்லதுபாத்துக்குங்க -'' என்று முடிக்கும்போது அவர் குரல் கரகரத்ததுஉணர்ச்சி மீதுறநாக்குழறியதுஎதிரிலிருந்த இருவரும் உடனே எழுந்துமேலும் அண்ணாவுக்குத் தொந்தரவு தரவேண்டாமென எண்ணிவிடைபெற்றனர்.

'புதிய அன்னிபெசன்ட் புறப்படுகிறார்என்று 1949இல் மணியம்மையாரை வர்ணித்த அண்ணா இவர்தானா என்றுஅவர்கள் இருவரும் கருதிவியந்து கொண்டே சென்றிருப்பார்கள் என நான் எண்ணிச் சிந்தனையில் மூழ்கினேன்.

கல்வெட்டுச் சாசனமாய்ப் பொறித்துவைக்கத்தக்க ஒரு கடிதத்தை அண்ணா நியூயார்க் மருத்துவ மனையினின்று பெரியாருக்கு எழுதினாரேஅதன் இறுதிப்பகுதியில் என்ன சொன்னார்.

"தங்கள் பணி மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறதுபுதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறதுநான் அறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்தச் சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லைஅதுவும் நமது நாட்டில்ஆகவே சலிப்போ கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லைஎன் வணக்கத்தினைத் திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும்அன்பு வணக்கங்கள்.

                                                                                                     தங்கள் அன்புள்ள

அண்ணாதுரை.

நியூயார்க்    

10.10.1968          

நம்முடைய இயக்கத்தை வெறும் பயனையும் பதவியையும் எதிர்பார்க்கும் அரசியல் குழுவாக அமைக்காமல்பற்று பாசம் அன்பு அரவணைப்பு - இவற்றினடிப்படையில் அமைத்தார்களேஇயக்கத் தலைவர்களை வேறு யார் அய்யா என்றும் அண்ணா என்றும் வாஞ்சையுடன் அழைக்க முடியும்அதனால்தானே பதினெட்டாண்டு இடைவெளிக்குபின் ஒரு முதலமைச்சர் தானே வலிந்து சென்று தன் தந்தையைக் கண்டார்ராஜாஜி வருத்தப்படுவாரே என்றார் ஒருவர்சென்னை வந்த பின்பு பார்க்கக்கூ!டாதாதிருச்சிக்குச் சென்று பார்க்க அப்படி என்ன அவசரம் என்றார் வேறொருவர். "என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரே அவர்தான்முதலமைச்சரானதும் அவரை நான் பார்க்காவிட்டால்அது மனிதப் பண்பே ஆகாதுஎன்று சொல்லிவிட்டார் அண்ணன்.

அவர் என்னுடைய தலைவர் நானும் அவரும் பிரிகிற போதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன்இன்றும் அவரையே தலைவராகக் கொண்டு தான் பணியாற்றி வருகிறேன்'' என்றார் திருச்சியில். 'தமிழ்நாட்டின் முதல் பேராசிரியரே பெரியார்தான்அவருடைய கல்லூரியில் பயின்றுவந்த மாணவர்கள் என்பது ஒன்றுதான் எங்களுக்கு உள்ள பெரிய தகுதிஎன்று காஞ்சித் தலைவரே நாகரசம்பட்டியில் கூறினார். "தமிழகத்திற்கும்தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும்இன்னும் உலகிற்கே என்று கூடச் சொல்லலாம்பெரியார் செய்திருக்கின்ற அரிய பெரிய காரியங்கள்ஆற்றியிருகிற அருந்தொண்டுகள்ஏற்படுத்தியிருக்கிற புரட்சி உணர்ச்சிகள்ஓட விட்டிருக்கின்ற அறிவுப்புனல்உலகம் என்றுமே கண்டதில்லை . இனியும் காணப் போவதில்லைஇந்தியாவின் தேசியமொழி இந்திதான் என்று சொன்னவுடன் தேசியம் என்பது மகா புரட்டுஇந்தியா என்கிறீர்களே அது மிகப்பெரிய கற்பனைஅவையிரண்டையும் உடைத்தெறிவதுதான் என்வேலைஎன்றாரே பெரியார்இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை இருபது ஆண்டுகளில் அவர்கள் செய்து முடித்திருக்கிறார்கள்ஆங்கிலத்தில்Putting Centuries into Capsules)  என்பார்களே அதுபோலஎன்றார் அண்ணா .

பெரியாரின் கருத்துகளுக்கு சட்டவடிவம் தருவதற்காகத்தான் பதவியில் இருப்போம்எனத் திட்டவட்டமாகக் கூறித்தான்சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட சம்மதம் தந்தார் அண்ணா.

அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்ததுமணியம்மையாரை அவர் திருமணம் செய்து கொண்டதால்தான் என்ற கருத்தை நான் எப்போதும் மறுப்பவன்இதற்குச் சான்றாக அரூரில் 12.7.1968 அன்று அண்ணா பேசியதை நினைவு கூர்வோம். "என்னுடைய நண்பர்கள் எல்லாம் நான் பிரிந்து சென்றுவிட்டேன் என்று குறிப்பிட்டார்கள்இருக்க வேண்டிய கடினமான நாளில் இருந்தேன்பிரிந்தேன் என்பதுகூடத் தவறுஇந்த நாட்டு அரசியலைநமக்கு நேர்மாறான கருத்து உடையவர்களிடம் கொடுத்துவிட்டுஅவர்களுக்கு நாம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காகஅரசியலில் நுழைந்துஅதனைக் கைப்பற்றியும் இருக்கின்றேன். "

30.8.68 அன்று தர்மபுரியில் பெரியார் சிலை திறப்பு விழாஇதற்குத் தேதி கேட்பதற்காக முன்பு ஒரு நாள் சம்பந்தம்அண்ணாவிடம் வந்து சென்றார்இப்போது அண்ணாவுக்கும் உடல் நலமில்லைஅய்யாவுக்கும் உடல்நிலை சரியில்லைஅதனால் ஒத்திவைத்திருக்கின்றோம் என்று சொல்வதற்காக விடுதலை வீரமணியுடன் சம்பந்தம் வந்திருந்தார்அவர் களிடத்தில் "அண்ணா அய்யாவும் அடிக்கடி ஹைக்கோர்ட் ஜட்ஜ் நியமனம் சம்பந்தமா நிறைய எழுதறார்ஏதாவது செய்யணும்நீதிபதிகள் யாரார்எப்ப ரிட்டையர் ஆகுறாங்கமற்ற  எல்லாம் எனக்கு வேணுமேவீரமணி?" என்றார் அண்ணா . இதோபத்து நிமிஷத்திலே போயி டைப் அடிச்சி குடுத்தனுப்புறேங்க'' எனப் புறப்பட்டார்கள் இருவரும்என் பெயரைக் கவர்மேல் எழுதிநேராக என்னிடம்  தரச்சொல்லுங்க!'' என்றார் அண்ணாஅதென்னத்துக்குங்க அவ்வளவு பயம்நாங்களே கொண்டு வருகிறோம்'' எனச் சென்றவர்கள் அரைமணியில் உண்மையாகவே கையில்  செய்த தாளுடன் திரும்பி வந்தார்கள்!

விடுதலையில் இவ்வளவு particulars readyயா வச்சிருக்கீங்களா?''

இல்லீங்கஅய்யாவோட டயரியில் இருந்து எழுதிக்கிட்டு வந்தேன்என்கிறார் சம்பந்தம்.

"அடெஅய்யாவோட டயரியிலே இல்லாத விஷயமே ஒண்ணும் இருக்காது போலிருக்கே?'' என வியக்கிறார் அண்ணா !

வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே - என்ற புறநானூற்று வரிகள் என் நினைவில் நிழலாடின.”

(நூல்: 'அண்ணா சில நினைவுகள்'

கவிஞர் கருணானந்தம்