செவ்வாய், 25 ஜூன், 2019

ஆதிதிராவிடர்_பெயர்_காரணம்

பறையர்_பள்ளர்_போன்ற_தமிழ்குடிகளை_ஆதித்தமிழர்_என_அழைக்காமல்_ஆதிதிராவிடர்_என_ஏன்_அழைக்கிறார்கள்?

இதுதான் திராவிடம்

செய்த சதி என சிலர்

வரலாற்றை திரித்து

கதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்ன?

பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் மதராஸ் மாகாண சட்டசபையில்

20 ஜனவரி 1922ல் M.C.ராசா

சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தின்படி

#பறையர், #பள்ளர் என்ற பெயர்

நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற

பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் (25.03.1922) பறையர், பள்ளர் மக்களுக்கு #ஆதிதிராவிடர் எனப் பெயர்

மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டு

2ஆண்டுகளாகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது.

இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலைசீனிவாசன்  25.08.1924ல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

இந்த காலகட்டத்தில் (1925 வரை) பெரியார் காங்கிரசில் இருந்தார்.

நீதிகட்சி 'ஆதிதிராவிடர் 'என பெயர் மாற்றிய தீர்மானத்திற்கும்

பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

1892ல் ஆதி திராவிடர் என்ற வார்த்தையை பதிவு செய்தவர் அயோத்திதாசர்.

1.12.1891ல் பண்டிதர்அயோத்திதாசர்  நீலகிரியில் திராவிட  மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார்.

அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரஸ்கட்சிக்கும் அனுப்பிவைத்தார்.

1892ல் அதை

"ஆதிதிராவிட மகாசன சபை" எனப்

பெயர் மாற்றி பதிவும் செய்தார்.

இதனை அடிப்படையாக கொண்டு நீதிக்கட்சி ஆட்சியில்

1922ல் பள்ளர், பறையர் என அழைக்கப்பட்ட சாதிகளுக்கு "ஆதிதிராவிடர் " என அரசு அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியது.

M.C.ராஜா பட்டியல் சமூகத்தை சார்ந்தவர். அவர் தன்னுடைய சமூகத்தின் பெயரை எப்படி அழைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் மனநிலையிலிருந்து முடிவெடுத்தார்.

அதற்கு உறுதுணையாக இருந்தது

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.

எதிர்காலத்தில் நீதிகட்சியிலிருந்து திராவிடர்கழகம் பிறக்கும் என்ற ஜோசியத்தை M.C.ராஜா அறிந்திருக்க வாய்ப்பு இல்லை

வரலாற்றை திரிக்கும் சிலர் சொல்வதுபோல *ஆதி திராவிடர் என்ற பெயர் திராவிட கழகங்களால் கொடுக்கப்படவில்லை.*

1891ல் அயோத்திதாசரால்

கொடுக்கப்பட்ட பெயர்.

*அப்போது பெரியாருக்கு வயது 12.*

'ஆதி திராவிடர்' என பெயர் மாற்றும்போது இந்தியா என்ற ஒரு சுதந்திர நாடே அப்போது கிடையாது. தமிழ்நாடு என்றவொரு

மாநிலமும் அப்போது இல்லை.

திராவிட கட்சிகள் அப்போது

பிறக்கவே இல்லை.

அப்போது பிறக்காத திராவிட இயக்கங்களை இழுத்து அவர்கள்தான் *ஆதித்தமிழருக்கு ஆதி திராவிடர் என* பெயர் சூட்டியதாகப் பொய்யை சொல்லி வரலாற்றை திரித்து அரசியல் செய்வது தற்போது நடக்கிறது.
- பகிரி வழியாக

நமது முன்னேற்றத்திற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியே!

திரு.வே.ஷண்முக முதலியார் பேருரை

வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

- ஆசிரியர்

26.10.1936ஆம் தேதி வேலூரில் கூடிய வட ஆற்காடு ஜில்லா, ஜஸ்டிஸ் மகாநாட்டில் வரவேற்பு கமிட்டி தலைவர், வாணியம்பாடி திரு. வே.ஷண்முக முதலி யார், பிரதிநிதிகளையும், ஏனையோரையும் வரவேற்று செய்த பிரசங்கம் வருமாறு.

சகோதரிகளே! சகோதரர்களே!

வட ஆற்காடு ஜில்லா, ஜஸ்டிஸ் கட்சியின் முதலாவது மகாநாட்டிற்கு விஜயம் செய்து இருக்கும் பிரதிநிதிகளையும், பொது மக்களையும், வரவேற்பு கமிட்டித் தலைவர் என்கிற முறையில் நான் மனமார வரவேற்கிறேன்! இம்மகாநாட்டுக்கு தலைமை வகிக்க என்னைவி ட அறிவாளிகளும், பிரமுகர்களும் தேச விடுதலையிலும், சமூக விடுதலையிலும் ஆர்வமுள்ள பலர் இருந்தும், என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது பொருத்தமற்றதென்று நான் சொல்வது மிகையாகாது. இருந்த போதிலும் உங்களால் இடப்பட்ட கட்டளையைச் சிரமேற்தாங்கி, இப்பதவியை ஆற்ற முன் வந்துளேன். நாங்கள் செய்த ஏற்பாடுகளில் சில குற்றங்குறைகள் இருந்தாலும் எங்களை மன்னித்து, இம்மகாநாடு சிறப் பாக நடைபெற என்னுடன் ஒத்துழைப்பீர்களென்று நம்புகிறேன்.

அசிரத்தையே காரணம்

சென்னை மாகாணத்திலே, அதிலும் தமிழ்நாட்டிலே, வட ஆற்காடு ஜில்லா பல துறைகளிலும் எல்லா வகை யிலும் மிகவும் பிற்போக்காய் இருந்து வருகிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். அதிலும், பல வசதிக் குறைகள் நம் ஜில்லாவாசிகளுக்கு இருந்து வருகின்றன. தமிழ் நாட்டில் ஏழை ஜில்லா ஏதாவது இருப்பதென்றால், அது வட ஆற்காடு ஜில்லா தான். மற்ற ஜில்லாக்களைப்போல் எம் ஜில்லாவிலும் நமது இயக்க அபிமானிகள் விசேஷ மாய் இருந்து வருகிறார்கள். அவர்களை உற்சாகப் படுத்தி, தட்டி எழுப்பினால் அவர்கள் வீறு கொண்டு வேலை செய்வார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஜில்லாவில் இம்மாதிரி ஓர் மகாநாட்டை நடத்த முயற்சி எடுத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அக்காலத்தில் இந்த ஜில்லாவுக்கே ஒரு பூஷணமாய் விளங்கி வந்த வரும் பிரபல தலைவருமான காலம் சென்ற திவான்பகதூர்டபிள்யூ விஜயராகவ முதலியாரின் காலத்திலும், அவருக்குப் பின்னால் காலம் சென்ற ராவ்பகதூர் கறார் கிருஷ்ணசாமி நாயுடுகாரு காலத்திலும், செய்த முயற்சிகளுக்குப் பலத்த ஆதரவு இருந்தும், ஓர் பெரும் தொகை கையொப்பம் செய்யப்பட்டு மிருந்தும், ஏதோ துரதிர்ஷ்டவசமாக எடுத்த காரியங்கள் அக்காலத்தில் சரியாக நடைபெறாததற்குக் காரணம் நம்மவர்களில் பலருக்கு ஊக்கமில்லாமையும், அசிரத் தையுமே காரணம் என்று சொல்ல வருந்துகிறேன். அக்காலத்திலே நமது இயக்கத்துக்கு பலத்த ஆதரவு இருந்ததென்பதையும், பல தோழர்களின் முயற்சியின்மையே மகாநாட்டை கூட்ட முடியவில்லை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

இன்றைக்கும் பல தோழர்களுக்கு சிறப்பாக வாலிபர்களுக்கு தேச விடுதலையில் அளவுக்கு மிஞ்சிய ஆர்வமும், சமுதாய விடுதலையில் நல்ல உணர்ச்சியும் இருந்து வருகிற தன்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தலைவர்களுக்குள் தற்காலமிருக்கும் ஒற்றுமைக் குறைவும், ஒருமனப்பட்ட மனப்பான்மை இல்லாக்குறை யும், அலட்சிய புத்தியும் தான் நம்மவர்களிடையே இருந்து வரும் உணர்ச்சி குன்றியதற்குக் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் முன்னாளில் தோழர்களின் அசிரத்தையும், இந்நாளில் தலைவர் களின் அசிரத்தையும் தான் நமது இயக்க அபிவிருத் திக்கு இடைஞ்சலாய் இரு ந்து வருகிறதே தவிர, பொது மக்களின்பேரில் குறை சொல்வதில் பலனில்லை. இதுவே நான் கண்ட உண்மை.

நமது இயக்கத்தின் மேன்மை

நமது இயக்கம், (கட்சி) காலம் சென்ற சர். பி.டி.தியாக ராய செட்டியார், டாக்டர் நாயர் முதலிய ஒப்பற்ற தலைவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு, சுமார் 20 வருட காலமாய் பல எதிர்ப்புகளுக்கு இடையே இன்றும் இருந்து நம்மவர்களின் விடுதலைக்குப் பாடுபட்டு வந்திருக்கிறது ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுத்திய காரணங் களை விஸ்தரித்துச் சொல்ல, இது தருணமல்ல. ஏனென் றால், நமது மாகாணத்தில் நம்முடைய கட்சி செய்து இருக்கக்கூடிய வேலைகளை நீங்கள் எல்லோரும் அறிந்தே இருக்கிறீர்கள். இன்றைய தினம் ஜஸ்டிஸ் கட்சி இல்லையானால் நம்மவர்கள் அரசியல் துறையில் இவ்வளவு முன்னேற்ற மடைந்து இருக்க முடியாது. சிறப்பாக சொல்லவேண்டு மானால், அது ஒவ்வொரு சமுகத்துக்கும் ஒற்றுமையை யும், முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டு, உழைத்து வருகின்றது.

ஒரே சமுகத்தார் முன்னேற் றத்தை அது விரும்பவில்லை. ஏக போக உரிமையை அது உடைத்தெறிந்தது, இந்த உயர்ந்த இலட்சியங் களைக்கொண்டே இந்தக்கட்சி, நமது மாபெரும் தலைவர்களால் அமைக்கப்பட்டதே தவிர ஒரு சிலர் கூறுகிறபடி எந்த வகைகளிலும் எந்த சமுக முன்னேற் றத்துக்கும் அது முட்டுக் கட்டையாய் இல்லை. உதாரணங்கள் பல தரலாம், ஹிந்து மத பரிபாலன போர்டுக்கு தலைவராக காலஞ் சென்ற பெரியார் மாஜி ஹைகோர்ட்டு ஜட்ஜு சர். சதாசிவமய்யர் நமது கட்சி தலைவர்களால் முதல்முதலாக நியமிக்கப்பட்டதே நம்முடைய கட்சி வகுப்புவாத கட்சியல்ல வென்பதை நிரூபிக்கும் நம்முடைய ராஜீய எதிரிகள் நம் கட்சியைப் பற்றி தூற்றித் திரிவதை நாம் பொருட்படுத்த வேண்டிய தில்லை. அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சியைப் பற்றி தூஷணை செய்வதில் அதிசயமொன்றுமில்லை. அறி வுள்ள மக்கள் நமது கட்சியின் மேன்மையை உணர்ந்து கொள்ளுவார்கள். இந்தக் கட்சியை ஸ்தாபித்த நமது தலைவர்களின், ராஜீய ஞானத்தையும், அவர்களுடைய அறிவு, ஆற்றல்களையும் நாம் அடிக்கடி போற்ற வேண்டும்.

நமது கட்சியும், பத்திரிகைகளும்

ஒரு அரசியல் கட்சி முன்னேற்றமடைந்து, அது பல வகைகளிலும் பயன்பட வேண்டுமானால் அக்கட்சிக் குப் பத்திரிகைகள் அவசியம். நமது கட்சிக்குப் பல வருடங்களாய் ஓர் தமிழ் தினசரி இல்லை, திராவிடன் பத்திரிகைக்குப் பின் ஓர் தமிழ் தினசரி ஏற்படுத்தாமல் இருப்பது நமது தலைவர்களின் அசிரத்தையைக் காட்டுகின்றது. "ஜஸ்டிஸ்" என்ற ஆங்கில தினசரி ஒன்று இருப்பது உண்மையானாலும், ஆங்கில பத்திரிகையினால் தமிழ்நாட்டில் பாமர மக்களுக்கும், ஆங்கிலம் தெரியாத பெரும்பாலோருக்கும் அதனால் ஒரு பயனுமில்லை தமிழ் நாட்டுக்கு, நமது கட்சிக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டுமானால், தமிழ் தினசரி மெத்த அவசியம். நம்முடைய பிரசாரங்களை வெளியிடவும், மக்களுக்கு நமது இயக்கத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லவும், எழுதவும் பத்திரிகை இல்லை என்றால் நமது இயக்கம் மக்களிடையே எப்படி விழிப்படையச் செய்யும். நமது எதிர்கட்சிகளுக்கு ஏராளமான தினசரிகள் இருந்து வருகின்றன. நம் முடைய கட்சியைக் குறைகூறி இல்லாததையும், பொல் லாததையும் எடுத்து எழுதவும், நமது தலைவர்களின் பேரில் குற்றம் குறைகளையும் கூறவும் அப்பத்திரிகை கள் அஞ்சுவதில்லை. அதை மறுப்பதற்கோ, அல்லது உள்ளதை எடுத்துச் சொல்லி எழுதவோ, நமக்குப் பத்திரிகை இல்லை என்றால் மக்கள் பொய் வதந்திகளை நம்பத்தான் செய்வார்கள்

வாரம் இருமுறை பத்திரிகையான "விடுதலை"யை உடனே தினசரியாசச் செய்தாலொழிய நமக்குக் கதி மோட்சமில்லை. பத்திரிகையின் அவசியத்தை நம் தலைவர்களுணர்ந்தும், காலத்தைப் போக்குவதில் என்ன பயன்? நமது இயக்கத்துக்கு ஓர் தினசரி பத்தி ரிகை இல்லை என்றால் நமது இயக்கம் வெற்றியடைய முடியுமா? பத்திரிகைகளின் மூலமாய்த் தான் மக்கள் குறைகளையும், தேவைகளையும் அறிந்து கொள்ள முடியும், நமது இயக்கத் தலைவர்களின் பிரசங்கங்க ளையும் பிரசாரகர்களுடைய பேச்சுகளையும் பத்தி ரிகை இல்லாமல் எப்படி மக்களுக்குத் தெரியப்படுத்த முடியும்? பல கட்சி அபிமானிகள் நமது கட்சிக்கு பத்திரிகை இல்லையே என்று வருந்துவதை பல தடவை நான் கேட்டிருக்கிறேன்.

சட்டசபையும், நமது கட்சி வேலையும்

இப்போது  அனுஷ்டானத்தில் இருந்துவரும் இரட்டை ஆட்சியைத் திறம்பட நடத்தியது நமது கட்சியேயாகும். இதை அரசியல் அறிஞர்கள் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு, மேல் கொண்டும் உரிமைகளைப் பெற போராட வேண்டியதுதான் ஜஸ்டிஸ் கட்சியின் நோக் கமே தவிர, ஆகாத காரியத்தைச் செய்ய நமது கட்சி என்றும் முற்பட்டதில்லை. நமது மந்திரிகள் சிறப்பாக பனகால் ராஜாவும், பொப்பிலி ராஜாவும் நமது கட்சிக்காகப் பட்டபாடுகளையும் அவர்கள் ஆதரவில் இயற்றிய பல சமுதாய சட்டங்களையும் அது மக்கள் முன்னேற்றத்துக்கு எவ்வளவு பயன்படக்கூடியதென் பதையும் விவேகிகள் அறிந்து இருப்பார்கள். நமது ராஜீய எதிரிகளே நம் தலைவர்கள் செய்த சில அரிய சட்டங்களை ஒப்புக்கொண்டு, இன்னமும் பலகாரியங் களைச் செய்து முடித்து இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நமது கட்சி எவ்வளவோ ஓர் அரிய காரியங்களைச் செய்து இருக்கின்றது.

சமயத்தில் தொண்டு

அரசியல் வானம் இருண்டிருக்கும் இக்காலத்தில், இது தான் நல்ல சமயம் என்று நமது கட்சியைப் பலவாறு தூற்றி பாமர மக்கள் மனதைக் கெடுக்கவும் துஷ்பிரசாரத்தைச் செய்துவரும் நமது எதிரிகள் நாச வேலைபிலே இன்னும் கண்ணோட்டமாய் இருந்து வருகிறார்கள். இத்தனை வருடங்கள் அனுபவத்துக்குப் பின்னும் அவர்கள் ராஜிய அறிவு தெளியவில்லை. மக்களுடைய அறியாமையைத் தங்கள் ஆயுதமாக அவர்கள் உபயோகித்து, மனம் போனவாறு பேசி ஒட்டர்களையும், பொது மக்களையும் தேசியத்தின் பேரால் வஞ்சித்து அவர்களைத் தங்கள் வாக்கை நம்பும்படி பிரசாரம் செய்து வருகிறார்கள். இதை சகிக்கமாட்டாமல், மக்களுக்கு உண்மை விஷயங்களை எடுத்துச் சொல்லி அவர்கள் மாய வலையில் வீழாதிருக் கும்படி, நமது இயத்தின் தத்துவங்களையும் நமது கட்சியின் மேன்மைகளையும், காலமறிந்து ஊழியம் செய்து வரும் நமது வைக்கம் வீரர் திரு. ஈ.வெ.ராமசாமி, திரு.வி.வி. ராமசாமி, திரு. சவுந்தரபாண்டியன் முதலிய வர்களுக்கு நாம் நம்முடைய நன்றியறிதலை சந்தோ ஷத்துடன் தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

நமது ஒப்பற்ற தலைவர்

நமது ஜஸ்டிஸ் கட்சிக்கு உடல்,  பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணம் செய்து நம்முடைய மக்கள் முன்னேற்றத்துக்கு இரவும், பகலும் உழைத்து வரும் தமது மாபெரும் தலைவர் பொப்பிலி ராஜாவுக்கு நாம் என்றென்றும் நன்றி செலுத்துவோமாக. அவர் ஒரு ஜமீன்தாரராய் இருந்தும் இனாம் மசோதா மூலம் சுமார் 50 லட்சம் ஜனங்களுக்கு நில உரிமை வழங்கி இருப்பது ஒன்றே அவருடைய உயர்ந்த லட்சியத்தைக் காட்டு கின்றது. ஒருவரைப் போல் வீண் ஆரவாரங்களில், காலத்தைச் செலுத்தாமல் மக்களுக்கு நிரந்தரமான தன்மையை அவர் செய்கையில் செய்து காட்டி விட் டார். அவர் ஒரு ஜமீன் பிரபுவாய் இருந்தும் சமதர் மத்தில் அவருக்கு இருக்கும் பற்றை அளவிட்டு செல்லவும் வேண்டுமா!

நமது கல்வி மந்திரி

செட்டி நாட்டு குமார ராஜா சாஹேப் அவர்கள் நமது மாகாணத்திற்கு கல்வி மந்திரியாய் நியமிக்கப் பட்டு இருப்பதை எல்லோரும் பாராட்ட வேண்டியது தான். அவரும் அவருடைய தந்தையுமான ராஜா சர். அண்ணாமலை செட்டி யாரும் கல்வி அபிவிருத்திக் காக செய்து இருக்கும் தொண்டை நாம் பொன்னேபோல் போற்றுகிறோம்.

குமார ராஜா அவர்கள் பெரிய சீமானாய் இருந்தும் எல்லோரிடத்திலும் அன்னியோன்னியமாய்ப் பழகி வருவதை நான் அறிவேன். அவர் ஏழை எளியவர்கள் விஷயத்தில் செய்து வரும் உபகாரங்களை எல்லோரும் அறிவார்கள். அவரிடத்தில் இயற்கையாய் அமைந்து இருக்கும் உயர்ந்த குணங்களை நான் போற்றுகிறேன். ராஜா சர். செட்டியார் குடும்பத்தார் செய்து இருக்கும் கல்வி தானங்கள் சூரிய சந்திரர்கள் இருக்கும் வரையில் பிரகாசித்துக் கொண்டு இருக்கும். நமது குமார ராஜா அவர்கள் எதிர்காலத்தில் கிராம ஜனங்களுடன் பழகி அவர் குறைகளையும், தேவைகளையும் நேரில் அறிந்து, நமது மக்களுக்குத் தொண்டு செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர் நம்மு டைய மக்களுக்கு வழி காட்டியாய் இருந்து நமது கட் சியை முன்னேற்றமடையச் செய்வார் என்று நம்புகி றேன்.

எதிர்காலவேலை

நாம் இதுவரையில் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டோம். இனி விழித்துக் கொள்ள வேண்டும். நமது கட்சியின் வேலைகளையும், அது செய்து இருக்கும் நன்மைகளை யும் நாடெங்கும், தெருத் தெருவாய் முழங்க வேண்டும். நம் மக்களுக்கு உணர்ச்சியை ஊட்டி, உற்சாகப்படுத்த வேண்டும். நமது எதிரிகள் நம்மைப் பற்றி தூற்றுவதற்குச் சுடச்சுட பதிலளிக்க வேண்டும்

நாம் ஒன்றுபடவேண்டும். நமக்குள் பிரிவினை கூடாது. நமது சொந்த வெறுப்பு விருப்புகளை உதறித் தள்ளவேண்டும். கட்சி முன்னேற்றத்துக்குத் தீவிரமாய் உழைக்க வேண்டும். இது பிரசார காலமென்பதை ஞாப கத்தில் வைக்கவேண்டும். நமது "விடுதலை", "குடியரசு" முதலிய இயக்கப் பத்திரிகைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் ஆதரிக்க வேண்டும்.

ஓட்டர்களுக்கு எச்சரிக்கை

இன்னும் 2, 3 மாதங்களில் சட்டசபை அசெம்பிளித் தேர்தல் வரப் போகின்றது. நமது கட்சி சார்பாக நிறுத்தி வைக்கப்படும். அபேக்ஷகர்களை ஆதரித்து வெற்றிய டையச் செய்ய வேண்டும். தமிழர்கள் எல்லோரும் ஒன்று பட வேண்டும். ஒன்றுபட்டு நின்று வெற்றி முழக்கம் செய்வோமாக.

முடிவுரை

இம்மகாநாட்டுக்கு தன்மை வகிக்கும் கனம் பி.டி.ராஜன் அவர்கள், நமது இயக்கத்துக்கு செய்து இருக்கும் சேவையை நாம் போற்றுவோமாக. அவர் இம்மகள் நாட்டுக்கு தலைமை வகிக்கும்படி நேர்ந்தது நமது பாக்கியமேயாகும், அவரை இம்மகாநாட்டுக்கு தலைமை வகிக்கும்படி உங்கள் சார்பாக அவரை கேட்டுக் கொள்ளுகிறேன். என் பிரசங்கத்தை இவ் வளவு காலம் பொறுமையாய் கேட்டகளுக்கு என் நமஸ்காரத்தையும் பணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளகிறேன்.

- 'விடுதலை’, 28.11.1936

வெள்ளி, 21 ஜூன், 2019