புதன், 19 ஜூன், 2019

ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)

10.01.1948  குடிஅரசிலிருந்து...

கீழ் ஜாதியார்கள் யார்?

ஏவலாள்கள். அதாவது எவ்விதக் கூலியோ சம்பளமோ பேசாமல் இட்ட வேலையைச் செய்துவிட்டு கொடுத்த கூலியைப் பெற்றுக்கொண்டு கிடைத்தற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள்.

மேல்ஜாதியார் என்பவர்கள் யார்?

தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து மேலான தொழில்கள், மத்திய தொழில்கள், என்பவை களை மாத்திரம் செய்து கொண்டு கூடுமான வரை சரீரத்தால் செய்யும் கடினமான வேலைகளைச் செய்யாது தப்பித்துக் கொள்பவர்கள்.
- விடுதலை நாளேடு, 15.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக