வியாழன், 31 ஜனவரி, 2019

வடக்கே பெரியாரின் புரட்சிப் பெண்!

முகத்தை மூட மறுத்த மணமகளின் உறுதியாலும், மணமகன் குடும்பத்தாரின் பழைமைவாத பிடிவாதத்தாலும் திருமணம் நின்று போனது.

மத்தியப்பிரதேசமாநிலத் தில் மத்திய அரசுப் பணியி லுள்ளவர் வர்ஷா சோனவா. இவருக்கும்கட்டடப்பொறி யாளராகியவல்லப் பஞ்சோலி என்பவருக்கும்ரட்லம்பகுதி யில் திருமணம்  நடத்த திட்ட மிடப்பட்டு, இருசாராரின் குடும் பத்தினரும் திரண்டிருந்தார்கள்.

முகத்தை மூடுகின்ற பல்லா எனும் சேலையை அணியாமல் சாதாரண உடையில் இருந்துள்ளார் மணமகள். அதனால் மணமகன் வீட்டார் பெரும் பிரச்சினையை எழுப் பினார்கள். மணமகள் குடும் பத்தினரிடம் கடும் வாக்கு வாதத்தில் மணமகன் வீட்டார் ஈடுபட்டனர். அதனையடுத்து, இருகுடும்பத்தினரிடையே மோதல் சூழல் ஏற்பட்டது.

இப்பிரச்சினையில், மண மகள் குடும்பத்தார்மீது மண மகன்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினரின் சமரச முயற்சியும் தோல்வி அடைந்தது. இரண்டு குடும் பத்தாருக்குமிடையே மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகன் வீட்டார் மணமகளுக்கு விதித்த ஆடைக் கட்டுப்பாட்டினை மணமகள் விரும்பவில்லை. பழைமையான வழக்கம் என்கிற பெயரில் மணமகள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்கிற மடமையை மணமகள் கடுமையாக எதிர்த்தார். திரு மணமே நின்றாலும் தன்னு டைய உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று உறுதியாக இருந்தார். பலே! பலே!!

மணமகன் குடும்பத்தாரின் பழைமைவாதத்தால் திருமணம் நின்று போனது.

ஆம், தந்தை பெரியார் வடமாநிலங்களிலும் வேர்ப் பிடித்து விட்டார் - பெரி யாரின் புரட்சிப் புயல் வீசத் தொடங்கிவிட்டது என்பதற் கான எடுத்துக்காட்டு இது.

வயது அடைந்த ஆண் - பெண் இருவர் இணைவது இயல்பானது. மனிதர்களிடத்தில் மட்டுமல்ல, மற்ற உயிர் களிடத்திலும் இயற்கை உணர்வு இது. இதில் மூன்றாவது மனிதனுக்கு வேலை இல்லை என்பார் தந்தை பெரியார்.

இது நியாயம் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும், ஊறித் திளைத் துப்போன ஊத்தைப் புத்திக்கு இதெல்லாம் ஒவ்வாமையாகத் தான் தோன்றும்.

வருணக் கலப்பை எதிர்க் கும் சனாதனவாதியான காந்தி யார் மகனுக்கும், ராஜாஜி மக ளுக்கும் கல்யாணம் நடந்த போது வாலைச் சுருட்டிக் கொண் டதே - வைதீகமும், சனாதனமும்!

பெரியவர்கள் செய்தால் பெருமாள்' செய்த மாதிரி என்று வைதீகர்கள் விழிப்பாக''த்தான் சொல்லி வைத்துள்ளார்கள் போலும்!

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு, 29.1.19

கோவில் பிரவேச மசோதா (2)

சென்ற வாரத் தொடர்ச்சி

30.10.1932 - குடிஅரசிலிருந்து...

டாக்டர் சுப்பராயன் கட்சியினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் அரசாங்கத்தாரும், உண்மையிலேயே எல்லாச் சமுகங்களும் ஒற்றுமை யடைய வேண்டும் என நினைப்பார்களாயின் இந்து மத ஆலயங்களில்., எல்லோரும் அதாவது எல்லா மதத்தைச் சேர்ந்தவர் களும் செல்லலாம் என்பதாகச் சட்டம் செய்ய வேண்டும்.

இப்பொழுது திரு. சுப்பராயன் அவர்களால் கொண்டு வரப்போகும் மசோதாவில் இந்துக் களாக இருக்கும் எல்லா வகுப்பினரும் மட்டும் தான் இந்து மத ஆலயங்களுக்குள் செல்ல உரிமை இருக்க வேண்டும் என்று கோருவ தாகத் தெரிகிறது. ஆகையினால் இதை நாம் மேலே கூறியவாறு திருத்தி அமைக்க முயல வேண்டுகிறோம். இவ்வாறு செய்வது எவ் வகையிலும் குற்றமாகாது. இன்று முஸ்லீம் களுடைய மசூதிகளில் முலீம்கள் அல்லாத வர்களும் சென்று தொழுவதற்கு உரிமையுண்டு. முஸ்லீம்கள் அந்நிய மதத்தி னரைத் தங்கள் மசூதிக்குள் வரக் கூடாது என்று தடுப்பதாகத் தெரியவில்லை. அது போலவே கிறிஸ்துவர்களுடைய கோயில்களிலும் யாரும் சென்று வணங்கலாம். அங்கு நடக்கும் ஜபத்தில் கலந்து கொள்ளலாம். கிறிஸ்தவர்களும் அந்நிய மதத் தினர் தங்கள் கோயில்களுக்குள் வரக்கூடாது என்று தடை செய்வதில்லை. இது போலவே புத்தர் கோயில்களிலும், எந்த மதத்தினர்களும் தாராள மாகச் செல்லலாம் இம்மாதிரியே இந்து மதக் கோயில்களுக்குள்ளும் எல்லா மதத்தினரும் ஜாதி வித்தியாசம் இல்லாமல் செல்லுவதற்கு உரிமையளிப்பதால் என்ன முழுகிப் போய் விடும்? என்று கேட்கிறோம். இவ்வாறு செய்வ தனால் பல மதத்தினர்க் குள்ளும் சமத்துவம் உண்டாவதற்கும் வழி யாகும். ஆகையால், இம்முறையில் மசோ தாவைத் திருத்தியமைத்து நிறைவேற்றச் சென் னைச் சட்டசபை தைரிய மாக முன்வருமா? என்று தான் நாம் கேட்கிறோம்.

சென்னைச் சட்டசபையில் இத்தகைய மசோதா சட்டமாக நிறைவேறுமானால், இது இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்கும். சென்னைச் சட்டசபைக்கும், இப்பொழுது சென்னைச் சட்டசபையிலிருக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும், அய்க்கிய தேசியக் கட்சிக்கும் என்றென்றும் அழியாத புகழும் உண்டு இதற்கு மாறாக இம்மசோதாவைக் கொலை செய்து விடுவார்களாயின் இக்கொலைக்குக் காரணமாக இருந்த கட்சியினர்களுக்கும் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் என் றென்றும் அழியாத வசையே உண்டாகும் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இனி, இவ்வாலயப் பிரவேச விஷயத்தில் நமக்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்குக் காரணம் என்னவென்பது நம் தோழர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயமாகும். எல்லோரும் கோயில்களில் சென்று வணங்கவேண்டும், அங்கு தெய்வமிருக்கிறது, அல் லது கடவுளிருக் கிறது என்னும் நோக்கத்துடன் நாம் கோயில் பிர வேசத்தை ஆதரிக்க வில்லை. கோயில் களும் தேசத்தின் பொதுச்சொத்து என்ற முறை யில் வணங்குவதற்கோ, அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ, அல்லது சும்மாவோ, அவை களுக்குள் நுழையக் கூடிய உரிமை தேசமக்கள் அனைவருக்கும் இருக்க வேண் டும் என்னும் எண்ணத் துடனேயே நாம் கோயில் பிரவே சத்தை முழுமனதுடன் ஆதரிக் கின் றோம். இதற்காகச் சட்டஞ்செய்யப்படும் முயற்சி யையும் வரவேற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.  (முற்றும்)

-  விடுதலை நாளேடு, 26.1.19

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டின் பார்வையில் 'பெரியார் திடல்'



சென்னை, ஜன.27 சென்னையில் அருங்காட்சியகங்கள் எனும் தலைப்பில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் (24.1.2019) சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஆர்வலர் களுக்கு வழிகாட்டும் வகையில் கட்டுரையை வெளி யிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் மட்டுமல்லாமல், அதனையும் கடந்து சென்னை மாநகரில் பெரியார் திடலிலிருந்து ஆறு இடங்களில் அருங்காட்சியகங்கள், நினைவில்லங்கள் காணக்கிடைக்கின்றன. அவை கடந்த காலங்களுக்கு அழைத்துச்செல்கின்றன. தலைவர்களின் வரலாறைத் தெரிவிக்கின்றன.

பல்வேறு நினைவு இல்லங்கள்குறித்து வெளியிடப் பட்டுள்ள அக்கட்டுரையில், பெரியார் நினைவிட வளாகத்தில் அமைந்துள்ளவைகுறித்து குறிப்பிடப்பட் டுள்ளது. தந்தை பெரியார் நினைவிடத்தில் அமைக்கப் பட்டுள்ள பகுத்தறிவுச் சுடர் மற்றும் நினைவிட கல்வெட்டு படத்துடன் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் அருங்காட்சியகங்களில் ஒரு நாள்...

பெரியார் திடல் என்று தலைப்பிட்டு வெளியிடப் பட்டுள்ளதாவது: பெரியார் திடல் வேப்பேரியில் காவல்துறை ஆணையர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள வளாகமாகும். சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவரும், இந்திய சமூக செயற்பாட்டாளர் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் வரலாறு மற்றும் பணிகளை பாதுகாத்து பரப்பிவருவதை இலக்காகக் கொண்டுள்ள இடம் பெரியார் திடல்.

1979ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் சரண் சிங்கால் திறந்துவைக்கப்பட்டது பெரியார் அருங் காட்சியகம்.

தந்தைபெரியார்  எழுதிய 50க்கும் மேற்பட்ட கட் டுரைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தந்தைபெரியாருக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

1925ஆம் ஆண்டிலிருந்து கிடைத்தற்கரிய ஆவ ணங்கள் ஆய்வக நூலகத்தில் உள்ளன.  பெரியார் மறைவுற்றபின்னர் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் நினைவிடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தந்தை பெரியாருடைய நிரந்தரமான இருப்பிடமாக திருச்சி இருந்தது. அதேநேரத்தில் சென்னையி லிருக்கும்போதெல்லாம் இந்த வளாகத்தில் வசித்துள்ளார். வழக்கமாக மாலை 6 மணிக்கு அருங்காட்சியகம் மூடப்பட்டுவிடும். மாலை 6 மணிக்கும் மேல் எவரேனும் காண விரும்பினால், நாங்கள் அருங்காட்சியகத்தைத் திறப்போம் என்று வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் கூறினார்.

முகவரி: 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல், வேப்பேரி, பெரியமேடு

அனுமதி இலவசம். பார்வை நேரம்  காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை

இவ்வாறு 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் (24.1.2019) குறிப்பிடப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 27.1.19

சனி, 26 ஜனவரி, 2019

கோவில் பிரவேச மசோதா (2)

சென்ற வாரத் தொடர்ச்சி
30.10.1932 - குடிஅரசிலிருந்து...
டாக்டர் சுப்பராயன் கட்சியினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் அரசாங்கத்தாரும், உண்மையிலேயே எல்லாச் சமுகங்களும் ஒற்றுமை யடைய வேண்டும் என நினைப்பார்களாயின் இந்து மத ஆலயங்களில்., எல்லோரும் அதாவது எல்லா மதத்தைச் சேர்ந்தவர் களும் செல்லலாம் என்பதாகச் சட்டம் செய்ய வேண்டும்.
இப்பொழுது திரு. சுப்பராயன் அவர்களால் கொண்டு வரப்போகும் மசோதாவில் இந்துக் களாக இருக்கும் எல்லா வகுப்பினரும் மட்டும் தான் இந்து மத ஆலயங்களுக்குள் செல்ல உரிமை இருக்க வேண்டும் என்று கோருவ தாகத் தெரிகிறது. ஆகையினால் இதை நாம் மேலே கூறியவாறு திருத்தி அமைக்க முயல வேண்டுகிறோம். இவ்வாறு செய்வது எவ் வகையிலும் குற்றமாகாது. இன்று முஸ்லீம் களுடைய மசூதிகளில் முலீம்கள் அல்லாத வர்களும் சென்று தொழுவதற்கு உரிமையுண்டு. முஸ்லீம்கள் அந்நிய மதத்தி னரைத் தங்கள் மசூதிக்குள் வரக் கூடாது என்று தடுப்பதாகத் தெரியவில்லை. அது போலவே கிறிஸ்துவர்களுடைய கோயில்களிலும் யாரும் சென்று வணங்கலாம். அங்கு நடக்கும் ஜபத்தில் கலந்து கொள்ளலாம். கிறிஸ்தவர்களும் அந்நிய மதத் தினர் தங்கள் கோயில்களுக்குள் வரக்கூடாது என்று தடை செய்வதில்லை. இது போலவே புத்தர் கோயில்களிலும், எந்த மதத்தினர்களும் தாராள மாகச் செல்லலாம் இம்மாதிரியே இந்து மதக் கோயில்களுக்குள்ளும் எல்லா மதத்தினரும் ஜாதி வித்தியாசம் இல்லாமல் செல்லுவதற்கு உரிமையளிப்பதால் என்ன முழுகிப் போய் விடும்? என்று கேட்கிறோம். இவ்வாறு செய்வ தனால் பல மதத்தினர்க் குள்ளும் சமத்துவம் உண்டாவதற்கும் வழி யாகும். ஆகையால், இம்முறையில் மசோ தாவைத் திருத்தியமைத்து நிறைவேற்றச் சென் னைச் சட்டசபை தைரிய மாக முன்வருமா? என்று தான் நாம் கேட்கிறோம்.
சென்னைச் சட்டசபையில் இத்தகைய மசோதா சட்டமாக நிறைவேறுமானால், இது இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்கும். சென்னைச் சட்டசபைக்கும், இப்பொழுது சென்னைச் சட்டசபையிலிருக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும், அய்க்கிய தேசியக் கட்சிக்கும் என்றென்றும் அழியாத புகழும் உண்டு இதற்கு மாறாக இம்மசோதாவைக் கொலை செய்து விடுவார்களாயின் இக்கொலைக்குக் காரணமாக இருந்த கட்சியினர்களுக்கும் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் என் றென்றும் அழியாத வசையே உண்டாகும் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இனி, இவ்வாலயப் பிரவேச விஷயத்தில் நமக்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்குக் காரணம் என்னவென்பது நம் தோழர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயமாகும். எல்லோரும் கோயில்களில் சென்று வணங்கவேண்டும், அங்கு தெய்வமிருக்கிறது, அல் லது கடவுளிருக் கிறது என்னும் நோக்கத்துடன் நாம் கோயில் பிர வேசத்தை ஆதரிக்க வில்லை. கோயில் களும் தேசத்தின் பொதுச்சொத்து என்ற முறை யில் வணங்குவதற்கோ, அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ, அல்லது சும்மாவோ, அவை களுக்குள் நுழையக் கூடிய உரிமை தேசமக்கள் அனைவருக்கும் இருக்க வேண் டும் என்னும் எண்ணத் துடனேயே நாம் கோயில் பிரவே சத்தை முழுமனதுடன் ஆதரிக் கின் றோம். இதற்காகச் சட்டஞ்செய்யப்படும் முயற்சி யையும் வரவேற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.  (முற்றும்)
- விடுதலை நாளேடு,2  26.1.19

செவ்வாய், 22 ஜனவரி, 2019

ஏன் பிராமணீயத்தை எதிர்க்கின்றோம்

*தினமணியில் வந்த கட்டுரை இது. ஏன் பிராமணீயத்தை எதிர்க்கின்றோம்..*👇

ஆதிமூலம் ஆதிமனிதன்...

ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே...

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பிராமணர்கள் !
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?

800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை.

ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் *இந்து மனு தர்ம* சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்..?

அவை என்னவென்று பார்ப்போம்...

பிராமணன் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்
1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது.

சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை  வெளியிடப்பட்டது.

1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்
(இந்து மனு சட்டம் VII 374, 375),

ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால் பிணம் போன்றதேயாகும். 
(இந்து மனு சட்டம் IX 178)

பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது....!!

சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும்.
அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பிராமணன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.

1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது,
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது,
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது,

இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை, அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திர பஞ்சமனின் அடிமை சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுவோம்.

(ஆதாரம்:தினமணி 25-2-2007)

திங்கள், 21 ஜனவரி, 2019

இந்தியாவின்* *முன்* *உதாரணமே* *இல்லாத* " *மகத்தான* *மானுட* *ஆளுமையுடையவர்

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உலக தத்துவ அறிஞர்கள் மாநாடு நடைப்பெற்றது.அதை பொறுப்பேற்று நடத்திக்கொண்டு இருந்தவர் உலக பேரரறிஞர் "" *வால்ட்டர்* *ரூபன்* "" இந்தியாவை பற்றி மாபெரும் ஆய்வும் நடத்தியவர்..

மாநாட்டு ஓய்வு நேர வேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்யா இன்னும் சில இந்திய அறிஞர்களுடன் உரையாடி கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு " *கேள்வியை* " முன்வைக்கிறார்

*இன்றைய* *இந்தியாவின்*  *முன்* *உதாரணமே* *இல்லாத* " *மகத்தான* *மானுட* *ஆளுமையுடையவர்* " *யார்* *தெரியுமா* ??

திகைத்து போனவர்கள் காந்தி பெயரை தயக்கத்துடன் சொல்ல காந்திக்கு முன் உதாரணம் கவுதமபுத்தன் என்கிறார் ரூபன்.
சிலர் நேரு பெயரை சொல்ல அவருக்கு முன் உதாரணம் அசோகர் என சொல்லி வாயடைக்க வைக்கிறார் ரூபன்.

நீங்களே சொல்லுங்கள் என ரூபனிடம் அறிஞர்கள் சொல்ல தான் எழுப்பிய வரலாற்று புதிர் கேள்விக்குரிய பதிலை சொன்னார்.

இன்றைய இந்தியாவின் முன் உதாரணமற்ற பேராளுமை " *பெரியார்* *ஈவெரா* *தான்* " என்றார்..இவர்களுக்கு அதிர்ச்சி! எப்படி? எப்படி? ரூபனே அதற்கும் பதிலளித்தார்.

இந்திய சமூகத்தின் மேலிருந்து கீழேவரை  பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வருணாசிரமம்,
மனுதர்மம்,வைதீகம் எனும் நோய்களுக்கு எதிராக தெளிவாக மூர்க்கமாக சமூகதளத்தில் போராடுகிறார். அதனால்தான்..

சாகித்திய அகடாமி பொறுப்பாளர் எழுத்தாளர் பொன்னீலன் 25.11.2011 உரையில் கூறிய தகவல்...

பகிர்வு : *விதைகள்* *வாசகர்* *வட்டம்*

🙏🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🙏

பெரியார் வழியில் கட்செவியிலிருந்து...

வெள்ளி, 18 ஜனவரி, 2019

உஸ்மான் யார் என்று தெரியுமா? இதோ.........

மதராஸ்  உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா? இதோ.........
--------------------------------------------------
"முதல் தலைமுறை மனிதர்கள்".

மதராஸ், தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான்" என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர்.
ஃபிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மொரேயின் "முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி" என்ற நூலின் சிம்பைப் பிடித்துக்கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

உஸ்மான் - ஒரு சுருக்கச் செய்தி : கான் பகதூர் சர் முகமது உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 - 1960.
பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு, சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பட்டம் பெற்றார்.

1913 ல் சென்னை மாநாகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள்.
1924ல் சென்னை மாநகராட்சி மேயர்.
1916 - நீதிக்கட்சி தோற்றம் - உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு - 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர்.
1920 முதல் சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைக்க
1934 வரை சட்டமன்ற உறுப்பினர்.
1925 முதல் நிர்வாகசபை உறுப்பினர். பின்னர் நிர்வாகசபையின் துணைத்தலைவர்.
1932 - 34 சென்னை மாகாண உள்துறை அமைச்சர்.

1934ல் சென்னை மாகாண கவர்னர், Governor of Madras Presidency - Acting.
இதன்மூலம் இந்தியமாகாணங்களிலேயே கவர்னர் பதவி வகித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் - அத்துடன் முதல் தமிழர், முதல் முஸ்லீம் என்ற பெருமையும் கூட. அந்த வருடம் சென்னை சென்னைப் பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் இந்தியர் ஒருவர் "வேந்தர்" என்ற தகுதியில் கலந்துகொண்ட முதல் வரலாற்று நிகழ்வு இதுவே ஆகும். பிரமிக்கத்தக்க விசயம் என்னவென்றால் தான் பட்டம்பெற்ற பல்கலையில் தானே பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்ந்த உழைப்புதான்.

1941ல் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர், Member of Defence Council of India.
1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்,
Member of the Executive Council of Viceroy of India. இக்குழுவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர் சி.பி.இராமசாமி ஐயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் இருந்தனர்.

1920 ல் கான் சாகிப் பட்டம்.
1921 ல் கான் பகதூர் பட்டம்.
1925ல் கெய்ஸர் இ ஹிந்த் வெள்ளிப் பதக்கம்.
1928 ல் இங்லாந்தின் உயரிய "நைட் - Knight " விருது.
அதே ஆண்டில் "சர் - Sir" பட்டம்.

KCSI - Most exalted Order of the Star of India, Knight Commander Order of
           Chivalry - Founded by Queen Victoria in 1861.

இதுபோல் தமிழகத்தின் 30 ஆழுமைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழக வரலாற்றின் தவிர்க்க இயலாச் சக்திகளாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் இருந்து, வெளியுலகிற்கு அறியப்படாத ஆற்றல்மிகு தியாகிகளின் பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

Thanks for the information:
வெளியீடு : நிலவொளி பதிப்பகம், சென்னை.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

திராவிடர் கழகம் பற்றியும் தமிழர் தலைவர் பற்றியும் “நியூயார்க் டைம்ஸ்!”



(உலகப் புகழ் பெற்ற நாடுகளில் ஒன்றான “நியூ£ர்க் டைம்ஸ்” என்ற ஏடு (3.11.1982) இதழில் திராவிடர் கழகம் பற்றியும் தமிழர் தலைவர் பற்றியும் எழுதியுள்ள கட்டுரையின் மொழி பெயர்ப்பு இங்குத் தரப்படுகிறது. - ஆர்)

இந்தியாவில் பார்ப்பனர்கள் புரோகித, படித்த சாதியாக வளர்ந்தவர்கள். பார்ப்ப னர்களைப் பொறுத்தவரை அவர்கள் க்ஷத்திரியர்களைப் போல் உலகியல் வாழ்வு சார்ந்த தன்மை கொண்டவர்கள் அல்ல.

பொதுவாக செல்வ நிலையிலும் அவர்கள் மிகவும் வளர்ந்தவர்கள் இல்லை. ஆனால் மதத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நாட்டில் கடவுளின் ‘தரகர்களாக’ அவர்கள் தங்களை ஆக்கிக் கொண்டு சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற் றவர்களாகப் பெருமைப்படுத்தப்பட்டனர்.

பிரிட்டிஷார் வந்த காலத்தில், பார்ப் பனர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் கல்வியையும் அறிவையும் உயர்த் திக் கொண்டனர். ஆங்கிலத்தை உற்சாகத் தோடு படித்து, அரசாங்கத்தின் உற்சாகத் தோடு படித்து, அரசாங்கத்தின் உயர்ந்த இடங்களைப் பிடித்தனர்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேரு ஒரு பார்ப்பனர். நேருவின் மகள் இந்திரா காந்தியும் அவரது மிக முக்கிய மான ஆலோசகர்களும் பார்ப்பனர்கள். இன்றைக்கும் இந்தியாவில் பத்திரிக்கைத் துறையிலும், இலக்கியத் துறையிலும், கலாச் சார நடவடிக்கைகளிலும், பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில்


ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, வியாபாரம், பத்திரிகைத் துறை, இதரத் தொழில் துறைகளில், பார்ப்பனர்கள் இருந்த இடத்திற்குப் பார்ப்பனரல்லாதோரும் வந் திருக்கின்றனர்.

தங்களுக்கு வாய்ப்புகள் மிகவும் கட்டுப் படுத்தப்பட்டு விட்டதாகப் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் மற்றப் பகுதிகளைவிட, தமிழ்நாட்டில்தான் பார்ப்பனர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் தோன்றியுள் ளதாகத் தெரிகிறது. அதற்கு ஒரு காரணம் நீண்ட காலமாகவே வடநாட்டவர்களை தென்னாட்டு மக்கள் நம்புவது கிடையாது.

சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்திலி ருந்தே, தென்னாட்டில் திராவிடர்கள் வாழ்ந்து வந்தனர். ஆரியர்கள் வட நாட்டில் குடிபுகுந்து தங்கினர். எனவே, தமிழ் பேசும் திராவிடர்கள், பார்ப்பனர் களை வடநாட்டின் ஏஜெண்டுகள் என் றும், சமஸ்கிருத கலாச்சாரத்தை அடிப் படையாகக் கொண்டவர்கள் என்றும் கருதுகின்றனர்.

தலைவர் வீரமணி


“பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்; தங்களை மற்றவர் களை விட உயர்ந்தவர்களாக கருதக் கூடாது” என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறுகிறார். “தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடக் கூடாது; சமுதாயத் தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது” என்று திரு. வீரமணி சொல்லுகிறார். திராவிடர் கழகம் ஒரு பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கமாகும்.

“நாங்கள் தனிச் சலுகைகள் எதுவும் கேட்கவில்லை” என்று பார்ப்பனர் இளைஞர் பிரிவு அமைப்பாளரான சிவராம கிருஷ்ணன் என்பவர் கூறினார்.

“காலம் மாறி விட்டது; பார்ப்பன இளைஞர்கள் இன்னும் தங்களை உயர்ந்த ஜாதிக்காரர்களாக கருத விரும்பவில்லை. எல்லா ஜாதியாரோடும் அவர்கள் கலந்து இருக்கிறார்கள்.

சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டு சமஸ்கிருதப் பார்ப்பனர்களும் அல்ல” என்றும் அவர் மேலும் கூறினார்.

25 வயதுடைய ராமச்சந்திரன் என்ற இன்ஜினீயரிங் படித்திருக்கும் பார்ப்பனர் மேற்கத்திய முறையில் பேண்ட், டி-ஷர்ட் அணிந்திருக்கின்றார். பெயரில் ஜாதிப் பெயர் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் நெற்றியில் நேர்க்கோடு போல விபூதி அடித்துக் கொண்டு தன்னை ஒரு சிவ பக்தர் என்று பறைசாற்றிக் கொண் டிருக்கின்றார். அந்த நவீனமான “டீ-ஷர்ட்டுக்குள்ளே பூணூல் இருக்கின்றது. அந்தப் பூணூல்தான் இந்திய ஏற்றத் தாழ்வு சமக அமைப்பில் சவாலே விட முடியாத அளவுக்கு உயர்ந்த இடத்தில் பார்ப்பனர்களை நிறுத்துகிறது. சவால் விடப்பட முடியாத நிலை அந்தக் காலத் தில் மட்டுமல்ல; இன்று வரையும் அதே நிலைதான்.

பார்ப்பனரல்லாத இந்துக்கள் - சட்டப்படியான சமத்துவ உரிமைகோரி இந்தியா முழுவதும், தங்கள் உரிமையை மிகக் கடுமையாக வலியுறுத்தி வருகின் றனர் என்று அந்த ஏடு எழுதியிருக்கின்றது.

தென்னகத்தில் - முழுமையான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும், கல்வி வேலை வாய்ப்புகளில் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டதாகப் பார்ப்பனர்கள் கருதுகிறார்கள் என்றும், தங்களுக்குச் சமத்துவம் வேண்டுமென்று, சென்னையிலே பார்ப்பனர்கள் சங்கம் அமைத்திருக்கின்றார் கள் என்றும், நிலைமை தலைகீழாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றும் அந்த ஏடு மேலும் எழுதியிருக்கிறது.

“கடைசிப் பூணூல் இருக்கும் வரை- கருஞ்சட்டைப் படை ஓயாது” என்று சென் னைச் சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகம் ஒன்றையும் ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு குறிப் பிட்டிருக்கிறது.

“பாம்பையும், பார்ப்பனரையும் கண்டால் பாம்பைவிட்டு, பார்ப்பனரை அடி”  என்று சென்னைச் சுவரில் எழுதப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்டுரை கூறுகிறது.

பார்ப்பனர்கள் இப்போது சங்கம் அமைத்து எதிர்த்துப் போராடக் கிளம்பி விட்டதால் பார்ப்பனருக்கு எதிரான கொடு மைகள் குறைந்துவிட்டன என்று பார்ப்பன சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என் பவர் கூறியதாகவும் அந்த ஏடு எழுதி யிருக்கிறது.

பார்ப்பனர்களின் எண்ணிக்கை 3.5 சதவிகிதம் தான்; எனவே மக்கள் இயக்கம் எதையும் அவர்கள் நடத்திவிட முடியாது; தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் மிகவும் வலிமை பெற்றுத் திகழ்கிறது.

எனவே பல படித்த பார்ப்பன இளை ஞர்கள் வெளிநாடுகளுக்குப் போக ஆரம் பித்து விட்டார்கள் என்றும் ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு குறிப்பிட்டுள்ளது.

-  விடுதலை ஞாயிறு மலர், 1.12.18