வியாழன், 31 ஜனவரி, 2019

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டின் பார்வையில் 'பெரியார் திடல்'



சென்னை, ஜன.27 சென்னையில் அருங்காட்சியகங்கள் எனும் தலைப்பில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் (24.1.2019) சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஆர்வலர் களுக்கு வழிகாட்டும் வகையில் கட்டுரையை வெளி யிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் மட்டுமல்லாமல், அதனையும் கடந்து சென்னை மாநகரில் பெரியார் திடலிலிருந்து ஆறு இடங்களில் அருங்காட்சியகங்கள், நினைவில்லங்கள் காணக்கிடைக்கின்றன. அவை கடந்த காலங்களுக்கு அழைத்துச்செல்கின்றன. தலைவர்களின் வரலாறைத் தெரிவிக்கின்றன.

பல்வேறு நினைவு இல்லங்கள்குறித்து வெளியிடப் பட்டுள்ள அக்கட்டுரையில், பெரியார் நினைவிட வளாகத்தில் அமைந்துள்ளவைகுறித்து குறிப்பிடப்பட் டுள்ளது. தந்தை பெரியார் நினைவிடத்தில் அமைக்கப் பட்டுள்ள பகுத்தறிவுச் சுடர் மற்றும் நினைவிட கல்வெட்டு படத்துடன் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் அருங்காட்சியகங்களில் ஒரு நாள்...

பெரியார் திடல் என்று தலைப்பிட்டு வெளியிடப் பட்டுள்ளதாவது: பெரியார் திடல் வேப்பேரியில் காவல்துறை ஆணையர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள வளாகமாகும். சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவரும், இந்திய சமூக செயற்பாட்டாளர் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் வரலாறு மற்றும் பணிகளை பாதுகாத்து பரப்பிவருவதை இலக்காகக் கொண்டுள்ள இடம் பெரியார் திடல்.

1979ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் சரண் சிங்கால் திறந்துவைக்கப்பட்டது பெரியார் அருங் காட்சியகம்.

தந்தைபெரியார்  எழுதிய 50க்கும் மேற்பட்ட கட் டுரைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தந்தைபெரியாருக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

1925ஆம் ஆண்டிலிருந்து கிடைத்தற்கரிய ஆவ ணங்கள் ஆய்வக நூலகத்தில் உள்ளன.  பெரியார் மறைவுற்றபின்னர் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் நினைவிடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தந்தை பெரியாருடைய நிரந்தரமான இருப்பிடமாக திருச்சி இருந்தது. அதேநேரத்தில் சென்னையி லிருக்கும்போதெல்லாம் இந்த வளாகத்தில் வசித்துள்ளார். வழக்கமாக மாலை 6 மணிக்கு அருங்காட்சியகம் மூடப்பட்டுவிடும். மாலை 6 மணிக்கும் மேல் எவரேனும் காண விரும்பினால், நாங்கள் அருங்காட்சியகத்தைத் திறப்போம் என்று வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் கூறினார்.

முகவரி: 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல், வேப்பேரி, பெரியமேடு

அனுமதி இலவசம். பார்வை நேரம்  காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை

இவ்வாறு 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் (24.1.2019) குறிப்பிடப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 27.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக