சனி, 29 டிசம்பர், 2018

ஈரோடு ஆலயப் பிரவேசம்

02.02.1930 - குடிஅரசிலிருந்து...
ஈரோடு ஆலயப் பிரவேச விஷயமாய் தமிழ்நாடு என்னும் பத்திரி கையில் சில விஷயமும் காணப்படுகின்றது.
அது விஷமத்தனமானதாகும். ஈரோடு தேவஸ் தானக் கமிட்டியில் ஆலயப் பிரவேச தீர்மானம் செய்யப்பட்டது முதல் தமிழ்நாடு பத்திரிகை செய்து வந்த விஷமத்தனமும் பொய்ப்பிரசாரமும் நாம் அவ்வப்போது அவைகளைப் பலமாய்க் கண்டித்ததும் நேயர்களுக்கு நினைவிருக்கும். அத்தீர்மானம் நிறை வேறிய பின் நாம் ஊரிலில்லாத காலத்தில் நமக்குச் சிறிதும் தகவல் அன்னியில் சிலர் திடீரென்று ஆலயப் பிரவேசம் செய்து வீண் கலாட்டா செய்துவிட்டார்கள் என்றாலும், நாம் ஊரிலிருந்து வந்து விஷயம் தெரிந்து இம்மாதிரி நம் பேரால், நம்மைக் கேட்காமல் திடீ ரென்று கலாட்டா செய்ததைப் பற்றி கண்டித்தபோது சிலர் ஆலயப் பிரவேசத்திற்கு நீதான் அதிகாரியா? உன்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டுமா? எங்கள் இஷ்டப்படியே நடக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஆதலால் அதைப் பற்றி நீ கேட்க வேண்டியதில்லை. என்று சொன் னார்கள். இதை அனுசரித்து திரு.ஈஸ்வரனும் பத்திரிகைகளுக்கு அப்போதே ஒரு குறிப்பு அனுப்பி விட்டார். இருந்தபோதிலும் ஆலயப் பிரவேசம் செய்தவர்களைக் கவனிக்காவிட்டாலும் அக்கொள்கையைக் காப்பாற்றவேண்டும் என்கின்ற எண்ணத்தின்மீதே நாம் கேசு விஷயத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் செய்தோம். இந்தக் கேசுக்கு சுமார் நானூறு ரூபாய்கள் இதுவரை செலவாகி இருக்கின்றது. (இது திரு. ஈஸ்வரன் சொன்ன கணக்குப்படி) இவற்றுள் சுமார் நூறு ரூபாய்கள் வரை நாம் கொடுத்திருக்கிறோம். மலாய் நாட்டுக்கு போன நமது ஏஜென்டு திரு.காளியப்பன் அவர்களால் நூறு ரூபாய்க்கு மேலாகவே வசூல் செய்தனுப்பப்பட்டது. நமது மைத்துனர் திரு.மாப்பிள்ளை ராமசாமி, ஈஸ்வரனிடத்தில் 45 ரூபாயிக்கு மேலாகவே கொடுக்கப் பட்டதாக அவர் சொன்னார். இது தவிர, இக்கேசு சம்பந்தமாய் வெளியூர்களிலிருந்து வருகின்றவர்கள் எல்லோருக்கும் ஜாகை சௌகரியம், சாப்பாடு ஆகிய வைகள் நமது வீட்டிலேயே நடந்து வந்திருக்கின்றது. திரு.ஈஸ்வரனுக்கும் அவரது சினேகிதர்களுக்கும் கேசு ஆரம்பித்த காலம் முதல் கேசு முடிந்த நாள் வரையில் - கேசு முடிந்து பணம் கட்டி விடுதலையாகி வெளிவந்த மறுநாள் வரை சாப்பாடு நமது வீட்டில்தான் நடந்துகொண்டு வந்தது; வருகிறது. அதற்கு முன்னும் வருஷக்கணக்காய் பல வருஷங்கள் நமது வீட்டில்தான் சாப்பிட்டு வருகிறார். தவிர கேசுக்கு ஆஜரான இரண்டு மூன்று வக்கீல்களும் யாருக்காக வந்தார்கள் என்பதையும் அவ் வக்கீல் களையே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
இன்னும், இதுவிஷயமாக செய்த காரியங்கள் சுருக்கமாகச் சொல்வதனால் வக்கீல் கடைசியாக ஆர்க்குமெண்டுக்கு வந்துவிட்டுப் போனதற்குக்கூட நாம்தான் மலாய் நாட்டிலிருந்து வந்ததும் முதல் வேலையாக ரயில் சார்ஜ் கொடுத்தோம். மலாய் நாட்டுக்குப் புறப்படும்போதும் ரயிலேறியபின் கட்சி வேலையாக வக்கீலுக்கு ரயில் சார்ஜ் கொடுத்து விட்டுத்தான் பயணம் சொல்லிக்கொண்டோம், இந்த கேசுக்கு என்று வந்திருந்த திரு.கிரித்திவாசுக்கும் சில சமயம் ரயில் சார்ஜ் கொடுத்தோம். இவர்கள் கோயில் பிரவேசம் செய்யப் போகும்போது நமது வீட்டில்தான் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். கோவிலுக்குள் இருந்தபோதுகூட நாம் ஊரில் இல்லாவிட்டாலும் நமது மனைவியார் சாப்பாடு அனுப்பி இருக்கிறார்கள்.
இவ்வளவு காரியங்களையும் பெற்றுக்கொண்டும் நாம் வழக்கிற்கு விரோதமாய் நடந்து கொண்டதாகவும், யாரையும் உதவி செய்யவிடாமலும் தடுத்ததாகவும் சொல்வதற்கு எவ்வளவு தூரம் துணிந்திருக்கிறார்கள் என்பதையும் புதைக்கப்பட்ட திரு.பி.வரதராஜுலு இக்கூட்டத்தைப் பிடித்து மறுபடியும் கரையேற நினைப்பதும் எவ்வளவு யோக்கியமான காரியம் என்பதையும் வாசகர்களே தெரிந்து கொள்ளட்டும்.
செய்துவிட்டுச் சொல்லிக் காட்டுவதற்கு இதை எழுதவில்லை. நமது மீது சுமத்தப்படும் பழிப்புக்குப் பதில் சொல்ல வேண்டியிருப்பதால் எழுதுகிறோம். ஆனால், நாம் ஒன்று ஒப்புக் கொள்ளுகின்றோம். அதாவது இக்கேசுக்குப் பணம் கொடுக்கும்படி பொதுஜனங்களுக்கு எனது மனைவியின் பேரால் ஓர் அப்பீல் வெளியிட ஆரம்பித்தார்கள். அதை நான் பத்திரிகையில் போட மறுத்ததுண்டு. காரணம் கேசுக்கு அதிக பணச் செலவில்லை. ஏனெனில் சாப்பாடு நம்முடையது. வக்கீல்களுக்குப் பீசு கிடையாது. சார்ஜ் சத்தமும் ஸ்டாம்பும்தான் வேண்டியது. இதற்கு அதிக மான பணம் தரவேண்டியதில்லை. நம்மைக் கேட்ட போதெல்லாம் மேல் கண்டபடி ஒரு தடவைகூட இல்லை என்று சொல்லாமல் பணம் கொடுத்திருக் கின்றோம். அடிக்கடி பொது ஜனங்களைப் பணம் கேட்பதால் கொள்கையில் அபிமானம் குறைந்து விடும் என்று சொல்லியே நமது பேரை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னோம். மற்ற காரணங்களையும் மற்றும் இப்படி ஒரு கூட்டம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதால் நமக்கு அடிக்கடி ஏற்பட்டு வந்த இடையூறுகளையும், நஷ்டங்களையும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுவந்த நமது சகிப்புத் தன்மையும் பின்னால் விவரமாய் எழுதுகிறோம். ஆனால் ஒன்று, இன்றைய தினம் வெகுவீரமாய் ஈரோடு ஆலயப் பிரவேசத்தைப் பற்றி எழுதும் தமிழ்நாடு திரு.பி.வரதராஜுலு, திரு.ஈஸ்வரனைப் பாராட்டி ஒரு தந்தி கொடுத்து ஏமாற்றியதல்லாமல் ஒரு காதொடிந்த ஊசி அளவு உதவி செய்தாரா என்றாவது, இதுமாத்திரமல் லாமல் வேறு எந்த சத்தியாக் கிரகத்திலாவது கையெழுத்தும், வாக்குத் தத்தமும் செய்து நாணயமாய் நின்று அதை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டு நடு சந்தர்ப்பத்தில் விட்டுவிட்டு ஓடின நடவடிக்கைகள் ஒன்றுக்கு மேல்பட்ட தடவை இல்லையா என்றாவது நினைத்துப் பார்த்தால் இவ் வளவு விஷமத்தனம் செய்ய வெட்கப்படுவாரென்றே சொல்லுவோம்.
எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப்பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை
என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட
யோக்கியதை அற்றவனாவான்.
-விடுதலை நாளேடு, 29.12.18

செவ்வாய், 25 டிசம்பர், 2018

கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா?

நன்றி :- _ "கீற்று "
கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்து தியாகு தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:

கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?

இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார்.

கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்' சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி காலத்தில் பெரியார் செய்தார். அது `தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்` . அன்று பண்ணையாளுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. ஒரு நாள் காலையில் வேலைக்கு போனால் மறுநாள் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். வேலைக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்படி வேலை திடீரென மறுக்கப்பட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டம் உறுதி செய்தது. அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணையாளுக்கு வந்தது. அது பெரியாரின் கோரிக்கையால், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது.

டிசம்பர் 25, 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்தது 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்துவந்தாரென்பது டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் ஆசிரியர்

கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியப்படுகிறது. எனவே உடனடியாக பெரியார் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஆனால் பிறகு ‘கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்படி?’ என்றத் தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினார். 12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்தில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார். பொதுவாக கூலி உயர்வுப் போராட்டங்களை பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள் பங்குதாரர்கள் ஆவதுதான் முக்கியம் என்பதே பெரியாரின் நிலைப்பாடு.

“எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள்.  அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு 01.10.1933).

"நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” - “(பகுத்தறிவு - 2.12.1934)

"முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்" -1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானம்.

இந்த அடிப்படையிலேதான் போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கம்யுனிஸ்ட் கட்சியை விமர்சித்தார். இருந்தாலும் திராவிடர் கழகத்தினரும், கம்யுனிஸ்ட் கட்சியினரும் கீழ்வெண்மணி மக்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்குப் போராடி வந்தனர்.

கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்கு கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

கீழ்வெண்மணியை சார்ந்த முனியன் என்பவர் கீவளூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற எண்:327/68ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

கவனிக்க: பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். அவருக்கு கோபால கிருஷ்ண நாயுடு கீழ் நீதி மன்றத்தில் தண்டனை பெற்றதும், மேல் முறையீடு செய்ததும், ஜாமீனில் வெளி வந்ததும் மட்டுமே தெரியும். மேல் முறையீட்டு விடுதலை அவரின் மறைவுக்குப் பின். எனவே கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு அவர் ஆதரவளித்தாகச் சொல்வது எங்குமே பொருந்தாது. இன்னொரு முக்கிய விசயம். ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் கீவளூர் வந்திருந்த பெரியாரை சந்திக்க முயன்ற போது பெரியார் “ என் கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்லச் சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரை கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போ. போ. போகச் சொல்லு” எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். இதை கணபதியா கமிசனில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா பதிவு செய்துள்ளார்.

கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைத் தொடர்பாக காவல் துறை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான ‘காவலாக்குடி மதி' இன்னும் உயிரோடு இருக்கிறார். குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆக, கலவரத்திற்கு முன்பும், பின்பும் திராவிடர் கழகமும், பெரியாரும் ஒரு போதும் ஆதிக்கச் சாதியினர்க்கு ஆதரவாக இல்லை !

வெள்ளி, 21 டிசம்பர், 2018

தமிழர் தலைவர் பற்றி தினமலர் நாளேடு

டிசம்பர் 2, 1933 இதே நாளில் அன்று

கி.வீரமணி: கடலூர் மாவட்டம், முதுநகரில், சி. எஸ். கிருஷ்ணசாமி - மீனாட்சி தம்பதிக்கு, 1933, டிச., 2இல் பிறந்தார்; இவரது இயற்பெயர், சாரங்கபாணி. தன், 10ஆவது வயதில், ஈ.வெ. ரா.,வின் கொள்கைகளை, மேடைகளில் பேசத் துவங்கினார். 11ஆவது வயதில், சேலத்தில் கூடிய, நீதிக் கட்சி மாநாட்டில், ஒரு தீர்மானத்தின் மீது உரையாற்றினார். 1944 ஜூலை, 29இல்,  ஈ.வெ.ரா.,வை சந்தித்தார்.

தன், 12ஆவது வயதில், காரைக்குடியில் நடந்த, ராமநாதபுர மாவட்ட முதலாவது, திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றினார். 17 வயதிற்குள், அவர், 227 நிகழ்வுகளில் பங்கேற்றார்; 16 மாநாடுகளில் கலந்து கொண்டார்.

தன், 23ஆவது வயதில் முதுகலை வகுப்பை முடித்து, முதல் மாணவராக தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 27ஆவது வயதில் சட்டக் கல்வியை முடித்ததுடன், தேசப்பட எரிப்புப் போரிலும் ஈடுபட்டு, ஈ.வெ.ரா.,வுடன், தடுப்புக் காவல் சட்டப்படி கைதானார்.

விடுதலைக்கு பின், தி.க.,வின் பொதுச்செயலரானார். 29ஆவது வயதில், 'விடுதலை' பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், 38ஆவது வயதில், ஆங்கில மாத இதழின் ஆசிரியராகவும் பொறுப்பேற்றார். 43ஆவது வயதில், 'மிசா' சட்டத்தில் கைது செய்யப் பட்டு, 358 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1998இல், 'ஈ. வெ. ரா., பிஞ்சு குழந்தைகள்' இதழை துவக்கி, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

கடந்த, 1962இல், 'விடுதலை' நாளிதழ் ஆசிரியரானார். நான்கு பக்கங்களுடன் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த, நாளிதழ், இன்று எட்டு பக்கங்களுடன் சென்னை, திருச்சி என, இரண்டு பதிப்புகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது.

தி.க.,வின் பொதுச்செயலராக, முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில், ஈ.வெ.ரா.,வால், 1962இல் நியமிக்கப் பட்டவர். 2003ஆம் ஆண்டு முதல், தி.க.,வின் தலைவராகப் பொறுப்பேற்று, செயல்படுகிறார்.

பெரியார் மணியம்மை பல்கலை உள்ளிட்ட, ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மருத்துவம், இலக்கியம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இவர் பங்காற்றி வருகிறார். பகுத்தறிவு சம்பந்தமான, எண்ணற்ற நுல்களையும், ஹிந்து சமயத்திற்கு எதிரான கருத்துகள் கொண்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ராமர் படம் எரிப்பு, ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்துக்களை அழித்துப் போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டதற்காக, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

'பிராமணர்கள், மனிதர்களாக தான் இருக்க வேண்டும்; தங்களை, மற்றவர்களை விட, உயர்ந்தவர்களாக கருதக் கூடாது. தாங்கள் தான் உயர்ந்தோர் என, பார்ப்பனர்கள் உரிமை கொண் டாடக் கூடாது; சமுதாயத்தில் அவர்கள் ஆதிக் கம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது. தி.க., என்பது, பார்ப்பன எதிர்ப்பு இயக்கம்' என, எப்போதும் முழங்குபவர், வீரமணி. அவர் பிறந்த தினம், இன்று. (2.12.2018)

நன்றி: தினமலர், 2.12.2018, பக்கம் 8

- விடுதலை ஞாயிறு மலர், 8.12.18

வியாழன், 20 டிசம்பர், 2018

திராவிட இயக்க அருஞ்செயல்

உங்களுக்கு தெரியுமா ? பகுதி 1
××××××××××××××××××××××××××××

திராவிடத்தை எதிர்க்கும் நவீன இளைஞர்களே..! தேசிய வாதிகளே..! தமிழ் தேசிய பிஞ்சுகளே..!  என் உடன்பிறவா சகோக்களே..! நான் ஏன் திராவிடத்தை ஆதரிக்கிறேன் என்று  உங்களுக்குத் தெரியுமா?

1* 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற  நாடக  விளம்பர நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.?

2* 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்  என்பதும் , 1925 ல்  பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்த பிறகு 1926க்குப் பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே அனுமதிக்கப் பட்டார்  என்பது  தெரியுமா.? 

3* பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூடிக் கிடந்தபோது-பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

4* 1933 -இல் அன்னை நாகம்மையார் மறைந்த-அடுத்த நாளே தடையை மீறி, ஒரு கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்து தந்தைபெரியார் ஒரு மாதகாலம் சிறை புகுந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?

5* 1933 அக்டோபரில் “குடிஅரசில்” தந்தைபெரியாரால் எழுதப்பட்ட “இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?” என்ற கட்டுரையில் தீவிர பொதுவுடைமை வாடை வீசுகிறது என்று சொல்லப் பட்டு இ.பி.கோ. 124 ஏ பிரிவின்படி ராஜ துவேஷம் குற்றம் சுமத்தப்பட்டு, கட்டுரை ஆசிரியர் தந்தை பெரியார் அவர்களும், வெளியீட்டாளர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்களும் (பெரியாரின் தங்கை) பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் தண்டிக்கப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?

6 * 1938-இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அய்யாவுக்கு அளிக்கப்பட்ட பட்டம் தான் “பெரியார்”என்பது உங்களுக்குத் தெரியுமா?

7* 1960 வாக்கில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட` “சோதனைக்குழாய் குழந்தை” பற்றி 1938-லேயே கருத்துத் தெரிவித்தவர் தந்தை பெரியார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

8* 1942 ஆம் ஆண்டு கவர்னரும், வைஸ்ராயும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக வேண்டியும் , அதை தந்தைபெரியார் ஏற்க மறுத்து, பதவியை துச்சமென உதறித் தள்ளினார் என்ற வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?

9* 1942-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த திருவாங்கூர் மகாராணி சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ 1 இலட்சம் நன்கொடை தந்தபோது-தந்தை பெரியார் அதை எதிர்த்து போராடி அந்தப் பணத்தை மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவிட ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா?

10* 1951-இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமைப் போரின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன் முதல் திருத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

11* பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் சூத்திரர்கள் இடம் என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954 இல் தந்தை பெரியார் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

12* 1954 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் தந்தைபெரியாரின் ராமாயணப் புரட்டு விளக்கக் கூட்டத்துக்கு – அங்கே போலீஸ் அதிகாரியின் வீடு இருப்பதால் காவல் துறை அனுமதி மறுத்தது என்பதும், தந்தை பெரியார் ஒலி பெருக்கி யில்லாமலேயே மாபெரும் கூட்டத்தில் 2 மணிநேரம் உரக்கப் பேசினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

13* வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் சிறையில் கைவிலங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

14* வைக்கம் போராட்டம் வெற்றி பெறும் நிலையில் அந்தப் புகழ் தந்தை பெரியாருக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதால் தான் கடைசி நேரத்தில் இதில் காந்தியார் அழைக்கப்பட்டார் என்ற சூழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா?

15* தந்தை பெரியார் தலைமையில் வைக்கம் போராட்டம் நடந்த போது போராட்ட வீரர்களுக்கு உணவு வழங்கியவர்கள் சீக்கியர்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

16* தந்தை பெரியாருக்கு வரவேண்டிய கடன் தொகைகளை ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட தந்தைபெரியார் கோர்ட் மூலம் வசூலிக்க மறுத்தார் என்பதும், அதைத் தமக்கு மாற்றித் தருமாறு சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற பார்ப்பன வழக்க றிஞர் கோரிக்கையை பெரியார் புறக்கணித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

17* தந்தை பெரியார் காங்கிரஸ் செயலாளராக இருந்தபோது- பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி காங்கிரசில் வலுத்துவிட்டது என்று கூறி, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததோடு- காங்கிரசி லிருந்து முக்கியப் பார்ப்பனத்தலைவர்கள் விலகினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

18* குருகுலப் பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது- பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்று காங்கிரஸ் கமிட்டியில் தந்தை பெரியார் கொண்டுவந்த தீர்மானத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் ஆச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

19* தமிழ்நாடு கதர்போடின் தலைவராக தந்தைபெரியார் இருந்த போது செயலாளராக இருந்த கே.சந்தானம் என்ற பார்ப்பனர், தன்னிச்சையாக பார்ப்பனர்களை ஏராளமாக வேலைக்கமர்த்தியதையும், அதைத் தந்தைபெரியார் கண்டித்ததும் உங்களுக்குத் தெரியுமா?

20* ரஷ்யாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன் முதலாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழி பெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

இன்னமும் சொல்கிறேன்...
- கட் செவி வழி செய்தி