வியாழன், 6 டிசம்பர், 2018

பிராமணிசம் என்றால் என்ன? Brahminical Patriarchy 

பிராமணிசம் என்றால் என்ன? என்பதைச் சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.

What Congress and Gandhi have done to the untouchables

இது அம்பேத்கர் அவர்கள் What Gandhi and Congress have done to the Untouchables என்று 1944 ஆம் ஆண்டு எழுதிய புத்தகம் இது.

இந்தப் புத்தகமே ஒரு பொக்கிஷம் எங்களுக்கு. ஏனென்றால், இது பெரியாருடைய புத்தகம். அவர் விலைக்கு வாங்கி, அதிலுள்ள பக்கங்களில் அடிக் கோடிட்டு இருப்பார். இந்தப் புத்தகத்தின் பின்பகுதியில், மிக எளிதாக கூட்டங்களில் சொல்வதற்காக, இந்தப் பக்கத்தில் இந்தத் தகவல் இருக்கிறது என்று பெரியாருடைய கைப்படவே எழுதியிருப்பார். அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து, நீங்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

இதை முழுமையாகப் படிக்கக் கூடிய வாய்ப்பை எனக்கு அரசாங்கம் கொடுத்தது, மிசா காலத்தில் ஓராண்டு சிறையில் இருக்கும்பொழுது.

சென்சார்டு என்று முத்திரை குத்தித்தான் சிறைச் சாலைக்குள் இந்த புத்தகத்தை  கொடுத்து அனுப் பினார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்த புத்தகம் விலை குறைவுதான். 1944 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம்.

பக்திப் போதையைக் கிளப்பிவிடுகிறார்கள்....


What is Brahminism?
Brahminical Patriarchy என்றால், பார்ப்பன வம்சாவளி, பார்ப்பனத் தன்மை இன்றைக்கும் இருக் கிறது. இதனுடைய வெளிப்பாடுதான், கேரளாவில் பினராயி ஆட்சியை ஒழிக்கவேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெறுகின்ற முற்போக்கு ஆட்சியை ஒழிக்கவேண்டும். ஏனென்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது முதல் அனைத்தையும் கொண்டு வந்துவிட்டார்கள். இந்த ஆட்சி நிலைத்தால், அவர்களுக்கு வழியில்லாமல் போய்விடும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று நினைத்தார்கள், அதற் காக பக்தி என்ற போதையைக் கிளப்பிவிட்டால், எல்லோரும் ஏமாறுவார்கள் என்று நினைத்துத்தான் அங்கே அவர்கள் பக்தியைப் பயன்படுத்துகிறார்கள்.

Historically they [Brahmins] have been the most inveterate enemy of the servile classes (Shudras and the Untouchables) who together constitute about 80 per cent of the total Hindu population. If the common man belonging to the servile classes in India is today so fallen, so degraded, so devoid of hope and ambition, it is entirely due to the Brahmins and their philosophy. The cardinal principles of this philosophy of Brahmanism are five: 
(1) graded inequality between the different classes; 
(2) complete disarmament of the Shudras and the Untouchables; 
(3) complete prohibition of the education of the Shudras and the Untouchables; 
(4) ban on the Shudras and the Untouchables occupying places of power and authority; 
(5) ban on the Shudras and the Untouchables acquiring property. 
(6) complete subjugation and suppression of women

இதன் தமிழாக்கம் வருமாறு:

வரலாற்று ரீதியாக பார்ப்பனர்கள் அவர்களாலேயே பிரிக்கப்பட்ட சூத்திரர் மற்றும் தீண்டத்தகாதவர்களுக்குக் கடுமையான எதிரிகள் ஆவார்கள்.  ஆனால் இவர்கள் யாரை எதிரி என்று கூறுகிறார்களோ அவர்கள் இந்து மக்கள் தொகையில் 80 விழுக்காடு உள்ளனர். இன்று இந்தியாவில் பெரும்பாலான இந்துக்கள் அதாவது பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்ட மக்கள், துன்பத்திலும், வறுமையிலும், அடிமைகளாகவும், கூலிகளாகவும்  வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பார்ப்பனர்கள் கொண்டுவந்த பார்ப்பனியக் கொள்கைகள் மட்டுமே காரணமாகும். பார்ப்பனர்களில்

பார்ப்பனியக் கொள்கையில் முக்கியமான அய்ந்து தத்துவங்கள்!


பார்ப்பனியக் கொள்கையில் முக்கியமான 5 தத்துவங்கள் வருமாறு:


பல்வேறு பிரிவு மக்களை சமமாக நடத்தக்கூடாது.


சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் எக்காரணம் கொண்டு நட்புறவு வைக்கக் கூடாது. சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடைப்பதை தடை செய்யவேண்டும்.


சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் அதி காரம் செல்வதை எக்காரணம் கொண்டு அனுமதிக்கக் கூடாது.


சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் சொத்துக்களை வாங்குவதையும், பொது இடங்களில் குடியிருக்கவும் அனுமதிக்கக் கூடாது.


பெண்களுக்கு எக்காரணம் கொண்டு சுதந்திரம் கொடுக்கக் கூடாது; அவர்களை அடக்கியே வைத் திருக்கவேண்டும்.


இன்றைக்கு அடிமை ஜாதிகளில் இருக்கின்ற ஒரு சாதாரண மனிதன், இவ்வளவுக் கேவலப்படுத்தப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்டு, கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றால், இதற்கு ஒரே காரணம், பார்ப்பனர்களும், அவர்களுடைய தத்துவங்களும்தான் என்று மிகத் தெளிவாக அம்பேத்கர் அவர்கள் சொல்கிறார்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்து இரண்டு பேரையும் சண்டை போட விடுகிறார்கள் சிலர். ஆனால், அம்பேத்கர் இணைத்தார். அடிமை ஜாதிகள் என்கிற வார்த்தையை போட்டார். பெரும்பான்மை அவர்கள்தான்.

எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்று சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள்


நண்பர்களே, இப்பொழுது உங்களுக்குப் புரிந்தி ருக்கும். அம்பேத்கர் அவர்கள் சொன்னது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக - இன்றைக்கு சுதந்திரம் வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன.

ஜாதி ஒழிப்பிற்காக நாம் போராடி, இத்தனை உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது.

ஆகவே நண்பர்களே, உங்களை வேண்டிக் கொள் வதெல்லாம், எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்று சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

போர் முறையில், நண்பர்களை எதிரிகளாகக் கருதுவது, எதிரிகளை நண்பர்களாகக் கருதுவது சரியல்ல. அது மிகவும் ஆபத்தானது.

- விடுதலை நாளேடு, 6.12.18
( தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் உரையாடலின் ஒரு பகுதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக