1928 ஆம் ஆண்டு வடநாட்டில் உள்ள தலைவர்களில் ஒருவரான கோஸ்வாமி சென்னை வந்திருந் தார். அப்பொழுது சில நண்பர்க ளுடன் அவர் பேசிக் கொண்டி ருந்தபோது “என்ன இம் மாகாணத் தில் முக்கியமாக இரண்டு மூன்று பெயர்கள் சேர்ந்து கொண்டு பிராம ணர் அல்லாதார் கட்சி என்று வைத்துக் கொண்டு இருக்கிறார்க ளாமே - அதன் அர்த்தம் என்ன? அது வேண்டியது அவசியம் தானா?” என்று கேட்டார்.
அப்பொழுது அங்கு இருந்த பெரியார் அவர்கள் அருகில் இருந்த திரு. ஆர்.கே சண்முகம் செட்டியார் அவர்களை காட்டி “இவரை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.
“ஆகா, நன்றாக தெரியுமே. நானும் அவரும் ஒரே கவுன்சிலில் உறுப்பினராக இருக்கிறோம்.தென்னிந்தியாவிலிருந்து வரும் கவுன் சிலர்களில் பேச்சு வன்மையிலும் அரசியல் ஞானத்திலும் திறமை பெற்றவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்” என்றார் திரு. கோஸ்வாமி.
அப்பொழுது பெரியார் சொன்னார் “அவ்வளவு பெரிய ஷண்முகம் செட்டியார் இப்ப பக்கங்களில் உள்ள சில கோயில்களின் உள்ளே செல்ல முடியாத ஒரு தீண்ட தகாதவராக கருதப்படுகின்றவர்” என்று சட்டென்று சொன்னார்.
அதனைக் கேட்ட கோஸ்வாமி அப்படியே பிரமித்து போய் விட்டார். இது உண்மைதானா என்று கேட்க ஆரம்பித்து விட்டார். அதனை தொடர்ந்து இங்கு உள்ள நிலைமைகளையும் இயக்கத்தின் நோக்கங்களையும் தந்தை பெரியார் விளக்கமாக எடுத்துக் கூறினார். அவற்றை ஏற்றுக்கொண்டு இத்தகைய இயக்கம் அவசியம் தேவை என்பதை ஒப்புக்கொண்டார்.
- ‘ரிவோல்ட்’ என்ற ஆங்கில வார இதழ் துவக்க விழாவின் முன்னுரையில் அவ்விதழின் ஆசிரியர் தந்தை பெரியார் ஆற்றிய உரையில் கிடைத்த தகவல் ‘குடிஅரசு‘, 18.11.1928