திங்கள், 20 பிப்ரவரி, 2017

விருதுநகரில் உண்மை சுயமரியாதைத் திருமணம்

13.07.1930- குடிஅரசிலிருந்து...

தலைவரவர்களே! மணமக்களே! அவர்களது பெற்றோர்களே! மற்றும் சகோதரி, சகோதரர்களே, இந்தக் கூட்டத்தில் எனக்குப் பேச மிக்க ஆசையாயிருக்கிறது. ஆனால் நான் ஆசீர்வாதம் செய்யவோ வாழ்த்துக் கூறவோ எழுந்திருக்கவில்லை. மேல்கண்ட இரண்டும் முறையே புரட்டும் மூட நம்பிக்கையுடையதுமாகும்.

நமது நாட்டில் ஆசீர்வாதம் அனேகமாய் ஒரு ஜாதிக்கே உரியதென்றும், அதுவும் அவர்களிடமிருந்து பணத்திற்கு விலைக்குக் கிடைக்கக்கூடியதென்றும் கருதி இருக்கிறோம்.

அனேகமாக ஆசீர்வாத ஜாதி பிச்சையெடுப்பதற்கு இந்த ஆசீர்வாதத்தை  உபயோகப்படுத்துவதையும் பார்க்கின்றோம்.  நம்மை மகாராஜனா-கவும் சேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிற வனுடைய  ஆசீர்வாதம் யோக்கியமுடையதும் உண்மையு டையதுமானால் தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய் சீமானாய் இருக்கும்படி செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்? தவிர வாழ்த்துவதும் அர்த்தமற்றதேயாகும். ஒருவன் வாழ்த்துதலினாலேயே ஒரு காரியமும் ஆகிவிடாது. வேண்டுமானால் மணமக்கள் இன்பமாய் வாழ ஆசைப்படலாம்.

ஆனால் அவ்வித ஆசைப்படுகின்றவர்களுக்கு ஆசைக்கேற்ற கடமை உண்டு. அக்கடமை என்ன-வென்றால் ஆசைப்படுகின்றவரினது ஆசை நிறைவேற உதவியாய் இருப்பதுதான்.

அவ்விதம் நான் ஆசைப்பட்டாலும் அவ்வாசை நிறைவேற நான் எவ்வளவு தூரம் உதவியாய் இருக்க முடியும்? என்பது எனக்கே தெரியவில்லை. ஆனால் எனது  நரைத்த தலையைப் பார்த்து என்னை முதலில் கூப்பிட்டு விட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

ஆகையால் இந்த சமயத்தை நிறைவேற்றிவைக்க சக்தி இல்லாத ஆசைப்படுவதை விட மணமக்களையும் மணமக்கள்  வீட்டாரையும் பாராட்டி மணமக்களுக்கு  ஏதாவது இரண்டொரு யோசனை சொல்ல உபயோகித்துக் கொள்ளுகின்றேன்.

சகோதரர்களே! தென்னாட்டில் இதுவரை நடந்த சுயமரியாதை கல்யாணங்களுக்குள் இதுவே முதன்மை யானது என்று சொல்லுவேன். என்னவெனில்  இந்த கல்யாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை. மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிகத் துணிச்சலான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்நியாசத்திலிருந்தே பார்க்கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே  முடியாது. பெண்கள் மனிதத் தன்மை  அற்றதற்கும் அவர்களது சுயமரியாதை  அற்ற தன்மைக்கும்  இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே  அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காதுதான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி  வந்திருந்தால் அறுத்தெறியட்டும். இல்லாவிட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும் தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.

நம்மை நாம் சூத்திரரர்கள்  இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கீழ்மைக் குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரணமாயிருப்பது என்பது போலவே பெண்கள் புருஷனுக்குக்  கட்டுப்பட்டிருக்க வேண்டும், அதிலும் தாலி கட்டின புருஷனுக்கு  கீழ் படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின்றன.  ஆதலால் அப்பேர்ப்பட்ட மிருக உணர்ச்சியையும் அடிமை உணர்ச்சியையும் ஒழிக்க முயற்சித்த இந்த மண மக்களையும் அதற்கு உதவியாயிருந்த பெற்றோர்களையும் நான் மிகப் போற்றுகிறேன்; பாராட்டுகிறேன், பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள்  பெண்களைப் படிக்கவைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று  சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ  என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்லுவார்கள்.

ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லுவதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக் கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன். அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக் கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில்லாமல் சபையோ ருக்கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவைகளுக்கு ஒழுங்கும் அவசியமான  கட்டுப்பாடும்  பழக்கிக் கொடுக்க வேண்டும்.  இந்தக் கூட்டத்தில் நான் பேசமுடியாதபடி எத்தனைக் குழந் தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள். அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர்களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சவுகரியமில்லாத  கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது. ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.

பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடைய வர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்குச் சொத்துரி மையும் அவசியமானதாகும். தவிர பெண்களுக்கு இப் போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.

தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ  ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய்  பேசி விளையாட வேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.

வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலை வியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப் பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.

-விடுதலை,18.2.17

ம.வெ.சிங்காரவேலர்

தோழர் மயிலை வெ.சிங்கார வேலர்-மனிதகுலவரலாற்றில்மறக்க வொனா மகத்தான பெயர்! இந்தியத் துணைக் கண்டத்தில் பொதுவு டைமைக் கன்றை நட்ட நாத்திகப் பெருமகன். தந்தை பெரியார் அவர் களின் உற்ற தோழன்.

தந்தை பெரியார் அவர்களின் ‘குடிஅரசு’ இதழ் இந்தப் புரட்சியா ளரின் பேனா உழுத கருத்துக் கழனி. தந்தை பெரியார் அவர்களோடு மாறு பட்டபொழுது கூட அந்தக் கருத்தை ‘குடிஅரசு’ இதழில் பதிவு செய்ய அனுமதித்த தாராள சிந்தனைக்குச் சொந்தக்காரர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் ருசியா முதலிய நாடுகளுக்குச் சென்று திரும்பிய நிலையில், ஈரோட்டில் தந்தை பெரியார் இல்லத்தில் (1932, டிசம்பர் 28, 29) சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருடன் கலந்துரையாடி ஈரோடு சுயமரியாதை சமதர்மத் திட்டம் வெளியிடப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களைப் போலவே காங்கிரசில் இருந்து வெளி யேறியவர். காந்தியார் எதிர்ப்பிலும் இருவரும் ஒத்தக் கருத்தினரே.

.1927 நாகை ரயில்வே தொழிலாளர் களின் வேலை நிறுத்தத்தில் பொது வுடைமை இயக்கத்தினரும், சுயமரி யாதை இயக்கத்தினரும் பங்கு கொண் டனர். சதி வழக்குகள் தொடரப்பட்டன. ஆளுநர் லார்டு வெலிங்டனின் தனிப்பட்ட அக்கறையால் இலட்சுமண ராவ் என்னும் நீதிபதியால் ம.வெ.சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார், டி.சின்னசாமி பிள்ளை, டி.பி.ஆறுமுகம் ஆகியோர் பத்தாண்டுகள் தண்டிக்கப் பட்டனர்.

வெகுண்டெழுந்தார் தந்தை பெரியார்! அன்றைய நீதிக்கட்சி ஆதரவு பெற்ற மாநிலப் பிரதமர் டாக்டர் சுப்பராயன் அவர்களிடம் பேச, பத்தாண்டுத் தண்டனை ஆறு மாதங்களாகக் குறைக்கப்பட்டது.

தந்தைபெரியார்பற்றியும், சுய மரியாதை இயக்கம் குறித்தும் சிங்கார வேலரின் கணிப்பும், கருத்தும் அசாதா ரணமானவை!

இதோ சிங்காரவேலர் செதுக்கு கிறார்:

‘‘உங்கள் சுயமரியாதை இயக்கத் தைப் பரவச் செய்யும் (ஷிஜீமீணீளீமீக்ஷீs) பிரச்சாரத் தொண்டர்களின் ஆற்றலே ஆற்றல். அனேக இயக்கங்களில் கலந்து உழைத்து வந்திருக்கிறேன். ஆனால், சுயமரியாதை இயக்கத்தாரைப் போன்ற பேசும் திறமை உடையவர்கள் மற்ற இயக்கத்தில் மிகச் சிலரே; உங்கள் இயக்கத் தொண்டர்கள்  பேசும் திறமையே திறமை.

அந்த வேளையில் எனக்கு ஓர் எண்ணம் கிளம்பியது. இவ்வாற்றலை உடைய மக்கள், ஒரு காலத்தில், அரசியல் துறையில் நுழையுங் காலை, இவர்களை வெல்வார் யார்? என்ற எண்ணம் உள்ளுக்குள்ளே உதித்தது. இன்னும் சொல்கிறேன்....

இனிவரும்புதியஅரசியல்திட் டத்தை வழங்க, நமது சுயமரி யா தையோர் தேர்தலில் தலையிடுவார் களேயானால், ஷிஷ்மீமீஜீ ஜிலீமீ றிஷீறீறீs என்று சொல்லும் வகையில் முற்றும் அவர் கைக்கொள்ள என்ன தடை?

இவைகளின் சிறப்பை யோசிக் குங்காலை உங்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது. அதற்கு ஜிலீமீக்ஷீமீ வீs ணீ நிக்ஷீமீணீt திutuக்ஷீமீ என்று சொல்லலாம். உங்கள் இயக்கம் இந்திய உலகத்திற்கு சிறந்ததோர் நன்மை பயக்கத்தக்க கருவியாக நிற்கப் போகிறது....

சுயமரியாதையோருக்கு மதங் கள் ஒழிந்துவிட்டதாக இன்று கூறலாம். முதலில் லூதர் மிஷின் மதத்தைப் போல் மதங்களைச் சீர் திருத்தும் இயக்கமாக ஆரம்பித்து இன்று கடவுளென்ற பெயரையே அகராதியிலிருந்து எடுத்துவிடும்போல் தோன்றுகிறது.

‘‘கடவுளென்ற ஒருவர் இருப்பா ராயின் அவர் என் முன் வருவாராயின் அவர் கழுத்தை அறுப்பேன்’’ என்று ஒரு சுயமரியாதையார் எழுதுகிறார்! இவ்வித மனப்பான்மை நமது தமிழ் நாட்டில் இவ்வளவு சீக்கிரத்தில் தோன்றியதற்கு நமது தோழர் ராமசாமி செய்த அருந்தொண்டு, உழைப்புமே காரணமாகும்‘’ (‘குடிஅரசு’, 13.11.1932) என்று பேசுகிறார் தோழர் ம.வெ.சிங்காரவேலர்.

- மயிலாடன்

குறிப்பு: மயிலை வெ.சிங்கார வேலர் பிறந்த நாள்  இன்று (18.2.1860)
-விடுதலை,18.2.17

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

செங்கல்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாடு

1929:-
செங்கல்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது.

இம் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
1. மக்கள் பிறவிகளால் உயர்வு தாழ்வு மறுப்பதோடு அதை ஆதரிக்கிற மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களை பின்பற்றக்கூடாது.

2. நால் வருணங்களை ஏற்கக் கூடாது.

3. பொது இடங்களை எல்லோரும் அனுபவிக்க உரிமை உண்டு.

4. சாதிப்பட்டங்களை விட்டுவிட வேண்டும்.

5. பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும்.

6. பெண்களும் எல்லாத் தொழிலும் செய்ய சம உரிமை வேண்டும்.

7. பள்ளி ஆசிரியர் வேலைக்கு பெண்களை அதிக அளவில் நியமிக்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

வெற்றி! வெற்றி!! (வைக்கம் சத்தியாக்கிரகப்போர் வெற்றி)



வைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைசியாக வெற்றி பெற்றுவிட்டது. திருவிதாங்கூரிலுள்ள எல்லாப் பொது ரஸ்தாக்களிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் எல்லா ஜனங்களும் ஜாதி மத வித்தியாசமின்றிப் பிரவேசிக்கலாமென்று திருவிதாங்கூர் மகாராஜா உத்தரவு பிறப்பித்து விட்ட தாகத் தெரிகிறது. சமீபகாலத்தில் திருவி தாங்கூரில் எத்தனையோ சீர்திருத் தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
தேவதாசி ஏற்பாட்டை முதன்முதலில் ஒழித்த பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கே உரியது. கப்பல் பிரயாணம் செய்த ஜாதி இந்துக்களும் கூட ஆலயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்றிருந்த தடையும் நீக்கப் பட்டது.
நாயர்களுக்கு மட்டும் பிர வேசனமளிக்கப்பட்டு வந்த சர்க்கார் பட்டாளத்தில் எல்லாச் ஜாதியாரும் சேர அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்களுக்கு சிவில் உரிமைகளை அளித்திருக்கும் திருவி தாங்கூர் மகாராஜாவைப் பாராட்டுகிறோம்.
குடிஅரசு - பெட்டிச் செய்தி - 31.05.1936
-விடுதலை ஞா.ம.,6.9.14

கருப்புச்சட்டை ஏன்?





- தந்தை பெரியார்
இனி நான் இறந்தாலும் ஏனையத் திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நமது கொள்கைகள் ஒரு அளவுக்குப் பொது மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம் போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது, நம் இஷ்டப்படி நடக்காத அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்காது.
நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரமே ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக வேண்டும். நீங்கள் என்ன சட்டைக்காரர்களோ என்று நம்மைச் சிலர் கேட்கக் கூடும். நம் நாட்டில் சட்டைக்காரர்கள் என்றொரு கூட்டம் இருந்து வருவது உண்மைதான். அவர்கள் பல ஜாதிக்குப் பிறந்தவர்கள், ஆகவே வெறும் சட்டைக்காரர்கள் என்று மட்டும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
நாம் அப்படிக்கல்ல, நாம் ஒரே ஜாதிக்குப் பிறந்தவர்கள். ஆகவே கருப்புச்சட்டைக்காரர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்கிறோம். கருப்புச் சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல. அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படுகிறோம், அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி. பாடுபட்டுப் படி அளந்துவிட்டுப் பட்டினி கிடக்கும் நானா பஞ்சமன்? என் பாட்டின் பலனால் நோகாமல் உண்டு வாழும் நீயா பார்ப்பனன் இது நியாயமா?
கேள்விகளின் அறிகுறி கருப்புச்சட்டை
பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள், பாடுபடாத உங்களுக்கெல்லாம் மந்திரி வேலையா? இது நியாயமா? பாடுபடாத நீங்கள் எல்லாம் அய்.சி.எஸ். படிப்பதா? கலெக்டர் ஆவதா? இது நியாயமா? நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள்?
நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவுதான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்டரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்க ஈனர்களாக திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக்காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர் ஜாதிப் பார்ப்பனர்களா? இது நியாயமா? என்ற கேள்விகளின் அறிகுறிதான் இந்தக் கருப்புச் சட்டை?
தோழர்களே! நீங்கள் விரும்பி அணியுங்கள் இதை! அடுத்த மாநாட்டிற்குள்ளாவது நம் சூத்திரப்பட்டம் ஒழிந்து போகும். அடுத்த மாநாட்டிற்குள் இந்த இழி ஜாதிப் பட்டம் கட்டாயம் ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். அதற்காக ஒரு 2000, 3000 பேர்களாவது பார்ப்பனர்களின் பலி பீடத்தில் தம் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.
நானா சூத்திரன்? என் தாய்மார்களா சூத்திரச்சிகள்? இனி இந்நிலை ஒரு நிமிட நேரமேனும் இருக்க இடங்கொடேன்? இதோ என் உயிரை இதற்காக அர்ப்பணிக்கவும் துணிந்து விட்டேன் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு திராவிடனுக்கும் ஏற்படவேண்டும்.
இழிஜாதிபட்டத்தை ஒழிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்றாலும் உலக அறிவு முன்னேற்றம், ஜாதி உயர்வு தாழ்வுகளே இனி இருக்க கூடாது. ஆகவே உறுதி பெற்றெழுங்கள், செத்தாலும் சரி இழிவு நீக்கம்தான் முக்கியம் என்று. சாகாமலே கூட வெற்றி பெற்று விடலாம்.
ஆதாரம்: குடிஅரசு 5.6.1948
-விடுதலை ஞா.ம.,6.9.14

“நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா”

சமூக சீர்திருத்தங்களின் முன்னோடியான
“நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா


(மக்கள் தொகையில் பெரும் பாலானோருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை அகலப்படுத் தியதுடன், அவர்களது அரசியல் அடித்தளத்தையும் விரிவடையச் செய்தது நீதிக்கட்சிதான்)
இப்போது இல்லாத ஓர் அமைப்பான நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது என்பது ஏதோ வழக்க மற்ற ஒன்றாகத் தோன்றவும் கூடும். முதன் முதலில் ஒரு துணை தேசிய அமைப்பாகப் பார்க்கப்பட்ட நீதிக்கட்சி, பார்ப்பனர் களுக்கு எதிராகப் பேசிக்கொண்டும், சுதந்திரப் போராட்ட இயக்க நோக்கங் களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு மிருந்தது.
நீதிக் கட்சி என்று அதிகாரப் பூர்வமாக அறியப்பட்டது  இந்த தென் னிந்திய நல உரிமைச் சங்கம்.  அது தோற்று விக்கப்பட்ட 1916 ஆம் ஆண்டு கால கட் டத்தில் அதிகமாக மக்களால் அறியப்பட்டி ராமல் இருந்த இந்த   அமைப்புதான் திராவிட இயக்க வரலாற்றில் இருந்து பிரித்துக் காணமுடியாத ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இன்று பார்க்கப்படுகிறது.
இந்நாட்டின் சமூக சீர்திருத்த இயக் கத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய இந்த நீதிக் கட்சியின் தலைமையிலான சென்னை மாகாண அரசுதான்,  மக்கள் தொகையில் பெரும்பாலானோருக் கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களை அகலப்படுத்தியதுடன்,  அரசி யல் களத்தில் அவர்களுக்கான ஓர் இடத்தையும் உருவாக்கித் தந்தது. இந்து மத அறநிலையத் துறையும் கூட நீதிக்கட்சியினால் உருவாக்கப்பட்டது தான்.
“இந்த நூற்றாண்டு விழாவைப் பற்றிய கேள்வி ஒன்று எழுப்பப்படவும் கூடும். ஆனால், இந்த நாட்டில் தோன்றிய பல கட்சிகள் தங்களது எந்த அடையாளத் தையும் விட்டுச் செல்லாமலேயே காணா மல் போய்விட்டன என்பதை நீங்கள் மனதில் நினைவு கொள்ள வேண்டும். நீதிக் கட்சியைப் பொருத்த வரை, அது தன்னைத் தானே மாற்றிக் கொண்டு, தமிழ்நாட்டில் இன்றுள்ள பல பெரிய அரசியல் கட்சி களின் தாய் அமைப்பாக விளங்குகிறது” என்று இரண்டு தொகுதி நீதிக்கட்சி வரலாறு என்னும் நூலின் ஆசிரியர் கே.திருநாவுக் கரசு கூறுகிறார்.
1916  இல் தோற்றுவிக்கப்பட்ட நீதிக் கட்சி,  1925 இல் தோற்றுவிக்கப்பட்ட சுய மரியாதை இயக்கம், 1944 இல் தொடங்கப் பட்ட திராவிடர் கழகம், மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை பற்றி வரலாற்றாசிரியர்கள் விவரித்த போது, அவற்றை பார்ப்பனர்கள் அல்லாத இயக் கங்கள் என்றே விவரித்துள்ளனர். ஆனால், இந்த திராவிடர் இயக்கமோ அல்லது அவற்றின் தலைவர்களோ, அவர்களா கவே இந்தப் பெயரை உணர்வுடன் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை.
“மக்களில் பெரும்பகுதியினராக இருந்த பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு உரிய இடமும், உரிமைகளும் மறுக்கப்பட்டு , அவர்கள் ஒதுக்கப்பட்ட காரணத்தால், பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற பிரிவினை  வரலாற்றினால்தான் உருவாக் கப்பட்டது” என்று அவர் கூறுகிறார்.
தேசிய வரலாற்றாசிரியர்களால் முன் வைக்கப்படும்,  புகழ் பெற்ற கோட்பாட் டுக்கு எதிராக வாதாடும்  வ.கீதாவும், எஸ்.வி. ராஜதுரையும் “பார்ப்பனரல்லாத ஆயிரம் ஆண்டை நோக்கி  என்ற தங்கள் நூலில் பார்ப்பனர் அல்லாத இயக்கம்,  ஏதோ போட்டி பொறாமை உணர்வினால் உருவானது அல்ல என்றும்,  நன்கு உணர்ந்தே உருவாக்கப்பட்ட அரசியல் பிரிவு என்றும், அதன் குறிப்பீடுகள் மாறுபடும் தன்மை உடையனவாகவும்,  பல்வேறுபட்டவையுமாகவும்  இருப்பவை யுமாகும்” என்று கூறுகின்றனர்.
நீதிக்கட்சியினால் உருவாக்கப்பட்டு, பின்பற்றப்பட்டு வந்த அரசியல் கருத்துகள் தொலைதூர பாதிப்புகளை ஏற்படுத்து பவையாகும் என்பதை வலியுறுத்தும் ம.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ “நீதிக்கட்சி அரசினால் அறிமுகப்படுத் தப்பட்ட இடஒதுக்கீட்டு நடைமுறைதான் பார்ப்பனர் அல்லாத இந்து மக்களுக்கும், ஆங்கிலே இந்தியர், கிறித்துவர், முஸ் லிம்கள் போன்ற சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கான வழியை வகுத்துத் தந்தது” என்றும் கூறுகிறார்.
“பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு நடைமுறையைப் பாதுகாப்ப தற்காகவே இந்திய  அரசமைப்பு சட்டத் திற்கு முதல்  திருத்தம் கொண்டு வரப் பட்டதற்கான முதல்படியாக நீதிக்கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு நடைமுறை விளங்கியது” என்று கூறும் வைகோ சுயமரியாதைத் திருமணங்களுக் கான சட்ட பூர்வமான அங்கீகாரம், இரு மொழிக் கொள்கை அறிமுகம், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெய ரிட்டது போன்ற செயல்கள் முதல் தி.மு.க, அரசால் நிறைவேற்றப்பட்டன. நீதிக் கட்சியின் அரசியல் நோக்கங்களின் ஒரு தொடர்ச்சிதான் என்றும் கூறுகிறார்.
சி.நடேச முதலியார், டி.எம்.நாயர் மற்றும் பிட்டி தியாகராய செட்டி ஆகி யோர்தான் நீதிக் கட்சியைத் தோற்றுவித்த தலைவர்கள் என்றாலும்,  “பயிற்சி பெற்ற ஆங்கில மருத்துவரான டி.எம்.நாயர்தான் நீதிக் கட்சியின் அமைப்பு சட்டதிட்டங் களை வரைந்தவர்” என்று தனது ஹோம்லேண்ட் என்ற ஆங்கில இதழில்  தி.மு.க. தோற்றுநர் சி.என்.அண்ணாதுரை தெரிவித்திருக்கிறார்.
“பின்னாட்களில், முதல் உலகப் போரின்போது, பிரெஞ்சு பிரதமராக இருந்த பிரெஞ்சு மருத்துவரான ஜார்ஜஸ் பெஞ்சமின் கிளமன்சோ என்பவரின் சீடராக இருந்தவர் டி.எம்.நாயர். நீதிக் கட்சியின் பத்திரிகையான நீதி என்னும் பெயர் கூட கிளமன்சோ நடத்தி வந்த பத்திரிகை ஒன்றில் இருந்து பெறப்பட்டது தான்”  என்று வைகோ கூறுகிறார்.
நீதிக்கட்சி அறிமுகப்படுத்திய சீர்திருத் தங்கள் சமுதாய ஆக்கபூர்வமான நட வடிக்கை என்னும் இட ஒதுக்கீட்டு நடைமுறையை நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியாக விளங்கியது என்று, முன்னேற்ற ஆய்வு களுக்கான சென்னை நிறுவனத்தின் ஏ.ஆர். வெங்கடாசலபதி கூறுகிறார்.
நீதிக்கட்சியின் தலைவர்கள் ஆங்கி லேய ஆட்சியுடன் இணைந்து செயல்பட் டார்கள் என்ற புகாரை மறுத்தொதுக்கிய அவர், “கலாச்சார ரீதியாகவும், அறிவு பூர்வமாகவும் இந்திய நாட்டை ஒரே மாபெரும் அமைப்பாகப் புரிந்து கொண் டதைப் பற்றிதான் அவர்கள் கேள்வி கேட்டனர்”  என்று கூறுகிறார்.
“இந்தியாவில், மிதவாதிகளால் உரு வாக்கப்பட்ட அரசியல் வழியையே நீதிக் கட்சியினரும் பின்பற்றினர்.  ஆங்கிலேய அரசு நடத்திய 1937 ஆம் ஆண்டு தேர் தல்களில் காங்கிரஸ் ஏன் கலந்து கொண் டது? அதனாலேயே காங்கிரசை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று நம்மால் கூறிவிடமுடி யுமா?” என்று வெங்கடாசலபதி கேட்கிறார். “பி அன்ட் சி ஆலையில் வேலை நிறுத் தத்துக்குத் தலைமையேற்று வழிநடத் தினார் என்பதற்காக தமிழ் அறிஞரும், தொழிற்சங்கத் தலைவருமான திரு.வி.க.வை நாட்டை விட்டு வெளி யேற்ற வேண்டும் என்ற கோரிக் கையை ஏற்பதற்கு பிட்டி தியாகராய செட்டியார் மறுத்தது ஒன்றே, ஒரு தெளிவான அரசியல் கொள்கையை அவர்கள் (நீதிக்கட்சியினர்) கடை பிடித்து வந்தனர் என்பதற்கான சான் றாகும்” என்று வைகோ கூறினார்.
நன்றி: ‘தி இந்து’, 25.11.2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
-விடுதலை ஞா.ம.,28.1.17

பொதுவுடைமைத் தலைவர் சிங்காரவேலர்

இர.செங்கல்வராயன்
முன்னாள் துணைத் தலைவர்
பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு, தி.மலை.மா.
தமிழகத்தின் முதல் பொதுவு டைமைத் தலைவர், காங்கிரசின் முன் னணித் தலைவர், தன்மானத் தலைவர், பெரியாரின் நண்பர், சுயமரியாதை இயக்கத் தளபதி, தொழிலாளர் தலைவர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சிங்காரவேலர் 19-ஆம் நூற்றாண்டில் 1860 பிப்ரவரி 18-ஆம் நாள் பிறந்தவர்; மீனவவகுப்பைச் சேர்ந்த வெங்கடாசலம் செட்டிக்கும், வள்ளியம்மைக்கும் பிறந்து கல்வி அறிவால் பொதுவாழ்வில் உயர்நிலைக்கு வந்த சிங்கார வேலர் சேற்றில் பிறந்த செந்தாமரை.
சென்னையில் உள்ள மீனவர் சமு தாயத்தில் அக்காலத்தில் பெரிய பட்டி னவர், சிறிய பட்டினவர் என்று இரு பிரிவுகள் இருந்தன. பெரிய பட்டினவர் பிரிவைச் சேர்ந்த சிங்காரவேலர் சிறிய பட்டினப் பிரிவைச் சேர்ந்த அங்கம் மையை 1889-இல் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். 1894-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் கழித்து சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல்.பட்டம் பெற்றார். 1907-இல் தனது 47-ஆம் வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண் டார். ஆனால் அவர் பட்டப்படிப்பிற்கும் வழக்குரைஞர் ஆனதற்கும் 17 ஆண்டுகள் ஓடி விட்டன அவரது வணிக ஈடுபாடு இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
வழக்குரைஞர் பணியுடன் பொது வாழ் வில் தீவிரமாக ஈடுபட்ட சிங்காரவேலர், பீகார் மாநிலத்தில் புத்தகயாவில் 1922 டிசம்பர் 27-ஆம் நாள் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு புகழ் மிக்க சொற்பொழிவு ஆற்றினார். இதுவே அவர் கலந்து கொண்ட முதல் மாநாடு ஆகும். மே நாளை முதன் முதலில் இந்தியாவில் சென்னையில் 1-5-1923-இல் கொண்டாடிய பெருமை சிங்காரவேல ருக்கு உரியது. 1925 நவம்பர் 21, 22 நாள்களில் காஞ்சிபுரத்தில் திரு.வி.கல்யாண சுந்தரனார் தலைமையில் நடந்த காங்கி ரசின் மாநில மாநாட்டில் தந்தை பெரியா ருடன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
1925 டிசம்பரில் கான்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை தாங்கி சிறப்பான சொற்பொழிவு ஆற்றினார். முதன் முதலாக இம்மாநாட்டில் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக சிங் காரவேலுவும், பொதுச்செயலாளராக எஸ். வி.காட்கேவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1925-இல் சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்டு 13-ஆவது யானைகவுனி டிவிசன் உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பன் மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தர னாரும் அவ்வமயம் மாநகராட்சி மன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். சிங்கார வேலர் கல்விக் குழுவின் தலைவராக இருந்தபோது மாநகராட்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 78 லிருந்து 94 ஆக உயர்ந்தது.
தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று 1931 டிசம்பர் 26 இல் சென்னையில் நடை பெற்ற சுயமரியாதை மாநாட்டைத் திறந்து வைத்து சிறந்த சொற்பொழிவு ஆற்றினார்.
அவர் சிறப்புரையின் சில பகுதிகள் வருமாறு:
தலைவர் இராமசாமியார் மார்ட்டின் லூதரைப் போல் மதக்கற்பனைகள் நமது நாட்டினின்று ஒழியுமாறு உங்கள் இயக் கத்திற்கு வழி காட்டியுள்ளார். அவர் காட்டிய வழியைக் கடைப்பிடித்து நமது 35 கோடி மக்களும் அறியாமையைப் போக்க வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பெரியார் காட்டிய பகுத்தறிவை உபயோகிப்பீர்களானால் சமதர்மமே அதாவது மதமற்ற, சாதி வேற்றுமையற்ற, பொருளாதார வேற்று மையற்ற தர்மமே நமது நாட்டையும் மற்ற நாடுகளையும் காப்பாற்றவல்ல இயக்க மாகும்.
1931-ஆம் ஆண்டு தந்தை பெரியார் சென்னையில் சிங்காரவேலரை அவர் இல்லத்தில் சந்தித்து தனது குடியரசு இதழில் பகுத்தறிவு மற்றும் சமதர்மக் கொள்கைகள் பற்றிக் கட்டுரைகள் எழுதி வரும்படி கேட்டுக்கொண்டார். 1931 முதல் 1935 ஆம் ஆண்டு வரை சிங்காரவேலர் குடியரசில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1823-இல் வடலூரில் பிறந்த வள்ளலார், 1860-இல் பிறந்த சிங்காரவேலர், 1879-இல் பிறந்த தந்தை பெரியார் ஆகியோர் தங்களின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தமிழகத்தில் செய்யவில்லை என்றால் தமிழ்ச் சமுதாயம் இன்னும் பல கொடிய மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடக்கும்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1932 மே மாதம் சேலம் மாவட்ட சுயமரியாதை மாநாடு நடத்தியது. மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை தாங்கினார். அவர் ஆற்றிய தலைமை உரையின் முக்கிய பகுதி வருமாறு: தோழர்களே! நமது நாட்டிலுள்ள 34 கோடி சாமான்ய மக்கள் உண்மையான சுதந்திரம் பெற்று, பசி இல்லாமலும், மத கற்பனை இல்லாமலும், சாதி, சமயமில்லாமலும், உண்ண, உடுக்க, இருக்க வசதிகள் யாவருக்கும் சரிநிகர் சமான வாழ்க்கை பெற சமதர்ம ராஜயத்தை ஸ்தாபியுங்கள்
சிங்காரவேலர் குடியரசில் எழுதி வந்த கட்டுரைகள் தமிழ் நாட்டில் சமதர்ம வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச்செய்தன என்று சாமி சிதம்பரனார் தனது தந்தை பெரியார் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்காரவேலர் மனித குலத்தின் மீது குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அவர் கொண்டிருந்த பரிவும் அன்பும் அவரைத் தொழிற்சங்கத் தலைவராகவும், சமதர்மவாதியாகவும் ஆக்கியது என்று கூறலாம். 1918-இல் சென்னை நகரில் பிளேக் நோய் பரவியபோது ஆயிரக்கணக் கானோர் மாண்டனர். அக்காலத்தில் தெற்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தன் வீட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்குத் தன் சொந்த செலவில் மருத்து வர்களைக் கொண்டு இலவச மருத்துவ வசதி அளித்தார்.
1945 சூன் மாதம் அச்சகத் தொழிலாளர் மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை வகித்து சொற்பொழிவு ஆற்றினார். அவருடைய உணர்ச்சி மிக்க உரையில் இப்பொழுது எனக்கு வயது 84 எனினும் தொழிலாளி வர்க்கத்திற்காக என் கட மையைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் மத்தியில் இறந்தாலும் அதைவிட எனக்குக் சிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன? என்று கூறினார்.
பெரியாரைப்போல் சிறந்த பகுத்தறிவு வாதியான சிங்காரவேலர் இறைவழிபாடு என்பதன் பேரால் நாம் நடத்தும் திருவிழாக் களைச் சிங்காரவேலர் கண்டிக்கிறார். சிறு குழந்தைகள் அலங்கரித்த பொம்மை களைத் தூக்கி விளையாடுவதைப் போல் பெரிய குழந்தைகள் செய்வதை உற்சவ மென்கிறார்கள் என்று மத உற்சவங்களைக் கண்டிக்கிறார். கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி சுப்பிரமணியர் கோயில் வரை தமிழகத்தில் சுமார் 40,000 கோயில்களுக்கு ஆண்டு தோறும் ஆடம்பரமான திரு விழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றிற்கு ஒரு ஆண்டில் ரூபாய் 1,000 கோடி, 2000 கோடி என்று செலவாகும். திருவண்ணா மலை கார்த்திகை தீபவிழாவிற்கும், திருச்செந்தூர் சூரசம்மார விழாவிற்கும் 15 லட்சம், 20 இலட்சம் என்று மக்கள் கூடுகிறார்கள். இதனால் மக்களின் நேரம், உழைப்பு, பணம் செலவாவதைத் தவிர, நாட்டிற்கு என்ன நன்மை? மதங்களால் எத்தனை கோயில்கள் குருக்கள், மௌலா னாக்கள், பிஷப்புகள் உயிர் வளர்க்கின் றனர்? என்று புரோகிதக் கூட்டத்தைச் சாடுகிறார் சிங்காரவேலர்.
சிங்காரவேலர் தன் எண்பத்தாறாம் வயதில் 1946 பிப்ரவரி 11 ஆம் நாள் இயற்கை எய்தினார். அறிஞர் அண்ணா அவர்கள் 24.2.1946 தேதி திராவிட நாடு வார இதழில் பின் வருமாறு எழுதினார்.
மார்க்ஸியம் என்னும் பொருளாதார தத்துவத்தை சாதாரண மக்களும் உணரும் படி செய்த பெருமை தமிழ் நாட்டில் இருவரையே சாரும் - பெரியார் ராமசாமி அவர்களும், சிங்காரவேலரும், தோழர் சிங்காரவேலு சுயமரியாதை இயக்கம் வளர்வதற்குப் பெரிதும் பாடுபட்டார்.
1952 செப்டம்பர் 26 ஆம் நாள் பொன்மலை ரயில்வே தொழிலாளர் மாநாட்டில் சிங்காரவேலரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் பின் வருமாறு உரை ஆற்றினார்.
பொதுவுடைமை, பகுத்தறிவு சம்பந்தமாக அவரைப்போன்று அப் போது இல்லை என்றே கூறலாம். அவர் எப்போதும் படித்துக்கொண்டே இருப் பார்.  அவர் வீடே புத்தக சாலையாகக் காட்சி அளித்தது. கடினமான பிரச்சினைகள் குறித்து எல்லாம் எழுதுவார். அவர் தைரி யமான நாத்திகர். காங்கிரசில் இருந்து கொண்டே நகர சபையில் கடவுளின் பெயரால் பிரமாணம் எடுக்கக் கூடா தென்று தீர்மானம் கொண்டு வந்தார். எதையும் ஆராய்ச்சி செய்யும் பண்பும், துணிச்சலும், தைரியமும் உடைய அவ ரைப் போன்று ஆராய்ச்சியாளர்கள் நிறைய விஷயம் உணர்ந்து வாதிப்பவர்கள் அவ ருக்குப் பிறகு தோன்றவில்லை.
சிங்காரவேலரின் நினைவைப் போற் றும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட் டுள்ளது. சிங்காரவேலர், பெரியார் ஆகி யோரின் பகுத்தறிவுக் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்குத் தன் பேச் சாலும் எழுத்தாலும் பரப்பி வரும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணியார் அவர் களுக்குத் துணை நிற்க வேண்டியது ஒவ் வொரு தன்மானத் தமிழரின் தலையாய கடமையாகும்.
-விடுதலை ஞா.ம.,22.2.14

சனி, 11 பிப்ரவரி, 2017

1979 ஆம் ஆண்டில் திமுக - அதிமுக இணைப்பிற்கு திராவிடர் கழகத்தின் தலைவர்


தமிழர் தலைவர் எடுத்த நடவடிக்கைகள் பற்றி
‘தி இந்து’ - ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடுகளில் செய்தி!
‘தி இந்து’ - ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடுகள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு துவங்கியுள்ள நிலையில் ஜனவரி 17 அன்று வெளிவந்த இதழ்களில், திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திமுக - அதிமுக அரசியல் கட்சிகளின் இணைப்பிற்கு எடுத்த முயற்சி நடவடிக்கைகள் குறித்து செய்திக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. 1979ஆம் ஆண்டின் இறுதியில் இணைப்பிற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விரிவாக செய்திக் கட்டுரைகள் வந்துள்ளன.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தினை ஆங்கிலத்தில் எழுதிவரும் திராவிடர் இயக்க எழுத்தாளர் ஆர்.கண்ணன் அவர்களின் கூற்றாக,  அந்த செய்திக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அண்ணா பற்றி ஏற்கெனவே ஆங்கிலத்தில் விரிவாக புத்தகம் எழுதியுள்ள ஆர்.கண்ணன், தாம் எழுதி வரும் எம்.ஜி.ஆர். பற்றிய புத்தகத்திற்கு தமிழர் தலைவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை - பெரியார் திடலில் சந்தித்தார். திராவிடர் இயக்கத்தின் அங்கமாக எம்.ஜி.ஆர். வளர்ந்த விதம், தந்தை பெரியாரிடம் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த பற்று, தொடர்பு மற்றும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றி கேட்டறிந்து சென்றிருந்தார். அது சமயம் தமிழர் தலைவரிடம் பேட்டி கண்டபோது கூறிய செய்திகளின் அடிப்படையில் செய்திக் கட்டுரை வெளிவந்துள்ளது.
‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி
1977ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர், எம்.ஜி.ஆர். தனது நம்பிக்கைக்குரிய எழுத்தாளர் சோலையிடம் திமுக - அதிமுக இணைவதற்கான முயற்சிகளை எடுக்கும்படி பணித்தார். இரண்டுகட்சிகளின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள்தான் இந்த இணைப்பிற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை செய்திடுவார் என எம்.ஜி.ஆரிடம் சோலை தெரிவித்தார்.
கி.வீரமணி அவர்களைப் பொறுத்தவரையில் இரண்டு அரசியல் கட்சிகளின் இணைப்பு என்பதை விட தமிழகத்தை ஆண்ட, ஆண்டுவரும் திராவி டர் இயக்க கட்சிகளின் இணைப்பு எனக் கருதினார்.
கி.வீரமணி கூறுகிறார்: ‘எம்.ஜி.ஆர். என்னை அவரது ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு காலை சிற்றுண்டி அருந்த அழைத்திருந்தார்’. அப்பொழுது அதிமுகவை திமுகவுடன் இணைப்பதற்கு கலைஞர் கருணாநிதியுடன் பேசும்படி கூறினார். நான் கலைஞரிடம் சென்று இணைப்புப் பற்றி எம்.ஜி.ஆரின் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஆனால் கலைஞர், இம்மாதிரியான இணைப்பு முயற்சிகள் ஏற்கெனவே சில தடவைகள் எடுக்கப்பட்டு முடிவடையாமல் போயிருக்கின்றன எனக்கூறி இப்பொழுது எடுக்கப்படும் முயற்சி பற்றி ஒருவித அய்யப்பாடுடன் இருந்தார். பின் னர் கலைஞர் - எம்.ஜி.ஆர். இருவரும் ஒரு முடிவினை எடுத்தனர். இரண்டு அரசியல் கட்சிகளும் இரண்டு மாத காலத்திற்கு பல பொதுக் கூட்டங்களை  நடத்திடலாம் எனவும், அந்தக் கூட்டங்களில் இரண்டு கட்சியின் தலைவர்களும் சேர்ந்து கலந்து கொள்ளலாம் எனவும் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். இந்த கூட்டங்களின் ஏற்பாடு மற்றும் தலைவர்களின் பங்கேற்பு மூலமாக இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் நெருங்கி வருவார்கள் எனவும் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். ஆனால் ‘கலைஞர் - எம்.ஜி.ஆர் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு வெளியில் கசிந்துவிட்டது’. இவ்வாறு - கி.வீரமணி கடந்த கால சம்பவங்களை எடுத்துக் கூறினார்.
அந்த சமயத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிஜூ பட்நாயக் (ஒடிசா மாநில முதல்வராக இருந்தவர்) அகில இந்திய அளவில் வலுவான  அரசியல் அமைப்பு தேவை எனக்கருதி, திராவிடர் இயக்க அரசியல் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இணைவது அதற்கு ஆக்கம் கூட்டும் என முயற்சி எடுத்தார்.
1979ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலைஞர் - எம்.ஜி.ஆர் சந்திப்பில் இரண்டு கட்சிகளின் இணைப்பிற்கான அடிப்படைப் பணிகள் வகுக்கப் பட்டன. இணைப்பிற்கு பின்பு கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்‘ என இருந்திடல் வேண்டும். எம்.ஜி.ஆர். முதல்வராக நீடிப்பார். இணைப்பிற்குப் பின்பான கட்சியின் தலைவராக கலைஞர் இருப்பார். சமூகநீதிக் களத்தில் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த பொருளாதார அடிப் படையிலான (ரூ. 9000/- ஆண்டு வருமான வரம்பு) இட ஒதுக்கீட்டு ஆணை ரத்து செய்யப்பட வேண்டும் என முடிவுகள் எட்டப்பட்டன.
இந்த இணைப்பு முயற்சிகளுக்கு அப்பொழுது அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் எதிர்ப்பு நிலை கொண்டிருந்தார். இரண்டு கட்சி களின் இணைப்பு நடைபெற்றால் தங்களது எதிர்காலத்தையே எம்.ஜி.ஆரிடம் அர்ப்பணித்த அதிமுகவின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் நிலை என்னவாகும்? எனவே திமுக - அதிமுக இணைப்பு நடைமுறையில் சாத்தியப்படாது என எம்.ஜி.ஆரிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்த இணைப்பிற்கான சந்திப்பு மற்றும் செய்தி வெளியில் கசிந்து வர ஆரம்பித்த நிலையில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் தலைவர் முசிறி புத்தன், திமுகவினரால் தாக்கப்பட்ட செய்தி  வந்தது. எம்.ஜி.ஆரும் இணைப்பு சாத்தியப்படாது என்னும் நிலையினை ஏற்க வேண்டி வந்தது.
இந்த நிலையினை - திராவிட இயக்கத்தின் இரண்டு அரசியல் கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து இருப்பதற்கு, மத்திய உளவுத்துறையும் அக்கறை எடுத்தது; அதன் பங்கும் உள்ளது எனும் சந்தேகம் நிலவியதையும் கி.வீரமணி தெரிவித்தார்.
‘தி இந்து’ செய்தி
ஆர்.கண்ணன் எழுதிய ‘பொதுமக்களை வயப் படுத்தும் இளவரசர்’ (ஜிலீமீ ஜீக்ஷீவீஸீநீமீ ஷீயீ ஜீஷீஜீuறீவீsவீனீ) எனும் கட்டுரையில் உள்ள சில பகுதிகள்:
1973இல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றது. அது, ‘சினிமா கவர்ச்சியின் வெற்றி’. நாளடைவில் அந்தக் கவர்ச்சி மறைந்து விடும், என திமுகவின் தலைவர்கள் குறைத்து மதிப்பிட்டனர். அந்த மதிப் பீடு தவறாகப் போய்விட்டது. 1977இல் அதிமுக ஆட்சி அமைத்த பின்னர், வியப்படையும் விதமாக, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை இரண்டு கழகங்களை - அதிமுக, திமுக இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டி எம்.ஜி.ஆர் வற்புறுத்திக் கூறினார். 1979இல் ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிஜூ பட்நாயக் தமக்கு உரிய முறையில் இரண்டு கழகங்களின் இணைப்பிற்கு முயற்சி எடுத்தார். பின்னர் கடைசி நேரத்தில் எம்.ஜி.ஆர் தனது மனநிலையினை மாற்றிக் கொண்டார்.
மேற்கண்டவாறு ஆங்கில நாளேடுகள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அதிமுக - திமுக ஆகிய இரண்டு திராவிட அரசியல் கட்சி களின் இணைப்பிற்கான முயற்சிகளில் ஈடுபட்டதை செய்திக் கட்டுரைகளின் மூலம் தெரிவித்துள்ளன.
அதிமுக - திமுக இணைப்பிற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி 1979ஆம் ஆண்டில் எடுத்த முயற்சிகள் பற்றி, எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ப்ருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொழுது அருகில் இருந்து உறுதுணை புரிந்த தொழில் அதிபர் டாக்டர் பழனி. ஜி.பெரியசாமியும் தமது “இதய ஒலி” நூலில் குறிப்பிட்டுள்ளார். 2016 அக்டோபர் 24 இல் திராவிடர் கழகத்தின் சார்பாக சென்னை - பெரியார் திடலில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி ‘இதய ஒலி’ நூலில் பதிவு செய்ததை தமது உரையிலும் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,19.1.17

புதிய தலைமுறை இதழில் (பிப்ரவரி 2, 2017) வெளிவந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேட்டி வருமாறு:

‘‘அடுத்த அய்ம்பது ஆண்டுகளுக்கு
தமிழர் உணர்வை யாரும் அசைக்க முடியாது!’’
புதிய தலைமுறை இதழில் (பிப்ரவரி 2, 2017) வெளிவந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேட்டி வருமாறு:
‘ஆசிரியர்’ என்று அன்போடு அழைப்பார்கள் திராவிடர் கழகத்தினர்;‘கருஞ்சட்டைவீரர்’ என்று சிலிர்ப்போடு சொல்வார்கள் அரசியல் கட்சியினர். கல்வி, இட ஒதுக்கீடு, தீண்டாமை, மூடநம்பிக்கைகள் என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஓங்கி ஒலிக்கும் வெண்கலக் குரல் இவருடையது. எண்பத்து நான்கு வயதிலும் உற்சாகத்துடன் சுழன்று கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை ‘விடுதலை’ பத்திரிகை அலுவலகத்தில் சந்தித் தோம். அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் அவருக்கே உரிய பாணியில் பேசினார்.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களின் எழுச்சியைப் பற்றி...
மத்தியில் எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும், தமிழ் இன உணர்வோ அல்லது ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளோ, எதிலும் ஒரு நியாயமான நிலையை எடுப்பதில்லை. தொடர்ச்சியாக தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். அந்த உணர்வு நீறு பூத்த நெருப்புப்போல் தமிழக மக்களிடத்தில் கனன்றுக்கொண்டே இருக்கிறது. அது, 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்பில் ஆரம்பித்து அண்ணாவால்இருமொழிக்கொள்கையாகஉரு வெடுத்தது போல, இப்போது பெரு உருவம் எடுத்திருக்கிறது. வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் கூடிய கூட்டம் அல்ல இது. ஜல்லிக்கட்டு என்பது உடனடியாக வெளியே தெரியக்கூடிய முனை. ஆழமாக உள்ளே சென்று பார்த்தால் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்காதது, சமஸ்கிருத திணிப்பு, புதியகல்விக் கொள்கை, நீட் தேர்வு... இன்னும் தமிழர்களின் உரிமைகள் பறிப்பு போன்ற பல்வேறு செய்திகள் இருக்கின்றன. மனதில் உள் நீரோட்டமாக இருந்தது தற்போது வெடித்துக் கிளம்ப ஜல்லிக்கட்டு ஒரு வாய்ப்பாக மாறியது.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் அடிப்படை கொள்கை, மாநிலங்களே இல்லாமல் ஒற்றை ஆட்சி முறை இருக்கவேண்டும் என்பதுதான். பன்மொழி, பல கலாச்சாரம், பல மதங்கள் இருக்கக்கூடிய ஒரு நாட்டில் என் மொழி, என் கலாச்சாரம், என் மதம் என்றுதான் இருக்கவேண்டும் என்பதை கொள்கைகளாக வைத் துள்ளார்கள். தங்களின் கையில் இருக்கும் ஆட்சியால் அதை அவ்வப்போது பதப்படுத்திப் பார்க்கிறார்கள். அது ஒவ்வொரு முறையும், புற்றிலிருந்து வெளிவரும் பாம்புபோல் வெளிவந்து, அடிவாங்கியதும் உள்ளே போய்விடுவது. இப்போதும் அப்படித்தான் நிகழ்ந் துள்ளது.
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தோன்றிய உணர்வு இன்றும் இருக்கிறது என்றால், குறைந்தப்பட்சம் இன்னொரு 50 ஆண்டுகளுக்கு இந்த உணர்வை யாரும் அசைக்க முடியாது என்பதுதான் அர்த்தம். 1965 போராட்டத்தைவிட தற்போது நடந்தது தன் னெழுச்சியாக நடந்துள்ளது. முன்பாவது அரசியல் முத்திரை இருந்தது. ஆனால், இப்போது அதெல்லாம் இல்லாமல் தமிழன், தமிழனின் உரிமைகள், தமிழனின் அடையாளம் என்று வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும்  திராவிட கலாச்சாரத்தை அழிக்கக் கூடாது என்று அவர்களும் போராட ஆரம்பித்துள்ளார்கள். இளை ஞர்களின் இந்த உணர்வுகளைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால்,ஜல்லிக்கட்டுபோராட்டத்தில்கலந்து கொள்ளச்சென்றஅரசியல்வாதிகளைமாண வர்கள் புறக்கணித்து திருப்பி அனுப்பிவிட்டார் களே. அரசியல்வாதிகள் மீது அவர்கள் நம்பிக்கை இழந்துள்ளதைத்தானே இது காட்டுகிறது?
மாணவர்கள் ஏதோ ஒரு மனச்சங்கடத்தால் சொல்லியிருப்பார்களே தவிர, அரசியல்வாதிகள் வேறு, மாணவர்கள் வேறு என்று பிரித்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது. அதை ஒரு ஆவேசத்தில் அவர்கள் சொன்னார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதற்கு நூற்றுக்கு நூறு பொருள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், கடைசியாக அவர்களின் கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள் அரசியல் வாதிகள்தான். ஆளும்கட்சியாக உள்ள அதிமுக செயல்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதால் அதற்கு அழுத்தம் தர எதிர்கட்சியான திமுகவின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. இந்த மாணவர்களும் நாளை அரசியல்வாதியாக வந்துதான் எல்லாம் செய்வார்கள். எவ்வளவு நாளைக்குத்தான் கோஷம் போட்டுக்கொண்டு இருக்கமுடியும்? கடற்கரையில் நின்று எல்லாம் செய்யமுடியாது. கோட்டைக்குப் போய்தான் செய்யமுடியும்.
மு.க. ஸ்டாலினை தவிர்த்தவர்கள் சீமானை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே?
யாரைஅனுமதிக்கவேண்டும்,யாரைஅனுமதிக் கக்கூடாது என்பதில் சில அரசியல் விஷமங்களும் உள்ளது. சிலர் இதனை தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும் என்று பார்க்கிறார்கள். பிரச் சினையே அதுதான். இதுக்கு முன்னாடி போராட்டம் என்றால், நான் துவங்கினா நீங்க வரமாட்டீங்க; நீங்க துவங்கினா அவரு வரமாட்டாரு. ஏனெனில், அரசியல் முத்திரை இருக்கும். எங்களை மாதிரி தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கூப்பிடும்போதே வருவதில்லை; யோசிக்கிறார்கள். ஆனால், இப்போது மாணவர்களே வந்ததால், மன ஒதுக்கீடு இல்லாமல் எல்லோரும் வந்துள்ளார்கள். இது அப்படியே இருக்கட்டும். இதில் சிலர் தங்களது முத்திரையைக் குத்தினால் ஏமாந்துபோவார்கள். மாணவர்கள் ஒருமுனை ஆயுதமல்ல, இருமுனை ஆயுதம். அவர்கள் எப்படி யார் பக்கம் திரும்புவார்கள் என்று சொல்லமுடியாது.
அதிமுக உள்கட்சி பிரச்சினையில் சசிகலாவுக்கு ஆதரவாக நீங்கள் அறிக்கை வெளியிடக் காரணம் என்ன?
என்ன காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சசிகலாவை எதிர்க்கிறார்களோ, அதேதான் நானும், திராவிடர் கழகமும் சசிகலாவை ஆதரிப்பதற்கான காரணமும். இது முழுக்க முழுக்க திராவிடர் - ஆரியர் போராட்டம். சசிகலாவை எதிர்ப்பதின் பின்னால் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது. ஆரிய ஊடகங்கள் மிகவும் தெளிவாக அவர்கள் கடமையை செய்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள ஒரு பார்ப்பனர்தான் இதற்கான பணச்செலவுகள் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் யாரென்று இப்போது சொல்ல முடியாது.
சசிகலாவுக்கு வாய்ப்பே தராமல் மதிப்பிடலாமா என்று சொல்கிறீர்கள். ‘சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர் சசிகலா. அவர் பதவிக்கு வந்தால் ஒரு ஊழல் ஆட்சியைத்தானே தருவார்’ என்பது எதிர் தரப்பினர் வாதம்?
நான் யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது ஜனநாயக நாடு. சசிகலாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, தப்பு செய்தால் அவங்களை வீட்டுக்கு அனுப்பிவிடப் போறாங்க. ஜெயலலிதாவையே தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். சரி, சசிகலாவைப் பற்றியே கேள்வி கேட்கிறீர்களே? உலகத்தில் சசிகலாவைத் தவிர வேற எதுவுமே இல்லையா?
அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் தீபாவுக்கு ஆதரவு இருப்பதாக சொல்லப்படுவது பற்றி...?
தெரியாத ஒருவரைப்பற்றி நான் பேச விரும்ப வில்லை. ஜெயலலிதாவுக்கு சொந்தக்காரர் என்பதைத் தவிர தீபாவைப் பற்றி ஒரு தகவலும் தெரியாது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய அளவுக்கு அவர்களை பொருட்படுத்தவும் தேவையில்லை.
‘ஜெயலலிதாவின் வீரஞ்செறிந்த நிலைப் பாட்டை எண்ணிக்கொண்டால், தாமே தம் பலத்தை அதிமுகவினர் உணரமுடியும்’ என்று சொல்லி யிருக்கிறீங்க....
அவரது ஆட்சியின் வீரமாக நீங்க கருதக்கூடிய விஷயங்கள் என்ன?
இந்தியாவிலேயே 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை பாதுகாத்து சமூகநீதியை துணிந்து செயல் படுத்தினார். அவர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும் சரி, அவரது கட்சியினர் மத்தி யில்அமைச்சர்களாகஇருந்தபோதும்சரி,ஜெய லலிதா டில்லிக்குப் போய் அவர்களை சந்தித்ததை விட, அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க தமிழ கம் வந்ததுதான் அதிகம். ஒரு மாநிலத்தின் சுய மரியாதையை ஜெயலலிதா நிலைநாட்டிய அளவிற்கு இனிமேல் யாராவது நிலைநாட்டினால்தான் உண்டு.
சங்கராச்சாரியார் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்தது மிகப்பெரிய வீரம். அவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும் இதை செய்திருக்க முடியாது. அதற்காக, அவரைப் பாராட்ட நான் சென்றபோது, மற்றவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு என்னிடம் தனியாக அரை மணிநேரம் பேசினார். சங்க ராச்சாரியாரைவிடச்சொல்லியும், வழக்கைவாபஸ் வாங்கச் சொல்லியும், டில்லியிலிருந்து அவருக்கு ஏராளமான அழுத்தங்கள்,பெரியபெரிய அதிகார மய்யத்திலிருந்தெல்லாம் வந்தது. அவர்களுக்கெல்லாம், “நீங்க வேணும்னா எனக்கு எழுதிக் கொடுங்க. என்னிடம் ஆதாரங்கள் இருக்கு. ஃபைல் அனுப்புறேன் பாருங்க” என்று துணிச்சலாக பதில் சொல்லியிருக்கிறார். அதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். கடைசிவரை அந்த உறுதியுடன் இருந்தார். இவைகள் போதாதா?
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி குறித்த உங்கள் மதிப்பீடு?
அவருடைய செயல்பாடு மிகவும் அமைதியாக, அதேநேரம் சரியாக சென்றுகொண்டிருக்கிறது. இப் போதும்கூட ஜல்லிக்கட்டுக்கு புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறார். ஓபிஎஸ் அதிகம் பேசமாட்டார். அதுவும் நல்லதுதானே. காமராஜர்கூட அதிகம் பேசியதில்லை.
ஜல்லிக்கட்டுக்காக பிரதமரைச் சந்திக்க தமிழக எம்.பி.க்கள் சென்றபோது, சந்திக்க மறுத்தது குறித்து?
பிரதமர் நடந்துகொண்டது தவறான அணுகுமுறை. அதுதமிழ்நாட்டையேஅவமானப்படுத்தியசெயல். பிரதமர் ஓபிஎஸ்சையும் தம்பிதுரையையும் ஒன் றாக அழைத்துதான் பேசியிருக்கவேண்டும். அதன் பிறகு ஓபிஎஸ்சிடம் தனியாக பேசணும் என்று சொல்லியிருந்தால் தம்பிதுரை எழுந்து வந்திருக்கப் போகிறார். அப்படித்தான் யாராக இருந்தாலும் செய்வார்கள். மாறாக ஓபிஎஸ்சுடன் மட்டும் பேசியது தவறான நிலைப்பாடு. இதன்மூலம் பல யூகங்களுக்கும் இடம் அளிக்கிறார். அதிமுகவில் இரண்டு கட்சிகளை உருவாக்குகிறார்களா?
தமிழக அரசை பாஜக ஆட்டுவிக்கிறது என்று நினைக்கிறீர்களா?
தமிழக அரசை மிரட்டக்கூடிய வாய்ப்பு தங்களுக்கு இருப்பதாக பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி, ஆட்சியை கலைக்கவேண்டும் என்கிறார். அதை மறுத்து, சுப்பிரமணிய சுவாமி கருத்து எங்கள் கருத்தில்லை; அவர் எங்கள் கட்சியிலும் இல்லை என்று இதுவரை பாஜக தலைவர்கள் சொல்லியிருக்கிறார்களா? அப்படியென்றால் அது எதைக் காட்டுகிறது?.
ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவர் ஆகியிருப்பது குறித்து?
அதற்கு அவர் பொருத்தமானவர். நிச்சயமாக மக்கள் எதிர்பார்க்கும் பணியை சிறப்பாகச் செய்வார்.
அதிமுக - திமுக இரண்டு திராவிட இயக்கங்களிலுமே மாற்றம் நிகழ்ந்துள்ளது. இனிமேல் தமிழக அரசியல் எப்படியிருக்கும்?
இந்த மாற்றத்தை நான் நம்பிக்கையுடன் வரவேற்கிறேன். ஏற்கெனவே இருந்த கசப்பு அரசியல் இருக்காது. நல்ல ஆரோக்கியமான அரசியல் திருப்பம் ஏற்படும். கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் சசிகலா உடனடியாக தம்பிதுரை, ஜெயக் குமாரை அனுப்பி பார்த்து வரச்சொன்னார். அதே போல ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத சமயத்தில் ஸ்டாலினும் விசாரித்து வந்தார். ஸ்டா லின், சசிகலா இருவருமே பக்குவமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன் திராவிட இயக் கங்களில் பெரிய குறைபாடாக சொல்லப்பட்டது இதுதான். ஒரு நல்ல நிகழ்வு, துக்க நிகழ்வுகளில்கூட ஒண்ணு சேரமாட்டாங்க. போய் விசாரிக்க மாட்டாங்க. ஒருத்தருக்கொருத்தர் காழ்ப்புணர்ச்சி காட்டுவாங்க. அதெல்லாம் இப்போது இல்லை. நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறீர்கள்?
நீட் தேர்வு வைத்தால் கிராமத்துப் பிள்ளைகள் யாரும் டாக்டர்களாக வரமுடியாது. நம்ம கிராமத்தி லிருந்து இப்போதுதான் முதல் தலைமுறை டாக்டர் களே வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கும் சேர்த்துதான் மாணவர்கள் போராடியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல.
உங்கள் நண்பர் கலைஞரின் அறிக்கைகள் வராத அண்மை நாட்கள் குறித்து எப்படி பார்க்கிறீங்க?
ஏறத்தாழ 70 ஆண்டுகால நட்பும், தொடர்பும் எனக்கும் கலைஞர் அவர்களுக்கும் உள்ளது. நாங்கள் மாணவப் பருவத்திலிருந்தே ஒருவருக்கொருவர் ஒரே கொள்கையிலே பயணம் செய்யக்கூடியவர்கள். எந்தச் செய்தியாக இருந்தாலும் சிறந்த நினைவோடு உடனுக்குடன் பதில் சொல்லக்கூடிய ஒரு கணினி யைப்போலசெயல்படக்கூடியவர்,கலைஞர்.உடல்நிலை காரணமாக அவர் அமைதியாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும். கலைஞர் அவர்களின் உடல்நிலை தற்போது தேறிக் கொண்டிருக்கிறது என்றாலும்கூட,அவர்அதிக மாகபேசக்கூடிய சூழ்நிலையில் இல்லை.ஏனென்றால், அவருக்கு ட்ரக்யாஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. சிறிதுகாலமாக அவரது அறிக்கைகள் இடம்பெறாதது மிகவும் வேதனையான, துன்பமான நிலையாகும்.
84 வயது; ஆனால், சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு என்ன செய் கிறீர்கள்?
தினசரி நடைப்பயிற்சி உண்டு. எப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பேன். நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு அதைவிட வேறு ஒன்றும் தேவையில்லை. வேறு எந்தவிதமான சங்கடமான பழக்கவழக்கங்களும் எனக்கு இல்லை. உடல் பிரச்சினைகளுக்கு எப்போதும் மருத்துவர்களையே நம்பு கிறேன்.
நன்றி: புதிய தலைமுறை, 2.2.2017
-விடுதலை,30.1.17