புதன், 1 பிப்ரவரி, 2017

சுயமரியாதை வீராங்கனை மீனாம்பாள் சிவராஜ்


26.12.1904 - 30.11.1992

பெண் விடுதலைக் காகவும், தலித் விடுதலைக் காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத் தலைவியாக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழி களில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைப்பெற்றன. அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்று நடத்தினார்.

(மீனாம்பாள் சிவராஜ் 
நினைவுநாள் நவம்பர் 30)

-உண்மை,16-30.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக