ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

“நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா”

சமூக சீர்திருத்தங்களின் முன்னோடியான
“நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா


(மக்கள் தொகையில் பெரும் பாலானோருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை அகலப்படுத் தியதுடன், அவர்களது அரசியல் அடித்தளத்தையும் விரிவடையச் செய்தது நீதிக்கட்சிதான்)
இப்போது இல்லாத ஓர் அமைப்பான நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது என்பது ஏதோ வழக்க மற்ற ஒன்றாகத் தோன்றவும் கூடும். முதன் முதலில் ஒரு துணை தேசிய அமைப்பாகப் பார்க்கப்பட்ட நீதிக்கட்சி, பார்ப்பனர் களுக்கு எதிராகப் பேசிக்கொண்டும், சுதந்திரப் போராட்ட இயக்க நோக்கங் களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு மிருந்தது.
நீதிக் கட்சி என்று அதிகாரப் பூர்வமாக அறியப்பட்டது  இந்த தென் னிந்திய நல உரிமைச் சங்கம்.  அது தோற்று விக்கப்பட்ட 1916 ஆம் ஆண்டு கால கட் டத்தில் அதிகமாக மக்களால் அறியப்பட்டி ராமல் இருந்த இந்த   அமைப்புதான் திராவிட இயக்க வரலாற்றில் இருந்து பிரித்துக் காணமுடியாத ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இன்று பார்க்கப்படுகிறது.
இந்நாட்டின் சமூக சீர்திருத்த இயக் கத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய இந்த நீதிக் கட்சியின் தலைமையிலான சென்னை மாகாண அரசுதான்,  மக்கள் தொகையில் பெரும்பாலானோருக் கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களை அகலப்படுத்தியதுடன்,  அரசி யல் களத்தில் அவர்களுக்கான ஓர் இடத்தையும் உருவாக்கித் தந்தது. இந்து மத அறநிலையத் துறையும் கூட நீதிக்கட்சியினால் உருவாக்கப்பட்டது தான்.
“இந்த நூற்றாண்டு விழாவைப் பற்றிய கேள்வி ஒன்று எழுப்பப்படவும் கூடும். ஆனால், இந்த நாட்டில் தோன்றிய பல கட்சிகள் தங்களது எந்த அடையாளத் தையும் விட்டுச் செல்லாமலேயே காணா மல் போய்விட்டன என்பதை நீங்கள் மனதில் நினைவு கொள்ள வேண்டும். நீதிக் கட்சியைப் பொருத்த வரை, அது தன்னைத் தானே மாற்றிக் கொண்டு, தமிழ்நாட்டில் இன்றுள்ள பல பெரிய அரசியல் கட்சி களின் தாய் அமைப்பாக விளங்குகிறது” என்று இரண்டு தொகுதி நீதிக்கட்சி வரலாறு என்னும் நூலின் ஆசிரியர் கே.திருநாவுக் கரசு கூறுகிறார்.
1916  இல் தோற்றுவிக்கப்பட்ட நீதிக் கட்சி,  1925 இல் தோற்றுவிக்கப்பட்ட சுய மரியாதை இயக்கம், 1944 இல் தொடங்கப் பட்ட திராவிடர் கழகம், மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை பற்றி வரலாற்றாசிரியர்கள் விவரித்த போது, அவற்றை பார்ப்பனர்கள் அல்லாத இயக் கங்கள் என்றே விவரித்துள்ளனர். ஆனால், இந்த திராவிடர் இயக்கமோ அல்லது அவற்றின் தலைவர்களோ, அவர்களா கவே இந்தப் பெயரை உணர்வுடன் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை.
“மக்களில் பெரும்பகுதியினராக இருந்த பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு உரிய இடமும், உரிமைகளும் மறுக்கப்பட்டு , அவர்கள் ஒதுக்கப்பட்ட காரணத்தால், பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற பிரிவினை  வரலாற்றினால்தான் உருவாக் கப்பட்டது” என்று அவர் கூறுகிறார்.
தேசிய வரலாற்றாசிரியர்களால் முன் வைக்கப்படும்,  புகழ் பெற்ற கோட்பாட் டுக்கு எதிராக வாதாடும்  வ.கீதாவும், எஸ்.வி. ராஜதுரையும் “பார்ப்பனரல்லாத ஆயிரம் ஆண்டை நோக்கி  என்ற தங்கள் நூலில் பார்ப்பனர் அல்லாத இயக்கம்,  ஏதோ போட்டி பொறாமை உணர்வினால் உருவானது அல்ல என்றும்,  நன்கு உணர்ந்தே உருவாக்கப்பட்ட அரசியல் பிரிவு என்றும், அதன் குறிப்பீடுகள் மாறுபடும் தன்மை உடையனவாகவும்,  பல்வேறுபட்டவையுமாகவும்  இருப்பவை யுமாகும்” என்று கூறுகின்றனர்.
நீதிக்கட்சியினால் உருவாக்கப்பட்டு, பின்பற்றப்பட்டு வந்த அரசியல் கருத்துகள் தொலைதூர பாதிப்புகளை ஏற்படுத்து பவையாகும் என்பதை வலியுறுத்தும் ம.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ “நீதிக்கட்சி அரசினால் அறிமுகப்படுத் தப்பட்ட இடஒதுக்கீட்டு நடைமுறைதான் பார்ப்பனர் அல்லாத இந்து மக்களுக்கும், ஆங்கிலே இந்தியர், கிறித்துவர், முஸ் லிம்கள் போன்ற சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கான வழியை வகுத்துத் தந்தது” என்றும் கூறுகிறார்.
“பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு நடைமுறையைப் பாதுகாப்ப தற்காகவே இந்திய  அரசமைப்பு சட்டத் திற்கு முதல்  திருத்தம் கொண்டு வரப் பட்டதற்கான முதல்படியாக நீதிக்கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு நடைமுறை விளங்கியது” என்று கூறும் வைகோ சுயமரியாதைத் திருமணங்களுக் கான சட்ட பூர்வமான அங்கீகாரம், இரு மொழிக் கொள்கை அறிமுகம், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெய ரிட்டது போன்ற செயல்கள் முதல் தி.மு.க, அரசால் நிறைவேற்றப்பட்டன. நீதிக் கட்சியின் அரசியல் நோக்கங்களின் ஒரு தொடர்ச்சிதான் என்றும் கூறுகிறார்.
சி.நடேச முதலியார், டி.எம்.நாயர் மற்றும் பிட்டி தியாகராய செட்டி ஆகி யோர்தான் நீதிக் கட்சியைத் தோற்றுவித்த தலைவர்கள் என்றாலும்,  “பயிற்சி பெற்ற ஆங்கில மருத்துவரான டி.எம்.நாயர்தான் நீதிக் கட்சியின் அமைப்பு சட்டதிட்டங் களை வரைந்தவர்” என்று தனது ஹோம்லேண்ட் என்ற ஆங்கில இதழில்  தி.மு.க. தோற்றுநர் சி.என்.அண்ணாதுரை தெரிவித்திருக்கிறார்.
“பின்னாட்களில், முதல் உலகப் போரின்போது, பிரெஞ்சு பிரதமராக இருந்த பிரெஞ்சு மருத்துவரான ஜார்ஜஸ் பெஞ்சமின் கிளமன்சோ என்பவரின் சீடராக இருந்தவர் டி.எம்.நாயர். நீதிக் கட்சியின் பத்திரிகையான நீதி என்னும் பெயர் கூட கிளமன்சோ நடத்தி வந்த பத்திரிகை ஒன்றில் இருந்து பெறப்பட்டது தான்”  என்று வைகோ கூறுகிறார்.
நீதிக்கட்சி அறிமுகப்படுத்திய சீர்திருத் தங்கள் சமுதாய ஆக்கபூர்வமான நட வடிக்கை என்னும் இட ஒதுக்கீட்டு நடைமுறையை நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியாக விளங்கியது என்று, முன்னேற்ற ஆய்வு களுக்கான சென்னை நிறுவனத்தின் ஏ.ஆர். வெங்கடாசலபதி கூறுகிறார்.
நீதிக்கட்சியின் தலைவர்கள் ஆங்கி லேய ஆட்சியுடன் இணைந்து செயல்பட் டார்கள் என்ற புகாரை மறுத்தொதுக்கிய அவர், “கலாச்சார ரீதியாகவும், அறிவு பூர்வமாகவும் இந்திய நாட்டை ஒரே மாபெரும் அமைப்பாகப் புரிந்து கொண் டதைப் பற்றிதான் அவர்கள் கேள்வி கேட்டனர்”  என்று கூறுகிறார்.
“இந்தியாவில், மிதவாதிகளால் உரு வாக்கப்பட்ட அரசியல் வழியையே நீதிக் கட்சியினரும் பின்பற்றினர்.  ஆங்கிலேய அரசு நடத்திய 1937 ஆம் ஆண்டு தேர் தல்களில் காங்கிரஸ் ஏன் கலந்து கொண் டது? அதனாலேயே காங்கிரசை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று நம்மால் கூறிவிடமுடி யுமா?” என்று வெங்கடாசலபதி கேட்கிறார். “பி அன்ட் சி ஆலையில் வேலை நிறுத் தத்துக்குத் தலைமையேற்று வழிநடத் தினார் என்பதற்காக தமிழ் அறிஞரும், தொழிற்சங்கத் தலைவருமான திரு.வி.க.வை நாட்டை விட்டு வெளி யேற்ற வேண்டும் என்ற கோரிக் கையை ஏற்பதற்கு பிட்டி தியாகராய செட்டியார் மறுத்தது ஒன்றே, ஒரு தெளிவான அரசியல் கொள்கையை அவர்கள் (நீதிக்கட்சியினர்) கடை பிடித்து வந்தனர் என்பதற்கான சான் றாகும்” என்று வைகோ கூறினார்.
நன்றி: ‘தி இந்து’, 25.11.2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
-விடுதலை ஞா.ம.,28.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக