திங்கள், 20 பிப்ரவரி, 2017

ம.வெ.சிங்காரவேலர்

தோழர் மயிலை வெ.சிங்கார வேலர்-மனிதகுலவரலாற்றில்மறக்க வொனா மகத்தான பெயர்! இந்தியத் துணைக் கண்டத்தில் பொதுவு டைமைக் கன்றை நட்ட நாத்திகப் பெருமகன். தந்தை பெரியார் அவர் களின் உற்ற தோழன்.

தந்தை பெரியார் அவர்களின் ‘குடிஅரசு’ இதழ் இந்தப் புரட்சியா ளரின் பேனா உழுத கருத்துக் கழனி. தந்தை பெரியார் அவர்களோடு மாறு பட்டபொழுது கூட அந்தக் கருத்தை ‘குடிஅரசு’ இதழில் பதிவு செய்ய அனுமதித்த தாராள சிந்தனைக்குச் சொந்தக்காரர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் ருசியா முதலிய நாடுகளுக்குச் சென்று திரும்பிய நிலையில், ஈரோட்டில் தந்தை பெரியார் இல்லத்தில் (1932, டிசம்பர் 28, 29) சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருடன் கலந்துரையாடி ஈரோடு சுயமரியாதை சமதர்மத் திட்டம் வெளியிடப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களைப் போலவே காங்கிரசில் இருந்து வெளி யேறியவர். காந்தியார் எதிர்ப்பிலும் இருவரும் ஒத்தக் கருத்தினரே.

.1927 நாகை ரயில்வே தொழிலாளர் களின் வேலை நிறுத்தத்தில் பொது வுடைமை இயக்கத்தினரும், சுயமரி யாதை இயக்கத்தினரும் பங்கு கொண் டனர். சதி வழக்குகள் தொடரப்பட்டன. ஆளுநர் லார்டு வெலிங்டனின் தனிப்பட்ட அக்கறையால் இலட்சுமண ராவ் என்னும் நீதிபதியால் ம.வெ.சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார், டி.சின்னசாமி பிள்ளை, டி.பி.ஆறுமுகம் ஆகியோர் பத்தாண்டுகள் தண்டிக்கப் பட்டனர்.

வெகுண்டெழுந்தார் தந்தை பெரியார்! அன்றைய நீதிக்கட்சி ஆதரவு பெற்ற மாநிலப் பிரதமர் டாக்டர் சுப்பராயன் அவர்களிடம் பேச, பத்தாண்டுத் தண்டனை ஆறு மாதங்களாகக் குறைக்கப்பட்டது.

தந்தைபெரியார்பற்றியும், சுய மரியாதை இயக்கம் குறித்தும் சிங்கார வேலரின் கணிப்பும், கருத்தும் அசாதா ரணமானவை!

இதோ சிங்காரவேலர் செதுக்கு கிறார்:

‘‘உங்கள் சுயமரியாதை இயக்கத் தைப் பரவச் செய்யும் (ஷிஜீமீணீளீமீக்ஷீs) பிரச்சாரத் தொண்டர்களின் ஆற்றலே ஆற்றல். அனேக இயக்கங்களில் கலந்து உழைத்து வந்திருக்கிறேன். ஆனால், சுயமரியாதை இயக்கத்தாரைப் போன்ற பேசும் திறமை உடையவர்கள் மற்ற இயக்கத்தில் மிகச் சிலரே; உங்கள் இயக்கத் தொண்டர்கள்  பேசும் திறமையே திறமை.

அந்த வேளையில் எனக்கு ஓர் எண்ணம் கிளம்பியது. இவ்வாற்றலை உடைய மக்கள், ஒரு காலத்தில், அரசியல் துறையில் நுழையுங் காலை, இவர்களை வெல்வார் யார்? என்ற எண்ணம் உள்ளுக்குள்ளே உதித்தது. இன்னும் சொல்கிறேன்....

இனிவரும்புதியஅரசியல்திட் டத்தை வழங்க, நமது சுயமரி யா தையோர் தேர்தலில் தலையிடுவார் களேயானால், ஷிஷ்மீமீஜீ ஜிலீமீ றிஷீறீறீs என்று சொல்லும் வகையில் முற்றும் அவர் கைக்கொள்ள என்ன தடை?

இவைகளின் சிறப்பை யோசிக் குங்காலை உங்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது. அதற்கு ஜிலீமீக்ஷீமீ வீs ணீ நிக்ஷீமீணீt திutuக்ஷீமீ என்று சொல்லலாம். உங்கள் இயக்கம் இந்திய உலகத்திற்கு சிறந்ததோர் நன்மை பயக்கத்தக்க கருவியாக நிற்கப் போகிறது....

சுயமரியாதையோருக்கு மதங் கள் ஒழிந்துவிட்டதாக இன்று கூறலாம். முதலில் லூதர் மிஷின் மதத்தைப் போல் மதங்களைச் சீர் திருத்தும் இயக்கமாக ஆரம்பித்து இன்று கடவுளென்ற பெயரையே அகராதியிலிருந்து எடுத்துவிடும்போல் தோன்றுகிறது.

‘‘கடவுளென்ற ஒருவர் இருப்பா ராயின் அவர் என் முன் வருவாராயின் அவர் கழுத்தை அறுப்பேன்’’ என்று ஒரு சுயமரியாதையார் எழுதுகிறார்! இவ்வித மனப்பான்மை நமது தமிழ் நாட்டில் இவ்வளவு சீக்கிரத்தில் தோன்றியதற்கு நமது தோழர் ராமசாமி செய்த அருந்தொண்டு, உழைப்புமே காரணமாகும்‘’ (‘குடிஅரசு’, 13.11.1932) என்று பேசுகிறார் தோழர் ம.வெ.சிங்காரவேலர்.

- மயிலாடன்

குறிப்பு: மயிலை வெ.சிங்கார வேலர் பிறந்த நாள்  இன்று (18.2.1860)
-விடுதலை,18.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக