சனி, 11 பிப்ரவரி, 2017

புதிய தலைமுறை இதழில் (பிப்ரவரி 2, 2017) வெளிவந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேட்டி வருமாறு:

‘‘அடுத்த அய்ம்பது ஆண்டுகளுக்கு
தமிழர் உணர்வை யாரும் அசைக்க முடியாது!’’
புதிய தலைமுறை இதழில் (பிப்ரவரி 2, 2017) வெளிவந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேட்டி வருமாறு:
‘ஆசிரியர்’ என்று அன்போடு அழைப்பார்கள் திராவிடர் கழகத்தினர்;‘கருஞ்சட்டைவீரர்’ என்று சிலிர்ப்போடு சொல்வார்கள் அரசியல் கட்சியினர். கல்வி, இட ஒதுக்கீடு, தீண்டாமை, மூடநம்பிக்கைகள் என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஓங்கி ஒலிக்கும் வெண்கலக் குரல் இவருடையது. எண்பத்து நான்கு வயதிலும் உற்சாகத்துடன் சுழன்று கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை ‘விடுதலை’ பத்திரிகை அலுவலகத்தில் சந்தித் தோம். அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் அவருக்கே உரிய பாணியில் பேசினார்.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களின் எழுச்சியைப் பற்றி...
மத்தியில் எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும், தமிழ் இன உணர்வோ அல்லது ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளோ, எதிலும் ஒரு நியாயமான நிலையை எடுப்பதில்லை. தொடர்ச்சியாக தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். அந்த உணர்வு நீறு பூத்த நெருப்புப்போல் தமிழக மக்களிடத்தில் கனன்றுக்கொண்டே இருக்கிறது. அது, 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்பில் ஆரம்பித்து அண்ணாவால்இருமொழிக்கொள்கையாகஉரு வெடுத்தது போல, இப்போது பெரு உருவம் எடுத்திருக்கிறது. வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் கூடிய கூட்டம் அல்ல இது. ஜல்லிக்கட்டு என்பது உடனடியாக வெளியே தெரியக்கூடிய முனை. ஆழமாக உள்ளே சென்று பார்த்தால் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்காதது, சமஸ்கிருத திணிப்பு, புதியகல்விக் கொள்கை, நீட் தேர்வு... இன்னும் தமிழர்களின் உரிமைகள் பறிப்பு போன்ற பல்வேறு செய்திகள் இருக்கின்றன. மனதில் உள் நீரோட்டமாக இருந்தது தற்போது வெடித்துக் கிளம்ப ஜல்லிக்கட்டு ஒரு வாய்ப்பாக மாறியது.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் அடிப்படை கொள்கை, மாநிலங்களே இல்லாமல் ஒற்றை ஆட்சி முறை இருக்கவேண்டும் என்பதுதான். பன்மொழி, பல கலாச்சாரம், பல மதங்கள் இருக்கக்கூடிய ஒரு நாட்டில் என் மொழி, என் கலாச்சாரம், என் மதம் என்றுதான் இருக்கவேண்டும் என்பதை கொள்கைகளாக வைத் துள்ளார்கள். தங்களின் கையில் இருக்கும் ஆட்சியால் அதை அவ்வப்போது பதப்படுத்திப் பார்க்கிறார்கள். அது ஒவ்வொரு முறையும், புற்றிலிருந்து வெளிவரும் பாம்புபோல் வெளிவந்து, அடிவாங்கியதும் உள்ளே போய்விடுவது. இப்போதும் அப்படித்தான் நிகழ்ந் துள்ளது.
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தோன்றிய உணர்வு இன்றும் இருக்கிறது என்றால், குறைந்தப்பட்சம் இன்னொரு 50 ஆண்டுகளுக்கு இந்த உணர்வை யாரும் அசைக்க முடியாது என்பதுதான் அர்த்தம். 1965 போராட்டத்தைவிட தற்போது நடந்தது தன் னெழுச்சியாக நடந்துள்ளது. முன்பாவது அரசியல் முத்திரை இருந்தது. ஆனால், இப்போது அதெல்லாம் இல்லாமல் தமிழன், தமிழனின் உரிமைகள், தமிழனின் அடையாளம் என்று வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும்  திராவிட கலாச்சாரத்தை அழிக்கக் கூடாது என்று அவர்களும் போராட ஆரம்பித்துள்ளார்கள். இளை ஞர்களின் இந்த உணர்வுகளைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால்,ஜல்லிக்கட்டுபோராட்டத்தில்கலந்து கொள்ளச்சென்றஅரசியல்வாதிகளைமாண வர்கள் புறக்கணித்து திருப்பி அனுப்பிவிட்டார் களே. அரசியல்வாதிகள் மீது அவர்கள் நம்பிக்கை இழந்துள்ளதைத்தானே இது காட்டுகிறது?
மாணவர்கள் ஏதோ ஒரு மனச்சங்கடத்தால் சொல்லியிருப்பார்களே தவிர, அரசியல்வாதிகள் வேறு, மாணவர்கள் வேறு என்று பிரித்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது. அதை ஒரு ஆவேசத்தில் அவர்கள் சொன்னார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதற்கு நூற்றுக்கு நூறு பொருள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், கடைசியாக அவர்களின் கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள் அரசியல் வாதிகள்தான். ஆளும்கட்சியாக உள்ள அதிமுக செயல்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதால் அதற்கு அழுத்தம் தர எதிர்கட்சியான திமுகவின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. இந்த மாணவர்களும் நாளை அரசியல்வாதியாக வந்துதான் எல்லாம் செய்வார்கள். எவ்வளவு நாளைக்குத்தான் கோஷம் போட்டுக்கொண்டு இருக்கமுடியும்? கடற்கரையில் நின்று எல்லாம் செய்யமுடியாது. கோட்டைக்குப் போய்தான் செய்யமுடியும்.
மு.க. ஸ்டாலினை தவிர்த்தவர்கள் சீமானை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே?
யாரைஅனுமதிக்கவேண்டும்,யாரைஅனுமதிக் கக்கூடாது என்பதில் சில அரசியல் விஷமங்களும் உள்ளது. சிலர் இதனை தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும் என்று பார்க்கிறார்கள். பிரச் சினையே அதுதான். இதுக்கு முன்னாடி போராட்டம் என்றால், நான் துவங்கினா நீங்க வரமாட்டீங்க; நீங்க துவங்கினா அவரு வரமாட்டாரு. ஏனெனில், அரசியல் முத்திரை இருக்கும். எங்களை மாதிரி தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கூப்பிடும்போதே வருவதில்லை; யோசிக்கிறார்கள். ஆனால், இப்போது மாணவர்களே வந்ததால், மன ஒதுக்கீடு இல்லாமல் எல்லோரும் வந்துள்ளார்கள். இது அப்படியே இருக்கட்டும். இதில் சிலர் தங்களது முத்திரையைக் குத்தினால் ஏமாந்துபோவார்கள். மாணவர்கள் ஒருமுனை ஆயுதமல்ல, இருமுனை ஆயுதம். அவர்கள் எப்படி யார் பக்கம் திரும்புவார்கள் என்று சொல்லமுடியாது.
அதிமுக உள்கட்சி பிரச்சினையில் சசிகலாவுக்கு ஆதரவாக நீங்கள் அறிக்கை வெளியிடக் காரணம் என்ன?
என்ன காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சசிகலாவை எதிர்க்கிறார்களோ, அதேதான் நானும், திராவிடர் கழகமும் சசிகலாவை ஆதரிப்பதற்கான காரணமும். இது முழுக்க முழுக்க திராவிடர் - ஆரியர் போராட்டம். சசிகலாவை எதிர்ப்பதின் பின்னால் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது. ஆரிய ஊடகங்கள் மிகவும் தெளிவாக அவர்கள் கடமையை செய்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள ஒரு பார்ப்பனர்தான் இதற்கான பணச்செலவுகள் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் யாரென்று இப்போது சொல்ல முடியாது.
சசிகலாவுக்கு வாய்ப்பே தராமல் மதிப்பிடலாமா என்று சொல்கிறீர்கள். ‘சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர் சசிகலா. அவர் பதவிக்கு வந்தால் ஒரு ஊழல் ஆட்சியைத்தானே தருவார்’ என்பது எதிர் தரப்பினர் வாதம்?
நான் யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது ஜனநாயக நாடு. சசிகலாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, தப்பு செய்தால் அவங்களை வீட்டுக்கு அனுப்பிவிடப் போறாங்க. ஜெயலலிதாவையே தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். சரி, சசிகலாவைப் பற்றியே கேள்வி கேட்கிறீர்களே? உலகத்தில் சசிகலாவைத் தவிர வேற எதுவுமே இல்லையா?
அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் தீபாவுக்கு ஆதரவு இருப்பதாக சொல்லப்படுவது பற்றி...?
தெரியாத ஒருவரைப்பற்றி நான் பேச விரும்ப வில்லை. ஜெயலலிதாவுக்கு சொந்தக்காரர் என்பதைத் தவிர தீபாவைப் பற்றி ஒரு தகவலும் தெரியாது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய அளவுக்கு அவர்களை பொருட்படுத்தவும் தேவையில்லை.
‘ஜெயலலிதாவின் வீரஞ்செறிந்த நிலைப் பாட்டை எண்ணிக்கொண்டால், தாமே தம் பலத்தை அதிமுகவினர் உணரமுடியும்’ என்று சொல்லி யிருக்கிறீங்க....
அவரது ஆட்சியின் வீரமாக நீங்க கருதக்கூடிய விஷயங்கள் என்ன?
இந்தியாவிலேயே 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை பாதுகாத்து சமூகநீதியை துணிந்து செயல் படுத்தினார். அவர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும் சரி, அவரது கட்சியினர் மத்தி யில்அமைச்சர்களாகஇருந்தபோதும்சரி,ஜெய லலிதா டில்லிக்குப் போய் அவர்களை சந்தித்ததை விட, அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க தமிழ கம் வந்ததுதான் அதிகம். ஒரு மாநிலத்தின் சுய மரியாதையை ஜெயலலிதா நிலைநாட்டிய அளவிற்கு இனிமேல் யாராவது நிலைநாட்டினால்தான் உண்டு.
சங்கராச்சாரியார் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்தது மிகப்பெரிய வீரம். அவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும் இதை செய்திருக்க முடியாது. அதற்காக, அவரைப் பாராட்ட நான் சென்றபோது, மற்றவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு என்னிடம் தனியாக அரை மணிநேரம் பேசினார். சங்க ராச்சாரியாரைவிடச்சொல்லியும், வழக்கைவாபஸ் வாங்கச் சொல்லியும், டில்லியிலிருந்து அவருக்கு ஏராளமான அழுத்தங்கள்,பெரியபெரிய அதிகார மய்யத்திலிருந்தெல்லாம் வந்தது. அவர்களுக்கெல்லாம், “நீங்க வேணும்னா எனக்கு எழுதிக் கொடுங்க. என்னிடம் ஆதாரங்கள் இருக்கு. ஃபைல் அனுப்புறேன் பாருங்க” என்று துணிச்சலாக பதில் சொல்லியிருக்கிறார். அதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். கடைசிவரை அந்த உறுதியுடன் இருந்தார். இவைகள் போதாதா?
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி குறித்த உங்கள் மதிப்பீடு?
அவருடைய செயல்பாடு மிகவும் அமைதியாக, அதேநேரம் சரியாக சென்றுகொண்டிருக்கிறது. இப் போதும்கூட ஜல்லிக்கட்டுக்கு புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறார். ஓபிஎஸ் அதிகம் பேசமாட்டார். அதுவும் நல்லதுதானே. காமராஜர்கூட அதிகம் பேசியதில்லை.
ஜல்லிக்கட்டுக்காக பிரதமரைச் சந்திக்க தமிழக எம்.பி.க்கள் சென்றபோது, சந்திக்க மறுத்தது குறித்து?
பிரதமர் நடந்துகொண்டது தவறான அணுகுமுறை. அதுதமிழ்நாட்டையேஅவமானப்படுத்தியசெயல். பிரதமர் ஓபிஎஸ்சையும் தம்பிதுரையையும் ஒன் றாக அழைத்துதான் பேசியிருக்கவேண்டும். அதன் பிறகு ஓபிஎஸ்சிடம் தனியாக பேசணும் என்று சொல்லியிருந்தால் தம்பிதுரை எழுந்து வந்திருக்கப் போகிறார். அப்படித்தான் யாராக இருந்தாலும் செய்வார்கள். மாறாக ஓபிஎஸ்சுடன் மட்டும் பேசியது தவறான நிலைப்பாடு. இதன்மூலம் பல யூகங்களுக்கும் இடம் அளிக்கிறார். அதிமுகவில் இரண்டு கட்சிகளை உருவாக்குகிறார்களா?
தமிழக அரசை பாஜக ஆட்டுவிக்கிறது என்று நினைக்கிறீர்களா?
தமிழக அரசை மிரட்டக்கூடிய வாய்ப்பு தங்களுக்கு இருப்பதாக பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி, ஆட்சியை கலைக்கவேண்டும் என்கிறார். அதை மறுத்து, சுப்பிரமணிய சுவாமி கருத்து எங்கள் கருத்தில்லை; அவர் எங்கள் கட்சியிலும் இல்லை என்று இதுவரை பாஜக தலைவர்கள் சொல்லியிருக்கிறார்களா? அப்படியென்றால் அது எதைக் காட்டுகிறது?.
ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவர் ஆகியிருப்பது குறித்து?
அதற்கு அவர் பொருத்தமானவர். நிச்சயமாக மக்கள் எதிர்பார்க்கும் பணியை சிறப்பாகச் செய்வார்.
அதிமுக - திமுக இரண்டு திராவிட இயக்கங்களிலுமே மாற்றம் நிகழ்ந்துள்ளது. இனிமேல் தமிழக அரசியல் எப்படியிருக்கும்?
இந்த மாற்றத்தை நான் நம்பிக்கையுடன் வரவேற்கிறேன். ஏற்கெனவே இருந்த கசப்பு அரசியல் இருக்காது. நல்ல ஆரோக்கியமான அரசியல் திருப்பம் ஏற்படும். கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் சசிகலா உடனடியாக தம்பிதுரை, ஜெயக் குமாரை அனுப்பி பார்த்து வரச்சொன்னார். அதே போல ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத சமயத்தில் ஸ்டாலினும் விசாரித்து வந்தார். ஸ்டா லின், சசிகலா இருவருமே பக்குவமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன் திராவிட இயக் கங்களில் பெரிய குறைபாடாக சொல்லப்பட்டது இதுதான். ஒரு நல்ல நிகழ்வு, துக்க நிகழ்வுகளில்கூட ஒண்ணு சேரமாட்டாங்க. போய் விசாரிக்க மாட்டாங்க. ஒருத்தருக்கொருத்தர் காழ்ப்புணர்ச்சி காட்டுவாங்க. அதெல்லாம் இப்போது இல்லை. நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறீர்கள்?
நீட் தேர்வு வைத்தால் கிராமத்துப் பிள்ளைகள் யாரும் டாக்டர்களாக வரமுடியாது. நம்ம கிராமத்தி லிருந்து இப்போதுதான் முதல் தலைமுறை டாக்டர் களே வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கும் சேர்த்துதான் மாணவர்கள் போராடியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல.
உங்கள் நண்பர் கலைஞரின் அறிக்கைகள் வராத அண்மை நாட்கள் குறித்து எப்படி பார்க்கிறீங்க?
ஏறத்தாழ 70 ஆண்டுகால நட்பும், தொடர்பும் எனக்கும் கலைஞர் அவர்களுக்கும் உள்ளது. நாங்கள் மாணவப் பருவத்திலிருந்தே ஒருவருக்கொருவர் ஒரே கொள்கையிலே பயணம் செய்யக்கூடியவர்கள். எந்தச் செய்தியாக இருந்தாலும் சிறந்த நினைவோடு உடனுக்குடன் பதில் சொல்லக்கூடிய ஒரு கணினி யைப்போலசெயல்படக்கூடியவர்,கலைஞர்.உடல்நிலை காரணமாக அவர் அமைதியாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும். கலைஞர் அவர்களின் உடல்நிலை தற்போது தேறிக் கொண்டிருக்கிறது என்றாலும்கூட,அவர்அதிக மாகபேசக்கூடிய சூழ்நிலையில் இல்லை.ஏனென்றால், அவருக்கு ட்ரக்யாஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. சிறிதுகாலமாக அவரது அறிக்கைகள் இடம்பெறாதது மிகவும் வேதனையான, துன்பமான நிலையாகும்.
84 வயது; ஆனால், சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு என்ன செய் கிறீர்கள்?
தினசரி நடைப்பயிற்சி உண்டு. எப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பேன். நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு அதைவிட வேறு ஒன்றும் தேவையில்லை. வேறு எந்தவிதமான சங்கடமான பழக்கவழக்கங்களும் எனக்கு இல்லை. உடல் பிரச்சினைகளுக்கு எப்போதும் மருத்துவர்களையே நம்பு கிறேன்.
நன்றி: புதிய தலைமுறை, 2.2.2017
-விடுதலை,30.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக