வெள்ளி, 29 மார்ச், 2019

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புக் கொள்கைகளை பா.ஜ.க. அரசு மீறி விட்டது

தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பாக 'டெக்கான் கிரானிகிள்' ஆங்கில இதழுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அளித்த பேட்டி






President of the Dravidar Kazhagam K. Veeramani. -DC


A ARUL PALANI
CHENNAI, MARCH 25
President of the Dravidar Kazhagam K. Veeramani is all set to launch his campaign across the state for a fortnight beginning Tuesday. He will take part in meetings supporting candidates fielded by DMK-led Madhacharbatra Murpokku Kootani (Secular Progressive Alliance).
Before leaving for the campaign, Veeramani spoke to Deccan Chronicle. He criticised the BJP for violating the principles enshrined in the Preamble of the Constitution, and condemned the AIADMK for forming an opportunistic alliance with the BJP.
He said the RSS-backed BJP, which assumed power at the Centre in 2014, has systematically deviated from the path of previous governments, and has violated fundamental principles enshrined in the Constitution, including its Preamble.
For the past five years the Centre has failed on all fronts. The NDA government under Prime Minister Narendra Modi has caused maximum damage. The country is looking for change and effective governance, he said.
Recalling demonetisation, Veeramani said it affected everyone, including industry and production units and the unorganised sector, and major chunks of black money were laundered, defeating the object of demonetisation. Ordinary folk are suffering due to the rise in prices of essential commodities.
Talking about the current general election, he said unlike the past 16 Lok Saba elections, the 17th Lok Sabha election is unique and special since it will decide the future of the country.
This election will decide whether there will be India or Hinduia. This election will decide not only the future of the political parties, but also future of the next generation, Veeramani said.
Taking about the DMK-led Madhacharbatra Murpokku Kootani (Secular Progressive Alliance), Veeramani said the alliance is based on the common principle of working for the welfare and development of the people. However, the other alliance led by the AIADMK is an opportunistic one. Constituents in the AIADMK front have themselves confessed that the alliance was formed to get votes and win seats in the election. They have thrown all principles to the wind.
He said Dr S. Ramadoss, founder and leader of the PMK, a constituent of the AIADMK alliance, keeps on changing his stand. When it comes to aligning with the Dravidian majors Ramadoss is “inconsistently consistent”.
The Centre holds the AIADMK to ransom and threatens ministers with income tax raids and the CBI. They are stooges; a minister even went to the extent of calling Modi their ‘daddy’,
The AIADMK manifesto, Mr Veeramani said, is like resolutions passed by the party. For example, it requests the Centre to exempt students from the state from appearing in the Neet. He noted that the AIADMK lost several opportunities to mount pressure on the Centre to redress the grievances of the state on several issues, including Neet.
AIADMK MPs voted against the BJP government in the no-confidence motion moved in Parliament last year and in the election to the President of India. However, the party failed to utilise the opportunities. The state government passed two Bills related to Neet. It is not known what happened to the Bills even after the lapse of two to three years, and the Centre has not approved them. As a result, the corporate sector is benefiting from Neet, Veeramani obser ved.

(Courtesy: 'Deccan Chronicle' 26th March 2019)

தமிழாக்கம் வருமாறு:


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை தொடங்குவதற்கு முன்னதாக ஆசிரியர் கி. வீரமணி "டெக்கான் கிரானிகிள்" இதழுக்குப் பேட்டி யளித்தார். அப்போது அவர் அரசியலமைப்புச் சட்ட முகப் புரையில்  வலியுறுத்தப்படும் கோட்பாடுகளைப் பா.ஜ.க. புறக்கணித்து விட்டது என்று குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ள அஇஅதிமுக வைக் கண்டித்தார்.

ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற பா.ஜ.க. 2014இல் மத்திய அரசில் அதிகாரம் பெற்றதிலிருந்து முந்தைய அரசுகளின் பாதையிலிருந்து திட்டமிட்டு விலகிச் செல்கிறது. அரசியலமைப்பிலும் அதன் முகப்புரை யிலும் கண்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளையும் மதிப்பதில்லை என்றார்.

கடந்த பல ஆண்டுகளில் எல்லாத் துறைகளிலும் மத்திய அரசு கண்டது தோல்வியே. மோடியின் அரசு அதிகபட்ச அழிவுக்குக் காரணமாயிருந்திருக்கிறது. நாடு மாற்றத்தையும் நல்லாட்சியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றார் அவர். நாணய மதிப்புக் குறைப்பு அனைவரையும் பாதித்திருக்கிறது. தொழில் துறை, உற்பத்தித் தொழிற்சாலைகள், மரபு சாராத தொழில்கள் அனைத்தையுமே. பெருமளவு கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. அந்தத் திட்டத்தின் நோக்கமே தோல்வியடைந்துவிட்டது. அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தால் சாதாரண மக்கள் அவதிப்படுகிறார்கள்.

கடந்த பதினாறு நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும் இந்தத் தேர்தல் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் இது நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது. அரசியல் கட்சிகளின் எதிர் காலத்தை மட்டுமின்றி இனி வர இருக்கும் தலை முறையின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது.

இந்தத் தேர்தல் எதிர்காலத்தில் இருக்கப் போவது  இந்தியாவா, ஹிந்து நாடா என்று தீர்மானிக்கப் போகிறது. திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக் குக் கூட்டணி மக்களின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் பாடுபடுவதற்கான கொள்கை அடிப்படைக் கூட்டணி என்றார் அவர். அஇஅதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத மானது.  வாக்குகளை அள்ளி வெற்றி பெறுவதே நோக்கம் என்று அந்தக் கட்சிகளே குறிப்பிட்டுள்ளன. கொள்கை அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டு விட்டன.

பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாசு தன் நிலைப்பாட்டை மாற்றிய வண்ணம் இருக்கிறார். திராவிடக் கட்சிகளோடு சேரும்போது கொள்கையை  மாற்றுவது என்பதே அவரது கொள்கை.

மத்திய அரசு அஇஅதிமுகவை அச்சுறுத்தி வைத்திருக்கிறது. அமைச்சர்களை வருமான வரிச் சோதனையையும், சி.பி.அய்.யையும் காட்டிப் பயமுறுத் துகிறது. அவர்கள் அடிமைகள். அமைச்சர் ஒருவர் 'மோடி எங்கள் டாடி' என்று சொல்கிறார்.

அவர்களின் தேர்தல் அறிக்கை கட்சிக் கூட்டத்தில் போட்ட தீர்மானங்கள் போல இருக்கிறது என்றார். வீரமணி. 'நீட்' தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்குக் கேட்கிறது. ஆனால் 'நீட்' உட்பட மாநிலத்தின் பல்வேறு குறைகளைத் தீர்ப்பதற்காக மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான எத்தனையோ வாய்ப்புகளை  அஇஅதிமுக அரசு நழுவ விட்டி ருக்கிறது.

கடந்த ஆண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக் கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். அது போலவே குடியரசுத் தலைவர் தேர்தலிலும் எதிர்த்து வாக்களித்தார்கள். ஆனால், மற்றபடி தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை அந்தக் கட்சி பயன்படுத்திக் கொள்ளவில்லை. 'நீட்' தேர்வு தொடர்பான இரண்டு சட்ட வரைவுகளை மாநில அரசு நிறைவேற்றியது. இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும் அவற்றின் கதி என்ன என்று தெரியாத நிலை. மத்திய அரசு அவற்றை அங்கீகரிக்கவில்லை. அதன் விளைவாக கார்ப்ப ரேட்டுகள் 'நீட்' தேர்வுகளில் லாபமடைந்து கொண்டி ருக்கிறார்கள். - இவ்வாறு 'டெக்கான் கிரானிக்கிள்' ஆங்கில  இதழுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம்: 'டெக்கான் கிரானிக்கிள்' மார்ச் 26, 2019

- விடுதலை நாளேடு, 27.3.19

செவ்வாய், 26 மார்ச், 2019

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

சுகுணா திவாகர்




தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் மணியம்மை. தி.மு.க என்னும் அரசியல் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர், தமிழகத்தில் முதன்முதலாக ஓர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண் என்னும் சிறப்புகள் மணியம்மைக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மணியம்மையின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு தொடங்குகிறது.

1920, மார்ச் 10-இல் வேலூரில் கனகசபை - பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர் காந்திமதி. கனகசபையும், பத்மாவதியும் பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டவர்கள். கனகசபையின் நண்பர், தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல்தங்கோ காந்திமதிக்கு 'அரசியல் மணி' என்னும் பெயரைச் சூட்டினார். கே.அரசியல்மணி என்பது கே.ஏ.மணி என்றாகி, 'மணியம்மையார்' என்று காலத்தில் நிலைத்தது. 1943-இல் அரசியல்மணியின் தந்தை இறந்தார். ஒரு மாதத்திலேயே இயக்கப்பணிகளில் தன்னை முழு வதுமாக ஈடுபடுத்திக் கொண்டார் மணியம்மை.

பேச்சாளராக, கட்டுரையாளராக, போராட்டங்களில் பங்கெடுப்பவராக மணியம்மையின் இயக்க வாழ்க்கை அமைந்தது. திராவிடர் கழகக் கொடியின் தத்துவம், பெண்ணுரிமை, அண்ணல் அம்பேத்கர் என்று பலவிஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் மணியம்மை. சமஸ்தானங்கள் தொடங்கி சித்தர் பாடல்கள் வரையிலான பல விஷயங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே' என்னும் அவரது கட்டுரையின் முதல் பாகம் 1944-இலும் இரண்டாம் பாகம் 1947-இலும் 'குடியரசு' இதழிலும் வெளியாகி, பிறகு சிறுவெளியீடாகவும் வெளியானது. கந்தபுராணம், இராமாயணம் என்னும் இரு புராணங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளைப் பட்டியலிட்டு, கந்தபுராணத்தைப் பார்த்து எழுதப்பட்டதே கம்பராமாயணம் என்ற கருத்தை முன்வைத்தார் மணியம்மை. 1946-இல் 'விடுதலை' இதழின் அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவராக மணியம்மை, பெரியாரால் நியமிக்கப்பட்டார். 'விடுதலை' இதழில் வெளியான தலையங்கம் மற்றும் கட்டுரைகளுக்காகப் பலமுறை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உள்ளானார்.

1948-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது கும்பகோணத்தில் கைதானார். 'உங்கள் மதம் என்ன?' என்ற நீதிபதியின் கேள்விக்கு 'எனக்கு மதம் கிடையாது' என்றும் 'உங்கள் சாதி என்ன?' என்ற கேள்விக்கு 'திராவிடச் சாதி' என்றும் பதிலளித்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். பிராமணாள் கபேவுக்கு எதிரான போராட்டத்திலும் கைதானார். இப்படித் தொடர்ச்சியாக இயங்கிவந்த மணியம்மையாரின் முக்கியமான பணிகள் பெரியார் உடல்நலத்தைப் பேணுவதும், அவர் பேச்சு களைக் குறிப்பெடுத்து 'விடுதலை'யில் வெளியிடுவதும். பெரியாரின் பெரும்பாலான புத்தகங்கள் அவர் மேடைப் பேச்சுகளைத் தொகுத்து வெளியிடப்பட்டவையே. அந்தவகையில் மணியம்மையாரின் இந்தப் பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

பெரியாரைப் பொறுத்தவரை சாதி, மதம், கடவுள், மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்று எந்தக் கட்டுப் பாடுகளும் இல்லாமல் வாழ்ந்ததைப் போலவே, உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்ந்தார். வாழ்நாளின் இறுதிவரை மாமிச உணவை அவர் கைவிடவில்லை. தொண்டர்கள் கொடுக்கும் உணவை ஆசையாகச் சாப்பிட்டுவிட்டு, பிறகு அவதிப்படுவார். அவர் மனம் இளைஞனுக்குரிய வேகத்துடனும், சுதந்திர உணர் வுடனும் இருந்ததே தவிர, அவரது உடல், மூப்பையும், இயலாமையையும் நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தது. அப்படிப்பட்ட பெரியாரைக் கண்டிப்புடனும் கரிசனத் துடனும் பேணி வந்தார் மணியம்மை.



பெரியாரின் பழைய காங்கிரஸ் நண்பர் கோவை அய்யாமுத்து ஒருமுறை ரயிலில் கண்டு அவருக்கு பிரியாணி, மட்டன் சாப்ஸ், ஆம்லேட் எல்லாம் வாங்கித் தந்துவிடுகிறார். பிறகு அதை அறிந்த மணியம்மை பெரியாரைக் கண்டிக்கிறார். இரவு ரயில் பயணத்தில் பெரியாரும், மணியம்மையும் வெவ்வேறு ரயில் பெட்டிகளில் பயணித்தாலும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நிற்கும்போதெல்லாம் 'பெரியார் எந்தப் பிரச்சினை யுமின்றித் தூங்கிக்கொண்டிருக்கிறாரா?' என்பதை மணியம்மை வந்து வந்து பார்த்ததைக் கோவை அய்யா முத்து, தன் 'நான் கண்ட பெரியார்' நூலில் பதிவுசெய்கிறார்.

பெரியாரைப் பொறுத்தவரை, அவருடைய பணிகள், அவரே சொன்னதைப்போல 'செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவதைப்போன்றது'. பொதுமக்கள் ஆதரவு இருக்காது; பொதுப்புத்திக்கு எதிரான கருத்துகளைச் சொல்லவேண்டியிருக்கும்; அரசு நெருக்கடி இருக்கும்; அடிப்படைக் கொள்கைகளுக்காக நிலைப்பாடுகளை மாற்றி, பொதுவெளியில் விமர் சனத்துக்குள்ளாக நேரிடும். இவற்றையெல்லாம் புரிந்துவைத்திருந்த பெரியார், தன் காலத்துக்குப் பின், தன் சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவுப்பணிகள் தொடர வலிமையான பொருளியல் அடித்தளம் அவசியம் என்று கருதினார். பிறப்பிலேயே பணக்காரராக இருந்தாலும் மாலை அணிவிக்க, புகைப்படம் எடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலித்து, சிறுகச் சிறுகச் செல்வம் சேர்த்தார். தனக்குப்பிறகு இயக்கப்பணிகளுக் காகச் சேர்த்த சொத்தைக் காப்பாற்றுவதற்கு நம்பிக் கையான ஒருவர் வேண்டும் என்று நினைத்தார்.

அந்தக்காலகட்டத்தில் பெண்குழந்தைகளுக்குச் சொத்துரிமை கிடையாது என்பதால் மணியம்மையைத் தத்து எடுத்து சொத்துகளுக்கு வாரிசு ஆக்க முடியாது. எனவே சட்ட நிர்பந்தத்தின் அடிப்படையில் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். 'இது சட்ட ஏற்பாடுதானே தவிர, வழக்கமான நடைமுறையில் உள்ள பொருளின்படியான திருமணம் அல்ல. மணியம்மை வாழ்நாள் அடிமையும் அல்ல' என்றார் பெரியார். ஆனால் 'இது பொருந்தாத் திருமணம்' என்று திராவிடர் கழகத்திலேயே எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. ஏற்கெனவே கறுப்புச்சட்டை அணிவது, சுதந்திர நாள் துக்க நாளா, இன்பநாளா என்னும் முரண்பாடு, தேர்தல் அரசியலில் ஆர்வம் ஆகிய வற்றால் பெரியாருடன் முரண் பட்ட அண்ணா, மணியம்மை திருமணத்தை முன்னிட்டு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி தி.மு.க-வை உருவாக்கினார். உண்மையில் பெரியார் திருமணம் செய் யாமல் இருந்திருந்தால் மணி யம்மை திருமணம் செய் திருப்பாரா என்பதே கேள்விக் குறிதான். 18 வயதுக்குள்ளா கவே பெண்களுக்குத் திருமணம் நடக்கும் அக் கால கட்டத்தில் 30 வயது வரை திருமணம் செய்யாமல் இயக் கப்பணிகளில் ஈடுபட்டுவந்தார் மணியம்மை. பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்தது சரியா, தவறா என்பதைவிட, பெரியார் மணியம்மைமீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பது உண்மை.

தலைவரின் மனைவி என்பதற்காக அவருக்குத் தனிச்சலுகைகள் ஏதும் தரப்படவில்லை. பெரியார் மேடையில் பேசிக்கொண்டிருப்பார். மணியம்மை மேடைக்கு எதிரில் தரையில் கோணிப்பை விரித்து, புத்தகங்கள் விற்றுக்கொண்டிருப்பார். 'பெரியாருக்கு மாலைகள் குவியல் குவியலாய் வரும். ஒரு மாலை யையும் அவர் மணியம்மைக்கு அணிவிக்கச் சொல்ல வுமில்லை. மணியம்மையும் அதை எதிர்பார்த்ததில்லை. ஏதுமற்ற வேலைக்காரிபோல் சுவடி விற்றுக் கொண்டிருந்தார்' என்று உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

1957-இல் பெரியார் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரும் சிறையில்.  மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக் கோட்டை ராமசாமி  என்னும் இரு தோழர்கள் சிறை யிலேயே மரணமடைந்து அங்கேயே புதைக்கப்பட்டனர். வெளியிலிருந்த மணியம்மை அப்போதைய முதல்வர் காமராசர், உள்துறை அமைச்சர் பக்தவச்சலத்திடம் பேசி புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து, ஊர்வலமாகக் கொண்டுசென்று அந்தப் போராளிகளின் தியாகத்துக்கு உரிய மரியாதை செய்தார். 1967-இல் பம்பாயில் சிவசேனாவால் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, பெரியார் சிவசேனை எதிர்ப்புக்குழுவை உருவாக்கினார். அதில் மணியம்மையும் ஓர் உறுப்பினர்.

வரலாறு மாறியது. 1967-இல் ஆட்சியைப் பிடித்தபிறகு தி.மு.க-வுக்கும், பெரியாருக்குமிடையில் நெருக்கம் ஏற்பட்டது. எந்த அண்ணா மணியம்மை திருமணத்தை விமர்சித்தாரோ, அதே அண்ணாவே, 'அய்யாவை முப்பது ஆண்டுகள் பேணிப் பராமரித்துக் காப்பாற்றியவர் மணியம்மை' என்று புகழாரம் சூட்டினார். அண்ணாவின் தளபதியான கலைஞருக்கு சென்னையில் சிலை வைத்தவரும் மணியம்மைதான். கலைஞர் முதல்வரான போது ஈரோட்டில் இருந்த பெரியாரின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற விரும்பினார். அரசு எடுத்துக்கொள்ள அந்த இல்லத்தைக் கொடுத்த மணியம்மை, அதற்கு 'தந்தை பெரியார் - அண்ணா நினைவகம்' என்றே பெயர் சூட்டினார். அந்த இல்லத் தில்தான் அண்ணா 'விடுதலை'யின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

1973-இல் பெரியார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைவரான மணியம்மைதான், தமிழகத்தின் முதல் பெண் தலைமை என்று சொல்லலாம். 'ராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம்' என்பது திராவிடர் இயக்கத்தின் கருத்து. 'வடநாட்டில் ராமலீலா நடத்தி நம்மை இழிவுபடுத்துகிறார்கள். நாம் ராவணலீலா நடத்தவேண்டும்' என்று 50களின் இறுதியிலேயே பேசினார். 1974-இல் ராவணலீலா நடத்தி பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றினார் மணியம்மை. இந்திரா காந்தி அரசு நெருக்கடிநிலையைக் கொண்டுவந்தபோது இந்தியா முழுவதும் சமூக, ஜனநாயக இயக்கங்கள் நெருக்கடிக்கு உள்ளானதைப் போல திராவிடர் கழகமும் பல சோதனைகளுக்குள்ளானது. நடிகவேள் எம்.ஆர்.ராதா, கி.வீரமணி உள்ளிட்ட இயக்கத்தவர்கள்  சிறைப்படுத்தப்பட்டனர். பெரியார் திடலில் இருந்த எம்.ஆர்.ராதா மன்றம், வெளிநிகழ்ச்சிகளுக்கு வாட கைக்கு விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. 'விடு தலை'யில் தந்தை பெரியார் என்று குறிப்பிடக்கூடாது என்று  நிபந்தனை விதிக்கப்பட்டது. 'நாங்கள் அரசியல் கட்சியல்ல, சமுதாய இயக்கம்' என்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டியைச் சந்தித்துப் பேசினார் மணியம்மை. ஆனால் 'தி.மு.க-வை ஆதரிக்கமாட்டேன் என்று தெரிவிக்க வேண்டும்' என்று விதிக்கப்பட்ட நிபந்தனையை ஏற்க மறுத்தார் மணி யம்மை. நெருக்கடி நிலையை அறிவித்த இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது கறுப்புக்கொடிப் போராட்டத்தை அறிவித்துக் கைதானார்.

பெரியாரை 95 ஆண்டுகள் வரை வாழ்வதற்குப் பேணிப் பராமரித்துவந்த மணியம்மை 60 ஆண்டு களைக்கூட முழுமை செய்யவில்லை. 1978, மார்ச் 16 அன்று மரணமடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் பெரியாரின் நூற்றாண்டு விழா தொடங்கியது. ஆனால் அதைக் காண்பதற்குள் மணியம்மையார் மறைந்துவிட்டார்.

இன்றும்கூடப் பொதுவாழ்க்கையில், அரசியல் கட்சிகளில் பெண்கள் தலைமைப்பொறுப்புக்கு வருவதற்கு எத்தனையோ நெருக்கடிகளை, அவதூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எதிர்ப்புகளை மட்டுமே தொடர்ச்சியாகச் சந்திக்கும் ஒரு சமுதாய இயக்கத்துக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்து போராளியாய் விளங்கிய மணியம்மை, உண்மையிலேயே மாற்று அரசியல் மணிதான்.

நன்றி: 'ஆனந்த விகடன்' 27.3.2019

- விடுதலை நாளேடு, 22.3.19

அண்ணா செல்லும் விமானத்தையாவது பார்க்கிறேன்...

அழைத்துச் செல்லுங்கள் என்றார் பெரியார்


கி.வீரமணி பேட்டி




அடிப்படை லட்சியத்தில் தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்ற அண்ணாவுக்கும் திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் வீரமணிக்கும் இயற்கையாகவே ஒரு பிணைப்பு இருந்தது. பள்ளிச் சிறுவனாக திராவிட இயக்க மேடையில் வீரமணி ஏறிப் பேசிய முதல் கூட்டத்திலேயே அண்ணாதான் சிறப்பு விருந்தினர். அங்கு தொடங்கி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிரிவு, இணைவு எல்லாவற்றுக்கும் சாட்சியமாக இருந்தவர் வீரமணி. பெரியார் & அண்ணா உறவை நினைவுகூர்ந்தார்.


செல்வ புவியரசன்


அண்ணா பங்கேற்ற உங்கள் முதல் கூட்டத்தை நினைவுகூர முடியுமா?

எப்படி மறக்க முடியும்! அறிஞர் அண்ணா அவர்களை என்னுடைய 11-ஆவது வயதில், இன்றைக்குச் சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்தேன். கடலூரில் எங்களையெல்லாம் திராவிட இயக்கத்துக்கு ஆளாக்கிய எனது பள்ளி ஆசிரியர் ஆ.திராவிடமணி திராவிட நாடு பத்திரிகைக்குப் பணமுடிப்பு வழங்குவதற்காக நடத்திய கூட்டம் அது. அண்ணா தொடங்கிய திராவிட நாடு பத்திரிகைக்கு நூறு ரூபாய் நிதியும், அச்சகப் பொருட்களும் அளித்த பெரியார் ஏனையோரும் அந்த முயற்சிக்கு உதவிட வேண்டுகோள் விடுத்திருந்தார். எங்களூரில் ரூ.123 பணமுடிப்பு கொடுத்தோம். அதையொட்டி நடந்த கூட்டத்தில்தான் மேஜையின் மீது ஏற்றி என்னைப் பேசவைத்தார்கள். அண்ணா முன்னிலையில் பேசினேன்.

உங்கள் பார்வையில் பெரியார் - அண்ணா பிரிவுக்கான அடிப்படைக் காரணம் என்ன?

சமூகச் சீர்திருத்தப் பணியைத் தாண்டி தேர்தல் அரசியலிலும் காலடி எடுத்துவைக்க வேண்டும்; சமூக மாற்றங்களைக் கொண்டுவர அரசியலதிகாரம் முக்கியம் என்று எண்ணினார் அண்ணா. பெரியார் சமூகச் சீர்திருத்தத் திலேயே நம்பிக்கை கொண்டிருந்தார். இதுதான் மிக அடிப்படையான முரண்பாடு. அணுகுமுறைகளில் இருந்த முரண்பாடு 1947 ஆகஸ்ட் 15 நாளை அணுகுவதில் அப்பட் டமாக வெளிப்பட்டது. பெரியார், இது துக்க நாள்; ஏனென் றால், சனாதனிகளுக்கு அதிகாரம் மாற்றியளிக்கப்பட்டிருக் கிறது, அவ்வளவுதான் என்று எண்ணினார். அண்ணாவோ, மூன்று எதிரிகளில் ஒருவனான வெள்ளைக்காரன் போய் விட்டான்; பல கட்ட சுதந்திரப் போராட்டத்தில் இது முதல் படி; அதனால், கொண்டாடுவோம் என்று அறிக்கை வெளியிட்டார்.

காங்கிரஸில் இருந்த காலகட்டத்திலேயே தேர்தல் அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்தவர் பெரியார். காந்தியாரும்கூட அப்படித்தானே செயல்பட்டார்! மணி யம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது அண்ணா வெளியேறுவதற்கான சூழலாக அதை மாற்றிக்கொண்டார். கருத்து முரண்பாடு பிரதானமாக இருந்ததே தவிர, மணியம்மையார் மீது அவருக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை; சொல்லப்போனால், மணியம்மையாரின் அனுசரணையான கவனிப்பால்தான் பெரியார் ஆரோக்கியமாக இருந்தார் என்பதைப் பிற்பாடு அங்கீகரித்தும்கூட எங்களிடம் பேசியிருக்கிறார்.

பெரியார் - அண்ணா ஒன்றுகூடலை நினைவுகூர முடியுமா?



நான் அப்போது சென்னையில் இருந்தேன். தேர்தலில் அண்ணா வென்ற பிறகு, பதவியேற்பதற்கு முன்பு பெரி யாரைச் சந்தித்து ஆசி பெற விழைந்தார். திருச்சியிலிருந்த பெரியாரைச் சந்திக்க அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் மூவரும் இங்கிருந்து சென்றிருக்கிறார்கள். இரவு 10 மணிக்கு நடந்த சந்திப்பு அது. மணியம்மையார்தான் அப்போது பெரியாருடன் இருந்தார்கள். அந்தச் சந்திப்பு முடிந்தவுடனேயே பெரியார் சொல்லி மணியம்மையார் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். எனக்கு அந்த நேரத்தில் ஒரு கேள்விதான் இருந்தது. பிரிவு தொடங்கி கண்ணீர்த் துளிகள் என்றே நாங்கள் அவர் களைக் குறிப்பிட்டுவந்தோம்; திமுக என்று குறிப்பிடுவ தில்லை. நாளையிலிருந்து எப்படி எழுதுவது? அய்யாவிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றேன்.

மணியம்மையார் பெரியாரிடம் கேட்டுவிட்டு, திமுக என்றே அய்யா குறிப்பிடச் சொல்கிறார்கள் என்றார். பெரியார் இது தொடர்பாக எழுதினார். அந்தச் சந்திப்பு ராஜாஜி உட்பட பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்றார்கள். ஒருவர்கூட பார்ப்பனர் கிடையாது. எவரும் கடவுளின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு நாத்திக அமைச்சரவை வந்தது உலகத்திலேயே பெரிய விஷயம்; மகிழ்ச்சியாக இருக்கிறது என்று எழுதினார் பெரியார். விமர்சித்தவர் களுக்கும் பதிலடி கொடுத்தார். எனக்கு அடிப்படையான கொள்கை மூன்று. சமூக நீதி, சாதி ஒழிப்பு, பார்ப்பனீய ஒழிப்பு. இந்தக் கொள்கைகளில் நான் மாறியதே இல்லை. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்களை ஆதரிப்பேன். இன்று திமுகவை ஆதரிக்கிறேன் என்று சொல்லியிருந்தார். உள்ளபடி யாகவே பெரிய மகிழ்ச்சியில் அவர் ஆழ்ந்திருந்தார்.

பெரியாரின் மகிழ்ச்சி சரி; ஆனால், 18 ஆண்டுகள் அண்ணாவை எதிர்த்துச் செயல்பட்டுவந்த அடுத்த தலைமுறைத்தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் எப்படியான மனநிலை இருந்தது?

பெரியார் -அண்ணா இருவர் இடையே தனிப்பட்ட அன்பு ஆழமாக இருந்தது என்பது இரு இயக்கங்களில் இருந்தவர்களுக்கும் நன்றாகவே புரிபட்டிருந்தது. பிரிவுக்குப் பின் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அந்தச் சூழலிலும்கூட 1950-51-இல் திருச்சியில் ஒரே சிறையில் அருகருகே அடைக்கப்பட்டிருந்தபோது தன்னைச் சந்திக்க வந்தோர் கொண்டுவந்திருந்த சாக்லேட், பிஸ்கட்டுகளை அண்ணாவுக்கு அனுப்பி வைத்தார் பெரியார். அரசியல் களத்தில் அண்ணாவை எவ்வளவு கடுமையாக விமர்சித்தபோதும் பெரியாரை ஒருநாளும் பதிலுக்குப் பேசியதில்லை அண்ணா.

முதல்வரான பின்னர் உடல்நிலை குன்றியிருந்த பெரியாரைச் சந்திக்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். பெரியாரின் முன் ஈரோட்டில் அவருடன் பணியாற்றிய காலகட்டத்தில் எப்படியான மரியாதையோடு நிற்பாரோ அப்படிதான் - ஒரு மகனைப் போல - நின்றார் அண்ணா; பெரியார் முன் உட்கார மறுத்தார். நாகரசம்பட்டியில் பெரியார் ராமசாமி கல்விக்கூடம் என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடம். அதன் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பெரியாரும் அண்ணாவும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.

பிரிந்திருந்தவர்கள் சேர்ந்திருக்கிறோம் என்று இங்கே பேசினார்கள். அவருடைய உள்ளத்தில் நான் இருந்தேன். என்னுடைய உள்ளத்தில் அவர் இருந்தார். நாங்கள் எப்போதும் பிரிந்திருந்ததே இல்லை என்று அந்த நிகழ்வில் பேசிய அண்ணா, அதிகாரமற்ற இந்தப் பதவியிலிருந்து அதிகம் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நீங்கள் கட்டளை இட்டால், முன்புபோல உங்கள் பின்னாலே வந்து சமூகப் பணியைத் தொடரத் தயாராக இருக்கிறேன் என்றார். பெரியார் பேசினார், நீங்கள் ஆட் சிக்கு வந்துவிட்டீர்கள். மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக் கிறார்கள். உங்களால் முடிந்த வேலையைச் செய்யுங்கள். என் வேலையை நான் செய்கிறேன். ஒரு நாள் ஒரு மணி நேரம்கூடக் குறைத்துக்கொள்ளக் கூடாது; இதிலிருந்து நீங்கள் விலகக் கூடாது. ஆக, பழைய மனக் கசப்புகள் நீங்கிவிட்டன என்பது மட்டுமல்ல, பழைய உறவைக் காட்டிலும் ஒருபடி மேலாகவே உறவு அமைந்தது.

பிரிவுக்குப் பின் நீங்கள் எப்போது அண்ணாவைச் சந்தித்தீர்கள்? எப்படி இருந்தது அந்தச் சந்திப்பு?

திருச்சி மருத்துவமனையில் குழந்தைகளுக்குத் தனி சிகிச்சைப் பிரிவு இல்லாமல் இருந்த காலம் அது. பெரியார் நிதியளித்து உதவினால் குழந்தைகள் பிரிவு தொடங்கலாம் என்று அப்போதைய மருத்துவத் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியாரும் ஒரு லட்ச ரூபாய் தருவதாக அறிவித்துவிட்டார். இடையில் தேர்தல், ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்ட நிலையில், அண்ணாவிடம் காசோலையைக் கொண்டுபோய்க் கொடுத்துவரச் சொன் னார் பெரியார். எனக்கோ மனம் கனமாக இருக்கிறது.

ஏனென்றால், பிரிவுக் காலகட்டத்தில் அவரைக் கடுமையாக விமர்சித்துவந்தவன் நான். அண்ணா எப்படி நம்மை நடத்துவார் என்பது யோசனையாக இருந்தது. தயக்கத்துடன் சென்றவனைத் துளிக் கசப்பின்றி வரவேற் றார் அண்ணா. நான் முதலமைச்சராகி முதன்முதலாக அய்யாவிடமிருந்து நிதியுதவி பெறுவது எனக்குப் பேறு என்று சிரித்துக்கொண்டே சொன்னார். சாதிக் பாட்சாதான் அப்போது சுகாதாரத் துறை அமைச்சர். அவரிடம் சொன் னார், சாதிக், அய்யா ஒரு லட்சம் கொடுத்தால், அது ஒரு கோடிக்குச் சமம். இதற்குப் பிறகு, திருச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடந்தது.

வழக்கமாக, சென்னையில்தான் அந்த மாநாடு நடத்தப்படும். மாநிலத்தின் மய்யமான திருச்சிக்கு அதை மாற்றியிருந்தார் அண்ணா. அந்தச் சமயத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் பேசினார். அதில் சொன்னார், தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தலைவராக இருந்தாலும் ஒன்று பெரியாரிடத் திலே ஆதரித்துப் பயிற்சி பெற்றிருப்பார் அல்லது எதிர்த்துப் பயிற்சி பெற்றிருப்பார். பெரியாரை விட்டு வேறு தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. இன்னும் கேட்டால், தமிழ்நாட்டுத் தலைவர்களெல்லாம் பெரியார் புகழின் சிதறல்கள் என்றார். சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை பெரியாருக்குச் செலுத்தும் காணிக்கையாகவே கருதினார் அண்ணா. அண்ணாவின் இத்தகைய இயல்பு எங்கள் பிணைப்பை உறுதியாக்கிவிட்டது.

அண்ணாவின் மரணத்தை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?

உருக்குலைந்துபோய்விட்டார்! அண்ணா உடல் நலம் குன்றிய நிலையிலிருந்தே கடுமையான பாதிப்புக்குள்ளாகி யிருந்தார் பெரியார். அமெரிக்காவுக்கு அண்ணா புறப்படும் முன்னரே மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவந்தவர் வீட்டுக்கு வந்தும் பதைபதைப்பிலேயே இருந்தார். நாம் ஒருமுறை விமான நிலையம் போய்ப் பார்த்துவிட்டு வரு வோமா? என்று கேட்டார். எங்கள் கணிப்புப்படி அண்ணா விமானம் ஏறும் முன் நாங்கள் அங்கு சென்றடைவது சாத் தியமே இல்லை. ஏனென்றால், மவுன்ட் ரோடு நெடுகிலும் அண்ணாவை வழியனுப்பக் கூட்டம் திரண்டிருந்தது. அவர் ஏற்கெனவே புறப்பட்டுவிட்ட தகவலும் தெரிய வந்தது.

பெரியாரிடம் சொன்னபோது, அண்ணா விமானத் துக்குள் சென்றுவிட்டால் என்ன, அண்ணா செல்லும் விமானத்தையாவது பார்த்துவிட்டு வருகிறேனே! என்றார். வேகமாக வண்டியில் பறந்தோம். நல்ல வாய்ப்பாக, அண்ணா விமானப்படிகளில் ஏறுவதற்காகச் சென்றபோது அவரை அடைந்துவிட்டோம். பெரியாரைப் பார்த்தவுடனே திரும்பிய அண்ணா அவர் அருகில் வந்து வணங்கினார். இருவரின் கண்களிலுமே நீர் கோத்திருந்தது. அமெரிக்கா விலிருந்து திரும்பிய அண்ணாவுக்கு மீண்டும் உடல்நலம் குன்றியபோது அவரை வீட்டில் சென்று சந்தித்துவந்தார் பெரியார். துக்கம் தாளாமல் அண்ணாவின் கன்னங்களைத் தடவிய பெரியார் கண்ணீர்விட்டார். அருகிலிருந்த அத்தனை பேரும் உடைந்துபோய் அழுதோம்.

திரும்பும் வழிநெடுகிலும், அண்ணா போட்டிருந்த சட்டை எப்படி தொளதொளவென்று ஆகிவிட்டது. எவ் வளவு உடல் மெலிந்துவிட்டது என்று சொல்லிச் சொல்லி ஆத்துப்போனார் பெரியார். இறுதி நாட்களில் அண்ணா அடையாறு மருத்துவமனையில் இருந்தபோது பெரியார் என்னுடைய அடையாறு வீட்டிலேயே தங்கிவிட்டார். அங்கு வீட்டுப் படியேறுவது பெரியாருக்குப் பெரும் சிரமம். ஆனாலும், அண்ணாவை அடிக்கடி போய்ப் பார்க்க வேண்டும் என்பதற்காகச் சிரமங்களை ஏற்றார். அண்ணா மறைந்தபோது அண்ணாவின் மறைவு தமிழ்நாடு கண்ட பேரிழப்பு என்று சொன்னார் பெரியார். அண்ணாவின் இரங்கல் செய்தியை என் வீட்டிலிருந்துதான் எழுதினார் பெரியார். அந்த அறிக்கையின் தலைப்பு அண்ணா மறைந் தார், அண்ணா வாழ்க!

நன்றி: 'இந்து தமிழ் திசை', 21-3-2019

-  விடுதலை நாளேடு, 21.3.19