சனி, 16 மார்ச், 2019

தந்தை பெரியார் திருமணம்

தந்தை பெரியார் அவர்களின் துணைவியார்நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார்அவர்களுக்கு வயது 54. திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அந்த 54 வயதில் தந்தை பெரியார்நினைத்திருந்தால் அந்தக் குற்றச் சாற்றுக்கே கூடஇடம் இல்லாமல் போயிருக்குமே. அவர்களின்வீட்டார்கூட எவ்வளவோ வலியுறுத் தியும் கூட திருமணஎண்ணத்தை அய்யா கொண்டார் இல்லை.


திருமணம் இல்லாமல் 16 ஆண்டுகள் இருந்துவிட்டு 17ஆம் ஆண்டில் துணை தேடக்காரணம் என்ன? திருமணஏற்பாட்டுக்குப்பின் 24 ஆண்டுகள் தந்தை பெரியார்அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அந்த மாபெரும்தலைவரை வாழ வைத்து, அதன் மூலம் தமிழர்வாழ்வுக்குப் பெருந்தொண்டு செய்தவர் அன்னையார்என்பதிலும் அய்யமுண்டோ?

இந்தி எதிர்ப்புப் போராட்டம், - பெல்லாரி சிறைச்சாலை,சட்ட எரிப்புப் போராட்டம், தேசிய கொடி எரிக்கும்போராட்டம், தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்புப்போராட்டம், - பிள்ளையார்  உடைப்புப் போராட்டம், -ராமன் பட எரிப்புப் போராட்டம், கோவில் கர்ப்பக்கிரகநுழைவுப் போராட்டம் என்று அலை அலையானபோராட்டங்களை அல்லவா தந்தை பெரியார்நடத்தினார்!

இந்த இடர்ப்பாடான கால கட்டத்தில் தோன்றாத்துணையாக இருந்தவர் _ அன்னை மணியம்மையார்அல்லவா! ஒவ்வொரு சொல்லும் அந்தத் தாயின்கலவையையும் கருணை உள்ளத்தையும் கருணைஉள்ளத்தையும் படம் பிடிக்க வில்லையா?

தந்தை பெரியார் எதிர்பார்த்ததற்கு மேலாக அல்லவா,ஒரு தாயாக இருந்து அந்தத் தந்தையை, தலைவரைதமிழ் நாட்டின் பொது வாழ்வுக்குக் காப்பாற்றிக்கொடுத்திருக்கிறார்.

இதனைக் கொச்சைப்படுத்துபவர்கள் குணக்கேடர்களாகத்தான் இருக்க முடியும்.

தன்னைக் காண வந்த எழுத்தாளராகிய ஒருபெண்மணியை (அனுராதா ரமணன் - பார்ப்பனப்பெண்மணிதான்) கையைப் பிடித்துஇழுத்தவர்கள்தான் அவாளுக்கு ஜெகத் குரு -காமகோடி!- பார்ப்பனர்களின் யோக்கியதைக்குஜெகத்குருக்கள் போதாதா?

வாலிப வயதை ஒரு சமூகத்தின் புரட்சிப் பணிக்காகத்தியாகம் செய்து, தலைவரையும் காத்து, தலைவரின்மறைவுக்குப் பிறகு - அந்தத் தலைவர் எதிர்பார்ப்பைப்பூர்த்தி செய்யும் வகையில் இயக்கத்தைக் கட்டிக் காத்தஅந்த கண்ணியமிக்க கடமை உணர்வை, தியாகஉணர்வை மதிப்பதற்கு மரியாதையான பண்பாடும்சீலமும் தேவைப்படும்.

பார்ப்பனர்களிடத்தில் அதனை எதிர்பார்க்க முடியுமா?

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

நேரம் ஜூலை 16, 2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக