சனி, 16 மார்ச், 2019

அறிக்கை தொடர்கிறது

அறிக்கை தொடர்கிறது


“விடுதலை”யில் 19.6.1949ஆம் தேதியில்நான் எழுதிய தலையங்க அறிக்கையைஅனுசரித்து அடுத்த தொடர்ச்சிஅறிக்கை.

(இதை மக்கள் ஊன்றிப் படிக்கவேண்டும் என்ற வேண்டு கோளுடன்28.6.1949 ‘விடுதலை’யில் பெரியார்எழுதுகிறார்.)

தோழர்களே!

கட்டாய இந்தி எதிர்ப்பு நடவடிக்கையில்நான் தீவிரமாய் ஈடுபடப் போவதால்ஏற்படக் கூடிய விளைவு.

உடுமலைப்பேட்டையில் நான் 144தடையுத்தரவை மீறியதற்காக என்றுசர்க்கார் நடத்தப் போவதாகத்தெரியவரும் காரியத்தின் விளைவு.

சென்னையில் 2 மாதத்துக்கு முன் நான்ஒரு பொதுக் கூட்டத்தில், பேசிய பேச்சின்பேரில் சர்க்கார் ஏதோ நடவடிக்கைஎடுக்க முயற்சிப்பதாய்த் தெரியவருவதால் அதனால் ஏற்படும் விளைவு.

ஆகிய மூன்று விளைவுகளுக்கும் நான்ஆளாகத் தயாராய் இருக்கவேண்டியவனாக இருக்கிறேன்.ஆதலால், அதற்குள் நான் இதற்குமுந்திய அறிக்கையில் தெரிவித்தபடிஇயக்க நடப்புக்கு, இயக்கபொருள்களுக்கு நான் ஒரு ஏற்பாடுசெய்ய வேண்டியவனாக இருக்கிறேன்.

என் மீது ஏற்படும் வழக்குகளுக்குஎதிர்வாதம் செய்வதில் நான் நம்பிக்கைஇல்லாதவனாக இருப்பதால், சர்க்கார்கேஸ் தொடர்ந்தால் நான் தண்டனைஅடைய வேண்டியது என்பது தவிர, வேறுமுடிவு எதிர்பார்ப்பதற்கு இல்லை. மற்றும்எனக்கு என்னைத் தலைவனென்றுசொல்லிக் கொண்டும், என்னைப்பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டும்,என்னைச் சுற்றி இருக்கும் தோழர்கள்சிலரிடம் நான் எவ்வளவு சகிப்புத்தன்மை, அவர்களது தவறை மறக்கும்தன்மை, அனுசரிப்புத் தன்மைமுதலியவைகளைக் காட்டினாலும்,அவைகளை அவர்கள் எனது பலவீனம்,ஏமாந்த தனம் என்று கருதிக் கொண்டு,இயக்கத்தினுடையவும், என்முயற்சியினுடையவும், பின் விளைவைப்பற்றி நான் பயப்படும் வண்ணமாய்ப்பெரிதும் அவநம்பிக்கைக் கொள்ளும்வண்ணமுமாக அவர்கள் நடந்துவருவதாக உணர்கிறேன்.

மற்றும் நான் நாணயஸ்தர்கள் என்றும்,இயக்கத்தினிடமும் என்னிடமும்உண்மையான பற்று உள்ளவர்கள்என்றும், நம்பின தோழர்கள் பலர்ஆயிரக்கணக்கில் ரூபாய்களை மோசம்செய்து விட்டதைக் கண்டும்,கண்டுபிடித்தும் வருகிறேன். சிலர்இன்னமும் என்னை மோசம் செய்துவருவதாக அய்யம் கொண்டும், உறுதிகொண்டும் வருகிறேன்.

இந்த நிலையில் என்னைப் பற்றியும்,இயக்கத்தைப் பற்றியும், இயக்கநடப்பைப் பற்றியும், எனக்குப் பின்னும்ஒரு அளவுக் காவது இயக்கம் நடைபெறவேண்டும் என்பது பற்றியும், ஏதாவதுஒரு வழி செய்ய வேண்டியதைப்பற்றியும் மிகக் கவலையுடனும்,பற்றுடனும் சிந்தித்து நடக்கவேண்டியவனாக இருக்கிறேன். இந்தசிந்தனை கடந்த 4, 5 மாதங்களாகவேஎன்னை வாட்டி வருவதுடன், என் உடல்நிலைக்கும் காரணமாக இருந்துவருகிறது.

இதற்கான என் அனுபவத்தைக்கொண்டு எனக்குத் தோன்றியதை நான்செய்து முடிக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன். சற்றேறக் குறையஒரு முடிவுக்கும் வந்துவிட்டேன்.அக்காரியங்கள் எனது தோழர்களுக்கும்என்னிடம் அன்பும், எனது நலத்தில்கவலையும் உள்ளவர் களுக்கும் சற்றுபுரட்சியாகவும் திடுக்கிடக் கூடியதாகவும்,இயக்கமே அழிந்து விடுமோ என்றுபயப்படக் கூடியதாகவும், எனக்கும் ஒருகெட்ட பேரும், இழிவும் ஏற்படக் கூடியபெரிய தவறாகவும் கூடகாணப்படுவதாகத் தெரிகிறது. பொதுமக்களுக்கும் அப்படியே காணப்படலாம்.

எனக்கு வயது 71-க்கு மேலாகிறது. நான்பொதுவாழ்வில் 40, 50 வருஷகாலஅனுபவமுடையவன். பொதுஜனங்களையும், சிறப்பாக பாமரமக்களையும் ஒரு அளவுக்குஉணர்ந்தவன். அவர்களதுமனப்பான்மையையும் 
(Mass Psychology) தெரிந்தவன். நான்நடப்பு முறையில் சுலபமாக யாருக்கும்இணங்கி விடக் கூடிய அளவுவழவழப்பானவன் என்றாலும்கொள்கை, லட்சிய முறையில்உறுதியானவன், என்னிடம் உள்ளஇயற்கைக் குணம் என்நண்பர்களுக்கும், கூட்டு வேலைக்காரர்களுக்கும் எவ்வளவு பொருத்தமற்றதாகஇருந்தாலும் குற்றமானதாகக்காணப்பட்டாலும் இந்த 30 ஆண்டில் என்கூட்டு வேலைக்காரர்கள் பலர்விலகினாலும், அவர்கள்அதிருப்தியையும், எதிர்ப்பையும் கடந்துஅந்த என் இயற்கைக் குணத்தாலேயேமற்றவர் என்ன நினைப்பார்களோஎன்பதைப் பற்றி கவலைப்படாமல்நடந்து வந்ததாலேயே, யார் இயக்கத்தைவிட்டுப் போனாலும் சரி, எனக்குஎதிரியானாலும் சரி என்று உறுதியாய்நடந்ததாலேயே, பொது ஜனங்களுடையநம்பிக்கைக்கு சிறிதாவதுஆளானவனாக இருந்து இயக்கத்தைநடத்தி வந்திருக்கிறேன். எனது காரியம்,கொள்கை, திட்டம் எதுவானாலும் அவைபற்றி என் அனுபவத்தில், துவக்கத்தில்நான் வெளியிடும் போது பொதுவாகவேமக்களுக்கு எவ்வளவு கஷ்டமாக,கேடானதாகக் காணப்பட்டாலும், அதைவிடாப்பிடியாய் நடத்திக் கொண்டு வந்து,ஆட்சேபித்த மக்களை பெரிதும்ஆமோதிக்கச் செய்தே வந்திருக்கிறேனேதவிர, தவறு செய்ததாகக் கருதி விட்டுவிடவோ, திருத்திக் கொள்ளவோ,துக்கப்படவோ எனக்கு வாய்ப்பே ஏற்பட்டதில்லை. அனேக தடவை எனதுமானாவமானத்தைப் பற்றிக் கூடக்கவலைப்படாமலும் நடந்துவந்திருக்கிறேன்.

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால்எனது பொதுநல வாழ்வு என்பதுபொதுமக்களுக்காக என்று கருதிவாழ்ந்து வந்திருந்தாலும்கூட,அவைகளை என் சொந்த வாழ்வுக்காகச்செய்யப்படும் என் சொந்தக் காரியம், என்சொந்த சொத்து என்பதாகக் கருதியேசுயேச்சையாய், சொந்த உரிமையாய்நடந்தும், நடத்தியும் வந்திருக்கிறேன்.

ஆகவே, அப்படிப்பட்ட உரிமையையும்,சொந்தப் பொறுப்பையும் ஆதாரமாய்க்கொண்டே எனது லட்சியத்தின் நன்மை,இயக்கத்தின் நன்மை என்பதைக் கருதிமேல்காட்டிய அவசர நிலையில்இயக்கத்திற்கு ஆக சில ஏற்பாடுகள்செய்ய முன் வந்து விட்டேன். அதைச்செய்ய வேண்டியது எனது அறிவான,யோக்கியமான கடமை என்றுஉண்மையாகக் கருதி விட்டேன். இதைப்பற்றி முழு விவரமும் தெரியாதவர்களும்நடுநிலையில் அரைகுறையாய் அறியநேர்ந்தவர்களும், என் செயலைதவறாகக் கருதலாம்; ஆத்திரப்படலாம்;எதிரிகள் இதை தங்களுக்குஅனுகூலமாகப் பயன்படுத்திக் கொண்டுபெரியதொரு கேடு ஏற்பட்டதாகதுடிதுடிக்கலாம். என் பொறுப்பு எனக்குப்பெரிது. அது எனக்குத் தெரியும். பொதுமக்களுக்கு ஆக என்று நான் எடுத்துக்கொண்ட காரியம். அவர்கள் என்னைநம்பி நடந்து கொண்ட தன்மைஆகியவை களும் என் ஆயுள் வரையும்,கூடுமான அளவு ஆயுளுக்குப் பின்னும்ஒழுங்கானபடி நடக்கும்படியாகப் பார்த்துஎன் புத்திக்கு எட்டினவரைஅறிவுடைமையோடு நடந்து கொள்ளவேண்டியது எனது கடமையாகும்.

என் வார்த்தையை, நடத்தையைநம்பாமல், ஒப்புக் கொள்ளாமல் எனதுகாரியத்தைக் குறைஎண்ணுபவர்களுக்கு சமாதானம்சொல்லவோ அவர்களுக்குத் திருப்திஏற்படும்படி நடக்கவோ இந்த அவசரசமயத்தில் நான் கவலை எடுத்துக்கொள்ளுவதும், கருதுவதும் வீண்வேலை என்று கருதித் தீரவேண்டியவனாக இருப்பதால் அந்தவேலையை இப்போது நான்மேற்கொள்ளவில்லை.

எனவே, சுமார் 4, 5 மாதங்களாகவேபொதுக்கூட்டங்களில் எனது பேச்சிலும்,எழுத்திலும் தெரிவித்துவந்திருக்கிறபடியும், கோவை மாநாட்டில்எனக்கு வாரிசு ஏற்படுத்துவது பற்றித்தான் கவர்னர் ஜெனரலிடம் பேசினேன்என்று வெளியிட்டபடியும், அதில்மக்களுக்கு உறுதி கூறினபடியும்சமீபத்தில் 19ஆம் தேதி “விளக்கம்”என்னும் தலைப்பில் ‘விடுதலை’யில்குறிப்புக் காட்டி வந்திருக்கிறபடியும்முதலில் எனக்கும், எனது பொருளுக்கும்சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரைஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுஅவசியமும், அவசரமு மாகையால் நான்5, 6 வருஷ காலமாக பழகி நம்பிக்கைகொண்டதும் என் நலத்திலும், இயக்கநலத்திலும் உண்மையான பற்றும்,கவலையும் கொண்டு நடந்துவந்திருக்கிறதுமான மணியம்மையைஎப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக்கொண்டு அந்த உரிமையையும்,தனிப்பட்ட தன்மையையும் சேர்த்துமற்றும் சுமார் 4, 5 பேர்களையும் சேர்த்துஇயக்க நடப்புக்கும், பொருள்பாதுகாப்புக்குமாக ஒரு டிரஸ்ட்டு பத்திரம்எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன்.அப்பத்திரமும் எழுதப்பட்டு வருகிறது.இதில் சட்டப்படி செல்லுபடி ஆவதற்காகஎன்று நமது இஷ்டத்துக்கு விரோதமாகசில சொற்கள் பயன்படுத்த நேரிட்டால்,அதனால் கொள்கையேபோய்விட்டதென்றோ, போய்விடுமோஎன்றோ பயப்படுவது உறுதியற்றதன்மையேயாகும்.

குறிப்பு: இதை ஏன் இப்போதுதெரிவிக்கிறேன் என்றால், இந்த ஏற்பாடுஇயக்கத் தோழர்கள் என்பவர்கள்சிலருக்குப் பிடிக்கவில்லையென்றுஎனக்குத் தெரிய வருவதாலும், எந்தக்காரியமும் முடிந்த பின் தான் உருவாகக்கூடுமானதாலும், ஏதாவது காரணத்தால்இது நடைபெறாமல் போகுமானால்வேறுவிதமாய் எனக்கு ஏதாவது முடிவுஏற்படுமானால் (தடை, முடிவு எந்தநிமிஷமும் எதிர்பார்க்கக் கூடியதுதானே) பொதுமக்களுக்கு என் உள்ளம்தெரிவதற்காக வேண்டியே இப்போதுதெரிவிக்கிறேன். மக்கள் சுபாவம்எனக்குத் தெரியும்.

மக்களின் பொதுநல உணர்ச்சி என்பதுஎப்படிப்பட்டது என்பதும், அவர்களின்சராசரி நாணயம், தன்னல மறுப்புஎவ்வளவு என்பதும், எவ்வளவு பேர்பொதுநலத்துக்காக மாத்திரம்வாழ்பவர்கள், எவ்வளவு தூரம்நடப்பவர்கள் என்பதும் எனக்குத்தெரியும் என்பதை எனது நண்பர்கள்உணர வேண்டுகிறேன்.

(‘விடுதலை’ 28.6.1949.)

---------------------

.வெ.ரா. குறிப்பு

நான் இன்று சென்னைக்கு வந்தேன்.சுமார் 10 நாள் நான் சென்னையில்இல்லாதிருந்த காரணத்தால் நான்எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்திக்கொள்ளுவது என்ற ஒரு முயற்சியை ஒருசாக்காகக் கொண்டு இச்சென்னையில்இயக்கத் தோழர்கள் பெருத்த கிளர்ச்சிசெய்து இருப்பதாக அறிந்தேன்.இயக்கத்தில் பொதுவாக இயக்கத்தோழர்கள் என்பவர்கள் சிலரிடத்தில்எனக்கு சில நாளாகவே அதிருப்திஉண்டு. சிலரிடம் சந்தேகமும் உண்டு.சிலருக்கு இதனால் நட்டமும் உண்டு.சிலரை நான் வெறுத்தும், கண்டித்தும்,ஒதுக்கியும் வந்திருக்கிறேன்.

இப்படிப்பட்டவர்களில் சிலர் இந்தசமயத்தைப் பயன்படுத்திக் கொண்டுதங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகிடைத்ததாய் எண்ணி மற்ற இயக்கத்தோழர்கள் சிலரையும் வசப்படுத்திக்கொண்டு பெரிய திட்டம் போட்டுதமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு வேலைசெய்யப் போவதாகவும், எதிரிகளின்பத்திரிகைகளின் ஆதரவு பெற்றுஇருப்பதாகவும் உணர்ந்தேன்.

ஜாமீன் தொல்லை, உடுமலை முதலியகேசுகள், சர்க்கார் அடக்குமுறை,  இந்தித்தொல்லை ஆகியவைகள் கொண்டஇந்த நெருக்கடி உள்ள எனது நிலைமைஅவர்களுக்குத் தக்க வாய்ப்பு என்றுகருதிக் கொண்டு இதில் இறங்கிஇருக்கிறார்கள். நான் எதையும்அதனதன் இயற்கை முடிவுக்கே விட்டுவிட்டேன்.

எப்படி இருந்தாலும் இயக்கத்தோழர்களும், பொதுமக்களும் சிறிதுஉஷாராய் இருக்க வேண்டும் என்பதற்குஆக இதைக் குறிப்பிடுகிறேன்.

மக்கள் சீக்கிரத்தில் இதன் உண்மையை,கிளர்ச்சிக்காரர் களின் தன்மையை,அதன் இரகசியத்தை அறியக்கூடும்.

- ஈ.வெ.ரா.

(1.7.1949. ‘விடுதலை’)

விளக்கம் கேட்ட தோழர்களுக்கு...

7.7.1949 ‘விடுதலை’ இதழில் விளக்கம்கேட்ட தோழர்களுக்கு பெரியார்விளக்கம் தருகிறார்.

என் 19.6.1949, 28.6.1949 தேதி விளக்கம்என்ற அறிக்கை விஷயமாய் சிலர்தவறாக செய்து வரும் பிரசாரத்தைப்பற்றி பல தோழர்கள் எனக்குக் கடிதம்எழுதி அதை சரியானபடிதெளிவுபடுத்துங்கள் என்று எழுதிஇருக்கிறார்கள்.

என் 19-ந் தேதி அறிக்கையில்:

இயக்க விஷயத்தில் நான் இதுவரைஅலைந்தது போல் அலைய உடல் நலம்இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில்எனக்கு நம்பிக்கை உள்ளவர்கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு ஒருவாரிசு ஏற்படுத்தி அவர்  மூலம் ஏற்பாடுசெய்து விட்டுப் போக வேண்டும் என்றுஅதிக கவலையாக இருக்கிறேன் என்பதுபற்றி தோழர் சி.ஆர். (இராஜாஜி)அவர்களிடம் பேசினேன். இது தவிரசி.ஆர். பேச்சில் வேறு இரகசியம்இல்லை என்பதாக தோழர் சி.ஆர். இடம்பேசிய பேச்சைத் தான் நான்கோவையில் வெளிப்படுத்தியதை அந்தஅறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறேன்.இதுவும் அந்தப் பேச்சை வெளியிடவேண்டுமென்று பலர் கேட்டதால் வெளியிட்டதைக் குறிப்பிட நேர்ந்தது.

ஆனால் அதே அறிக்கையின் கீழ்பாகத்திலேயே “நம்பிக்கையான ஒருவர்கிடைக்கவில்லை என்றால் யாரும்கோபித்துக் கொள்ளக் கூடாது” என்றுஎழுதிவிட்டு,

“இயக்கத்துக்குத் தொண்டாற்றவும்,பொறுப்பு ஏற்கவும், முழு நேரத்தோழர்கள், தங்களை முழுதும்ஒப்படைப்பவர்கள்”

என்பது தான் அர்த்தம் என்றுவிளங்கவும், “அப்படிப் பட்டவர்கள் யார்இருக்கிறார்கள்?” என்றும் அந்தஅறிக்கையிலேயே கேட்டு விளக்கிஇருக்கிறேன்.

மற்றும் ஒரு ஏற்பாடு செய்யப்போகிறேன்  என்பது பற்றியும் அதுஎன்ன ஏற்பாடு என்பதை 28.6.1949 தேதிஅறிக்கையில் விளக்கி இருக்கிறேன்.

அதாவது,

என்னைப் பற்றி, இயக்கத்தைப் பற்றி,இயக்க நடப்புப் பற்றி, எனக்குப்பின்னால் இயக்கம் நடைபெற வேண்டும்என்பது பற்றியும் என்று விளக்கிஇருக்கிறேன்.

மேலும் அதே 28-ந் தேதி அறிக்கையில்,

19-ந் தேதி அறிக்கையில் நான் குறிப்புக்காட்டி இருக்கிறபடி (ஏற்பாடு என்பதற்குப்பொருள் நன்றாய் விளங்கும்படியாகவே)

“எனக்கும், எனது பொருளுக்கும்சட்டப்படிக்கான ஒரு வாரிசைஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுஅவசியம்” என்று எழுதிவிட்டு அதன்கீழேயே அந்த வாரிசுக்கும்,இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம்ஏற்படும் என்பதைப் பற்றியும்தெளிவுபடுத்தி இருக்கிறேன்.

“அந்த வாரிசு உரிமையையும், தனிப்பட்டஉரிமையையும் மற்றும் 5 பேர்களையும்சேர்த்து இயக்க நடப்புக்கும், பொருள்பாதுகாப்புக்கும் ஒரு டிரஸ்ட்டு பத்திரம்எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன்.”

இப்படி எழுதி இருப்பதில் நான்மற்றவர்களை அலட்சியப்படுத்தியதாகவும், இயக்கத் தலைமைப்பதவியை மணியம் மைக்கு பட்டம் சூட்டப்போவதாகவும், பொருள் கொள்ளுவதற்கு இடம் எங்கே இருக்கிறது?

என் பொருள், என்னை நம்பியே பிறர்கொடுத்த பொருள் ஆகியவைகளை(இயக்க நிதி வேறாக இருக்கிறது)இயக்க சம்பந்தப்படுத்தி, ஒரு ஏற்பாடுசெய்வதற்கு நான் ஒரு ஏற்பாடுசெய்கிறேன் என்று தான் கருதி எழுதிஇருக்கிறேன் என்பதை தோழர்களுக்குதெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்கம் இன்று ஒரு அமைப்பாகவேஇருக்கிறது. இயக்கத் துக்குத் தலைவர்,நிர்வாகக் கமிட்டித் தவைர், கிளைக்கழகங்கள் முதலியவைகள்இருக்கின்றன. இவைகளை யார் மாற்றக்கூடும்? இதில் தனிப்பட்டவர்களுக்குஎன்ன உரிமை ஏற்பட்டு விடும்? எந்தஇயக்கத்திலும், எந்த ஸ்தாபனத்திலும்தனிப்பட்ட இரண்டொருவருக்கு சற்றுஅதிகமான செல்வாக்கு அல்லது லீடர்தன்மை வெளிப்படையாகவோ,மரியாதை மூலமாகவோ இருந்து வரும்.இது இயற்கை.

ஆனால், இனி மேல் அப்படி இருக்கமுடியாது. ஜனங்களுக்கு சுதந்திரஉணர்ச்சி அதிகமாகி விட்டதால்வருங்கால மக்கள் ஒரு தனி மனிதனைதனி மரியாதை செய்ய வேண்டியதலைவனாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பொருளைப் பொருத்தவரை சட்டப்படிக்கான பாதுகாப்புஇருந்தால்தான், அதுபாதுகாக்கப்படலாம். பொருளேவேண்டாமென்றால் இனி வரப்போகிறகாலத்தில் எந்த இயக்கமும் கலவரத்தில்,குழப்பத்தில் தான் முடியும். பொருள் இனிசுலபமாக கிடைக்காது. வேண்டாம்என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை.

காங்கிரசுக்கு பலம் இனிமேல்கட்டுப்பாட்டால் அல்ல. தலைவன்தன்மையாலும் அல்ல. அதற்கு 100 கோடிரூபாய் சேர்த்து அதற்கு நிர்வாகிகளாகஒரு சிலர் (தாங்களே) ஆகி அதைகைவசத்தில் வைத்து இருப்பதுதான்.மற்றவைகளை இப்போது விவரிப்பதுபயனுடையதாக ஆகாது.

ஆதலால், ‘வாரிசு’ என்று நான் குறித்ததுஎனது உள்பட பொருளுக்குத் தான்.

டிரஸ்ட்டு என்றது 5, 6 பேர்கள் கொண்டடிரஸ்ட்டு ஆகும். அதில் ஒருவர் என்வாரிசு என்று தான் குறிப்பிட்டேன்;மற்றபடி இவை இயக்கத் தலைமைக்குஅல்ல.

நம்பிக்கையான ஆள் என்றது முழு நேரஉழைப்பும், ஒரே நிலையான உறுதியும்,பொறுப்பும், ஓய்வு ஒழிவு எதிர்பாராமல்இதே வேலையாய், கவலையாய்தொண்டாற்றும் தன்மையும், தளராஉள்ளமும் உள்ளவைகளை காணமுடியவில்லை என்றது தானே ஒழிய,பணம் காசையோ பொருத்ததல்ல நான்சொன்னது.

மக்களை ஏதாவதொரு ஆத்திரக்கருத்தைக் காட்டி கிளப்பி விட்டுவிடலாம். ஆனால், அது இயக்கலட்சியத்துக்கும், நடப்புக்கும் பயன்படவேண்டாமா? சிறு பிள்ளைகள் பாவம்,பதட்டமாக இருந்தாலும், பெரியவர்களாகநீண்டநாளாக கூட ஒத்து உழைத்து,இருக்கிறவர்கள் மிக மிகஜாக்கிரதையாக, பொறுப்பாகசிந்தித்துப் பார்த்து முடிவுக்கு வரவேண்டும்.

நாளைக்கு இயக்கத்தை யார்வேண்டுமானாலும் கைப்பற்றி விடலாம்.அது ஒருவர் கையிலேயே இருக்கவேண்டுமானால், அதாவது ஏற்ற ஒருலட்சியத்திலேயே இருக்கவேண்டுமானால் நிதியும், அதைவிடமுக்கியமான திடமாகநடத்துகிறவர்களும் வேண்டும். அல்லதுஇயக்கப் பொருள் வேறு கொள்கைக்காரர்கள் கைக்குப் போகாமல்பாதுகாப்பாவதும் வேண்டும். எதற்கும்மெஜாரிட்டியே போதாது. ஆத்திரமேபோதாது. மக்களை ஆத்திரத்திற்கும்,ஆவேசத்திற்கும் கிளப்பி விடும்மந்திரங்களே போதாது.

ஆதலால் பொறுப்புள்ள அறிஞர்கள்,இளைஞர்கள் இதைக் கவனித்து நடந்துகொள்ள வேண்டுகிறேன்.

மற்றபடி பிரஸ்தாப திருமணம் என்பதுசட்டப்படிக்கான பெயரே ஒழிய,காரியப்படி எனக்கு வாரிசு தான்.

மணியம்மை அறியாத சிறிய பெண்அல்ல. 31-வது வயதும் பூப்படைந்து 15, 16ஆண்டாக திருமணத்தை வெறுத்துஇயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிறபெண்ணும் ஆகும். அதற்கு அதன் 14-வதுவயதில் திருமணமாகி இருந்தால்,இன்று பேரக் குழந்தைகளை பெற்றுஇருக்கலாம்.

மணியம்மையின் தந்தையாரே அதுதிருமணம் செய்து கொள்ளஇஷ்டப்படாததை ஏற்று,  தங்கள்வீட்டிலேயே பூப்பெய்திய பின் 10, 11ஆண்டு காலம் திருமணம் இல்லாமல்வைத்து இருந்திருக்கிறார். மணியம்மைவாரிசு என்பது, டிரஸ்ட்டு சம்பந்த உரிமைஎன்பதும், மணியம்மைக்கு சுதந்திரபாத்தியமுடையதல்ல. பரம்பரைபாத்தியமுடையதுமல்ல.

ஆனதால் இந்தத் திருமணம்பொருத்தத்தை அல்லதுமணியம்மையை ஏமாற்றும் திருமணமும்அல்ல. ஏன்? பொருந்தாத திருமணமும்அல்ல. மணியம்மை உள்பட யாருக்கும்எந்தவிதமான நிர்பந்தமோ, அவருக்குஇஷ்ட மில்லாத துன்பங்களை சகித்துக்கொண்டிருக்க வேண்டிய, அதாவதுவாழ்நாள் அடிமைத் தன்மைக்குஆளானதோ ஆன திருமணம் அல்ல.

விளக்கம் கேட்ட தோழர்களுக்கு இந்தவிளக்கம் இப்போதைக்குப் போதும்என்று கருதுகிறேன்.”

ஈ.வெ.ரா.

(‘விடுதலை’ 7.7.1949).

9.7.1949 ‘விடுதலை’ இதழில் வெளியானகட்டுரை:

இன்னமுமா விளக்கம் தேவை?

திராவிடர் கழகத் தலைவர் ‘திருமணம்’விஷமப் பிரசாரத் துக்குப்பயன்படுத்தப்பட்டு எதிரிகள் ஊர் ஊராய்சென்று எதிர்ப்பை உண்டாக்கி, அதைப்பிரமாதப்படுத்திய பின்பு என்னகாரணத்தாலோ இப்போது இவ்வளவுசீக்கிரத்தில் கழகத் தோழர்கள், பலர்ஒன்றும் புரியாமல் திண்டாடுவதாகத்தெரிகிறது. இன்று வந்த கடிதங்களும்,நபர்களும் மிகவும் சுரம் குறைந்ததன்மையில் துக்கக் குறிகளோடுகாணப்படுவ தல்லாமல் ‘இந்தநிலையில் நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்க வேண்டியகவலைக்கு வந்து இருக்கிறார்கள்.

“எல்லாம் அறிக்கை, குறிப்பு, விளக்கம்என்னும் பேரால் தெரியப்படுத்திஆகிவிட்டதே” என்று சொன்னால்,அதற்கு “உங்கள் சங்கதியைத்தெரிவித்து விட்டீர்கள். நாங்கள் என்னசெய்ய வேண்டும்; எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி தெரிவிக்கவேஇல்லையே” என்று கேட்கிறார்கள்.

25 வருஷக் காலமாக சுயமரியாதைப்பிரசாரம், பகுத்தறிவுப் பிரசாரம்,பொதுவுடைமை சமதர்மப் பிரசாரம்,உண்மை நாடுவோர் பிரசாரம், ஜஸ்டிஸ்கட்சி பிரசாரம், திராவிடர் கழகப் பிரசாரம்செய்து வந்தும், “திராவிட கழகத்தார்முன்னால் எப்படிப்பட்ட கட்சிக்காரரும்பேச முடியாது. அவர்களைப் போல்பேச்சில், பகுத்தறிவில் கெட்டிக்காரர்கள்யாரும் இல்லை” என்கின்ற பெயர்பெற்று இருந்தும், இன்று சிறிது கூடபகுத்தறிவைச் செலுத்தி சிந்தித்துப்பார்க்க கவலை கொள்ளாமல் பகுத்தறிவுசெலவுக்கு சிக்கனம் காட்டி விட்டு ஏதோ“ஒரு சமயம் கிடைத்தது; நமதுஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளுவதற்கு”என்கின்ற முறையில் ஒரு கும்பல்கும்மாளம் அடிப்பதற்கு அடிமையாகிவிட்டு இன்று வந்து நாங்கள் என்னசெய்வது? என்று கேட்டால் என்னசொல்ல முடியும்?

“செய்து வந்த வேலை பயன்படவில்லை.இந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டுஸ்தாபன ரீதியாய் இனி ஒரு காரியமும்செய்ய முடியாது” என்கின்ற நிலைக்குவர வேண்டி இருக்கலாமே தவிர, இதில்மக்களுக்குச் சொல்ல வேண்டியது என்னஇருக்கிறது?

இந்தப்படி எத்தனை தரம்விஷமத்தனமானதும், கண்மூடித்தனமானதுமான எதிர்ப்புகளுக்குசமாளிப்பு கொடுத்து வருவது? இதுமுதல் தடவை அல்லவே.

வெள்ளையனிடம் சுயராஜ்யம் பெற்றமக்கள் நிலையைப் போல் தான் நம் கழகமக்கள் நிலையும் ஏற்பட வேண்டியதத்துவத்தில் இருந்து வருகிறது.ஆதலால் சில நாட்களுக்காவது கழகம்தன்னரசாகவோ, ‘பூரண சுயேச்சைஉடையதாகவோ இருக்கலாமே’என்பதைத் தவிர, ‘நாங்கள் என்னசெய்வது?’ என்று கேட்பவர்களுக்கு பதில்சொல்ல வேறு வகை காணவில்லை.

இந்தக் கொதிப்பில் சென்னை நகரம்,கோவை நகரம் இரண்டைத் தவிர வேறுஇடங்கள் எதுவும்  தலைவிரி கோலமாய்நடந்து கொண்டதாகத் தெரியவில்லை.மற்ற இடங்களிலும் ஏதோ சில என்பதாகஇருந்தாலும், அவை பெரிதும்மற்றவர்கள் செய்த நிர்ப்பந்தத்தைக்கொண்டும், பொய்யும் புளுகும் கலந்தவிஷமப் பிரசாரத்துக்கு ஆளாகியும்,தூண்டுதல் மீதும், சொந்த வெறுப்புக்குப்பரிகாரம் தேடிக் கொள்ள இதை ஒருசந்தர்ப்பமாகக் கொண்டும் ஆத்திரப்பட்டதாகக் காணப்படுகிறது.

இருந்தாலும் எதிரிகளின் சதி அதுவும்முன்னதாகவே தெரிந்து, இரண்டுஆண்டாக ஒவ்வொரு கூட்டத்திலும்எடுத்துக் காட்டி வந்த சதி ஒரு புரட்சிநடத்துவதில் சதியார்கள் வெற்றி பெற்றுவிட்டதாக மனப்பால் குடிக்கலாம். பலன்விஷயத்தில் இப்போதைக்குஅவரவர்களே சிந்தித்துக் கொள்ளவேண்டியது தான்.

இதுவரை சுமார் 150 கடிதங்கள்வந்திருக்கின்றன. அவைகளில் சில, பலபேர்  கையொப்பங்கள் உள்பட வந்திருக்கின்றன. சில எழுதினவர்கள் - ஊர்  பேர்இல்லாத மொட்டைக் கடிதங்களாகவந்திருக்கின்றன. 150 கடிதங்களில் ஒரு15, 20 மட்டும் ஆதரித்த கடிதங்களும்,கடைசிவரை கூட இருப்பதாக உறுதிகூறும் கடிதங்களும், ஆதாரம்,மேற்கோள், ஆர்க்கு மெண்ட் கொண்டகடிதங்களுமாக இருக்கின்றன. சிலபிரசுரத்துக்கு வந்திருக்கின்றன; சிலகடிதங்கள் கண்டபடி திட்டி, வைதும்எழுதப்பட்டிருக்கின்றன. இவை ஓய்வில்நேரப் போக்குக்குவெளிப்படுத்தப்படலாம். இப்போதுபிரசுரிப்பதற் கில்லை.

மற்றொரு விசேஷம் என்னவென்றால்சென்னையில் வீட்டுப் பக்கமும், ஆபீசுப்பக்கமும் 5, 6 நாள் ஒருவருமே நடக்காமல்இருந்த நிலை மாறி, இரண்டு நாளாய்அடிக்கடி உள்ளூர் மக்களும், வெளியூர்மக்களும் வந்து விசாரித்தும், “நாங்கள்இதில் மனப்பூர்வமாய் கலந்துகொள்ளவில்லை. கட்டாயப்படுத்தினார்கள், கையெழுத்துப்போடாவிட்டால் சமாளிக்க முடியாதநிலையாய் விட்டது, தட்டிப் பேசினால்எல்லோரும் பாய்ந்து அடக்கினார்கள்”என்றும், மற்றும் சில ‘இரகசியங் களும்’சொல்லி ஆறுதல் தெரிவிக்கமுயன்றதாகும்.

எப்படியிருந்தாலும் இன்றைய நிலைஇனி காரியங்களை இயற்கைக்கு விட்டுவிட்டு நிம்மதியாய் இருக்கவேண்டியதைத் தவிர இன்னதுசெய்யுங்கள் என்று சொல்ல வேண்டியஅவசியம் தோன்றவில்லை.

தைரியமும், துணிச்சலும், தெளிவும்இருக்கிறவர்கள் தங்களுக்கு சரி என்றுபட்டதற்கு நன்றாய் போராடலாம். அவைஇல்லாதவர்கள் சும்மாவிருக்கலாம்.இருபுறமும் கருத்தை மாற்றிக் கொள்ளவெட்கப்பட வேண்டியதில்லை.

‘விடுதலை’ 9.7.1949.

என் விளக்கம்

தி.பொ.வேதாசலம் எழுதுவது

கழகத் தோழர்களே! சென்ற மூன்றுவாரமாக நம் பெரியார் திருமணம் பதிவுசெய்து கொள்ளுவது விஷயமாக நாம்பல வகையிலும் நினைத்து வருந்திவருகின்றோம்.

இம்மாத இறுதிக்குள் நம் அருமைத்தலைவர் சிறைக்குள் தள்ளப்படுவார்.மீண்டும் உயிரோடு வெளி வருவாரோஎன்பதில் அவருக்கே நம்பிக்கையில்லை.இதை நினைக்கும் போது நம் நெஞ்சம்கலங்குகின்றது.

இந்நிலையில் நம்மில் பலர் அவரைக்குறை சொல்லி கடுஞ்சொற்கள்உபயோகிக்கின்றோம். ஏன்? திரு.மணியம்மையுடன் திருமணம் பதிவுசெய்து கொள்ளப் போவதால்,

ஒரு மனிதன் எதற்காக மணம்செய்கிறான்?

1.         தனக்கு வாழ்க்கைத் துணைவிதேடிக் கொள்ளவும், உணவு சமைக்கவும்,மற்ற உதவிகள் புரியவும்.

2.         பிள்ளைப் பேறு கருதி.

3.         தன் காம இச்சைக்கு உதவியாக்க.

மேலே சொன்ன மூன்று காரணங்களும்பெரியார் செய்து கொள்ளும்திருமணத்திற்கு கொஞ்சமும்பொருந்தாது. மணியம்மை சென்ற 6ஆண்டுகளாக உணவு சமைத்தும், மற்றபணிகள் ஆற்றியும் வருகிறார்கள்.  

பிள்ளைப் பேறு கருதியிருக்க முடியாது.காம இச்சைக்கு மணப் பதிவுமுக்கியமல்ல. ஆகவே, இப்பதிவுத்திருமணம் தான் அனுபவிக்கும்சொத்துக்கள் தனக்குப் பின் மற்றவர்கைக்குச் செல்லாது கழகப் பணிக்கேதிருப்ப வேண்டுமென்ற ஆவல்தான்.ஆனால், இதற்காக தள்ளாத வயதில்ஒருவர் பெயரளவிற்குத் திருமணம்செய்வது பொருந்துமா என்பதுதான்கேள்வி. இது அவரவர் மன நிலையைப்பொறுத்தது.  பெரியார் ஒரு 
Platonic marriage முடிவே  அவருக்குக்கவலை. ஆகவே இம்முடிவுகொள்கின்றார். தோழர்கள் ஆழ்ந்துகவனிக்கவும். மேல்நாடுகளில் திரேகசம்பந்தமில்லாது செய்வது உண்டு.இதற்கு ஞடயவடிniஉ அயசசயைபநஎன்று பெயர்.

தி.பொ.வேதாசலம்

குறிப்பு: பெரியார் திருமணம் பற்றிஆதரித்தும், கண்டித்தும் வந்தகடிதங்களில் எதையுமே வெளியிடவேண்டாம் என்று பெரியார் அவர்கள்உத்தரவிட்டதின் பேரில், எதையும்இதுவரை வெளியிடவில்லை. இதுபோல்பல ஆதரவுக் கடிதங்கள்வந்துள்ளவாயினும் அவைகளைவெளியிடாமல், இதை மட்டும்வெளியிடுவதன் காரணம், இதைஎழுதியிருப்பவர் திராவிடர் கழக மத்தியநிர்வாகக் கமிட்டியின் தலைவர்என்பதுடன், அவர் தம் விளக்கத்துடன்நமக்கு எழுதியிருக்கும் கீழ்க்கண்டகடிதமுமாகும்.

ஆசிரியர். ‘விடுதலை’

அன்புள்ள அய்யா,

‘என் விளக்கம்’ என்பதையும், நிர்வாகக்கூட்டம் பற்றிய அறிவிப்பையும் தயவுசெய்து தங்கள் தினசரியில்வெளியிடவும்.

.... நாளையப் பத்திரிகையிலேயேவெளி வர வேண்டும் என்பது என்அவா....

பெரியார் - மணியம்மை திருமணம் - ஒரு வரலாற்று உண்மை விளக்கம், 

டி.பி.வேதாசலம் 8.7.1949. (9.7.1949. ‘விடுதலை’)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக