சனி, 16 மார்ச், 2019

பெரியார் - மணியம்மை திருமணம் - ஒரு வரலாற்று உண்மை விளக்கம்

பெரியார் - மணியம்மை திருமணம்

ஒரு வரலாற்று உண்மை விளக்கம்

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

தந்தை பெரியார் அவர்கள் அன்னைமணியம்மையார் அவர்களை, ஏன் முதியவயதில் ‘திருமணம்’ செய்து கொண்டார்?அதனால் தானே திராவிடர் கழகம்பிளவுபட்டு, இரண்டாகியது? திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற கட்சிஉருவாவதற்கு அதுதானே காரணமாகச்சொல்லப்படுகிறது? அதுபற்றிஇளைஞர்களாகிய எங்களுக்கு முழுஉண்மைகள் தெரியவில்லை. காரணம்எங்களில் பலர் அப்போது பிறக்கவேஇல்லை! அதுபற்றி தெளிவாகவிளக்குங்கள் என்று திராவிடர் கழகம்இளைஞர்களுக்கென நடத்தும்கொள்கைப் பயிற்சிப் பட்டறைகளில்கேள்விகளைக் கேட்பதும் அதற்குச்சுருக்கமான விளக்கத்தை அளிப்பதும்உண்டு.

தனி வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாத,ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, தனித்தலைவர் தந்தை பெரியார்!

 மனித குலத்தின் துன்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும், சம ஈவு அற்றதன்மைகளும், அறியாமையும் அவரைஒரு தொண்டு செய்த பழமாக்கியது;பகுத்தறிவுப் பகலவனாக ஒளி வீசச்செய்தது.

அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள்சமூக நீதிக்காக, ஜாதி ஒழிப்புக்காக,தீண்டாமை அழிப்புக்காக, மூட நம்பிக்கைஒழிப்புக்காக பொதுவாழ்க்கையில்இறங்கிய நாள் முதல் அவருக்குத் தனிவாழ்க்கை ஏதுமில்லை! அன்னைநாகம்மையார் அவரது தொண்டறத்துத்துணைவியாகவே அதிக காலம்வாழ்ந்தார். இல்லறத்து இன்பங்களைமறுக்க அவரால் பழக்கப்படுத்தப் பட்டார்; 1920 முதல் 1933 வரை அவர் பெரியாரின்கொள்கைத் துணைவியார் ஆகவேவாழ்ந்து மறைந்தார். அந்த மறைவினை‘தனது இல்லத்துப் பற்றுக் கோடும்மறைந் தது; இனி முழு நேரத்தங்குதடையற்ற, இயக்கப் பணிதான்’என்று கூறி, ஆறாத் துயரத்தை ஆற்றிக்கொண்டார் அய்யா அவர்கள்!

1933-க்குப் பின், அவரது பொதுவாழ்க்கையில் அவர் சந்தித்த மகளிர்ஏராளம்; அவரது குடும்பத்துஉறவினர்களும் அவரை மற்றொருதிருமணம் செய்து கொள்ளவற்புறுத்தியதும் அதிகம். அதை ஏற்காதபெரியார் அவர்கள், 1943 முதலே, தானாகவந்து, இயக்கத் தொண்டில் வந்துஇணைந்து, தந்தை பெரியாருக்குத்தொண்டூழியம் செய்து, செவிலித்தாயாக, இயக்கப் புத்தக மூட்டைகளைச்சுமந்த விற்பனையாளராக தனதுசெயலாளர் போல் பணியாற்றி, பத்தியம்அறிந்து நடந்து நலம் காத்தநற்பணியாளராக இருந்தகே.ஏ.மணியம்மையை அவர் ஏன் தனது72-ஆம் வயதில் பலத்த எதிர்ப்பு, ஏளனம்,கிண்டல், கேலி, வசவுகள், பழிதூற்றல்இவைகளைப் பொருட்படுத்தாமல்‘திருமணம்’ என்ற ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும்? அவரிடம் லவுகீகஇன்பம் பெறுவதற்கா? இல்லை, அந்தஅம்மை தான் சொத்து, சுகம்இவைகளைப் பற்றுவதற்காகபெரியாரை ஏமாற்றி ‘வசியப்படுத்தி’இப்படி ஒரு திருமணம் என்பது நடந்ததா?

உண்மைகள் பற்பல நேரங்களில் களபலிஆகிவிடுகின்றன. சுயநலம், பதவிவேட்கை, அரசியல் ஆசாபாசம்,இவைகள் சபலங்களாகி, சல்லடம் கட்டிநின்றன தந்தை பெரியாருக்கு எதிராக.தந்தை பெரியார் அவர்கள் அவரதுநெருங்கிய நண்பர்திரு.சி.ராஜகோபாலாச் சாரியாரை,திருவண்ணாமலையில் 14.5.1949 அன்றுகவர்னர் ஜெனரலுக்கு உரிய தனிரயிலில் சந்தித்து ஆலோசனை கேட்டதுஎல்லாம் உண்மைக்கு மாறானசெய்திகளைப் பரப்பிட உதவின.

புது யுகத்தின் தொலைநோக்காளர்பெரியார் அன்று எழுதிய விளக்கங்கள்,அதன் பின் 57 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், இன்று அவர்அமைத்த ‘கற் கோட்டை’ எப்படிப்பாதுகாப்புடன், தக்கவரை, தக்கநேரத்தில் அடையாளம் கண்டு தக்கதுசெய்ததினால் உண்டானது என்பதைஉணர முடிகிறதல்லவா?

அந்த நேரத்தில் அன்னைமணியம்மையார் பெற்ற வசவுகள்,உலகின் எந்தப் பெண்மணியும்பெற்றிராதவை!

அய்யாவை 95 ஆண்டு காலம் வாழவைத்து, அவர் தந்த இயக்கத்தையும், அதற்கு மேல் 5 ஆண்டு காலம்பாதுகாத்து, அய்யா அவருக்கு அளித்தசொத்து, அவரது தனிச் சொத்து எல்லாவற்றையும் அவரும் பொதுஅறக்கட்டளையாகவே ஆக்கியதொண்டறத்தின் உருவமானார். எப்படிதனது வாழ்க்கை இன்பத்தை தொண்டுஎன்ற பலி பீடத்தில் வைத்து,மலையினும் மானப் பெரிதானார் அம்மா!

திருமணம் பற்றி தந்தை பெரியார் தம்சிந்தனையைத் தூண்டும் அறிக்கைகள்,தோழர் கைவல்ய சாமியார் சுயமரியாதை கொள்கை விளக்கக்கருவூலம், ‘நகர தூதன்’ ஆசிரியர் எழுத்துவல்லவர் மணவை திருமலைசாமிஆகியோர்தம் எழுத்து விளக்கங்களைசுருக்கித் தருகின்றேன்.

தந்தை பெரியாரின் திருமணம்எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது;நாங்கள் அரசியலுக்குப் போகவேண்டுமென்று விரும்பினோம்.அதற்காக இது பயன்பட்டது என்றுதி.மு.க.வின் பொதுச் செயலாளர்பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்,சுயமரியாதை இயக்கப் பொன்விழாவில்1975 இறுதியில் தஞ்சையில், அன்னைமணியம்மையார் அவர்களது முன்னிலையிலேயே வெளிப்படையாக, பலலட்சக்கணக்கானவர் களிடையேஉண்மையை உரைத்தார்; உடைத்தார்.

தனக்குப் பின்னால் 50 ஆண்டுகளுக்குப்பின் என்ன நடக்கும் என்று கருதிச்செயல்படுபவனே சரியான தலைவன்என்று வி.ச.காண்டேகர் ஒரு புதினத்தில்அருமையாகக் கூறினார்.

தந்தை பெரியார் தம் திட்டமிட்டசெயல்பாடுதான் ஓர் சமுதாயப் புரட்சிஇயக்கம் இந்தியாவுக்கும்,உலகத்திற்கும் பதவிக்குச் செல்லாமல்மக்கள் தொடர்பும் உள்ள, மாபெரும்செல்வாக்கும் உள்ள இயக்கமாகமலருவதற்கு வாய்ப்பாக்கி யுள்ளது.

1943 இல் அம்மா எழுதியது

64 ஆண்டுகளுக்கு முன் “அம்மா”எழுதியது

(23.10.1943 ‘குடிஅரசு’ வார ஏட்டில் ஒருசிறு அறிக்கை, வேலூர் அ.மணிஎழுதுவது என்ற தலைப்பில்எழுதப்பட்டது)

“பெரியாருடன் குற்றாலத்திலும்,ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன்.அவர் உடல் நிலை மிக்க பலவீனமாகவும்,நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது.அவர் அதைப்பற்றிக்கவலைப்படவில்லை. அவருக்குப் பின்,இயக்கக் காரியங்களைப் பார்க்க, தகுந்தமுழு நேரக்காரரும், முழுகொள்கைக்காரர்களும் கிடைப்பார்களா?என்கிற கவலையிலேயே இருக்கிறார்.இயக்கத்துக்காக என்று தன்கைவசமிருக்கும் சொத்துக்களை என்னசெய்வது என்பது அவருக்கு மற்றொருபெருங் கவலையாய் இருப்பதையும்கண்டேன். அதோடு இயக்கத்துக்குவேலை செய்ய சில பெண்கள்வேண்டுமென்றும் அதிகஆசைப்படுகிறார். அப்பெண்களுக்குஜீவனத்துக்கு ஏதாவது வழி செய்துவிட்டுப் போகவும் இஷ்டப்படுகிறார்.இந்தப்படி, பெரியாரை நான் ஒரு மாதகாலமாக ஒரு பெருங்கவலை உருவாகக்கண்டேன். அவர் நோய் வளர, அவைஎருப்போலவும் தண்ணீர் பாய்வதுபோலவுமே இருக்கிறது. நான் ஒருபெண், என்ன செய்ய முடியும்?

இன்னும் சில பெண்கள் முன்வரவேண்டும். அவர்கள் பாமர மக்களால்கருதப்படும், “மானம், ஈனம்” ஊரார்பழிப்பு யாவற்றையும் துறந்த நல்லகல்லுப் போன்ற உறுதியான மனதுடையநாணயவாதிகளாகவும், வேறுதொல்லை இல்லாதவர்களாகவும்இருக்க வேண்டும். அவர்களது முதல்வேலை, பெரியாரைப் பேணுதலும்,பெரியார் செல்லுமிடங் களுக்கெல்லாம்சென்று இயக்க மக்களை அறிமுகம்செய்துகொள்ள வேண்டியதும், இயக்கப்புத்தகங்களைப் படிக்கவும், எழுதவும்,நன்றாய்ப் பேசவும் தெரிந்து கொள்ளவேண்டும். வீடுகள் தோறும் இயக்கப்புத்தகங்களும், ‘குடிஅரசு’ம் இருக்கும்படியும் செய்து அவற்றை நடத்தும் சக்திபெற வேண்டும். இந்நிலையில்சுயமரியாதை இயக்கம் இருக்கிறது.பெண் மக்களே யோசியுங்கள்” என்றுஅம்மா மணியம்மையார் எழுதியுள்ளார்.

தன்னைப் பற்றி விளக்கம் தந்த தந்தைபெரியார் அவர்கள் (1972-ல்) எழுதும்போது, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்திராவிட சமுதாயத்தைத் திருத்தி,உலகில் உள்ள மற்ற சமு தாயத்தினரைப்போல மானமும், அறிவும் உள்ளசமுதாயமாக ஆக்கும் தொண்டைமேற்போட்டுக் கொண்டு அதே பணியில்இருப்பவன்.

அந்தத் தொண்டு செய்ய எனக்கு“யோக்கியதை” இருக் கிறதோ,இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால், நான்அதை மேற்போட்டுக் கொண்டுதொண்டாற்றி வருகிறேன்....” என்றுகுறிப்பிட்டுள்ளார்.

மேலே காட்டிய 1943-இல் ‘குடிஅரசு’ஏட்டில் அன்னை மணியம்மையார்விடுத்த அறிக்கையை முன்னிறுத்திச்சிந்தித் துப் பார்த்தால்,

பெரியாரைப் பாதுகாக்கும் பணி, இயக்கநூல்களைப் பரப்பும் பணி, இயக்கஏடுகளை நடத்தும் பணி இவை எல்லாப்பணிகளையும் ஏற்க வேறு எந்தப்பெண்ணும் மானம் பாராதுதொண்டாற்ற முன்வராத நிலையில்,தனக்கு யோக்கியதை இருக்கிறதோஇல்லையோ அந்தப் பணி செய்ய வேறுயாரும் முன் வராததால் நானேஅத்தொண்டினை ஏற்று ஆற்றி வந்தேன்.பெரியாரை மேலும் 30 ஆண்டு காலம்பாதுகாத்தேன்; அவர் தம் இயக்கப்பணிகளையும் அவருக்குப் பின் மேலும் 5ஆண்டு தலைமைத் தாங்கிஒழுங்குபடுத்தினேன் என்பது அவரதுஎழுதாத கல்லறை வாசகங்கள்(நுயீவையயீh) ஆக நிற்கவில்லையாநண்பர்களே?

விளக்கம்

தந்தை பெரியார் அறிக்கை:

இத்தலையங்கத்துக்கு ‘விளக்கம்’ என்றதலைப்பு ஏன் கொடுக்கப்படுகிறதுஎன்றால், இந்த நெருக்கடியானசமயத்தில், நம் தோழர்கள் சிலர் பொதுமக்களிடம் தவறான பிரசாரம் செய்துவருகிறார்கள் என்பது தெளிவாகத்தெரிய வருகிறது. இதனால் கழகத்துக்குஆவது, இயக்க வேலைகளுக்கு ஆவதுஒன்றும் குறைவு ஏற்பட்டு விடாதுஎன்பதாக எனக்கு நல்ல தைரியம்இருந்த போதிலும், விளக்குவதில்எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை.ஆதலால், என் காதுக்கு வந்தவிஷயங்களுக்கு விளக்கம் எழுதிவிடலாம் என்று கருதுகிறேன்.

அதாவது,

1.         கவர்னர் ஜெனரல்ராஜகோபாலாச்சாரியார் அவர்களைநான் சந்தித்த ‘இரகசியம்’ (14.5.1949)

2.         அழகிரிசாமி இறந்துபோனதுகுறித்து கழகம் உதவி செய்யவில்லைஎன்பது.

3.         குறள் மாநாட்டில் பணக்காரர்கள்கலந்து கொண்டதுடன்,பணக்காரர்களுக்குள் நான் ஒருபணக்காரனாக ஆகி விட்டேன் என்பது.

4.         தஞ்சை ஜில்லா மாவூரில்அதாவது, சர்.ஆர்.எஸ்.சர்மா அவர்கள்எஸ்டேட்டில் மாணவர் பிரசாரப் பள்ளிவைத்து நடத்தினது என்பது.

இவைகளின் மூலம் இயக்கத்தின்கொள்கைகள் பலவீனப் பட்டுவிட்டதென்பதும், நான் தவறாகநடக்கிறேன் என்பதும் ஆன எண்ணம்மக்களுக்குப் படும்படி சிலரால் பிரசாரம்செய்யப்படுகிறது.

இந்தப் பிரசாரத்தில் சரியாகவோ,தவறாகவோ பல இளைஞர்கள்கலந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

சி.ஆர். அவர்களிடம் நான் பேசியது(இரகசியம்) பற்றி கோவைமாநாட்டிலேயே (மே, 1949)பிரஸ்தாபிக்கப்பட்டது யாவருக்கும்தெரியும்.

அது மிகுதியும் என் சொந்த விஷயம்என்று முதலிலேயே தெரிவித்துவிட்டேன். கோவையில் அதை நான்தெரிவித்த தோடு ஒரு விஷயம்அதிகமாகவும் சொல்லி விட்டேன்.அதாவது இயக்க விஷயத்தில் எனக்குஇதுவரை அலைந்தது போக, அலையஉடல் நலம் இடம்கொடுக்கவில்லையென்றும், என்னைப்போல் பொறுப்பு எடுத்துக்கொள்ளத்தக்க ஆள் யார்இருக்கிறார்கள் என்பதில் எனக்குநம்பிக்கை உள்ளவர்கள்கிடைக்கவில்லை என்றும், ஆதலால்எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்த,அவர் மூலம் ஏற்பாடு செய்து விட்டுப்போக வேண்டுமென்று அதிக கவலைகொண்டு இருக்கிறேன் என்றும்,இதுபற்றி சி.ஆர். அவர்களிடம்பேசினேன் என்பதாகவும் சொல்லிஇருக்கிறேன்.

இது தவிர, உண்மையில் சி.ஆர். பேச்சில்வேறு இரகசியம் இல்லை.

இந்தப்படி நான் சொன்னதான குறைகூறித் திரிகிறவர் களுக்கு மேலும் குறைகூற சற்று அதிக வசதி ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.

என்னவென்றால், “இயக்கத்தோழர்களில் ஈ.வெ.ரா.வுக்கு ஒருவரிடம்கூட நம்பிக்கை இல்லை என்றுசொல்லுவது, இயக்கத் தோழர்களைஅவமானப்படுத்தியதாக ஆகிறதென்றும், அப்படி சொன்ன பிறகுஈ.வெ.ரா.விடம் மற்றவர்கள் எப்படிநம்பிக்கை வைக்க முடியும்” என்றும்,இப்படியாக பலவிதமாகச்சொல்லப்படுவதாகத் தெரிகிறேன்.இதைப் பற்றி நான் அதிகம் விவரிக்கஆசைப்படவில்லை.

இன்றைய அரசியல் நிலையில்அரசியலாருக்கு நம் இயக்கம்அழிக்கப்பட வேண்டும் என்கின்றஅவசியத்தில் இருக்கிறது. இதற்குநம்மில் ஒரு ஆளாவது தன்னுடையஅழிவை லட்சியம் செய்யாமல் பலி ஆகவேண்டியது அவசியமான காரியமாகும்.ஏனெனில் அந்தப் பலிக்காகஇயக்கத்தை என்றும் அழிக்காமல்காப்பதாகும். அழிந்துபட்டதாகக்கண்ணுக்குத் தெரிந்தாலும், அதன்சமாதியில் இருந்தே அழிக்க அழிக்கமுளைப்பதாகும். அந்த பலிக்குமுதலாவது தகுதி நான் என்றுதான்உண்மையாகக் கருதி இருக்கிறேன். இதுஅகம்பாவமான கருத்தாக சிலருக்குத்தோன்றலாம். தோன்றினால்குற்றமில்லை. உண்மை அதுதான்.உண்மையை வெளிப்படுத்த அதற்குவிலை கொடுப்பது போல் இந்தஅகம்பாவக் குற்றத்துக்கு நான்ஆளாக்கப்படும் விலையைக் கொடுத்து,அதைச் சகித்துக் கொள்ளுகிறேன். நான்பலி ஆவது என்பதை இன்று நேற்றல்ல,சில ஆண்டுகளாகவே முடிவு செய்துகொண்டிருக்கிறேன். என்றாலும் இந்திஎதிர்ப்பு துவக்கப்படும் பொழுதேஉறுதியாக முடிவு செய்து கொண்டு தான்துவக்கினேன். இதை இந்த ஒரு ஆண்டில்3, 4 தடவை குறிப்பிட்டுமிருக்கிறேன்.

அதாவது,

“என்னைப் பற்றி ஒரு ஏற்பாடு செய்துகொண்டு இருக்கிறேன். அதுமுடிந்தவுடன் தீவிரமாக இறங்கி நடத்தப்போகிறேன்”

என்று பேசியும், எழுதியும் இருக்கிறேன்.சிறையில் இருந்து வந்த உடன்(சென்னை) பிராட்வே மைதானக்கூட்டத்தில் சொன்னேன். அந்தஏற்பாட்டை இனி நாள் கடத்த ஆசைப்படவில்லை. உடன் செய்து விட்டுபலிபீடத்துக்கு வரப்போகிறேன்.

நம்பிக்கையான ஒருவர் எனக்குக்கிடைக்கவில்லை என்றால், அதற்குயாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது.கோபிக்கிறவர் களோ, குறைகூறுபவர்களோ அப்படிப்பட்ட ஒருவரைச்சொன்னால் நான் ஏற்கத் தயாராய்இருக்கிறேன். நம் இயக்கத்துக்குத்தொண்டாற்ற, பொறுப்பேற்க முழு நேரத்தோழர்கள், தங்களை முழுதும்ஒப்படைப்பவர்கள் யார் இருக்கிறார்கள்?யார் இருந்தார்கள்?

ஆதரவாளர்கள் அனேகர்இருக்கிறார்கள் என்பதில்சந்தேகமில்லை. ஆனால், திராவிடமக்கள் பெரிதும் மதித்து நம்பிபின்பற்றக்கூடிய அளவுக்கு நிலைமைகொண்டவர்களும், தன்னைப் பற்றிக்கூட கவலை இல்லாதவர்களும், இயக்கத்தொண்டே தனது முழு நேர மூச்சாகக்கொண்டவர்களுமாய் இருந்தால்அல்லவா அது பயன்படும்? ஆனதால்,அப்படிப் பட்டவர்கள்தான் என் கருத்துக்குஎட்டவில்லை என்றேன். அதனால்தான்நானே பலியாக வேண்டி இருக்கிறது.இதைப் பொதுமக்கள் சீக்கிரம்காணத்தான் போகிறார்கள்.

தோழர் அழகிரிசாமிக்குக் கழகம் ஒன்றும்செய்யவில்லை என்பது விஷமப்பிரசாரமே ஒழிய, மற்றபடி அவர் உயிருடனிருக்கும் போதும், காயலாவின்போதும், காலமான பிறகும் கழகச்சார்பாக கழகத்தினர் என்பதற்கு ஆககழக அன்பர்கள்  கூடியதைச்செய்கிறார்கள். இது அழகிரிசாமிகுடும்பம் அறியும்.

மாவூர் சர்.ஆர்.எஸ். சர்மா அவர்கள்எஸ்டேட் இடத்தில் மாணவர் பிரசாரப்பள்ளி ஒரு வாரம் நடத்தினதுப் பற்றிகுறை. “சர்மா அவர்கள் பார்ப்பனர்ஆனதால் அங்கு செல்லலாமா?” என்பதுகுறை கூறுவதற்குக் காரணம்.

நான் அங்கு, அல்லது எந்தப் பார்ப்பனர்இடம் செல்வதையும் குறையாய்க்கருதுவதில்லை. பொதுவாகவே எந்தப்பார்ப் பனரிடமும் நான் விரோதமாய்நடந்து கொண்டதில்லை. விரோதமாய்க்கருதினதுமில்லை. பல கூட்டங்களில்பார்ப்பனர் களுக்கு நான் வேண்டுகோள்விடுத்து இருக்கிறேன்.

“என்னைத் தவறாகக் கருதாதீர்கள். நான்உங்களுக்குச் சொந்த முறையில் எதிரிஅல்ல; திராவிடர் கழகமும் உங்களுக்குஎதிரானது அல்ல. உங்களுக்கும்,எங்களுக்கும் ஒட்ட முடியாமல்,ஒன்றுபடச் செய்ய முடியாமல் இருக்கும்தடை களை ஒழிப்பதுதான் எங்கள்வேலையே ஒழிய, மற்றபடி உங்களைஒழிப்பது என்பது எங்கள் கொள்கைஅல்ல” என்று ஆயிரம் தடவைகூறியிருக்கிறேன். இதை அனுசரித்துஅனேக பார்ப்பனர்கள் என்னைக்காணவும், என் கருத்தை அறியவும், என்கருத்துக்கு இசையவும்ஆசைப்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன்.இதைச் சுமார் இரண்டு மாதத்திற்கு முன்திருச்சி பத்திரிகை நிருபரிடமும்தெரிவித்திருக்கிறேன். சிறு தவறுதலோடு அந்தச் செய்தி அசோசியேட்பத்திரிகைச் செய்தியாக பலபத்திரிகைகளில் வெளியாகிஇருக்கிறது.

நிலைமை நெருக்கடி என்று நான்சொன்னாலும் நமக்கு ஆபத்தோ முழுகிப்போவதோ ஒன்றும் இல்லை. நாம்தேர்தல், பதவி, பண சம்பாதனைகுறிக்கோள்காரர்கள் அல்லர். நம்இயக்கத்தில் அதற்கு இடம் இல்லை.நானும் இடம் கொடுக்க மாட்டேன்.ஆதலால் நமக்கு ஒன்றும் நட்டமில்லை.நம் சமுதாய சம்பந்தமான காரியங்கள்நல்ல அளவுக்கு வெற்றி அடைந்துவருகின்றன. அதற்கும், நெருக்கடிக்கும்சம்பந்த மில்லை.

இந்த நெருக்கடி தீருவதை எந்த விஷமப்பிரசாரமும் தடைப்படுத்தி விடாது.ஏனெனில், பொதுமக்களுக்கு என்னிடம்யாராலும் அசைக்க முடியாத அன்பு,நம்பிக்கை இருக்கிறது.

திராவிடர்கள் ஒன்று சேரவேண்டும்.சுயநலமற்ற தொண்டர் களும், நான்களத்தில் உள்ளவரையில் என்னிடம்உறுதியான நம்பிக்கை கொண்ட கூட்டுவேலைத் தொண்டர்களும் எனக்குவேண்டும். அவர்கள் ஊரார் என்னசொல்வார்கள் என்பதைக்கவனியாதவர்களாகவும், தொண்டில்மானாவ மானத்தை லட்சியம்செய்யாதவர்களாகவும் இருக்கவேண்டும்.

என்னைப் பற்றி, என் பெயரைப் பற்றி,என் நடத்தையைப் பற்றி உங்களுக்குக்கவலை வேண்டாம். நீங்கள் எனக்கோ,இயக்கத்துக்கோ உண்மையாய் நடந்துகொண்டீர்களா? என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். மற்றதை எனக்கே விட்டுவிடுங்கள்.

என் வாழ் நாளில் அதாவது, எனது பொதுவாழ்வில் எனக்குக் கிடைத்த வெற்றிஎல்லாம் என் எதிரிகளாலும், எனக்குக்கேடு நினைத்தவர்களாலும், என்னைஏமாற்றியதாக, ஏமாற்றுவதாகக் கருதிக்கொண்டு நடந்தவர்களாலும்,நடக்கிறவர்களாலுமேதான் பெரிதும்கிடைத்திருக்கிறது என்பது எனதுதெளிவு. ஆதலால் எதிர்ப்புக்கு, சதிக்குநான் கவலைப்படுவதில்லை.

ஈ.வெ.ரா.

(‘விடுதலை’ 19.6.1949)

நேரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக