வெள்ளி, 22 மார்ச், 2019

மராட்டிய மாநிலம் புனே நகரில் ஜாதியற்ற, சடங்குகளில்லாத எளிமையாக நடைபெற்ற திருமண விழா



மராட்டிய மாநிலம் புனே நகரில் சச்சின் ஆஷா சுபாஷ், ஷர்வாரி சுரேகா அருண் ஆகியோரின் திருமணவிழா 26.1.2019 அன்று எவ்வித மதச் சடங்குகளும், ஆடம்பரமு மில்லாமல் மிகவும் எளி மையாக நடைபெற்றது. குடியரசு நாளில் அர சமைப்புச்சட்டம் வலியுறுத் தும் மதச்சார்பின்மை, சமத் துவத்துவக் கொள்கை களுடன் நடைபெற்றது.

நாட்டின் 70ஆவது ஆண்டு குடியரசு நாளில் போராளிகளாக இருவர் அமைதிப்புரட்சியாக சத்யசோதக் வழியில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர்.

மகாத்மா ஜோதிராவ் புலே உருவாக்கிய சத்யசோதக் அமைப்பின் சார்பில் நடத்தப்படுகின்ற திருமணத்தில் புரோகிதர் கிடையாது. மதச் சடங்குகள் கிடையாது.

மதம், ஜாதி, வகுப்பு மற்றும் ஆடம்பரங்கள் ஏதுமில்லாமல் நடைபெறுகின்ற திருமணங்கள் குறித்து நாடுமுழுவதும் பேசப்பட்டு வருகிறது. திருமண இணையர் இருவரும் மராட்டிய மாநிலத்தில் சமூக தொண்டாற்றி வருபவர்களாக உள்ளனர். அதனாலேயே பழக்க, வழக்கங்களைத் தவிர்த்து, ஜாதியற்ற திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொண்டார்கள். அதன்படி கருத்தொருமித்து முன்னுதாரணமாக திருமணத்தை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

நூலகங்களுக்கு புத்தகக் கொடை அளிப்பு


சச்சின் ஆஷா சுபாஷ் கூறியதாவது:

“எங்கள் திருமணம் எளிமையாக நடைபெற்றது. அழைப்பிதழைக்கூட நாங்கள் அச்சடிக்கவில்லை. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களின் வாயிலாகவே நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுத்தோம். எங்கள் திருமணத்தில் ஆயிரம் பேர்  கலந்துகொண்டு, 1200 புத்தகங்களை வழங்கினார்கள். பலவகைகளாக உள்ள புத்தகங்களை கிராமப்புற நூலகத்துக்கு அளித்துள்ளோம்” என்றார்.

அதுமட்டுமில்லை. ஜாதியை பெயருக்குப்பின்னால் சேர்க்காமல் விட்டுவிட்டதாகவும், அவர்களின்  குடும்பத்தினரும் ஜாதி அடிப்படையிலான பழக்கங்களை கடைப்பிடிக்காமலிருக்கும் படி செய்துவிட்டதாகவும் கூறினார்கள்.

நானும், என் இணையரும் எங்கள் பெயருக்குப்பின்னால் வரக்கூடிய ஜாதிப்பெயரை சேர்க்காமல் தவிர்த்துவிட்டோம். அதுகுறித்து எங்கள் குடும்பத்தினருக்கும் கூறவில்லை.

அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படையில்


நடைபெற்ற திருமணம்


இந்துமதச்சடங்குகள் ஏதுமில்லாத திருமணமாக நடைபெற்றது.  சச்சின் கூறுகையில், கன்னியாதானம் போன்றவற்றில் நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆகவே, அதுபோன்ற சடங்குகள் நடைபெறாமல் பார்த்துக்கொண்டோம்.

வழக்கமான சதாப்தி எனும் மதச்சடங்குகளுக்கு மாற்றாக, அரசமைப்புச்சட்டம் வலியுறுத்திக் கூறுகின்ற தத்துவங்களுடன் சமத்துவம், வளர்ச்சி, சமநீதி, உளப்பூர்வமான கடின உழைப்பு, ஒருவருக்கொருவர் மரியாதை அளித்தல் உள்ளிட்ட ஏழு பண்புகளைக் கடைப்பிடித்திட உறுதி பூண்டோம்.

பழங்கால மூடநம்பிக்கைகளை விலக்கி, நவீன முறையில் கல்வித்தகுதி, வருவாய் ஈட்டுதல் மற்றும் பிற ஒப்புமைகளுடன் இணையர் பொருத்தப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுப்பொருளாக ஷர்வாரி எழுதிய புத்தகம் அளிக்கப்பட்டது. அப்புத்தகத்தில் அவர்களின் திருமண முறைகுறித்து விளக்கப்பட்டுள்ளது.

புனே நகரில் ராஷ்டிரிய சேவா தள அரங்கில் திருமண விழா நடைபெற்றது. மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். மணமக்களான இருவரும் சமுக முன்னேற்றத்துக்காக தனித்தனியே தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

சுபாஷ், ஷர்வாரி இணையரின் திருமண விழா சடங்குகளின்றி, ஜாதியற்ற திருமணமாக நடைபெற்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

-  விடுதலை ஞாயிறு மலர், 2.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக