சனி, 16 மார்ச், 2019

பெரியார் - மணியம்மை திருமணம் குறித்து அவதூறு.! - 1

பெரியார் - மணியம்மை திருமணம் குறித்துதொடக்கத்தில் அதிர்ச்சியாகப் பார்த்தவர்கள்,விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் கூட, ஒருசெவிலியராக அன்னை மணியம்மையார் இருந்துதந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழவைத்த தகைமையைக் கண்டு வாயார, நெஞ்சாரப்பாராட்டத்தான் செய்தார்களே தவிர யாரும் குற்றப்பத்திரிகை படிக்கவில்லை.

உலகியலில் கூறப்படும் சாதாரண காரணங்களைதந்தை பெரியார் மீது யாரும் திணிக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்களின் துணைவியார்நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார்அவர்களுக்கு வயது 54. திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அந்த 54 வயதில் தந்தை பெரியார்நினைத்திருந்தால் அந்தக் குற்றச் சாற்றுக்கே கூடஇடம் இல்லாமல் போயிருக்குமே. அவர்களின்வீட்டார்கூட எவ்வளவோ வலியுறுத் தியும் கூட திருமணஎண்ணத்தை அய்யா கொண்டார் இல்லை.

நாகம்மையார் மறைவு கூட ஒருவகையில் நல்லதுஎன்றுதான் கருதினார்.

எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும்அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாகஇருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்துபார்க்க நேரிட்டால் அம்மாளுக்கு அவை மிகுந்ததுக்கமாகவும், துயரமாகவும் காணக் கூடியதாய்இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது.அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும்சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள்மறைவால் எனக்கு அதிகம் சுதந்திரம் ஏற்பட்டதுடன்குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கிற உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது. (குடிஅரசு 14-_5-_1933) என்று எழுதினார் என்றால் இதனுள்அடங்கியிருக்கும் தத்துவத்தைத் தன்னலம் துறந்தபொது மனத்தினரால்தான் உணர முடியும்.

ஒரு கட்டத்தில் துணைவியர் மறைந்தது நல்லது என்றநிலை; இன்னொரு கட்டத்தில் தனக்கு ஒரு துணைவிதேவை என்ற நிலை அந்தத் துணையும் தனிப்பட்ட- தன்சுக வாழ்வுக்காக அல்ல. தான் வரித்துக் கொண்டுஇருக்கிற புரட்சிகரப் பொது வாழ்வுக்கு, தனதுதள்ளாமை, உடல் நோய் இடையூறாக இருக்கும்நிலையில்,  அதிலிருந்து விடுபடவும், தொண்டறம் புரியசட்ட ரீதியாக அவர் மேற்கொண்ட முடிவும், துணிவும்,எதிர்ப்புகளை சட்டை செய்யாத ஆளுமையும்அய்யாவை ஒரு தனித்தன்மை மேலோங்கும் வைரம்பாய்ந்த மனிதராகத்தான் ஜொலிக்கச் செய்கிறது.

திருமணம் இல்லாமல் 16 ஆண்டுகள் இருந்துவிட்டு 17ஆம் ஆண்டில் துணை தேடக்காரணம் என்ன? திருமணஏற்பாட்டுக்குப்பின் 24 ஆண்டுகள் தந்தை பெரியார்அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அந்த மாபெரும்தலைவரை வாழ வைத்து, அதன் மூலம் தமிழர்வாழ்வுக்குப் பெருந்தொண்டு செய்தவர் அன்னையார்என்பதிலும் அய்யமுண்டோ?

இந்தி எதிர்ப்புப் போராட்டம், - பெல்லாரி சிறைச்சாலை,சட்ட எரிப்புப் போராட்டம், தேசிய கொடி எரிக்கும்போராட்டம், தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்புப்போராட்டம், - பிள்ளையார்  உடைப்புப் போராட்டம், -ராமன் பட எரிப்புப் போராட்டம், கோவில் கர்ப்பக்கிரகநுழைவுப் போராட்டம் என்று அலை அலையானபோராட்டங்களை அல்லவா தந்தை பெரியார்நடத்தினார்!

இந்த இடர்ப்பாடான கால கட்டத்தில் தோன்றாதுணையாக இருந்தவர் அன்னை மணியம்மையார்.பெரியார் மனம் விட்டு எழுதினார்!

மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றேஎன்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டுவசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவிசெய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலைஎப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்லஅளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டுநிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லைஇல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன் என்று(விடுதலை 15.-10.-1962) கூறினாரே அய்யா!

என் காயலா சற்றுக் கடினமானது தான். எளிதில்குணமாகாது. அவை கரைய மாதக் கணக்கில்காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைசிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும்நான் பயப்பட வில்லை. எதற்கும் தயாராகஇருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும்அளவிடற்கரியது. -தந்தை பெரியார் 89 ஆம் ஆண்டுபிறந்த நாள் விடுதலை மலர் (17-_9-_-1967) பெரியார்மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்கூடஇந்தப் பார்ப்பனர்கள் அந்தத் திருமணத்தைக்கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் அதன் பொருள்என்ன? அந்த அம்மா இருந்துதானே இந்தக் கிழவரைநீண்ட காலம் வாழ வைத்தார்! நம்மவா ஆதிக்கத்தைஒழிப்பதற்கு உறுதுணையாக இருந்தாரே என்கிறஆத்திரம்தான் _ இத்தனை ஆண்டுகள் ஓடிய பிறகும்கூட அவாளின் ஆத்திர நெருப்பு அணைந்துபோய்விடாமைக்குக் காரணம்! இன்னும் குமுறிக்கொண்டும் திமிறிக் கொண்டும் பார்ப்பனர்கள்கிடக்கிறார்கள்  என்பதை நம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டுமே!

பெரியார் மட்டுமல்ல, பெரியார் மணியம்மையார்திருமணத்தைக் காரணம் காட்டி கழகத்தை விட்டுப்பிரிந்து தனிக் கழகம் கண்ட அண்ணா அவர்களே கூடஉண்மையை உணர்ந்து ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்து விட்டாரே!

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான்அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில்என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிடஅதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன.அப்படியிருந்த அய்யாவை கடந்த முப்பதுஆண்டுகளாக கட்டிக் காத்து, அவரை நோயின்றி உடல்நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமைமணியம்மையாரையே சாரும் என்றார் அண்ணா.அய்யா சிறையிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகுவிடுதலையாகிறார். ஒவ்வொரு ஊருக்கும் தோழர்கள்தந்தை பெரியார் அவர்களை அழைக் கின்றார்கள்.அந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் வெளியிட்டஅறிக்கையை நோக்குங்கள்.

-  (விடுதலை 8.6.1958)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

நேரம் ஜூலை 16, 2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக