திங்கள், 23 மே, 2022

கி.வீரமணிக்கு வழங்கப்பட்ட விருது - பட்டம்

“பகுத்தறிவுப் போராளிக்கு!” நம் வணக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

(கட்டுரையின் ஒரு பகுதி)

 பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் உலக திராவிடர் மகளிர் மாநாடு  காணொலி மூலம் நமது அருமைத் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டத்தை அளித்து மகிழ்ந்தது.  (12.12.2021)

இதற்கு முன்பும் பல விருதுகள் இவரைத் தேடி வந்ததுண்டு.

இனமானப் பேரொளி” இது நாகையில் பெண்கள் மாநாட்டில் அளிக்கப்பட்டது (1993).

பாரத் ஜோதி” என்ற விருதைக் கொடுத்து பாராட்டியதுபுதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் (2000 ஆண்டு). “பேரறிவாளர்” விருதினை வழங்கியது மியான்மர் சுயமரியாதை இயக்கம்.

ஆக்ஸ்போர்டு தமிழ் விருது” வழங்கிக் குதூகலித்ததுஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்கம்.  பெரியார் ஒளி” வழங்கியது கழகத்தின் மூன்றாவது துப்பாக்கியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2010 ஆம் ஆண்டு)

கோவை கே.ஜி.அறக்கட்டளை “ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர்” என்ற விருது வழங்கிப் பாராட்டியது.

வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கியது சென்னை லயோலா கல்லூரி.

கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (2003ஆம் ஆண்டு).

கருத்துக்கனல்” என்ற விருது வழங்கி பெருமைப் பெற்றது மலேசிய திராவிடர் கழகம்.

2009 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் விருதினை” வழங்கிக் கவுரவித்தது ‘முரசொலி’ அறக்கட்டளை (2009 ஆம் ஆண்டு)

காஞ்சியில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில் “தந்தை பெரியார் விருது” வழங்கி உச்சி மோந்தது (2009).

தந்தை பெரியார் சமூகநீதி விருது” வழங்கி கவுரவித்தது தமிழ்நாடு அரசு (1996ஆம் ஆண்டு).

மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கியது அமெரிக்க மனித நேய அமைப்பு (Humanist Association)  வாசிங்டன் (22.9.2019).

தஞ்சையில் எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்பட்டது (1.2.1998). அதில் உருவானதுதான் திராவிடர் கழக அறக்கட்டளை (DK Trust).

புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி - அது பெரியார் அறக்கட்டளைக்குச் சென்றது.

இவற்றை எல்லாம் அணி அணியாகப் பெற்ற - அறிஞர் அண்ணாவால் 11 வயதில் “திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தர்” என்று வருணிக்கப்பட்ட - ஆசிரியர் என்றாலே வீரமணி என்று உலகமறிந்த பெருமகனார் ஒவ்வொரு முறையும் என்ன சொன்னார்?

இந்த விருதுகள் எல்லாம் என் ஆசானுக்குஅறிவுலகத் தந்தை அய்யாவுக்கு அளிக்கப்பட்டது என்று சொன்னது மேம்போக்கான சொற்கள் அல்லஅவரின் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவர்கள் இதனை அறிவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக