வியாழன், 2 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-11 (விளக்க அறிக்கையும்)


மீண்டும் கோயில்கள் முன் வேண்டுகோள் அறப்போர்

தஞ்சை திலகர் திடலில் 14.08.1982 அன்று அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் 13 கோயில்கள் முன் வேண்டுதல் அறப்போர் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தஞ்சையில் நடைபெற்ற மாநாட்டில் ஆறாவது தீர்மானமாகக் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

வரும் ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணையை தமிழ்நாடு அரசு பிறப்பிக்கத் தவறினால் ஜாதி ஒழிப்பின் முக்கிய அம்சமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற அய்யாவின் ஆணையை நிறைவேற்றும் பொருட்டு நீண்டகால அறப்போராட்டத்தை பலமுனை பலகட்ட கிளர்ச்சிகள் ஆக நடத்துவது என இம்மாநாடு முடிவு செய்வதுடன் முதற்கட்ட போராட்டமாக தமிழ்நாட்டு முக்கிய பெரு நகரங்களில் உள்ள பிரபல கோயில்கள் முன் நின்று உள்ளே செல்லும் நம் இன பக்தர்களை கோயிலுக்குச் சென்று உங்களை சூத்திரர்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று கேட்டுக்கொள்ளும் வேண்டுகோள் அறப் போராட்டத்தை நடத்துவது என இம்மாநாடு முடிவு செய்வதுடன் இது சம்பந்தமாக எந்த எந்த ஊரில் எந்தக் கோயிலில் நடத்துவது என்பதை கழக பொதுச் செயலாளரின் முடிவுக்கு விட்டு விடுவது என்றும் திருச்சியில் 13.6.1982 அன்று நடைபெற்ற மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நமது வேண்டுகோள் தீர்மானத்தின்படி தமிழ்நாடு அரசு உரிய ஆணையை பிறப்பித்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களில் உள்ள கோயில்களின் முன்னால் வேண்டுகோள் அறப் போராட்டம் நடத்துவது என்று தெரிவித்துக் கொள்கிறோம். என்ற தீர்மானத்தை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணி முன்மொழிந்தார்.

ஊர்களும் கோயில்களும்

சென்னை கபாலீஸ்வரர் கோயில்

பார்த்தசாரதி கோயில்

திருத்தணி சுப்ரமணியசாமி கோயில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்

தென்னார்க்காடு மயிலம் சுப்பிரமணியசாமி கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயில்

தர்மபுரி அம்பிகா பரமேஸ்வரி கோயில்

கிருஷ்ணகிரி நவநீத வேணுகோபால் சாமி கோயில்

சேலம் சுகவனேஸ்வரர் கோயில்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

பழனி தண்டாயுதபாணி கோயில்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்

கோவை கோனியம்மன் கோயில்

ஈரோடு ஈஸ்வரன் கோயில்

சென்னிமலை ஆண்டவர் கோயில்

திருச்சி மலைக்கோட்டை

திருவரங்கம் ரங்கநாதர் கோயில்

கரூர் பசுபதீஸ்வரர் கோயில்

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில்

தஞ்சை பெரிய கோயில்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்

வைத்தீஸ்வரன் கோயில்

வைத்தியநாதர் சாமி கோயில்

திருக்கடையூர் அமிர்த கடையேசுவரர் கோயில்

திருவாரூர் தியாகராஜர் கோயில்

சிக்கல் சிங்காரவேலர் கோயில்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்

வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயில்

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில்

அது குறித்து அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் இதுபற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

20.08.1982 அன்று விடுதலையின் முதல் பக்கத்தில் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் நமது வேண்டுகோள் அறப்போர் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கமளித்து முக்கிய அறிக்கையை “நமது வேண்டுகோள்” “அறப்போரும் அறநிலைய அமைச்சர் விளக்கமும்” என்ற தலைப்பில் அன்றைய பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பல்வேறு செய்திகளை எடுத்து விளக்கினார்.

(தொடரும்)

அர்ச்சகர் பிரச்சினை: 1982இல் பொதுச் செயலாளர் வெளியிட்ட விளக்க அறிக்கை

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை வேண்டும்அதன்மூலம் உயர்ந்த ஜாதியினர் மட்டும்தான் கோயில் சிலைகளைத் தொட்டு பூசை செய்யும் உரிமை பெற்றவர்களாக முடியும் என்ற நிலை மாற்றப்பட்டு ஜாதி வேறுபாடு ஒழியவழிவகை உண்டாக வேண்டும் என்பதற்காகத் தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக இட்ட ஆணையை செயலாக்க திராவிடர் கழகம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று தமிழ்நாட்டுப் பெரு நகரங்களின் முக்கிய கோயில்கள் முன்பு வேண்டுகோள் அறப்போரினை (முதற்கட்டமாகநடத்த அறிவித்துள்ளது.

நமது கோரிக்கையின் நியாயம்

இதுகுறித்து தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு அமைச்சர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் செய்தியாளரிடையே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25(1)ஆவது பிரிவிற்கு சட்டத் திருத்தம் கொண்டு வருவதை வற்புறுத்திதமிழ்நாடு முதலமைச்சர்  எம்.ஜி.ஆர்அவர்கள் பிரதமருக்கு இன்னும் ஒரு வாரத்தில் கடிதம் எழுதவிருக்கிறார் என்றும்மகராஜன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்படாது இருப்பதற்கு இது அவசியம் தேவை என்றும்நீதிபதி தலைமையிலான குழு சிபாரிசுகள் அடிப்படையில் அந்தத் திருத்தம் அவசியம் என்பதை ஒன்றிய அரசுக்கு எடுத்துக்கூற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றம் சட்டபூர்வமாக தடுத்துள்ள நிலையில் அரசமைப்பு சட்டத்தை திருத்தாமல் எல் லோரையும் ஜாதிஇன வேறுபாடின்றி அர்ச்சகர்களாக நியமிக்க வாய்ப்பில்லைஅறநிலையத் துறையோஅரசோ இது சம்பந்தமாக எந்த ஆணையும் பிறப் பிக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்பதை இதன் மூலம் உணரலாம் என்று தமிழக அரசின் சார்பில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அவர்களின் இந்த பதில் நமக்கு முழு அளவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றபோதிலும்இந்த அமைச்சர்முதல் அமைச்சர் ஆகியோர் இதற்கு முன்பு தாம் எடுத்த நிலைகளிலிருந்து  (ஷிtணீஸீபீஇதன் மூலம் வேறுபட்டுநமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்று பதிலளித்துள்ளது அவர்களது நிலையில் நல்ல மாற்றத்தை உருவாக்கியிருப்பதால் ஓரளவு அதனை வரவேற்கிறோம்.

கோயிலே வேண்டாம் என்ற பெரியார்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்லியிருப்பாரா?

கடவுள் இல்லை என்று சொல்லும் இந்த பகுத்தறிவு வாதிகளுக்கு கோயிலில் யார் பூஜை செய்தால் என்ன கவலைஇவர்கள் ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்?

இவர்களது கிளர்ச்சியை மக்கள் பார்த்துக் கொள் ளுவார்கள்இதுபோன்ற விதண்டாவாதங்களுக்கு விடை கொடுத்துவிட்டுஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டியது நியாயமான கோரிக்கைதான்அதை எப்படிச் செய்வதுதமிழ்நாடு அரசு செய்வதாதேசிய அரசு அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து செய்வதாஎன்று கேட்டு ஆலோசிக்கும் கட்டத்திற்கு வந்ததுநமது கோரிக்கை வெற்றியின் நுழைவு வாயிலில் வந்து நிற்கிறது என்பதைக் காட்டவில்லையா?

மக்களின் பேராதரவு திரண்டால்எந்த ஓர் ஆட்சியானாலும் அவர்கள் அதற்குத் தலைவணங்கித் தான் ஆகவேண்டும் என்ற பொது நியதியைக் காட்டவில்லையா இது?

இந்து அறநிலையப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் நமது போராட்டத்தின் நியாயத்தை மறுக்க வில்லைகேலிகிண்டல் எதனையும் முன்புபோலச் செய்யவில்லை.

மாறாகமாநில அரசினால் இதனைச் செய்ய முடியுமாஒன்றிய அரசின் சட்டத்திருத்தம் அல்லவா முக்கியம்மகராசன் ஆணையத்தின் அறிக்கையின் ஒரு பரிந்துரைகூட இதனை அல்லவா வலியுறுத்துகிறது என்று கூறுகிறார்.

நடுநிலையோடு பரிசீலியுங்கள்

அதனை சட்டரீதியாக முழுக்க ஆராய்ந்தவர்கள் என்பதால்இப்பிரச்சினையில் தீர்வுகாண இவ்வரசு குறியாய் இருந்தால் நாம் கூறும் வாதங்களை அருள்கூர்ந்து விருப்புவெறுப்பு இன்றி நடுநிலைக் கண்ணோட்டத்தோடு பரிசீலிக்க வேண்டும்நேரிடை கலந்துரையாடல் தேவை என்றால் - சட்டரீதியான ஆலோசனைகளுடன் நாம் எடுத்துக்கூறத் தயாராக இருக்கிறோம்.

அரசமைப்புச் சட்டத்திருத்தம் என்ற ஒன்றைக் கொண்டுவரஒன்றிய அரசிடம் கோராமலேயேதமிழ்நாடு அரசால் இதனைச் செய்திட முடியும்எப்படி எனில்கேரளத்தில் தேவஸ்வம் போர்டால் ஏற்பாடு செய்யப்பட்டதைப் போலஇங்கும் ஒரு தனி அரசு ஆணை (G.Oகொண்டு வந்தே இதனைச் செய்யலாம்.

பழைய தி.மு.அரசு கொண்டு வந்த சட்டத்திற்குப் புத்துயிர் கொடுத்துஅதனை எழுந்து நடமாடச் செய்ய வேண்டும் என்றுகூட நினைக்காமல்புதிதாக வேறுபட்ட நடைமுறையையே கையாளலாம்.

தமிழ்நாடு இந்து அறநிலைய சட்டத்தின் (1959ஆம் ஆண்டும்) 55ஆவது பிரிவுகோயில்களில் பொறுப்பு வகிப்போர் பணியாளர்கள்நியமனம் பற்றியதாகும்.

இந்த நியமனங்களில் என்னென்ன விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அதிகாரம் பிரிவு 116 உட்பிரிவு 2 (xxiiiகீழ் அரசுக்கு இருக்கிறது.

இந்த அதிகாரத்தின் கீழ் மாநில அரசு விதி முறைகளை சென்னை இந்து அறநிலைய நிறுவனங்கள் உத்தியோக (அதிகாரிகள்பணியாளர்கள்சர்வீஸ் விதிகள் என்பதை 1964ஆம் ஆண்டு செய்துள்ளது.

(The Madras Hindu Religious Institutions (Officers and Servants) service Rules 1964)

இவ்விதிமுறைகள் கீழ் சாமிக்கு பூஜை செய்யும் ஓர் அர்ச்சகர் அல்லது பூசாரி என்பவர் உள்துறை பணியாளர் (Ulthurai Servantஆகக் கருதப்படுகிறார்.

Rule 12 provided that every  ‘Ulthurai servant’, whether hereditary or non-hereditary whose duty is to perform pujas and recite mantras, vedas, prabandams, thevarams and other invocations shall, before succeeding, or appointment to an office, obtain a certificate of fitness for performing his office, from the head of an institution imparting instructions in Agamas and ritualistic matters and recognised by the Commissioner, by general or special order or from the head of a math recognised by the Commissioner, by general or special order, or such other person as may be designated by the Commissioner, from time to time, for the purpose.

விதி 12 கூறுவதாவதுஒவ்வொரு உள்துறை ஊழியர் அவர் பரம்பரையில் வந்தவராக இருந்தாலும் சரிஅவருடைய கடமை பூஜைகள் செய்து மந்திரங்களைவேதங்களைபிரபந்தங்களைதேவாரங்களை மற்ற தோத்திரங்களை ஓதுவதாகும்அவர் அந்தப் பதவிக்கு உரிய பணியைத் தொடர்வதற்கோ அல்லது அந்தப் பணியில் புதியதாக சேருவதற்கு முன்அந்தப் பணிக்குரிய வேலைகளை ஆற்றுவதற்கு முன்தனக்கு அந்தப் பணிகளை ஆற்றுவதற்குத் தகுதி உண்டு என்ற ஓர் அத்தாட்சியை பெற்றாக வேண்டும்அந்த அத்தாட்சியை ஆகமங்களை அல்லது கிரியைகளைச் சொல்லிக் கொடுக்கும் பாடசாலையின் தலைவரிடமிருந்து பெற்றாக வேண்டும்அந்தப் பாடசாலை ஆணையரால் பொதுவாக அல்லது பிரத்யேகமான உத்தரவால் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிரத்யேகமான உத்தரவின் பேரில் ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட மடத்தின் தலைவரிடமிருந்தோ அல்லது ஆணையரால் இந்த பணிக்காக அவ்வப்போது நியமிக்கப்பட்ட நபரிடமிருந்தோ பெற்றிருக்க வேண்டும்.

முழு அதிகாரம் உண்டு

இந்த விதியின்படிஅர்ச்சகர்களாக வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கட்குப் பயிற்சி அளிக்கஇன்னஇன்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்க இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு முழு அதிகாரம் உண்டு.

இந்த விதியைப் பயன்படுத்திகேரளத்தில் தேவஸ்வம் போர்டார் எப்படி அர்ச்சகர் பயிற் சிக்கென ஒரு தனிப்பள்ளி வைத்துஅதற்கு தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்ட அத்தனை சமுதாய மக்களிடமிருந்தும் தேர்வு செய்துஅவர்களுக்குப் பயிற்சி அளித்துஅவர்களை அர்ச்சகர்களாக நியமித்தால் அது சட்டப்படி செல்லுபடியாகுமே தவிரஅதனைச் செல்லாது என்று கூற இயலாதுஅண்டை மாநிலமான கேரளாவில் இந்த நடைமுறை இருக்கும்போது தமிழ்நாட்டில் ஏன் முடியாது?

தனிச்சட்டம் கொண்டு வந்துஅந்தச் சட்டத் தினைப் பற்றி வாதாடும்போது - முந்தைய தமிழ்நாடு அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட சில வாதங்கள்தான் அந்தச் சட்டச் சிக்கலையே கூட தோற்றுவிக்கக் காரணமானவைகளாக இருந்தது என்பதைஉச்சநீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட அர்ச்சகர் சட்ட வழக்கின் தீர்ப்பை ஆழ்ந்து படிக்கும் எவருக்கும் விளங்கும்.

இல்லாத ஊருக்குப் போகாத பாதை

எனவே ஒன்றிய அரசின் அரசமைப்பு சட்டத்திருத்தத்திற்காக காத்திருப்பது என்பது இல்லாத ஊருக்குப் போகாத பாதை என்பது போலஊர் கூடி செக்கை தள்ளிய கதை போன்றதே!

மிகவும் சுருக்கமான வழி உள்ளது.

அறிக்கையை வெளியிடுக

மகராஜன் ஆணையத்தின் அறிக்கையை முதலில் பகிரங்கமாக தமிழ்நாடு அரசு வெளிப்படுத்தி விட வேண்டும்.

ஜஸ்டிஸ் மகராசன் பரிந்துரையில்கூடஎதிர் காலத்தில் சட்டச் சிக்கல் வராமல் இருப்பதற்குத்தான் 25(1) பிரிவு சட்டத் திருத்தம் பற்றிக் குறிப்பிடுகிறாரே தவிரதற்போது உடனடியாக செயல்பட முடியாது என்று தடுக்க அல்லஅவர் எந்த இடத்திலும் தடுத்ததாகத் தெரியவில்லை.

அப்படி அவர் கருதியிருப்பாரானால் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி நிறுவவேண்டும் (கேரள மாடலில்என்று அவர் பரிந்துரை செய்திருக்க மாட்டார் அல்லவா?

இந்து அறநிலையப் பாதுகாப்பு அமைச்சர்  ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கூற்றுப்படியேமகராஜன் ஆணைய அறிக்கை கூறுவது என்னவென்றால்,

மகராஜன் குழு சுற்றுப்பயணம் செய்து (தமிழ் நாடு மற்றும் பிற மாநிலங்களில்பல்வேறு சமயத் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டு அறிந்துஇறுதியாக தமது கருத்தாக எதிர்காலத்தில் பூஜை சிறப்புற நடைபெற வேண்டியும்மக்களின் ஈடு பாட்டை பெருக்க வேண்டியும்அர்ச்சகர் நியமனம் பிறவியின் அடிப்படையில் இல்லாமலும்ஜாதிஇன வேறுபாடின்றிபணி தகுதி அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிப்பது என்ற கருத்து ஆகமத்திற்கு முரணானது அல்ல என்று கூறிஅதை நிறைவேற்ற அர்ச்சகர்களாக விரும்பும் இந்துக்களைத் தேர்வு செய்துஅவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆகமத்தில் தகுந்த பயிற்சி அளிக்கவும வல்லுநர் குழு ஒரு செயல்திட்டம் தந்துள்ளதுஅர்ச்சகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5 ஆண்டு காலப் பயிற்சி - செயல்முறை பயிற்சி முதலியவைகளை ஆகம கல்லூரிகள் மூலம் அளிக்க வேண்டும்.

பயிற்சி சம்பந்தமாக சேர்க்கை விதிகள் பயிற்சி திட்டம்பாடப் புத்தகம் முதலிய அனைத்துக் காரியங் களையும் நிர்வகிப்பதற்குஅறநிலையத் துறை ஆகம சபை ஒன்றை நிறுவ வேண்டும் என்பன போன்ற திட்டங்களை அறிவித்துள்ளது.

நாம் மேலே காட்டிய விதி 12இன் கீழ் இது சரியாக வருவதால் சட்டப்படிஅரசு இதனை வைத்து ஓர் ஆணை (G.Oபோட்டால் போதும்கேரளத்தில் அப்படித்தான் (G.Oமூலம் செய்து இன்னமும் நடை முறையில் உள்ளது.

தமிழ்நாடு அரசு மனமிருந்தால் இதை உடனே செய்ய மார்க்கமுண்டு.

ஒன்றிய அரசுக்கு - பிரதமருக்கு முதலமைச்சர் எழுதுவது நல்லதுதான்.

ஆனால்அதைக் காட்டி உடனே செய்ய வேண்டிய பணியை ஒத்திப்போட வேண்டாம்.

ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் இல்லாமல் செய்ய ஒரு வழி இருக்கையில் தேவையில்லாமல் ஏன் காலம் கடத்த வேண்டும்?

ரூ.9000 அரசு ஆணையை ரத்து செய்த முதல மைச்சர்  எம்.ஜி.ஆர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவிகிதத்தினை 50ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்தாரேஅப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 50க்கும் கீழ் இருக்க வேண்டும் என்று இருக்கிறதே என்பது பற்றி கவலைப்பட்டாராஇல்லையே!

அதுபோன்ற துணிச்சல் இப்போது இதிலும் அதைவிட வாய்ப்பான சட்டப் பிரிவு ஆணையத்தின் பரிந்துரை உள்ளபோது ஏன் ஆணை (நி.ளிமூலம் கொண்டு வந்து நிறைவேற்றக் கூடாது?

ஆணை பிறப்பியுங்கள்

எனவேதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களேஅறநிலையப் பாதுகாப்பு அமைச்சர் அவர்களேநீங்கள் இந்தப் போராட்டம் சம்பந்தமாக காட்டும் அக்கறைக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.

ஆணையை உடனே பிறப்பியுங்கள் உங்கள் மதிப்பு மேலும் உயரும்.

தமிழ்நாடு நன்றி செலுத்தும்அய்யாவின் இறுதி ஆணையை நிறைவேற்றிய பெருமை உங்களுக்கும் கிட்டும்.

காலம் தாழ்த்தாதீர்கள் என வேண்டிக் கொள்கிறோம்!

(அமைச்சர் வீரப்பன் அவர்கள் நமது வேண்டுகோள் அறப்போர் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கமளித்து கழகப் பொதுச் செயலாளர் 20.08.1982இல் விடுத்துள்ள அறிக்கைவிடுதலை - 20.08.1982)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக