வெள்ளி, 10 செப்டம்பர், 2021

"சூத்திரன்" இழிவு நீக்கிய திமுக அரசு

 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்அப்போதுதான் சூத்திரன் என்ற இழிவு பார்ப்பனரல்லாதாருக்கு நீக்கப்படும் என்று தந்தை பெரியார் அவர்கள் பிரகடனம் செய்தார்இது குறித்து 8.10.1969 இல் போராட்ட அறிவிப்பு வெளியிட்ட தந்தை பெரியார்தமது அறிக்கையில்காலம் வீணாகிப் போய்க் கொண்டிருக்கிறதுஅய்ப்பசி மாத வாக்கில் சூத்திரன் என்ற இழிவு நீக்கம் கிளர்ச்சி துவக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இப்போராட்டத்திற்கு கர்ப்பக் கிரக நுழைவுக் கிளர்ச்சி என்று பெயரிட்டார்இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள பெரியாரிடம் பெயர் கொடுத்தனர்.

1970 ஜனவரி 26 ஆம் நாள் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி நடைபெறும் என பெரியார் நாள் குறித்தார்.

இதனைத் தொடர்ந்துஅப்போதைய முதலமைச்சர் கலைஞர் 17.1.1970 அன்று பெரியாருக்கு ஒரு வேண்டுகோள் அறிக்கை விடுத்தார்அதில்,

அர்ச்சகர்களுக்கான சில தகுதிகள் இருக்க வேண்டும்புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும்அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லைஅப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்ச்சி பெற்று அர்ச்சகராக இருக்கவும்அதே சமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு பரிசீலித்துக் கொண்டு இருக்கிறதுஇந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அதன்படிஅர்ச்சகர் பதவிகளை பிறப்பினால் கணக்கிடாமல்தகுதியொன்றினால் கணக்கிடக்கூடிய நாள் வந்து விடுமானால் ஆண்டவனைத் தொழ ஆலயம் செல்லுவோர் ஜாதி வேறுபாடின்றி கர்ப்பக் கிரகம் வரையில் செல்வதற்குத் தடை இல்லை என்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாகிவிடும்ஆகவே இந்த நன்னிலை ஏற்பட ஆலயங்களில் ஆண்டவன் முன்னே ஜாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட விதிமுறைகள் செய்திட அரசு முன்வருகின்றது என்ற உறுதியினை ஏற்றுபெரியார் அவர்கள் தான் திட்டமிட்டிருக்கின்ற கிளர்ச்சி யினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் கலைஞர் கூறியிருந்தார்.

உடனே தந்தை பெரியார் அவர்கள்கிளர்ச்சியின் தத்துவத்தை நல்ல வண்ணம் புரிந்து செயல்பட முனைந்து உள்ள கலைஞர் அவர்களுக்கு நன்றி

தெரிவிப்பதுடன், 26.01.1970 அன்று நடைபெற இருந்த கிளர்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் -1970க்கான சட்டத் திருத்தம் 1971 இல் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப் பட்டதுஇதன் நோக்கம் இரண்டு.

முதலாவது பரம்பரைப் பரம்பரையாக அர்ச்சகராக இருந்து வரும் பார்ப்பனக் குடும்பங்களின் வாரிசு முறை மாற வேண்டும்இரண்டாவது கோயில் வழி பாட்டு முறைகள்சடங்குகள்பழக்க வழக்கங்கள் இவைகளில் பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்கியவர்கள் எந்த ஜாதியினராக இருந்தாலும் அர்ச்சகராகலாம்தமிழ்நாடு அரசின் இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் 12 ரிட் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்இவர்களுக்கு ஆதரவாக பல்கிவாலாபராசரன் போன்ற பிரபல வழக்குரைஞர்கள் வாதாடினர்இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி பாலேகர் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.

நீதிபதி பாலேகர் அளித்த தீர்ப்பில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லுபடியாகும்அர்ச்சகர்களை டிரஸ்டிகள் நியமிக்கும் செயல் மதக் காரியம் அல்ல என்றும்அது மதச் சார்பற்ற காரியமே என்றும் தீர்ப்பளித்து, 12 ரிட் மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டன.

கடவுளை மறுத்தகோவிலே கூடாது என்ற பெரியார்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று போராடியது ஏன்?

தந்தை பெரியார் அளித்த பதிலில்நான் அடித்த ஜாதிப் பாம்பு என்னிடம் அடிவாங்கி கடைசியில் கோயில் கருவறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டு உள்ளதுஅங்கு இருந்தும் மனித உரிமை அடிப்படையில் அதனை விரட்ட வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்திஅவர்களின் இழிவைப் போக்கும் வகையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடுசென்னை பெரியார் திடலில் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9 ஆம் தேதிகளில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றதுஅதுவே பெரியார் நடத்திய இறுதி மாநாடுஇதில் தந்தை பெரியார் ஆற்றிய உரையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிதமிழர் இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று இதனையே கலைஞர் குறிப்பிட்டார்தந்தை பெரியாரின் நூற்றாண்டையொட்டி அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நீதிபதி .மகாராசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை 1979 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்அமைத்தார்.

உரிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டுஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக எந்தவிதமான தடையும் இல்லை என்று இந்தக் குழு அறிவித்தது.

பின்னர் அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 8.6.1984 அன்று தமிழ்நாடு அரசு ஓர் ஆணை பிறப்பித்ததுஅதன்படி பழனி கோவிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்படும் என அப் போதைய இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

எனினும் நடைமுறைக்கு வராமலிருந்த இந்தப் பிரச்சினைக்கு 17.9.1991 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 113 ஆவது பிறந்தநாள் விழாவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அய்யா அவர்கள் கடைசியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதன்படி அரசால் திறக்கப்பட இருக்கும் ஆகமக் கல்லூரியில் பட்டியல் இனத்தவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 விழுக்காடு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு கோவில் களில் அர்ச்சகர்களாக ஆக்கப்படுவார்கள்இதன் மூலம் பெரியார்அண்ணா கனவுகள் நனவாக்கப்படும் என்று 17.10.1991 இல் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.

1996 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம்கம்பரசம்பேட்டையில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டுஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது. 2006 இல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற கலைஞர் அவர்களின் அரசு நீதிபதி .கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு ஒன்றை அமைத்ததுஉச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு சிறிய திருத்தத் துடன் 21.8.2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதுமதுரைபழனிதிருச்செந்தூர்திருவண்ணாமலைதிருவல்லிக்கேணிசிறீரங்கம் ஆகிய இடங்களில் பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட்டன.

பயிற்சியில் சேர 1267 விண்ணப்பங்கள் வந்து குவிந்தனஓராண்டு பயிற்சியில் 206 பேர்கள் தேர்வு பெற்றனர்.

இதனிடையே மதுரை ஆதி சிவாச் சாரியார்கள் சங்கத்தின் சார்பில் அர்ச்சக உரிமைக்கான ஆணைக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சக ராக்க கலைஞர் அரசு பிறப்பித்த (அரசாணை எண்.118, நாள். 23.05.2006) அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு விசாரணை 9 ஆண்டுகள் நடந்தன.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை 16.12.2015 அன்று வழங்கியது.

இத்தீர்ப்பில்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை ரத்து செய்யப்படவில்லைஆனால் கோயில் களில் அர்ச்சகர்கள் ஆகம விதிப்படிதான் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுஆகம விதிப்படிதான் அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறுகிறதே தவிரஆகம விதிப்படி பிராமணர்கள் தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறவில்லை.

ஆனாலும் கடந்த 6 ஆண்டுகளாக ...தி.மு.அரசு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த முன்வரவில்லைதளபதி மு..ஸ்டாலின் தலைமையிலான தி.மு.அரசு பொறுப் பேற்று 100 நாள் நிறைவடையும் போதுவரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

ஆகஸ்டு 14, 2021 அன்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்அர்ச்சகர் பயிற்சி முடித்த 206 பேரும் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் பெறும் நிலை உருவாகி உள்ளது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவில்லையே என்று தந்தை பெரியார் நெஞ்சில் முள் தைத்தது என்று தலைவர் கலைஞர் கூறினார்அந்த முள்ளை தனயன் மு..ஸ்டாலின் அகற்றிவிட்டார்வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டுவிட்ட மாபெரும் சமூ கநீதி சாதனை படைத்த முதலமைச்சரை வாழ்த்துவோம்.

நன்றிசங்கொலி,

தலையங்கம், 27.08.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக