வியாழன், 2 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பெரும் வரவேற்பு மற்றும் பாராட்டுகள்


சென்னை,ஆக.16-  தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (14.08.2021) சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கற்பகாம் பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அற நிலையத்துறையின் சார்பில் திருக்கோயில்களில் புதிய பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

 இதற்கு ஆதினத் தலைவர்களும், மற்ற தலைவர்களும் முதலமைச் சருக்கு வரவேற்பு மற்றும் பாராட் டினைத் தெரிவித்தனர்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

தவத்திரு குன்றக்குடி பொன் னம்பல அடிகளார்  கூறியதாவது:

‘இந்து சமய அற நிலையத் துறையின் சார்பாக திருக்கோயில்களில் புதிய பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்குகிற இந்த அற்புதமான விழாவினை மிகச்சிறப்பாக செயலாற்றிக் கொண் டிருக்கிற, இன்றைக்கு தமிழ்நாடு அரசில் காகிதம் இல்லாத பட்ஜெட் மட்டுமல்ல, ஏழைகளின் கண் ணீரைத் துடைக்கிற பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு, முழுமையிற் காணாதார், முதுகெலும்பு முறியப் பாடுபடுவோர், வாழ்வில் சுவை காணோர், வலியோரின் பகடைக் காய்கள், ஓடப்பர் இவர்களெல்லாம் உயரப்பராக மாறுவதற்கு தன் னுடைய பணியை மிகச் சிறப்பாக ஆற்றிக் கொண்டிருக்கிற, நமது பேரன்பிற்குரிய தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிடு வார்கள். ‘நம்முடைய மகாசந் நிதா னம், சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது, இதைப் போல் ஆதீனங்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்குப் பாராட்டு விழா மயிலாப்பூரில் நடத்தினார்கள். அந்த விழாவில் நிறைவுரை யாற்றுகிறபோது சொன்னார்கள். நான் கடவுளை ஏற்றுக்கொள் கிறேனோ இல்லையோ... கடவுள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் நான் செயல்படுகிறேனா என்பது தான் முக்கியம் என்றார்கள். அந்த வகையில் இன்றைக்கும் கடவுளும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் செயல்படுகிற இன்றைய நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களை நாம் நெஞ்சாரப் பாராட்ட கடமைப்பட் டிருக்கிறோம். இது இந்து சமய அறநிலையத் துறையின் சீரிய பணிகள், மிகச் சிறப்பான பணிகள், அறநிலையத்துறையின் பணிகள் இந்த நெருக்கடியான நேரத்தில் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக செயலாற்றுவதற்கு பாராட்டுதல் களை, வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள் கிறோம் . அனைத்து ஆதீனப் பெருமக்களும், அருளா ளர்களும் வாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறோம். இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம். நீதியரசர் ஏ.கே. ராஜன் கமிட்டியில் நாமும், பேரூர் அடிகள் பெருந்தகையும் இணைந்து பணி யாற்றினோம். 2000இல் தொடங் கப்பட்ட நிலையில், அந்தக் கனவு இன்றைக்கு நனவாகி இருக் கிறது. அதற்கு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட் டிருக்கிறோம். 

இவ்வாறு கூறினார். 

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்

தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் மிகச்சிறப்பான ஒரு திட்டத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறார். நம்முடைய பக்தி இலக் கிய காலம் தொடங்கி அனைவரும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த சான்றுகள் நம்முடைய இலக் கியங்களில் உள்ளன. இடைக்காலத் தில் அது தடைபட்டது. மீண்டும் அது நடைமுறைக்கு வந்து இருக் கின்றது. கோவிலுக்குள் சென்று திருமேனி வழிபாடு செய்ய வேண் டும். தகுதியுடைய அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பாக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குன்றக்குடி அடிகளார், பேரூர் ஆதீனம் மற்றும் சிவாச்சரியார்கள் அனைவரையும் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் 6 இடங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அந்தப் பயிற்சி பெற்றவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்குவது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

காலத்தில் சற்று தள்ளிப் போனாலும் கூட மிகவும் மகிழக் கூடியது. இதேபோன்று இன்னும் வரக்கூடிய காலங்களில் நிறைய பயிற்சி மய்யங்கள் உருவாக வேண் டும். நிறைய பேர் திருக்கோவில்களில் இதேபோன்று பணி ஆணைகள் பெற்றுப் பணியாற்ற வேண்டும். அதற்கு இறைவன் எல்லா நலன் களும் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேரூர் ஆதீனம் பேசினார்

தவத்திரு குமரகுருபர ஆதீனம்

 தவத்திரு குமர குருபர ஆதீனம் அவர்கள் வர வேற்றுக் கூறியதாவது :- இன்று திருக்கோவில் களில் ஓதுவார்கள், அர்ச்சகர்கள் என்று எல்லோரும் அர்ச்சகராகலாம் என் பதன் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் அவர்கள்  பணி நியமன ஆணை வழங்கித் தொடங்கி வைத்திருக்கிறார். இது பக்தர்களின் நீண்ட கால எண்ண மாக இருந்தது. இது மகிழ்ச்சிக் குரியதாக இருக்கின்றது. ஏனென் றால் இந்தியாவில் நம்முடைய தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாக திருக்கோயில்கள் இருக்கின்றன.

நாயன்மார்களும், ஆழ்வார் களும் தமிழில் பாடியது சிறப்புக் குரியதாக இருக் கிறது. ஆகவே, தமிழில் அர்ச்சனைகள் நடைபெற வேண்டும் என்று பல ஆண்டு காலமாகவே அடியார் பெருமக் களும், ஆதீனமும் கேட்டு வந்தார் கள். அந்த வகை யில் இன்றைய அரசானது அதனை செயல் படுத்தி இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கின்றது. இதில் அவர்கள் முறையாகப் பயிற்சி பெற்று மேலும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அவர் களுக்கெல்லாம் நம்முடைய அன் பான மகிழ்ச்சியையும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள் கிறேன்.

இவ்வாறு தவத்திரு குமர குருபர ஆதீனம் அவர்கள் கூறினார்.

ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம்

இந்தியாவில் மதங்களின் வளர்ச்சியை நீங்கள் கூர்ந்து பாருங்கள்.  எல்லா ஜாதிகளிலிருந்தும் குருமார்கள் வருகிறார் கள். அப் போது குரு பீடத்திற்கு வருவதற்கு ஒரு குறிப்பிட்ட ஜாதிதான் வர வேண்டும் என்ப தற்கு தடை வைத்து இருந்தால் ; இந்தியாவில் ஜாதி இருக்குமே தவிர இந்து மதம் இருக்க முடியாது. இந்து மதத்திற்கு வேறு வகையான சமூகத்திலிருந்தும் குருமார்கள் வரவேண்டும். 

நான் ஒரு புரட்சி வரலாறு சொல்கிறேன். இராமகிருஷ்ணர் தன்னுடைய ஜாதியில் இருந்தா வாரிசைக் காட்டினார்? இல்லையே. இராமகிருஷ்ணர் சத்திரிய வம் சத்தைச் சேர்ந்த விவேகானந்தரை வாரிசாக எடுத்தார். 

உலகம் முழுவதும் இந்து மதம் போய் சேர்ந்ததா இல்லையா? அதே மாதிரி எல்லா சமூகத் தினரும் வருகிற போது தான் இந்து மதம் பலமடையும்; வளமடையும் என்பது என்னுடைய தீர்க்கமான கொள்கை. இது வர வேற்கத்தக்க ஒன்று. ஏனென் றால் தாய்மொழியில் ஒருவர் உருக்கமாகவும், நெருக்க மாகவும் கடவுளை நெருங்குவது மாதிரி வேறு மொழியில் நெருங்க முடியாது. நான் உதாரணமாக சொல்வ துண்டு. தியாகராயர் தெலுங்கு பாடுகிறவர். தமிழ் நாட்டில் அது ஏன்? தெலுங்கு அவருடைய தாய்மொழி! தாய்மொழி தான் கடவுளிடம் ஒருவன் நெருக்க மாக பேச முடியும் என்பதை அவர் கண்டிருக்கிறார். தஞ்சாவூரில் இருக்கிறார், திருவை யாறில் இருக்கிறார், தமிழர்களுக்கு மத்தி யில் இருக்கிறார். ஆனால் தெலுங்கில் பாடுகி றார் என்றால் அது ஏன்?

நான் இதனை எதிர்க்க வில்லை. அதனை ஆதரிக்கிறேன். ஏனென் றால் தாய்மொழியில் பாடி னால்தான் கடவுளிடம் அன்பும், நெருக்கமும் ஏற்படும் என்று தியாக ராயர் வெளிப் படுத்தி இருக்கிறார். அதேமாதிரி தாய்மொழியில் கட வுளிடம் பேசிப் பாடுங்கள், திரு வாசகம் சொல்லுங்கள், தேவா ரத்தைச் சொல்லுங்கள் உங்க மனசு எப்படி உருகுது. கட வுளிடம் எப்படி நெருங்கலாம் என்பதைக் கண்டுபிடிக்கலாம். எனவே, தாய் மொழியில் வழிபாடு செய்வது தான் சரியான அணுகுமுறை.

இவ்வாறு ஆன்மிக சொற்பொ ழிவாளர் சுகிசிவம் கூறினார்.

வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப் பேற்ற 100 ஆவது நாளில், அனைத்து ஜாதியினரும், இந்துமத ஆலயங் களில் அர்ச்சகராக நியமனம் செய் யும் ஆணையை தமிழ்நாட்டு மக் களுக்கு சமத்துவப் பரிசாக தமிழ் நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி உள்ளார்!

மைலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் தமிழ் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்யும் காட்சியும், ஓதுவாராக பணி நியமனம் பெற்ற ஓர் சகோதரி “போற்றி, போற்றி” என்று தமிழில் வழிபாடு செய்யும் காட்சியும் நம்மை பெரிதும் பரவசம் கொள்ளச் செய்து விட்டது.

அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த 216 பேருக்கு ஆலயங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வழங்கும் சமத்துவச் சாதனையை - அமைதிப் புரட்சியை தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிகழ்த்தி இருக்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக 1970 ஆம் ஆண்டு குடியரசு நாளான சனவரி 26 அன்று கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். தமிழ்நாடு முதல மைச்சர்  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெரியாரைச் சந்தித்து, அதற்கான நடவடிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று உறுதி அளித் ததை ஏற்று, பெரியார் அவர்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் இதற்காக எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டன. மக்கள் மன்றத் திலும், நீதிமன்றத்திலும் திராவிடர் கழகமும், தி.மு.க., மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து போரா டியதன் விளைவாக 16.12.1975 அன்று நீதிமன்றம் அனுமதி வழங்கி யது. ஆனாலும் முட்டுக்கட்டைகள் தடுத்ததால், நடைமுறைக்கு வர வில்லை.

தந்தை பெரியார் மறைந்தபோது, “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே! என்ற கவலை பெரியாரின் நெஞ்சில் முள்ளாய் குத்தியது. அந்த முள்ளோடுதான் பெரியாரை புதைத்திருக்கிறோம்” என்று கண்ணீர்மல்க குறிப்பிட்டார் முத்தமிழறிஞர் கலைஞர்!

அந்த முள்ளை அகற்றும் அரும் பெரும் சாதனையைத்தான் இப் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வரலாற்றுச் சாதனையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

அமைதிப் புரட்சியை - சமத்துவப் புரட்சியை - இரத்தம் சிந்தாப் புரட்சியை நிறைவேற்றி, நமது அரசு பொதுநல அரசு என்று அகிலத்திற்கு பறைசாற்றியுள்ள தமிழ்நாடு முதல மைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சர், அலுவலர்கள் முதலான அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இதயம் கனிந்த - இதயம் நிறைந்த இனிய வாழ்த்துகள்! பாராட்டுகள்! இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர் அல்லாத பல்வேறு ஜாதிகளை சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். அவர்களில் 6 பேர் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற பெரியாரின் கனவு மெய்ப்பட்டு இன்று அவரது நெஞ்சில் தைத்த முள் முதல்-அமைச்சரால் களையப் பட்டிருக்கிறது. ஆட்சி பொறுப் பேற்ற 100-ஆவது நாளில் இந்த வரலாற்றுச் சாதனையை செய்த முதல்-அமைச்சரையும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதார பாராட்டுகிறோம்.

2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசமைப்பு சட்ட உறுப்பு 14-அய் குறிப்பிட்டு, அர்ச்சகர் நியமனத்தில் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருப்பதால், ஆகம விதிகளுக்கு உள்பட்ட கோவில் களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மட்டுமே அர்ச்சகர்களாக நியமித் தால் அது நீதிமன்றத்தை அவமதித் ததாகிவிடும்.

எனவே, ஆகம கோவில்களிலும், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மற்றவர் களையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்து கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக