வெள்ளி, 10 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-8

 

அய்யா மறைவுக்குப்பின் அன்னையார் தொடர்ந்த அறப்போர்!

திருச்சியில் கூடிய மத்திய நிர்வாகக்குழுக் கூட்டத்தின் முடிவுக்கேற்பஅய்யா தந்தை பெரியார் விட்ட பணியை,  களத்தில் நின்று முடிக்க முனைந்த பணியான  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டி நடத்தப்பட வேண்டிய போராட்டத்தின் முதல் கட்டம் 1974 மார்ச் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டு போராட்ட வீரர்வீராங்கனைகள் பட்டியலையும்ஊர்களில் கைதாகி சிறை செல்லும்முன்பு நீதிமன்றங் கள் முன்பு (தேவைப்படும்வாக்குமூலம் எப்படி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது போன்ற எல்லா விவரங்களும் அன்னையாரின் ஆணைக்கிணங்க வெளியிடப்பட்டன,

அஞ்சலகங்கள் முன் மறியல் செய்துஅர்ச்சகர் சட்டச் செயலாக்கத்தினை விரைவுபடுத்திடும் முயற்சியை ஆதரித்து தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (என்று தனிக்கட்சி கண்டமுதுபெரும் தியாகி கம்யூனிஸ்ட் தோழர் மணலி சிகந்தசாமி அவர்கள் இக்கிளர்ச்சிக்கு தனது முழு ஆதரவு உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கதுஅத் தீர்மானம் அம்மா அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

தமிழகம் முழுதும் துவக்கப்பட்ட இழிவு ஒழிப்பு முதல் கட்ட கிளர்ச்சி அமோக வெற்றி பெற்றதுபொதுமக்களின் நல் ஆதரவுடன் அஞ்சலகங்கள் முன்பு வேண்டுகோள் கிளர்ச்சி தொடர்ந்து நடைபெற்றதுஏறக்குறைய கிளர்ச்சிக்கு ஆளான அஞ்சலகங்கள் எல்லாமே செயலிழந்தனபோராட்ட வீரர்களின் வேண்டுகோளை ஏற்று அஞ்சலக பணியா ளர்கள் பெரும்பாலோர் அன்று வேலைகளுக்குச் செல்லவில்லை.

சென்னை - அண்ணா சாலை அஞ்சலகம் முன் கிளர்ச்சி!

சென்னையில் போராட்ட அணி (3.4.1974) கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையில் தோழர்கள் திருவாரூர் தங்கராசுடி.எம்.சண்முகம் ‘நவமணி‘ ஆசிரியர் சவுரி ராசன் மற்றும் ஏராளமான கழக வீரர் - வீராங்கனைகளும் கடவுள் மறுப்பு முழுக்கங்களுடன் தந்தை பெரியார் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்று அண்ணா சாலைஅஞ்சலகத்தில் கிளர்ச்சி தொடங்கினர்.

திருச்சியில் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி எம்.., பி.எல்., அவர்கள் தலைமையில் போராட்ட வீரர்கள் காமராசர் வளைவிலிருந்து ஊர்வலமாகச் சென்று தெப்பக்குளம் அஞ்சலகத்தில் கிளர்ச்சி தொடங்கினார்.

புதுவையில் போராட்ட வீரர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

தேவ கோட்டையில் 13 போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

திருவண்ணாமலையில் 20 போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

சின்னாளப்பட்டியில் 4 போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அறந்தாங்கியில் 13 வீரர்கள் கைதானார்கள்.

இராசபாளையத்தில் 27 வீரர்கள் கைதானார்கள்.

ஆலங்குடியில் 12 வீரர்கள் கைதானார்கள்.

லால்குடியில் 12 வீரர்கள் கைதானார்கள்.

அரியலூரில் 56 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறிதுகூட அமைதிக்குப் பங்கம் ஏற்படாமல் வெற்றி குவித்தனர்நமது போராட்டத்துக்கு ஆங் காங்கே பொதுமக்களின் ஏகோபித்த உற்சாக வர வேற்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

போராட்ட வீரர்கள் விடுதலை

பல்வேறு இடங்களிலும் கைது செய்யப்பட்ட போராட்ட வீரர்கள் அனைவரும் அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டார்கள்.

களம் கண்டனர் கழக வீரர்கள்

ஏப்ரல் 3ஆம் தேதி (1974), நமது கழகத் தீர்மானப்படிநெல்லைநாகர்கோயில்புதுக்கோட்டைகடலூர்சிதம்பரம்சிவகங்கை சின்னாளப்பட்டிமதுரைதஞ்சைகோவைவேலூர்தர்மபுரிபெண்ணா டம்நெய்வேலிமாயூரம்காஞ்சிபுரம்அரியலூர்சேலம்செம்பொன்னர்கோயில்காரைக்கால்புதுவைகுத்தாலம்ஜெயங்கொண்டம்ஈரோடுதேவக் கோட்டைகுடந்தைதிண்டுக்கல்கள்ளக் குறிச்சிஆம்பூர்லால்குடிராசிபுரம்ஆத்தூர்வாழப்பாடிமேட்டூர்கீழ்வேளூர்திருப்பூந்துருத்திபேராவூரணிசெஞ்சிபட்டுக்கோட்டைமன்னார்குடிபண்ருட்டிகோட்டூர்பொறையார்மணல்மேடுஆலங்குடிவேதாரண்யம்பரமக்குடிகின்னூர்நாகைநாமக்கல்அம்பாசமுத்திரம்குறிஞ்சிப்பாடிதுறையூர்குடவாசல்கொறடாச்சேரிமேட்டுப்பாளையம்எரவாஞ்சேரிசிறீவில்லிப்புத்தூர்ராஜபாளையம்திருப்பத்தூர்பாபநாசம்அரூர்கரூர்திருச்செங்கோடுதூத்துக்குடிதிருவாரூர்மணச்சநல்லூர்திண்டிவனம்திருவத்தி புரம்காரைக்குடிஅரக்கோணம்விழுப்புரம் முதலிய பல ஊர்களிலும் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங் களிலும்மாநிலமெங்கும் உள்ள அஞ்சல் நிலையங்கள் முன் அமைதி வழியே அறப்போரில் ஈடுபட்டது கழக வீரர்கள் கூட்டம்தந்தையின் கட்டளையை பல்லாயிரக்கணக்கான கழக வீரர்கள் தலைமேல் ஏற்றனர்.

2ஆவது கட்டப்போர்

அன்று மாலை சென்னையில் கிளர்ச்சி முடிந்ததும் கழகத் தலைவர் அன்னையார் அவர்கள் போராட்ட வீரர்கள்வீராங்கனைகள் மத்தியில் பேசுகையில் முதல் கட்டப்போரில் வெற்றிபெற்றுவிட்டோம். 2ஆவது கட்டமாகதமிழகம் வரும் மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்தார்கள்.

05.04.1974 அன்னையார் அறிக்கை

"அயரமாட்டோம் அயரமாட்டோம்என்ற தலைப்பில் 3ஆம் தேதி போராட்டத்தில் உற்சாக மளித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தும்டில்லி ஏகாதிபத்தியத்தை எச்சரித்தும் கழகத்தோழர்களுக்கு உற்சாக மூட்டியும் கழகத் தலைவர் அன்னையார் தலையங்கம் எழுதினார்கள்.

போராட்ட நிறைவைத் தொடர்ந்து அம்மா அவர்கள் “அயரமாட்டோம்அயரமாட்டோம்” என் னும் தலைப்பில் ஒரு தலையங்க அறிக்கை வெளியிட்டார்கள்அந்த அறிக்கையில் ஆதரவு காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துமுதல் கட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது,  இனி அடுத்த கட்டமாகசென்னைக்கு வருகிற மத்திய அமைச்சர்க ளுக்கு எதிராக  அரசியல் சட்டத் திருத்தத்தை வலி யுறுத்தி கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடை பெறும் என்று அறிவித்தது அடுத்த கட்ட நடவடிக் கையாக அமைந்தது!

இந்தப் போராட்ட  விளைவு பற்றி விவாதிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் 8-4-1974 அன்று ஒத்தி வைப்புத் தீர்மானங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் கே.டி.கே.தங்கமணிஎச்.வி.ஹண்டே ஆகியோர் கொண்டுவந்துஅதற்கு முதல் அமைச்சர் கலைஞர் பதில் அளிக்கும்போதுதமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஒரு தீர்மானத் தைக் கொணர்ந்து நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம் என்று உறுதிமொழி அளித்தார்கள்.

அதன்படியே 15-4-1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள்திராவிடர் கழக கோரிக்கையை ஆதரித்துஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

இத்தீர்மானம் எதிர்ப்பே இன்றி ஒருமனதாக நிறை வேறிற்று என்பது குறிப்பிடத்தக்கதுஇந்திய நாடாளு மன்றத்திலும் இத்தீர்மானத்தின் எதிரொலியாக அன் னையார் தலைமையில் கழகம் நடத்திய அறப் போராட்டத்தின் தாக்கத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்இதற்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்  (பிரதமராக திருமதி இந்திராகாந்தி அவர்கள் இருந்த காலம் அதுதமிழக அரசினைக் கலந்து எவ்வகையில் அச்சட்டத்திருத்தம் இருக்க வேண்டும் என்று ஆய்வு செய்து ஆவன செய்வோம் என்று ஆக்கபூர்வமான பதிலை அளித்தனர்.

அன்னையார் விடுத்த அறிக்கை வருமாறு:

"தந்தை பெரியாருக்குப் பின் நடைபெற்ற முதல் கிளர்ச்சியே நாடு முழுவதிலும் ஒலித்ததோடுநல்ல தோர் விளைவுகளையும் ஏற்படுத்தியது என்பது பெரியாருக்குப் பின் இந்த இயக்கம் இருக்காது என்று ஆருடம் சொன்ன அவசரக்கார ஆரியத்திற்கு தக்க பதிலடியாக அமைந்தது!

திராவிடர் கழகம் என்றாலே போராட்டம்பிரச் சாரம் என்ற கடிகாரத்தின் பெண்டுலம் ஆடுவதைப் போன்ற செயல்முறைதானேஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தின் முடக்கப்பட்ட நிலையை மாற்றிஎழுந்து நடமாடச் செய்ய 1974 மார்ச் 3ஆம் தேதி  திருச்சியில் கூடிய திராவிடர் கழக பொதுக்குழு முடிவுக்கேற்பமுதல் கட்டமாக அஞ்சல் அலுவலகம் முன் மறியல் முடிந்துஇரண்டாம் கட்டமாக நமது அறப்போரின் அடுத்தகட்டமாக மத்திய அமைச்சர்கள் சென்னை வரும்போது கறுப்புக்கொடி காட்டும் போராட்டம்   6.5.1974 அன்று எனது தலைமையில் தொடங்கப்பட்டதுசென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் ரகுராமய்யா (பாதுகாப்புத்துறை அமைச்சர்அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றதுஅண்ணா சாலையில் சுமார் 500க்கு மேற்பட்ட தோழர்கள்தோழியர்கள் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, 2ஆவது முறையாக 26.5.1974 அன்று சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் அவர்களுக்கு எதிராக அண்ணா சாலை  தேனாம்பேட்டை பாரதிதாசன் சாலை சந்திப்புக்கு அருகில் அன்னை மணியம் மையார் முன்னிலையில் கறுப்புக்கொடி காட்டும் கிளர்ச்சி நடைபெற்றதுசுமார் 1000 பேருக்குமேல் தாய்மார்கள்தோழர்கள், (நாங்கள்என எல்லோரும் கலந்துகொண்டோம்."

31.5.1974இல் (மூன்றாவது முறையாகசென்னை வந்த மத்திய அமைச்சர் போலோ பஸ்வான் சாஸ்திரி அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்ட ஏற் பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தனஅவர் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்சமூகநீதிப் போராளிமுன்னாள் பீகார் முதல் அமைச்சர் ஆவார். (பிறகு நமது அழைப்பை ஏற்று அம்மாவுக்குப் பின் கழகம் நடத்திய சமூகநீதி மாநாட்டில் பெரியார் திடலில் கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)

தொடர் கிளர்ச்சிகள் காரணமாக இந்தப் போராட் டத்தின் நோக்கம் போதிய அளவுக்கு மக்களுக்குச் சென்றுவிட்டதால்இதுபற்றி தமிழக முதல் அமைச்சர் கலைஞர்கழகத் தலைவருக்கும் கழகத்திற்கும் ஓர் அன்பு வேண்டுகோள் விடுத்ததை ஏற்றுநிறுத்திக் கொள்ளப்பட்டது!

சென்னைக்கு வந்த 2, 3 மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டிஅனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்திற்கான சட்டத் திருத்தம் பற்றி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில்நேரில் சந்தித்து டில்லியில் கூறும் வாய்ப்பு எங்களுக்கு உண்டு என்பதால் இதோடு இதனை நிறுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டு ஓர் அறிக்கை விடுத்ததைகழகத் தலைவர் அன்னையார் ஏற்றுவேறுவகையில் போராட்டம் தேவைப்பட்டால் நடத்துவதுஅதுவரை தொடர் பிரச்சாரத்தை நடத்துவது என்றும் அறிக்கை விடுத்ததையடுத்து மேலும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் கைவிடப்பட்டது.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட ஆவன முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதுபற்றி  தக்க வகையில் சட்டத்தை திருத்துவது பற்றி பரிசீலிக்கும் என்றும் உள்துறை இணையமைச்சர் ராம் நிவாஸ் மிர்தாநாடாளுமன்றத் தில் கேள்விக்குப் பதில் அளிக்கையில் கூறினார்.

அஞ்சலக மறியல் போராட்டம்மத்திய அமைச்சர் களுக்கு கறுப்புக் கொடி போராட்டம் என்பவைகள் எப்படி கைமேல் பலனைத் தந்தது பார்த்தீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக