வெள்ளி, 10 செப்டம்பர், 2021

க(ந)டந்து வந்த பாதை! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் -1


8.10.1969            தந்தை பெரியார் அறிக்கை

20.10.1969          மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவில் கருவறை நுழை வுக் கிளர்ச்சி - தந்தை பெரியார் அறிவிப்பு (தஞ்சாவூர் மாவட்ட தி.கமிட்டி முடிவு)

2.12.1970            தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்ப்பின்றி சட்டம் நிறைவேற்றம்

1972      மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பினால் முடக்கம் “ஆப ரேசன் வெற்றி - நோயாளி செத்தார்என்று 'விடுதலைதலையங்கம் (15.3.1972, 16.3.1972)

3.4.1974              தமிழ்நாடெங்கும் அஞ்சலகங்கள்முன் வேண்டுகோள் அறப்போராட்டம் நடத்தப்பட்டதுஅன்னை மணியம்மையார் தலைமை தாங்கினார்இடம்சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம்

31.5.1974            ஒன்றிய அமைச்சர் ரகுராமய்யாவுக்குச் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.

31.5.1974            ஒன்றிய நிதியமைச்சர் ஓய்.பி.சவானுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.

24.9.1979            ஜஸ்டீஸ் மகாராஜன் தலைமையில் குழு (அரசு ஆணை எண் 1573, நாள்: 24.9.1979)

24.8.1982            வேண்டுகோள் அறப்போர் 35 கோவில்களின்முன் நடத்தப் பட்டது.

8.6.1984              ஜஸ்டீஸ் கிருஷ்ணசாமி ரெட்டியார் அறிக்கை (அரசு வெளியீடு எண்: 339, நாள்: 8.6.1984)

8.6.1984              கோவில்களில் ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதற்குப் பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கிட நீதிபதி என்.கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஒன்று மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டது.

1984      தேவையான பரிந்துரைகளை அவர்கள் வழங்கிய நிலையில்பழனி கோவிலில் அதற்கான பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும் என்று ...தி.மு.அரசு சார்பில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டதுஇந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சட்டப் பேரவையில் அறிவிப்பு.

9.4.1992              தமிழ்நாடு சட்டப்பேரவையில் 69 சதவிகித அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் - மாண்புமிகு முதல மைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

10.5.2000            அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிட வலியுறுத்தி 28 கோயில்கள் முன்பு போராட்டம்திருவாரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்றார்.

29.12.2000          அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிடக்கோரி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் மறியல் - தமிழர் தலைவர் உட்பட கழகத் தோழர்கள் கைது.

1.2.2006              அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆக்கிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் - 10 ஆயிரம் பேர் கைது.

2006      சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு - திராவிடர் கழகம் வைத்த முக்கிய நிபந்தனை - அதனை ஏற்று தி.மு..  உத்தரவாதம்.

23.5.2006            தி.மு.அரசின் ஆணை

14.7.2006            தி.மு.ஆட்சியில் மீண்டும் புதிய கூடுதல் சட்டம் கிசிஜி 15/2006 (14.7.2006)

               உயர்நீதிமன்ற நீதிபதி .கே.ராஜன் குழு பரிந்துரை ஏற்பு ஆணை எண்: 1/2007

               ஆணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரி சங்கம்கோவில் அர்ச்சகர் பரிபாலான சபை உச்சநீதிமன்றத்தில் வழக்கு இடைக்காலத் தடை.

               தி.மு.அரசில் அதன் பின் புதிய ஆணை 23.5.2006

               9 ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015இல் தீர்ப்பு

21.12.2015          முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கடிதம்

               முதலமைச்சர்களுக்குக் கடிதம்

18.4.2016            திராவிடர் கழகம் மறியல் போராட்டம் 5000 பேர் கைது

07.10.2017          தமிழ்நாடு அரசும் கேரளா போல் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - ஆசிரியர் அறிக்கை.

9.10.2017            முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்குக் கடிதம்

26.11.2017          திருச்சியில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை மாநாடு (ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு தனி அரங்கம்)

8.9.2018              மன்னார்குடியில் அனைத்து ஜாதியினர் உரிமை முதற்கட்ட வெற்றி விழா

21.8.2018            "அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - அடுத்து என்ன?" சிறப்புக் கூட்டம் தமிழர் தலைவர் உரை  (சென்னை பெரியார் திடல்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக