செவ்வாய், 20 மே, 2025

1935 – 1939 வரையிலான குடிஅரசு ஏட்டில் அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம் - ‘குடிஅரசு’ இதழ்க் குறிப்புகள் முகப்பு அட்டை அமைப்பு

 1935 – 1939 வரையிலான குடிஅரசு ஏட்டில்

அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்

கைவல்யம்
எஸ்.என்.எஸ்.சுந்தரம்
திருப்பத்தூர் வே.நாகலிங்கம்
சாக்கோட்டை எஸ்.ஆர்.சாமி
என்.வி.நடராஜன்
மயில்வாகனனார்
ஜி.நாராயணன்
அருப்புக்கோட்டை எம்.எம்.சீனிப்பாண்டியன்
பள்ளத்தூர் சிதம்பரம்
அனுப்பப்பட்டி பி.ஆர்.சின்னகிருஷ்ணசாமி
கொந்தங்குடி ரா.ரத்தினசாமி
டபிள்யூ.எப்.தாமஸ் அபிராமன்
சிறுகுடி செ.ராமலிங்கம்
திருமங்கலம் மணிமாறன்
சித்தார்க்காடு கே.இராமையா
டாக்டர் சி.வா.பாலகிருஷ்ணன்
பி.மீனாட்சி
ஏ.ராதாம்மாள் ஆனந்தன்
ஏ.ஆர்.சிவானந்தம்
விருதை விதுரன்
தி.டி.கோபால்
எஸ்.லட்சுமிரதன்பாரதி
பட்டுக்கேட்டை கே.வி.அழகிரிசாமி
சிதம்பரம் பி.கே.நடேசன்
டி.ஆர்.வரதன்
நாகை காளியப்பன்
பண்டிட் எஸ்.எஸ்.ஆனந்தம்
பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்
டி.என்.ஆர்.சந்திரன் (டி.என்.இராமச்சந்திரன்)
ம. சிங்காரவேலு
ஏ. சோமசுந்தரன்
டி.ஜி.வெங்கடாச்சலம்
பண்டிதர் திருஞானசம்பந்தர்
நாகை முருகேசன்
கொழும்பு சதாசிவம்
முத்துப்பேட்டை எம்.என்.கோவிந்தசாமி
இந்திராணி பாலசுப்ரமணியம்
கே.ஆர்.சுவாமி
சிவகாமி சிதம்பரனார்
டாக்டர் ஆர்.பி.பராஞ்சிபே
கே.எஸ்.டி.முத்துசாமி
பட்டுக்கோட்டை கோ.சண்முகம்
விருதுநகர் தோழர் சி.ச.சுப்பையா
ராஜரத்தினம் பிள்ளை
பட்டுக்கோட்டை தோழர் எம்.ராஜமாணிக்கம்
செய்கோன் தோழர் எம்.ராஜமாணிக்கம்
டாக்டர் அம்பேத்கர்
ஈ.வெ.நாயர் எம்.ஏ.எல்.எல்.பி.
என்.பி.கிருஷ்ணன்
தோழர் வைசு.ஷண்முகம்
எம்.ஏசுதாஸ்
தோழர் ராபின்
ஆர்.பி.நாதன்
தோழர் டி.கே.எம்.சாமி
தி.ராஜன்
உடுமலை கனகராஜன்
பச்சையப்பன்
எம்.என்.நாயர்
அருப்புக்கோட்டை வீர சு.பு.வீரய்யா
சென்னை என்.வி.நடராஜன்
ஈரோடு பி.வேலாயுதன்
டாக்டர் சி.ஆர்.ரெட்டி
சென்னை எஸ்.ரங்கநாதன்
தி.வே.அ.
பட்டுக்கோட்டை எஸ்.சோமசுந்தரம்
துறையூர் எஸ்.தனபாக்கியம்
திவான்பகதூர் ஆர்.சீனிவாசன்
சர்.ஷண்முகம்
தோழர் எஸ்.எம்.ராமையா
குமணன்
சிவானந்த அடிகள்
தோழர் கே.நாராயணம்மா
சிங்கை நேசன்
பள்ளத்தூர் எம்.அருணாசலம்
எம்.சி.ராஜன்
தோழர் அ.பொன்னம்பலம்
தோழர் செல்லத்தாயம்மாள்
சேலம் பாரிஸ்டர் எஸ்.வி.ராமசாமி
நாகை தோழர் பி.அம்மைநாதன்
சிறீவில்லிபுத்தூர் ஞா.பி.ஞானதேசிகம்
குடியேற்றம் மு.அண்ணல் தங்கோ
தோழர் எஸ்.சோமசுந்தர பாரதியார்
ஈரோடு வாணன்
மு.த.வேலாயுதம்
மறைமலையடிகளார்
தோழர் ஆர்.பி.டேவிஸ்
திரு.சொக்கையா
பாரதிதாசன்
எம்.பி.சாமி
இளவலூர் மறைமணி
சடகோபால்
புதுவை எஸ்.சிவபிரகாசம்
கூச்சூர் குழந்தை
பொன்னாகரம் வி.எஸ்.நடேசன்
புதுவை சாமி சித்தானந்த பாரதியார்
சந்தமல்லி அ.சிதம்பரநாத பாவலர்
நஞ்சையா
குஞ்சிதம்
கலிபுல்லா பி.தலைவர்
சி.என்.அண்ணாதுரை
உமா மகேசுவரம் பிள்ளை
போளுர் வி.சுப்பராயன்
எஸ்.ஏ.கே.உபயதுல்லா
அகதி ராயன்
எஸ்.கே.சிசுபாரதி
கே.எம்.பாலசுப்பிரமணியம்
பி.நடராஜன் எம்.ஏ.
சர்.கே.என்.ரெட்டி
சவுந்திரபாண்டியன்
இரண்ணியதாசன்
தோழர் பி.சிதம்பரம்
ராஜம்மாள்
திருவந்திபுரம் கே.கோவிந்தன்
தி.பொ.வேதாசலம்
வித்துவான் ஏ.எம்.குழந்தை
அட்வகேட் சுயம்பிரகாசம்
டி.எஸ்.ஸ்ரீனிவாசன்
பு.துரைராஜ்
ஹேரிகிலமெண்ட்ஸ்
ஆம்பூர் தோழர் கோ.ஜெயராமுது
எம்.என்.முத்துக்குமாரசாமி பாவலர்
பல்லடம் எம்.பொன்னுச்சாமி
தோழர் நானப்ப முதலியார்
சென்னை டி.தேவராஜன்
குகன்
கோவை எம்.ஏ.ரஹ்மான்
அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி
சர்.பன்னீர்செல்வம்
ம.சிங்காரவேலு
கோவை கே.எம்.ஹனீப்
ஜெ.க.வேலன்
எஸ்.க.முஹம்மத் ஹனீப் சாகப்
தோழர் எஸ்.ஜி.ரங்கராமானுஜன்
செ.ராமலிங்கம்
தோழர் காமத்
எஸ்.கே.பி.முத்துராஜா
பி.எம்.அப்துல் மஜீது
சந்தனாபுரம் எபிநேசன்
வைகோன் புரோவேன்ஸியலான்
ஸ்டாலின் ஜெகதீசன்
கோலாலம்பூர் க.ராஜகோபால்
கணேசபுரம் முருகோன்
பம்பாய் என்.சிவபாண்டியன்
சிங்கப்பூர் வி.எம்.முத்து
வி.பிச்சையன்
பூவை. அ.க.நவநீதகிருட்டிணன்
ஆசன் பொறையார்
கோவை கே.எஸ்.முஹம்மன் ஹுசைன்
ஏ.எம்.அஸ்லீம்
எ.எம்.யூசுப் மரைக்காயர்
டி.பி.வேலாயுதசாமி
கோவைக்குடியான்
ஜே.க.வேலன்
க. அய்யலிங்கம்
எஸ்.இக்நட்டோல்
உடுமலை பி.ரங்கநாத நாயுடு
கே.டி.ஆர்.

இது குறித்த 16. 7.1933 தேதியிட்ட குடிஅரசு ஏட்டில் வெளியான செய்தி

‘குடிஅரசு’ இதழ்க் குறிப்புகள்

முகப்பு அட்டை அமைப்பு

(அ) அட்டைப்பட விளக்கம்:  துவக்கத்தி லிருந்து 18.12.1927 வரை (மாலை 3:  மலர் 34) வெளிவந்த இதழ்களில் காணும் அட்டைப் படத்தின் முகப்பு கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது.

பாரதமாதா, ஏர் உழவன், நூல் நூற்கும் பெண், தச்சுத் தொழிலாளி,

மூட்டை சுமப்பவர், நெசவாளி, தேர் இழுத்து வரும் கூட்டம், தேர்ச் சக்கரத்தில் சிலர் நீண்ட கிட்டிபோட்டு தள்ளுதல், கிருஸ்துவக் கோயில், இந்துக் கோயில், முஸ்லீம் பிறை, ஓமகுண்டம் எரிதல், புத்தர், நீர்நிலை அருகில் ஆடுமாடுகள் நிற்றல், கரும்பு சோளம், கம்பு, நெல், கோதுமை முதலிய பயிர்கள் கதிர்களுடன் காணப்படுதல்.

18.12.1927 இதழுக்குப் பிறகு அட்டையில் படங்கள் இடம்பெறவில்லை.

ஆ) ‘மகாத்மா காந்தி வாழ்க’ என்ற சொற்றொடர், அட்டைப் படத்தின் உச்சியின் மையப்பகுதியில் 18.4.1926 முதல் (மாலை 1: மலர் 47) 13.11.1927 இதழ் (மாலை 3:  மலர் 29) வரை காணப்படுகின்றன.

இ) ‘கதர் வாழ்க’ என்ற சொற்றொடர், அட்டைப் படத்தின் உச்சியின் மையப்பகுதியில், 20.11.1927 (மாலை 3:  மலர் 30) முதல் 18.12.1927 வரை (மாலை 3:  மலர் 34) காணப் படுகின்றன.

ஈ) தமிழ் ஆண்டுக் கணக்கு, இதழின் துவக்க காலம் முதல் 08.04.1944 (மாலை 17:  மலர் 26) வரை அட்டையில் குறிக்கப்பட்டுள்ளது.

உ)   இதழின் பக்கங்களுக்கு தமிழ் எண்கள் துவக்கம் முதல் 02.06.1929 வரை (மாலை 5:  மலர் 5)  இடப்பட்டு வந்தன.  அதற்குப் பின்னர் பக்கங்களுக்கு தமிழ் எண்கள்  குறிப்பது கைவிடப்பட்டது.

ஊ) நாயக்கர் பட்டம்:  இதழின் ஆரம்பம் முதல் 18.12.1927 வரை (மாலை 3: மலர் 34) அட்டையில், ஆசிரியர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அதன்பின் ‘நாயக்கர்’ என்ற ஜாதிப் பட்டம் விடப்பட்டுள்ளது.

எ) திருக்குறள்:  இதழின் அட்டையில்,

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்,’ (972) என்ற குறளும்,

‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (355) என்ற குறளும்,

‘எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (423) என்ற குறளும்,

13.01.1935 இதழ் முதல் (மாலை 9:  மலர் 23) 29.12.1940 வரை (மாலை 16:  மலர் 20) காணப்படுகின்றன.

அத்துடன் 27.12.1947 முதல் 03.04.1948 வரை அவ்வப்போது தலையங்கத்திற்கு மேல்

‘மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி

மறைந்தொழுகும் மாந்தர் பலர்’ (278)     (24.01.1948),

‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்’ (611)    (14.02.1948),

‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று’ (890)      (21.02.1948),

‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு’ (735) (28.02.1948),

‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு’ (766) (03.04.1948)

ஆகிய திருக்குறள்கள் காணப்படுகின்றன.

ஏ.  பாரதியார்பாடல்:  துவக்கத்தில் (02.05.1925)  “எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் ஓர் குலம்”, “சாதிகள் இல்லையடி பாப்பா” ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் பல இதழ்களில் “எல்லோருமோர்குலம் எல்லோருமோர் இனம்”, என்ற பாடல் மட்டும் இடம் பெற்றுள்ளது.  பாரதியார் பாடல் 25.10.1925 வரை காணப்படுகிறது.

திங்கள், 19 மே, 2025

1939 – 1943 வரையிலான குடிஅரசு ஏட்டில் அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்

 

1939 – 1943 வரையிலான குடிஅரசு ஏட்டில் அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்

சிங்கப்பூர் க.கோவிந்தசாமி பண்டிதர்
காயல் எல்.கே.சுலைமான்
எஸ்.வி.காமத்
நாகலிங்கம் பழனி
சிங்கப்பூர் வி.எம்.முத்து
ராதாபுரம் எஸ்.மல்லிகார்ச்சுனக் கவிராயர்
எஸ்.லட்சுமிரதன் பாரதி
ஆம்பூர் வி.எம்.ஆறுமுகம்
எஸ்.வி.பரன்
சி.ச.சுப்பைய நாடார்
தேனி ஏ.எஸ்.தங்கமணி
ஜெ.டேனியல்
வை.ம.பொன்னுசாமி
சைகோன் லோரான்
நாகூர் ஜராப் எஸ்.ஏ.முகம்மது ரஹியா மரைக்காயர்
கருவை சிறுவன் வி.ஆர்.வி.ராஜன்
குற்றாலம் ஆர்.கல்யாணசுந்தரம் பி.ஏ.,
புலவர் முருகிறையனார்
திருப்பத்தூர் ஏ.பி.பெரியசாமி புலவர்
தோழர் அ.ப.ஆதித்தா
கருவூர் கே.சி.ஆர்.சாமி
தோழர் துரைதாசன்
செங்களக்குறிச்சி எம்.செல்லையா
சோ.கோமதிநாயகம்
எட்டயபுரம் டாக்டர் ஜி.பக்தவத்சலம்
சோழகந்த சச்சிதானந்தன்
வி.எஸ்.மீனாட்சி சுந்தரம்பிள்ளை
பெரியகுளம் அ.சுப்பையா
புதுவண்டிப்பாளையம் அ.சிவலிங்கம்
தோழர் ஆ.ஐ.ஆதிமூலம்
வெ.அண்ணாமலை
ந.ரே.முத்துகிருஷ்ணன்
மாணவன் செழியன் பட்டுக்கோட்டை
இளைஞூர் பி.வி.முத்துசாமி
கே.முஹம்மத் இஸ்மாயில், பழனி
ரா.மு.நாதமுனி
தோழர் ஏ.ஆ.சிவம்
சிறுத்தொண்டநல்லூர் தோழர் வ.சங்கரநாராயணன்
விருத்தாசலம் எஸ்.ஏ.ரஹ்மான்
கே.சி.கண்ணன் இரங்கூன்
கருவூர் இ.சி.அடிகள்
சி.பழனிக்குமாரன்
வித்வான் மறை.திருநாவுக்கரசர்
ஸ்ரீமதி ஜோகபத் மெத்துசலா அம்மாள்
மதுரை ஆ.சங்கையா
சி.முனிசாமி
தமிழாசிரியர் எ.ஆளவந்தார்
எஸ்.பி.வி.பி.பாலசுப்பிரமணியன்
த.கிருஷ்ணமூர்த்தி
பேட்டை சி.வி.சுப்பையா
சென்னை எ.முருகேசம்
திருவாரூர் பாவலர் எம்.என்.பாலசுந்தரம்
பி.வி.அனுமந்தராவ்
தோழர் ரா.பி.சேதுபிள்ளை
ஆர்.நாராயணி அம்மாள், சென்னை
கே.எம்.ஹெச்
இராசரத்தினம்
எஸ்.எஸ்.மரியசாமி
டாக்டர் இ.பாலசுப்பிரமணியம்
பி.கோதண்டராமன்
பெர்னார்ட் கிலிங்
தனக்கோட்டி பி.ஏ.
நிக்கலஸ் மரக்கீஸ்
இம்மானுவேல் டி.ஆஸ்மர்
நோயில் பேக்கர்
நிர்மலா சந்திரபாலர்
திவான்பகதூர் டி.எம்.நாராயணசாமி பிள்ளை
சி.வி.குப்புசாமி
சேலம் ஆ.மாணிக்கம்
கோ.ராமலிங்க தேவர்
வாடிப்பட்டி செங்கணன்
ஆம்பூர் சி.கோ.ஜெயராமுலு
ஆசிரியை பாப்பா இளவலூர் மணிமறை
வித்வான் அ.கிருஷ்ணமூர்த்தி
புரபசர் ரோஸ்லிங்
பண்டித மிஸ்ரா
தோழர் ஹாயிஷ் கிகோல்
ஆர்.அச்சுதன் தம்பி பி.ஏ.
தோழர் சுரேஷ் சந்தராய் எம்.ஏ.பி.எல்.
கரந்தை எஸ்.எம்.வாசகம்
டாக்டர் எஸ்.தருமாம்பாள்
ந.ரெ.முத்துக்கிருட்டிணன்
அசோக் மேத்தா
உழவன் சி.பழனிக்குமாரன்
வீரநாமநார்
ஆனைமலை ஆர்.நரசிம்ம நாயக்கர் பி.ஏ.
கோட்டாறு தோழர் கே.ராமையா
பண்டித டாக்டர் எஸ்.ஆனந்தம்
தோழர் எம்.என்.ராய்
எஸ்.சிவபிரகாசம்
ப.கண்ணன்
ஏ.பி.ஜனார்த்தனம் பி.ஏ.
பி.எஸ்.வேகன்
ராவ்பகதூர் சி.எம்.ராமச்சந்திர ரெட்டியார்
மனோன்மணி ஏகாம்பரம்
சம.பி.எஸ்.எம்.கொம்பையா
அ.ராமசாமி கவுண்டர்
குகை ந.வெங்கட்ராமன்

- Published May 17, 2025, விடுதலை நாளேடு

புதன், 7 மே, 2025

கோயில் நுழைவு போராட்டம் 8-7-39-மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் வைத்தியநாத அய்யர் நடத்திய நாடகத்தின் கதை.

* கோயில் நுழைவு போராட்டம் 8-7-39-மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் வைத்தியநாத அய்யர் நடத்திய நாடகத்தின் கதை.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
* இந்த காலகட்டம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி நடந்து,அதில் நடராசன் தாலமுத்து மரணமடைந்தனர்.

* தலைவர் பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

* ஆண்களும் பெண்களும்,குழந்தைகளும் கூட சிறைக் கொட்டடியில்.
* ஆச்சாரியார் ஆட்சி மீது கடுமையான அதிருப்தியின் உச்சம்.
* இந்தக் காலகட்டத்தில்தான் குள்ளநரி வைத்தியநாத அய்யரைக் கொண்டு நடத்தப்பட்டதே இந்த நாடகம்.
* காட்சிக்குள் செல்வோமா?
* கனஜோராய் விளம்பரம் படுத்தப்பட்டது வைத்தியநாத அய்யரின் கோயில் நுழைவுப்
* போராட்டம் என்று.
* கோயிலின் நடை திறக்கப்படாத நேரத்தில்
* அதற்கு முன்பாகவே சின்ன ஏற்பாட்டை குள்ளநரி வைத்தியநாத அய்யர் செய்து கொண்டார்.
* நிர்வாக அதிகாரியாக இருந்த நீதிக்கட்சியின் அனுதாபி S.R.நாயுடு ,வைத்திய நாத அய்யருக்கு உதவினார்.இவரின் ஏற்பாட்டில்

* ஒரு பட்டர் பூஜை செய்வதற்காக உள்ளே நின்றார்.
* காலை 8-45-மணி
* இவர்கள் திமுதிமுவென்று கதவின் அருகில் போய் நின்றவுடன்- பயந்து விடாதீர்கள்
* பஞ்சமர் 5-பேர்+1 நாடார்(அன்றைக்கு நாடார்களுக்கு ஆலய பிரவேச உரிமை இல்லை)மொத்தம் ஆறு பேர்கள்.
* கதவு திறந்தது;பதிகம் பாடி அல்ல; உள்ளே இருந்த பட்டரின் புண்ணியத்தால்
* திருக்குளத்தில் நீராடி பூஜை புனஸ்காரங்கள் முடிந்து வெளியேறினார்கள்.

* பட்டருக்கு தெரியாது இவர்கள் பஞ்சமர்கள்,
* நாடார் என்று.
* வெளி உலகுக்கும் இப்படி சம்பவம் நடைபெற்றது யாருக்கும் தெரியாது.
* அன்றைக்கு இருந்த சட்டப்படி கோயில் அறங்காவலர் அனுமதியில்லாமல் இந்துக்களின் எந்த பிரிவினரும் கோயிலுக்குள் நுழைய விடுவது கிரிமினல் குற்றம்.
* இந்தச் சட்டப்படி வைத்தியநாத அய்யர் வகையறாக்கள் மீதும் நிர்வாக அதிகாரிகள் மீதும்
* கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
* இந்த இடத்தில் ஒருமுக்கியமான பிளாஷ் பிளாக்.
* இந்த நாடக சம்பவம் நடந்தது-8-7-39-
* இதற்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன் ஶ்ரீமான் இராசகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் பிரதமர்.
* அன்றைக்கு ஆதி திராவிடத் தலைவர் எம்.சி.
* இராசா-15-8-38-அன்று சட்ட மன்றத்தில்
* ஆலய நுழைவு மசோதாவை கொண்டு வந்தார்.
* விடுவாரா குல்லூகபட்டர்.கங்கணம் கட்டி தோற்கடித்தார்.ஆதரவு-24-எதிர்ப்பு-130-
* மற்றுமொரு வரலாற்று சோகம் என்னவெனில் காங்கிரஸின் ஆதி திராவிட அமைச்சரும்
* மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்.
* பின் ஏன் வைத்தியாத அய்யரை கொண்டு இந்த நாடகம்?
* நாங்கள் தான் ஆலய பிரவேச உரிமைக்கு போராடினோம்!என்று வரலாற்றில் பதிந்து கொள்ளத்தான்?
* சுயமரியாதை இயக்கம் நடத்திய 1927-1928-களில் உண்மையாக நடத்திய ஆலய நுழைவு போராட்டத்தை இருட்டடிக்கத்தான்.

* இராசகோபாலாச்சாரிக்கு ஆதரவாக  நின்று கிரிமினல் வழக்கில் சிக்கிக் கொண்ட வைத்திய நாத அய்யர் வகையறாக்களை காப்பாற்ற வேண்டாமா?என்ன!

* பிரிட்டிஷ் கவர்னரை சந்தித்து-1935-இல் கவர்னருக்கு அரசியல் சட்டம் வழங்கியிருந்த சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் நுழைந்தால்,அதற்காக அர்ச்சகர்கள்,அதிகாரிகள்,தர்மகர்த்தாக்கள் இவர்கள் மீது வழக்கு தொடர்வதை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

* வைத்தியநாத அய்யரையும் அர்ச்சகரையும் எஸ்.ஆர்.நாயுடுவையும் காப்பாற்ற வந்த சட்டமே ஒழிய ,ஆலய பிரவேச உரிமை சட்டம் அல்ல.

- [ ] ஆலய நுழைவு மசோதாவை, சட்டமன்றத்தில் தோற்கடித்தவர்களுக்கு.                வரலாற்றில்-போராடியவர்கள் பட்டம்.

- [ ] அன்றைக்கு பேப்பரும் பேனாவும் அவாள் கையில்.ஒரு பொய்யை தெரிந்தே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் அது வரலாறு ஆகி விடுகிறதே!

- [ ] உண்மையான ஆலய நுழைவுப் போராட்டத்தை துவங்கியவர்கள்-நாடார் குல பெருமக்கள்-அது19ஆம் நூற்றாண்டின் இறுதியில்.

- [ ] இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டத்தை பெரும் திரளான மக்களுடன்,நடத்தியது தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்.

- [ ] காண்போம்.அடுத்தடுத்த பதிவுகளில்
- [ ] முடிவுரையை எழுதாமல் விட்டு விட்டேனே?
- [ ] பின் எப்போது ஆலய கதவுகள் எல்லோருக்கும் திறந்தன.

- [ ] 1947-இல் ஓமந்ததூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் பிரதமராக வந்த காலகட்டத்தில்
-பன்னீர்செல்வம் முகநூல் பதிவு, 08.05.2022