ஞாயிறு, 5 மார்ச், 2023

தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்டர் - அய்யா வழி

புதன், 1 பிப்ரவரி, 2023

அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது தமிழர் தலைவருக்கு அளிப்பு

வியாழன், 8 டிசம்பர், 2022

மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் உருவம் பொறித்த அஞ்சல் தலை


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையினை, மலேசியா திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் மகன் கே.ஆர்.ஆர்.அன்பழகன் அவர்கள், கழகத் துணைத் தலைவர் கவிஞர் 

கலி.பூங்குன்றன் அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 6.12.2022).


ஞாயிறு, 6 நவம்பர், 2022

தோளில் துண்டுபோடும் புரட்சி

சிவக்கொழுந்து தோளில் உள்ள துண்டை எடுக்காதே !'' - அஞ்சாநெஞ்சன் அழகிரி.(சுயமரியாதைக்கான போரில் திராவிடர் இயக்கம் வரலாற்றில் செய்த சாதனைகளுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.)

1923-ஆம் ஆண்டில் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்பற்றி முடிவெடுக்க தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு முதலியோர் கானாடு காத்தானில் சுயமரியாதை இயக்க வீரர் வை.சு. சண்முகம் இல்லத்தில் கூடியிருந்தனர்.அன்று அந்தவூரில் ஒரு செட்டியார் வீட்டுத் திருமணம் - திருமண ஊர்வலத்தில் அந்தக் காலத்தில் பேர் பெற்ற நாதசுர வித்வானான சிவக்கொழுந்துவின் நாதசுர இசை இடம் பெற்றிருந்தது. 
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் கே.வி. அழகிரிசாமியும் அப்பொழுது அங்கே வந்திருந்தார். அழகிரியோ பெரும் இசைப் பிரியர். திருமண ஊர்வலத்தில் நிகழ்ந்த நாதசுர இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.நாதசுரவித்வான் இடுப்பில் ஜரிகைக்கரை பட்டு வேட்டி கட்டிக் கொண்டு, வியர்வையைத் துடைப்பதற்காக தோளில் துண்டு ஒன்றைப் போட்டு இருந்தார். (நாதசுரம் வாசிப்பது என்பது எளிதானதல்ல - மூச்சை அடக்க வேண்டும் - அதனால்தான் பார்ப்பனர்கள் இந்தக் கலையின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை)அந்த நேரத்தில் நாட்டுக் கோட்டை செட்டியார் வகுப்பைச் சேர்ந்த வாலிபன் ஒருவன் நாதசுர வித்வான் சிவக்கொழுந்து அவர்களின் எதிரே வந்து, `தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும். மரியாதை இல்லாமல் துண்டைத் தோளில் போட்டுக் கொள்ளக் கூடாது! என்று ஆணவமாக அரற்றினார்.நாதசுர மேதை சிவக்கொழுந்து அவர்களோ மிகவும் அடக்கமாக `அய்யா இது ஒன்றும் அங்கவஸ்திரம் அல்ல - நாதசுரம் வாசிக்கும் பொழுது அதிகமாக வியர்க்கும், அதைத் துடைத்துக் கொள்ளத்தான் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறியபிறகும் அந்த ஆசாமி விடுவதாகயில்லை.
.
அந்தக் கூட்டத்தில் இருந்த சுயமரியாதை வீரர் அழகிரி அவர்கள், `சிவக்கொழுந்து துண்டை எடுக்காதே! நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள்! என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார்.இந்தத் தகவலை வை.சு. வீட்டில் இருந்த தந்தை பெரியாரிடம் ஓடிப் போய்த் தெரிவித்தார் பட்டுக்கோட்டை அழகிரி.
.
தந்தை பெரியார் அவர்களும் அழகிரிக்குப் பச்சைக் கொடி காட்டினார். `விடாதே, துண்டை எடுக்காமல் வாசிக்கச் சொல்; கல்யாண வீட்டார் அனுமதிக்கா விட்டால், அவரை இங்கே அழைத்து வாருங்கள்; வாசிக்கச் சொல்லி அவருக்கு உள்ள பணத்தை நாம் கொடுத்து விடலாம்! என்றார். அஞ்சா நெஞ்சன் அழகிரிக்குக் கேட்க வா வேண்டும் - சிட்டாகப் பறந்து அந்த இடத்திற்குச் சென்று மீண்டும் ஓங்கித் தன்மானக் குரல் கொடுத்தார்.திருமண வீட்டார், பெரியார் இருந்த இடத்திற்கே வந்து கெஞ்சினார்கள். ஜாதி. திமிரில் நீங்கள் நடந்துத் கொள்வதற்கெல் லாம் நாங்கள் பணிந்து போக வேண்டுமா? நாங்கள் சிவக் கொழுந்தை அழைத்துக் கொள்கிறோம். 
நாதசுரம் இல்லாமல் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று கறாராகக் கூறி விட்டார் தந்தை பெரியார்.மேள தாளம் இல்லாமல் கல்யாண ஊர்வலம் செல்லுவது கவுரவக் குறைவு என்று கருதிய திருமண வீட்டார், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிவக்கொழுந்து துண்டைத் தோளில் அணிந்து கொண்டுதான் நாதசுரம் வாசிப்பார். விருப்பம் உள்ளவர்கள் இருங்கள்! பிடிக்காதவர்கள் சென்று விடுங்கள் என்று கூறி விட்டனர்.
வித்துவான் சிவக்கொழுந்து துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார்.

(கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய "திராவிட இயக்கத்தின் திருவிழா" கட்டுரையிலிருந்து ...விடுதலை 24-2-2008)

புதன், 21 செப்டம்பர், 2022

சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்

வரலாறு : சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்

2022 செப்டம்பர் 16 -30 வரலாற்றுச் சுவடு, உண்மை இதழ் 

5.12.1926ஆம் நாளன்று, பெரியார் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் சுருக்கமாகவும், தெளி-வாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

1. மனிதன் தன்மான உணர்ச்சியோடு வாழ வேண்டும். ஒரு நாட்டின் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. எவரும் எவருக்கும் தாழக் கூடாது. எவரும் எவரையும் தாழ்த்தவும் கூடாது. மனிதனை மனிதனாக மதிக்கின்ற சமத்துவ மனப்பான்மை ஏற்பட வேண்டும்.


2. மனிதனுக்கு மனிதன், பிறப்பதிலும், சாவதிலும் இயற்கையில் வேறுபாடு எதுவும் கிடையாது. பிறப்பில் வேறுபாடுகள் கற்பித்து, உயர்வு_தாழ்வு என்ற நிலைகளை ஏற்படுத்தியது, ஆதிக்க உணர்வு கொண்ட மோசடிக்காரர்களும், பித்தலாட்டக் காரர்களும் இடைக்காலங்களில் செய்த வேலையே ஆகும்.

3. மனிதனும் மனிதனும் ஒருவரோடு ஒருவர் அன்போடும், பண்போடும், உறவோடும், உரிமையோடும், நட்போடும், ஆதரவோடும், அரவணைப்போடும் பழகுவதற்கு ஏற்ற மனிதத் தன்மை உடையவர்களேயல்லாமல், தீண்டாமை, பாராமை, சேர்க்காமை, மதிக்காமை போன்றவற்றால், ஒருவரையொருவர் புறக்கணிப்-பதற்கும், தள்ளி வைப்பதற்கும் இடமேயில்லை.

4. மனிதர்களுக்குள்ளாகவே, அவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் கொள்கைக் கோட்-பாடு, சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சமயங்களும், ஜாதிகளும் வேரோடு களைந்தெறியப்பட வேண்டும்.

5. மனிதனை முட்டாளாக ஆக்குவதற்கும், முரடனாக ஆக்குவதற்கும், வெறியனாக ஆக்கு-வதற்கும், பைத்தியக்காரனாக ஆக்குவதற்கும், ஆதிக்கக்-காரனாக ஆக்குவதற்கும், ஆணவக்-காரனாக ஆக்குவதற்கும் பயன்படுத்தப்படும் கடவுள், மதம், ஜாதி, சாத்திரம், புராணம், இதிகாசம், வேதம், மோட்சம், நரகம், பேய், பூதம், பிசாசு, பில்லி சூன்யம், ஜோதிடம், குறி, மந்திரம், பூசை, யாகம் சடங்கு, பண்டிகை போன்ற கற்பனைக் கூறுபாடுகள் அனைத்தும், அடியோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.

6. மனிதனின் சிந்தனை அறிவுத்திறன், செயலாற்றல் திறன், சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை, சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் பாங்கு, தகுதி, திறமை போன்றவற்றையெல்லாம் கெடுத்து, அவனை முழு முட்டாளாக்கக் காரணமாக இருக்கும் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்க வழக்கம், பஜனை பாடுதல், செபம் செய்தல், வழிபாடு நடத்துதல், சடங்குகளைக் கடைப்பிடித்தல் போன்றவை, மனித சமுதாயத்தை விட்டு அறவே அகற்றப்பட வேண்டும்.

7. உலகில், நல்லது -_ தீயது, உயர்ந்தது -_ தாழ்ந்தது, சிறந்தது -_ சிறுமையது, பலன் அளிப்பது -_ பலன் அளிக்காதது, உதவுவது -_ உதவாதது, ஆக்குவது -_ அழிப்பது, மதிக்க வேண்டியது -_ மதிக்க வேண்டாதது எவை எவை என்று பகுத்தறிந்து பார்த்து, பயன்படும் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் துணிவு மட்டும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஏற்பட வேண்டும்.

8. தன்மான உணர்ச்சி, உரிமையுணர்வு, விடுதலை வேட்கை, சிந்திக்கும் ஆற்றல், செய்து முடிக்கும் தன்மை ஆகியவற்றைக் கட்டிக் காக்கும் தகைமை ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும்.

9. எதிர்காலம் அறிவியலுக்கு உரிய-தேயல்லாமல், மதத்திற்கு உரியது அல்ல; மனிதனுக்கு உரியதே அல்லாமல் கடவுளுக்கு உரியது அல்ல என்ற நிலை ஏற்பட வேண்டும்.

10. பகுத்தறிவு நெறியில் நின்று, பண்பாட்டுத் தன்மையோடு, தன்மானவுணர்வு கொண்டு சமுதாயத்தைச் சீர்படுத்தவும், செம்மைப் படுத்தவும் ஒவ்வொருவரும் தொண்டு செய்ய முன்வர வேண்டும்.

11. பகுத்தறிவுணர்வோடு எதையும் சிந்தித்து, பகுத்தறிவுணர்வோடு எதையும் சொல்லி, பகுத்தறிவுணர்வோடு எதையும் செயலாற்ற மக்களனைவரும் தங்களைத் தாங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

12. நல்லறிவு, நல்லாற்றல், உயர் உண்மை, நல்ல உழைப்பு, நல்ல நோக்கம், நாணயம், நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம், இயற்கைப் போக்கு ஆகியவற்றிற்கு மதிப்பு அளித்துப் பாடுபடவே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கொள்கை விளக்கம் செய்தார்.

ஞாயிறு, 31 ஜூலை, 2022

கோஸ்வாமிக்கு பெரியாரின் பதில் ‘ரிவோல்ட்' தொடக்க விழாவில் பெரியார்

செவ்வாய், 12 ஜூலை, 2022

மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியப் பேராளர் மாநாடு