திங்கள், 18 செப்டம்பர், 2017

திராவிடர் கழகம்பற்றி எழுச்சித் தமிழர்!



தந்தை பெரியார் என்ற புரட்சியாளர் மறைந்தார் என்றாலும், திராவிடர் கழகம் எப்படிச் செயல்படுகிறது?

 


அது ஒரு மிஷனாக செயல்படுகிறது.

கழகத்துக்கென்று தலைமை இடம் - அது பெரியார் திடல்.

கழகத்திற்கென்று ஒரு நாளேடு - அது விடுதலை.

மாதம் இருமுறை இதழ் - அது உண்மை.

குழந்தைகளுக்கென்று ஓரிதழ் - அது பெரியார் பிஞ்சு.

ஆங்கிலத்தில் ஒரு மாத ஏடு - அது தி மாடர்ன் ரேசனலிஸ்ட்.

கூட்டங்கள் நடத்த மன்றம் - அது நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்.

நவோதயா எதிர்ப்பு என்றால் ஒரே நாள் இடைவெளியில் ஒரு பொதுக்கூட்டம்.

அதிலே ஒரு நூல் வெளியீடு - நவோதயாபற்றி, கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் நூல். உடனடியாக வெளியிடப்படுகிறது.

நூல்கள் வெளியிட அச்சகம்.

வரிசையாக நூல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டிலேயே அரசியல் கட்சி களையும் கடந்து அதிகப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது திராவிடர் கழகமே!

தந்தை பெரியார் கொள்கை பன்னாடுகளிலும் கொண்டு போகப் படுகின்றது.

சமீபத்தில் ஜெர்மனியில் பன்னாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்ற பெரியார் கொள்கை பரப்பும் மாநாடு நடைபெற்றது.

ஜெர்மன் மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும், ஆங்கில மொழியிலும் பெரியாரின் நூல்கள் மொழியாக்கம் செய் யப்பட்டு வெளியிடப்படுகின்றன.

இந்தக் கட்டமைப்புகள் திட்டவட்டமாக இருப்பதால், திராவிடர் கழகத்தின் பணி கள் செம்மையாக நடைபெற்றுக் கொண் டுள்ளன.

அந்த நிலை அம்பேத்கர் கருத்துகளைப் பரப்பிட நம்மிடம் மிஷன் இல்லை என் பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

- டாக்டர் சேப்பன் நினைவேந்தல் நிகழ்ச்சியில்  எழுச்சித் தமிழர்

தொல்.திருமாவளவன் உரையிலிருந்து (சென்னை, 15.9.2017).
-விடுதலை,18.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக