புதன், 26 ஏப்ரல், 2017

திராவிடர் இயக்க சாதனை1

தெரிந்து கொள்வோம் சில வரலாறுகளை

நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும் என்று இருந்தது இதன்பொருள் பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டர்களாக வேண்டும் என்பது தான் இதைமாற்றியது நீதிக்கட்சி

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை முதன்முதலாக அமைச்சர் பதவியிலமர்த்தியது நீதிக்கட்சி

ஆதிதிராவிடர் [பஞ்சமர்] பொதுத் தெருவிலும் சகலமான சாலைகளிலும் நடந்து போகலாம் என்று முதன் முதலில் அதற்கென்றே தனித்த ஆணையைப் பிறப்பித்தது நீதிக்கட்சி

நீதிக்கட்சித் தலைவர் சர்பிட்டிதியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில்தான் முதன்முதலாகப் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது

நீதிக்கட்சித் தலைவர் சர்பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மாநகர முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில்தான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும் பார்வையற்றோர் பள்ளியும் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டன

தாழ்ந்தப்பட்ட சகோதரர்களை பறையன் என்றே அரசு ரிக்கார்டுகளில் குறித்து வந்ததை எதிர்த்து ஆதிதிராவிடர் என்றே குறிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி பிறகு அதை அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சி தலைவரான டாக்டர் சி.நடேசனார்

திருவிதாங்கூர் மகாராணியின் முன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப்பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்க்காக அவரது மார்பை வெட்ட திருவிதாங்கூர் நிர்வாகம் உத்திரவிட்டது

1874 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபட வந்த நாடார்களை பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து தள்ளியதோடு அது தொடர்பாக நடந்த வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது

வேலை கேட்டு மனுச் செய்த ஓர் ஈழவ சமூகத்தைச் சார்ந்த டாக்டர் பல்புவுக்கு தென்னங்கன்றுகளை வாங்கிக் கொடுத்து குலத்தொழிலைச் செய்ய சொன்னவர் திருவாங்கூர் சமஸ்தான திவான் ராகவய்யா

கோவை சிங்காநல்லூரில் 1930 ஆம் ஆண்டுவரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகளை ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்க மறுத்தார்கள்

நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று 1829 ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசாங்கமே உத்திரவிட்டது

சென்னை கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனையில் கூட பார்ப்பன மனநோயாளிகளுக்குத் தனிப்பிரிவு இருந்து வந்தது

1943லும் குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பன மாணவர்களுக்குத் தனியாகவும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் குடி தண்ணீர் பானைகள் வைக்கப்பட்டிருந்தன

1918 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் படித்த 511 பேரில் 389 பேர் பார்ப்பனர் சட்டம் படித்த 54 பேரில் 48 பேர் பார்ப்பனர்

1937 ல் ஆட்சிக்கு வந்த ராஜாஜி போதிய நிதி வசதியில்லை எனக்கூறி கிராமப்புறங்களில் இருந்த 2500துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடி அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்காக 12 லட்சம் செலவில் வேத பாடசாலைகளைத் துவக்கினார்

1952ல் குலக்கல்வித் திட்டத்தை ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்குக் கொண்டுவந்த ராஜாஜி அந்த சிறுவர்கள் சாதித் தொழிலைச் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு உத்திரவு போட்டார்

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பும் திட்டத்தை உத்தரவு போட்டு ஒழித்தவர் ராஜாஜி

1952 ல் திருவாண்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜாஜி அவரவர் குலத்தொழிலைத்தான் அவரவர் செய்ய வேண்டும் படிக்கக்கூடாது என பகிரங்கமாகவே பேசினார்

சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ் முதலிய திராவிட மொழிகள் அறவே புறக்கணிக்கப்பட்டு படித்திட வாய்ப்பே தரப்படவில்லை சமஸ்கிருதம், உருது,அரபி,பாரசீகம் முதலியன மட்டுமே கற்பிக்கப்பட்டன 1926ல் நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்த நிலை மாற்றப்பட்டது

இவை அனைத்தும் திராவிடர் இயக்க போராட்டத்தினாலே இந்த உரிமை தமிழர்களுக்கு கிடைத்தது

தகவல் திராவிடர்கழக வெளியீடான திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்? நூலிலிருந்து

நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக