ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

எதிர்த்த வழக்கறிஞரே ஏற்று செயல்பட இணைந்தார்!

அய்யாவின் அடிச்சுவட்டில் - 142...

எதிர்த்த வழக்கறிஞரே ஏற்று செயல்பட இணைந்தார்!
அந்த வழக்கறிஞர் அனுப்பிய கடிதம் இதுதான்!
RAM RAIS & YAP
8th January 1981
To
Mr. K. Veeramani,
13, I Main Road,
Kasturiba Nagar,
MADRAS - 600 020.
INDIA.
Dear Sir,
You may recall that when you were in Malaysia in 1979, you had received correspondence from this firm. I was then acting on behalf of the devotees of Satya Sai Baba to stop you from making deregatory remarks against the said Satya Sai Baba. I had then in personal capacity held similar views, having been a deveotee myself of Satya Sai Baba.
However, of late it has come to light that the said Satya Sai Baba has carried out homosexual activities on the boys studying in his colleges in whitefiled and Puttaparthi. His biggest mistake was that he carried out such activities on Malaysian students studying there. These students have brought to the notice of the public in Malaysia this activity of Satya Sai Baba. It has become necessary for the people in Malaysia to have proper assessment of him. Unfortunately the written materials available are the propaganda stuff published by Satya Sai Baba and his devotees.
There is the urgent need to circulate in Malaysia, books, new cuttings and other printed matter in English and Tamil pertaining to the fraud being perpetrated by Satya Sai Baba and his devotees. I am willing to purchase all of them. If you do have them, please be free to send copies of the same and let me know the charges. If you do not have for distribution, you can let me have the sources and the addresses from where I can obtain the materials.
I read in our local news papers that an Atheist conference was held in Vijayawada recently. There is the need for me to get held of the proceedings of the conference so that they can be made available to the public in Malaysia.
I think it is possible for us to work together in exposing the said Saya Sai Baba in Malaysia and Singapore. Kindly let me hear from you.
Yours faithfully,
HARIRAM JAYARAM
அய்யா, 1979_ஆம் ஆண்டு நீங்கள் மலேசியாவில் இருந்தபோது, இந்த நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீசும், அது தொடர்பான கடிதங்களும் அனுப்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அப்போது நான் சத்ய சாய்பாபாவின் சீடர்களின் சார்பில் செயல்பட்டேன். சாய்பாபாவை குறைகூறி நீங்கள் கருத்து தெரிவிக்காமல் தடைபடுத்த முயன்றேன். அப்போது நான் சாய்பாபாமீது நம்பிக்கை கொண்டவனாகவே இருந்தேன். ஆனால், சாய்பாபா- _ புட்டபர்த்தியிலும், ஒயிட் பீல்டிலும் (Whitefield) (சாய்பாபா பகுதி) நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடக்கூடியவர் என்பது பிறகுதான் தெரியவந்தது. அதைவிட, அவர் செய்த மிகப்பெரிய தவறு _- அங்கே படித்த மலேசிய மாணவர்களிடமும் அவர் இதுபோல நடந்துகொண்டதுதான். சாய்பாபாவின் இந்த செயலை, அந்த மாணவர்கள் மலேசிய மக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். எனவே, சாய்பாபா எப்படிப்பட்டவர் என்பதுபற்றி, சரியான முடிவுக்கு வரவேண்டியது அவசியமாகியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக _- சாய்பாபாவும், அவரது சீடர்களும் எழுதிய நூல்கள்தான் இங்கே கிடைக்கின்றன. இந்த நிலையில் சாய்பாபா மற்றும் அவரது சீடர்களின் மோசடிகளை விளக்கக்கூடிய தமிழ் _- ஆங்கில நூல்கள், துண்டுப் பிரசுரங்கள், அவசரமாக தேவைப்படுகின்றன.
நான் எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். உங்களிடம் அவை இருக்குமானால், அதை உடனே அனுப்பி வையுங்கள்; அதற்குரிய கட்டணத்தை அனுப்பி வைக்கிறேன். உங்களிடம் அப்படி ஏதும் இல்லையென்றால், அவை எங்கே கிடைக்கும் என்ற விவரத்தைத் தெரிவியுங்கள்.
அண்மையில் _- விஜயவாடாவில் _- ஒரு நாத்திக மாநாடு நடந்ததாக, இங்கு வெளியான பத்திரிகையில் செய்தி வந்தது. அந்த மாநாட்டு நடவடிக்கைகள் பற்றி தகவல் கிடைத்தால், அவைகளை மலேசிய மக்களுக்கு தெரியப்-படுத்தலாம். சாய்பாபாவின் மோசடிகளை மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் அம்பலப்படுத்த நாம் இணைந்து செயல்பட முடியும் என்று கருதுகிறேன். அன்புடன் எழுதுங்கள்.
உண்மையுள்ள ஹரிராம் ஜெயராம்
ஆக, நம்மை எதிர்த்து வழக்காட முனைந்தவர் நம்மோடு இணைந்து நம் கொள்கையைப் பிரச்சாரம் செய்ய முன்வந்தது எப்பேர்பட்ட மனமாற்றம். இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா? * * * மலேசிய வானொலியில் எனது பேட்டி: மலேசியா வானொலியில் பூச்சரம் நிகழ்ச்சிக்கு நான் அளித்த பேட்டியும் எனது பயணத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதோ அந்தப் பேட்டி! மலேசிய நாட்டுக்கு வருவதென்பது என்னைப் பொறுத்தவரையில் இது இரண்டாவது தடவையாகும். 1968லே ஒருமுறை மலேசிய நாட்டை சுற்றிப் பார்த்து திரும்பி இருக்கின்றேன். இப்போது இரண்டாவது முறையாக வந்து இருக்கின்றேன். 10 ஆண்டு காலத்தில் இங்கு ஏற்பட்டு இருக்கின்ற வளர்ச்சி அபரிமிதமாக இருக்கின்றது. பாராட்டத் தகுந்த விதமாகவும் விரும்பத் தகுந்த விதமாகவும் இருக்கின்றது. அவைகளைத் தெரிந்துகொள்வதற்கும், தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டான இந்த ஆண்டு அவர்களுடைய அறிவியல் கொள்கை-களையும் கருத்துக்களையும் மலேசிய மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இங்கு வந்து இருக்கின்றோம். பொதுவாக உலகம் ஒரு குலம் என்கின்ற வகையிலே யாவரும் கேளிர் என்கின்ற முறையிலே மக்களுக்குள் பிறவிபேதம் செயற்கையாக இல்லாத ஒரு நிலையிலே சமுதாயம் அமைய வேண்டும். உழைப்புக்கு மரியாதை கொடுக்கின்ற சமுதாயம் அமைய வேண்டும்; சமநீதியும், சமவாய்ப்பும் அந்த சமுதாயத்திலே இரு அம்சங்களாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் ஒவ்வொரு தமிழரும், திராவிடரும் உணர்ந்து அதற்கேற்ப வாழ்வதுதான் இன்றைக்கு விரும்பத்தக்க நெறி என்பது தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையாகும். அவர் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்கள் எந்த நாட்டிலே இருந்தாலும் அவர்களைப் பாராட்டுகிறோம். அதிலும் குறிப்பாக திராவிட மக்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்று நான் குறிப்பிட்ட-போது, என்னிடம் வானொலி நிலையத்தார் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தேன்.
கேள்வி: சமூக சீர்திருத்தப் பணியில் தாங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றீர்கள். இந்த பல ஆண்டுகாலப் பணியிலே பல அனுபவங்களை பெற்று இருப்பீர்கள். அவைகளை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? பதில்: என்னுடைய பத்து வயது முதற்கொண்டே தந்தை பெரியார் அவர்களுடைய சமூகப் புரட்சிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவர்களுடைய தொண்டனாக என்னை ஒப்படைத்துக் கொண்டவன். முழுக்க முழுக்க சமுதாய சீர்திருத்தத்தின் மூலம்தான் ஒரு சிறப்பான திருப்பத்தினை உருவாக்க முடியும் என்று நம்புகின்றவன். தந்தை பெரியார் அவர்களின் சமுதாய சம்பந்தமான கருத்துக்கள் 5000 ஆண்டு காலத்துப் பழமையினை எதிர்த்துக் கிளம்பிய காரணத்தினாலே பலத்த எதிர்ப்புகளை ஆரம்ப காலக் கட்டத்திலே அவை சந்தித்தன. ஏனென்றால் பழமையாளர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து வரும்போது எதிர்ப்புக் காட்டுவதும் கூக்குரல் இடுவதும் எங்கும் இயற்கை. எவ்வளவோ எதிர்ப்புக்களையும் ஏளனங்-களையும் தந்தை பெரியார் அவர்கள் தன் போராட்டத்தின்போது சந்தித்தார்கள்.
ஆனாலும், எந்த மக்கள் அவர்களது கருத்துக்களை ஒரு காலத்தில் வரவேற்காமல் எதிர்த்தார்களோ அந்த மக்கள் பிறகு உணர்ந்து திரும்பி அந்தக் கருத்துக்கள்தான் சமுதாயத்தினுடைய தேவை என்று உணர்ந்து திருந்திய ஒரு திருப்பம் ஏற்பட்டதை தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளிலே கண்டு மகிழக்கூடிய வாய்ப்பினையும் பெற்றார்கள். அது வரவேற்கத் தகுந்தது; பாராட்டத் தகுந்தது. இந்த மாற்றம் என்னை மிகவும் கவர்ந்தது. கேள்வி: பெரியார் அவர்கள் மக்களிடத்தில் மட்டும் அல்லாமல் மொழியைக்கூட சீர்திருத்தம் செய்து இருக்கின்றார்கள் என்று அறிகின்றோம். இதுபற்றி தங்களுடைய கருத்து என்ன? பதில்: மொழி என்பதற்கு எந்தவிதமான புனித தத்துவமும் தேவையில்லை. அது மக்கள் ஒருவருக்கு ஒருவர் தமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளக்கூடிய ஒரு கருவி அவ்வளவுதான். எப்படி போக்குவரத்துச் சாதனமோ, அதுபோல மொழியும் என்பது தந்தை பெரியார் அவர்களுடைய அடிப்படைக் கருத்தாகும். ஒரு காலத்தில் மக்கள் கட்டை வண்டியில் பயணம் செய்தார்கள். ஆனால், இன்று 3 மணி நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து உங்கள் நாட்டுக்கு நாங்கள் வந்ததைப் போல, மொழியிலும் மாற்றம் வேண்டும் என்று நினைத்ததால் தந்தை பெரியார் அவர்கள் வெறும் பழமையைப் பேசிக் கொண்டு மட்டும் இருந்தால் தமிழ்மொழி வளராது, அதனுடைய வளர்ச்சி உலக மக்களுக்குப் பயன்படாது என்று கருதிய காரணத்தினால் 45 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் தமிழ் எழுத்தை ஆங்கில எழுத்துக்கள் சுருக்கமாக இருப்பதுபோல சுருக்கப்படலாம்; அதன் மூலம் தமிழ் தட்டச்சு, டைப்ரைட்டர் மாற்றி அமைக்கப்படலாம், தமிழ் அச்சு எழுத்துக்கள் மாற்றி அமைக்கப்படலாம்;


தமிழ் கற்கின்ற பலருக்கு எழுத்துக்கள் குறைவாக, சுருக்கமாக இருக்குமேயானால் அது ஆழமாக பரவலாகப் பயன்படலாம் என்று கருதி 247 எழுத்துக்கள் தேவை இல்லை. அதற்குப் பதிலாக 26 அல்லது 30 எழுத்துக்களுக்குள்ளாக அடக்கி விடலாம் என்று அவர்கள் நினைத்து, எழுதி, பேசி, அந்த சீர்திருத்தத்தை தாம் நடத்திய குடி அரசு, விடுதலை, உண்மை மற்றும் தாம் பதிப்பித்த இயக்க நூல்கள் இவைகளின் மூலமாக தொடர்ந்து கையாண்டு வந்தார்கள். இந்தக் கருத்தினை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டு, அதற்கு எதிர்ப்பெல்லாம் குறைந்த நிலையிலே தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி தமிழக அரசு தந்தை பெரியார் அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தினை ஒரு அரசு ஆணையாகவே போட்டு, அமலுக்குக் கொண்டுவந்து தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பினைச் செய்து இருக்கின்றது. அதன் காரணமாக தமிழ் மொழி ஏனைய பிறமொழி மக்களிடையே பரவுவதற்கும் எளிதாகக் கற்றுக் கொள்வதற்கும், எழுதப் படிக்கத் தெரியாத தமிழ் மக்கள்கூட எளிதில் கற்றுக் கொள்வதற்கும் சுலபமான ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது. எதையும் பயன் கருதித்தான் நோக்க வேண்டும் என்று கருதுகின்ற தந்தை பெரியார் அவர்கள் ஓர் அழிவு வேலைக்காரர் என்று சொன்னதை மாற்றி ஆக்கரீதியாகவும் அவராலே சிந்திக்க முடியும், செய்து காட்ட முடியும் என்பதற்கு அவர்களுடைய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் ஒரு அருமையான நல்ல சான்றாகும்.
-உண்மை இதழ்,16-30.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக