செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

திரும்பிப் பார்க்கிறோம் - திகைக்கிறோம்! (அனைத்து சாதியினரும் அர்ச்சகர்)


கவிஞர் கலி. பூங்குன்றன்

2021 ஆகஸ்டு 14ஆம் நாள் - வாழ்விலோர் திருநாள்!

தமிழின  அரசர்கள் கட்டிய கோயில்களில் - தமிழினத்தவர்களின் உழைப்பால் உருவாக் கப்பட்ட கோயில்களில் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டுப்பட்டு விடும் - ஏன் சாமி செத்து விடும்!

சூத்திரன் சாமி சிலையைத் தொடுவத னால் இந்நிலைக்கு ஆளாகும் நிலையில் என்ன செய்ய வேண்டுமாம்? "108 கலசங் களைச் செய்து வைக்க வேண்டும், பிம்பங் களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்ய வேண் டும். அதனைத் தொடர்ந்து மகாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்யப் பட வேண்டும் என்று வைகனாச ஆகமம் சொல்லுகிறது" என்று நீதிமன்ற நெடிய படிக்கட்டுகளில் ஏறி  எடுத்து வைத்த கொடுமையை என்ன சொல்ல!

தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய மாமன்னன் சிலையைக் கோயிலுக் குள் வைக்கக் கூடாதாம். அதனால்தான் காவல்காரனாக (Watch Man) வெளியிலே சிலையாக கையில் வாளுடன் நின்று கொண்டு இருக்கும் அவலம்!

பொது வீதிகளிலும், குளங்களிலும், கிணறுகளிலும், உணவு விடுதிகளிலும் பட மெடுத்துத் தாண்டவமாடிய ஜாதி  - தீண் டாமைப் பாம்பை அடித்து வீழ்த்திய ஈரோட் டுக் கைத்தடி, கொஞ்சம்  - எட்டிப் பார்த்தது.

அடடே, இந்த இடத்தில் இவன் மட்டும் தான் இருக்கிறான் - ஏன் மற்றவர்களுக்கு அங்கு இடம் இல்லையா? நுழையத் தகுதி இல்லையா? என்ன கூத்து இது? என்ன திமிர்வாதம் இது? என்ன அயோக்கியத்தனம் இது? என்ன விபரீதம் இது? என்ற சிந்தனை  சீறிப் பாய்ந்தது.

இரு இரு இதற்கொரு முடிவு கட்டுகிறேன் - ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று கைத்தடியை ஒரு தட்டுத் தட்டிக் கிளம்பினார்.

'ஓ சூத்திரர்களே! (மனுதர்மப்படி வேசி மக்களே!) இந்த அக்கிரமத்தைப் பார்த் தீர்களா? நீங்கள் கட்டிய கோயில்களில்  நீங்கள் நுழையக் கூடாதாம்! கருவறையில் அடியெடுத்து வைத்துப் பூஜை செய்ய உங்க ளுக்குத் தகுதிஇல்லையாமே! உங்களுக்கு மானம், வெட்கம், சூடு, சொரணை இல் லையா? குருதி கொதிக்கவில்லையா?' என்று போர்க் குரல் கொடுத்தார்!

இன்று நேற்றல்ல - 1937ஆம் ஆண்டி லேயே போர்க் குரல் கொடுத்தார் தந்தை பெரியார். (பெட்டி செய்தி காண்க). 1969 அக் டோபர் எட்டாம் தேதி வந்தது சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரியாரின் போராட்ட அறிக்கை..

1970 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி என்று அறிவித்தார்.

தந்தை பெரியாரின் சீடர் கலைஞர் அல்லவா முதல் அமைச்சர். அவர் ஆட்சி யில் இருக்கும்போது அவர் ஏற்றுக் கொண்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் வீதிகளில் இறங்கிப் போராட அனுமதிப்பாரா?

உடனடியாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (17.1.1970).

அய்யா அவர்களே, உங்கள் கொள் கையை, விருப்பத்தை நிறைவேற்ற உங்கள் தனயன் சட்டம் இயற்றுகிறேன் - போராட் டத்தைக் கை விடுக என்று வேண்டுகோள் அறிக்கை ஒன்றினை வெளியிட,  நமக்குக் காரியம் தானே முக்கியம் - வீரியமா முக்கியம்? என்ற அடிப்படையில் கிளர்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது - என்று அறிக்கை வெளியிட்டார். இனநலக் காப்பாளர் தந்தை பெரியார் (19.1.1970).

மானமிகு முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில், இரு வேறு கால கட்டங்களில் இரு தனித்தனி சட்டங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

பார்ப்பனர்களின் குருச்சேத்திரமான உச்சநீதிமன்றத்திற்கு இரு முறைகளும் படை எடுத்துச் சென்று கதவைத் தட்டினர்.

கடைசியாக வந்த தீர்ப்பின்படி (16.12.2015) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆவதற்கு உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டி விட்டது.

இதுவரை இருவருக்கு அந்த வாய்ப்புக் கிட்டினும் ஒரே நேரத்தில் 58 பேர்களுக்கு (தனியே 5ஆம் பக்கம் காண்க) தமிழ்நாட்டின் கோயில்களில் அர்ச்சகர் பணிக்கான ஆணை வழங்கப்பட்ட வரலாற்றுக்கு மகுடம் சூட்டப் பட்ட சமத்துவ நாள்தான் ஆகஸ்டு 14!

பெண் ஒருவரும் ஓதுவாராகவும் நியமிக் கப்பட்ட நேர்த்திதான் என்னே! என்னே! - (வாழ்க பெரியார்!)

இந்த நாள் இனிய நாள் - இலட்சிய வாதிகளுக்கு இளமை முறுக்கேறும் இன்பத் திருநாள். ஜாதி ஒழிப்புத் தீரர்களுக்கு  தேனினும் இனிக்கும் திருநாள்!

ஜாதி ஒழிப்புக்காக இன்னுயிர் ஈந்த சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் தியாகத் தீப நாள்!

பல நூற்றாண்டுகளாக பிறப்பின் அடிப் படையில் பேதப்படுத்தப்பட்டுக் கிடந்த கோடானு கோடிமக்களின் வாழ்வில் சுயமரி யாதை என்னும் மதிப்பைக் கூட்டிய திமுக வின் நூறாம் நாளின் நன்கொடை நல்கிய நன்னாள்!

"தந்தையின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமல் புதைத்து விட்டோமே" என்று கண்ணீர் மல்கிய கலைஞரின் கண்ணீரை அவர்தம் மைந்தர் முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்  துடைத்து - தம் வாழ்வின் பயனை அடைந்தார். தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மட்டுமல்ல,  சமதர்ம சமத்துவ விரும்பிகள், மனித உரிமை மாண்பாளர்கள் மத்தியில் மங்கா புகழ் படைத்த திமுக ஆட்சியை, அதன் ஆட்சித் தலைவரை வாயார, மனமார, கையார வாழ்த்துவோம் - பாராட்டுவோம்.

நீடு வாழ்ந்து நிலை பெற்ற சாதனை சரித்திரக் காவியங்களை நாள் தோறும் படைக்கட்டும்! படைக்கட்டும்!!

தமிழர் தலைவர் தலைமையில் தந்தைபெரியார் பணி முடிப்போம்! பெரியார் உலகம் காண்போம்!!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

வெல்க திராவிடம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக