வெள்ளி, 26 மே, 2023

புத்தம் மதமா?- பெரியார்

தத்துவ விசாரணை!

1959 ஆம் ஆண்டில் வடநாட்டுச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார் தந்தை பெரியார். வரும் வழியில் டில் லியில் அம்பேத்கர் பவனத்தில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றை தெரிவாக நடத்தினார்.

பெரியார் தங்கி இருந்த இடத்தில் (டில்லியில்-15.2.1959) சென்னை மெயில் ஆங்கில நாளேட்டின் நிருபரான பார்ப் பனர் ஒருவர் தந்தை பெரியா ரைச் சந்தித்தார். (தந்தை பெரி யாரை யாரும் எந்த நேரத்தி லும், எந்த இடத்திலும் எளிதில் சந்திக்கலாம் - அதுதான் அவர் மக்கள் தலைவர் என்பதற்கு மகத்தான அடையாளம்).

அந்தப் பார்ப்பனர் தந்தை பெரியாரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.‘‘நீ மதத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசு கிறாயே, புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல்லுகிறாயே! அதுவும் ஒரு மதம்தானே?'' என்று கேட்டார்.

அதற்குத் தந்தை பெரியார்  சொன்ன பதில்: ‘‘பித்தலாட்ட மாக மக்களிடம் நீங்கள் சொல்லி (பார்ப்பனர்கள்) அப் படி அவர்களை ஆக்கி வைத் திருக்கிறீர்கள்'' என்று கூறி னார்.

அதற்கு அந்தப் பார்ப்பனர் மறுபடியும் ஒன்றைக் கேட்டார். ‘‘புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி'' என்று சொல் கிறார்களே என்று கேட்டார்.

அதற்கு தந்தை பெரியார் சொன்ன பதில்: ‘‘புத்தம் சரணம் கச்சாமி'' என்பது ஒன்றும் மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கியதில்லை! ‘நீ யாரை தலைவனாக ஏற்றுக்கொண்டு இருக்கிறாயோ, அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதி யோடு பின்பற்று' என்பதாகும். ‘நீ தலைவனைத் தேர்ந் தெடுப்பதற்கு முன் நன்றாகத் துருவித் துருவிப் பார்த்து, ஆராய்ந்து தேர்ந்தெடுத்து விட்ட பிறகு, அவனது கட்டுப் பாட்டுக்கு அடங்கி, அவனைப் பின்பற்றவேண்டும்' என்ற நல்லொழுக்கத்தைத்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண் டால் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பது தானே ஒழிய வேறில்லை. மேலும் புத்தம் என்பது உன் புத்தியைக் குறிப்பதாகும்.

அதுபோலவே, ‘தம்மம்' சரணம் கச்சாமி என்பதற்குப் பொருள் ‘நீ ஏற்றுக் கொண் டுள்ள கர்மங்களை - கொள்கை களை (Principles) உண்மை யான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்; அந்தக் கொள்கை களுக்கு மாறாக நடக்கக் கூடாது, உறுதியாக அவை களைப் பின்பற்றவேண்டும்' என்பதுதான்.

மூன்றாவதாக ‘சங்கம்' சரணம் கச்சாமி என்பது, ‘நீ நல்லபடி யோசித்து சேர்ந்தி ருக்கிற ஸ்தாபனத்தை மரியா தைப் பண்ணிப் பாதுகாக்க வேண்டும்.''

நீ உன் தலைவனை மதி!

உன்னுடைய கொள்கை களை உறுதியாகப் பின்பற்று!

உன் ஸ்தாபனத்துக்கு மரி யாதை செய்து பாதுகாத்து வா!

- இதுதான் தந்தை பெரியா ரின் தத்துவ விசாரணை.

(ஆதாரம்: ‘விடுதலை' 22.2.1959)

இவை நமக்கும்தானே!

 - மயிலாடன்
27.05.2020, விடுதலை நாளேடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக