திங்கள், 26 மார்ச், 2018

ஜாதி பற்றிய உச்சநீதிமன்ற இரண்டு தீர்ப்புகளும் கழகத்தின் நிலைப்பாடும்!

நம் நாட்டு உச்சநீதிமன்றத்தில் இம்மாதம் இரண்டு முக்கியத் தீர்ப்புகள் வந்துள்ளன. அவை நமது சமூகத்தில் நிலவும் ஜாதி, வர்ணதர்மத்தினை அப்படியே படம்பிடித்துக் காட்டும் தீர்ப்புகள் ஆகும்!
ஒன்று, கேந்திரிய வித்தியாசாலைப் பள்ளியில் பணியில் சேர்ந்து வேலைபார்த்த ஒருவர், அதுவும் அப்பள்ளியின் துணை முதல்வராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய ‘அகர்வால்’ ஜாதியைச் சேர்ந்த ஒருவர். தாம் திருமணம் செய்து கொண்டது, தாழ்த்தப்பட்ட ‘தலித்’ ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர் என்பதைக் காட்டி அப்பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியது செல்லாது என்றும், ஜாதி என்பது (இந்து மத தர்ம முறைப்படி) பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதும், ஜாதியை பிறப்பின் மூலம் தவிர வேறு எவ்வகையிலும் மாற்றிட முடியாது என்றும் ஓங்கி அடித்து அத்தீர்ப்பினை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சந்தான கவுடா ஆகிய இருவரும் கூறியுள்ளனர்!

இந்து மதம் என்று தற்போது அழைக்கப்படும் ஆரிய பார்ப்பன சனாதன- வேத மதமான அதன் வர்ணாசிரமத்தின்படி பிறப்பினை வைத்துதான் ஜாதி நிர்ணயிக்கப்படுகிறது. மற்றபடி வேறு எந்த தகுதியினாலும் அல்ல. எவ்வகையிலும் ஒருவர் ‘ஹிந்துவாகப் பிறந்தவர்’ தனது ஜாதியை மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறுவது உலகில் வேறு எந்த சமூகத்திலும் உண்டா என்று கேட்டாரே தந்தை பெரியார் அதற்குப் பதில் உண்டா? ஒருவர் மதம் மாறிடலாம்; ஆனால், ஜாதியை மாற்றிட முடியாது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்த மத மாற்றத்தால்கூட, கிறித்துவம், சீக்கியம் போன்றவற்றில் தனது ஜாதிய அடையாளத்தை அப்படியே வைத்துக் கொண்டுதான் மதமாற்றம் நடைபெற்றுள்ளது என்பதற்குச் சான்று, அந்த மதங்களைத் தழுவிய பிறகும்கூட அங்கே தங்கள் ஜாதி அடையாளத்தை, குறீயீட்டினை அழித்துக் கொள்ளாமல் பாதுகாப்பது, சுடுகாடு வரைக் கொண்டு செல்வது மிகுந்த வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதல்லவா?

ஆதியில் இத்தாலியிலிருந்து வந்து மதமாற்றம் செய்த கிறித்துவப் பாதிரிகளும் மதம் மாற்றத்திற்கு ஆசை காட்டும்போது, “உங்கள் ஜாதிக்குப் பங்கமிராது’’ என்று சில உயர்ஜாதிப் பார்ப்பனர்களை மதம் மாறச் செய்ய இப்படி ஓர் உத்தியைக் கையாண்டதினால்தான் இங்கே அங்கேயும் இந்தத் தொற்றுநோய் வந்தது! (இதற்கு அதாரம் உள்ளது)

ஜாதிக் கொடுமை, ஜாதிவெறி என்பது வேறு ஜாதிகளைச் சேர்ந்த இருவர், வயது வந்த இருவர் _ ஒருவரை ஒருவர் புரிந்து காதலித்துத் திருமணம் செய்தாலும் அந்த ஜாதியைச் சேர்ந்த பெற்றோர்கள்கூட, ஜாதிவெறியால் அவர்கள் முன்பிருந்த பாசத்தைக் கொன்றுவிட்டு பிறகு அப்பிள்ளைகளை _ பெண்களைக் கூலிப்படை மூலம் கொல்வதோ அல்லது ஜாதிப் பஞ்சாயத்துக்களில் தண்டனை தருவதோ  கூடாது; இவை சட்டவிரோதம் என்றும் மற்றொரு தீர்ப்பில் கூறியதோடு, இந்த “கவுரவக்கொலை’’ காப்பஞ்சாயத்து  (Cast Panchayats - ‘Kap Panchayats’) என்பவற்றைக் கண்டித்து, ஜாதி மறுத்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு பாதுகாப்பு தரவேண்டும். சட்டப் பாதுகாப்பு உட்பட என்று கருத்தடங்கிய தீர்ப்பும் (தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றொரு நீதிபதி) தந்து வரலாறு படைத்துள்ளார்கள்.

‘ஹிந்து மதத்தைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே என்ற கிளிப்பிள்ளைக் கேள்விக்கு நமது பதில் _

கேள்வி மூலம்தான்!

ஜாதி, வர்ணதர்மம் இதில் _ வேத சனாதன பார்ப்பன மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தில் தத்துவப்படி உள்ளது?
ஹிந்து வேதங்களில் _ புருஷாந்தம் _ ரிக் வேதத்தில், கீதையில், மனுதர்மத்தில், இராமாயணத்தில், மஹாபாரதத்தில் _ மற்ற 18 புராணங்களில் எல்லாம் (இவைதான் ஜாதியைத் தூக்கிப் பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கும் அஸ்திவாரங்கள்) உள்ளதே!

‘ஹிந்து லா’வை அங்கீகரிக்கும் இந்திய அரசியல் சட்டத்திலும் ஜாதி பாதுகாக்கப்படுகிறதே; அதைச் சுட்டிக்காட்டிதானே 60 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் 1958 நவம்பர் 26ஆம் தேதி அதன் நகலைக் கொளுத்தி, ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் போராட்டத்தை நடத்தி, இன்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதன் மூலம், அதன் பேதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடும் உணர்வை ஊட்டியுள்ளார்!

தந்தை பெரியாரின் பணியும், திராவிடர் கழகம் செய்யும் பணியும் எத்தகைய பிறவி பேதம் அகற்றும் பெரும் பணி என்பது இப்போது புரிகிறதா?

- கி.வீரமணி,
ஆசிரியர்.

-  உண்மை இதழ், 1-15.2.18

வியாழன், 22 மார்ச், 2018

பெரியார் இயக்கத்தை பார்த்து அச்சப்படுகிறார்கள்

து.ராஜா எம்.பி., 

தேசிய செயலாளர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி



திரிபுராவில் வெற்றி பெற்றதை பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் கொள்கை ரீதியிலான வெற்றி என்று கூறிவருவது சரி யல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறியுள்ளார்.

திரிபுராவில் வெற்றி பெற்றதையடுத்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் லெனின் சிலைகளை சேதப்படுத்தியது. அதுபோன்ற தாக்குதல்கள்குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் து.ராஜா ஏசியன்ஏஜ் இதழ் செய்தியாளர் சிறீபர்ணா சக்ரபர்த்திக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கருத்து களைக் கூறியுள்ளார்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். நம்பகத்தன்மை இல்லாதவை என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. தேர்தலில் பல்வேறு யுத்திகளைக் கையாண்டு அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால், இந்தியாவில் கொள்கைக்கான வெற்றி ஆகிவிடமுடியாது. இங்கொன்றும், அங்கொன்றுமாக தேர்தல் களில் வெற்றி பெற்றுவிடலாம். ஆனால், அதுவும் அவர்களுக்கு எளிதானதாக இல்லை என்று து.ராஜா கூறியுள்ளார்.

செய்தியாளர்: திரிபுரா தேர்தல் முடிவைத் தொடர்ந்து சிலைகள் பிரச்சினைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

து.ராஜா: சிலைகள் உடைப்பு பிரச்சி னைகள் கண்டிக்கப்பட வேண்டியவை. மிகவும் கண்டனத்துக்குரியவை. தேர்தல் முடிவு வரத்தொடங்கிய நிலையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சிலைகள் உடைப்பு பணி களைத் தொடங்கிவிட்டது. லெனின் சிலை களை முதலில் குறி வைத்தார்கள். அதன் பின்னர் இடதுசாரி தொண்டர்களைக் குறி வைத்தனர். இது வன்மையான கண்டனத்துக் குரியது. திரிபுராவில் பெற்ற வெற்றியை தங்களின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி யாக பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இது கொள்கைக் கான வெற்றி அல்ல. கொள்கைக்கான வெற்றி என்றால், கொள்கையுடனான மோதலில்தான் ஏற்படும். இதை முறையாக புரிந்துகொள்ள வேண்டும்.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தில் தாக்குதல்கள் நடைபெற்றபோதுகூட, காவல்துறையினரைக்கொண்டு மாணவர்கள், செயற்பாட்டாளர்கள்மீது  தேசவிரோத குற்றச்சாற்றுகள் சுமத்தப்பட்டன. ஆனால், அதிலும் கொள்கைரீதிலான வெற்றி என்றே கூறினார்கள். காவல்துறையைக்கொண்டு தேசவிரோத குற்றங்களை சுமத்தி ஒடுக்குவது என்பது கொள்கைரீதியில் பெறுகின்ற வெற்றி என்று எப்படி கூற முடியும்? நீங்கள் சிலை களை உடைக்கலாம் ஆனால், உங்களால் கொள்கைகளை அழித்துவிடமுடியுமா?
செய்தியாளர்: இப்போது பெரியார் சிலைகள்வரை பரவிவருகிறதே...?

து.ராஜா: நாடுமுழுவதும் பரவுகின்ற சிலை உடைப்பு பிரச்சினை லெனின் சிலையுடன் நிற்கவில்லை. தமிழ்நாட்டில் பெரியார் சிலை கள் குறிவைக்கப்படுகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலைகள் குறி வைக்கப்படுகின்றன. கொள்கைரீதியிலான மோதல் என்பது வேறு, சிலைகள் உடைக் கப்படுவது என்பது வேறு. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். செயல்கள் ஏற்கமுடியாதவை யாகும்.

செய்தியாளர்: நோக்கம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

து.ராஜா: நாடுமுழுவதும் நல்லிணக்கம் இல்லாத சூழலை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். பெரியார் சிலைகளைக் குறிவைப்பதன் மூலமாக தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமானவரான பாஜகவைச் சேர்¢ந்தவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முறை யாக வரலாற்றைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் அவர்கள் மூடிய மனப்போக்கில் உள்ளனர்.    அவர்களின் மனப்போக்கு என்பது பாசிச கொள்கையால் உருவாக்கப் பட்டது. எல்லாமே அவர்களிடமிருந்துதான் தொடங்குவதாக நினைக்கிறார்கள். அதே போல் அவர்களிடமே முடிந்துவிடுவதாகவும் நினைக்கிறார்கள்.

லெனின் என்றால் கொள்கை. மனிதத்தன் மைக்கான தலைவராக லெனின் இருக்கிறார்.  லெனினை பகத் சிங்கும் போற்றினார். பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக கடைசி நேரத்தில்கூட லெனின் புத்தகத்தைப் படித்தார். இது வரலாற்றில் இடம்பெற்ற தகவலாகும்.

அப்படி இருக்கும் போது, பாஜகவினர் தற் பொழுது லெனினை இந்தியாவுக்கு அந்நிய ராக கூறுவது எப்படி? ஏன் இந்த நிலை? இந்த உலகமே ஒரு குடும்பம் என்றும் ஒரு பக்கத்தில் கூறுகிறார்கள். பொதுவுடைமைக்கு எதிரான நோய்தானே தவிர வேறொன்றுமில்லை.



செய்தியாளர்: இதுபோன்ற நிகழ்வு களால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

து.ராஜா: இது ஏற்கெனவே நடந்துள்ளது தான். பெரியார் மாபெரும் தலைவர். சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம் ஆகிய மாபெரும் இயக்கத்தின் தலைவர். அவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடினார். சமூகநீதிக்காக போராடினார். அவர் இந்தக்கட்சிக்குத்தான் சொந்தக்காரர் என்று யாராலும்   தள்ளிவிடமுடியாது. அவர் எல்லாவற்றையும் விட மேலானவர். பெரி யாரை ஏன் பாஜக குறிவைக்கிறது என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். பெரியார் கொள்கை அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பெரியார் இயக்கத்தின் காரணமாகவே அவர்களால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. பெரியார் அந்த அளவுக்கு பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பினார். பெரியாரின் பகுத் தறிவுக் கொள்கைகளை எதிர்த்துப் பாசிச வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ்- அமைப்பால்  நிற்கமுடியவில்லை. அதனாலேயே பெரியார் இயக்கத்தைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். இப்போது அவர்களுக்கு எதிராகவே திரும்பி யுள்ளது. திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆகவேதான் அவர்கள் அச்சப்படுகிறார்கள். லெனினைக்கூட அவர்கள் முயன்று பார்க் கலாம், ஆனால், பெரியார் எப்போதும் அச் சுறுத்தலாகவே இருக்கிறார்.

செய்தியாளர்: தாலிபானில் பாமியன் புத்த விகாரம் உடைக்கப்பட்டதுடன் மக்கள் இதை ஒப்பிட்டுப் பார்க்கிறார்களே?

து.ராஜா: அதுதான் நடக்கின்றது. வர லாற்று புரிதலில் தாலிபானின்  குறுகிய நிலைகுறித்து நீங்கள் விமர்சிக்கலாம். இந்தியா வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இங்கு அந்த நிலை இல்லை. இதுபோன்றவற்றை வெளிநாடுகளில் எப்படி புரிந்து கொள் கிறார்கள்? நாம் இப்பொழுது உலக மய காலத்தில் இருக்கிறோம். பன்னாட்டளவில் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்தி ருக்கின்ற நிலை உள்ளது. அவர்களின் கருத்து என்ன? திரிபுராவில் தேர்தலில் வெற்றிபெற பல்வேறு யுத்திகளைக் கையாண்டதைப்போல் செய்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் கொள்கைரீதியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. இங்கொன்றும் அங்கொன்று மாக தேர்தல் வெற்றிகளைப் பெற்றிருக்கலாம். ஆனால், அதுவும் தற்பொழுது அவர்களுக்கு அறைகூவலாக உள்ளது.

செய்தியாளர்: நாடுமுழுவதும் பாஜக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

து.ராஜா:  இல்லை. அடித்தளத்தில் அவர்கள் ஆதரவினை இழந்து வருகிறார்கள். ராஜஸ்தானில் பாஜக அடைந்த தோல்வியை எப்படி விளக்கிக் கூறுவீர்கள்? குஜராத்தில் கூட, ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு வெற்றியைப் பெற்றுவிடவில்லை. இந்திய வேறுபாடுகளைக் கொண்டுள்ள நாடு.  இந்த வேறுபாடுகள் மதிக்கப்பட வேண்டும். பலதரப்பட்ட கலாச்சாரங்களை கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.   பன்முகத் தன்மை கொண்ட நம்முடைய ஜனநாயகத்தை அவசியம் புரிந்துகொள்வேண்டும். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

- ஏசியன் ஏஜ், 11.3.2018

- விடுதலை ஞாயிறு மலர், 17.3.18

ஜீ நியூஸ் தமிழ் இணையத்தில்... பெரியார்!



தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்பு: தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராம சாமி அவர்களின் சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம்!!

பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879ஆம் ஆண்டு ஈரோட் டில் பிறந்தார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற் காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிட மிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக் காகவும், ஜாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். 1. தந்தை பெரியார் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னு தாயி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டது.

2. தந்தை பெரியார் தனது படிப்பை அய்ந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண் டார். 19ஆவது வயதில் திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.

3. 1902ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடனும் சேர்ந்து சமமாக உணவு சாப்பிட்டார். இதனால் அவருக்கும், அவர் தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார். 4. ஆரம்ப காலத்தில் காந்தி கொள் கைகளில் ஈடுபாடு கொண்டு 1919ஆம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலை மையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார்.

5. அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்ததால், தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார்.

6. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டத் திற்கு பிறகு பெரியார் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.

7. 1925ஆம் ஆண்டு சமுகத்தில் இருக்கும் மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என சுயமரியாதை இயக்கம்  தொடங்கினார். அதே ஆண்டு குடிஅரசு நாளிதழை தொடங் கினார் தந்தை பெரியார். இந்த நாளிதழ் மூலம் பெரியார் தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்பினார். இதற்கு மக்களின் பெரும் ஆதரவும் கிடைத்தது. மாநாடு, கூட்டங்கள் நடத்தி மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தினர்.

8. 1937ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜ கோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதல மைச்சரானார். அவரின் ஆட்சிக் காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. 1938இல் நீதிக் கட்சியின் சார்பாக பெரியார் இந்தி மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

9. 1939ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் நீதிக்கட்சி என்ற பெயரை 1944ஆம் ஆண்டு திராவிட கழகம் என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. 10. 1949ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர் களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்பட்டனர். திராவிடர் கழகம் தலித்துக் களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

11. 1949ஆம் ஆண்டு தனது வழிகாட்டியான தந்தை பெரியாரிடமிருந்து அண்ணாதுரை விலகி, திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

12. இந்து மத கடவுள்கள் மூடநம்பிக்கை களை மக்களிடையே வளர்ப்பதாக கூறி, 1952ஆம் ஆண்டு பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தினார். 13. 1962ஆம் ஆண்டு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் அவருக்கு பொறுப்பை தந்தார். 14. அப்போதைய இந்திய கல்வி அமைச்சர் திரிகுனா சென் அவர்களால், தந்தை பெரியாருக்கு யுனஸ்கோ விருது  1973ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வழங்கப்பட்டது.

15. 1973ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில், சாதிமுறையையும், இழிவுநிலை யையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார். இது தான் அவரின் கடைசிக் கூட்டம் ஆகும்.

16. உலகின் மாபெரும் சுயசிந்தனை யாளரும், அழியாத வரலாற்றின் அறிஞரு மான தந்தை பெரியார், டிசம்பர் 24ஆம் தேதி 1973ஆம் ஆண்டு, தனது 95ஆவது வயதில் காலமானார்.

17. தமிழ்நாடு அரசு தந்தை பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. 18. ஈ.வெ.இராமசாமி பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

19. வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், ஜாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப் பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ் வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். 20. இன்றும் திராவிடர்கள் தலைநிமிர்ந்து சமத்துவத்தோடும், பகுத்தறிவோடும் வாழ் கிறார்கள் என்றால், அதில் தந்தை பெரியாரின் பணி மிகப்பெரியது. மாபெரும் சிந்தனை யாளர் பெரியார் என்றால் அது மிகையாகாது.

-ஜீ நியூஸ் தமிழ் இணையம், 7.3.2018

பெரியார் குறித்து

காங்கிரசு கட்சி டிவிட்டரில் பதிவு



பெரியார் போன்ற மாபெரும் சமூக சீர்திருத்தவாதிகளின் பெருமைகளை, பாஜக தலைவர்கள் மோசமாக பதிவுகளை இடுவது மற்றும் அவர்களின் தொண்டர்கள்  சேதப் படுத்தப்படுவதன்மூலம் ஒன்றும் செய்து விடமுடியாது என்பதை பாஜக நினைவு கொள்ளவேண்டும். நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டர் பதிவு

லெனின் சிலை, பெரியார் சிலைகள்  சேதப்படுத்தப்படுகின்றன. உங்களின் செயல்திட்டம்தான் என்ன? நம்முடைய குழந்தைகளுக்கு நீங்கள் எதை கற்பிக் கிறீர்கள்? இந்த சிலை அரசியலை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.    வன்முறை இனங்கள்மீதான வன்முறையாகி வருகிறது. நீங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன? வளர்ச்சியா அல்லது சீர்குலைவும், வன்முறை களும்தானா?



நடிகர் விஷால் நடிகர் விஷால் தனது சமூக வலைத் தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித் துள்ளார். அவர் கூறியதாவது:

தந்தை பெரியார் சிலை உடைக்கப்படுவது குறித்த ராஜாவின் கருத்து கண்டிக்கத்தக்கது. நீங்கள் எந்தவொரு தலைப்பிலும் கருத்துத் தெரிவிக்கும் ஒவ்வொரு முறையும் பிரச்சி னையை உருவாகுகிறீர்கள். உங்களது கருத்து இதுவரை சரியாக இல்லை. இனி மேலாவது நீங்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என நம்புகிறேன். அதற்கு உங்களுக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும் இவ்வாறு நடிகர் விஷால் கூறியுள்ளார்

- விடுதலை ஞாயிறு மலர், 17.3.18

பெரியார் சிலையல்ல - உயிரோட்டமான கொள்கை!

வட இந்திய ஏடுகளின் பார்வையில்...

பெரியார் சிலையல்ல - உயிரோட்டமான கொள்கை!

மறைந்து 45 ஆண்டுகளாகியும் மதவாதிகளுக்கு பெரும் அச்சுறுத்தல்!



அண்மையில் தந்தை பெரியார் சிலையை உடைப்போம் என்று ஓர் இந்துத்துவா வெறியன் விஷம் கக்கியதையும் திருப்பத் தூரில் (வேலூர் மாவட்டம்) தந்தை பெரியார் சிலை பிஜேபிக்காரரால் சேதப் படுத்தப்பட்டதையும் தொடர்ந்து தமிழ் நாட்டில் மட்டுமல்ல; வட இந்திய ஏடுகளிலும் தந்தை பெரியார் என்ற மாமனிதரின் பெரும் சக்தி குறித்து விரிவாக எழுதியுள்ளன. அவற்றுள் ஒரு சில இங்கே...

கபர் இந்தி (7.3.2018) (பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம்)

பெரியார் மறைந்த பின்பும் அவர் கொள்கைவழியாக மதவாதிகளுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். தற்போது நாடு முழுவதும் சிலைகள் குறித்து பேச்சாக எழுகிறது, கருத்துக்களால் மக்களிடையே பிரபலமான தலைவர்கள் அவர்களின் மரணத்திற்குப் பிறகு நினைவு கூறும்வகையில் வைக்கப்பட்ட சிலைகள் உடைக்கப் படுகின்றன. சில சிலைகள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்படு கின்றன. சில சிலைகள் முழு மையாக உடைத்து நொறுக்கப்படுகின்றன. சில சிலைகள் மீது சாயம் வீசப்படுகிறது, ஆனால் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலத்தில் லெனின் சிலைமீது புல்டோசர் ஏறிய பிறகு இந்துத்துவா வெறியர்களின் தூண்டுதலால் தெற்கில் பெரிய மாநிலமாக திகழும் தமிழ கத்தில் வேலூரில் உள்ள பெரியார் சிலை சில அரசியல்வாதிகளால் உடைபடுகிறது.   காலையில் துவங்கி மாலைவரை வாழ் வாதாரத்திற்காக ஓடிக்கொண்டு இருக்கும் சாமானியர்களுக்கு அந்த சிலைகளால் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் எதிர்ப்பரசியல், மதவாத அரசியல் செய்பவர்களுக்கு அந்த சிலைகள் உறுத்தலாக இருக்கின்றன. அந்த சிலைகள் கொள்கை விரோதிகளாக மாறி யுள்ளன.    இன்று மதவெறியர்களினால் சேதப் படுத்தப்பட்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் நிலைக்கு கொண்டு சென்ற பெரியார் குறித்து சில குறிப்புகள்:  மதவாத அமைப்புகளுக்கு சிம்ம சொப்ப னமாக விளங்கிய பெரியார்! அவர் மறைந்த பின்பும் அவர் கொள்கைவழியாக மதவாதி களுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அப்படி அவர் என்ன செய்து விட்டார், அவரது கொள்கைகள் மக்களாட்சி உள்ள இந்த நாட்டில் எப்படி எடுபட்டது?

பெரியார் என்றால் தலைசிறந்தவர் என்று பொருள்

எந்தப் பெரியார் சிலை உடைக்கப் பட்டதோ, அதே பெரியார் சிலை அமைந்த மண்ணில் தென்னக அரசியல் வளர அவர் உரமாக இருந்துள்ளார். தென்னக அரசி யலின் டி.என்.ஏ பெரியார் தான், இந்த மரபணுவில் மறந்தும் கைவைத்தால் விளைவு  கடுமையாக இருக்கும், அதன் சிறு பகுதிதான் பெரியார் சிலை உடைப்பிற்குப் பிறகு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு! பெரியார் கடைசி வரை தன்னுடைய கொள்கைகளை விட்டுக் கொடுக்கவே இல்லை, இன்றளவும் அவரது கொள்கைகள் உயிரோட்ட மாக இருக்க காரணம் அவரது கொள்கை பிடிப்பும், மக்கள் மனதில் அவர் விதைத்த கொள்கை முழக்கமும் தான்.

தைனிக் ஜாகரன் 7.3.2018 (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உ.பி.)

யார் இந்தப் பெரியார், இவரின் சிலை மீது கை வைத்தால் இந்தியா முழுவதும் ஏன் அதிர்வலை எழுகிறது?  பெரியார் தென் இந்தியாவின் சமூக செயற்பாட்டாளர் மற்றும் அரசியல் வாதியாவார். தென்னகத்தில் வாழும் மனிதர் களுக்குச் சுயமரியாதை உணர்வை ஊட்டி யவர், அவரது முழுபெயர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். பிற்காலத்தில் இவரே தன்னுடைய பெயரின் பின்னால் இருக்கும் ஜாதி அடை யாளமான நாயக்கர் என்ற பெயரை தூக்கி எறிந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து முழு தமிழகமுமே ஜாதிப் பெயரை குறிப்பிடுவதைக் கைவிட்டு விட்டது.   ஆசியாவின் சாக்ரடீஸ் என்றழைக் கப்பட்ட பெரியார் 1932 ஆம் ஆண்டில் பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். பெரியாரின் ஓய்வில்லா சமூகப்பணியின் வீச்சு மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது, ஆகையால் தான் தமிழகத்தில் பெரியார் சிலைமீது கைவைத்த உடன் இந்தியா முழுவதும் அதிர்வலை எழுந்தது. தெ வோல்ர்ட் இந்தி நியூஸ் (தைனிக் பாஸ்கர்) குழுமம் 8.3.2018  (அரியானா, பஞ்சாப், உ.பி. ம.பி. ராஜஸ்தான், குஜராத்)  ஜாதி மற்றும் மதத்திற்கு எதிராக நீண்ட நெடிய போராட்டம் நடத்தியவர் பெரியார்.

பெரியார் ஒரு சமூக செயற் பாட்டாளர் அரசியல் கொள்கைப் படைப் பாளி, அவரது அரசியல் திராவிட அரசியல் என்று அடையாளப் படுத்தப் படுகிறது. பெரியார் ஜாதி மற்றும் மதத்திற்கு எதிராக மிக நீண்ட போராடடம் நடத்தியுள்ளார். பெரியார் துவக்கக் காலத்தில் காங்கிரசு கட்சியில் மிகவும் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார். பிறகு அங்கு காணப்பட்ட பிரிவினை காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறினார். உயர் ஜாதி ஆதிக்கம்(பார்ப்பனர்) எல்லா இடத்திலும் அதிகரிப்பதை பார்த்து தமிழகத்தை தனிநாடாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  அதன் முன்னோட்டமாக பார்ப்பனரல் லாத வர்களின் நலனுக்காக என்று ஆரம் பிக்கப்பட்ட நீதிக்கட்சியின் தலைவரானார்.  அரசியலில் கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலேயே தனது கொள்கையில் இருந்து விலகாமல் இருக்க அரசியலில் இருந்து விலகி திராவிடர் கழகத்தை துவக் கினார். 1937ஆம் ஆண்டு ராஜகோபாலாச் சாரியார் கொண்டுவந்த இந்தித் திணிப்பை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டத்தில் இறங்கினார். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான உரிமைப் போராட்டம், தமிழ் மொழிக்கான சேவை, குழந்தைத் திருமணம் ஒழிப்பு, கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவு தெரிவித்து தானே முன்வந்து தனது குடும்ப கைம்பெண் ஒருவருக்கு மறுமணம் நடத்தி வைத்தது போன்றவை பெரியாரின் புரட்சி களுக்குச் சான்றாக விளங்குகின்றன. பெரியார் சிலை அல்ல, உயிரோட்டமான கொள்கை

(இமாசல்பிரதேசம், சண்டிகர், உத்திரா கண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் வெளியாகும் நவ்ஜீவன் இந்தி நாளிதழில் 8.3.18 அன்று வெளியான செய்தி)

உடைக்கச்சொன்னவரும், உடைத்த வர்களும்  தாங்கள் கைவத்தது ஒரு சிலை அல்ல அது உயிரோட்டமான கொள்கை என்பதை புரியாமல் போனார்கள், சிலையை உடைத்ததன் மூலம் பெரியாரின் கொள் கைகள் மீண்டும் புத்துயிரோட்டம் பெற்றிருக்கிறது. திரிபுராவில் பாஜக வெற்றிபெற்ற உடன் லெனின் சிலை உடைக்கப்பட்டது, அந்தச் செய்தி பரபரப்பாகிக் கொண்டு இருக்கும் போதே, தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த ஒருவர் அடுத்து உடைபட வேண்டியது பெரியார் சிலை என்று கூறி யிருந்தார். உடனடியாக ஒரு பாஜக பிரமுகர் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் சிலையை சேதப்படுத்தினர்.

அதன் பிறகு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு அலை என்பது இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது, யார் இந்த பெரியார்? அவர் மறைந்த இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது கொள்கைகளைக் கண்டு பயப்படும் அளவிற்கு அவர் என்ன செய்தார், அவரை ஏன் இன்றளவும் வலதுசாரிகள், மதவாதக் கொள்கைகளைக் சுமப்பவர்கள் கடுமையான எதிரிகளாக பார்க்கின்றனர்?. லெனின் அம்பேத்கர், இதர பிரபல தலைவர்களை ஓரளவு ஏற்றுக்கொண்ட ஒரு கூட்டம் இன்றுவரை பெரியாரைக் கண்டால் ஏன் அஞ்சுகிறார்கள்?   பெரியாரின் கொள்கை களை முன்னெடுத்துச் செல்பவர்கள் இருக்கும் வரை, சமூகநீதிப்பாதையில் அவரால் பயன டைந்தவர்கள் இருக்கும் வரை ஒரு சிலையை உடைப்பதன் மூலம் பெரியாரின் உன்னதமான கருத்துகளை முடக்கிவிடமுடியாது. பெரியார் குறித்து இந்தியா முழுவதும் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அவர் குறித்து நாம் இங்கே அறிந்துகொள்வது மிகவும் தேவை யான ஒன்றாகும்.  1879 செப்டம்பர் 17 அன்று தமிழ் நாட்டின் ஈரோடு நகரில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார்.. இளமைப் பருவத்தில் இருந்தே மதம், மூடநம்பிக்கை, ஜாதி, சமூக ஏற்றத்தாழ்வு களுக்கு எதிராக குரல் கொடுத்துவந்தார். தமிழகத்தில் இவரை தந்தை பெரியார் என்று அன்போடு அழைக்கின்றனர். பெரியார் என்பதின் பொருள் உயர்ந்த குணமிக்க மனிதர் ஆகும்.  சிறுவயதில் இருந்தே இவர் கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்தாலும் 1904-ஆம் ஆண்டு இவரது வாரணாசி பயணம் அங்கு சன்யாசிகளின் சல்லாபங்களைப் பார்த்த பிறகு இவரை முழுமையாக நாத்திகராக மாற்றியது. தமிழகம் திரும்பிய இவர் பல்வேறு புரட்சிகளைச் செய்தார். அதில் பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப்பெயரை அகற்று வதும் ஒன்று, 1929 ஆம் ஆண்டு மாநாடு ஒன்றில் தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருக்கும் நாயக்கர் என்ற பெயரை அகற் றினார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைவரும் தங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப்பெயரை அகற்றினர். இன்றுவரை யாரும் தங்கள் ஜாதிப்பெயரை பொதுவெளியில் பயன்படுத்து வதில்லை. திராவிடர் கழகத்தை பெரியார் உருவாக் கினார். அதன் அடிச்சுவட்டைப் பின்பற்றியே இன்றுவரை தமிழகத்தின் கட்சிகள் செயல் படுகின்றன. தமிழகத்தில் அரசியல் அடித்தளம் பெரியார் இட்டது, இதன் மீதுதான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களம் எழுந்துநிற்கிறது, இதை மீறி வேறு எந்த அரசியல் கட்சியும் தமிழகத்தில் இன்றும் இனி வரும் காலங்களிலும் தலை யெடுக்க முடியாது. திராவிட தேசியத்திற்கு ஆதரவான பெரியார் திராவிடர் இனப் போராட்டத்திற்கு சுயமரியாதை இயக்கம் ஒன்றை துவக்கினார். இதைத் துவக்குவதன் மூலம் பெரியார் ஒரே களத்தில் இருந்தார் என்று நினைக்க வேண்டாம், அவர் சிந்தனாவாதி, அரசியல் தலைவர், சமூக செயற்பாட்டாளர், பெண்ணிய உரிமைப் போராளி என அவரது செயல் பாடுகள் பரந்து விரிந்துகொண்டே செல் கின்றன. 1919-லிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதன் தலைவராகவும்  உயர்ந்தார். கள்ளுக் கடை மறியல், கதராடை பிரச்சாரம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை தமிழகத்தில் மூலைமுடுக்குகளில் கொண்டு சேர்த்ததில் பெரியார் பங்கு மிக அதிகம். காங்கிரஸ் கட்சியில் உள்ளே காணப்படும் ஜாதிபேதங்களைக் கண்டு காங்கிரஸ் கட்சியி லிருந்து விலகினார். 1939-ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரானார்.   1944ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றி அரசியலில் இருந்து விலகினார். ஆனால் 1949-ஆம் ஆண்டு பெரியாரின் சீடரான அண்ணாதுரை சில கருத்துவேறுபாடுகளால் பெரியாரை விட்டு விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்று அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். பெரியார் நேரடி அரசியலில் இல்லை என்றாலும் அவரது கொள்கைகளே அரசி யலாக அறிஞர் அண்ணாவால் முன்னெடுக் கப்பட்டது. ஆசியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்ட பெரியார் தன்னுடைய காலத் திலும் அதற்குப் பின்பும் சிறந்த புரட்சியாளர், பகுத்தறிவுவாதியாக அறியப்படுகிறார்.   பெரியார் மிகத்தீவிரமான கடவுள் பக்தி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இருப்பினும் பார்ப்பனீய ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தார். பார்ப்பனீய கொள்கை நூல்களை எரித்தார். ராவணனைக் கொண்டாடினார்.  1925-ஆம் ஆண்டு குடியரசு என்ற இதழை வெளியிட்டார்,  தொடர்ந்து தனது சிந்தனைகளை சிறு சிறு நூல்களாக வெளியிட்டார். அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அதில் சச்சி ராமாயண் எனும் இந்தி நூலும் அடங்கும். குழந்தைத் திருமணம், தேவதாசி முறை மற்றும் இந்து வர்ணாசிரமம் முறைகளைக் கடுமையாக எதிர்த்தார்.  விதவை மறுமணம், ஜாதிமறுப்புத் திருமணம், பெண்களுக்கான உரிமைகள் போன்றவற்றை தன்னுடைய வாழ்நாளில் தானே முன்னின்று நடத்திக்காட்டினார்.  24 டிசம்பர் 1973-ஆம் ஆண்டில் பெரியார் காலமானார். ஆனால் அவர் உயிரோடு வாழ்ந்த காலத்திலும் சரி, அவர் மறைந்த பிறகும் சரி அவரது கொள்கைகள், செயல்பாடுகள், போராட்டங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் எதிரொலிக் கின்றன. எதற்குமே கொள்கைகளை விட்டுக் கொடுக்காத பெரியாரின் எழுத்துக்களில் உள்ள தீவிரம் குறித்து பல காலகட்டங்களில் பேசப்பட்டு வந்தது. சிலர் இது மதத்திற்கு எதிரான எழுத்து என்று கூறுகிறார்கள். சிலர் இது தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றதல்ல என்று கூறுகின் றனர். ஆனால் அவர் மறைந்த 50 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்திலும், வலதுசாரிகளுக்கு மிகப் பெரும் ஆபத்தாகவே இருக்கிறார். பெரியார் வழிநடக்கும் தமிழகத்தில் இன்றளவும் அவரது கொள்கைகள் வேரூன்றிப் பரவி இருக்கின்றன.  எங்கு நோக்கினும் அவர் தான் தெரிகிறார். தென் இந்தியாவில் தற்போது மதவாதிகளுக்கு வேலையில்லை என்பதை அவர் சிலைமீது கை வைத்தவர்களுக்கு உணர்த்திவிட்டனர் தமிழர்கள்.

தொகுப்பு: சரவணா ராஜேந்திரன்

- விடுதலை ஞாயிறு மலர், 17.3.18