வெள்ளி, 4 டிசம்பர், 2020

ஜெயவர்த்தனா கொடும்பாவி எரிப்பு

25.01.1988 அன்று ஜெயவர்த்தனா இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு ஜெயவர்த்தனாவின் கொடும்பாவி உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. தோழர்கள் சாரை சாரையாகக் கைது செய்யப்பட்டனர். மேலும், என் தலைமையில் பெரியார் திடலிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாகப் புறப்பட்டு ஜெயவர்த்தனாவே ஒழிக என்று முழக்கப்பட்டு கழகத் தோழர்கள் வந்தபோது, திடீரென்ற போலீசு கழகத் தோழர்கள் மீது தடியடி நடத்தியது. இதனைத் தடுக்க நான் கூட்டத்தின் நடுவில் புகுந்து தடுக்க, என் மீது அடித்து அடிபட்டு, தரையில் விழுந்து என் கால் காயம் ஏற்பட்டது. உடனே கழகத் தோழர்கள் என்னைக் காப்பாற்ற சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்பு தோழர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் திடீரென்று இப்படி நடந்துகொண்டது ஏதோ உள்நோக்கத்தோடு எங்கள் மீது தடியடி நடத்தியது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த அமைச்சர் முத்துசாமி தடியடி சம்பவத்தை முன்னிட்டு தோழர்களிடத்திலும் என்னிடத்திலும் மன்னிப்புக் கோரினார்.

இலங்கை அதிபர் ஜெயவர்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்டரல் ரயில் நிலையத்தில் ஆசிரியர் தலைமையில் மறியல் செய்யும் கழகத்தினர்.

இந்த தடியடி சம்பவத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.

- உண்மை இதழ், ஜூலை, 1 -15 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக