சனி, 15 டிசம்பர், 2018

சென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம்! மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு

நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா?




சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித்துப் புகார் தெரிவித்துள்ளது. மாணவர்கள் கிளர்ச்சிக்கும் தயாராகி விட்டனர்.

சென்னை அய்அய்டியில் ஜாதித் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடி வருகிறது. பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியில்மத்தியஅரசின்மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்கள் பணி நியமனங்களில்  முறையாக இடஒதுக்கீடு கொள்கை நடை முறைப்படுத்தப்படுவதில்லை. பேராசிரியர்கள் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணியிடங் களில் மண்டல் குழு பரிந்துரையின்படி 27 விழுக்காடு பின்பற்றப்படவில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனமே சமூகநீதிக்கு எதிராக  உள்ளது.

உயர்கல்வி பயிலும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு குறிப்பாக வகுப்பு வாதங்களை எதிர்க்கின்ற பெரியார் -- அம்பேத்கர் வாசிப்பு வட்டத்தின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எழுச்சியுடன் எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டு வந்துள்ளது. மாட்டிறைச்சி விருந்து நடத்திய மாணவர்கள்மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. உயர்கல்வி மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

1960 ஆம் ஆண்டுக்குமுன் அமெரிக்காவின் நிலை...




இந்தியா 58 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதோ...!


ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வன்முறைகள் அவ்வப் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தற்பொழுது உணவுக்கூடத்தில் மரக்கறி உணவு உண்பவர்கள் என்றும், இறைச்சி உணவு உண்பவர்கள் என்றும் பாகுபடுத்திடும் போக்கு திணிக்கப்பட்டு, தீண்டாமை கடைப்பிடிக்கின்ற அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் கண்டனம்

சென்னை அய்.அய்.டி. தொழில்நுட் பக்கல்லூரியில் உணவுக்கூடத்தில் தீண்டாமை பின்பற்றப்படுவதாக பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டத்தை சேர்ந்த அக்கல்லூரி மாணவர்கள் (APSC)) புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை அய்.அய்.டி. தொழில்நுட்பக் கல்லூரியின் உணவுக் கூடத்தில் சைவ உணவு மற்றும் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்குதனி நுழைவுவாயிலும் அதேபோல வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை கலக்காத உணவுகளை சாப்பிடு பவர்களுக்கு வேறொரு வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோலசைவ,அசைவஉணவு சாப்பிடுபவர்களுக்குத் தனியாக கைக் கழுவும் இடமும் மற்றும் வாஷ் பேஷி னும் அமைக்கப்பட்டுள்ளதாக பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் புகார் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு திட்டத்தை சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் அமல்படுத்தியது. அதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் அதை கடுமையாக எதிர்த்தது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உணவுக் கூடத்தில் தீண்டாமையை கடைப் பிடிக்கும் வகையில் அசைவ, சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனித்தனி நுழைவுவாயிலை சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்புகளும் உணவுக்கூடத்துக்குச் செல்லும் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளது.

உணவு சாப்பிடுபவர்களில் வேறு பாடு பார்ப்பது மட்டுமில்லாமல், சைவ மற்றும் அசைவ உணவுகளை சமைப்பதற்கு தனித்தனி பாத்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக அங்கு படிக்கும் மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சென்னை அய்அய்டி நிர் வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும்கல்வி நிறுவனமாகிய மும்பை அய்.அய்.டி.யிலும் இதேபோன்ற அவலநிலை கடந்த ஜனவரியில் ஏற்பட்டு மாணவர்களின் எதிர்ப்பு வெடித்துக்கிளம்பியது.

தற்பொழுது அதே அய்.அய்.டி. நிறுவனத்தின் சென்னைக் கல்லூரியில் மரக்கறி உணவு உண்பவர்கள், இறைச்சி உண்பவர்கள் என்று மாணவர்களிடையே பாகுபாட்டைத் திணித்து, கல்வி பயிலும் ஆய்வு மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பி, வகுப்புவாதத்தைத் திணிக்கும் முயற்சியில் அய்அய்டி நிறுவனம் இறங்கியுள்ளது வேதனைக்குரியது.

- விடுதலை நாளேடு, 15.12.18

சனி, 8 டிசம்பர், 2018

கோச்மேன்பக்கத்தில் பெரியாரும் ஜமீன்தாரின் திகைப்பும்

************************************
என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரண சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது 1916 அல்லது 1917இல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய வண்டி வைத்திருந்தேன். ஊத்துக்குழி ஜமீன்தார், ஆனரபிள் சம்பந்த முதலியார் மற்றும் 3, 4 பிரபலஸ்தர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தனர். எல்லோருமாகச் சேர்ந்து ஒரு இழவு வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கப் போக வேண்டியிருந்தது. ஜமீன்தார் முதலிய எல்லோரையும் வண்டியில் அமர்த்தினேன். வண்டியில் மேற்கொண்டு இடமில்லை. நான் ஒருவன்தான் பாக்கி. வண்டி அவர்களைக் கொண்டு போய் விட்டுவிட்டு திரும்பிவர வேண்டுமென்றால் நேரமாகிவிடும். ஆதலால் என்னையும் உடன் வரவில்லையா என்று ஜமீன்தார் கேட்டதற்கு இதோ பின்னால் வருகிறேன் என்று பதில் கூறி வண்டியை விடு என்று சொல்லிவிட்டு அவர்கள் அறியாமலே நான் வண்டி மீதேறி கோச்மேன் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். குறிப்பிட்ட இடத்தை வண்டி அடைந்ததும் அவர்கள் இறங்கவும், கோச்மேன் பக்கத்திலிருந்து நான் இறங்குவதைப் பார்த்து அவர்கள் திடுக்கிட்டார்கள். அன்றையிலிருந்து என்னை அவர்கள் ஒரு படி உயர்வாக மதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஜமீன்தார் என்னைக் கண்டால் பெரிய ஞானி என்று குனிந்து கும்பிடுவார். கோச்மேன் பக்கத்தில் உட்காருவதை நான் கேவலமாக மதிக்கவில்லை, என்பதையும், விருந்தினர்களுக்காக எனது சவுகரியத்தை எந்த அளவுக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்து வருகிறவன் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டதினால்தான் என்னை மிக மேலானவனாகக் கருதத் தொடங்கி விட்டார்கள்.
இப்படி நம் சவுகரியத்தை பிறருக்காக விட்டுக் கொடுப்பது இழிவல்ல. தப்பிதமுமல்ல. நான் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியபோது கூட நான் மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய் வேன். ராஜ கோபாலாச்சாரியாரும், திரு.வி.க.வும் இரண்டாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்கள். திரு. வி. க. அவர்கள் அதற்காக வெட்கப்படுவார். கூச்சப்படுவார். உடம்புக்கு சவுகரிய மில்லாதபோது நீங்கள் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்வது தவறாகாது'' என்று நான் கூறி அவர்களை சமாதானப்படுத்துவேன். மாணவர்கள் இம்மாதிரி இளமை முதற்கொண்டே தம் வாழ்க்கைச் சவுகரியத்தை மிக எளிதாக்கிக்கொள்ள வேண்டும். சாதாரண உணவில் திருப்தி அடையவேண்டும்.
(21.2.1948 அன்று திருச்சியில் நடைபெற்ற வட மண்டல திராவிட மாணவர் மாநாட்டில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து)
- விடுதலை', 29.3.1948

- விடுதலை ஞாயிறு மலர், 8.12.18

வியாழன், 6 டிசம்பர், 2018

பிராமணிசம் என்றால் என்ன? Brahminical Patriarchy 

பிராமணிசம் என்றால் என்ன? என்பதைச் சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.

What Congress and Gandhi have done to the untouchables

இது அம்பேத்கர் அவர்கள் What Gandhi and Congress have done to the Untouchables என்று 1944 ஆம் ஆண்டு எழுதிய புத்தகம் இது.

இந்தப் புத்தகமே ஒரு பொக்கிஷம் எங்களுக்கு. ஏனென்றால், இது பெரியாருடைய புத்தகம். அவர் விலைக்கு வாங்கி, அதிலுள்ள பக்கங்களில் அடிக் கோடிட்டு இருப்பார். இந்தப் புத்தகத்தின் பின்பகுதியில், மிக எளிதாக கூட்டங்களில் சொல்வதற்காக, இந்தப் பக்கத்தில் இந்தத் தகவல் இருக்கிறது என்று பெரியாருடைய கைப்படவே எழுதியிருப்பார். அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து, நீங்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

இதை முழுமையாகப் படிக்கக் கூடிய வாய்ப்பை எனக்கு அரசாங்கம் கொடுத்தது, மிசா காலத்தில் ஓராண்டு சிறையில் இருக்கும்பொழுது.

சென்சார்டு என்று முத்திரை குத்தித்தான் சிறைச் சாலைக்குள் இந்த புத்தகத்தை  கொடுத்து அனுப் பினார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்த புத்தகம் விலை குறைவுதான். 1944 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம்.

பக்திப் போதையைக் கிளப்பிவிடுகிறார்கள்....


What is Brahminism?
Brahminical Patriarchy என்றால், பார்ப்பன வம்சாவளி, பார்ப்பனத் தன்மை இன்றைக்கும் இருக் கிறது. இதனுடைய வெளிப்பாடுதான், கேரளாவில் பினராயி ஆட்சியை ஒழிக்கவேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெறுகின்ற முற்போக்கு ஆட்சியை ஒழிக்கவேண்டும். ஏனென்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது முதல் அனைத்தையும் கொண்டு வந்துவிட்டார்கள். இந்த ஆட்சி நிலைத்தால், அவர்களுக்கு வழியில்லாமல் போய்விடும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று நினைத்தார்கள், அதற் காக பக்தி என்ற போதையைக் கிளப்பிவிட்டால், எல்லோரும் ஏமாறுவார்கள் என்று நினைத்துத்தான் அங்கே அவர்கள் பக்தியைப் பயன்படுத்துகிறார்கள்.

Historically they [Brahmins] have been the most inveterate enemy of the servile classes (Shudras and the Untouchables) who together constitute about 80 per cent of the total Hindu population. If the common man belonging to the servile classes in India is today so fallen, so degraded, so devoid of hope and ambition, it is entirely due to the Brahmins and their philosophy. The cardinal principles of this philosophy of Brahmanism are five: 
(1) graded inequality between the different classes; 
(2) complete disarmament of the Shudras and the Untouchables; 
(3) complete prohibition of the education of the Shudras and the Untouchables; 
(4) ban on the Shudras and the Untouchables occupying places of power and authority; 
(5) ban on the Shudras and the Untouchables acquiring property. 
(6) complete subjugation and suppression of women

இதன் தமிழாக்கம் வருமாறு:

வரலாற்று ரீதியாக பார்ப்பனர்கள் அவர்களாலேயே பிரிக்கப்பட்ட சூத்திரர் மற்றும் தீண்டத்தகாதவர்களுக்குக் கடுமையான எதிரிகள் ஆவார்கள்.  ஆனால் இவர்கள் யாரை எதிரி என்று கூறுகிறார்களோ அவர்கள் இந்து மக்கள் தொகையில் 80 விழுக்காடு உள்ளனர். இன்று இந்தியாவில் பெரும்பாலான இந்துக்கள் அதாவது பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்ட மக்கள், துன்பத்திலும், வறுமையிலும், அடிமைகளாகவும், கூலிகளாகவும்  வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பார்ப்பனர்கள் கொண்டுவந்த பார்ப்பனியக் கொள்கைகள் மட்டுமே காரணமாகும். பார்ப்பனர்களில்

பார்ப்பனியக் கொள்கையில் முக்கியமான அய்ந்து தத்துவங்கள்!


பார்ப்பனியக் கொள்கையில் முக்கியமான 5 தத்துவங்கள் வருமாறு:


பல்வேறு பிரிவு மக்களை சமமாக நடத்தக்கூடாது.


சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் எக்காரணம் கொண்டு நட்புறவு வைக்கக் கூடாது. சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடைப்பதை தடை செய்யவேண்டும்.


சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் அதி காரம் செல்வதை எக்காரணம் கொண்டு அனுமதிக்கக் கூடாது.


சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் சொத்துக்களை வாங்குவதையும், பொது இடங்களில் குடியிருக்கவும் அனுமதிக்கக் கூடாது.


பெண்களுக்கு எக்காரணம் கொண்டு சுதந்திரம் கொடுக்கக் கூடாது; அவர்களை அடக்கியே வைத் திருக்கவேண்டும்.


இன்றைக்கு அடிமை ஜாதிகளில் இருக்கின்ற ஒரு சாதாரண மனிதன், இவ்வளவுக் கேவலப்படுத்தப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்டு, கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றால், இதற்கு ஒரே காரணம், பார்ப்பனர்களும், அவர்களுடைய தத்துவங்களும்தான் என்று மிகத் தெளிவாக அம்பேத்கர் அவர்கள் சொல்கிறார்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்து இரண்டு பேரையும் சண்டை போட விடுகிறார்கள் சிலர். ஆனால், அம்பேத்கர் இணைத்தார். அடிமை ஜாதிகள் என்கிற வார்த்தையை போட்டார். பெரும்பான்மை அவர்கள்தான்.

எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்று சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள்


நண்பர்களே, இப்பொழுது உங்களுக்குப் புரிந்தி ருக்கும். அம்பேத்கர் அவர்கள் சொன்னது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக - இன்றைக்கு சுதந்திரம் வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன.

ஜாதி ஒழிப்பிற்காக நாம் போராடி, இத்தனை உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது.

ஆகவே நண்பர்களே, உங்களை வேண்டிக் கொள் வதெல்லாம், எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்று சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

போர் முறையில், நண்பர்களை எதிரிகளாகக் கருதுவது, எதிரிகளை நண்பர்களாகக் கருதுவது சரியல்ல. அது மிகவும் ஆபத்தானது.

- விடுதலை நாளேடு, 6.12.18
( தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் உரையாடலின் ஒரு பகுதி)

நாணயத்தின் இரு பக்கங்கள்!



டாக்டர்அம்பேத்கர்அமெரிக் காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து இந்தியாவிற்கு - தனது சொந்த மாநிலமான பம் பாய்க்குத் திரும்பிய பின், தன் பிள்ளை, தன் வீடு, தன் சுற்றம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு சுயநலவாழ்வுவாழாமல்,ஒடுக்கப் பட்ட சமுதாய மக்களின் சமத்துவத் திற்கும், சம உரிமைக்கும், சம வாய்ப் புக்கும் திட்டமிட்டே செயலாற்ற அமைப்புகளை உருவாக்கினார்.

குரலற்ற (ஊமையர்களின்)வர்களின் குரல் (மூக் நாயக்) என்று மராத்தி மொழியில் அவர் நடத்திய ஏட்டில், 1924இல் தெற்குத் திருவிதாங்கூர்ராஜ்யத்தில் இருந்த வைக்கம் என்ற ஊரில், உள்ள மகாதேவர்கோயிலின்நான்குவீதி களிலும், ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப் பட்ட மக்களாகிய ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்ற கீழ் ஜாதியார் என்று ஆக்கப்பட்டவர்கள் தெருக்களில் நடக்கக் கூட உரி மையற்று இருந்த நிலையில், அதனை எதிர்த்து அங்கிருந்த அன்றைய காங்கிரசு தலைவர்கள் சத்தியாகிரகத்தை - மறியலைத் துவக்கினர்; அவர்களை அவ்வரசு கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்; அவ்வறப்போரினை ஒடுக்கி விட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் தான், தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் என்ற நிலையில், சிறையில் வாடியவர்களின் கடிதம் கண்டு, உடனே அங்கே சென்று வைக்கம் சத்தியாகிரகத்தை முன்னெடுத்துச் சென்று தொடர் போராட்டமாக்கினார். இருமுறை சிறையும் சென்றார் பெரியார். அவர் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய சமூகப் புரட்சி வர லாற்றில்இப்போராட்டம்தான்முதல் பெரும்போராட்டம்.மனித உரிமை களைப்பெறுவதற்குநடத்தப்பெற்ற போராட்டம். காந்தியார் தந்தை பெரியாரின் இப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனாலும் தந்தை பெரியார் முன்வைத்த காலை பின் வைக்கவில்லை. தந்தை பெரியார்தம் இப்போராட் டத்தினை அறிந்த டாக்டர் அம் பேத்கர் அவர்கள், அவர் அப்போது நடத்திய மூக் நாயக் ஏட்டில் பின்வருமாறு எழுதினார் என்ற செய்தியை அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர் தனஞ்செய்கீர் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

...மிகவும் குறிப்பிடத்தக்க போராட்ட நிகழ்வொன்று 1924-ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கத்தில் பார்ப்பனர் அல்லாதார் தலைவரான ராமசாமி நாயக்கர் நடத்திய போராட்டம்தான் அது. வைக்கத்தில் உள்ள கோவி லைச் சுற்றியுள்ள சாலைகளில் தீண்டத்தகாதோர் நுழையக் கூடாது எனும் வழக்கத்தினை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமாகும்; போராட்டம்ஏற்படுத்தியதார்மீக தாக்கமும், சரியானது செய்திடப்பட வேண்டும் என்ற நினைப்பும் வைதீகப் போக்குடைய இந்து மதத்தவரிடம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது. குடிமைப் பொறுப் பும், புத்திசாலித்தனமும் இணைந்து உணரப்பட்டதால் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் தீண்டத் தகாதோர் நடந்துசெல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அம்பேத்கர் இத்தகைய நிகழ் வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். மகத் குளம் - இறங்கும் போராட்டத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு தமது பத்திரிகையில் வைக்கம் போராட்டத் தைப்பற்றி மிகவும் உருக்கமாக மன தைத் தொடும் வகையில் தலை யங்கம் தீட்டியிருந்தார். இவை குறிப் பிடத்தக்க நிகழ்வுகளாக அமைந்தன என்று எழுதப்பட்டுள்ளது.

பாபாசாகிப் அம்பேத்கர், தந்தை பெரியார் இருவரது பார்வையும் சமூக விடுதலையை நோக்கியே இருந்தது ஆகையால் தான் இருவரையும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறுகிறோம்.

இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் (1956).

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 6.12.18

புதன், 5 டிசம்பர், 2018

சேரன்மாதேவி குருகுல போராட்டம்

1924 இல் சேரன்மாதேவி குருகுலம் நடக்கிறது. நம்மைப் போன்றவர்கள் பிறக்காத ஒரு காலகட்டத்தில்.

வ.வே.சு.அய்யர் அவர்கள் இங்கிலாந்திற்குச் சென் றெல்லாம் புரட்சி செய்துவிட்டு வந்தவர். அப்படிப்பட்ட புரட்சி வீரர், தேசிய குருகுலம் நடத்தினார். பார்ப்பன மாணவர்களுக்கு தனி சாப்பாடு; நம்முடைய மாணவர் களுக்கு திண்ணையில் பழைய சோறுதான்.

நயினா, நயினா எங்களையெல்லாம் கேவலப்படுத்துகிறார்கள்''


இதையெல்லாம் பார்த்துவிட்டு, ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியாருடைய அண்ணார் மகன், அழுதுகொண்டே வந்து, நயினா, நயினா எங்களையெல்லாம் கேவலப் படுத்துகிறார்கள்'' என்றார்.

இதைப்பற்றி யாரிடம் சொல்வது? பெரியாரிடம் சொல்லுங்கள் என்றார்.

இராஜகோபாலாச்சாரியாரிடம் சென்று, என்னங்க, நாமெல்லாம் தேசியம்பற்றி பேசுகிறோம்; நாம் பணம் கொடுக்கிறோம்; இதுபோன்று நடக்கிறதே?'' என்று சொல்ல,

உடனே இராஜாஜி, அப்படியெல்லாம் இருக்குமா? என்று தெரியவில்லை. அதுபற்றி விசாரிப்போம்'' என்றார்.

அந்தப் பிரச்சினையால் பார்ப்பனர் - பார்ப்பன ரல்லாதார் கோடு விழுந்துவிட்டது.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத பிரச்சினையை வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று


பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை, பெரியாரோ, திராவிடர் இயக்கமோ உண்டாக்கவில்லை. முழுக்க முழுக்க வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று. அதுதான் அந்தப் பேதத்தை உருவாக்கியது.

நாங்கள் ஒத்துப் போகவேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் ஒத்துப் போவதில்லையே. படித்தவன், படிக்காதவன், லவுகீக பார்ப்பான், வைதீகப் பார்ப்பான் என்று வித்தியாசம் இருக்கும். அதிலேயும் இரண்டு தலைவர்களுக்கும் வேறு வேறு கருத்து. அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கடைசியாக சமரசம் செய்வதற்காக  தேசப் பிதா காந்தியாரிடம் செல்கிறது.

பெரியாரைவிட மிகக் கடுமையாக இருந்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் மென்மையானவர். காந்தியாரிடம் போய் சொன்னார்கள்,

காந்தி, வருணாசிரம தர்மத்தில் நம்பிக்கைக் கொண்டவர். எப்பொழுது அதை தவறு என்று நினைத் தார் என்றால், கடைசி காலத்தில்தான்.

அதனால்தான் பெரியார் சொன்னார், வாழ்ந்த காந்தி வேறு; சுட்டுக்கொல்லப்பட்ட காந்தி வேறு. இரண்டு காந்திகள். காரணம் பின்னாளில்தான் அவர் பார்ப்பனர்களைப்பற்றி உணர்ந்தார் என்று.

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் தகராறு ஏற்பட்டு, கடைசியாக காந்தியாரிடம் சென்றது.

இந்து' பத்திரிகையின் நூற்றாண்டு மலர்


இன்றைய இளைய தலைமுறையினரும், தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் - என்னுடைய கைகளில் இருக்கின்ற ஆதாரம், One hundred years of the Hindu இந்து' பத்திரி கையினுடைய நூற்றாண்டு மலர் இது. இப்பொழுது அதற்கு வயது 140. பெரியாருடைய வயதும், இந்து நாளித ழுனுடைய வயதும் ஒன்று.

40 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட புத்தகம் இது. இதை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பி நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதில் உள்ள ஒரு முக்கியமான செய்தியை மட்டும் சொல்கிறேன்.

A Social reform question which figured in the columns of The Hindu in April, 1925, was the controversy over the functioning of the Tamil Gurukula Vidyalaya at Shermadevi  in Tinnevelly District conducted by V.V.S.Aiyer, onetime revolutionary and associate of Bharati. Dr.Varadarajulu Naidu and other non-Brahmin leaders had objected to non-Brahmin boys of the institution being asked to take their meals separately. The matter went to Gandhiji who advised interdining but employment of Brahmin cooks. Dr.Varadarajulu Naidu was not satisfied with this arrangement as he did not like the condition about employing Brahmin cooks. He asked for the return of money subscribed to the funds of the Gurukula. 
In a letter published in The Hindu on April 15,  V.V.S. Aiyer said, that except in the case of two Brahmin boys in the case of all other Brahmin and non-Brahmin students there was common dining, and the made it clear that no Brahmin taken into the Gurukula thereafter would be given any exemption from the general mess

இதன் தமிழாக்கம் வருமாறு:

சமூகப் புரட்சியின் ஒரு குரலாக ஏப்ரல் மாதம் 1925 இந்து ஆங்கில இதழில் வெளியான ஒரு செய்தி முக்கியமானதாகவும் விவாதப்பொருளாகவும் மாறியது, சேரன்மாதேவியில் உள்ள தமிழ் குருகுல வித்யாலயா என்ற பள்ளியில் ஒரு தீண்டாமை கொடுமை அரங்கேறியது தொடர்பான செய்தியாகும். அந்த பள்ளியை நடத்தியவர் வ.வே.சு அய்யர்   இதன் புரவலராக சுப்பிரமணிய பாரதி, டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர் உள்ளனர். அந்தப் பள்ளியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு வெளியில் உள்ள திண்ணையில் வைத்து அவர்கள் கொண்டுவந்த இலையிலேயே உணவு உண்ணவும், அவர்களுக்கு பார்ப்பனர்கள் பரிமாறாமல் அவர்களே உணவை எடுத்துக் கொள்ளவும் கூறப்பட்டனர். அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி அறையில், பார்ப்பனர்களால் சுவையான உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பாக காந்தியாரிடம் புகார் கூறப்பட்டது, உடனடியாக காந்தியார் பள்ளிக்குக் கொடுத்த நிதியை திருப்பிக் கொடுக்குமாறு கூறினார். இதற்கு விளக்கமளித்த வ.வே. சுவாமிநாத அய்யர், சில காரணங்களுக்காக இரண்டு பார்ப்பனர் மாணவர்களுக்கு மட்டுமே தனியாக உணவு படைக்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட நாளில் மட்டும்தான். மற்றபடி பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் ஒன்றாகவே ஒரே இடத்தில் அமர்ந்து உணவு உண்டு வருகின்றனர் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

காந்தியாருடைய சமரசம் தோல்வி


இந்தப் பிரச்சினை காந்தியாரிடம் சமாதானத்திற்காக வந்தது.

அப்பொழுது காந்தியார் என்ன சொல்கிறார் என்றால்,

அங்கேயும் ஜாதியைத்தானே கொண்டு வருகிறீர்கள். நான் ஒத்துக்கொள்ள முடியாது என்றார். இந்தத் தகராறு தீரவில்லை. காந்தியாருடைய சமரசமே தோல்வி அடைந்துவிட்டது.

Speaking at the public meeting at salem E.V.Ramasamy Naicker said, they must settle the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called ‘‘Brahmnocracy''.

இதன் தமிழாக்கம் வருமாறு:

இது தொடர்பாக சேலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசும் போது, பார்ப்பனர்களின் ஆதிக்கம் மோசமானது, ஆங்கிலே யர்களின் அரசாங்கம் முடிவதற்குள் பார்ப்பனர்களின் அதிகாரத்தை அடக்கவேண்டும். இல்லையென்றால். ஆங்கிலேயர்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் சுதந்திரம் குடியரசாக இருக்காது  -டெமோக்கரசி அது பார்ப்பனரின் ஆதிக்கம் அதாவது பிராமினோகரசியாக இருக்கும் என்று எச்சரித்தார்.

Brahmnocracy என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார் பெரியார்


பெரியார் திண்ணைப் பள்ளிக்கூடம்தான் போனவர். இங்கிலீசு மொழிக்கே ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து என்பதுதான் மிக முக்கியம். இதுவரையில் நாம் Aristocracy, Democracy என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். பெரியாருடைய சிந்தனை பாருங்கள், Brahmnocracy என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார்.

Democracy-க்கு என்ன  விளக்கம்? A Government of the People; for the People; by the People என்பதுதான்.

Brahmnocracy-க்கு  என்ன  விளக்கம்? A Government of the Brahmins; for the Brahmins; by the Brahminsஎன்பதுதான்.

சுதந்திரம் வந்ததும் இதே நிலைதான். இவனிடமிருந்த அதிகாரம் அவனிடம் சென்றிருக்கிறது. அவனாவது கொஞ்சம் நியாயமாக நடப்பவன். ஆனால், அவனைவிட இவன் மோசமானவனாயிற்றே. எதற்கோ பயந்துகொண்டு, எதிலோ காலை வைத்ததுபோல ஆகிவிட்டதே என்று சொன்னார்.

இன்றைக்கு என்ன சூழல்? என்பதை தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

-  விடுதலை நாளேடு, 5.12.18

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பேசிய உரையின் ஒரு பகுதி

தேவதாசி ஒழிப்பு

#தேவதாசி

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம்  சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.

இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.

இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?

#கிருஷ்ணவேணி