ஞாயிறு, 27 நவம்பர், 2016

அன்னை நாகம்மையார் நினைவு நாள் (11.5.1933)



நாகம்மாள் மறைவு   -  தந்தை பெரியார்

எனதருமைத் துணைவி, ஆருயிர் காதலி நாகம்மாள் 11.05.1933-ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப் படுவதா? மகிழ்ச்சி அடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.
எப்படி இருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷ காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை.
நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத் திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டு தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறை யின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.
ஆனால், நாகம்மாளோ பெண் ணடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாவும் சாஸ்திர புரா ணங்களில் எவ்வளவு கொடுமையாக வும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந் ததோ அவற்றில் ஒன்றுக்கு பத்தாக நடந்துக்கொண்டிருந்தாள் என்பதை யும் அதை நான் ஏற்றுக் கொண்டி ருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன். நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக் கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவது ஒரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொது நல சேவையில் ஈடுபட்டபிறகு பொதுநல காரியங்களுக்கும் சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசில் இருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.
ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற் றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட் டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில் லையே!
எல்லாம் நன்மைக்கே
எது எப்படி இருந்தபோதிலும் நாகம்மாள் மறைவு ஒர் அதிசய காரிய மல்ல. நாகம்மாள் இயற்கை யெய்தினாள். இதிலொன்றும் அதிசயம் இல்லை. நாகம்மாளை அற்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம் மாளுக்கு 48 வயதே ஆனபோதிலும் அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறையான போதிலும் இந்திய மக்களில் சராசரி வாழ்நாளாகிய  இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்லவேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழ வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி, நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும் லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகின் றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.
எப்படியெனில், எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக்கூடும். ஆதலால் நாகம் மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத்தொல்லை ஒழிந்தது என்கின்ற உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது.
இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபமான காரியத்துக்கும் பயன்படுத்தி கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ, எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்தி கொள்ள மாட்டாள். அதற்கு நேரெதிரிடையாக்கு வதற்கே உபயோகித்து கொள்வாள். ஆதலால்  நாகம்மாள் நலத்தைக் கோரி யும் நாகம்மாள் எனக்குமுன் மறைந்தது எவ்வளவோ நன்மை.
என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுசெய்யமுடியாத நஷ்டமென்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயம் அல்ல. அவர்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். ஆனால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நல மென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டு சுற்றுப்பிரயாணம் காரணமாய் ஒரு வருஷகாலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது, ரஷ்ய யாத் திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வருமென்று கருதியது.
மூன்றாவதாக, நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின், ஒவ் வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம் ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்கு கூற்றாக நின்றது. என்றால் இனி இவற்றை விட மேலானதான பிரிவு ஆபத்து, பொரு ளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்படயிருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருது கிறேன். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பு இருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் (சங்கராச்சாரி யார் போல) - (அவ்வளவுக்கு ஆடம் பரத்துடன் அல்ல) - (பண வசூலுக்காக அல்ல) -  சஞ்சாரத்திலேயே சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டு மென்றும் நமக்கென்றும் ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடா தென்றும் கருதி இருந்ததுண்டு. ஆனால் இதற்கு வேறு எவ்வித தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாக இருந் தாள்.
இப்போது அந்த தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையை  தருவதாகுக.
குடிஅரசு - தலையங்கம் - 14.05.1933
-விடுதலை,11.5.15

பெரியார் கருத்துக்கள்-டில்லி பார்வேர்டு பிரஸ் இதழ் படப்பிடிப்பு

பார்ப்பனிய ஆதிக்கத்தை சாமானிய மக்களிடமும் கொண்டு சென்று
மகத்தான வெற்றி பெற்ற மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார்!
பெரியார் கருத்துக்கள் இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவையே!
இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும்

டில்லி பார்வேர்டு பிரஸ் இதழ் படப்பிடிப்பு

புதுடில்லி, ஜூன் 12_ பார்ப்பனிய ஆதிக்கத்தைச் சாதாரண மக்களிடமும் கொண்டு சென்று மிகப் பெரிய வெற்றியை ஈட்டி யவர் தந்தை பெரியார் அவர் கொள்கைகள் இன்றைக்கும் தேவையே இந்தியா முழுமையும் கொண்டு செல்ல வேண் டும் என்று டில்லியிலி ருந்து மாதம் இரு முறை வெளி வரும் இந்தி- இங்கிலீஷ் - இரு மொழி களிலும் வெளிவரும்  ‘Forward Press’ ஏடு ஆய்வு நோக்கோடு எழுதியுள் ளது.
அதிகரித்துவரும் இந் துத்துவ வெறி, வர்ண பேதம், அரசியலில் புகுந் துவிட்ட காவிக்கொள்கை களின் தாக்கத்தால் நடு நிலைவகிக்கும் மக்களும், சமூக அமைதியை விரும் பும் மக்களும் தற்போது பாபாசாகிப் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு சோச லிச கொள்கைகளை உயிர்மூச்சாக கொண்டு தூய நாத்திகனாக திகழ்ந்த பகத் சிங் போன்றோரின் கருத்துகளை மீண்டும் புதுப்பிக்கவேண்டிய காலத்தை உணர்ந்துள் ளனர்.
இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஜாதி பேதத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஒரு பிரிவினர் துண்டாடி தங்கள் பிழைப்பை நடத்திவந்தனர், இதனால் கடந்த நூற் றாண்டுவரை இந்தியா வில் சமூக ஒற்றுமை இல்லாமலிருந்தது, அடி மைத்தனமே ஜாதிரீதியாக மேலோங்கி இருந்தது.  இவற்றை எல்லாம் கண்டு பொங்கி எழுந்தது சமூக நீதியை மீட்டுக் கொடுத் தவர்களில் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா புலே போன்றோருடன் தென் இந்தியாவில் புகழ் பெற்ற ஈ.வெ.ராமசாமி என்ற பெயர் கொண்ட தந்தை பெரியாரும் முக்கியமானவர்.
வட இந்தியாவில் மிகவும் குறைந்த அளவு மக்களே ஈ.வெ.ராமசாமி என்ற பெரியாரை அறிந் துள்ளனர். தென் இந்தி யாவில் தந்தை பெரியார் என்ற பெயரை மக்கள் அதிகம் அறிந்திருக்கின் றனர். பெரியார் தென் இந்தியாவில் திராவிடர் கழகத்தை உருவாக்கியவர், திராவிடர் கழகத்தின் மூலம் பார்ப்பனரல்லாத மக்களை ஒன்றிணைத்த வர், சமூகத்தில் நிலவிவந்த ஜாதிபேதம், சமூகக் கொடுமை பெண்ணடிமை போன்றவற்றை துணிந்து நின்று எதிர்த்தார். அக் காலகட்டத்தில் ஜாதிய வாதம் வேர்விட்டு தனது கொடிய நச்சுக்கிளைகளை பரப்பிய வேளையில் பெரியாரின் பணி துவங் கியது.
சுயமரியாதை என்னும் ஆயுதம்  பெரியாரின் முதல் வேலை நச்சுக்கிளை களைப் பரப்பிவந்த வர் ணாஸ்ரம ஜாதிபேத மரத்தின் வேரை வெட்டி எரித்துப் பொசுக்கவேண் டிய கட்டாயமிருந்தது. அது அவ்வளவு எளிதான வேலையில்லை, தனது வீட்டில் இருந்து ஆரம் பித்து தனது ஊர் நகரம் மாவட்டம் என நீண்ட பெரும் போராட்டத்தை சந்திக்கவேண்டி இருந்தது. பெரியார் சுயமரியாதை என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தார்; அவர் கூறினார் ஒருவன் தனக்கு எவ்வளவு மரியாதையை எதிர்பார்க்கிறானோ அதையே மற்றவருக்கும் கொடுக்கவேண்டும் என்று நினைக்க வேண் டும். சுயமரியாதை இயக் கம் ஒரு புரட்சிகர இயக்க மாகும், சமூக நீதி என்பது உட்கார்ந்து தன்னுடைய எஜமானர்களிடம் கெஞ் சிப் பேசி பெறும் ஊதியம் கிடையாது, புரட்சியால் மலரவேண்டிய மாற்றம் என்று பெரியார் கூறினார்.
மேலும் அவர் கூறிய தாவது, உலகில் திருத்த முடியாதவை மிகச்சிலவே அதில் முக்கியமானவை பார்ப்பன சித்தாந்தம் _ அவர்கள் கொடுத்த இந்து மதம் என்று அடித்துக் கூறினார்.
உண்மையைச் சொல்ல அவர் எந்த இடத்திலும் தயங்க வில்லை, அதே நேரத்தில் தான் கூறியதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கூறினார். அரசியல் விழிப்புணர்வு 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்ததில் இந்தியா முழுவதும் அரசியல் விழிப்புணர்பு, சமுக நீதிப் போராட்டம், நிறைந்தி ருந்தது. எந்த இடத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக் கமே மேலோங்கி இருந் தது.
1870 முதல் 1900 வரை கல்லூரியில் படித்து வெளிவரும் மாணவர் களில் 80 விழுக்காடு பார்ப்பனர்களே இருந் தனர். மீதமுள்ளவர்களில் உயர் ஜாதியினர் ஆக்கிர மித்திருந்தனர். ஆனால்
இந்தியா முழுவதும் பெரியார் தேவை
1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் உதித்த பெரியார் என்னும் பகுத்தறிவுப் பகலவன் தன்னுடைய  மரணத்தின் சில நாட்கள் முன்கூட 94 வயதிலும் தன்னுடைய கொள்கைகளைப் பரப்புவதிலும் மக்களுக்காக வாழ்வதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். பெரியாருக்கு யுனஸ்கோ அமைப்பு 1970-ஆம் ஆண்டு தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தைக் கொடுத்து சிறப்பித்தது. பெரியார் போன்ற தலைவர்களின் கருத்துக் களால் இன்று இந்தியா சமூக நீதிக்களத்தில் முன்னேற்றம் பெற்று வீரநடைபோடுகிறது.  தற்போது இந்துத்துவக் கொள்கைகளைக் கொண்ட ஆட்சியாளர்களால் சமூக நீதிக்கு சிறிது பின்ன டைவு ஏற்படத் துவங்கியுள்ளது. இந்தக் கால கட்டத்தில் பெரியாரின் கருத்துக்களை மீண்டும் உயிரூட்டம் கொடுத்து இந்தியா முழுவதும் கொண்டு செல்லக் கடமைப் பட்டுள்ளோம்.

சுதந்திரப்போராட்டத்தில் பார்ப்பனர்களின் பங்கு 3 விழுக்காடு மாத்திரமே இருந்தது. 1912-ஆம் ஆண்டில் 55 விழுக்காடு துணை மாவட்ட ஆட்சியாளர்கள், 82 விழுக்காடு நீதிபதிகள், 72 விழுக்காடு நகர நிர்வாக அதிகாரிகள் பதவியில் பார்ப்பனர்களே நிறைந் திருந்தனர். ஆனால் சமூகத்தில் பார்ப்பனரல்லாதோர் மிகவும் அதிகமாக இருந்தனர். அதேபோல் 80 விழுக்காடு பார்ப்பனர்கள் ஆங்கிலவழிக் கல்விகற்று ஆங்கிலேயே அரசாங்கத்தில் பெரும்பான்மையான பதவிகளைப் பெற்றிருந்தனர். இந்த நேரத்தில் பெரியார் தனது இயக்கத்தின் மூலம் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் கல்வி முதல் எல்லாப் பதவியிலும் இட ஒதுக்கீடு வேண்டுமென்ற போராட்டத்தில் இறங்கினார். போராட்டத்தின் அதிர்வு ஆங்கிலேய அரசாங்கத்தை அசைத்துப் பார்த்தது. இதன் விளைவாக 1928-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் (தற்போது தமிழ்நாடு, ஆந்திரா,தெற்கு கர்னாடகா, கேரளா அடங்கிய பகுதி) இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது. இந்தியாவில் முதல்முதலாக சமூகநீதிக்கான ஒரு போராட்டம் வெற்றிப் பாதையை திறந்து வைத்தது. பெரியாரால் திறந்து வைக்கப்பட்ட இந்த வெற்றிப் பாதை!
பெரியாரால் திறந்துவைக்கப்பட்ட இந்த வெற்றிப்பாதையில் வீரநடைபோட்டு பார்ப் பனரல்லாதமக்கள் ஒன்றுதிரண்டு தங்கள் உரிமைக்காக பெரியார் தலைமையில் போராட ஆரம்பித்தனர். இதன் விளைவாக இந்தியாவெங்கும் சமூகநீதிக்கான போராட்டம் பற்றிக் கொண்டது, அரசுகள் வேறு வழியின்றி பிற்படுத்தப்பட்ட, மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வகுக்கமுன்வந்தது.
பெரியார் எந்த ஒரு இடத்திலும் தம்மக்களுக்கான உரிமையை மீட்டுத்தர பின்வாங்கியதில்லை, பெரியார் தீவிர கடவுள் மறுப்பாளர், தான் கடவுள் மறுப்பாளராக இருப்பினும் கோவில்களில் பூசைசெய்யும் உரிமையை பார்ப்பனர்கள் மட்டும் வைத்திருப்பதை கடுமையாக எதிர்த்தார். பார்ப்பனரல்லாதவர்களும் கருவறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமைக்காக இறுதிமூச்சுவரை போராடினார்.
இந்துமதத்தில் உள்ள வேதங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவை தான் ஜாதிபேதமுறையை பரப்பும் முக்கிய கருவிகள் என்பதை அறிந்துகொண்ட பெரியார் அந்த புராணப்புரட்டு நூல்களில் புதைந்துள்ள மோசடிகளை மக்களிடையே கொண்டு சென்றார். பெரியார் மற்றும் திராவிடர் கழகம் இந்த நூல்களில் மறைந்துள்ள பிரிவினைவாதக் கருத்துக் களை சாமானியமக்கள் வரை கொண்டு சேர்த்தனர்.  மக்களிடையே ஏற்படுத்தும் ராமாயணப்புரட்டு என்ற நூலையே திராவிடர்கழகம் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியது. பெரியார் ஆரியர் களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போராட்டமே ராமாயண கதையாக மாற்றப்பட்டது என்று அடித்துக் கூறினார். பிற்காலத்தில் பல்வேறு ஆய்வுகளின் மூலம் பெரியாரின் கூற்று உண்மையாக நிரூபிக்கப்பட்டது.
ராவண காவியம்
ராவணனே ராமாயண நாயகன் என்று திராவிடர் கழகம் மக்களிடையே கொண்டு சென்றது; இதற்காக பல நூல்கள் வெளிவந்தன. அதில் ராவண காவியம் என்ற நூலும் முக்கியமானதாகும். திராவிடர் கழகம் குறித்து ஆய்வு செய்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கூறும் போது திராவிடர் கழகம் ராவணனை திராவிடர்களின் நாயகனாக மக்களிடையே சித்தரித்தது. ஆரியர்களால் மறைத்து எழுதப்பட்ட ராவணனின் உண்மையான குணநலன்களை ராவணகாவியத்தில் வெளிக் கொணர்ந்திருந்தது, அதே போல் ராமனின் அயோக்கியத்தனத்தையும் மக்களிடையே பரப்பினர். (புலவர் குழந்தையால் எழுதப்பட்டது இராவண காவியம்). பெரியார் மூடத்தனம், மதத்தின் பெயரால் நடைபெறும் மூடநம்பிக்கை செயல்கள் மற்றும் மதநம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தார்.
அதே நேரத்தில் நவீன அறிவியல் குறித்து ஆர்வத்துடன் பல்வேறு கருத்துக்களை மக்களிடையே வைத்தார். மக்களின் உழைப்பால் வந்த பணத்தை மத நம்பிக்கையின் பெயரால் வீணாக்குவதை கடுமையாக எதிர்த்தார். பெரியார் தனது கருத்துக்களை சாமான்ய மக்களிடையே எளிமையாகக் கொண்டுசேர்க்கும் வகையில் தமிழ் மொழி நடையை எளிமையாக்கினார்.    சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது, பெரியாரின் கனவை நனவாக்கினார்கள். அண்ணாதுரை மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றினார்.
பெரியாரின் சிந்தனையில் எழுந்த புரட்சிகர திருமணமான சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக இயற்றினார். கலைஞர் கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைச் சட்டமாக்கினார்.
பெண் விடுதலையும் பெரியாரும்
பெரியார் ஆயிரம் நூற்றாண்டுகளாக சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளை களையத்தவறவில்லை. கற்பு புனிதம் போன்றவைகளின் பெயர்களால் பெண்களை அடிமைப்படுத்தும் முறையைக் கடுமையாக எதிர்த்தார். கற்பு புனிதம் என்பது பெண்களுக்கு மட்டும் என்று எப்படி சொல்ல முடியும் என்று  பெண்ணடிமைத்தனத்தை ஆண்டாண்டு காலமாக வைத்திருக்க காரணமே இந்த கற்பு புனிதம் போன்றவை தான் என்று கூறினார்.
ஆண்களுக்கு இணையாக பெண்களும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். கல்வி, வேலை போன்றவற்றில் ஆண்களோடு பெண்களும் சரி சமமாக இருக்கவேண்டும் என்று கூறினார். திராவிடர்கழகம் பெண்ணடிமைகளை ஒழிக்க பெரும் போராட்டமே சமூகத்தில் நடத்தியது அதன் பலனை இன்று தென்னகத்துப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாதா சாவித்திரிபாய் புலேவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பெரியார் அவர் செய்ய மறந்த பல்வேறு பெண்ணுரிமைப் புரட்சிகளை தமிழக மண்ணில் நடத்திக் காட்டினார்.
தந்தை பெரியாரின் தன்னுடைய போராட்டங்களின் பலனை தனது கண்ணால் கண்டு மகிழ்ந்தார் பெரியார் போன்று உலகில் மிகச்சில தலைவர்களே உண்டு, பெரியார் தன்னுடைய கொள்கையில் எந்த அளவிலும் பிசகாமல் தன்னுடைய புரட்சிப் பயணத்தை தொடர்ந்தார். - சத்ய சாகர், சமூக சேவகர், பத்திரிகையாளர்,  தலைநகர் டில்லியில் இருந்து வெளிவரும் பார்வேர்ட் பிரஸ் என்ற இருமொழி மாத இதழின் ஜூன் பதிப்பில் எழுதியது


ஞாயிறு, 20 நவம்பர், 2016

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்!


செங்கற்பட்டு மாவட்டம், மதுராந் தகம் அருகில் உள்ள கோழியாளம் என்னும் சிற்றூரில் 07.07.1859 அன்று, இரட்டைமலை---ஆதிஅம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார் இரட்டைமலை சீனிவாசன். சீனி வாசனின் குழந்தைப் பருவத்திலேயே இவரது குடும்பம் விவசாயக் கூலியாக தஞ்சை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தது.
தஞ்சை மாவட்டத்தில் திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வி யையும், உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தும் படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார்.அதன் பிறகு கோயம் புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்டோரில் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.
நீலகிரியில் கிழக்கிந்தியக் கம்பெனியில் 1882 ஆம் ஆண்டு எழுத்தர் பணியில் சேர்ந்தார். ரெங்கநாயகி என்பவரை 1888 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஒரு மனிதன் சமுதாயச் சிந்தனை யாளராக, -சீர்திருத்தவாதியாக,- போராட் டக்காரராக -உருவாக அந்த மனிதன் இளமையில் பட்டத் துன்பங்களும், அடைந்த அவமானங்களும், அனு பவித்த கொடுமைகளும் காரணமாக அமைகின்றன. இரட்டைமலை சீனிவாசன், தான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையின்போது அடைந்த துன்பங்களும், சாதிக் கொடுமைகளும் நாளடைவில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டின.
இரட்டைமலை சீனிவாசன் 1904 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கு நேட்டால் நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது காந்தியடிகள் அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து இடக்காரண மாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன். தென்னாப்பிரிக்காவில் 1920 ஆம் ஆண்டுவரை பணி புரிந்தார்.
இரட்டைமலை சீனிவாசன் 1923 முதல் 1938 வரை சட்டமன்ற நியமன உறுப்பினராகச் செயல்பட்டார். தாழ்த் தப்பட்ட மக்கள் மற்றவர்களுக்குச் சமமாகப் பொதுச் சாலைகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், பொது இடங் களிலும், கட்டடங்களிலும் நுழையவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் கூடிய சட்ட நிர்ணய சபையில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார்.
தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்க தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார். சென்னை மாகாணம் தழுவிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க அதிகமான விடுதிகளும், கல்வி உதவிப் பணமும், மற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆரம்பக் கல்வி, இல வசமாகவும் கட்டாயமாகவும் தாழ்த் தப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டுமெனில், தனிப் பள்ளிகள் திறக்கப்பட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை முன் வைத்து முனைப்போடு செயல்பட்டார்.
சென்னை விக்டோரியா மண்ட பத்தில் 07.-10-.1895- அன்று ஓர் மாநாட் டைக் கூட்டினார். அம்மாநாட்டின் மூலம், அரசுத் துறைகளில் தாழ்த்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும், அரசியல் உரிமைகளை அனுபவிக்கவும், சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிடவும், அரசாங்க அலுவலகங்களில் இடம் பெறவும், விமானம், கடற்படை, இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றிட வும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வேண்டும் என்று கூறினார்.
சென்னை-- மயிலாப்பூரில் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் பிராமணர் தெருவில் தாழ்த்தப்பட்டோர் உள்ளே வரக்கூடாது- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்ற வும், சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண் டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுநரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப் பட்ட ஜாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் 28.04.1894 ஆம் நாள், தமது தலைமையில் நிலப் போராட்டத்தை இரட்டை மலை சீனிவாசன் துவக்கினார். இப்போராட் டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய அரசு நிலம் அளித்தது. இந்நிலத்திற்கு பஞ்சமி நிலம் என்ற பெயரும் வைத்தது! தாழ்த்தப் பட்ட மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில அரசு உதவித்தொகை வழங்கவேண்டும். ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் வயதை ஏனைய, வேறு ஜாதியினர் வயதுடன் ஒப்பிடக்கூடாது; வறுமை, ஏழ்மை ஆகிய காரணங்களால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள், குறிப் பிட்ட வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத காரணத்தால், வயது வரம்பை தளர்த்திட வேண்டும் என்று அப்போதைய பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை வைத்தார்.
தீண்டாமையை அடியோடு ஒழிப் பதற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தார். தீண்டாமைக் கொடுமை புரிபவர் எவராக இருந்தா லும் அவர்களுக்கு அபராதம் விதிப்ப தோடு, தண்டனை அளித்து அவர் களைச் சிறையில் அடைக்கவேண்டும் என்று கடுமையாக சட்டமன்றத்தில் பேசினார். சிறையிலும் ஜாதிப் பாகுபாடு நிலவியதை கண்டித்ததுடன், குற்றவாளிகளில் உயர்ந்தவன், தாழ்ந் தவன் என்று பார்க்காமல் அனைவ ரையும் சமமாக நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்.
தமிழக சட்டமன்ற மேலவையில், பல ஏழை மக்களின் உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும்  என்ற தீர்மானத்தை இரட்டைமலை சீனி வாசன் கொண்டுவந்தார். மேலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், விழா நாள் களிலும், அரசு விடுமுறையின் போதும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார். ஏழை எளிய மக்கள் மதுவுக்கு அடிமையாகி, தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனரே என மனம் வருந் தினார்.
இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரும்பாடுபட்டார்.
இங்கிலாந்தின் இலண்டன் மாநக ரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியா விலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் பேசுகிற போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டா மைக் கொடுமை ஒழியும். சட்ட மன்றத்திலும், ஆதிதிராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும் -என்று வலியுறுத்தினார்.
லண்டனில் நடைபெற்ற இரண்டா வது வட்டமேசை மாநாட்டில், டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனி வாசனும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க கொண்டு வந்த தனித் தொகுதி முறையை காந் தியார் கடுமையாக எதிர்த்து புனேவில் பட்டினிப் போராட்டம் மேற்கொண் டார். இறுதியில் காந்தியாரின் உயிரைக் காப்பாற்ற வேண்டி, காந்தியாரின் விருப்பத்துக்கு விட்டுவிட்டார் அம் பேத்கர். அது பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. டாக்டர் அம் பேத்கரும், இரட்டைமலை சீனிவாச னும் புனே ஒப்பந்தத்தில் கையொப்ப மிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு இராவ்சாகிப், திவான் பதூர், இராவ் பகதூர் ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது. இரட்டை மலை சீனிவாசனின் பணி யைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், திராவிடமணி எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக் காகப் போராடிய  இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 அன்று தனது எண்பத்து ஆறாம் வயதில் இயற்கை எய்தினார். இந்திய நடுவண் அரசு, 15.08.2000 அன்று இரட்டைமலை சீனிவாசனுக்கு சிறப்பு அஞ்சல் வில்லை வெளியிட்டுச் சிறப்பு செய்தது.
-விடுதலை ஞா.ம.,16.7.16

நீதிக்கட்சியின் செயலாக்கங்கள்! ந.அ.ரேணுகாதேவி


(நீதிக்கட்சியின் அரும்பணி பற்றியும், பார்ப்பனர் - பார்ப் பனரல்லாதார் போராட்டங்கள் பற்றியும் “தமிழம்” இதழில்
வெளி வந்துள்ள அரிய கட்டு ரையே இது - அவசியம் படிக்க வேண்டியது.               -ஆ.ர்)
முதன் முதலில் இந்து மதம் சிந்து வெளியில் பரவிற்று அது ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்டது. கிழக்கு வங் கத்தைத் தவிர்த்த இந்தியாவின் பிற பகுதிகளில் அது பின்னர் பரவிற்று. சாதிப் பிரிவுகளை அது அடிப்படை யாகக் கொண்டிருந்தது.
இந்து மதச் சாதி முறையில், பிரா மணர், சத்திரியர், வைசியர் சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகள் உள்ளன.
அந்நான்கு பிரிவுகளில் பிராமணர் அல்லது புரோகிதர்கள் தலைமைப் பிரிவினர் ஆயினர். வேதம் எழுதுதல். இறை வணக்கப் பாடல்களைப் பாடுதல், மதச் சடங்குகளைச் செய்தல், தொன்மம் (புராணம்) வரைதல் போன்றவை அவர்கள் தொழிலாகும்.
அதிகாரத்தையும், செல்வத்தையும் உடைய அரசர்களும், அவர்களின் போர் வீரர்களும் சத்திரியர் எனப்படும் இரண் டாம் பிரிவினர் ஆயினர். அவர்கள் கடமை நாட்டைக் காப்பது ஆகும்.
வைசியர் எனப்படுவோர் மூன்றாம் பிரிவினர் ஆயினர். அவர்கள் தொழில் வாணிகம் செய்தலே ஆகும்.
குமுகாயத்தின் பிற தொழிலாளர் யாவரும் சூத்திரர் எனப்பட்டனர். அவர்கள் நான்காம் பிரிவினர் ஆயினர். அவர்கள் தீண்டப்படாதவராக கருதப் பட்ட கீழ் சாதியினராய் விளங்கினர்.
இந்நான்கு பிரிவினர்களும் “சாதி இந்துக்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

புறச்சாதியாரின் அவலநிலை
இவர்களைத் தவிர்த்த ஏனைய மக்கள் புறச் சாதியர்களாய் ஒதுக்கப்பட் டனர். அவர்கள் குத்திரர்களாலும் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட் டனர். சாதி இந்துக்கள் வாழும் பகு திக்கு மிகுந்த தொலைவில் அவர்களைக் குடியிருக்கச் செய்தனர் இந்நாளிலும், சிற்றூர்ப் பகுதிகளில் ஊர்ப்புறத்தே அமைந்த சேரிகளில் அவர்கள் வாழ் வதை நாம் காணலாம்.
அவர்களைப் பஞ்சமர்கள் என்றும் அழைப்பதுண்டு. பஞ்சமர்கள் என்றால் அய்ந்தாம் பிரிவினர் என்பது பொரு ளாகும். இறந்து போன விலங்குகள் பிணங்கள் ஆகியவற்றைப் புதைத்தலும், ஊர்ப் பகுதியில் குப்பை கூளங்களை அகற்றித் துப்புரவு செய்தலும், இவைபோன்ற இழி தொழில்களைச் செய்தலும் அவர்கட்குத் தொழிலாயின.
விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்பட்டனர்
சாதி இந்துக்கள் எனப்படும் உயர் குடியினர் வாழும் பகுதிகளின் பொது வீதிகளில் அம்மக்கள் செல்லக் கூடாது எனவும், பொதுக் கிணற்றில் தண்ணிர் எடுக்கக் கூடாது எனவும், சத்திரம் சாவடிகளைப் பயன்படுத்தக்கூடாது எனவும்;
கோயில்களுக்குள் நுழைதல் கூடாது எனவும் தடுக்கப்பட்டனர். அவர்கள் எவ்வகை உரிமையும் அற்ற அடிமைகளையும், விலங்குகளையும் விட மிகக் கீழாக நடத்தப்பட்டனர்.
தென்னிந்தியாவில் பிராமணரல்லா தார் அனைவரையுமே 'குத்திரர்கள்' என்று பிராமணர்கள், அழைத்தனர். 'நசூத்ராய மதிம்தத்யாத்' என்னும் வட மொழிச் செய்யுள் அடியின் பொருள் சூத்திரர்கள் படிக்கக் கூடாது' என்ப தாகும்.
இப்படிப்பட்ட முறைகளின் விளைவு களாலும், குமுகாய உரிமைகள் மறுக்கப் பட்டமையாலும் சூத்திரர்கள் எனப்பட் டோர் கல்வியறிவு பெற முடியாமல் பின்தங்கிப் போனார்கள். மக்களிடையே உயர்வு தாழ்வு உண்டாயிற்று: தாழ் குடியினர் தீண்டத்தகாதவர் என்னும் நிலைகள் ஏற்பட்டன.
தியாகராயரின் விருப்பம் .
இவ்வாறு மக்களிடையே ஏற்பட்ட தீண்டாமையை அறவே ஒழிக்கவும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கவும் தியாகராயர் விரும்பினார். நிகராண்மை (Equality) உடன் பிறப்பாண்மை (Fraternity) பிறப்புரிமை (Liberty) என்னும் பண்பியல்புகளை மக்களிடையே மலரச் செய்ய அவர் முயன்றார்; எனவே, இவை நயன்மை (நீதி)க் கட்சியின் தலையாய கொள்கைகளாய் விளங்கின.
சாதி அமைப்புப்படி பிராமண மக்களே கல்வியறிவு பெற்றவராக விளங் கினர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தி லும்  அவர்களே ஆங்கிலங் கற்று, பிற இந்திய மக்களுக்குக் கிடைக்க வேண் டிய பட்டம் பதவிகள் அனைத்தையும் தட்டிக் கொண்டனர்.
சென்னை மாநிலத்தில் 1912இல் பிராமண மக்கள் மேலாண்மை எவ் வாறு இருந்தது என்பதைப் பின் வரும் புள்ளி விளக்கத்தால் அறியலாம்.
பிராமணர்களின் ஆதிக்கம்
சென்னை மாநில உள்ளாட்சித் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
1) தெ. ஆற்காடு, செங்கற்பட்டுத் தொகுதி: திரு. ஆர். சீனிவாச அய்யங்கார்.
2) தஞ்சை, திருச்சித் தொகுதி. திரு.வி.கே இராமானுச ஆச்சாரியார்
நயன்மைக் கட்சிப் பொன் விழா மலர் பக்கம் 150.
3) மதுரை: இராமநாதபுரம் தொகுதி: திரு.சி.ராமையங்கார்.
(4) கோவை, நீலகிரித் தொகுதி திரு. சி. வெங்கட்ரமண அய்யங்கார்.
(5) சேலம், வட ஆற்காடு தொகுதி: திரு. பி. வி. நரசிம்ம அய்யர்,
6) சென்னை நகர் தொகுதி: திரு. சி. பி. இராமசாமி அய்யர்.
தில்லி நடு அவையில் இடம் பெற்றவர்கள்:
(1) செங்கற்பட்டு மாவட்டம்: திரு எம். கே. ஆச்சாரியார்.
(2) சென்னை: திரு. தி. இரங்காச்சாரி,
உயர் அற மன்றத்தில் இடம் பெற்றிருந்த நடுவர்கள்:
(1) திரு. எ.சு. சுப்பிரமணிய அய்யர்.
(2) திரு. வி கிருஷ்ணசாமி அய்யர். '
(8) திரு. வி. சேசகிரி அய்யர்.
(4) திரு. பி. ஆர். சுந்தரம் அய்யர்.
எல்லா மக்களுக்கும் தொழில்
பொதுவாக்கப்பட வேண்டும்
எனவே கல்வி, பட்டம், பதவி ஆகிய அனைத்தும் எல்லா வகுப்பினர்க்கும் உரியவைகளாக ஆக்கப் படல் வேண் டும் என வெள்ளுடை வேந்தர் தியாக ராயர் எண்ணினார்.
ஆகவே, அவர் 1916 திசம்பரில் பிராமணரல்லாத மக்களுக் கும், அவை மூன்றிலும் ஒத்த உரிமை கிடைப்பதற்கான ஓர் அறிக்கையைத் (Menifesto) தீட்டி வெளியிட்டார். எப்படி கல்வி எல்லா மக்களுக்கும் பொதுவாக்கப்படல் வேண்டுமோ அப்படியே தொழிலும் எல்லா மக்களுக்கும் பொதுவாக்கப் படல் வேண்டும் என்று தியாகராயர் வலி யுறுத்தி வந்தார்.
தியாகராயரின் அன்றைய கல்விக் கண்ணோட்டம் இன்றும் பொருந்துவ தாய் உள்ளது, தொழில், தொழில்: நுணுக்கம் ஆகியவற்றின் பயிற்சி எல்லா இனத்தார்க்கும் விரிவாக்கப்படல்வேன் டும் என்பதில் அக்கறை உள்ளவரா யிருந்தார்.
அது சார்பாக 1904 இல் சென்னையில் நடைபெற்ற தொழிலியல் மாநாட்டில், நம் நாட்டு ஏட்டுக் கல்வியின் பயனில்லாமையை விளக்கிப் பேசினார். நம் கல்வித் திட்டம் நாட்டிற் குச் செல்வம் தேடித் தரக்கூடியதொழில் வல்லுநர்களையும், கலைஞர்களையும் தோற்றுவிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஏற்றத்தாழ்வு அகல வழிகண்டார்
கைத்தொழில் செய்வது கீழ்க் குடியினர் வேலை என்று. அந்நாளில் தவறாகக் கருதப்பட்டது. அந்நிலையை மாற்றுவதற்குத் தியாகராயர் எண் ணினார்.  கைத்தொழில் எல்லா வகுப் பினர்க்கும் உரிய தொழிலாகச் சிறந்து விளங்கக் கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்றார்.
அப்படி மாற்றி அமைத்து வெற்றி கண்டால் மக்களிடையேயுள்ள தாழ்வு நிலைகளும், உயர்வு தாழ்வு மனப்பான்மையும் ஒழியும் என வற்புறுத்தினார்
'படித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் ஆகியவற்றால் மட்டுமே ஒரு நாடு முன்னேறிவிடும் என்று எண் ணுவது தவறு இளம் அகவை முதற் கொண்டு, கல்விப் பயிற்சியுடன் ஏதாகிலும் ஒரு தொழிலையும் எல்லா வகுப்பு மாணவர்க்கும்.அளித்தல் வேண்டும்' எனத் தியாகராயர் பன்முறை. வலியுறுத்தியுள்ளார்.
1929 இல் தொடக்கக் கல்விச் சட்டத்தின் மீதான உரையின்போது தியாகராயர், இப்போதுள்ள கல்வி முறை ஒவ்வொரு வகையிலும் பிழை யுள்ளதாகும்.  ஏனெனில், அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறியவுடன், அக்கல்வி அவர்களுக்குப் பயன்படுவ தில்லை. அவ்வாறு அவர்களுக்கு அளிக் கப்படும் கல்வி முற்றிலும் பயனற்றுப் போகின்றது; அவர்கள் பள்ளியில் கழித்த ஆண்டுகளும் வீணானவை ஆகின்றன".
பள்ளியில் இளைஞர்கள். ஒரு நாளில் சில மணி நேரமே கற்றல் வேண்டும். சில மணி நேரம் வேலை செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் தாம் செய்யப்போகும் தொழிலை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
தம் இயல்பான தொழிலை விட்டுவிட்டு ஏதாகிலும் ஒரு வேலையை நாடிச் செல்லும் எண்ணத்தை அவர்கள் கொள்ளமாட்டார்கள். அவர்கள், தம் தொழிலை - தாம் கற்ற தொழிலைச் - சரியான முறையில் செய்வதற்கான எண் ணத்தைக் கொள்ளும் படிச்செய்தல் வேண்டும்.'
தொழில் நுட்ப பயிற்சி அவசியம்
"தம் தொழிலைத் தொழில் நுட்பத் தோடு செய்வதற்குக் கற்றுக் கொடுத்துப் பயிற்சி அளித்தால் அவர்கள் எதிர் காலத்திற்குப் பயனுள்ளவர்களாக விளங்குவார்கள். அது தான் இளைஞர் களுக்கு அளிக்கும்.
கல்வியின் நோக்க மாகவும் பயனுமாகவும் இருத்தல் வேண் டும். அப்படிச் செய்யாத வரையில், நாம் அளிக்கின்ற கல்வி பிழையானது. என் றும், அதனால் பயன் ஒன்றும் இல்லை என்றும் நான் கூறுவேன்' என்று கூறி யுள்ளார்.
வகுப்புவாரி ஒதுக்கீட்டு முறையால் தான் எல்லா வகுப்பினரும் ஒத்த அளவில் அரசுத்துறை அலுவல்கள் பிற துறைத் தொழில்கள் போன்றவற்றைப் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்த முடியும் என நயன்மை (நீதி)க் கட்சி யினர் எண்ணினர்.
அதனால் ஆகஸ்ட் 1921 இல் வகுப்பு வாரி ஒதுக்கீட்டுச் சட்டம் (Communal G.O.) ஒன்றைச் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினர். அச்சட்டத்தின் விளைவால் தான் எல்லா இன மக் களும் எல்லாத்துறைகளிலும் ஒத்த வாய்ப்புப் பெறலாயினர். பிராமணருக் குக் கிடைக்கப்பட வேண்டிய ஒதுக் கீட்டை இச்சட்டம் வரையறை செய் ததே தவிர, அம்மக்களைப் புறக்கணிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் அது இயற்றப்படவில்லை.
பதவி ஒதுக்கீடு
பிராமணரல்லாதாருக்கு அளிக்கப் பட்ட ஒதுக்கீட்டு முறையால், முன் னாள் படைத் துறை அமைச்சர் திரு. வி.கே.கிருட்டிண மேனன் இராவ் சாகிப் என். சிவராசு போன்ற எட்டுப் பேர்கள் சட்டக் கல்லூரியின் முதல் வராகவும், பேராசிரியராகவும், துணைப் பேராசிரியர்களாகவும் அமர்த்தப்பட் டனர். அவ்விடங்களில் அதற்கு முன் ஆங்கிலேயர்கள் அல்லது பிராமணர்கள் பதவி வகித்தனர்.
வகுப்புவாரி ஒதுக்கீட்டு முறையில் அரசுப் பதவிகளிலும், பிற பதவி அமர்த்தங்களிலும் 50 விழுக்காடு பிரா மணர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு ஒரே அளவில் ஒதுக்கப் பட்டது. மற்றொரு 50 விழுக்காடு பிராமணரல்லாத முன்நிலை இனத்தவர் (Forward) பின் தங்கிய இனத்தவர் (Backward) தாழ்த்தப்பட்டோர் (Scheduled) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டது.
4.11.1927 நாளிட்ட ஆணை 1071 இன் படி பதவிகள் அனைத்தும் 12 என்னும் பிரிப்பெண் அடிப்படையில் கொடுக்கப் பட்டன. இவ்வாணை முன்னாள் நயன்மைக்கட்சி அமைச்சர் திரு. எஸ். முத்தையாவால் கொண்டு வரப்பட்டது.
வகுப்புவாரி ஒதுக்கீட்டில் கிறித்தவர், முஸ்லீம்கள் ஆகியோர் எண்ணிக்கைக்கு ஒத்தாற்போல் பிராமணர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மக்கள் தொகையில் நூற்றுச்கு மூன்று விழுக் காடுதான் பிராமணர்கள். அப்படியிருந் தும் நயன்மைக் கட்சியினர் பிராமணர் கட்கு அய்ந்தரை மடங்கிற்கு மேல் ஒதுக்கீடு செய்தனர்.
நயன்மைக் கட்சியின் நோக்கம்
பிப்ரவரி 15, 1976 இல்ல சுட் ரேட்டர்டு வீக்லி ஆப் இந்தியா' என்னும் ஆங்கில இதழில் 26 ஆம் பக்கத்தில் இரமேசு சந்திரன் என்பவர் நயன்மைக் கட்சி பற்றி ஒரு கட்டுரை எழுதி யுள்ளார்.
அதில் அவர், நயன்மைக்கட்சி மாண்டேகு - செம்சுபோர்டு சீர்திருத்தத் தினால் ஏற்பட்ட நன்மைகளை விரைந்து பற்றிக்கொண்டது. 16 ஆண்டுக் காலத்தில் அது சென்னை மாநிலத்தை 12 ஆண்டுகள் ஆண்டது.
அக் காலத்தில் அச்சீர்திருத்தத்தினால் மாநிலத் தன்னாட்சி (Provincial Autonomy) நடைமுறையில் இருந்தது 1921 முதல் 1926 வரை இயங்கிய இரண்டு அமைச்சரவைகளும் பயனுள்ள பல செயல்களைச் செய்தன.
அரசுப் பணிகளை இந்தியர்களுக்கு அளித்தல், கல்விச் சீர்திருத்தம், கூட்டுறவு இயக்கம், பெண்ணடிமை நீக்கம் ஆகியவை அச்செயல்களில் மேலும் மேலும் அமர்த்துவதே அவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது’’ என்று ஓரிடத் தில் குறிப்பிட்டுள்ளார்.
- நன்றி : ‘தமிழம்’
-விடுதலை ஞா.ம.,19.3.16

சனி, 19 நவம்பர், 2016

துவேசிப்பவர்கள் யார்?

வகுப்புத் துவேஷத்தை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும், சயமரியாதைக்காரர்களும், புதிதாக உண்டாக்கு கிறார்களா?

ஏற்கெனவே நீடித்த காலமாய் இருந்து வருவதைக் காட்டி அதை அடியோடு ஒழிக்கப் பார்க்கிறார்களா என்று யோசித்துப் பார்க்குபடி பொது மக்களை கேட்கின்றோம்.

வகுப்பு என்பது யாரால் ஏற்பட்டது?

வகுப்புக்கு வகுப்பு பேதமும், மேல் கீழ் தன்மையும் யாரால் ஏற்பட்டன?

கீழ் வகுப்பார் என்பவர்களைக் கொடுமை செய்து வருகிறவர்கள் யார்?

பெருங்குடி மக்களைச் சூத்திரன் என்றும், 4ஆவது வகுப்பான் என்று சொல்லுகிறவர்கள் யார்?

‘பிராமணனுக்கு வேறு இடம், சூத்திரனுக்கு வேறு இடம்’ என்று சொல்லி எழுதிக் காட்டியிருப்பவர்கள் யார்?

‘பஞ்சமருக்கு இடமில்லை’ என்று எழுதி வைத்தி ருப்பவர்கள் யார்?

‘பார்ப்பனர்களுக்கு மாத்திரம்’ என்று விளம்பரம் செய்தவர்கள் யார்?

மக்களைப் “பிறப்பித்த கடவுளை” ஆராதிக்க வேண்டுமானால், எங்கள் மூலம் தான் ஆராதிக்க முடியும் என்றும், அய்ந்தாவது வகுப்பானுக்கு அந்த உரிமை இல்லை என்றும், அவன் கோவிலுக்குள், குளத்துக்குள் வரக்கூட தடுக்கிறவர்கள் யார்?
அதுவும் சட்டப் பூர் வமாகவும், சாஸ்திர மூலமாகவும் தடுத்து விடு கிறவர்கள் யார்?

இவர்கள் எல்லாம் வகுப்பு வாதிகள் அல்லா தவர்களா?

வகுப்புத் துவேஷக் காரர்கள் அல்லாதவர் களா?

வகுப்பு அபிமானி களா?

வகுப்பு அன்பர்களா? என்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாத மக்கள் ஜஸ்டிஸ் கட்சியாராகட்டும், சுயமரியாதைக்காரர்கள் ஆகட்டும் மனித உரிமைக்குப் போராடுகிறார்களே அல்லாமல், மனித ஜீவ அபிமானத்துக்குப் போராடுகிறார்களே அல்லாமல், மற்றபடி பணத்துக்குப் போராடுகிறார்களா?

அரசியல் ஏக போக உரிமைக்கு போராடுகிறார்களா?

சாதி அகம்பாவத்துக்கோ,
ஜாதி ஆணவத்துக்கோ,

ஜாதி ஆதிக்கத்துக்கோ போராடுகிறார்களா?

- தந்தை பெரியார்
குடிஅரசு, 8.12.1935, தொகுதி 19, ப:294
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
-விடுதலை ஞா.ம.,19.11.16

தேவதாசி ஒழிப்புச் சட்டம்


23.03.1930- குடிஅரசிலிருந்து...

கோயில்களில் பெண்களைப் பொட்டுக் கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்யவேணுமாய் திருமதி. முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத் தைச் சர்க்கார் நமக்கு அனுப்பி அதன் மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள்.

இதற்காகச் சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித் தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெ னில், கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி அவர் களையே பொதுமகளிர்களாக்கி நாட்டில் விபசாரித்தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும், சமய சமுக முக்கிய தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்டவழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றியும்,

நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புக்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது. ஒரு நாட்டில் நாகரிகமுள்ள அரசாங் கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியா தையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தை யோ, நலத்தையோ, கோரின அரசாங்க மாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமுகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒருகண நேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காதென்று சொல்லுவோம்.

ஆனால், நமது இந்தியாவில் வெள்ளக்கார ஆட்சி குடிபுகவும் நிலைபெறவும், நம் நாட்டுச் சுயநலப் பார்ப்பனர்கள் உளவாளிகளாகவும், உதவியாகவும் இருந்து வந்ததால் அப்பார்ப் பனர்களுக்கு அனுகூலமாக வெள்ளைக்காரர் களும் இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்ததால் அந்தப் பார்ப்பனர்கள் சொல்லு கின்றபடியே நடந்து (வெள்ளைக்காரர்கள்) தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டுவிட்டார்கள்.

இந்தக் காரணங்களால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறையி லாவது இதுவரை ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலே இருக்க வேண்டி யவர்களாகி விட்டார்கள்.

ஆனால், இப்போது கொஞ்சகாலமாய் அப்பார்ப்பனர்களின் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கியதைகளை அடியோடு வெளியாக்கி சீர்திருத்தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக்காரர்களை மிரட்டக்கூடிய சமயம் மிரட்டியும், ஆதரிக்கக்கூடிய சமயம் ஆதரித்தும் பார்ப்பனர்களின் செல்வாக்கை ஒழித்து நமது சக்தியையும் தீவிர ஆசை யையும் காட்ட ஆரம்பித்துவிட்டதால், இப் போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்க்காரார் சீர்திருத்தத் துறையில் நமது இஷ்டத்திற்கும் இணங்கும்படியான நிலைமை ஏற்பட்டி ருக்கின்றது.

இந்த நிலைமையின் பலனேதான் இப் போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரசாரம் செய்யவும் செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும்; சட்டசபையில் இதுசமயம் ஒரு முடிவைப் பெற்றுத் தீரவேண்டிய அவசியம் ஏற்பட்டுப் பொதுஜன  அபிப் பிராயத்திற்கு  வரநேர்ந்ததுமாகும்.

நிற்க, இப்போது திருமதி டாக்டர் முத்து லட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும், பொட் டுக்கட்டுவதை ஒழிக்கும் இந்த மசோதாவானது வெகுகாலமாகவே ஜனப்பிரதிநிதிகள் என் பவர்களால் பொதுக்கூட்டங்களிலும், பொது மகாநாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டி ருப்பதுடன் இம்மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட் டங்களிலும் அடிக்கடி பிரதாபிக்கப்பட்டும் வந்திருக்கின்றது. இவ்வாறெல்லாமிருக்க, இச்சட்டத்திற்குப் பொதுஜன அபிப்பிராயத்தை அறிய விரும்புவானேன்? என்பது விளங்க வில்லை.

இந்த நாள்பட்ட கொடிய சமுகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சே பணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக் கவே முடியாது. இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பதுபோல் தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானது மல்லாமல், இந்து மதத்திற்கே பெரும் பழியுமாகும்.

ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகுமா கையால் இவ்வழக்கம் பெண்களின் அந்தஸ் தையும், கவுரவத்தையும் பெரிதும் பாதிக்கக் கூடியதாயிருக்கிறது. அன்றியும் ஒரு குறிப் பிட்ட ஜாதியையோ, சமுகத்தையோ விபசாரத் திற்கு அனுமதி கொடுப்பதும்,, பின்னர் அவர்களை இழிந்த சமுகமாகக் கருதுவதும் பெரும் சமுகக் கொடுமையாகும்.

சிறு குழந் தைகளிலிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது ஜனசமுக விதி களையே மீறியதாகும். எனவே இப்படிப்பட்ட நிலைமையில் இனி இதைப்பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

பொதுஜனங்கள் எந்த விதத்திலாவது இந்தச் சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள்தனமாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்றத் தன்மை யாகவோதான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்து சமுகத்தில் கடவுள் பேரால், மதத்தின் பேரால் விபசாரிகளை ஏற்படுத்தவேண்டும் என்று எந்த சமுகத்தாரோ, தேசத்தாரோ கருது வார்களானால், அவர்களைப்போல் காட்டு மிராண்டிகளோ கெட்டவர்களோ இருக்கவே முடியாது. மற்றபடி எந்த சமுகமாவது இம் மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களே யானால் அவர்களைப்போல் சுயமரியாதை யற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்கமுடியாது.

-விடுதலை,19.11.16

தேவதாசி மசோதா

23.03.1930- குடிஅரசிலிருந்து...

இந்த சமுகக் கொடுமையை ஒழிக்க ஆரம்பித்த கிளர்ச்சியானது 1868 வருஷ முதல் நடைபெற்று வருகிறது. 1906, 1907 வருஷம் உலக தேசிய மகா நாட்டில், இந்தக் கொடிய கெட்ட வழக்கத்தை ஒழிப் பதற்காகப் பல மாகாண சர்க்கார் அபிப்பிராயங் களையும் அறிந்து தம்மால் கூடியவரை ஒழிப்பதென முடிவு செய்ததினின்று, இந்தியா கவர்ன்மெண்டும்,

இந்த தேவதாசி  மசோதாவில் அதிக சிரத்தைக் காட்டி வந்தது. 1912ஆம் வருஷம் பழைய இம்பீரியல் சட்ட நிருபண சபையில், மூன்று இந்திய அங்கத்தினர்கள், கனம் மாணிக்ஜிதாதாபாய், முதோல்கர், மேட்கித் ஆகியவர்கள் இந்தக் கொடிய பழக்கத்தை ஒழிப்பதற்கு இதே எண்ணத்தோடு வேறு மூன்று மசோதாக்கள் கொண்டு வந்தனர்.

இந்திய சர்க்கார், உள்நாட்டு சர்க்காருக்கு இந்த மசோதாவை அனுப்பி, அவர்களது அபிப்பிராயம் தந்த உடன் 1913ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் தாங்களாகவே ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். மீண்டும் அம்மசோதா ஒரு செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு அவர்களது ரிப்போர்ட்டையும் 1914 வருஷம் மார்ச்சு மாதம் பெற்றார்கள்.

அந்த ரிப்போர்ட் மறுபடியும் இப்போதைப் போலவே பொதுஜன அபிப்பிராயத் துக்கு விடப்பட்டது. இம்மசோதாவை நிறைவேற்று வதில் எல்லோருக்கும் பூரண எண்ணமிருந்த போதி லும், அத்தகைய பெண்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது போன்ற சில சில்லரை விவாதங்கள் கிளப்பி விடப்பட்டதால் அம்மசோதா தானாகவே அதுசமயம் மறைந்துவிட்டது. அதன் பின்னர் மகாயுத்தக் கிளர்ச்சி யினால் அது கவனிக்கப்பட முடியாமல் போயிற்று.

பிறகு 1922ஆம் வருஷம் டாக்டர் கோர் மீண்டும் அதை இந்திய சட்டசபையில் கொண்டுவந்தார். மேற்படி தீர்மானத்தின்மேல் விவாதம் நிகழ்ந்து கடைசியாக அது மறுபடியும் பொதுஜன அபிப் பிராயத்திற்கு பிரசுரிக்கப்பட வேண்டுமென்ற பிரே ரேபனை அதிகப்படியான ஓட்டுகளால் தோற்கடிக்கப் பட்டது.

பிறகு மேல்படி 1922ஆம் வருஷத்திய தீர்மானத்தின் மீது 1924ஆம் வருஷம் அதை சட்டமாக்கப்பட்டதோடு, அதை அனுசரித்து இந் தியன் பினல்கோடு 372, 373 செக்ஷன்கள் திருத்தப் பட்டன. அதன் சட்டம் 1925ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதியன்று அமலுக்கு வந்தது. ஆதியில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பொட்டுக் கட்டுதல் கூடாதென்று சாஸ்திரத்தால் தடுக்கப்பட்டி ருக்கிறது.

ஏனெனில், பொட்டுக்கட்டப் பட வேண்டிய பெண் சாஸ்திரப்படி கன்னிகையாயி ருக்க வேண்டு மாதலால் 14 வயதிற்குள்தான் இந்த சடங்கு செய்வது வழக்கமாக இருந்துவந்தது. அதா வது எந்தப் பெண்ணையும் 14 வயதிற்குமேல் பொட்டுக்கட்ட எந்தக் கோயில் அதிகாரியும் அனு மதிப்பதில்லை.  ஆனால், இப்பொழுது மேற்படி சட்டம் வந்தபிறகு  16 வயதிற்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கு பொட்டுக் கட்டப்பட்டால்  கோயிலதிகாரிகள் குற்றவாளிகள் ஆவதோடு அந்த விதமாக அனேக கேசுகள் நடந்து அந்த 25வது சட்டப்படி தண்டனையும் பெற்றி ருக்கிறார்கள்.

ஆகவே, வைதிகர்களது அபிப்பிராயப்படி பார்த் தாலும்கூட, சாத்திரப்படி 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோவில்களில் பொட்டுக்கட்ட  மத அனுமதியில்லையென்று தெரிகிறது. இந்தியன் பினல்கோடுபடி ஒரு மைனர் பெண்ணைப் பொட்டுக் கட்டுவது குற்றமென்றாலும், பேராசையுள்ள பெற் றோர்கள் சிலர் தங்கள் பெண்களுக்குப் பொட்டுக்கட்ட கோவிலினிடமிருந்து உத்தரவு பெற்றுவிடுகிறார்கள். இது விபசாரத்துக்கு அனுமதி கொடுத்த தாகுமேயன்றி வேறில்லை.

பொதுஜன அபிப்பிராயம் இதைச் சட்டமாக்க அனுகூலமாயேயிருக்கிறது.  பத்திரிகை களில் இதை ஆதரித்து எழுதியும் பொதுக் கூட்டங் களில் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறை வேற்றியும், சுமார் 13 வருஷத்துக்கு மேற்பட்ட ஆண்-பெண் சங்கங்களில் அதை ஆதரித்து தீர்மானங்கள் நிறை வேற்றியும் இந்தக் கொடிய பழக்கத்தினால் அல் லலுறும் சமுகத் தினரே இதைச் சட்டமாக்க வற்புறுத்தி எழுதியும் இருக்கின்றனர். டிடிரிக்டு போர்டு முனிசிபாலிட்டிகளிலும் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.  
-விடுதலை,19.11.16