சனி, 19 நவம்பர், 2016

தேவதாசி மசோதா

23.03.1930- குடிஅரசிலிருந்து...

இந்த சமுகக் கொடுமையை ஒழிக்க ஆரம்பித்த கிளர்ச்சியானது 1868 வருஷ முதல் நடைபெற்று வருகிறது. 1906, 1907 வருஷம் உலக தேசிய மகா நாட்டில், இந்தக் கொடிய கெட்ட வழக்கத்தை ஒழிப் பதற்காகப் பல மாகாண சர்க்கார் அபிப்பிராயங் களையும் அறிந்து தம்மால் கூடியவரை ஒழிப்பதென முடிவு செய்ததினின்று, இந்தியா கவர்ன்மெண்டும்,

இந்த தேவதாசி  மசோதாவில் அதிக சிரத்தைக் காட்டி வந்தது. 1912ஆம் வருஷம் பழைய இம்பீரியல் சட்ட நிருபண சபையில், மூன்று இந்திய அங்கத்தினர்கள், கனம் மாணிக்ஜிதாதாபாய், முதோல்கர், மேட்கித் ஆகியவர்கள் இந்தக் கொடிய பழக்கத்தை ஒழிப்பதற்கு இதே எண்ணத்தோடு வேறு மூன்று மசோதாக்கள் கொண்டு வந்தனர்.

இந்திய சர்க்கார், உள்நாட்டு சர்க்காருக்கு இந்த மசோதாவை அனுப்பி, அவர்களது அபிப்பிராயம் தந்த உடன் 1913ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் தாங்களாகவே ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். மீண்டும் அம்மசோதா ஒரு செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு அவர்களது ரிப்போர்ட்டையும் 1914 வருஷம் மார்ச்சு மாதம் பெற்றார்கள்.

அந்த ரிப்போர்ட் மறுபடியும் இப்போதைப் போலவே பொதுஜன அபிப்பிராயத் துக்கு விடப்பட்டது. இம்மசோதாவை நிறைவேற்று வதில் எல்லோருக்கும் பூரண எண்ணமிருந்த போதி லும், அத்தகைய பெண்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது போன்ற சில சில்லரை விவாதங்கள் கிளப்பி விடப்பட்டதால் அம்மசோதா தானாகவே அதுசமயம் மறைந்துவிட்டது. அதன் பின்னர் மகாயுத்தக் கிளர்ச்சி யினால் அது கவனிக்கப்பட முடியாமல் போயிற்று.

பிறகு 1922ஆம் வருஷம் டாக்டர் கோர் மீண்டும் அதை இந்திய சட்டசபையில் கொண்டுவந்தார். மேற்படி தீர்மானத்தின்மேல் விவாதம் நிகழ்ந்து கடைசியாக அது மறுபடியும் பொதுஜன அபிப் பிராயத்திற்கு பிரசுரிக்கப்பட வேண்டுமென்ற பிரே ரேபனை அதிகப்படியான ஓட்டுகளால் தோற்கடிக்கப் பட்டது.

பிறகு மேல்படி 1922ஆம் வருஷத்திய தீர்மானத்தின் மீது 1924ஆம் வருஷம் அதை சட்டமாக்கப்பட்டதோடு, அதை அனுசரித்து இந் தியன் பினல்கோடு 372, 373 செக்ஷன்கள் திருத்தப் பட்டன. அதன் சட்டம் 1925ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதியன்று அமலுக்கு வந்தது. ஆதியில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பொட்டுக் கட்டுதல் கூடாதென்று சாஸ்திரத்தால் தடுக்கப்பட்டி ருக்கிறது.

ஏனெனில், பொட்டுக்கட்டப் பட வேண்டிய பெண் சாஸ்திரப்படி கன்னிகையாயி ருக்க வேண்டு மாதலால் 14 வயதிற்குள்தான் இந்த சடங்கு செய்வது வழக்கமாக இருந்துவந்தது. அதா வது எந்தப் பெண்ணையும் 14 வயதிற்குமேல் பொட்டுக்கட்ட எந்தக் கோயில் அதிகாரியும் அனு மதிப்பதில்லை.  ஆனால், இப்பொழுது மேற்படி சட்டம் வந்தபிறகு  16 வயதிற்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கு பொட்டுக் கட்டப்பட்டால்  கோயிலதிகாரிகள் குற்றவாளிகள் ஆவதோடு அந்த விதமாக அனேக கேசுகள் நடந்து அந்த 25வது சட்டப்படி தண்டனையும் பெற்றி ருக்கிறார்கள்.

ஆகவே, வைதிகர்களது அபிப்பிராயப்படி பார்த் தாலும்கூட, சாத்திரப்படி 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோவில்களில் பொட்டுக்கட்ட  மத அனுமதியில்லையென்று தெரிகிறது. இந்தியன் பினல்கோடுபடி ஒரு மைனர் பெண்ணைப் பொட்டுக் கட்டுவது குற்றமென்றாலும், பேராசையுள்ள பெற் றோர்கள் சிலர் தங்கள் பெண்களுக்குப் பொட்டுக்கட்ட கோவிலினிடமிருந்து உத்தரவு பெற்றுவிடுகிறார்கள். இது விபசாரத்துக்கு அனுமதி கொடுத்த தாகுமேயன்றி வேறில்லை.

பொதுஜன அபிப்பிராயம் இதைச் சட்டமாக்க அனுகூலமாயேயிருக்கிறது.  பத்திரிகை களில் இதை ஆதரித்து எழுதியும் பொதுக் கூட்டங் களில் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறை வேற்றியும், சுமார் 13 வருஷத்துக்கு மேற்பட்ட ஆண்-பெண் சங்கங்களில் அதை ஆதரித்து தீர்மானங்கள் நிறை வேற்றியும் இந்தக் கொடிய பழக்கத்தினால் அல் லலுறும் சமுகத் தினரே இதைச் சட்டமாக்க வற்புறுத்தி எழுதியும் இருக்கின்றனர். டிடிரிக்டு போர்டு முனிசிபாலிட்டிகளிலும் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.  
-விடுதலை,19.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக