திங்கள், 7 நவம்பர், 2016

வெள்ளையன் மார்பு எதிரே துப்பாக்கியை நீட்டிய டாக்டர் டி.எம். நாயர்


எஸ்.எம்.ஃபாசில்
சூளை நகர இளைஞர் கழகத்தில் 4.8.1959 மாலை நடைபெற்ற கூட்டத்தில் திரு எஸ்.எம். ஃபாசில் அவர்கள் நீதிக் கட்சித் தலைவரான டி.எம். நாயர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி  பேசியதன் சுருக்கம்:
இன்றுநான் ஒரு தென்னாட்டு பேரறிஞர் பேராற்றலும் வல்லமையும் படைத்த பெருவீரர் டாக்டர் டி.எம். நாயர் அவர்களைப் பற்றிப் பேச மகிழ் கிறேன். டாக்டர் அவர்கள் 15.1.1868 பாலக்காட்டில் பேரும் புகழும் வாய்ந்த ஓர் செல்வக்குடியில் பிறந்தார்கள் பல ஆண்டுகளுக்குமுன் அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் பெரும்பாலும் பார்ப்பன வகுப்பினரே தலைவர்களாக வும் மேலதிகாரிகளாகவும் இருந்தனர். அப்படிப்பட்ட அக்கால சூழ்நிலையி லேயும்,
நமது மதிப்பிற்குரிய டாக்டர் டி.எம். நாயர் அவர்களின் தந்தையார் ஓர் மாவட்ட நீதிபதி டிஸ்டிரிக்ட் முன்சீஃப் ஆகப் பணியாற்றி வந்தார் அவர் முற்போக்குக் கொள்கையும் கருத்தும் உடையவராய் இருந்தார். இத்தகைய தந்தையாரின் பல நல்லி யல்புகள் மகனிடத்திலும் படிந்தன. டாக் டர் நாயரின் முழுப் பெயர் தாரவார்த் மாதவ நாயர் ஆம்.
கல்வியில் ஆர்வம்
டாக்டர் அவர்களின் இளமைப் பரு வமும் கலாசாலை வாழ்க்கையும் மிக மிகப் போற்றத்தக்கதாய் அமையலாயின மருத்துவத் துறையில் நாயர் அவர் களுக்கு ஓர் தனிப்பட்ட ஆர்வமும் ஆராய்ச்சியும் இருந்தது.
அவர் எதையும் முதலில் ஆழ்ந்து சிந்தித்துத் திட்ட மிட்டு திட்டத்தை செயல்படுத்த முனைந்துபின் முடித்து வெற்றி கண்டு மகிழ்வார் 1889-ஆம் ஆண்டில் அவர் மருத்துவக் கலையை மேலும் ஆராய்ந்து கற்க எடின்பரோ பல்கலைக் கழகத்தை அடைந்தார்.
அக்காலத்தில் எல்லா வகையிலும் இங்கிலாந்து நாடு முன் னேறி முதன்மை பெற்று விளங்கிற்று. இங்கு டாக்டர்அவர்கள் 7 ஆண்டுகள் மருத்துவக் கலையை ஆய்ந்து தேர்ந்தார். கிளாஸ்டனைத் தலைவராகக் கொண்ட “லிபரல் கட்சியினர்’’ ஆட்சி நடைபெற்ற காலமது டாக்டர் அவர்கள் இங்கி லாந்து தங்கி வாழ்ந்த காலத்தில்,
மருத் துவக் கலையைப் பயில்வதோடு அலை யாமல், அரசியல் சமுதாயம் கல்வி உள்நாட்டு ஊராட்சிக் கழக அமைப்பு முதலிய துறைகளிலும் நாட்டத்தைச் செலுத்தி அனுபவத்துடன் ஆழ்ந்த அறிவையும் பெற்றார்.
மருத்துவத்துறையில் நிபுணர்
மருத்துவத் துறையில் காது, மூக்கு, தொண்டை முதலிய உறுப்புக்களின் நோய்களைக் குணமாக்கும் சிறப்புத் திறமையைப் பெற்றுப் பெரும் புகழுடன் இங்கிலாந்தில் விளங்கினார். இங்கி லாந்து நாட்டுப் பெரு மக்களும் நாயர் அவர்களிடம் நம்பிக்கையும், பெருமதிப் பும் வைத்து சிகிச்சைக்கு வந்தனர் எனின் வேறு என்ன சிறப்பான அத்தாட்சி தேவை?
டாக்டர் அவர்கள் இங்கிலாந்தில், அறிஞர் பெர்னாட்ஷா சிட்னிவெப் முதலிய பேரறிஞர்களுடன்  பழகியவர் அதானல் அவர் நகராட்சி நாட்டாட் சிக் கழக நடைமுறைகளையும் நன்கு தெரிந்து தெளிந்தார்.
சென்னையில் தொண்டு
1897ல் நல்ல பல புதிய கருத்துக்களு டனும் திட்டங்களுடனும் டாக்டர் நாயர் அவர்கள் சென்னைவந்து சேர்ந்தார்.
“உன் பணியைத் திட்டமிடு பிறகு திட்டத்தின்படி பணியாற்று” என்பது அவருடைய கொள்கையாக இருந்தது சென்னை சேர்ந்த டாக்டர் அவர்கள் நகராண்மைக் கழக உறுப்பினராகி ஆழ்ந்து ஈடுபட்டு இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பலநல்ல அமைப்பு முறைகள் ஏற்பட உதவியாய் இருந்தார் ஸ்தல ஸ்தாபனங்கள் செம்மையான அடிப்படையில் ரிப்பன் பிரபுவின் ஆதரவினால் ஆய்ந்து அமைவுடன் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவை.
அந்த உள்நாட்டு கழக அமைப்புகள் மருத்துவப் பேரறிஞர் என்ற வகையில் சென்னை நகரத்திற்கு  எவ்வளவோ வகைகளில் சுகாதரத்துறையில் பணி செய்து சீர்திருத்தங்களைச் செய்தார் சென்னை நகராண்மைக் கழகத்தின் உறுப்பினராக இருந்து திறந்த வடி கால்கள் கொசுக்கள் உற்பத்தியாகும் சாக்கடை வாய்க்கால்களாக இருந்த வற்றை எல்லாம் மூடிய வகையில் செம் மையாக இயங்க ஏற்பாடுகள் செய்தார் சிறப்பாகச் சுகாதார வசதிகள் போன் றவற்றை தாழ்நிலப் பகுதிகளுக்கும்,
சேரிப் பகுதிகளுக்கும் அதிகமாகச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தி செயலாற்றினார். அவரது உள்ளமும் முழு உழைப்பும் மனிதாபிமானத்துடன் ஏழை மக்களுக்கே சேவை செய்தல் வேண்டுமென்று அமைந்து பணி செய்தன.
குடிநீர் அமைப்புத் திட்டம் உருவாக்கியவர்
மேலும், மற்றொரு முக்கியமான செயலில் அவரது கவனத்தை அதிகம் செலுத்தினார். அதாவது சென்னை நகருக்கு பாதுகாப்புள்ள குடிநீர் அளித்தல் Protected Water Supply இந்த வகையில் ஒரு நகைப்புக்கேற்ற விஷயத் தையும் சொல்லாமல் இருக்க முடிய வில்லை. டாக்டர் நாயர் அவர்கள் சென்னை நகராண்மைக் கழக உறுப் பினராக இருந்த காலத்தில் மெலோனி என்ற ஆங்கிலேயர் நகராண்மைக் கழகத்தின் ஆணையாளராக இருந்தார்.
டாக்டர் நாயர் அவர்கள் குடிநீரை வடிகட்டிச் சுத்தம் செய்து வழங்க வேண்டும் என்று தீர்மானித்தபோது நகருக்கு அளிக்க வேண்டிய இவ்வளவு தண்ணீரையும் வடிகட்டி அனுப்ப அதிகமான பணம் செலவாகும். எனவே பாதி அளவு தண்ணீரைச் சுத்தம் செய்து அத்துடன் பாதி சுத்தம் செய்யாத தண்ணீரைக் கலந்து வழங்கலாம் என்று ஆணையாளர்திரு மெலோனி அவர்கள் குறிப்பிட்டாராம்.
இந்த விந்தையான கருத்தைக் கேட்டு எல்லோரும் நகைக் கலாயினர் டாக்டர் நாயர் அவர்கள் தமக்கே இயல்யான நகைச்சுவை கலந்த பான்மையில் அப்படி விநியோகிக்கும் குடிநீருக்கு “மெலோனிமிக்சர்” என்ற பெயர் வைக்கலாம் என்று கூறினராம். இந்த சொற்றொடரை கேட்ட பிறகு தான் தனது அறியாமையை ஆணையா ளர் மெலோனி அவர்கள் உணர்ந்து, நாணமும் வருத்தமும் கொண்டார்.
பொருளாதாரத்
துறையிலும் நிபுணர்
டாக்டர் நாயர் அவர்கள் சென்னை நகரான்மைக் கழகத்தின் வருமானத்தை பொருளாதாரத்தை உயர்த்தும் உபாயங் களில் ஒன்றாக ‘சம்பாதிக்காமல் வந்த சொத்துக்களின் மீது வரி விதிக்கலாம் என்பதாகும். இவர் நகராட்சிகளின் பொருளாதாரத் துறையில் மிகவும் நிபுணர்.
சென்னை சட்டக் கல்லூரியில் “நகராட்சி நிர்வாகமும், பொருளாதார மும்’’ என்னும் பொருள்பற்றி பல சொற்பொழிவுகள் தொடர்ந்து  ஆற்றினார்கள் இச்சொற்பொழிவுகளை எல்லாம் தொகுத்து சென்னை ஹிக் கின்பாதம்ஸ் புத்தக வியாபாரிகள் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளனர்.
டாக்டர் அவர்கள் லஞ்சம் ஊழல் முதலிய ஒழுங்கீன நடைமுறைகளுக்கு பெரிய விரோதி எனவே நாட்டு ஆட்சியில் இருந்து வந்த பெரும் குறைகளையும் சீர்கேடுகளையும் நீக்கித் தூய்மை செய்யவிரும்பினார் குடியாட்சி என்பது ஊழல்கள் இல்லாததாக இருக்க வேண்டும் என்பது அவர் கருத்து.
தொழிலாளர்களுக்குச்
செய்த தொண்டு
தொழிலாளர் உலகத்திற்கு டாக்டர் அவர்கள் பெரிதும் உழைத்தார்கள். இங்கிலாந்தில் இருந்தபொழுது அங்கே தொழிலாளர் கட்சி வளர்ந்துக் கொண் டிருந்தது எதிர்கால உலகம் தொழி லாளர் இடத்தில்தான் இருக்கிறது என்பதை நன்குணர்ந்தஅவர் தாய்நாட் டிற்குத் திரும்பியதும் தொழிலாளர் களின் பிரச்சினைகளில் ஈடுபட்டு பல அரிய சாதனைகளைச் செய்தார்.
பஞ்சாலைத் தொழிலாளர்களின் நலனுக்காக ஆற்றிய தொண்டினால் அவரது அறிவாற்றல் அக்கால அரசிய லார்க்கு பெரும் வியப்பையும் மகிழ்ச்சி யையும் அளித்தது. தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து ஆராய ஏற்படுத்தப்பட்ட குழுவில் அங்கம் வகித்து தொழிலாளர்களுக்கு ஆதர வாக அவர் சொன்ன பல யோசனைகளை மார்லி பிரபு ஏற்றுக் கொண்டார்.
மருத்துவப் பணி
அக்காலத்தில் இருந்து வந்த மருத்துவகல்லூரி மருத்துவ ஆரய்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றில் இருந்த குறைகளைக் கண்டு பேருழைப்பினால் அவற்றைச் செம்மைப்படுத்தித் திருத்தி அமைத்தார் அக்கால மருத்துவத் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்து இறக்கும் காலம் வரையில் தேர்வாளராக இருந்தார் பதிவு பெற்ற மருத்துவர்கள் என்னும் முறையை முதல் முதல் கொண்டுவரக் காரண மாக இருந்தவர் இவரே.
தீண்டாமைக்கு விரோதி
19ஆம் நூற்றாண்டின் கடைசியி லும் 20ஆம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் சமுதாயப் பொது நலச் சீர்திருத்தங்கள் என்றால் பொது மக் களுக்குப் புரியாத காலம். அப்படிப் பட்ட கஷ்டமான காலத்தில் நாட்டு நலனுக்காகவும் மக்கள் முன்னேற்றத் திற்காகவும் பெரிதும் பாடுபட்டார். தீண்டாமையை ஒழித்து மக்கள் இனம் ஒரே இனமாக ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதை நன்கு பிரச்சாரம் செய்தார்.
இதை பிறரும் செயலில் கைக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் வீட்டு வேலைக்காரர்கள் அனை வரையும் ஆதி திராவிட மக்களாகவே தேர்ந்தெடுத்து அமைத்துக் கொண் டார். தீண்டாமையை ஒழிக்க அவர் ஆற்றிய தொண்டிற்கு அவரே சிறந்த உதாரணம் ஒரு சமயம் சென்னை மயிலாப்பூர் குளத்திற்கு நகராண்மைக் கழகத்தினர் இலவசமாக தண்ணீர் வழங்கி வந்தனர்.
அக்காலத்தில் அக் குளத்தில் எவர் வேண்டுமானாலும் இறங்கிக் குளிக்கலாம். ஆனால் தீண்டத்தகாத ஆதி திராவிடர் மட்டும் குளிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இவை அறிந்த டாக்டர் அவர்கள் மிக மனம் வருந்தினர். இந்த நடுநிலைமையற்ற கட்டுப்பாட்டை நேர்மையான முறை யில் சட்டப்படி அகற்ற ஓர் உபாயம் செய்தார்.
நகராண்மைக் கழகத்தினராலும் மயிலாப்பூர் குளத்திற்கு இலவசமாக வழங்கப்படும். தண்ணீர் தாழ்த்தப் பட்டவர் பணத்தினாலும் கொண்டு வரப்பட்டதாகும். எனவே அந்த குளத்து நீரில் குளிப்பதற்கு ஆதி திராவிடர்களை அனுமதிக்க வேண் டும். இல்லையேல் மறுப்புத் தெரிவிப் பவர்கள் குளத்திற்கு விடப்படும்.
தண்ணீருக்கு நகராண்மைக் கழகத்தா ருக்கு தண்ணீர் வரி செலுத்த வேண்டு மென்று வாதாடினார். இந்த நிலையில் பார்ப்பனர்களும் வைதீகர்களும் தண்ணீ ருக்கு வரி செலுத்தவும் ஒத்துக் கொண் டார்களே தவிர ஒரே மனித இனத்தில் பிறந்த   தாழ்த்தப் பட்ட மக்களை அந்த குளத்தில் குளிக்க விட சம்மதிக்கவில்லை. அந்நாள் முதல் பார்ப்பனர்களுக்கு டாக் டர் அவர்கள் ஒரு பெரிய விரோதியாகத் தோன்றினார்.
பார்ப்பனரல்லாதாரை அரசியல் தொண்டில் ஈடுபடச் செய்தார்
அக்காலத்தில் சென்னை மேல் சட்ட சபையில் இக்காலத்தில் இருப்பதுபோல் பெருவாரியான உறுப்பினர்கள் இல் லாமல் 32 உறுப்பினர்களே இருந்தார் கள். அந்த 32 உறுப்பினர்களில் சர். பி. தியாகராயர் டாக்டர் நாயர் ஆகிய இரு வரும் சிறப்பு உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்ட்டனர்.
இந்த நல்ல வாய்ப்பை செம்மையாக பயன்படுத்தி, நகராட்சி, நாட்டாட்சி கழகங்களின் சட்டத்தை (முனிசிபல் ஆக்ட் திருத்தி அமைத்தார்.
அப்போது அவருக்கு இருந்த செல்வாக்கு மேலும் உயர்ந்தது. இம்பீரியலிஸ்ட் லெஜிஸ்«டிடிவ் கௌன்சிலில் இருந்த 13 உறுப்பினர்களையும் பார்ப்பன இனத்தை சார்ந்த 13 உறுப்பினர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்தனர் காரணம் அக்காலத் தில் பெரும்பாலான படித்துப் பட்டம் பெற்று இருந்த மக்கள் பார்ப்பன வகுப்பினர்களே இந்த அநியாய நிலையை மாற்றி அமைக்க டாக்டர் நாயர் திட்டம் இட்டு உறங்கிக்கிடந்த பார்ப்பனர் அல்லாத படித்த மக்களை சமுதாய அரசியல் தொண்டுகளில் ஈடுபடும்படி வற்புறுத்தி பிரசாரம் செய்தார்.
விழிப்படைந்த பார்ப்பனர் அல்லாதார் அரசியல் பதவிகளிலும் ஆட்சிப் பொறுப்பிலும் அமர்ந்து சிறிது சிறிதாக உயரராயினர்.
நீதிக்கட்சி தோற்றுவித்தவர்
இதற்காக இக்காலத்தில் ‘’ஐஸ்டிஸ்’ கட்சியைத் தோற்றுவித்து அதற்கென ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கில தினசரி பத்
திரிக்கைக்கும் தானே ஆசிரியராயிருந்து பணயாற்றினார். இவருடன் உதவியாக  சர் தியாகராயர் போன்ற பெரும் பெரும் அறிவில் சிறந்த பெரியவர்கள் உதவி யாக இருந்தனர். இவர் தமிழிலும், ஆங் கிலத்திலும் பொதுக் கூட்டங்களில் நன்றாகப் பேசக் கூடிய திறமையான சொற்பொழிவாளராகவும் விளங்கினார்.
தன்மானம் காக்கும் வீர புருஷர்
முதல் உலக மகாயுத்தம் நடந்த காலம் அது இவர் பொது நலச் சேவை யில் ஈடுபட்டவர் என்ற காரணத்தால் அக்கால சண்டைக் கப்பல் ஒன்றுக்கு கவரவ டாக்டராக ஆங்கில அரசாங்கத் தினர் அமைத்தனர். ஒரு நாள் அந்தக் கப்பலில் உள்ளவர்களைப் பார்க்க சென்ற டாக்டர் நாயர் அவர்களை அந்தக் கப்பலின் ஆங்கிலத் தளபதி ஒருவன் ஏளனமாகவும் அசட்டையாக வும் பேசத் தொடங்கினான்.
உடனே டாக்டர் நாயர் அவர்கள் தன்னிடம்  இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்த ஆங்கில் தளபதிபின் மார்புக் நேராக நீட்டி தன்னைப் பற்றி ஏளன மாகப் பேசிய வார்த்தைகளை மீட்டுக் கொண்டு (வாபஸ் பெற்று) மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாவிட்டால் சுட்டுக் கொன்று விடுவேன் என்று துடிதுடித்து நின்றார் வேறு வழியில்லாமல் பக்கத் திலிருந்தவர்களின் உதவியால் டாக்டர் நாயர் அவர்களின் உண்மையான பெரு மைகளை அறிந்து தளபதி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
அது அவரது சுயமரியாதையையும் உணர்ச்சியையும் தாய் நாட்டைப் பழித்துப் பேசுபவர் களை தாக்காமல் விடுவதில்லை என்னும் வீரத்தையும் காட்டுகிறது.
பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு
டாக்டர் நாயர் அவர்கள் ஒரு பக்கம் ஆங்கிலேயர்களையும் மறுபக்கம் பார்ப்பனர்களையும் எதிர்த்துப் போராடி நாட்டிற்கு நல்லவை செய்ய வேண்டிய சிக்கலான சூழ்நிலையில் வாழ்ந்தார். பெருவாரியான பார்ப்பன ரல்லாத சமூகத்தினரை மிகச் சிறுபான் மையினரான பார்ப்பனர்கள் வஞ்சித்து அடக்கி ஒடுக்கி ஆள்வதை நியாயமான முறையில் ஆட்சியாளரான ஆங்கிலே யருக்கு எடுத்து உணர்த்தி நியாயம் வழங்கும்படிக் கேட்டுக் கொள்ள ஆங்கில நாட்டு பார்லிமெண்டாரிடம் தாமே நேரில் சென்றார்.
அவருடன் அறிஞர் சர்.கே.வி. ரெட்டி, சர்.ஏ. ராமசாமி (முதலியார்) ஆகியோரும் சென்றிருந்தனர் தென்னாட்டின் விடுதலை வீரரான டாக்டர் நாயர் அவர்கள் லண்டன் மாநகரத்தில் சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்து திடீரென்று 17.7.1919-ல் அங்கேயே இறந்தார்.
பின்னர் அவரது தோழர்களான சர்கே.வி. ரெட்டி அவர்களும் சர்.ஏ. ராமசாமி அவர்களும் மாண்குடே பிரபுவையும்செமஸ்போர்டு துரை மகனையும் இந்திய நாட்டின் நலத் திற்கானநல்ல ஓர் சட்டத்தை ஏற்படுத் தும்படிச் செய்துவிட்டு நாடு திரும்பினர் அதன் பயனாக சென்னை மாகா ணத்தை நீதிக் கட்சியின் சார்பில் பன கால் அரசர் தலைமையில் ஒரு பார்ப் பனரல்லாத மந்திரிசபை ஆண்டது.
டாக்டர் நாயர் அவர்கள் தோற்று வித்த இப்படிப்பட்ட விழிப்புணர்ச் சியே திராவிட இனக் கிளர்ச்சி இக் காலத்தில் ஏற்பட்டு வளர்ச்சியடைந்து வருவதற்கு அடிப்படையாகும். நாம் அவரது கொள்கைகளைப் பின்பற்றி எத்தர்களின் எப்படிப்பட்ட இழிச் சொல்லுக்கும் பழிச் சொல்லுக்கும் செவி சாய்க்காமல் நாட்டு நலனில் அக் கறை கொண்டு நேர்மையான முறை யில் பணியாற்றுவோமாக” என்று திரு எஸ்.எம்.ஃபாகில் கூறி முடித்தார்.
-விடுதலை ஞா.ம,9.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக