புதன், 9 நவம்பர், 2016

நீதிக்கட்சியின் சாதனைகள் சில எடுத்துக்காட்டுகள்...

பானகல் அரசர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று ஒடுக்கப் பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா பொது இடங்களிலும், எல்லாத் தெருக்களிலும் செல்வதை எவரும் தடுக்கா வண்ணம் அரசாணை வெளியிட்டதாகும்.

சென்னை அரசாங்கம் உள்ளூர் அரசாங்க இலாகா

(உள்ளூர் மற்றும் மாநகராட்சி)

அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924.

ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப் படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவைகள் - சட்ட மன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் - மாநிலத்திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாகாக்களுக்கு அனுப்பப்பட்டது.

உத்தரவு நெ. 2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி,

1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 25ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது.

திரு.ஆர்.சீனிவாசன்: (இரட்டைமலை)

1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(ணீ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத் திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(தீ) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக் களுக்கும் என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,

சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாக்கக்களுக்கும் அனுப்பப்பட்டது.
(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)

P.L. மூர்
அரசாங்கச் செயலாளர்

நீதிக்கட்சியின் சாதனைகள் சில எடுத்துக்காட்டுகள்...

நீதிக்கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டால் அது விரிவடையும் என்றாலும் சில முக்கிய சாதனைகளை பட்டியலிட வேண்டியது அவ சியமே! முதல் அமைச்சரவையின் சாதனையை (1920-1923) ஆணை எண் 116 வாயிலாக நீதிக்கட்சியே வெளியிட்டுள்ளது.

*    பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.

*    துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர் களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.

*    தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

*    தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தை களுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

*    தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

*    தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன ஜாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

*    குறவர்களை எல்லா வகையிலும் சீர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

*    கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25-நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.

*    ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன் படுத்த மூலதனம், பிற ஜாதியினரிடமிருந்து பாதுகாப்பு - அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.

*    தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.

*    ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

*    அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை  உயர்த் தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.

*    மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

*    கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற் பாடு செய்தனர்.

*    நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத் தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

*    பி. அண்டு சி மில்லின் வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

*    தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

*    ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

*    குடிப்பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.

*    ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

*    தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடை முறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

*    மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

*    சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

*    கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப் பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

*    உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர் களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.

*    மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (ஷிவீஜீமீஸீபீ) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

*    அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப் பட்டது.

*    தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

*    சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

*    கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

*    தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவ தற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

1925இல் நீதிக்கட்சியின் தலைவரான சர்.பிட்டி தியாகராயர் மறைந்தார். அவருக்குப்பின் பானகல் அரசர் கட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
தமது பெரும் முயற்சியால் கட்சி பணிகளை செய்து வந்த நிலையில் 1928 டிசம்பர் 15 அன்று திடீர் உடல் நலக் குறைவால் மறைந்தார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு கட்டிடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பனகல் பூங்கா அருகில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஜமீந்தார் குடும்பத்தில் பிறந்து தமது காலம் முழுவதும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்த பானகல் அரசரை நன்றியுடன் நினைவு கூர்வோம்!
-விடுதலை,9.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக